|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

22 March, 2012

வாய்ப்புண்ணுக்கு மருந்தாகும் வாழைப்பூ சூப்!

கோடை காலம் வந்தாலே பெரும்பாலோனோருக்கு வாய்ப்புண் தொந்தரவு ஏற்படும். வாய்ப்புண்ணுக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் ஜீரணக்கோளாறு, உடல்சூடு, மன அழுத்தம் போன்றவைகளினால் அதிக அளவில் வாய்ப்புண் ஏற்படுகிறது. இதனால் பேசவும், உணவு உட்கொள்ளவும் சிரமம் ஏற்படுகிறது. வாய்ப்புண்ணுக்கு வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே எளிதாக குணப்படுத்தலாம் என்று நம் முன்னோர்கள் கண்டறிந்துள்ளனர். அவர்கள் கூறியதை நீங்களும் பின்பற்றிப் பாருங்களேன்.

தேங்காய் பால் வாய்ப்புண் ஏற்பட்டிருந்தால் தேங்காயை அரைத்து பால் எடுத்து ஒருநாளைக்கு மூன்று முறை கொப்பளிக்க வேண்டும். இதனால் வாய்ப்புண் சரியாகும்.இரண்டு கப் தண்ணீரை கொதிக்கவைக்க வைத்து அதில் வெந்தய செடியின் இலைகளை போட்டு ஊறவைக்கவேண்டும். 10 நிமிடம் கழித்து வெந்தைய இலைகளை எடுத்து போட்டுவிட்டு அந்த தண்ணீரில் வாய்க்கொப்பளிக்க வேண்டும். தினசரி சாப்பிட்ட உடன் இதை செய்து வர வாய்ப்புண் குணமாகும்.

துளசி இலை ஒரு சில துளசி இலைகளை பறித்து கழுவிய பின் வாயில் போட்டு நன்கு மெல்லவும். அதன் சாறு வாய்ப்புண் உள்ள பகுதிகளில் படவேண்டும். துளசி இலைகளை முழுவதுமாக மென்று அப்படி விழுங்கிவிடவேண்டும். சில நிமிடங்கள் கழித்து தண்ணீர் குடிக்கலாம். வாய்ப்புண் எரிச்சல் குணமாகும்.

கொய்யா இலையை பறித்து மென்று சாற்றினை விழுங்கவேண்டும். தினசரி மூன்று முறை இதுபோல செய்ய சில தினங்களில் வாய்ப்புண் குணமாகும்.மஞ்சள் மருந்து அனைத்துவகை புண்களையும் குணமாக்கும் சக்தி மஞ்சளுக்கு உண்டு. காலையில் வெறும் வயிற்றில் சிறு துண்டு மஞ்சள் சாப்பிடலாம். வாய்ப்புண், வயிற்றுப் புண் இருந்தால் குணமடையும். ஏற்பட வாய்ப்பே இல்லை என்கின்றனர். 

தக்காளியை கூழாக்கி அதை தண்ணீரில் கரைத்து வாய் கொப்பளிக்கலாம் அல்லது வெறும் தக்காளியை நன்றாக மென்று சாப்பிடலாம்.நெல்லிக்காயை விதை நீக்கிவிட்டு பேஸ்ட் போல அரைக்கவும். அதை வாய்ப்புண் உள்ள இடத்தில் அப்ளை செய்ய வாய்ப்புண் குணமாகும்.புதினா இலை புதினா இலைச் சாற்றினை வாய்ப்புண் உள்ள இடத்தில் அப்ளை செய்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும். எரிச்சல், வலி குணமாகும்.எலுமிச்சை தோலை நன்கு அரைத்து வாய்ப்புண் உள்ள இடத்தில் பூசலாம் நிவாரணம் கிடைக்கும்.

வாழைப்பூ, வாழைப்பழம் துவர்ப்பு தன்மை கொண்ட வாழைப்பூ வாய்ப்புண்ணுக்கு சிறந்த மருந்தாகும். வாழைப்பூவை வேக வைத்து சூப் வைத்து குடிக்கலாம். இதனால் வாய்ப்புண் சரியாகும். வயிற்றில் ஜீரணக் கோளாறு ஏற்பட்டாலும் நிவாரணம் கிடைக்கும். வாழைப்பழத்தை தேனுடன் கலந்து சாப்பிடலாம் இது வாய்ப்புண்ணுக்கு சிறந்த மருந்தாகும்.வாய்ப்புண்ணுக்கு மருந்து மாத்திரை சாப்பிட்டால் அப்போதைக்கு மட்டுமே வலி குணமாகும். அதேசமயம் பாட்டி வைத்தியத்தை பின்பற்றினால் எந்த வித பக்கவிளைவுகளும் இல்லாமல் நிரந்தர குணம் கிடைக்கும்  

இந்தியா உட்பட 11 நாடுகளுக்கு அமெரிக்கா நோட்டீஸ்!


 ஈரான் மீதான பொருளாதாரத் தடையை மீறி தொடர்ந்தும் கச்சா எண்ணெய்யை அந்நாட்டிலிருந்து இறக்குமதி செய்து வரும் இந்தியா உட்பட 11 நாடுகளுக்கு அமெரிக்கா விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஈரானின் அணு ஆயுத தயாரிப்பு முயற்சிக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா ஆகியவை அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைவிதித்தது. அமெரிக்காவின் இத்தடையை ஏற்று ஜப்பான், பெல்ஜியம் உள்ளிட்ட பலநாடுகள் ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்துக் கொண்டன.

இத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ளாதது பற்றி இந்தியா,சீனா உட்பட 12 நாடுகளிடம் அமெரிக்கா விளக்கம் கோரியுள்ளது.ஈரான் மீதான பொருளாதாரத் தடையை முழுமையாக அமல்படுத்தும்போதுதான் அணு ஆயுத தயாரிப்பு குறித்து ஈரான் ஒன்றுக்கு இரண்டுமுறை சிந்திக்கும் என்பது அமெரிக்காவின் எதிர்பார்ப்பு இவ்விவகாரம் தொடர்பாக தனித்தனியாக எந்த ஒருநாட்டுடனும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும் அனைத்து நாடுகளும் இத்தடையை நடைமுறைப்படுத்த ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை படிப்படியாக குறைத்துக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அரசு செய்தித் தொடர்பாளர் விக்டோரியா நுலந்த் தெரிவித்துள்ளார். 

வால்ட் டிஸ்னியுடன் கை கோர்த்தது மும்பை இந்தியன்ஸ்!


மும்பை இந்தியன்ஸ் அணி, பிரபல வால்ட் டிஸ்னி நிறுவனத்துடன் கை கோர்த்துள்ளது. இதன் மூலம் டிஸ்னி நட்சத்திரங்கள் முதல் முறையாக கிரிக்கெட் உலகிற்குள் நுழைய வழி பிறந்துள்ளது. கடந்த 2008ல் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் துவக்கப்பட்ட போது, 111.9 மில்லியன் தொகை கொடுத்து மும்பை இந்தியன்ஸ் அணியை வாங்கினார் முகேஷ் அம்பானி. அதன்பிறகு பல நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட மும்பை இந்தியன்ஸ், தற்போது பிரபல வால்ட் டிஸ்னி நிறுவனத்துடன் இணைந்துள்ளது.
இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த அம்பானியின் மனைவி நீதா அம்பானி கூறியதாவது கடந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணி பல சர்ச்சைகளில் சிக்கியது. ஆனால் கடந்த ஐபிஎல் தொடரில் 2ம் இடத்தை பெற்றதன் மூலம் சர்ச்சைகளை மும்பை அணி வென்றது. இன்று பேஸ்புக்கில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சுமார் 2.8 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர். மும்பை இந்தியன்ஸ் அணியின் மீதுள்ள நம்பிக்கையினால், சர்வதேச அளவில் பிரபலமான டிஸ்னி நிறுவனம் எங்களுடன் கைக்கோர்த்துள்ளது என்றார்.
இது குறித்து வால்ட் டிஸ்னி இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ரோனி ஸ்க்ருவாலா கூறியதாவது, வியாபார ரீதியாக அதிக வாய்ப்புள்ள நிறுவனங்களுடன் மட்டுமே டிஸ்னி கை கோர்க்கிறது. நீதா அம்பானியின் செயல்பாடுகளால் மும்பை இந்தியன்ஸ் அணியை ஆடுகளத்திலும், வெளியேயும் சிறந்த நிலைக்கு வரும் என்பதில் சந்தேகம் இல்லை. புதிய ஒப்பந்தம் மூலம் டிஸ்னி நிறுவனம் மற்றொரு புதிய நிலைக்கு வளரும்.இந்தியாவில் பிரபலமான உள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டிஸ்னியின் இ.எஸ்.பி.என் நிறுவனம் இன்னும் நுழைய வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் சச்சின் போன்ற பிரபலங்கள் உள்ள மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்ததால், ஐபிஎல் தொடரில் டிஸ்னியின் கதாபாத்திரங்கள் நுழைய வாய்ப்பு ஏற்படும் என்றார். 

பெற்ற மகளையே ரூ.65,000க்கு விபச்சார கும்பலிடம் விலை பேசிய தாய்!


கடன் தொல்லையைத் தாங்க முடியாமல் ஒரு பெண் தான் பெற்ற மகளையே ரூ.65,000க்கு விபச்சார கும்பலிடம் விலை பேசிய அவலம் சென்னையில் நடந்துள்ளது.சென்னை குரோம்பேட்டை அருகே உள்ள சிட்லபாக்கத்தைச் சேர்ந்தவர் குமுதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவருக்கு 13 வயதில் ஒரு மகனும், 12 வயதில் ராணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மகளும் உள்ளனர். குமுதாவின் மகனுக்கு திடீர் என்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் அங்கு, இங்கு என்று கடன் வாங்கி சிகிச்சைக்காக ரூ.1.5 லட்சம் செலவு செய்து மகனைக் காப்பாற்றினார். ஆனால் கடன் தொல்லை அதிகமாகிவிட்டது. இதனால் அவரது கணவர் மனைவி, மக்களை விட்டுவிட்டு ஓடிவிட்டார். கடன்காரர்கள் பணம் கேட்டு நெருக்க குமுதா விபச்சாரத்தில் ஈடுபட்டு அதில் கிடைக்கும் பணத்தை வைத்து கடனை அடைக்கத் துவங்கினார். அவருக்கு இந்த தொழிலில் தினமும் ரூ.500 முதல் ரூ.1000 வரை கிடைத்தது. 
அப்போது புரோக்கர் ஒருவன் குமுதாவிடம் நீ சென்றால் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ரூ.1,000 தான் கிடைக்கும், உனது மகளை அனுப்பினால் தினமும் ரூ.65,000 கிடைக்கும் என்று ஆசை வார்த்தை காட்டினான். இதை கேட்டு முதலில் அதிர்ந்தாலும் குடும்ப நிலையைக் கருதி மகளின் உடலுக்கு விலை பேசத் துணிந்தார். கோவையில் உள்ள தொழில் அதிபர் ஒருவருக்கு ராணியை விருந்தாக்க முயற்சித்தார். இந்நிலையில் இது குறித்து தகவல் அறிந்த அண்ணாநகர் இந்திய சமுதாய நல அமைப்பு நிர்வாகிகள் ராணியை மீட்டனர். அவர்கள் குமுதாவுக்கு அறிவுரை வழங்கினர். ஆனால் அவர் எதுவும் பேசமால் கதறி அழுதார். அவரது பிள்ளைகள் இருவரையும் உறைவிட பள்ளியில் சேர்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.  

மீண்டும் மீண்டும், சாணியை பூசிக்கொள்ளும் நித்தியானந்தா !

ஒன்னு நிச்சயம் திருடனா பார்த்து திருந்தா விட்டால் கதைதான் இப்பா என்ன ஏகப்பட்ட பாதுகாப்போட பரம லீலை ஆடும். இந்த சாக்கடை நமக்கு என்ன கவலை சாக்கடையை தேடி போரவங்களுக்குகாக

இன்று உலக தண்ணீர் தினம்.


பழமையும், பெருமையும் மிக்க, நம் பாரதத் திருநாடு சுதந்திரம் அடைந்து, 65 ஆண்டுகளாக போகிறது. ஆனால் இன்னமும் அடிப்படைத் தேவைகளான உணவு, உறைவிடம், தண்ணீருக்காக போராடிக் கொண்டு இருக்கிறோம். சுத்தமான, பாதுகாக்கப்பட்ட குடிநீரை மக்களுக்கு தரவேண்டும், என்ற அடிப்படை சிந்தனை கூட எந்த அரசியல்வாதிக்கும் இதுவரை தோன்றவில்லை என்பதே இந்திய குடிமகனின் வேதனை. இங்கே பெண்கள். ஐந்து குடம் தண்ணீருக்கு, பத்து கிலோமீட்டர் தூரம் நடைபயணம். அதுவும் இடுப்பில் சுமையுடன். குடிநீர் வசதி இல்லாத கிராமங்கள், இன்றும் இருக்கிறது என்றால் அவமானம், அரசியல்வாதிகளுக்குத் தான். தேடிச் சென்று, ஓட்டு கேட்பதோடு வேலை முடிந்துவிட்டதென நினைக்கும் அவர்களின் அறியாமையால், தண்ணீரைத் தேடிக் கொண்டே இருக்கின்றனர், கிராம மக்கள். அத்தகைய கிராமத்தைத் தேடி, நமது நிருபர்கள் குழு பயணித்தது. வரிசையில் நின்றும், நடந்தும் கால்கடுக்கும் வலியோடு, வேதனையும் கண்களில் தெறித்தது, நம் கிராமத்து பெண்களுக்கு. என்று தீரும் இந்தத் தண்ணீர் தாகம் இந்தக் கிராமங்களுக்கு விமோசனம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், உங்கள் பார்வைக்கு படம் பிடித்துத் தருகிறோம்.

உசிலம்பட்டியில் ஒரு பொட்டல்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகாவில் உள்ளது பொட்டல்பட்டி ஊராட்சி. இங்குள்ள சிறுகிராமம் போலிப்பட்டி. கிராமத்தைப் போலவே, பெயருக்கு "மோட்டார் பம்ப்' உள்ளது. குடிநீருக்கு இங்கே வழியில்லை. முக்கால் கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று, அருகில் உள்ள கருப்பசாமி கோயில் பகுதியில் தண்ணீர் பிடிக்கின்றனர். அங்கே பைப்பில் அடித்தால், எப்போதும் குடிநீர் வரும். இங்குள்ள 150 குடும்பங்களின் ஒட்டுமொத்த குடிநீர் ஆதாரம் இதுதான். மோட்டார் தண்ணீர் சுவையின்றி இருப்பதால், சமைப்பதற்கான தண்ணீருக்கும் நீண்ட தூரம் பயணம் செய்கின்றனர். குடும்பத்தலைவி பாப்பா கூறுகையில்,""எங்க வீட்டுல ஆளுங்க அதிகம். குடிக்க, சமைக்கறதுக்கு குறைஞ்சது ஒருநாளைக்கு எட்டு குடம் தண்ணீ வேணும். எட்டுதரம் போகணும்னா, அதுலய நாலு மணி நேரம் போயிடும். அடிக்கடி கரன்டு போறதால, மோட்டார் பம்ப்பிலும் தண்ணீ வரல. துவைக்க, புழக்கத்திற்கும் அடிச்சு தான் எடுக்கணும். தினமும் பாதிநேரம் குழாய்ல தான் இருக்கோம்,'' என்றார்.

வைகைக்கரையோரம் இப்படி வேதனை: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஒன்றியம் நென்மேனி ஊராட்சிக்கு உட்பட்ட லெட்சுமணன் குடியிருப்பில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. வைகை ஆற்றின் கரையோரத்தில் உள்ள இப்பகுதி பெண்கள், குடத்துடன், ஊற்று நீருக்காக வைகை ஆற்றில் தவம் கிடக்கின்றனர். ஒரு குடம் தண்ணீர் நிரம்ப அரை மணிநேரம் ஆகிறது. ஒரு குடம் எடுத்து திரும்ப ஒரு மணி நேரம் ஆகிறது. பெரும்பாலும் விவசாய பணி செய்து வரும் இப்பகுதி பெண்கள் குடிநீருக்காக சில நாட்களில் வேலைக்கு செல்ல முடியாத நிலையும் ஏற்படுகிறது. இந்த ஊற்றும் அக்னி வெயிலுக்கு தாக்குப்பிடிக்கவில்லை. இங்கு அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய்களில் உப்புநீர் மட்டுமே வருவதால், பல நாட்கள் இந்த நீரையே குடிக்கும் அவலநிலையில் உள்ளனர். ரத்தினம்மாள்(மகளிர் மன்ற தலைவி, லெட்சுமணன்குடியிருப்பு): பல ஆண்டுகளாக இங்கு குடிநீர் பெரும் பிரச்னையாக உள்ளது. மணல் குவாரி மற்றும் வைகை வெள்ளத்தால் பைப்புகள் தொடர்ந்து உடைபட்டுள்ளன. ஆற்றில் வெள்ளம் வரும் போதும், வறட்சி காலங்களிலும் உப்புநீரையே குடித்து வருகிறோம். ஊராட்சி துணைத்தலைவர் தனுஷ்கோடி: வைகை ஆற்றில் ராட்சத கிணறு அமைத்து குடிநீர் கிடைக்க செய்யவேண்டும்.

ஊற்று நீரே உயிர்: சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றியம் இலந்தைக்கரை ஊராட்சியில் விலாங்காட்டூர், கிராம்புலி, பழுவூர் ஆகிய கிராமங்களில் நிலத்தடி நீர், பளுவூர் கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து கிடைக்கும் தண்ணீர் உவர்ப்பாக உள்ளது. வேறு வழியில்லாமல் விலாங்காட்டூர் நாட்டார் கால்வாயில் மூன்று அடி ஆழத்தில் இரண்டு குழி தோண்டி அகப்பையால் தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன் ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்டத்தில் இணைப்புகள் வழங்கியும் தண்ணீர் வரவில்லை. கோடை காலத்தில் ஊற்று வறண்டு ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே தண்ணீர் ஊறும். இதனை போட்டி போட்டு கஷ்டப்பட்டு எடுக்க வேண்டிய நிலை. இக்கிராம மக்கள் கூறுகையில் , "கோடை காலத்தில் ஊற்று குறைந்து ஒருகுடம் தண்ணீர் எடுக்க பலமணி நேரம் ஆகி விடும். இரவு நேரங்களில் விடிய விடிய காத்திருந்து தண்ணீர் பிடித்து வருகிறோம். மூன்று நாட்களுக்கு ஒரு குடம் தண்ணீர் கிடைப்பது கடவுள் செயல், வரிசையில் இடம் பிடிப்பதில் ஏற்படும் பிரச்சனைகளும் தாராளம்.வெயில் நேரத்தில் குடி தண்ணீர் தேடுவதிலேயே எங்கள் காலம் கழிந்து விடுகிறது,' என்றனர். பழுவூர் முத்தையா: ராமநாதபுரம் கூட்டு குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தண்ணீர் வந்ததில்லை. ஊற்று தண்ணீரும் இல்லை என்றால் கிராமத்தை விட்டு வெளியேறுவதை விட வேறு வழியில்லை.

மலைக்கிராமம் என்றாலும் தவிப்பு தான்: தேனி மாவட்டத்தில் முல்லை பெரியாறும், வைகை ஆறும் பாய்வதால் வளம் கொழிக்கும் மாவட்டம் என்றுதான் நினைக்கத்தோன்றும். ஆனால் மாவட்ட தலைநகரான தேனி உட்பட வைகை ஆற்றின் துவக்க பகுதியாக உள்ள வருஷநாடு மலை கிராமங்களிலும் மக்கள் குடிநீருக்காக தவிக்கின்றனர், என்றால் நம்ப முடியாதுதான். உண்மை நிலை அது தான். மாவட்டத்தில் கோடை துவங்கி விட்டாலே குடிநீர் தட்டுப்பாடும் துவங்கி விடுகிறது.மூலவைகை உற்பத்தியாகும் வருஷநாடு வாலிப்பாறை அருகில் உள்ள மலை கிராமம் உருட்டிமேடு.இங்கு 20 குடும்பங்கள் வசிக்கின்றன. மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி இருந்தும், 10 ஆண்டுகளாக அதில் குடிநீர் ஏற்றப்படாததால் காட்சிப்பொருளாகவே உள்ளது. குடிநீருக்காக அருகில் உள்ள வைகை ஆற்றில் ஊற்று தோண்டி எடுக்கும் நிலை உள்ளது. குடியிருப்பில் இருந்து ஆற்றுக்கு வரவேண்டும் என்றால், செங்குத்தான பாறையில் ஏறி ஆற்றுக்குள் இறங்கும் நிலை உள்ளது. தண்ணீர் குடங்களுடன், பாறைகளின் மேல் ஏறிச்செல்லும் வயதான பெண்களைப்பார்க்கவே பரிதாபமாக உள்ளது. பி.கல்யாணி: வயதானவர்கள் குடங்களுடன் பல நேரங்களில் பாறைகளில் விழுந்து அடிபட்டுள்ளனர். இதற்கு விடிவு காலம் எப்போது வருமோ. ஊராட்சி தலைவரிடம் இந்த பாறைகள் வழியாக இறங்குவதற்கு வசதியாக பாறைகளை உடைத்து படிக்கட்டுகளாவது அமைத்து தாருங்கள் என்று கேட்டு விட்டோம். எஸ்.வேல்த்தாய்:பாறைகளில் ஏறி இறங்கி தண்ணீர் எடுக்க முடிவதில்லை. இதனால் ஆண்களின் உதவியை நாடுகிறோம். ஆற்றில் ஊற்று தோண்டி தண்ணீர் எடுக்கிறோம். இப்பகுதியில் 20க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இதனால் ஆற்றில் வரும் அசுத்தமான நீரையே குடிநீராக பயன்படுத்துகிறோம்.

மதுரையில் எப்படி: மதுரை மாநகராட்சியில் 58 சதவீதம் வீட்டு இணைப்புகள் மூலம், 42 சதவீதம் பொது குடிநீர்க் குழாய்கள் மூலம் வினியோகம்.இரண்டு நாட்களுக்கு ஒருமுறை, மூன்று மணி நேரம் குழாய்களில் வினியோகம்.நபர் ஒருவருக்கு, தினமும் சராசரியாக 114 லிட்டர் குடிநீர் அளிக்க வகை செய்யப்பட்டுள்ளது. பழுதான சேவை மூலம் வீணாகும் தண்ணீரின் அளவு 15 சதவீதம்.

தண்ணீர்த்துளிகள்...

* உலகளவில் ஒவ்வொரு நாளும், தூய்மையற்ற குடிநீரைப் பருகுவதன் மூலம் 25ஆயிரம் பேர் இறப்பதாக, ஐ.நா., சுற்றுப்புற திட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

* நீரில் கரைந்துள்ள ஆக்சிஜன் அளவு ஒரு லிட்டருக்கு 0.75 முதல் 1.5 மில்லிகிராம் என்ற அளவில் இருக்க வேண்டும்.

* இந்தியாவின் நகர்ப்புறங்களில் சராசரியாக 64 சதவீத மக்களுக்கே, வீட்டுச் சேவை இணைப்புகள் மற்றும் பொது குடிநீர் நிலைகள் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது.

* நபர் ஒருவருக்கு தினமும் 135 லிட்டர் தண்ணீர் வழங்கப்பட வேண்டும் என்பது தேசிய இலக்கு. ஆனால் நகரங்களுக்கு ஏற்ப 37 முதல் 298 லிட்டர் வரை வழங்கப்படும் அளவு மாறுபடுகிறது.

* பழுதான சேவை இணைப்புகள், குழாய்கள், மீட்டர் இணைப்புக் கோளாறுகளால் 70 சதவீத தண்ணீர் வீணாகிறது.

வாழ்க்கை சிறப்படைய கடைபிடிக்க வேண்டிய பத்து கட்டளை


1 சிந்தனை : அன்பு இருக்கும் இடத்தில் வாழ்வு இருக்கும். பகை அழிவில் கொண்டு விடும். யார் மீது வேண்டுமானாலும் அன்பைக் கொண்டு ஆதிக்கம் செலுத்தலாம். இதைத் தவிர உயர்ந்த ஆயுதம் எதுவும் என்னிடம் இல்லை. - காந்திஜி  
2 புத்திமதி:  பிறரது குற்றங்களை ஒருக்காலும் பேசாதே. அவை எவ்வளவு கெட்டவையாயினும் சரி. அதனால் எந்த பயனும் விளையப் போவதில்லை.  பிறர் குற்றத்தைப் பேசுவதால், அவனுக்கு மட்டுமின்றி, உனக்கும் நீயே கேடிழைத்துக் கொள்கிறாய். - விவேகானந்தர் 
 3 கடமைகள்:  பகைவனை நண்பனாக்கிக் கொள்ளுதல், துஷ்டனை நல்லவனாக்குதல்,  படிக்காதவனை கல்விமான் ஆக்குதல். 
 4 குறைகள்: 1. மந்திரத்தின் குறை பாராயணம் செய்யாமை 2. வீட்டின் குறை பழுது பாராமை 3. அழகின் குறை சிரத்தை இன்மை 4. காவலாளியின் குறை கவனக்குறைவு 
 5 போதுமே: 1. எவர் ஒருவர் நண்பரைத் தேடி அலைகின்றாரோ அவருக்கு அல்லாஹ் போதுமானவன். 2 எவர் ஒருவர் வழிகாட்டியைத் தேடி அலைகின்றாரோ அவருக்கு அல்குர்ஆன் போதுமானது. 3. எவர் ஒரு உபதேசியைத் தேடி அலைகின்றாரோ, அவருக்கு மரணம் போதுமானதாகும். 4 எவர் பணத்தைத்தேடி அலைகின்றாரோ, அவருக்கு போதுமென்ற மனமே போதுமானது. 5. எவர் இந்த நான்கிலும் படிப்பினை பெறவில்லையோ, அவருக்கு நரகம் போதுமானது. -நபிகள் நாயகம் 
 6 மனமே ஆறு: 1. எதிர்காலத்தைப் பற்றிய பயம் வேண்டாம். 2. பயப்படாதே, நான் உனக்கு துணை நிற்கிறேன், என்பது இயேசு நமக்கு அளிக்கும் ஆறுதல் வார்த்தை. 3. நீர் (ஆண்டவர்) எனக்கு துணையாக என் அருகில் இருக்கிறீர், என்கிறார் தாவீது ராஜா. 4. கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார். நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்ன செய்வான். 5. தேவபயம் இன்றியமையாதது. மனுஷபயம் தவிர்க்கப்பட வேண்டியது. 6. கர்த்தருக்கு பயப்படுகிறவனுக்கு திடநம்பிக்கை உண்டு. அவன் பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும். இந்த 6மொழிகளும், வாழ்க்கைப் பயத்தை நீக்கி ஆறுதல் தரும்.  7 நன்முத்து: 1. சோம்பலை உடனே ஒதுக்கித்தள்ளு. 2. குழந்தை உள்ளத்துடன் வாழ கற்றுக்கொள் 3. கோழைத்தனத்தை பள்ளத்தாக்கிற்குள் எறி. 4. சிந்தனை ஆற்றல் உள்ள மூளை மட்டும் போதும். 5. பலவீனம் என்ற சொல்லை அகராதியில் எடுத்து விடு 6. ஆறறிவையும் பயன்படுத்தி ஆற்றலுடன் திகழ். 7. வேலை செய்யும் கைகளை மட்டும் வைத்துக் கொள்.  8ம் உன் சொத்து: 1. வீண் பேச்சு பேசாதே 2. ஒழுக்கத்தைப் பேணு 3. நல்லவனாக வாழ் 4. கெட்டவனுடன் சேராதே 5. பேச்சில் இனிமை சேர் 6. ஆராய்ந்து செயலில் இறங்கு 7. பெரியவர்களுடன் சேர்ந்திரு 8. பொய்யை மெய்யாக்காதே!   9 கட்டுப்பாடுகள்: 
1. உணவைக் குறை; நாக்கைக்கட்டுப்படுத்து.
 2. சவாரியைக் குறை; அதிகமாக நட. 
3. கவலையைக் குறை; சிரித்துப் பழகு. 
4. சோம்பலைக் குறை; நன்றாக வேலை செய்.
 5. பேச்சைக் குறை; அதிகமாய் சிந்தி. 
6. செலவைக் குறை; அதிகமாய் தானம் செய்.
 7. திட்டுவதைக் குறை; அதிகமாய் அன்பு காட்டு. 
8. உபதேசத்தைக் குறை; செயலை அதிகரி.
 9. கெட்ட பழக்கத்தை விடு; நல்லதை கடைபிடி 
 10 அறிவுரை: 
1. எவர் மீதும் கோபம் கொள்ளாதே 
2. எந்தக் கவலைக்கும் இடமளிக்காதே
 3. சுக போகங்களில் மூழ்கி விடாதே 
4. பிறரிடம் பொறாமை கொள்ளாதே
 5. சோம்பலை நுழைய விடாதே 
6. சுறுசுறுப்போடு உழைத்துக் கொண்டிரு 
7. பிறர் பொருளைப் பறிக்க நினைக்காதே 
8. எவரையும் ஏளனமாகப் பேசாதே 
9. பேராசை, பெருவிருப்பம் கொள்ளாதே. 
10. யாரையும் வெறுத்து ஒதுக்காதே.

இதே நாள்...


  • உலக தண்ணீர் தினம்
  •  இன்டெல் நிறுவனம் முதல் பென்டியம் சிப்-ஐ அறிமுகம் செய்தது(1993)
  •  அரபு கூட்டமைப்பு கெய்ரோவில் அமைக்கப்பட்டது(1945)
  •  லூமியேர சகோதரர்கள் அசையும் திரைப்படத்தை முதன் முதலாக காண்பித்தனர்(1895)
  •  ஆர்தர் ஷாவ்லொவ் மற்றும் சார்லஸ் டவுன்ஸ் ஆகியோர் லேசருக்கான முதலாவது காப்புரிமத்தை பெற்றனர்(1960)

விடிய விடிய நிர்வாண காட்சி காதல் சரண்யா...




கதைப்படி, காதல்' சரண்யா ஓவிய கல்லூரியில் நிர்வாண போஸ்' கொடுப்பது போலவும், அதை கதாநாயகன் ஓவியமாக வரைவது போலவும் ஒரு காட்சி இடம் பெறுகிறது. 
இந்த காட்சி, தத்ரூபமாக அமைய வேண்டும் என்று டைரக்டர் தீபன் விரும்பினார். அதை,  காதல்' சரண்யாவிடம் எடுத்து சொன்னார். அதற்கு, சரண்யாவும் சம்மதித்தார். அதன்படி, அவர் நடித்த நிர்வாண காட்சி, மிக தத்ரூபமாக படமாக்கப்பட்டது. 
நிர்வாண காட்சியில் நடித்தது பற்றி, காதல்' சரண்யா சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:  
படத்தின் கதைக்கு அந்த நிர்வாண காட்சி அத்தியாவசியமானது என்று டைரக்டர் தீபன் என்னிடம் கூறினார். இதற்காக, ரூ.36 ஆயிரம் செலவில்,  ஸ்கின் டிரெஸ்' (தோல் போன்ற உடை) தயார் செய்யப்பட்டது. அதை அணிந்து கொண்டு துணிச்சலாக நடித்தேன்.








படத்தில், 180 வினாடிகள் (3 நிமிடங்கள்) வருகிற இந்த காட்சிக்காக, ஒரு நாள் இரவு முழுவதும் நடித்தேன். இரவு 7 மணிக்கு தொடங்கிய படப்பிடிப்பு, விடிய விடிய நடந்தது. அதிகாலை 5 மணிக்கு படப்பிடிப்பு முடிந்தது. 
ஸ்கின் டிரெஸ்' அணிந்திருந்ததால், எனக்கு எந்த பயமோ, நடுக்கமோ ஏற்படவில்லை. அந்த காட்சியை ரகசியமாக படம் பிடிக்கவில்லை. டைரக்டர், ஒளிப்பதிவாளர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அத்தனை பேரும் உடன் இருந்தார்கள்.



அமெரிக்க தீர்மானம் வாக்களித்த நாடுகளின் முழுப்பட்டியல்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமை குழுவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முன்வைத்த தீர்மானத்துக்கு 24 நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளது. 15 நாடுகள் எதிராகவும், 8 நாடுகள் வாக்களிப்பை புறக்கணித்தும் இருந்தன. 
 
தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள்:  
01.இந்தியா
02.பெல்ஜியம்
03.பெனின்
04.கேமரூன்
05.சிலி
06.கோஸ்டாரிக்கா
07.செக் குடியரசு
08.கௌதமாலா
09.ஹங்கேரி
10.ஆஸ்திரேலியா
11.இத்தாலி
12.லிபியா
13.மொரிசியஸ்
14.மெக்சிகோ
15.நைஜீரியா
16.நார்வே
17.பெரு
18.போலந்து
19.மால்டோவா குடியரசு
20.ரோமானியா
21.ஸ்பெயின்
22.சுவிட்சர்லாந்து
23. அமெரிக்கா
24.உருகுவே

தமிழனுக்கு எதிராக இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள்:  
01.வங்கதேசம்
02.சீனா
03.காங்கோ
04.கியூபா
05.ஈக்வேடர்
06.இந்தோனேசியா
07.குவைத்
08.மாலத்தீவு
09.மௌரிடானியா
10.பிலிப்பைன்ஸ்
11.கத்தார்
12.ரஷ்யா
13.சவுதி அரேபியா
14.தாய்லாந்து
15.உகாண்டா
 
முடிவு எடுக்க தெரியாத முண்டங்கள் (வாக்களிக்காத நாடுகள்) 
01.அங்கோலா
02.போஸ்ட்வானா
03.பர்கினா பசோ
04.ஜிபூடி
05.ஜோர்டான்
06.கிர்கிஸ்தான்
07.மலேசியா
08.செனகல்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...