ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
07 March, 2013
எங்கே செல்லும் இந்த போதை?
விலையில்லா அரிசி, "டிவி', மிக்சி, கிரைண்டர், மின்விசிறி,
மடிக்கணினி... வேலை உறுதித் திட்டத்திலே வேலை செய்யாமலே சம்பளம்.
இத்தனையும் இலவசமாய்க் கிடைக்கும்போது, எதற்காக வேலைக்குப் போக வேண்டும்?
கிடைப்பதை வைத்துக் குடிப்பது, குற்றம் செய்த காசிலாவது குடிப்பது, எதுவுமே
இல்லாவிட்டால் எவரிடமாவது பிச்சை எடுத்தாவது குடிப்பது... எத்தனையோ
ஏழைத்தமிழர்களின் பொழுதுகள் இப்படித்தான் கழிகின்றன. கல்யாண கொண்டாட்டமா...
குடி; கருமாதி துக்கமா...குடி; கொள்ளையடிக்கும் முன், கொலை செய்யும் முன்,
அதிகாலையிலும், அர்த்த ராத்தியிலும்...குடி குடி குடி.
வார்டுக்கு
ஒரு நூலகமில்லை; ஊருக்கு ஒரு மருத்துவமனையில்லை; பேருக்கு ஒரு
தொழிற்சாலையுமில்லை; ஆனால், கடைக்கண் நோக்கினாலே மதுக்கடைதான் தெரிகிறது
எங்கேயும். இதில் பெரிய வேதனை என்னவென்றால், வாழ்வைத் துவங்க வேண்டிய
வாலிபப் பருவத்திலேயே, இளைஞர்கள் பலரும் இப்படி போதையின் வாசலில் வீழ்ந்து
கிடப்பதுதான். மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன; குடும்ப உறவுகள் குலைந்து
போகின்றன; "அம்மா'வின் கருணைப் பார்வையின்றி, அப்பாக்கள் இல்லாத
குழந்தைகள் அதிகமாகிக் கொண்டே போகிறார்கள்; குடியால் விளையும் குற்றம்
கூடிக்கொண்டே போகிறது; உழைப்பதற்குத் தேவையில்லாத, திராணியில்லாத தமிழர்
தலைமுறையை உருவாக்கிக் கொண்டிருக்கிறது டாஸ்மாக். மதுக்கடைகளை மூடச்சொல்லி,
உண்ணாவிரதம் இருக்கிறார்கள்; ஊர் ஊருக்கு ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்;
உச்சி வெயிலில் நடைப்பயணம் போகிறார்கள்; எதற்குமே அசைந்து கொடுப்பதாக இல்லை
அரசு.
மற்ற மாவட்டங்களை விடுங்கள்... உழைப்புக்கும், வளர்ச்
சிக்கும் பெயர் பெற்ற கோவை மாவட்டத்தில், கடந்த நிதியாண்டில் மட்டும் 1,559
கோடியே 97 லட்சத்து 12 ஆயிரத்து 980 ரூபாய்க்கு "சரக்கு' விற்றுள்ளது.
மாதத்துக்கு, மூன்றரை லட்சம் மது பாட்டில்களும், ஒன்றரை லட்சம் பீர்
பாட்டில்களும் விற்கின்றன; இதன் மதிப்பு, சராசரியாக 140 கோடி ரூபாய். முன்
வாசலில் பெட்டியில் கொடுப்பதை, பின் வாசலில் வட்டியும் முதலுமாய் வாங்கி
விடும் வித்தையாகத்தான் இது தெரிகிறது. இதுவும் போதாது என்று 25 ஆயிரம்
கோடி ரூபாய் என்று இந்த நிதியாண்டுக்கு இலக்கு வைக்கப்பட்டிருக்கிறதாம்.
எங்கே செல்லும் இந்த (போ)பாதை...?
வண்டலூரில் கோயம்பேடு!
தென் மாவட்ட மக்களின் நலனுக்காக தென் சென்னைப் பகுதியிலேயே
பிரமாண்டமான ஒரு பஸ் நிலையத்தை உருவாக்க தீர்மானித்துள்ளது சென்னைப்
பெருநகர வளர்ச்சிக் குழுமமான சிஎம்டிஏ. வண்டலூரில் இந்தப் பிரமாண்ட
பேருந்து நிலையம் உருவாகவுள்ளது.
சென்னை மாநகரின் ஒரே ஒரு புறநகர்ப் பேருந்து நிலையம் தற்போது கோயம்பேட்டில்
இயங்கி வருகிறது. இங்கிருந்துதான் அனைத்து வெளியூர்ப் பேருந்துகளும்
இயங்கி வருகின்றன.
ஆனால் மாநகரின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் கோயம்பேடு வருவதற்கு மக்கள்
பெரும் சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது. மேலும் கோயம்பேடு பேருந்து
நிலையத்திலும் கூட்டநெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து
புதிய புறநகர்ப் பேருந்து நிலையம் குறித்து சிஎம்டிஏ சிந்திக்க
ஆரம்பித்துள்ளது.
தற்போது கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து தென் மாவட்டங்கள் உள்பட
பல்வேறு ஊர்களுக்கும் தினசரி 2000க்கும் மேற்பட்ட பஸ்கள் புறப்பட்டுச்
செல்கின்றன, வருகின்றன.கோயம்பேடு பஸ் நிலையத்திலிருந்து தாம்பரத்தைத் தாண்டிச் செல்வதற்குள்
இந்த பஸ்களுக்கு போதும் போதுமென்றாகி விடுகிறது. மாலை நேரங்களில் நகரைக்
கடந்து செல்லவே 2 மணிநேரம் ஆகிறதாம்.இந்த நெரிசல், பயண நேர விரயம், மக்கள் படும் பாடு ஆகியவற்றைக்
கருத்தில் கொண்டு, வேளச்சேரி, மாதவரம் ஆகிய இடங்களில் புதிய புறநகர் பஸ்
நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டது.வேளச்சேரியில் 12 ஏக்கர் நிலத்தில் பேருந்து நிலையம் அமைக்க ரூ.48
கோடியும், மாதவரத்தில் 8 ஏக்கர் நிலப்பரப்பில் பஸ் நிலையம் அமைக்க ரூ.32
கோடியும் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் மோனோ ரயில் திட்டப்பணியால் இந்த
இரண்டு பஸ் நிலையங்களும் அமைக்கப்படுவது தாமதமாகி வருகிறது.இதையடுத்து கோயம்பேடு பஸ் நிலையத்தைப் போலவே ஒரு பிரமாண்ட பஸ்
நிலையத்தை உருவாக்க தற்போது திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது வண்டலூர்
பகுதியில், இந்த பிரமாண்ட பஸ் நிலையத்தை உருவாக்கப் போகின்றனர்.
தாம்பரத்திற்கு அடுத்து உள்ள பகுதிதான் வண்டலூர். இங்குதான்
இந்தியாவின் மிகப் பழமையான விலங்கியல் பூங்கா உள்ளது. தென் மாவட்டங்களில்
இருந்து வரும் அனைத்து பஸ்களும் கோயம்பேடு செல்லாமல் அதனை இங்கே நிறுத்தி
பயணிகளை ஏற்றிச் செல்ல வசதியாக வண்டலூரில் ஒரு புதிய பஸ் நிலையம் 65
ஏக்கரில் அமைய உள்ளது.ஜி.எஸ்.டி. சாலையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் வெளிவட்ட
சாலையும், வண்டலூர்- வாலாஜாபாத் சாலை சந்திக்கும் இடத்தில் இருந்து 250
மீட்டர் தொலைவிலும் அதற்கான நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.பஸ் நிலையம், பணிமனை, வாகன நிறுத்துமிடம் என பல்வேறு வசதிகள் கொண்டதாக
வரைவு திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. நிலங்களை கையகப்படுத்துவதற்கான
திட்டம் அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு உள்ளதாக சி.எம்.டி.ஏ. வட்டாரம்
தெரிவித்துள்ளது.ஏற்கனவே தாம்பரத்தை ஒரு ரயில்வே முனையமாக மாற்ற ரயில்வே துறை
திட்டமிட்டு வருகிறது. தென் மாவட்ட ரயில்கள் அனைத்தையும்
தாம்பரத்திலிருந்து இயக்க ரயி்ல்வே திட்டமிட்டு வருகிறது. இந்த நிலையில்
தற்போது தென் மாவட்ட பஸ்களை வண்டலூரிலிருந்து இயக்க
தீர்மானிக்கப்பட்டிருப்பதால் இது தென் மாவட்ட மக்களுக்குப் பேருதவியாக
இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
WORLD GOLD COUNCIL.
WORLD
GOLD COUNCIL தகவல் படி (படத்தை பார்க்க ) 2003 இல் சராசரியாக 100000
கிலோவாக இருந்த இந்தியாவின் தங்கத்தின் தேவை இப்போது 2012 சுமார் 300
சதவிதம் அதிகரித்து 300000 கிலோவாக ஆகி விட்டது .
தாத்தா கல்யாணம் 1942 போது @ 4 Rs /Gram !
அப்பா கல்யாணம் 1968 போது @ 16 Rs /Gram !
(அதாவது 26 வருடத்தில் சுமார் 4 times உயர்வு )
எனது கல்யாணம் 2000 போது @ 440 Rs /Gram ,
(அதாவது 32 வருடத்தில் சுமார் 27 times உயர்வு )
நிர்வாகத்தில் "Cash flow Projections" என்று அனுமானிப்போம் . இதை வைத்து
பார்க்கும் போது இன்னும் முப்பது வருடத்தில் தங்கம் @ 2030 விலை Rs 11880/
gram ~ RS 83160 /gram இருக்க கூடும் .
அதாவது ஒரு பவுன் சுமார் ஒரு லட்சம் முதல் பத்து லட்சம் வரை .
இந்த தங்கத்தை பற்றிய சில கேள்விகள் உங்களுக்கு :
#சேமிக்கும் குணத்தை தங்கம் என்பார்கள் ., இந்த தங்கத்தின் குணத்தை என்ன வென்று சொல்லுவது ?
# தங்க நகைகள், ஆபரணங்கள், கற்கள் பதித்த கிரீடங்கள், தங்க பாத்திரங்கள்,
தங்க தாம்பாளங்கள்,என 10 ஆயிரம் கோடியை ரூபாயை தாண்டி திருவனந்தபுரம்
பத்மநாப சுவாமி கோவிலில், கண்டு எடுத்த தங்கங்கள் நிலை இப்போது என்ன?
# மலையாளிகளே தங்கத்தை விற்பதிலும் , அடமானம் வியாபாரம் செய்வதிலும் கொடி
கட்டி கோடியிலும் புரளும் போது நம்மவர்கள் டாஸ்மாக்கில் புரளுவதை என்னும்
எத்தனை காலம் சுகித்து சகித்து இருப்போம் ?
# தமிழக அரசும் சாராயம் விடுத்து இந்திய முழுவதும் தங்கம் விற்கலாமே ? விற்பதும் . வைப்பதும் நல்ல லாபமான தொழில் தானே ?
Subscribe to:
Posts (Atom)