டாக்டர்
முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின் கீழ் தமிழகம்
முழுவதும் 7 லட்சம் ஏழை கர்ப்பிணிகளுக்கு வரும் 10-ம் தேதி முதல் நிதியுதவி
வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.கர்ப்ப காலத்தின் 7-வது மாதம்
ரூ.4,000, பிரசவமானவுடன் ரூ.4,000, குழந்தைக்கு ஆரம்ப கட்ட தடுப்பூசிகள்
போடப்பட்டவுடன் 4-வது மாதத்தில் ரூ.4,000 என 3 தவணைகளாக மொத்தம் ரூ.12,000
வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.சுகாதாரத் துறை அமைச்சர்
டாக்டர் வி.எஸ்.விஜய் தலைமையில் மாவட்ட பொது சுகாதாரத் துறை துணை
இயக்குநர்கள் ஆய்வுக் கூட்டம் சென்னையில் கடந்த இரண்டு நாள்களாக (டிசம்பர்
2,3) நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில், நிதியுதவி ரூ.6
ஆயிரத்திலிருந்து ரூ.12 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ள டாக்டர் முத்துலட்சுமி
ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டம், கள அளவிலான தடுப்பூசித் திட்டம்,
இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்கும் திட்டம் உள்ளிட்டவற்றைச் சிறப்பாகச்
செயல்படுத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தின் முக்கிய
முடிவுகளை பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் பொற்கை பாண்டியன், துணை
இயக்குநர்களுக்கு எடுத்துக்கூறினார்.ரூ.313 கோடியில்...ஏழை
கர்ப்பிணிப் பெண்களுக்கான டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு நிதியுதவித்
திட்டத்துக்கு மொத்தம் ரூ.665 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது; இதில் முதல்
கட்டமாக வரும் 10-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் கர்ப்பிணிப் பெண்களுக்கு
நிதியுதவி வழங்க மொத்தம் ரூ.313 கோடி அளிக்கப்பட்டுள்ளது. 7-வது மாதத்தில்
உள்ள கர்ப்பிணிகள், பிரசவித்த தாய்மார்கள், குழந்தைக்குத் தடுப்பூசி
போட்டு முடித்துள்ளோர் என 3 பிரிவினரையும் தேர்வு செய்து முதல் கட்டமாக தலா
ரூ.4,000 வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.கருவிகள்
பழுதானால்... தமிழகத்தில் மொத்தமுள்ள 1,589 ஆரம்ப சுகாதார மையங்களில் எக்ஸ்
ரே, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் கருவி, ரத்தப் பரிசோதனை கருவிகள் பழுதானால்,
அவற்றைச் சரி செய்ய உதவும் வகையில் ஆன்லைன் மூலம் கண்காணிக்கும் மென்பொருள்
குறுந்தகட்டை இந்த ஆய்வுக் கூட்டத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர்
வி.எஸ்.விஜய் வெளியிட்டார்.
No comments:
Post a Comment