ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
03 December, 2012
கேட்பது நல்ல விசயம்தான் ஆனால் நம்பலாமா?
யாழ் பல்கலை மாணவர்கள் கைதுக்கு யு.எஸ். கண்டனம்: ஆனால், இந்தியா அமைதி? இதுபற்றி இந்தியத் தூதரகமும் விசாரித்து, இந்திய அரசிடம் தெரிவித்து, அரசின் சார்பில் வன்மையான கண்டனத்தை ராஜபக்ஷேயின் சிங்கள அரசுக்கு தெரிவித்திட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் கருணாநிதி! கேட்பது நல்ல விசயம்தான் ஆனால் நம்பலாமா? எல்லா விசயத்திலும் பணம் பணம் என பணத்தாசை பிடித்தாட்டும் பிணம் தின்னும் பேய்கள் எது சொன்னாலும் செய்தாலும் அரசியல் அரசியல்! பாவம் பாமரன்.
சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம்!
3 வயதிலேயே இரண்டு கால்களும் போலியோவால் பாதிக்கப்பட்டவர். தனது விடா முயற்சியால் சிறந்த தொழில்நுட்பத்தை கண்டறிந்து அதில்
வெற்றியும் கண்டிருக்கிறார். பிரேக், கிளட்ச், ஆக்சிலேட்டர் ஆகிய
அனைத்தயும் கால்களுக்கு பதிலாக கைகளால் இயக்கும் வகையில் வடிவமைத்துள்ளார்.அத்தோடு, தன்னைப் போன்ற மாற்றுத் திறனாளிகளுக்கு இந்த காரை வடிவமைத்து
கொடுக்கிறார். மாற்றுத் திறனாளிகள் நன்மையை கருதி சேவை மனப்பான்மையோடு
கட்டணம் எதுவும் பெறாமல் செய்து தருகிறார்.
எரிகிற வீட்டில்
பிடுங்குவது ஆதாயமாக கருதும் இந்த காலத்தில் உதிரிபாகங்களுக்கு செலவாகும்
தொகையை தவிர கூடுதலாக தொகை எதுவும் பெறுவதில்லை என்கிறார். அனைவருக்கும்
முன்மாதிரியாக இருந்து வியக்க வைக்கும் இந்த சாதனை இளைஞரை இதுவரை 15 கார்
தயாரிப்பாளர்கள் தொடர்பு கொண்டு தொழில்நுட்பத்தை பேரம் பேசியுள்ளனர்.
ஆனால்,
தனது தொழில்நுட்பத்தை யாருக்கும் விற்கப் போவதில்லை என்று நம்மிடம் மன
உறுதியுடன் தெரிவித்தார். ஆல்ட்டோ போன்ற கார்களுக்கு ரூ.58,000 வரையிலும்,
டொயோட்டா பார்ச்சூனர் உள்ளிட்ட கார்களுக்கு ரூ.85,000 வரையிலும்
உதிரிபாகங்களுக்கு செலவாகும் என்றார். இதுதவிர, 10,000 கிமீ.,க்கு ஒரு
முறை சர்வீஸ் செய்வதற்காக ரூ.5,000 கட்டணமாக சேர்த்து செலுத்தினால்
வீட்டிற்கே வந்து சர்வீஸ் செய்து தருவதாக கூறுகிறார்.
இந்தியாவிலேயே
முதல் முறையாக கையால் இயக்கும் கார் தொழில்நுட்பமாக இது
பார்க்கப்படுகிறது. இவர் கண்டுபிடித்த தொழில்நுட்பத்தை ஐஐடி நிறுவனம்
அங்கீகரித்துள்ளதோடு, ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகளின் பிரபலமான கார்
கம்பெனிகள் உதயகுமாரை அழைத்து அணுகியுள்ளனர். இதில், வேதனையான விஷயமே
ஜெர்மன் நிறுவனங்களுக்கு தெரிந்த உதயகுமாரை, மத்திய அரசுக்கோ அல்லது மாநில
அரசோ தெரியவும் இல்லை, கண்டுக்கொள்ளவும் இல்லை.உங்கள்
குடும்பத்தினர் மற்றும் நட்பு வட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு
இதுபோன்று காரை வடிவமைத்து தர விரும்பினால் கீழ்க்கண்ட அலேபேசி எண்ணில்
உதயகுமாரை தொடர்புகொள்ளலாம்.
உதயகுமாரின் அலைபேசி எண்: 0-9940734277
இன்று
சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம். இந்த தினத்தில் உதயக்குமார் போன்ற
சேவை மனப்பான்மையுடன் கூடிய உண்மையான திறனாளிகளை வாழ்த்துவோம்.
நாதஸ்வரம். 03 .12. 12
கவுண்டமணி ஒரு படத்துல சொல்லுவாரே நாராயண இந்த கொசு தொல்லை தாங்க முடியலடா அது மாதிரி (டெய்லி மோசன்) Format தாங்க முடியல அதான் உங்களுக்காக நாதஸ்வரம்.
கையெழுத்தை சரியாக போடாமல்?
காசோலையில் கையெழுத்தை சரியாக போடாமல் திரும்பி வந்தால் சிறைத்
தண்டனைக்கு வாய்ப்பிருக்கிறது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள்
தெரிவித்துள்ளனர்.காசோலையில் கையெழுத்தை தவறாக போட்டது தொடர்பான
வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் தாக்கூர், கியான்சுதா,
காசோலைகளில் கையெழுத்தை பலர் சரியாக போடாததும் குற்றம்தான். அக்கவுண்ட்டில்
பணம் இல்லாமல் காசோலை திரும்புவது எப்படி குற்றமோ அந்த அளவுக்கு
கையெழுத்து சரி இல்லாததும் குற்றமே.இது சட்டப் பிரிவு 138-ன் கீழ்
தண்டனைக்குரியது. இந்தப் பிரிவின் கீழ் தவறாக கையெழுத்திட்டவருக்கு 2
ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கலாம். மேலும் காசோலை தொகையைப் போல 2 மடங்கு
அபராதமும் விதிக்கலாம்.
குறுந்தகவல் சேவை துவங்கப்பட்டு இன்றுடன் 20 ஆண்டுகள் !
எஸ்.எம்.எஸ். எனப்படும் குறுந்தகவல் சேவை துவங்கப்பட்டு இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவடைகிறது.கடந்த
1992ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ம் தேதி இங்கிலாந்தைச் சேர்ந்த என்ஜினியர்
நீல் பாப்வொர்த்(22) என்பவர் தனது ஆர்பிடெல் 901 செல்போனில் இருந்து
வோடபோன் நெட்வொர்க் மூலம் மெர்ரி கிறிஸ்துமஸ் என்று எஸ்.எம்.எஸ்.
அனுப்பினார். அது தான் உலகில் முதன்முதலாக அனுப்பப்பட்ட எஸ்.எம்.எஸ்.
ஆகும்.ஆனால் வியாபார ரீதியாக எஸ்.எம்.எஸ். சேவை 1993ம் ஆண்டு
ஸ்வீடனில் துவங்கியது. அதன் பிறகு அதே ஆண்டில் அமெரிக்கா மற்றும்
இங்கிலாந்திலும் எஸ்.எம்.எஸ். சேவை துவங்கியது. தொடர்ந்து 1994ம் ஆண்டு
எஸ்.எம்.எஸ். சேவையுடன் கூடிய நோக்கியா 2110 போனை நோக்கியா நிறுவனம்
அறிமுகப்படுத்தியது.தற்போது ஒவ்வொரு நொடிக்கும் 2 லட்சத்திற்கும் அதிகமான எஸ்.எம்.எஸ்.கள் அனுப்பப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Posts (Atom)