|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

03 December, 2011

போபால் விஷ வாயு கசிவுக்குக் காரணமான யூனியன் கார்பைட் நிறுவனத்தை வாங்கியிருக்கும் "டெள' கெமிக்கல் நிறுவனம், ஒலிம்பிக் போட்டியின் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பிலிருந்து வெளியேற வேண்டும்.

போபால் விஷ வாயு கசிவுக்குக் காரணமான யூனியன் கார்பைட் நிறுவனத்தை வாங்கியிருக்கும் "டெள' கெமிக்கல் நிறுவனம், 2012-ம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டியின் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பிலிருந்து வெளியேற வேண்டும். இல்லையெனில், ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்காமல் இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் வலியுறுத்தினர்.
 
சென்னையில் சனிக்கிழமை கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்த இருவரும் கூறியது:இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, இருவரும் பிரதமருக்குக் கடிதம் எழுதியிருக்கிறோம். இந்தியா சார்பில் ஒலிம்பிக் போட்டியில் முன்பு பங்கேற்ற 22 வீரர்களும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஒலிம்பிக் போட்டி நடைபெறும் மைதானத்தைச் சுற்றித் தனது நிறுவனச் சின்னத்தை விளம்பரப்படுத்த, சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்துக்கு 70 லட்சம் பவுண்டுகளைக் கொடுத்திருக்கிறது டெள நிறுவனம்.போபால் பேரழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை எவ்வித இழப்பீடும் தராத யூனியன் கார்பைட் நிறுவனத்தை விலைக்கு வாங்கியிருக்கும் டொவ்   போபாலில் இருக்கும் ஆலையின் கழிவுகளை அகற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள மறுக்கிறது. இதனால் இன்றும் 25 ஆயிரம் மக்கள் அருந்தும் குடிநீர் விஷமாகியிருக்கிறது. போபால் பேரழிவால் பாதிக்கப்பட்டவர்களும், இந்திய அரசும் தொடுத்துள்ள பல்வேறு சிவில், கிரிமினல் வழக்குகள் நடந்து வரும் இந்திய நீதிமன்றங்களையும் அது மதிப்பதில்லை.போபால் விஷ வாயுக் கசிவு நடந்து டிசம்பர் 3-ம் தேதியோடு 27 ஆண்டுகளாகிறது. ஆனால், இன்றும் போபால் மக்களுக்கு நீதி கிடைக்காமல் இருப்பது அவமானத்துக்குரிய விஷயம். இன்றும் அங்கு பல குழந்தைகள் ஊனத்துடனும், மூளை பாதிப்புடனும் பிறக்கின்றன. எனவே, டெü கெமிக்கல் நிறுவனத்தை ஒலிம்பிக்கிலிருந்து வெளியேற்ற மத்திய அரசு குரல்கொடுக்க வேண்டும். அவ்வாறு வெளியேறாவிட்டால், இந்திய வீரர்களை ஒலிம்பிக் போட்டிக்கு அரசு அனுப்பக்கூடாது என்றனர்.போபாலில் நீதிக்கான சர்வதேச தொடரியக்கத் தன்னார்வலர்கள் நித்தியானந்த், பாத்திமா பாபு ஆகியோர் பேட்டியின்போது உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...