விலை உயர்ந்த கட்டைகளை தரக்கூடியது அக்ரூட் மரம். மருத்துவ குணம் கொண்ட
இந்த மரம் சிக்கிம், நேபாளம், ஆகிய பகுதிகளிலும் இமாலயப் பகுதிகளில்
இயற்கையாக காணப்படுகிறது. அதிகம் காணப்படுகிறது. இந்த மரத்தின் இலை, பட்டை
மற்றும் கனி போன்றவை மருத்துவ பயன் கொண்டவை. இந்த மரத்தில் கிடைக்க வால்நட்
விதைகள் அதிக சத்து நிறைந்தவை.
செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்: இத்தாவரத்தில் இருந்து பல வைட்டமின்கள், அமினோஅமிலங்கள், பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. வைட்டமின் டி, வைட்டமின் பி6, அஸ்கோரிப் அமிலம், சிஸ்டெயின், டிரிப்டோபேன், தயாமின், போஃபிளேவின்,நிக்கோடினிக் அமிலம், போலிக் அமிலம், பயோடின், ஜீக்ளோன்.
வாதநோய்களுக்கு மருந்து: இலை மற்றும் பட்டை வயிற்றுப்பூச்சிகளுக்கு எதிராக செயல்படும் தன்மை கொண்டது. இவை தோல்நோய்கள், பால்வினைநோய், எக்ஸிமா, காசநோய், ஆகியவற்றுக்கு மருந்தாகிறது. கனிகள் வலுவேற்றியாகவும், வாதநோய்களுக்கு மருந்தாகவும் செயல்படுகின்றன. காய்களின் மேல் உறை கிருமிகளை போக்க வல்லது. விதைகளை ருசியானவை. பால் உணர்வு தூண்டுவியாக கருதப்படுகிறது.
கொழுப்பு நீக்கும் வால்நட்; வால்நட்டில் நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய ஓமேகா 3 அதிகம் காணப்படுகின்றன. இது வேலைப்பழுவினால் ஏற்படும் மன உளைச்சலை போக்க உதவுகிறது. இதனால் இதயநோய் பாதிப்பு குறைகிறது. உடலில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதை வால்நட் தடுக்கிறது. இதன் மூலம் உயர் ரத்த அழுத்தம் தடுக்கப்பட்டு மன அழுத்தம் ஏற்படுவது குறைகிறது.
தினமும் 28 கிராம் முதல் 85 கிராம் அளவு வரை வால்நட் பருப்பு சாப்பிட்டு வந்தால் ஆறு மாதங்களில் கெட்ட கொலஸ்ட்ரலில் பத்து சதவிகிதம் வரை குறைகிறது. இத்துடன் இதயம் தொடர்பான அனைத்துப் பிரச்னைகளும் குணமடைகின்றன.
இதய ஆரோக்கியம்: ஹார்வார்டு பல்கலைக்கழகம் கொலஸ்ட்ரலைக் குறைக்க வால்நட் பருப்பு சாப்பிடுங்கள் என்று சமீபத்தில் உறுதியாகத் தெரிவித்துள்ளது. இதற்காக வால்நட் தொடர்ந்து சாப்பிட்டவர்களின் இதய ஆரோக்கியம், கெட்ட கொலஸ்ட்ரல் அளவு முதலியவற்றை ஆராய்ந்தது. குறிப்பாக, 13 குழுக்களை ஆராய்ந்து முடிவை வெளியிட்டது. இதில் வால்நட் சாப்பிட்டவர்களின் இதயம் ஆரோக்கியமாக இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
வால்நட் அதிகம் சாப்பிட்டால் கலோரி அதிகமாச்சே! இதனால் உடல் எடை அதிகரிக்குமோ என்ற சந்தேகம் எழுவது இயல்பு. வால்நட்டில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்டுகளும், இரத்தத்தில் உறையாத கொழுப்பும் உள்ள பருப்பு வகை இது. நீங்கள் அதிகக் கலோரி உள்ள மற்ற உணவுகளைப் புறக்கணித்து விட்டு பயமின்றி வால்நட் சாப்பிடலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

No comments:
Post a Comment