தகவல் தொழில்நுட்பம், இன்ப்ராஸ்ட்ரெக்சர் மற்றும் எனர்ஜி பிரிவில் முன்னேற்றம் அடைய, இந்தியாவின் உதவியை தங்கள் நாடு எதிர்பார்ப்பதாக, சவுதி அரேபியாவிற்கான இந்திய தூதர் தால்மிஜ் அகமத் தெரிவித்துள்ளார். அகில இந்திய தொழிலதிபர்கள் சங்கம் மற்றும் உலக வர்ததக மையமும் இணைந்து நடத்திய கருத்தரங்கில் அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது, தங்கள் (சவுதி அரேபியா) நாடு, பாசுமதி அரிசி, ஆபரணங்கள், துணிகள் ஏற்றுமதியில் தன்னிறைவு பெறறுள்ளது. தகவல் தொழில்நுட்பம், இன்ப்ராஸ்ட்ரெக்சர் மற்றும் எனர்ஜி பிரிவுகளில் காலூன்ற திட்டமிட்டுள்ளோம். இதற்காக, தங்களுக்கு 1.4 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவைப்படுகிறது. இதுதொடர்பான உதவிக்காக, இந்தியாவை நாடியுள்ளதாக அவர் தெரிவித்தார். சர்வதேச அளவில், பொருளாதார வளர்ச்சியில் முன்னணியில் உள்ள இந்தியாவுடன் உறவு கொண்டிருப்பது தங்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும், 2010ம் ஆண்டில் மட்டும், 21 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிற்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளதாகவும், இதே உறவு தொடர்ந்து நீடிக்கும்பட்சத்தில், வரும் ஆண்டுகளில் வர்த்தகம் 30 முதல் 40 சதவீதம் வரை உயர வாய்ப்பு உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment