|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

20 March, 2013

தினசரி 4 பெண்கள் கற்பழிப்பு!

 
மராட்டிய மாநிலத்தில் 2012ம் ஆண்டு மட்டும் தினசரி 4 பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகியுள்ளனர் என்று அம்மாநில சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் பெண்களும், இளம் சிறுமியர்களும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவது அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. சிவசேனா கட்சியைச் சேர்ந்த அனில் காதம் இது தொடர்பாக கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். படீல், கடந்த 2012ம் ஆண்டில் மட்டும் 1,704 பாலியல் வன் கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளதாக கூறினார். இதில் 924 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் இளம் சிறுமியர்கள் என்றும் கூறினார். பாலியல் வன் கொடுமைக்கு ஆளானவர்களில் 127 பேர் 12 வயதிற்கும் குறைவானவர்கள். 188 பேர் 12 முதல் 14 வயதிற்கு உட்பட்டவர்கள் என்றார் அவர். எத்தனை கேஸ் பெண்டிங் மகாராஷ்டிரா முழுவதும் 14, 414 பாலியல் வன்கொடுமை வழக்குகள் நிலுவையில் உள்ளன. 31,412 பாலியல் தொந்தரவு வழக்குகளும், 9,480 ஈவ்டீசிங் வழக்குகளும் நிலுவையில் இருப்பதாக உள்துறை அமைச்சர் படீல் தெரிவித்துள்ளார். 
 
 புகார் தருவதில்லை புகார் கொடுக்கப்பட்டவை மட்டுமே தற்போது வெளியில் தெரியவருகிறது. ஏராளமான பெண்கள் பின் விளைவுகளுக்கு அஞ்சி புகார் கொடுப்பதில்லையாம். வழக்குகளை சீக்கிரம் முடிக்கனும் 13 சிறப்பு நீதிமன்றங்கள் மூலம் 2005 முதல் 2011 முடிய 10,837 பாலியல் வன்கொடுமை வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தீர்வு காண வரும் 5 ஆண்டுகளில் 100 விரைவு நீதிமன்றங்களை தொடங்க உள்ளதாகவும் மகாராஷ்டிரா மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். படீல் தெரிவித்துள்ளார்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...