|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

10 March, 2011

அம்மா தாயே காசு கொடுங்க...

அம்மா தாயே காசு கொடுங்க... இது பிச்சைக்காரரின் கெஞ்சல், அம்மா தாயே ஓட்டுப்போடுங்க... இது அரசியவாதிகளின் கெஞ்சல்.. காசுக்கு கை நீட்டுவோரெல்லாம் பிச்சைக்காரர்கள் என்றால்... ஓட்டளிக்க பணம் வாங்குவோரை எப்படி அழைப்பீர்கள் ?. என கேட்பாரோ இந்த மூதாட்டி.. இடம் கிராஸ்ட் ரோடு.காந்திபுரம்.

இதே நாள் 11 மார்ச் 2011

  • உலக சிறுநீரக தினம்
  •  ஜாம்பியா இளைஞர் தினம்
  •  ரஷ்ய தலைநகர் பெத்ரோகிராட்டில் இருந்து மாஸ்கோவிற்கு மாறியது(1918)
  •  அறிவியல் கண்டுபிடிப்பாளர் அலெக்சாண்டர் பிளெமிங் இறந்த தினள்(1955)
  •  லித்துவேனியா, சோவியத்திடம் இருந்து தன்னிச்சையாக விடுதலையை அறிவித்தது(1990)

புலிகள் முகாம்கள் இலங்கையின் தவறான தகவல் இந்தியா மறுப்பு

தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம்கள் செயல்படுவதாக வெளியான தகவல் தவறானது. ஆதாரமற்ற இது போன்ற தகவல்களை தெரிவிப்பதை இலங்கை அரசு தவிர்க்க வேண்டும்' என, இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறியதாவது: தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம்கள் மூன்று இடங்களில் செயல்பட்டு வருவதாக, இலங்கை பிரதமர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இலங்கை அரசு தெரிவித்துள்ளது போல், தமிழகத்தில் பயிற்சி முகாம்கள் எதுவும் செயல்படவில்லை. இலங்கை அரசு தெரிவித்துள்ள தகவலை உறுதியாக மறுக்கிறோம். இது தொடர்பான தகவல் எதையும், இந்தியாவுடன், இலங்கை பகிர்ந்து கொள்ளவில்லை. எனவே, யூகத்தின் அடிப்படையிலான, ஆதாரமற்ற இது போன்ற தகவல்களை தெரிவிப்பதை, இலங்கை அரசு தவிர்க்க வேண்டும். இவ்வாறு வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறினார்.

உலகின் அதிகாரமிக்கோர் பட்டியலில் சீன அதிபர் முதலிடம்

நியூயார்க்:  போர்ப்ஸ் பத்திரிக்கையின் உலகின் அதிகாரமிக்க மனிதர்கள் பட்டியலில் சீன முதல்வர் ஹூ ஜின்டாவ் முதலிடத்தைப் பிடித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 9-வது இடத்திலும், பிரதமர் மன்மோகன் சிங் 18-வது இடத்திலும் உள்ளனர்.

கடந்த ஆண்டு பட்டியலில் முதலிடத்தில் இருந்த அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தற்போது 2-வது இடத்தில் இருக்கிறார். சவுதி மன்னர் அப்துல்லா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 9-வது இடத்திலும், பிரதமர் மன்மோகன் சிங் 18-வது இடத்திலும் உள்ளனர். இந்தப் பட்டியலில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, வெளிநாடு வாழ் இந்தியரான லக்ஷ்மி மிட்டல் ஆகியோர் 34 மற்றும் 44வது இடங்களைப் பிடித்துள்ளனர்.

இந்த பட்டியலில் உள்ள மேலும் சில பெரும்புள்ளிகள் விவரம் வருமாறு,

ரஷ்ய பிரதமர் புடின் - 4வது இடம்

போப் 16ம் பெனடிக்ட் - 5வது இடம்

ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் - 6வது இடம்

இங்கிலாந்து பிரதமர் ஜேம்ஸ் காமரூன் - 7வது இடம்

பாகிஸ்தான் ராணுவ தளபதி பர்வேஸ் கயானி - 29வது இடம்  

உலக 'மெகா' கோடீஸ்வரர்கள்: கார்லோஸ் ஸ்லிம் முதலிடம்

உலகின் 'மெகா' கோடீஸ்வரர் பட்டியலில், மெக்சிகோ நாட்டை சேர்ந்த கார்லோஸ் ஸ்லிம், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, முதலிடத்தில் இடம்பெற்றுள்ளார். 9வது இடத்தில், இந்தியாவை சேர்ந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அதிபர் முகேஷ் அம்பானி உள்ளார்.'போர்ப்ஸ்' பத்திரிகை, இந்த ஆண்டிற்கான, உலக 'மெகா' கோடீஸ்வரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில், தொலைத்தொடர்பு துறையில் உலகளவில், முன்னணியில் உள்ள கார்லோஸ் ஸ்லிம்மின் சொத்து மதிப்பு 2,050 கோடி டாலர் அதிகரித்து, 7,400 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
இவருடைய நிறுவனம், அமெரிக்கா, லத்தீன் அமெரிக்கா ஆகிய நாடுகளில், தொலைத்தொடர்பு சேவையில் ஈடுபடுகிறது.உலகின் 'மெகா' கோடீஸ்வரர்கள் பட்டியலில், 2வது இடத்தில் மைக்ரோ சாப்ட் கார்ப்பரேஷனின் நிறுவனர் பில்கேட்ஸ் இடம் பெற்றுள்ளார். இவருடைய நிகர சொத்து மதிப்பு 5,600 கோடி டாலராக உள்ளது. இவர், அவருடைய மொத்த சொத்தில், 3,000 கோடி டாலரை 'தி கேட்ஸ் பவுண்டேஷன்' அறக்கட்டளைக்கு வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இவ்விருவர்களையும் தொடர்ந்து, 3வது இடத்திலுள்ள வாரன் பப்பட்டின் சொத்து மதிப்பு 5,000 கோடி டாலராக உள்ளது. முந்தைய ஆண்டு, 7வது இடத்தில் இருந்த, எல்.வி.எம்.எச். நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, பெர்னால்டு அர்னால்டு, 4வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். இவருடைய சொத்து மதிப்பு, 4,100 கோடி டாலராக உள்ளது. 5வது இடத்தில், ஆரக்கிள் நிறுவனத்தின் லேரி எலீசன் இடம் பெற்றுள்ளார். இவருடைய சாப்ட்வேர் நிறுவனத்தின் பங்குகளின் சந்தை மதிப்பு, 30 சதவீதம் அதிகரித்ததையடுத்து, இவருடைய சொத்து மதிப்பு 3,950 கோடி டாலராக உயர்ந்துள்ளது.'போர்ப்ஸ்' மேற்கொண்ட ஆய்வில், உலகளவில் 'மெகா' கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை, 1,210 ஆக அதிகரித்துள்ளது. இவர்களுடைய சொத்து மதிப்பு, 3 லட்சத்து 60 ஆயிரம் கோடி டாலர் என்ற அளவிலிருந்து, 4 லட்சத்து 50 ஆயிரம் கோடி டாலராக அதிகரித்துள்ளது. இக்கோடீஸ்வரர்களுள், அமெரிக்காவை சேர்ந்தவர்கள் மிகவும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுடைய சொத்து மதிப்பு, 1 லட்சத்து 50 ஆயிரம் கோடி டாலர் அளவிற்கு உள்ளது.மொத்த கோடீஸ்வரர்கள் பட்டியலில், 50 சதவீதத்தினர், பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் புதிதாக உருவாகியுள்ளனர். உலக 'மெகா' கோடீஸ்வரர்களில் சீனாவில் உள்ளவர்களின் எண்ணிக்கை, 115 ஆக அதிகரித்துள்ளது. இவர்களுள், ரோபின் லீ என்பவருடைய சொத்து மதிப்பு, 900 கோடி டாலராக உள்ளது.உலக 'மெகா' கோடீஸ்வரர்கள் பட்டியலில், முதல் 10 இடத்தில் உள்ளவர்களின் இடம்மாறியுள்ளது, ஆனால், தொடர்ந்து இவர்களே முதல் 10 இடங்களை பிடித்துள்ளனர்.அயல்நாடு வாழ் இந்தியரான லட்சுமி மிட்டல், 6வது இடத்தில் இடம் பெற்றுள்ளார். இவருடைய சொத்து மதிப்பு, 3,110 கோடி டாலராக உள்ளது. உலகளவில் உருக்கு உற்பத்தியில், இவருடைய நிறுவனம் மிகப்பெரியது. சென்ற 2010ம் ஆண்டில், இவருடைய நிறுவனம், 290 கோடி டாலரை லாபமாக ஈட்டியிருந்தது.இந்தியாவை சேர்ந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் அதிபர் முகேஷ் அம்பானி, 9வது இடத்தில் இடம் பெற்றுள்ளார். இவருடைய சொத்து மதிப்பு, 2,700 கோடி டாலராக உள்ளது. இதற்கு முந்தைய ஆண்டில், முகேஷ் அம்பானி, 4வது இடத்தில் இருந்தார். இவருக்கு அடுத்ததாக, 5வது இடத்தில் லட்சுமி மிட்டல் இருந்தார்.உலக 'மெகா' கோடீஸ்வரர்கள் பட்டியலில், இந்திய கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை, 49ல் இருந்து 55 ஆக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை சீனாவில், 69ல் இருந்து 115 ஆகவும், ஆசிய பசிபிக் பகுதிகளில் 243ல் இருந்து 332 ஆகவும் உயர்ந்துள்ளது.உலகின் மிகப்பெரிய 100 கோடீஸ்வரர்கள் பட்டியலில், 36வது இடத்தில், விப்ரோ நிறுவனத்தின் அசிம் பிரேம்ஜியும், 42வது இடத்தில் எஸ்ஸார் குழுமத்தின் சகோதரர்கள் சசி மற்றும் ரவி ரூயாவும், 56வது இடத்தில் சாவித்திரி ஜிந்தாலும், 87வது இடத்தில் கவுதம் அதானியும், 97வது இடத்தில் குமார் பிர்லாவும் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.போர்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில், முதல் முறையாக ஐரோப்பிய நாட்டினரை விட ஆசிய நாட்டைச் சேர்ந்தவர்கள் இந்த கோடீஸ்வரர்கள் பட்டியலில் அதிகம் இடம்பெற்றுள்ளனர். இப்பட்டியலில் ஆசியாவைச் சேர்ந்த 332 சேர்ந்த பேரும், ஐரோப்பாவைச் சேர்ந்த 300 பேரும் இதில் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Pongal day with gopinath


Vijay Tamil Speech: We will Wipe Sri Lanka Off The Map [English Subtitles]


தி.மு.க., அணியில் சலசலப்பு உடைகிறது முஸ்லிம் லீக்?


போலி பல்கலை மற்றும் கல்வி நிறுவனங்கள் மீது விரைவில் நடவடிக்கை?

நாடு முழுவதும் மொத்தம் 21 போலி பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன என்று யு.ஜி.சி. அடையாளம் கண்டுள்ளது.
யு.ஜி.சி. சட்டத்தை(1956) மீறி செயல்படும் இத்தகைய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் பற்றிய தகவலை மனிதவளத் துறை இணையமைச்சர் புரந்தேஸ்வரி மக்களவையில் தெரிவித்தார். இதுதொடர்பாக மேலும் அவர் கூறியதாவது, "மொத்தம் 21 போலி பல்கலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் 8 உத்திரப் பிரதேசத்திலும், 6 டெல்லியிலும், பீகார், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேஷ், மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தலா 1 போலி கல்வி நிறுவனமும் உள்ளன.

மேலும் தொழில்நுட்ப கல்விக்கான அகில இந்திய கவுன்சில்(ஏ.ஐ.சி.டி.இ), நாட்டில் மொத்தம் 350 அங்கீகரிக்கப்படாத கல்வி நிறுவனங்கள் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை படிப்புகளை நடத்தி வருகின்றன என்று அடையாளம் கண்டுள்ளது. இது ஏ.ஐ.சி.டி.இ. விதிமுறைகளை மீறிய செயலாகும்.

இந்த 350 தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் 75 மாகாராஷ்டிரா மற்றும் டெல்லியிலும், 52 ஆந்திராவிலும், 34 மேற்கு வங்கத்திலும், 30 உத்திரப் பிரதேசத்திலும், 27 கர்நாடகாவிலும், 17 ஹரியானாவிலும், 14 தமிழ்நாட்டிலும், 9 சண்டிகரிலும், 4 குஜராத்திலும், 3 பஞ்சாபிலும், 2 பீகார், ராஜஸ்தான், ஹிமாச்சல் பிரதேஷ் மற்றும் கோவாவிலும், 1 உத்திரகான்ட் மற்றும் கேரளாவிலும் உள்ளன.

இதுபோன்ற போலி பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் பெயர்கள் மற்றும் விவரங்கள் யு.ஜி.சி. மற்றும் ஏ.ஐ.சி.டி.இ. ஆகிய அமைப்புகளின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இருப்பதோடு, அந்த அமைப்புகள் வைத்திருக்கும் பட்டியலிலும் உள்ளன. இந்த வலைத்தளங்களை பார்த்து மாணவர்கள் விழிப்புணர்வு பெறலாம்.

மேலும் சம்பந்தப்பட்ட மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளை, இந்த போலி கல்வி நிறுவனங்களின் மீது இ.பி.கோ. சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. உயர்கல்வி நிறுவனங்களில் முறையற்ற நடவடிக்கைகளை தடைசெய்யும் விதமாக, ஒரு சட்ட முன்வரைவு ஏற்கனவே நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது" என்றார்.

முதன் முதலாக கமலுடன் இணையும் யுவன்

டைரக்டர் செல்வராகவன் இயக்கத்தில் கமல் நடிக்கும் புதிய படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். கமலுடன், யுவன் இணைவது இதுவே முதல்முறையாகும். அத்துடன் படத்தின் நாயகியாக பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா நடிப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

செல்வராகவன் கமலை வைத்து ஒரு புதிய படம் பண்ண ஒப்பந்தமாகி இருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா நடிப்பார் என்று ஏற்கனவே செய்தி வெளியானது. இப்போது அவர் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்திற்கு இசையமைக்க, செல்வராகவனின் ஆஸ்தான இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஒப்பந்தமாகி இருக்கிறார். "ஆ‌யிரத்தில் ஒருவன்" படத்தின் போது செல்வாராகவனுக்கும், யுவனுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் அப்படத்தில் இருந்து யுவன் விலகினார். இதனையடுத்து ஜி.வி.பிரகாஷ் அந்தபடத்திற்கு இசையமைத்தார்.

இந்நிலையில் "இரண்டாம் உலகம்" படத்தின் மூலம் மீண்டும் செல்வராகவனுடன் இணைந்தார் யுவன். இந்தபடம் விரைவில் வெளிவர இருக்கிறது. அதனைத்தொடர்ந்து இப்போது கமலை வைத்து இயக்கப்போகும் படத்திற்கும் யுவனே இசையமைக்க இருக்கிறார். கமலுடன், யுவன் இணைவது இதுவே முதல்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஸ்லம்டாக் ரூபினாவுக்கு உதவிய தயாநிதி அழகிரி

சமீபத்தில் மும்பையில் பந்த்ரா பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் அங்குள்ள நூற்றுக்கணக்கான குடிசைகள் தீயில் எரிந்து நாசமாகின. அதில் ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் நடித்த சிறுமி ரூபினா அலியின் வீடும் தீ விபத்தில் சிக்கியது. இதில் ஆஸ்கர் நிகழ்ச்சியின் போது அவர் அணிந்திருந்த உடை, அங்கு எடுக்கப்பட்ட புகைப்படம் உள்ளிட்ட அனைத்தும் தீயில் எரிந்து நாசமாகின.
இதனிடையே டைரக்டர் க்ரிஷ் இயக்கத்தில், சிம்பு நடிக்கும் "வானம்" படத்தின் சூட்டிங் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தின் பாடல் காட்சிக்காக மும்பையில் ரூ.1கோடி செலவில் பிரம்மாண்ட செட் போட் சூட்டிங் நடைபெற்று வந்தது. இப்படத்தை தயாநிதி அழகிரியின் கிளவுட் நைன் மூவிஸ் வாங்கியிருக்கிறது. இந்நிலையில் பந்த்ரா குடிசை தீ விபத்தில் சிறுமி ரூபினா அலியின் வீடு பறிபோனதை அறிந்த துரை தயாரநிதி அழகிரி, அவரை தேடி கண்டுபிடித்து வானம் படத்தின் ஆடியோ உரிமைபெற்ற வீனஸ் ஆடியோவுக்கு வரவழைத்தார். பின்னர் ரூபினா அலிக்கு ரூ.50ஆயிரம் ரொக்கபணத்தை கொடுக்க ஏற்பாடு செய்தார். இதனை நடிகர் சிம்பு, ரூபினாவிடம் கொடுத்தார். அதேபோல் வீனஸ் ஆடியோ கம்பெனி டைரக்டர் சம்பக்கும் தன் பங்கிற்கு ரூ.21 ஆயிரம் நிதியுதவி செய்தா

WILBUR SARGUNARAJ


2010 - 12 - 19 - Seeman Speech - 2G Spectrum Scam and Stand of Tamil Nadu


அமெரிக்காவில் இந்து சாமியாருக்கு 14 ஆண்டு சிறை

அமெரிக்காவில் செக்ஸ் புகார் கூறப்பட்ட இந்து சாமியாருக்கு 14 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் நகரைச் சேர்ந்தவர் பிரகாஷ் ஆனந்த் சரஸ்வதி (82). இந்துமத சாமியாரான இவர் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தென்மேற்கு ஆஸ்டின் நகரில் 200 ஏக்கரில் ஆசிரமம் நடத்தி வருகிறார். இவரை சுவாமிஜி என்று பக்தர்கள் அன்புடன் அழைக்கின்றனர். இவர் மீது 2 பெண்கள் செக்ஸ் புகார் கூறி இருந்தனர். அவர்கள் இருவரும் ஆசிரமத்தில் வளர்ந்தவர்கள். டீன்ஏஜ் பருவத்தில் இருந்தபோது, அதாவது கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சாமியார் பிரகாஷ் ஆனந்த் சரஸ்வதி இவர்களுடன் செக்ஸ் உறவில் ஈடுபட்டதாக புகார் செய்தனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை ஹுஸ்டன் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சார்லஸ் ராம்சே குற்றம் சாட்டப்பட்ட பிரகாஷ் ஆனந்த் சரஸ்வதி சுவாமிக்கு 14 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும், ரூ.90 லட்சம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார்.

பெண் கல்வி' சுதந்தரத்திற்கு முன்னும், பின்னும்!

திரும்பிப் பார்ப்பது எப்போதுமே சுகமான விசயம்தான். அது தனிப்பட்டவர்களின் வாழ்க்கையாக இருந்தாலும் சரி, வரலாற்றின் பக்கங்களாக இருந்தாலும் சரி. இன்றைக்குப் பெண்கள் இல்லாத துறையே இல்லை எனலாம். இன்று மகளிர் தினம் கொண்டாடும் வேளையில் தாய்நாடாம் இந்திய நாட்டின் 64வது சுதந்திர தினம் தலைநகர் டெல்லியில் விமரிசையாகக் கொண்டாடப்பட்டதை நாம் திரும்பிப்பார்த்தால் அந்த காட்சி நம் அனைவரின் கண்களுக்கும் விருந்தாக அமைந்தது என்பது நிதர்சனம். அதிலும் எந்த கட்சியின் சாயத்தையும் பூசிக்கொள்ளாத பெண்களாகிய நமக்கு, நம் தேசத்தின் ஜனாதிபதியான திருமதி. பிரதிபா பாட்டீல், அரசாளும் கட்சியின் தலைவரான திருமதி. சோனியா காந்தி, சபாநாயகரான திருமதி. மீரா குமார் போன்ற பெண்கள் அனைவரும் இவ்விழாவில் அமர்ந்திருந்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது இல்லையா? கடந்த நாட்களில் தலைமுறை தலைமுறையாக அடிமைகளாக நடத்தப்பட்ட நம் நாட்டுப் பெண்கள் எப்படி இந்த அளவிற்கு உயர்ந்தனர் என்பதை ஆராய்ந்து பார்த்தால் 'கல்வியே' என புலப்படும். 'கல்விக்கண்' என்று ஆன்றோரால் அழைக்கப்படும் கல்வியே நம் மக்களின் கண்களைத் திறந்தது எனக் கூறலாம். நம் தேசத்தின் பிதா என அழைக்கப்படும் மகாத்மா காந்தி இதனை நன்கு உணர்ந்ததினால் தான் "ஒரு ஆண் மகன் கல்வி கற்றால் அவனுக்கு மட்டுமே நன்மை பயக்கும். ஆனால் குடும்பத்திலுள்ள ஒரு பெண் கல்வி கற்றால் முழுக் குடும்பமும் நன்மை பெற்றுக்கொள்ளுகிறது. சமுதாயத்திலுள்ள அனைத்து பெண்களும் கல்வி கற்றுக்கொள்ளும் போது, சமுதாயம் முழுவதும் நன்மை பெறுகிறது; அதிநிமித்தம் தேசம் வளர்ச்சி அடைகிறது" எனக் கூறினார்.
சமுதாயத்தில் பெண்களின் நிலை எவ்வாறு உள்ளது என நாம் ஆராய்ந்து பார்த்தால் ஆண்களுக்கு எப்பொழுதும் உயர்வான அல்லது தலைமை இடங்கள் அளிக்கப்பட்டது. ஆனால், பெண்களுக்கோ அடிப்படை வசதிகளும், உரிமைகளும்கூட மறுக்கப்பட்டு அடிமைகளாக நடத்தப்பட்ட காலங்களுமே அதிகமாக ஆதிக்கத்திலிருந்ததை சரித்திரத்தின் வாயிலாக அறிந்துகொள்ளலாம். நம் நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன், பெண்களுக்குக் கல்வி முற்றிலும் மறுக்கப்பட்டது. 'அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?' என்பதே அனைவரது கருத்தாக இருந்தது. பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரும் உரிமை மறுக்கப்பட்ட காலத்தில் தான் நம் நாட்டின் முதல் பெண் டாக்டராக திருமதி. முத்துலட்சுமி ரெட்டி என்பவர் சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து பெண் டாக்டராகப் பயிற்சி பெற்று சரித்திரம் படைத்தார். பின்னர் அரசின் உதவித் தொகையால் வெளிநாடு சென்று உயர் கல்வி பெற்ற முதல் இந்தியப் பெண்மணி (தென்னிந்தியப் பெண்மணி) என்ற பெருமையும் இவரை சேரும். பெண்கள் முன்னேற்றத்தில் அக்கறை காட்டாத அரசாங்கம் அக்கால கட்டத்தில் பெண்கள் கல்வி கற்றே ஆக வேண்டும் என்று எண்ணியதற்குக் காரணங்கள் உண்டு. அறியாமை என்னும் இருட்டில் வேதனையுடன் காலங்கழித்த பெண்கள் சிந்திக்கவும், செயல்படவும், ஏதுவான கல்வி இல்லாமையினிமித்தம் உடன்கட்டை ஏறுதல், பால்ய விவாகம், பெண்சிசு கொலை, தேவதாசி வாழ்க்கை போன்ற பல்வேறு சமுதாயக் கொடுமைகளுக்கு ஆளாகி அடிமைகளாக வாழ்ந்த அக்காலக்கட்டத்தில் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார், வீறு கொண்டு எழுந்ததிநிமித்தமே அரசாங்கம் அவர்களை ஊக்குவித்து, வெளிநாடு சென்று கல்வி பயிலுவதற்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தது. சென்னையிலுள்ள 'அடையாறு புற்றுநோய் மருத்துவமனை' இவரால் அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ரிக், யஜுர், சாம, அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களும் தோன்றிய காலத்தில் பெண்களுக்கும் அவைகளைக் கற்றுக் கொடுத்தனர். பின்னர் பெண்களுக்கு அக்கல்வி மறுக்கப்பட்டுவிட்டது. ஆங்கிலேயர் நம் நாட்டை அரசாண்ட காலத்தில் பெண்களுக்குக் கல்வியறிவைப் புகட்டுவது மிகவும் அவசியம் என அவர்களால் வலியுறுத்தப்பட்டதின் நிமித்தமும், நம் நாட்டின் சமுதாயப் புரட்சியாளர்கள் எனக் கருதப்பட்ட ராஜாராம் மோகன்ராய், சந்திர வித்யாசாகர், ஈ.வே.ரா. பெரியார், அம்பேத்கர், ஃபுளே (Phule) போன்றவர்களின் விடாமுயற்சி மற்றும் எழுச்சியூட்டும் கருத்துகளினாலும், பெண்களுக்கு கட்டாயக் கல்வி ஆரம்பிக்கப்பட்டது.
சுதந்திரம் பெற்ற பின்னர் நம் அரசாங்கம் எடுத்துக்கொண்ட பல்வேறு முயற்சிகளிநிமித்தம் பெண் கல்வி உயிர்மீட்சி அடைந்தது, அதனால் ஆண்களின் கல்வி வீதத்தைக் காட்டிலும் பெண்களின் வீதம் அதிகரித்திருப்பதை 1971, 2001ம் ஆண்டுகளில் எடுக்கப்பட்ட கணக்கீடுகள் தெரிவிக்கின்றன. 22% விழுக்காடாக இருந்த பெண்களின் கல்வி 2001ஆம் ஆண்டில் 55%ஆக அதிகரித்துள்ளதே இதற்குச் சான்று, அதாவது ஆண்களின் கல்வி வளர்ச்சி 11.72 சதவீதம் என்றும் பெண்களின் கல்வி வளர்ச்சி கிட்டத்தட்ட 15%ஆகவும் அதிகரித்துள்ளதை இக்கணக்கீடு நமக்குத் தெரிவிக்கின்றது. இந்நாட்களில் அநேக வீடுகளில் தாய்மார்கள் தங்கள் பெண் பிள்ளைகளின் கல்வியைக் குறித்து கரிசனைப்படுவதால்தான் எதையும் விற்றாவது அவர்களுக்குக் கல்விச் செல்வத்தைக் கொடுக்கும்படி ஓடியாடி அலைவதை நாம் காண முடிகிறது. இவர்களுடைய அறிவுக் கண்கள் திறக்கப்பட்டதால் தானே தனக்குப் பின் வரும் சந்ததியும் அறிவுச் செல்வங்களாக வாழ வழி செய்கிறார்கள்!
நம் நாட்டில் தலைசிறந்து விளங்கின பல பெண்மணிகளே இதற்குச் சான்றாவார்கள். இந்தியாவின் முதல் பெண் கவர்னர் என்ற அந்தஸ்தைப் பெற்ற திருமதி. சரோஜினி நாயுடு முதல் பெண் UNO பிரசிடெண்ட் விஜயலட்சுமி பண்டிட், பிரதமர் இந்திரா காந்தி, பச்சேந்திரி பால் (Bachendri Pal) என்னும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் பெண்மணி, முதல் பெண் நீதிபதியான ஃபாத்திமா பீவி மற்றும் விண்வெளியில் வெற்றி கண்ட கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ், விளையாட்டு வீராங்கனை P.T. உஷா, ஷைனி போன்ற பல பெண்மணிகள் ஆண்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல; பெண்களால் எல்லாம் முடியும் என நிரூபித்துள்ளனர். இன்று அனைத்துத் துறையிலும் சென்று தங்கள் திறமை, கடின உழைப்பு, மற்றும் சாதுரியத்தினால் வீட்டை மட்டுமின்றி அலுவலகம், தொழிற்சாலை, நீதிமன்றம், கல்வித்துறை, அரசாங்கம் போன்ற அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குவதன் காரணம் அவர்களது படிப்புத் திறன்தான் என்பதில் ஐயமில்லை. அரசியலிலும் (நாடாளுமன்றம் மற்றும் பாராளுமன்றம்) பெண்களின் ஈடுபாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறதைக் காண்கிறோம். பெண்களின் 33% இடஒதுக்கீடே இதற்குச் சான்றாகும்.
படிப்பறிவு எனும் தீ நம் நாட்டின் எல்லா மூலை முடுக்குகளிலும் பறந்து, பற்றி எரிந்து கொண்டிருக்கிறது என்பதற்கு கீழ் வரும் சம்பவம் ஒரு உதாரணம்: அதாவது மிகவும் பின்தங்கிய புதுக்கோட்டை மாவட்டத்தில் பெண்களுக்குக் கட்டாயக் கல்வி கொடுக்கப்பட்டதிநிமித்தம் வீட்டினுள் அடைபட்டிருந்த பெண்கள் வெளிவந்து மிதிவண்டி (Cycle) ஓட்டக் கற்றுக்கொண்டு 'கல் உடைக்கும் தொழிற்சாலைகளை' அவர்களே நிர்வாகம் பண்ணுமளவிற்கு உயர்ந்துள்ளனர்.
சுதந்திர இந்தியாவில் வாழும் பெண்களாகிய நாம் இன்று சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறோம் எனக் கூறினால் அது நமக்குக் கிடைத்திருக்கிற 'கல்வியறிவே'. வீட்டிலும் சமுதாயத்திலும் நாட்டிலும் பெண்களின் திறமையை அறிந்து பதவிகளைக் கொடுத்து கௌரவிக்கப்படுகிறார்கள். அதற்குச் சான்று பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை பார்லிமெண்டில் நிறைவேற்றியது ஆகும்.
மற்றவர்களுக்கு ஒளிவீசும் தன்னலமற்ற கலங்கரை விளக்கமாக ஒரு பெண் தன் கல்வி அறிவினால் தன் வீட்டாருக்கு மட்டுமின்றி தன்னைச் சுற்றியுள்ள அனைவரையும் அறியாமை என்கிற இருட்டை அகற்றி வெளிச்சமடையச் செய்வாள் என்பதில் சந்தேகமில்லை.

எவ்வாளவு விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு நபர்கள் அமைக்கப்பட்டாளும், நாங்கள் இப்படி தான் என்று மெரீனாவை சுற்றி பார்க்க வருபவர்கள்

எவ்வாளவு விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு நபர்கள் அமைக்கப்பட்டாளும், நாங்கள் இப்படி தான் என்று மெரீனாவை சுற்றி பார்க்க வருபவர்கள் காமராஜர் சாலையில் பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டு குப்பைகளை அங்கேயே வீசிவிட்டு செல்வதால் அப்பகுதி துர்நாற்றம் வீசுவதோடு பராமரிப்பு கேள்விக் குறியாக உள்ளது

சபரிமலையில் பங்குனி உத்திர திருவிழா இன்று ஆரம்பம்

சபரிமலை : சபரிமலையில் 10 நாட்கள் நடைபெறும் பங்குனி உத்திர திருவிழாவுக்காக ஐயப்பன் கோயில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. இன்று காலை கொடியேற்றப்படுகிறது. பங்குனி உத்திரம் நாளில் ஆராட்டு நடக்கும் வகையில் சபரிமலையில் 10 நாள்திருவிழா நடக்கிறது. இந்த ஆண்டு வரும் 19ம் தேதி பங்குனி உத்திரம் வருவதையொட்டி இன்று திருவிழா தொடங்குகிறது. இதற்காக சபரிமலை நடை நேற்று மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது. மேல்சாந்தி சசி நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். வேறு விசேஷ பூஜைகள் நடைபெறவில்லை. இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்ட பின்னர் நெய்யபிஷேகம் நடைபெறும். 7.30 மணிக்கு உஷபூஜை நடைபெறும். தொடர்ந்து கொடியேற்றத் துக்கான பூஜைகள் தொடங்கும். காலை 10.15 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரரு கொடியேற்றுகிறார். இரண்டாம் திருவிழா முதல் ஒன்பதாம் திருவிழா வரை தினமும் பகல் ஒரு மணிக்கு உற்சவபலி நடைபெறும். இன்று முதல் எட்டாம் நாள் விழா வரை தினமும் இரவு ஸ்ரீபூதபலி நிகழ்ச்சி நடைபெறும். 18ம் தேதி இரவு 10 மணிக்கு சுவாமி பள்ளிவேட்டைக்காக சரங்குத்திக்கு எழுந்தருளுவார். 19ம் தேதி காலை 7.30 மணிக்கு உஷபூஜை முடிந்ததும், சுவாமி பள்ளி வேட்டைக்காக பம்பைக்கு யானை மீது எழுந்தருளுவார். பகல் 12.30 மணிக்கு திருவேணி சங்கமத்தில் ஆறாட்டு நடைபெறும். பின் பிற்பகல் 3 மணிக்கு சன்னிதானத்துக்கு ஆறாட்டு பவனி புறப்படும். இரவு 10 மணிக்கு இந்த பவனி சன்னிதானம் வந்ததும் திருக்கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெறும். நடை திறக்கப்பட்டிருக்கும் எல்லா நாட்களிலும் காலை 5 மணி முதல் 11 மணி வரை நெய்யபிஷேகம் நடைபெறும். 19ம் தேதி மட்டும் காலை 7 மணிக்கு நெய்யபிஷேகம் நிறைவு பெறும்.

மதுரை மீனாட்சி கோயிலுக்கு ஐ.எஸ்.ஓ., தர சான்று

மதுரை : சுத்தம் மற்றும் சிறந்த பராமரிப்பிற்காக மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு ஐ.எஸ்.ஓ., தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் தர சான்று வழங்கி உள்ளது. மீனாட்சி அம்மன் கோயிலுக்கு ஐ.எஸ்.ஓ., சான்று பெற கோயில் நிர்வாகம் சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் இந்து அமைப்பு சார்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது. பல்வேறு எதிர்ப்புக்களையும் மீறி தற்போது தர சான்று கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் உதவியை நாடுகிறது சவுதி அரேபியா

தகவல் தொழில்நுட்பம், இன்ப்ராஸ்ட்ரெக்சர் மற்றும் எனர்ஜி பிரிவில் முன்னேற்றம் அடைய, இந்தியாவின் உதவியை தங்கள் நாடு எதிர்பார்ப்பதாக, சவுதி அரேபியாவிற்கான இந்திய தூதர் தால்மிஜ் அகமத் தெரிவித்துள்ளார். அகில இந்திய தொழிலதிபர்கள் சங்கம் மற்றும் உலக வர்ததக மையமும் இணைந்து நடத்திய கருத்தரங்கில் அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது, தங்கள் (சவுதி அரேபியா) நாடு, பாசுமதி அரிசி, ஆபரணங்கள், துணிகள் ஏற்றுமதியில் தன்னிறைவு பெறறுள்ளது. தகவல் தொழில்நுட்பம், இன்ப்ராஸ்ட்ரெக்சர் மற்றும் எனர்ஜி பிரிவுகளில் காலூன்ற திட்டமிட்டுள்ளோம். இதற்காக, தங்களுக்கு 1.4 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவைப்படுகிறது. இதுதொடர்பான உதவிக்காக, இந்தியாவை நாடியுள்ளதாக அவர் தெரிவித்தார். சர்வதேச அளவில், பொருளாதார வளர்ச்சியில் முன்னணியில் உள்ள இந்தியாவுடன் உறவு கொண்டிருப்பது தங்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும், 2010ம் ஆண்டில் மட்டும், 21 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிற்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளதாகவும், இதே உறவு தொடர்ந்து நீடிக்கும்பட்சத்தில், வரும் ஆண்டுகளில் வர்த்தகம் 30 முதல் 40 சதவீதம் வரை உயர வாய்ப்பு உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பிரீமாண்டில் மகா சிவராத்திரி

சான்பிரான்ஸிஸ்கோ : அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் வளைகுடா பகுதியில் உள்ள பிரிமாண்ட் இந்து கோயிலில் மார்ச் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் மகா சிவாரத்திரி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
மார்ச் 2ம் தேதி காலை 9 மணியளவில் ஆரம்பித்த சிவபெருமானின் அபிஷேகத்தை ‌தொடர்ந்து மாலை பிரதோஷ பூஜையும் நடைபெற்றது. பின் இரவு 7 மணியளவில் பிரதம கால பூஜை ஆரம்பித்தது. இதில் விஷேச கலச பூஜையை தொடர்ந்து பால், தயிர், தேன், போன்ற 11 விதமான பொருட்களால் லிங்கத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பக்தர்களின் பக்தி பாடல்களுடன் சிவபெருமான் மலர் அலங்காரத்தில் காட்சி அளித்தது மிகவும் மெய்சிலிர்க்க வைத்தது. அதன் பின் நடந்த மகா தீபாராதனையைத் தொடர்ந்து பக்தர்களுக்கு மகா பிரசாதம் வழங்கப்பட்டது.
பின் திவதிய கால பூஜை , திரிதிய கால பூஜை, அதன் பின் ருத்த ஹோமமும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மார்ச் 3ம் தேதி  காலையில் சூரிய கால பூஜை சிறப்பாக நடைபெற்றது. அன்று மாலை நடந்த மகாமிருத்ஞ்சயாய ஜபத்தை தொடர்ந்து சீனிவாசன் சாஸ்திரிகள் அனைத்து பூஜைகளையும் மிகவும் சிறப்பாக செய்தார்.
இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானை தரிசித்தனர்

தமிழ்நாடு திண்டுக்கல் 4 வழிச்சாலையில் விபத்து : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

திண்டுக்கல் : மதுரையில் இருந்து பெங்களூருக்கு அதிவேகமாகச் சென்ற கார், திண்டுக்கலில் நான்கு வழிச்சாலையில் உள்ள தடுப்புச் சுவரில் மோதியதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர். மதுரை கே.புதூரைச் சேர்ந்தவர் ஆண்டவர்(58); ஜவுளி வியாபாரி. இவரது மனைவி ஜெயந்தி(42), மகன் செல்வகுமார்(29) ஆகியோர் டாடா இண்டிகா (எண்: கேஏ:02, எம்.பி.1313 )காரில், பெங்களூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு புறப்பட்டனர். காரை ஆண்டவரின் தம்பி மகன் ஜெயக்குமார்(28) ஓட்டி வந்தார். இவர்கள் வந்த கார், திண்டுக்கல் நான்கு வழிச்சாலை கொட்டப்பட்டி பிரிவு அருகே வரும் போது, அதிவேகம் காரணமாக அங்கிருந்த தடுப்புச் சுவரில் நேற்று மதியம் 2 மணிக்கு மோதியது. இதில் ஆண்டவர், ஜெயந்தி, ஜெயக்குமார் சம்பவ இடத்திலேயே பலியாயினர். செல்வகுமார் மட்டும் காயமடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்துக்கு காரணம்: காரின் அதிக வேகம் காரணமாக, திண்டுக்கல் அருகே நான்கு வழிச்சாலை தடுப்புச் சுவரில் மோதியுள்ளது. பின்னர் மூன்று முறை கவிழ்ந்து, அருகில் இருந்த பள்ளத்தில் கார் விழுந்துள்ளது. இறந்தவர்களின் உடல்கள் 50 மீட்டருக்கு ஒருவர் வீதம் விழுந்து கிடந்தனர். ரோடு அகலமாக இருந்தும் அதிவேகம் காரணமாக தடுப்புச் சுவரில் மோதியவுடன், காரின் வேகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. காரில் வந்தவர்கள் பேசிக் கொண்டே வந்ததால், தடுப்புச் சுவரை கவனிக்க தவறியுள்ளது என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...