|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

03 December, 2012

கையெழுத்தை சரியாக போடாமல்?

காசோலையில் கையெழுத்தை சரியாக போடாமல் திரும்பி வந்தால் சிறைத் தண்டனைக்கு வாய்ப்பிருக்கிறது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.காசோலையில் கையெழுத்தை தவறாக போட்டது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் தாக்கூர், கியான்சுதா, காசோலைகளில் கையெழுத்தை பலர் சரியாக போடாததும் குற்றம்தான். அக்கவுண்ட்டில் பணம் இல்லாமல் காசோலை திரும்புவது எப்படி குற்றமோ அந்த அளவுக்கு கையெழுத்து சரி இல்லாததும் குற்றமே.இது சட்டப் பிரிவு 138-ன் கீழ் தண்டனைக்குரியது. இந்தப் பிரிவின் கீழ் தவறாக கையெழுத்திட்டவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கலாம். மேலும் காசோலை தொகையைப் போல 2 மடங்கு அபராதமும் விதிக்கலாம்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...