|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

03 December, 2011

பெரியாறு அணையை உடைத்தால் இந்தியா துண்டு துண்டாகும்!

முல்லைப் பெரியாறு அணையை உடைத்தால் இந்தியாவே துண்டு துண்டாகிவிடும் ஆபத்து உள்ளது. இதை மத்திய அரசும், கேரளாவும் புரிந்து கொள்ள வேண்டும், என்றார் வைகோ. நாளந்தா பதிப்பகத்தின் 'தந்தையும், தம்பியும்' புத்தக வெளியிட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசுகையில், "முல்லை பெரியாறு அணை பிரச்சினையில் மத்திய அரசு சரியாக நடந்து கொள்ள வேண்டும். உறுதியாக உள்ள முல்லை பெரியாறு அணையை உடைக்க சதி நடக்கிறது.

ஆனால் மத்திய அரசோ மெத்தனம் காட்டுகிறது. கேரளாவுக்கு சாதகமாக நடக்கிறது. இந்த அணை உடைக்கப்பட்டால், இந்தியா துண்டு துண்டாகும் என்பதை மட்டும் இந்த நேரத்தில் நான் தெரிவித்துக்கொள்கிறேன். மத்திய அரசும், கேரள அரசும் இதனைப் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்," என்றார். முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி பேசும்போது, "மானமும், மரியாதையும் உள்ள இடத்தில் இருப்பது தான் சிறப்பு. அப்படிப்பட்ட இடத்தில்தான் நான் இருப்பேன்," என்றார்.

எலைட் ஒயின் ஷாப்' - டிசம்பர் 3-ம் வாரம் ஆரம்பம்!

வெளிநாட்டு மதுபானங்களை விற்பதற்காக 'எலைட்' ஒயின் ஷாப்கள் என்ற பெயரில் புதிய கடைகள் தயாராகி வருகின்றன. டிசம்பர் 3-வது வாரத்தில் இந்தக் கடைகள் தொடங்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் 6,596 டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்படுகின்றன. இவற்றின் மூலம் ரூ 17000 கோடி வரை வருமானம் வருகிறது. இதனை ரூ 20000 கோடியாக்க தமிழக அரசு சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் புதிதாக 20 கடைகளைத் திறக்கிறது. இவைகள் ஒருபுறமிருக்க, வெளிநாட்டு மதுவகைகளை விற்பதற்காக, டாஸ்மாக் எலைட் ஷாப் என்ற பெயரில் புதிய மதுபான கடைகள் திறக்கப்படவுள்ளன.

இவற்றில், விலை உயர்ந்த விஸ்கி, ஒயின், பீர் வகைகள் விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எலைட் ஒயின் ஷாப் எங்கு, எப்போது தொடங்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் முதல் கட்டமாக 8 எலைட் ஷாப் திறக்கப்படுகின்றன. சென்னையில் கோடம்பாக்கம், வேளச்சேரி, பாடி (பிரிட்டானியா அருகே) ஆகிய 3 இடங்களில் முதல்கட்டமாக எலைட் ஷாப்கள் திறக்கப்படுகின்றன.

60 வகை மதுபானங்கள் சென்னைக்கு வெளியே மற்ற நகரங்களில் படிப்படியாக தொடங்கப்படும். டாஸ்மாக் எலைட் ஷாப்களில், ஜேக் டேனியல் விஸ்கி, ஜே.என்.பி.ரேர் விஸ்கி உள்பட 60 வகை விலை உயர்ந்த மதுபானங்கள் விற்பனைக்கு வருகின்றன. இதுதவிர பிரபலமான கரோனா, ஸ்ட்ரோஸ் உள்ளிட்ட 60 வகை பீர்களும் விற்கப்படவுள்ளன. டாஸ்மாக்கில் கிடைக்காத டின் பீர்களும் இந்த எலைட் ஷாப்களில் கிடைக்கும். எலைட் ஷாப் மதுபான கடைகளில் விஸ்கி, பிராந்தி போன்றவற்றின் குறைந்தபட்ச விலை ஆயிரம் ரூபாயாகும். அதிகபட்ச விலை 3 ஆயிரத்து 500 ரூபாய். பீர் வகைகள் நூறு ரூபாயில் ஆரம்பித்து 185 ரூபாய் வரை விற்கப்படும்.  எலைட் ஷாப்களை அமைக்கும் பணி வேக வேகமாக நடந்து வருகிறது.

டிசம்பர் 10 முதல் அரசு மகப்பேறு நிதியுதவி

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 7 லட்சம் ஏழை கர்ப்பிணிகளுக்கு வரும் 10-ம் தேதி முதல் நிதியுதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.கர்ப்ப காலத்தின் 7-வது மாதம் ரூ.4,000, பிரசவமானவுடன் ரூ.4,000, குழந்தைக்கு ஆரம்ப கட்ட தடுப்பூசிகள் போடப்பட்டவுடன் 4-வது மாதத்தில் ரூ.4,000 என 3 தவணைகளாக மொத்தம் ரூ.12,000 வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய் தலைமையில் மாவட்ட பொது சுகாதாரத் துறை துணை இயக்குநர்கள் ஆய்வுக் கூட்டம் சென்னையில் கடந்த இரண்டு நாள்களாக (டிசம்பர் 2,3) நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில், நிதியுதவி ரூ.6 ஆயிரத்திலிருந்து ரூ.12 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ள டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டம், கள அளவிலான தடுப்பூசித் திட்டம், இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்கும் திட்டம் உள்ளிட்டவற்றைச் சிறப்பாகச் செயல்படுத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. 

கூட்டத்தின் முக்கிய முடிவுகளை பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் பொற்கை பாண்டியன், துணை இயக்குநர்களுக்கு எடுத்துக்கூறினார்.ரூ.313 கோடியில்...ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்கான டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு நிதியுதவித் திட்டத்துக்கு மொத்தம் ரூ.665 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது; இதில் முதல் கட்டமாக வரும் 10-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் கர்ப்பிணிப் பெண்களுக்கு நிதியுதவி வழங்க மொத்தம் ரூ.313 கோடி அளிக்கப்பட்டுள்ளது. 7-வது மாதத்தில் உள்ள கர்ப்பிணிகள், பிரசவித்த தாய்மார்கள், குழந்தைக்குத் தடுப்பூசி போட்டு முடித்துள்ளோர் என 3 பிரிவினரையும் தேர்வு செய்து முதல் கட்டமாக தலா ரூ.4,000 வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.கருவிகள் பழுதானால்... தமிழகத்தில் மொத்தமுள்ள 1,589 ஆரம்ப சுகாதார மையங்களில் எக்ஸ் ரே, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் கருவி, ரத்தப் பரிசோதனை கருவிகள் பழுதானால், அவற்றைச் சரி செய்ய உதவும் வகையில் ஆன்லைன் மூலம் கண்காணிக்கும் மென்பொருள் குறுந்தகட்டை இந்த ஆய்வுக் கூட்டத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய் வெளியிட்டார்.

போபால் விஷ வாயு கசிவுக்குக் காரணமான யூனியன் கார்பைட் நிறுவனத்தை வாங்கியிருக்கும் "டெள' கெமிக்கல் நிறுவனம், ஒலிம்பிக் போட்டியின் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பிலிருந்து வெளியேற வேண்டும்.

போபால் விஷ வாயு கசிவுக்குக் காரணமான யூனியன் கார்பைட் நிறுவனத்தை வாங்கியிருக்கும் "டெள' கெமிக்கல் நிறுவனம், 2012-ம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டியின் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பிலிருந்து வெளியேற வேண்டும். இல்லையெனில், ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்காமல் இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் வலியுறுத்தினர்.
 
சென்னையில் சனிக்கிழமை கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்த இருவரும் கூறியது:இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, இருவரும் பிரதமருக்குக் கடிதம் எழுதியிருக்கிறோம். இந்தியா சார்பில் ஒலிம்பிக் போட்டியில் முன்பு பங்கேற்ற 22 வீரர்களும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஒலிம்பிக் போட்டி நடைபெறும் மைதானத்தைச் சுற்றித் தனது நிறுவனச் சின்னத்தை விளம்பரப்படுத்த, சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்துக்கு 70 லட்சம் பவுண்டுகளைக் கொடுத்திருக்கிறது டெள நிறுவனம்.போபால் பேரழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை எவ்வித இழப்பீடும் தராத யூனியன் கார்பைட் நிறுவனத்தை விலைக்கு வாங்கியிருக்கும் டொவ்   போபாலில் இருக்கும் ஆலையின் கழிவுகளை அகற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள மறுக்கிறது. இதனால் இன்றும் 25 ஆயிரம் மக்கள் அருந்தும் குடிநீர் விஷமாகியிருக்கிறது. போபால் பேரழிவால் பாதிக்கப்பட்டவர்களும், இந்திய அரசும் தொடுத்துள்ள பல்வேறு சிவில், கிரிமினல் வழக்குகள் நடந்து வரும் இந்திய நீதிமன்றங்களையும் அது மதிப்பதில்லை.போபால் விஷ வாயுக் கசிவு நடந்து டிசம்பர் 3-ம் தேதியோடு 27 ஆண்டுகளாகிறது. ஆனால், இன்றும் போபால் மக்களுக்கு நீதி கிடைக்காமல் இருப்பது அவமானத்துக்குரிய விஷயம். இன்றும் அங்கு பல குழந்தைகள் ஊனத்துடனும், மூளை பாதிப்புடனும் பிறக்கின்றன. எனவே, டெü கெமிக்கல் நிறுவனத்தை ஒலிம்பிக்கிலிருந்து வெளியேற்ற மத்திய அரசு குரல்கொடுக்க வேண்டும். அவ்வாறு வெளியேறாவிட்டால், இந்திய வீரர்களை ஒலிம்பிக் போட்டிக்கு அரசு அனுப்பக்கூடாது என்றனர்.போபாலில் நீதிக்கான சர்வதேச தொடரியக்கத் தன்னார்வலர்கள் நித்தியானந்த், பாத்திமா பாபு ஆகியோர் பேட்டியின்போது உடனிருந்தனர்.

முல்லைப் பெரியாறு அணை பேச்சுவார்த்தையில் தமிழக அரசு பங்கேற்காது!

முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தில்லியில் திங்கள்கிழமை (டிசம்பர் 5) நடைபெறும் பேச்சுவார்த்தையில் தமிழக அரசு பங்கேற்காது என்று தமிழக தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி அறிவித்துள்ளார்.முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள குழுவின் முன்பு ஆஜராவதற்காக தமிழக அதிகாரிகள் தில்லி செல்கின்றனர். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இரு மாநில அதிகாரிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைக்கு மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் ஏற்பாடுகளைச் செய்து வந்தது.ஆனால், உச்ச நீதிமன்றத்தில் முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அதிகாரப்பூர்வமற்ற இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதில்லை என்று தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது.
 
முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ள பகுதியில் கடந்த 5 மாதங்களில் பலமுறை நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக அணை உடையும் அபாயம் இருப்பதாகவும் கேரள அரசு கூறி வருகிறது. இதையடுத்து, இரு மாநிலங்களுக்கிடையே பதற்றமான சூழல் ஏற்பட்டது.பிரதமருக்கு ஜெயலலிதா கோரிக்கை: முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக கேரள அரசு அந்த மாநில மக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தி வருவதாகவும், தமிழக - கேரள எல்லையில் பொது அமைதியைப் பாதிக்கும் வகையில் அந்த மாநிலத்தவர் நடந்துகொள்வதைத் தடுக்க வேண்டும் என்றும் கோரி பிரதமர் மன்மோகன்சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதினார்.அவருக்கு பதில் எழுதிய மன்மோகன் சிங், இந்த விவகாரத்தில் மக்களிடையே தேவையற்ற பீதியை உருவாக்கும் வகையில் எதுவும் செய்யக்கூடாது என்று கருத்து தெரிவித்திருந்தார்.
 
பேச்சுவார்த்தை மூலம் இரு தரப்பும் சுமுகத் தீர்வை எட்ட முடியும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.இதற்காக, இரு மாநில அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசுவதற்கு ஏற்பாடு செய்யுமாறு நீர்வளத் துறை அமைச்சகத்தை அறிவுறுத்தியிருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இதையடுத்து பேச்சுவார்த்தைக்கான நடவடிக்கைகளை நீர்வளத் துறை அமைச்சகம் தொடங்கியது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் அதிகாரமளிக்கப்பட்ட குழு விசாரணை நடத்தி வரும்போது, அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தையில் பங்கேற்க வேண்டாம் என்று தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது.நேரில் வலியுறுத்தல்: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு பதற்றத்தைத் தணிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கை கேரள முதல்வர் உம்மன் சாண்டி நேரில் சந்தித்து கேட்டுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து பிரதமரைச் சந்தித்த அ.தி.மு.க. எம்.பி.க்கள், கேரள மக்களிடையே பீதியை ஏற்படுத்தும் அந்த மாநில அரசின் நடவடிக்கைகள் அரசியல் சாசனத்துக்கும், இரு மாநில நலன்களுக்கும் எதிரானது எனக் கூறி மனு அளித்தனர்.கேரள முதல்வருக்கு பதில்: முல்லைப் பெரியாறு நீர்மட்டத்தை 120 அடியாகக் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கேரள முதல்வர் உம்மன் சாண்டி கடிதம் எழுதியிருந்தார்.அதற்கு பதில் எழுதிய ஜெயலலிதா, அணை பலமாக உள்ளது என்றும்; உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி அணையில் 142 அடி நீர் தேக்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் கேரள மாநில அரசு மக்களிடையே பீதியைப் பரப்பி வருகிறது. பொய்ப் பிரசாரம் செய்யாமல் அமைதி காக்கும்படி அந்த மாநில அரசைக் கட்டுப்படுத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு ஒரு மனுவையும் தாக்கல் செய்தது

இலங்கை நாடாளுமன்றத்தில் சென்னை நீதிமன்ற வாரண்ட்!

விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை கொள்முதல் செய்து வழங்கியவர் என்று கூறப்படும் குமரன் பத்மநாதன் என்ற கே.பி.க்கு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த வாரண்ட் இலங்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கூட்டணியைச் சேர்ந்த ஜெயலந்த் ஜெயவர்த்தனே இந்த வாரண்ட் நகலை தாக்கல் செய்தார். கே.பி. இப்போது இலங்கை அரசால் சிறை வைக்கப்பட்டுள்ளார்.சமீபத்தில் சென்னை வந்தபோது, கே.பி. தொடர்பாக சென்னை நீதிமன்றம் இண்டர்போலுக்கு அளித்த வாரண்டின் நகலை தமிழக டிஜிபி என்னிடம் அளித்தார். அதனை நான் இப்போது இலங்கை நாடாளுமன்றத்தில் அளித்தேன் என்று ஜெயவர்த்தனே கூறியுள்ளார்.

வான் தாக்குதல் சம்பவத்துக்காக பாகிஸ்தானிடம் மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை அமெரிக்கா !

நேட்டோ படைகள் நடத்திய வான் தாக்குதல் சம்பவத்துக்காக பாகிஸ்தானிடம் மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை என்று அமெரிக்கா திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. பாகிஸ்தானின் இறையாண்மையை மதிப்பதாகவும், தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்றுவரும் நிலையில் மன்னிப்பு கேட்பது என்பதற்கே இடமில்லை என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மார்க் டோனர் கூறினார்.பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் நேட்டோ படையினர் நடத்திய தாக்குதலில் 24 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இது பாகிஸ்தான் ஆட்சியாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க விமான தளத்தை உடனடியாக காலி செய்யுமாறு பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் உறுதிபட தெரிவித்துவிட்டனர். இச்சம்பவம் இரு நாடுகளிடையே பெரும் உரசலை ஏற்படுத்திவிட்டது.இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள டோனர், என்ன நடந்தது என்ற உண்மையை அறிந்து கொள்ள வேண்டும். பாகிஸ்தானுடன் வலுவான உறவை வைத்துக் கொள்ளவே அமெரிக்க விரும்புகிறது. இந்தச் சம்பவத்துக்காக ஆழ்ந்த இரங்கல், வருத்தத்தை அமெரிக்க அரசு தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.இந்தச் சம்பவம் நடந்த உடனேயே அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரைத் தொடர்பு கொண்டு பேசியதையும் டோனர் சுட்டிக் காட்டினார். இதிலிருந்தே இந்தச் சம்பவத்தை அமெரிக்கா எந்த அளவுக்கு கடுமையானதாகக் கருதுகிறது என்பதை உணரமுடியும். உண்மையில் என்ன நடந்தது என்பதைத் தெரிந்து கொள்வதோடு எதற்காக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அப்போதுதான் இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் எப்போதும் ஏற்படாதவகையில் தடுக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.நேட்டோ தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து ஆப்கானிஸ்தான் குறித்து ஜெர்மனியின் பான் நகரில் நடைபெறும் கூட்டத்தைப் புறக்கணிக்கப் போவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலர் பான் கி மூன் பங்கேற்கும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு பாகிஸ்தானை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இந்தக் கூட்டத்தில் 85 நாடுகள் பங்கேற்கின்றன. 15 சர்வதேச அமைப்புகள் இதில் பங்கேற்க உள்ளன. இந்த மாநாட்டில் பாகிஸ்தான் பங்கேற்கவில்லையெனில் அது மன்னிக்க முடியாத குற்றமாகும். இந்தப் பிராந்தியத்தில் உள்ள ஆப்கன் குறித்த கூட்டத்தில் பாகிஸ்தான் பங்கேற்க வேண்டியது மிகவும் அவசியம் என்றார்.பாகிஸ்தான் அதிகாரிகளிடமும், ஆட்சியாளர்களிடமும் தொடர்ந்து பேசி வருகிறோம். பாகிஸ்தானின் இறையாண்மையை அமெரிக்கா மதிக்கிறது என்றும், இரு நாடுகளிடையிலான உறவை மதித்து நடந்து கொள்ளத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளதாகவும் டோனர்கூறினார்.பயங்கரவாதிகளை எதிர்கொள்வதில் இரு நாடுகளும் இணைந்து பல்வேறு தருணங்களில் தகவல்களைப் பகிர்ந்து கொண்டு சூழ்நிலையை திறமையாக சமாளித்துள்ளோம். இப்போது நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை முடிந்தபிறகே என்ன நடந்தது என்பது தெரிய வரும் என்றார் டோனர்.

என்னுடைய போராட்டம் ஊழலுக்கு எதிரானதே தவிர, காங்கிரஸ் கட்சிக்கோ, பிரதமருக்கோ, எதிரானது அல்ல!


காந்தியவாதி அன்னா ஹசாரே,    ‘’ஊழலுக்கு எதிராக, கடுமையான விதிமுறைகளுடன் கூடிய லோக்பால் மசோதாவை, பார்லிமென்ட் நடப்பு கூட்டத் தொடரில் நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில், வரும் 27ம் தேதி, டில்லி ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருப்பேன். இதற்காக, டில்லி போலீசாரிடம் அனுமதிக் கேட்டுள்ளேன்.அனுமதி கிடைக்காவிட்டால், சிறையில் காலவரையற்ற உண்ணாவிரதம் இருப்பேன்.இதை யாரால் தடுக்க முடியும். என்னுடைய போராட்டம் ஊழலுக்கு எதிரானதே தவிர, காங்கிரஸ் கட்சிக்கோ, பிரதமருக்கோ, ராகுலுக்கோ எதிரானது அல்ல’’என்று கூறினார்

கள்ளக்காதலைக் கண்டித்த மகளைக் கொல்ல முயன்ற தாய். தந்தை!

நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் நகரிலுள்ள நாட்டாமை தெருவிலிருக்கும் மாரியப்பன், இவரது மனைவி சீதாலட்சுமி. இவர்களுக்கு தேவி,சித்ரா என வயதிற்குவந்த இரு மகள்கள் உள்ளனர்.          தேவி தனியார் கல்லூரியிலும்,சித்ரா வாசுதேவநல்லூர் பள்ளியிலும் படித்துவருகின்றனர்.         ஆளான பெண்பின்ளைகளிலிருந்தும் சீதாலட்சுமிக்கு ஆசை தணியவில்லை. மோகமே வாழ்க்கை என்றிருந்தவளுக்கு பக்கத்து தெரு எலெக்ட்ரிஷியன் மாரியப்பனோடு சரச சல்லாபத்தைத் தொடர்ந்திருக்கிறார். 



பல ஆண்டுகளாக நடக்கும் இவர்களின் கள்ள உறவுகளுக்கு கணவன் மாரியப்பன் வெண் சாமரம் வீசியுள்ளார். பெற்ற தாயோ கள்ளக்காதலுடன் அதற்கு தந்தையே உடந்தை என்பதையறிந்து துடித்துப்போன மகள்கள்,  இந்தவயதில் தேவைதானா? மானம் போகுதே  என பெற்றவளைக் கண்டித்தனர். இறுகிப்போன மோகவெறி விடுவதாக இல்லை.இதையறிந்த தாயின் கள்ளக்காதலன் மாரியப்பன் ஒருநாள், தேவியிடம் தகாத முறையில் நடக்க முயல, இதுகுறித்து தன் தாய் சீதாலட்சுமியிடம் தெரிவித்தார் தேவி.

ஆனால் கண்டிக்க வேண்டிய தாய் சீதாலட்சுமி கண்டிக்காமால், தன்கள்ளக்காதலனுக்கு ஆதரவாகப் பேச,அதனால் அதிருப்தியடைந்த தேவி விஷயத்தை தன்து உறவினர்களிடம்  தெரிவித்துக் கதறினார். இதனால் ஆத்திரமடைந்த சீதாலட்சுமி,கணவர் மற்றும் கள்ளக்காதலன் மாரியப்பன் மூவரும் சேர்ந்து தேவியைத்துப்பட்டாவால் கழுத்தை இறுக்கிக் கொல்ல முயன்றனர்.  அவர்களின் பிடியில் போராடித்தப்பிய தேவி வாசுதேவநல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சண்முகவேல்,விசாரணை நடத்திய தோடு தாய்சீதாலாட்சுமி,கள்ளக்காதலன்,கணவர் மூன்று பேரையும் கைது செய்தார்.

இந்தியா துண்டு துண்டாக உடையும்! உடைப்போம்!



LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...