|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

13 February, 2014

"தமிழனை ஏமாளியாக்கும் புதுத் திட்டம்!



இது நீங்கள் கட்டாயமாக படிக்கவேண்டிய செய்தி… படித்துவிட்டு அனைத்து தமிழ் வாழ் நேசங்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்(Please SHARE or TAG Tamil friends). விழிப்புணர்வை தூண்டுங்கள்… நமக்கு உணவளிக்க நாள் முழுவதும் பாடுபடும் விவசாய மக்களுக்கு ஆதரவு தாருங்கள்…


புதுதிட்டம்:
நதிநீர், மின்சாரம், மீனவர் பாதுகாப்பு, அரசியல் பிரதிநிதித்துவம் என்று எல்லாவற்றிலும் இரண்டாம்தர குடிமக்களாய் நடத்தப்படும் தமிழகத்தின் ஏமாளிதனத்தின் இன்னொரு அடையாளம் கெயில் (GAIL) காஸ் லைன் பதிப்பு திட்டம்.கேரளா-கொச்சியில் இருந்து கர்நாடக-பெங்கலூருவிற்கு தமிழ்நாடு வழியாக காஸ்லைன் செல்கிறது. இதனால் விவசாயிகள் பெரிய அளவில் பாதிப்படைகின்றனர். காஸ் விற்பதால் வரிப்பயன்&வேலை பெறுவது கேரளா, அதை வாங்கி பயன்படுத்துவது கர்நாடகா இருந்தும் நம் நிலங்களுக்குள் பைப்லைன் வர காரணம் அம்மாநில விவசாயி/அரசு எதிர்பா? இல்லை தமிழர் என்ற இளக்காரமா..??

ஏழு மாவட்ட(!) விவசாய நிலங்களுக்குள் இந்த பைப் செல்வதால் அந்த நிலத்தில் விவசாய கட்டுப்பாடு வரும். அதாவது தண்ணீர் பாய்ச்சகூடாது; மழை பெய்தால் அதைக்கொண்டு பயிர் செய்யலாம்; உழுதல் கூடாது; மரம்,வீடு,ரோடு கூடாது. அந்த பைப்லைனுக்கு பாதிப்பென்றால் அந்த விவசாயிதான் பொறுப்பு! எப்படி நியாயம்?? இதற்கு அவர்கள் தரும் இழப்பீடு ஏக்கருக்கு ஆயிரம் ரூபாய்!

ஒரு வயதான விவசாயி, நில உரிமையாளர், நிலத்தில் அத்துமீறி நுழைந்து குழி பறிப்பதும் நிலம் அளப்பதும் கண்டு கேள்வி கேட்டவரை “திஹார் ஜெயிலுக்கு போறியா?? XXX, ஓடீறு..!!”. கூலிக்கு இருக்கும் ஒரு கடைநிலை ஊழியனுக்கே இவ்வளவு துணிச்சல் எனில் அந்த நிர்வாகத்துக்கு தமிழ்விவசாயி என்றால் எவ்வளவு அலட்சியம் கற்பிக்கபட்டிருக்கும்?
தமிழகம் வழியாக வரகூடாது என்ற கழுதை கோரிக்கை தேய்ந்து, ரயில் தட ஓரத்திலும், நெடுஞ்சாலை ஓரங்களிலும் கொண்டு செல்லுங்கள். விவாசயத்தை அழிக்காதீர்கள், விவசாயிகளுக்கான கட்டுபாடுகளை தளர்த்துங்கள் என்ற கட்டெறும்பு கோரிக்கை வைத்தாலும் ஏற்க மறுக்கிறார்கள். இவர்கள் சொல்லும் காரணம் தமிழகம் வழியாக வந்தால் 310கிமீ; கேரளா, மைசூரு வழியாக வந்தால் 470கிமீ. ஆனால் வரைபடத்தை பார்த்தால் எது குறைந்த தூரம் என்பது விளங்கும். அந்த பாதையைவிட தமிழக பாதையில் மலைகளும் வனப்பகுதியும் அதிகம்.

விவசாய நிலத்துக்குள்தான் ரோடு, ரயில், ரியல்எஸ்டேட், காஸ்லைன், தொழிற்சாலை அனைத்தும் வருமா? இதற்கான போராட்டம் வலுத்து வரும் நிலையில் அனைத்து தரப்பு மக்களும் ஆதரவளிக்க வேண்டும். எல்லா மாவட்ட விவசாயிகளும் வேறுபாடுகள் மறந்து ஓரணியில் நிற்க வேண்டும். இணைய தமிழர்களும் தங்கள் ஆதரவை காட்ட வேண்டும்.

காலம் மாறிவிட்டதாம்!


"இளநீர்க்காரணீடம் பேரம் பேசி... இருபது ரூபாய்க்கு கோக் வாங்கிக் குடித்தான்"

"பதநீரைக் கண்டு பதறிப்போய் ஒதுங்கி... பெப்சி வாங்கிக் குடித்தான்"

"நுங்கு திங்க நொந்துபோய்... ஸ்லைஸ் குடித்தான்"

காலம் மாறிவிட்டதாம்! அதனால் உணவை மாற்றிக்கொண்டானாம்!!

"இயற்கைக்கு முரணாக கண்டதைக் குடித்ததில், தின்றதில்ஆஸ்பத்திரியில் அட்மிட்   சில லட்ச 
செலவில் உடல் தேறி ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்தான்..."

அதே இளநீர்க்காரனும்.. பதநீர்க்காரனும்.. நுங்குக்காரனும் வாசலில், வீதியில் ஆரோக்கியமாய் வியாபாரத்தில்..!

உண்மைச் சம்பவம்!


 இரண்டு நாய்க் குட்டிகள் விளையாடிக் கொண்டு இருக்கும் போது தவறுதலாக ஒரு கிணற்றில்
விழுந்துவிட்டன. அதைப் பார்த்த தாய் நாய் தன்னுடைய முதலாளியை வர வைப்பதற்காக கிணற்றின் அருகில் நின்று குரைத்துக் கொண்டே இருந்தது. சத்தம் கேட்டு கிணற்றை எட்டிப்
பார்த்த முதலாளிக்கு ஒரே அதிர்ச்சி. தான் ஆசையாக வளர்த்த நாய் குட்டிகள் கிணற்றில் விழுந்து கிடக்கின்றன அதன் அருகில் பெரிய ராஜநாகம் படம் எடுத்து ஆடிக்கொண்டு இருந்தது.

கிணற்றில் ஒரு பகுதி கரையும் மறு பகுதி தண்ணீரும் இருந்தது.ராஜநாகம் நாய் குட்டிகளை ஒன்றும் செய்யவில்லை, நாய் குட்டிகள் தண்ணீரில் இறங்காதவாறு காவல் காத்து கொண்டு இருந்தது. ராஜநாகம் மற்றும் நாய் குட்டிகள் 48 மணி நேரம் கிணற்றில் ஒன்றாக இருந்தன.இந்த 48 மணி நேரமும் நாய் குட்டிகள் தண்ணீரில் விழாதவாறு ராஜநாகம் அமைதியாக காவல்
காத்து கொண்டு இருந்தது. பிறகு வனத்துறையினர் கிணற்றுக்குள் இறங்கிய போது ராஜநாகம்
மறு கரைக்கு சென்றது.நாய் குட்டிகளை காப்பாற்றிய வனத்துறையினர் அந்த ராஜநாகத்தையும் காப்பாற்றி காட்டில் விட்டனர்.

”அதிகம் விஷம் உடைய ஒரு ராஜநாகம் இரண்டு சிறிய உயிரனத்துக்கு தீங்கு விளைவிக்காமல் பாதுகாப்பு கொடுக்கும் இந்த பூமியில் தான், சின்னஞ்சிறு குழந்தைகளையும்
சிறுமிகளையும் பாலியல் பலாத்காரம் செய்யும் மனித மிருகங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறது” இதுபோன்ற உயிர்களிடத்தில் இருந்தாவது நல்ல பண்புகளை கற்று கொள்ளுங்கள் மனித மிருகங்களே...!

பாலுமகேந்திரா நம்மோடு வாழும் பாலுமகேந்திரா!


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...