|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

20 October, 2011

ஏழுமலையானுக்கு ரஜினி துலாபாரம்


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புதன்கிழமை திருப்பதி திருமலைக்குச் சென்று ஏழுமலையானை தரிசித்தார். பின்னர் அவர் காணிக்கையாக துலாபாரம் செலுத்தினார். ஏழுமலையானின் தீவிர பக்தர் ரஜினிகாந்த். அவர் சமீபத்தில் உடல்நலமில்லாமல் சிகிச்சைப் பெற்று, மீண்டும் பழையபடி ஆரோக்கியத்துக்குத் திரும்பினார். தனது உடல்நிலை சீரானதற்கு இறைவனுக்கு நன்றி செலுத்தும் வகையில் புதன்கிழமை திருமலைக்குச் சென்றார். அவருடன் மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா, மருமகன்கள் தனுஷ், அஸ்வின் ஆகியோரும், ரஜினியின் நெருங்கிய நண்பர் மோகன்பாபுவும் சென்றிருந்தனர்.

அங்குள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த அவர்கள் இரவு 7.30 மணிக்கு திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு வந்தனர். அவர்களை திருமலை துணை அதிகாரி சீனிவாசராஜூ வரவேற்று வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் வழியாக தரிசனத்துக்கு அழைத்து சென்றார். திருமலையில் ரஜினிக்காக சிறப்பு தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சாமி தரிசனம் செய்த பின்னர், கோவிலில் துலாபாரம் செலுத்தினார் ரஜினி.  

லதா மொட்டை: பேரன் லிங்காவுக்கு முடிகாணிக்கையும் செலுத்தினர். ரஜினி மனைவி லதாவும் கணவருக்காக திருமலையில் முடி காணிக்கை செலுத்தினார். பின்னர் அரைமணி நேரம் அங்கிருந்த ரஜினி மற்றும் குடும்பத்தினர் பின்னர் சென்னை திரும்பினர். கடந்த ஆண்டு இளையமகள் சௌந்தர்யா திருமணம் முடிந்தபிறகு திருமலைக்கு வந்திருந்தார் ரஜினி. அதன் பிறகு இப்போதுதான் வருகிறார். இடையில் சில மாதங்களுக்கு முன் சௌந்தர்யாவும் அவர் கணவர் அஸ்வினும் திருமலைக்கு வந்து சிறப்பு வழிபாடு நடத்தினர். அப்பா விரைவில் திருமலைக்கு வந்து இறைவனுக்கு நன்றி செலுத்துவார் என்று அப்போது சௌந்தர்யா கூறியிருந்தது நினைவிருக்கலாம்.

வளர்த்தகடா மார்பில் இதைத்தான்! ஹக்கானி நெட்வோர்க்' சண்டை!!

பாகிஸ்தான் உதவியோடு ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கர தீவிரவாத அமைப்பான ஹக்கானி நெட்வோர்க் அமைப்பை கட்டுப்படுத்தும் விஷயத்தில் பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கடும் மோதல் மூண்டுள்ளது. இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த அமெரிக்கப் படைகள் திட்டமிட்டுள்ளன. இதற்கு பாகிஸ்தான் ராணுவம் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

நீங்கள் நினைத்த நேரத்தில் உள்ளே நுழைய இது இராக் அல்ல. நாங்கள் ஒரு அணு ஆயுத நாடு என்பதை அமெரிக்கா மறந்துவிடக் கூடாது. எந்த காரியத்தையும் செய்யும் முன் ஒன்றுக்கு 10 முறை அமெரிக்கா யோசிக்க வேண்டும் என பாகிஸ்தான் நாட்டு ராணுவத் தளபதி ஜெனரல் கயானி மிகக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். கயானியின் இந்த எச்சரிக்கையை அமெரிக்கா மிக சீரியஸாக எடுத்துக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது. ஹக்கானி நெட்வோர்க் அமைப்பை பாகிஸ்தான் கட்டுப்படுத்தியே ஆக வேண்டும், இல்லாவிட்டால் ராணுவ உதவிகள் அனைத்தும் நிறுத்தப்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

ஆனால், அந்த உதவிகளே தேவையில்லை என ஜெனரல் கயானி கூறியுள்ளார். அமெரிக்காவுடன் தங்கள் நாட்டு ராணுவத் தளபதி நேரடி மோதலில் ஈடுபடுவதை பாகிஸ்தான் அதிபர் சர்தாரியும் பிரதமர் கிலானியும் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ராணுவத் தளபதிக்கு எதிராகப் பேசினால், இவர்களது பதவிக்கும் உயிருக்குமே கூட உத்தரவாதம் இருக்காது என்பது குறிப்பிடதக்கது. ஹக்கானி நெட்வோர்க் என்பது வானத்தில் இருந்து திடீரென குதித்த தீவிரவாத அமைப்பு அல்ல. அதை உருவாக்கியதே அமெரிக்காவும், பாகிஸ்தான் உளவுப் பிரிவான ஐஎஸ்ஐயும் தான்.

1070களில் சோவியத் படைகளுக்கு எதிராகப் போரிட பல அமைப்புகளுக்கு பாகிஸ்தான் மூலம் உதவி செய்தது அமெரிக்கா. இவ்வாறு உருவாக்கப்பட்டவர்கள் தான் முஜாகிதீன்கள். இவர்களுக்கு ஆயுதத்தையும் பணத்தையும் ஐஎஸ்ஐ மூலம் அமெரிக்கா தந்தது. அந்த வகையில் மெளல்வி ஜலாலுதீன் ஹக்கானி, அவரது மகன் சிராஜூதீன் ஹக்கானி ஆகியோர் தலைமையிலான இந்தத் தீவிரவாத அமைப்பையும் அமெரிக்காவும் பாகிஸ்தானும் இணைந்து உருவாக்கின. இந்த அமைப்பு ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள பாகிஸ்தானின் வசீர்ஸ்தான் மகாணத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்குகிறது.

தலிபான்கள், அல்-கொய்தாவைக் கூட பெருமளவுக்கு ஒடுக்கிவிட்ட அமெரிக்காவுக்கு பெரும் தலைவலியாக விளங்குவது இந்த ஹக்கானி நெட்வோர்க் தான். இவர்கள் ஆப்கானிஸ்தானுக்குள் ஊடுருவி நடத்தி வரும் தாக்குதல்களால், ஏராளமான அமெரிக்க, நேடோ படை வீரர்கள் பலியாகியுள்ளனர். இந் நிலையில் இந்த அமைப்பை ஐஎஸ்ஐ தான் உரம் போட்டு வளர்ப்பதாக குற்றம் சாட்டியுள்ள அமெரிக்கா, அவர்களை ஒடுக்குமாறு பாகிஸ்தானுக்கு கடும் நெருக்கடி கொடுத்து வருகிறது. ஆனால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் மறுத்து வருகிறது.

ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்கப் படைகள் வெளியேறிய பின்னர், அந்த நாட்டை மறைமுகமாக கட்டுப்படுத்தும் திட்டத்தில் உள்ள பாகிஸ்தான் அதற்காக பெருமளவில் நம்பியுள்ளது ஹக்கானி நெட்வோர்க் அமைப்பைத் தான். முன்பு தலிபான்களை உருவாக்கி ஆப்கானிஸ்தானை கைப்பற்றி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது பாகிஸ்தான். ஆனால், தலிபான்களை அமெரிக்கா ஒடுக்கிவிட்டதால், இந்த முறை ஹக்கானி நெட்வோர்க்கை பயன்படுத்தும் திட்டத்தில் உள்ளது பாகிஸ்தான்.

இதனால், அவர்களை ஒடுக்க மறுத்து வருகிறார் பாகிஸ்தான் ராணுவத் தளபதி கயானி. இதையடுத்து வசீர்ஸ்தான் பகுதிக்குள் தனது படைகளை நேரடியாக அனுப்பி ஹக்கானி நெட்வோர்க் தீவிரவாதிகள், அவர்களது முகாம்கள் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதை கடுமையாக எதிர்த்துள்ள கயானி, எங்கள் நாடு ஈராக் அல்ல, அணு ஆயுதம் வைத்திருக்கிறோம் என அமெரிக்காவை வெளிப்படையாகவே மிரட்டியுள்ளார்.

மேலும் அமெரிக்க நெருக்குதலால் தங்களால் விரட்டியடிக்கப்பட்ட பல தீவிரவாத அமைப்புகளின் தலைவர்களுக்கு ஆப்கானிஸ்தான் அதிபர் கர்சாய் அடைக்கலம் தந்து வருவதாகவும், அவர்களுக்கு அமெரிக்க உதவியுடன் ஆயுதங்களைத் தந்து பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதல்கள் நடத்த திருப்பி அனுப்பி வருவதாகவும் பாகிஸ்தான் கூறுகிறது.

அதே போல உங்கள் பேச்சைக் கேட்டு ஹக்கானி நெட்வோர்க் மீது நாங்கள் நடவடிக்கை எடுத்தால், அவர்களை நீங்கள் வளைத்துப் போட்டு, எங்கள் மீதே தாக்குதல் நடத்த திருப்பி அனுப்புவீர்கள். இதனால், ஹக்கானி நெட்வோர்க் மீது நாங்கள் கை வைக்க மாட்டோம் என்கிறது பாகிஸ்தான். ஹக்கானி நெட்வோர்க் தலைவர்களை அமெரிக்க அதிகாரிகள் கத்தாரிலும் துபாயிலும் வைத்து சந்தித்து சமாதானப் பேச்சு நடத்தியதாகவும் கூட பாகிஸ்தான் பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந் நிலையில் ஹக்கானி நெட்வோர்க் என்பது பாகிஸ்தான் உளவுப் பிரிவான ஐஎஸ்ஐயின் 'Blue eyed boys' என்கிறது அமெரிக்கா.ஆனால், ஹக்கானி நெட்வோர்க்கை உருவாக்கியதே அமெரிக்கா தான் என்கிறார் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹினா. மொத்தத்தில் இந்த இருவருமே சேர்ந்து Frankenstein மாதிரி ஒரு பிசாசை உருவாக்கியுள்ளன. அதன் மீது இருவருமே நடவடிக்கை எடுக்கத் தயாராக இல்லை. அந்த அமைப்பை அமெரிக்காவுக்கு எதிராக பயன்படுத்த பாகிஸ்தானும், பாகிஸ்தானுக்கு எதிராக பயன்படுத்த அமெரிக்காவும் முயன்று வருகின்றன.

இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு இதுவரை இல்லாத அளவுக்கு உடையும் நிலைக்கு வந்துவிட்டதால், நிலைமையை சரி செய்ய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் இன்று பாகிஸ்தான் வருகிறார். (அவர் நேற்றே ரகசிய பயணமாக ஆப்கானிஸ்தான் வந்துவிட்டார். பாதுகாப்பு காரணங்களால், அவரது பயணம் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது) பாகிஸ்தான் நட்பு நாடு என அவர் பிரஸ்மீட்டில் பேசுவார் என்பது மட்டும் நிச்சயம். ஆனால, பூட்டிய அறைக்குள் ஹக்கானி விவகாரத்தை வைத்து பாகிஸ்தான் தரப்பை உருட்டி எடுக்க தன்னுடன் சிஐஏ தலைவர் ஜெனரல் டேவிட் பெட்ராசையும், முப்படைகளின் கூட்டுத் தலைவர் ஜெனரல் மார்டின் டெம்பிசியையும் அழைத்து வந்துள்ளார்.இவர்கள் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, பிரதமர் யூசுப் ரஸா கிலானியை சந்தித்துப் பேசுவதோடு, பாகிஸ்தான் ராணுவத் தளவதி அஸ்வாக் பர்வேஸ் கயானியையும் சந்தித்துப் 'பேசவுள்ளனர்' (சண்டை போட உள்ளனர்).

INDIA's Communications and Information Technology Minister) indifferent towards respect to our National Flag & to INDIA

இவன்லாம் மந்திரி நாம இந்த அரசாங்காத்த நம்பி வாழுறோம் வேற வெக்ககேடன விஷயம். 

மனநோயை குணமாக்கும் மருதாணி!


ன்னிப்பெண்கள் அழகிற்காக மருதாணியை அரைத்து கைகளில் வைத்துக்கொள்வார்கள். தலைமுடி கருகரு வென வளரவும், தலைமுடி உதிராமல் இருக்கவும் ஹென்னா எனப்படும் மருதாணியை பூசிக் குளிப்பார்கள். மருதாணி இலை மட்டுமல்லாது மருதாணிப் பூக்களும் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.  

கூந்தல் வளர: கூந்தல் செழிப்பாக வளர சுத்தம் செய்த மருதாணிப்பூக்களை தேங்காய் எண்ணெயில் போட்டு பூக்கள் சிவக்கும் வரை காய்ச்சி இறக்கி ஆறவிட்டு பாட்டிலில் பத்திரப்படுத்தவும்.இந்தத் தைலத்தை தினசரி தலைக்குத் தடவி வந்தால் கூந்தல் செழிப்பாகும்.தலைவழுக்கையும் மறையும். நீடித்த தலைவலி நீங்கும்.

மனநோய் போக்கும்: ஹிஸ்டீரியா நோய் தாக்கப்பட்ட பெண்கள் இரவில் தூக்கம் வராமல் அவதிப்படுவார்கள். இவர்கள் மருதாணிப்பூவை தலையில் சூடி வந்தால் நோய் குறையும், தூக்கம் வரும். இரவில் தூக்கம் வராமல் தவிப்பவர்கள் மருதாணிப் பூக்களை கொத்தாகப் பறித்து வந்து தலையணைக் கடியில் வைத்து படுத்தால் நன்றாக உறக்கம் வரும் இதனால் உடல் வெப்பமும் தணியும்.

நாள்பட்ட தோல் நோய்: மருதாணிப் பூச்சாறு அரை தேக்கரண்டியளவு எடுத்து அரை டம்ளர் காய்ச்சி ஆறவைத்த பசும் பாலில் கலந்து பருக கை, கால்வலி குணமடையும். கால் கிலோ மருதாணிப் பூக்களை அரை லிட்டர் வேப்பெண்ணெயில் போட்டு காய்ச்சி வாத வலியுள்ள பகுதிகளில் தடவி வர பக்க வாத நோய் குணமடையும். காலில் தோன்றக்கூடிய கரப்பான் புண்களை ஆற்ற மருதாணிப்பூவை அரைத்து புண்கள் மீது பற்றுப்போட விரைவில் ஆறும். நாள்பட்ட நீர் ஒழுகும் எக்ஸிமா என்னும் புண்களுக்கு மருதாணிப்பூவுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து பற்றுப்போட விரைவில் குணமாகும்.

இங்கிலாந்ச் சேர்ந்த டாக்சி டிரைவர் ஒருவர் 'மம்மி' ஆகியுள்ளார்!


இங்கிலாந்ச் சேர்ந்த டாக்சி டிரைவர் ஒருவர் 'மம்மி' ஆகியுள்ளார். அதாவது உடல் எகிப்து நாட்டில் அந்தக் காலத்தில் மம்மியாக பதனப்படுத்தப்படுவதைப் போல இந்த டாக்சி டிரைவரின் உடலும் பதனப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், 3,000 ஆண்டுகள் கழித்து முதன்முதலாக மம்மியாகும் முதல் மனிதர் என்ற பெருமை இவருக்குக் கிடைத்துள்ளது. பண்டைய கால எகிப்திய மன்னர்கள் உடல்களை பாடம் செய்து மம்மியாக வைத்தனர். அந்த ரகசியம் இத்தனை ஆண்டுகளாக யாருக்கும் தெரியாமல் இருந்தது. இந்நிலையில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர் மம்மி ரகசியத்தை கண்டுபிடித்துள்ளார். 

இங்கிலாந்தைச் சேர்ந்தவர் ஆலன் பில்லிஸ் (61). டாக்சி டிரைவர். அவர் கடந்த ஜனவரி மாதம் நுரையீரல் புற்றுநோயால் உயிர் இழந்தார். ஆலன் தான் இறப்பதற்கு முன்பு மருத்துவ ஆராய்ச்சிக்காக தனது உடலைத் தானமாக வழங்குவதாக உறுதியளித்தார். மேலும் தனது உடலை மம்மி போல பதனப்படுத்துமாறும் கேட்டுக் கொண்டிருந்தார்.அதன்படி அவர் இறந்ததும் அவரது உடல் மருத்துவ ஆராய்ச்சிக்காக பயன்படுத்தப்பட்டது. முதலில் ஒரு மாதத்திற்கு ஆலனின் உடல் உப்புத் தண்ணீரில் முக்கி வைக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு அவரது உடல் உலர்த்தப்பட்டது. இவையெல்லாம் செய்வதற்கு முன்பாக ஆலனின் உள்ளுறுப்புகள் நீக்கப்பட்டு லினன் என்னும் நூல் வைத்து அந்த வெற்றிடங்கள் நிரப்பப்பட்டது.

எகிப்தியர்கள் செய்த மம்மி போன்று ஆலன் உடல் முழுவதும் லினன் துணி சுற்றப்பட்டது. ஷெப்பீல்டு மெடிகோ-லீகல் சென்டரில் வைத்து இந்த பதப்படுத்தும் பணிகள் 3 மாத காலமாக நடந்தது. இறுதியில் ஆலன் மம்மி வடிவம் பெற்றுள்ளார். ஆலனை மம்மியாக்கிய தொல்பொருள் வேதியியலாளர் ஸ்டீபன் பக்லீ கூறுகையில், ஆலன் பண்டைய கால எகிப்தியர்கள் செய்த மம்மி போன்று காணப்படுகிறார். 3,000 ஆண்டுகள் கழி்தது மம்மியாகியுள்ள முதல் நபர் என்ற பெருமையை ஆலன் பெறுகிறார். எகிப்தியர்களின் ரகசியத்தை நான் கண்டுபிடித்துவிட்டேன் என்றார்.

சத்துணவு சீரமைப்பு விரைவில் விதவிதமான சாப்பாடு!


சத்துணவுத் திட்டத்தில், மாணவர்களுக்கு தினமும் விதவிதமான உணவு வழங்கும் திட்டத்தை மறுசீரமைப்பு செய்து, மாநிலம் முழுவதும் அமல்படுத்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, சத்துணவு நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறது. 

நாக்கு செத்துப் போச்சு! தற்போது, தினமும், சாதம், சாம்பார், வாரத்தில் ஐந்து நாட்களும் முட்டை வழங்கப்படுகிறது. ஒரே மாதிரியான உணவு வழங்குவதால், சத்துணவில் மாணவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. ஆகையால், தினமும் விதவிதமான உணவு வகைகளை வழங்க, முந்தைய அரசு முடிவு செய்தது.முதற்கட்டமாக, 2009, அக்டோபரில், சென்னை திருவல்லிக்கேணி, சைதாப்பேட்டை, மயிலாப்பூர், செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள, ஆறு பள்ளிகளில், சோதனை ரீதியாக இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டது.இதன்படி, சாம்பார் சாதம், காரக்குழம்பு, பிரிஞ்சி, புளிசாதம், மிளகுதூள் தூவிய முட்டை என, தினமும் விதவிதமான உணவு வழங்கப்பட்டது. இதற்கு, மாணவர்கள், பெற்றோர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால், தமிழகம் முழுவதும் இதை அமல்படுத்த, அரசு பரிசீலித்து வந்தது.அடுத்த ஆண்டு முதல்? இதற்கிடையே, கடந்த ஆண்டு இறுதியில், சமூகநலத்துறை இயக்குனர் மாற்றப்பட்டதை அடுத்து, விதவிதமான உணவு திட்டம், நிறுத்தப்பட்டது.புதிய அரசு பொறுப்பேற்றதும், மாணவர்களுக்கான சத்துணவுத் திட்ட செலவுத் தொகையை உயர்த்தி வழங்கியதுடன், மீண்டும் விதவிதமான உணவு வகைகளை வழங்கவும், தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.இதுகுறித்து, சத்துணவு நிபுணர்களுடன், சமூக நலத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்த உள்ளனர். சமூகநலத்துறை அதிகாரி ஒருவர் இதுகுறித்து கூறும்போது, "சோதனை ரீதியாக, சென்னையில் நடத்தப்பட்ட விதவித உணவு வழங்கும் திட்டம், செலவு அதிகரித்ததால், நிறுத்தப்பட்டு விட்டது. தற்போது, திட்டத்தை மறு சீரமைப்பு செய்து, நடைமுறைப்படுத்த உள்ளோம்' என்றார்.புத்தாண்டின் துவக்கத்திலோ, அடுத்த கல்வியாண்டு முதலோ, இத்திட்டம் நடைமுறைக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

சோதனை ரீதியாக வழங்கிய உணவு: திங்கள் சாம்பார் சாதம், முட்டை வறுவல்செவ்வாய் காரக்குழம்பு, அவித்த முட்டைபுதன் பிரிஞ்சி-பருப்பு அவியல், முட்டை தொக்குவியாழன் சாதம்-சாம்பார், பெப்பர் முட்டைவெள்ளி புளிசாதம்-உருளை வறுவல், அவித்த முட்டை

நிதி ஒதுக்கீடும், பயனடைவோரும்...* சத்துணவுத் திட்டத்தின் கீழ், தமிழகம் முழுவதும், 54.80 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.
* இதற்காக, 1,278 கோடி ரூபாயை, பட்ஜெட்டில் தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

சபரிமலையில் விரைவாக தரிசனம் கிடைக்க போலீஸ் வெப்-சைட்டில் முன்பதிவு செய்ய வேண்டும்!

சபரிமலையில் குவியும் பக்தர்கள், நீண்ட வரிசையில் பல மணிநேரம் காத்திருக்காமல், விரைவாக தரிசனம் முடித்து திரும்ப போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர். இதற்கு, போலீசார் அறிவிக்க உள்ள வெப்-சைட்டில் பக்தர்கள் முன்னரே பதிவு செய்ய வேண்டும். கேரளா, பத்தனம்திட்டா மாவட்டத்திலுள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில், ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் திரள்வது வழக்கம். அவ்வாறு வருபவர்களில் பெரும்பாலோர் மண்டல மற்றும் மகர ஜோதி தரிசனத்திற்காக வருகின்றனர். அக்கால கட்டங்களில் சபரிமலையில் நெரிசல் அதிகரித்து, நீண்ட வரிசையில் பல மணிநேரம் பக்தர்கள் காத்திருக்க வேண்டியது நேரிடும். இதை தவிர்க்க மாநில போலீசார், தங்களது வெப்-சைட்டில் முன்னரே பதிவு செய்து விட்டு வரும் பக்தர்கள், நீண்ட வரிசையில் பல மணிநேரம் காத்திருக்காமல், விரைவாக தரிசனம் செய்ய ஏற்பாடு செய்து வருகின்றனர். இதன் மூலம், ஒரு மணி நேரத்தில் ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும். இதற்கான வெப்-சைட் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக, மாநில போலீஸ் கூடுதல் டி.ஜி.பி., பி.சந்திரசேகரன் தெரிவித்தார். 

தரிசன நேரம் அதிகரிப்பு: பக்தர்களின் வசதிக்காக, சபரிமலை அய்யப்பன் கோவிலில், தரிசன நேரம் அதிகரிக்கப்படுகிறது. மண்டல கால உற்சவம் துவங்குவது முதல், அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படும். இதுவரை மண்டல மற்றும் மகர ஜோதி உற்சவ காலங்களில், அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படும். உச்சிக்கால பூஜை முடிந்து பிற்பகல் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். அதன்பின், மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, இரவு 11 மணி வரை தரிசனம் செய்யலாம். தரிசன நேரம் மாற்றப்படுவதால், இனி அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படும். தொடர்ந்து திறந்திருக்கும் நடை, மதியம் உச்சிக்கால பூஜைக்குப் பின், பிற்பகல் 1 மணிக்கு அடைக்கப்படும். பிற்பகல் 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, இரவு 11 மணிக்கு அடைக்கப்படும். இதுகுறித்து இறுதி முடிவு விரைவில் அறிவிக்கப்படும். தரிசன நேரம் அதிகரிப்பது குறித்து, தேவ பிரசன்னம் பார்க்கப்பட்டு சுவாமியின் அனுமதி பெறப்பட்டுள்ளது. சபரிமலை சன்னிதான பகுதியில் அகற்றப்படும் பந்தல்களுக்கு பதிலாக, பாண்டித்தாவளம் பகுதியில் 30 ஆயிரம் சதுரடியில் பக்தர்களுக்காக பந்தல் அமைக்கப்படும். இதனால், கூடுதலாக ஆறு ஏக்கர் நிலப்பரப்பளவில் பக்தர்களுக்கு வசதி ஏற்படுத்தப்படும். இத்தகவல்களை, நேற்று முன்தினம் சபரிமலையில் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தலைவர் வழக்கறிஞர் எம்.ராஜகோபாலன் நாயர் தெரிவித்தார்.

முதல்வர் ஜெ.யிடம் 379 கேள்விகள் கேட்கப்பட்டன! நாளையும் விசாரணை !!


 வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பான வழக்கில், பெங்களூரு சிறப்புக் கோர்ட்டில் ஆஜரான முதல்வர் ஜெ.,யிடம் மதியம் வரை 52 கேள்விகள் கேட்கப்பட்டன. மொத்தம் 1,384 கேள்விகளை அரசு வக்கீல் ஆச்சார்யா தயாரித்து வைத்திருந்தார். மாலை 4: 30 மணி வரை விசாரணை தொடர்ந்தது. இன்று 379 கேள்விகள் கேட்கப்பட்டன. அவற்றுக்கு ஜெயலலிதாவும் அவரடைய வக்கீலும் அளித்த பதில்கள் பதிவு செய்யப்பட்டன. சாட்சிகள் தெரிவித்த தகவல்கள் அடிப்படையில் இந்த கேள்விகள் இருந்தன. சில கேள்விகளுக்கு விரிவான பதிலகளைக் கொடுத்த ஜெ., வேறு சில கேள்விகளுக்கு தெரியாது என பதில் கொடுத்தார். இன்னும் கேள்விகள் முடியாததால் நாளையும் விசாரணை தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜெயலலிதா இன்று காலை 8.30. மணியளவில் போயஸ்கார்டன் வீட்டில் இருந்து விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்புடன் புறப்பட்டு சென்றார். தனி விமானம் மூலம் புறப்பட்டு இவர் 10 மணியளவில் பெங்களூரூ வந்து சேர்ந்தார். அங்கிருந்து கார் மூலம் கர்நாடக போலீஸ் பாதுகாப்புடன் பரப்பன அக்ரஹார கோர்ட்டுக்கு வந்து சேர்ந்தார். தமிழக- கர்நாடக எல்லையில் அ.தி.மு.க,வினர் குவிந்தனர். கோர்ட் வளாகத்தில் கன்னட தலித் அமைப்பினர் கறுப்பக்கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக ‌நேற்று கோர்ட்டில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என ஜெ., சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு, நிராகரிக்கப்பட்டது. "இன்று ஆஜராக வேண்டும்' எனவும், சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. 

பாதுகாப்பு வளையத்தில் கோர்ட் :முதல்வர் ஜெ., பெங்களூரூ கோர்ட்டுக்கு செல்லும் போது பாதுகாப்பு பிரச்னை ஏற்படும் என அவர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து கர்நாடக அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் பாதுகாப்பு விரிவாக செய்துள்ளோம் இதில் எவ்வித பிரச்னையும் எழாது என உறுதியளித்தார். இதன்படி ஜெ., வருகையையொட்டி பரப்பன அக்ரஹார கோர்ட்டை சுற்றிலும் ஏறத்தாழ ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் கோர்ட்டில் இருந்து குறிப்பிட்ட தூரத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சசிகலா -இளவரசியுடன் ஜெ., : இன்று கோர்ட்டில் ஆஜராக பல கார்கள் புடைசூழ பலத்த துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் வந்த ஜெ., காரில் அவரது தோழி சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் உடன் இருந்தனர். 

கர்நாடகாவில் நுழைய அ.தி.மு.க.,வினர் முயற்சி : எல்லையில் பதட்டம் : கர்நாடக கோர்ட்டிற்கு ஜெ., வருவதையொட்டி சேலம், தர்மபுரி, கோவை, கிருஷ்ணகிரி, மாவட்டங்களை சேர்ந்த அ.தி.மு.க.,வினர் கர்நாடக எல்லை பகுதியான ஓசூர் அருகே அத்திப்பள்ளி, சர்ஜாபுரம், ஆனைக்கல் பகுதி வழியாக கர்நாடகா செல்ல கார் மற்றும் டிரக்கர் லாரி மூலம் வந்தனர். இதனால் கர்நாடக எல்லையில் இருந்த அம்மாநில போலீசார் வாகனங்களை வழிமறித்து திருப்பி அனுப்பினர். சிலர் திரும்பி செல்ல மறுத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து உள்ளூர் அ.தி.மு.க.,வினர் தயவில் மாற்று வழியில் கர்நாடகாவுக்குள் சில வாகனங்கள் சென்றன. சில அமைச்சர்களும் காரில் வந்து திரும்பி சென்றனர். எல்லை பகுதியில் நடந்த தமிழக- கர்நாடக போலீசார் நடத்திய சோதனை காரணமாக ஓசூர்- பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து ஏற்பட்டது. இதனால் சாதாரண மக்களும், சரக்கு லாரி டிரைவர்களும் கடும் சிரமத்திற்குள்ளாயினர். 

கறுப்புக்கொடியுடன் போராட்டம்: கோர்ட் அருகே கன்னட தலித் அமைப்புகள் கறுப்பு கொடியுடன் போராட்டம் நடத்தினர். பரமக்குடியில் நடந்த கலவரத்தின்போது கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். முதல்வர் ஜெ., ராஜினாமா செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து அ.தி.மு.க.,வினர் அங்கு கூடியதால் பதட்டம் ஏற்பட்டது. இருவரும் எதிர் கோஷம் எழுப்பினர். இதனையடுத்து போலீசார் பதட்டத்தை தணிக்க கன்னட அமைப்பினர் 50 பேரை கைது செய்து அழைத்து சென்றனர். 

எத்தனை அமைச்சர்கள் வந்தனர் ? : ஜெ,கோர்ட்டில் ஆஜராகிறார் என அவருக்கு துணையாக இருப்பதை காட்டும் வகையில் தமிழக அமைச்சர்கள் பலர் பெங்களூரூவுக்கு வந்தனர். பன்னீர்செல்வம், செங்கோட்டையன், கோகுலஇந்திரா, நத்தம் விஸ்வநாதன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, மற்றும் தம்பித்துரை எம்.பி.,, முன்னாள் சபாநாயகர் பி,எச்.,பாண்டியன் உள்ளிட்டோர் வந்திருந்தனர். நட்சத்திர ஓட்டலில் இருந்து வந்தது சான்ட்விச்: காலையில் வந்த ஜெ., மதியம் வரை கோர்ட்டில் இருக்க வேண்டியது வந்ததால் இவருக்கு மதியம் சான்ட்விச் கொண்டு வரப்பட்டது. இதற்கென நட்சத்திர ஒட்டலுக்கு சென்று அ.தி.மு.க., நிர்வாகிகள் வாங்கி வந்தனர். 

ஜெ.,யிடம் கேட்க 252 கேள்விகள்: கோர்ட்டில் நீதிபதி மல்லிகார்ஜூனய்ய் முன்பாக , ஜெ., அமர்வதற்கு ஒரு சேர் போடப்பட்டிருந்தது. மற்றவர்கள் ஒரு ஓரத்தில் அமர வைக்கப்பட்டனர். ஜெ.,யிடம் கேட்க அரசு தரப்பில் 252 கேள்விகள் தயாரித்து வைக்கப்பட்டிருந்தன. இதில் மதியம் 2 மணி வரை 52 கேள்விகள் கேட்கப்பட்டன. அரசு தரப்பில் வக்கீல் ஆச்சார்யா கேள்விகளை கேட்டார். 2 மணிக்கு கோர்ட்டில் இருந்து வெளியே வந்த 3 பேரும் சென்னையில் இருந்து வரவழைக்கப்பட்டிருந்த சிறப்பு வேனுக்குள் சென்று மதியம் சாப்பிட்டனர். தொடர்ந்து 2.30 க்கு மீண்டும் கோர்ட்டுக்குள் சென்றனர்.தொடர்ந்து 4 மணி வரை விசாரணை நடைபெற்றது. 

தகுந்த பாதுகாப்பு வழங்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு : முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு, பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில், அனைத்து சாட்சிகளையும் விசாரித்து முடித்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என, அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா வலியுறுத்தினார். இதையடுத்து, ஜெயலலிதா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவிட்டது.ஆனால், ஜெயலலிதா தரப்பில், வீடியோ கான்பரன்ஸ் அல்லது ஸ்டேட்மென்ட் மூலம் பதிலளிப்பதாகக் கூறி தாக்கல் செய்த மனுவை, கோர்ட் நிராகரித்தது. சுப்ரீம் கோர்ட் சென்ற ஜெயலலிதாவுக்கு, "அக்., 20ம் தேதி கண்டிப்பாக பெங்களூரு சிறப்புக் கோர்ட்டில் ஆஜராக வேண்டும். "இசட்' பிரிவு பாதுகாப்பில் இருப்பதால் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும்' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.இதையடுத்து, முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை, இன்று, பெங்களூரு பரப்பன அக்ரஹார மத்திய சிறை எதிரிலுள்ள கோர்ட்டில் நடத்துமாறு, பெங்களூரு சிறப்புக் கோர்ட் உத்தரவிட்டது. இந்நிலையில், தனக்கு போதிய பாதுகாப்பு வழங்க கர்நாடக அரசு தவறிவிட்டது. அதனால், பெங்களூரு கோர்ட்டில் ஆஜராவதை தள்ளி வைக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி, முதல்வர் ஜெயலலிதா தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நேற்று நீதிபதிகள் தல்வீர் பண்டாரி மற்றும் தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயலலிதாவின் பாதுகாப்பு தொடர்பாக கர்நாடக மாநில தலைமைச் செயலர் மற்றும் டி.ஜி.பி.,யின் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில், "ஜெயலலிதா "இசட்' பிளஸ் பாதுகாப்பில் இருப்பதால், பெங்களூரு சிறப்புக் கோர்ட்டில் அவர் ஆஜராகும் போது, அவருக்குத் தேவையான முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும்' என, உறுதி அளிக்கப்பட்டிருந்தது. 

இந்த அறிக்கைகளைப் பரிசீலித்த நீதிபதிகள், "வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பான வழக்கு விசாரணைக்கு, பெங்களூரு சிறப்புக் கோர்ட்டில், இன்று முதல்வர் ஜெயலலிதா ஆஜராக வேண்டும். ஏற்கனவே நிர்ணயித்தபடி, அவர் கோர்ட் விசாரணையில் பங்கேற்க வேண்டும்' என, உத்தரவிட்டனர்.மேலும், வழக்கு விசாரணை நடைபெறும் இடத்தை பெங்களூரு விமான நிலையத்திற்கு அருகே மாற்ற வேண்டும் என்ற ஜெயலலிதாவின் கோரிக்கையையும் நீதிபதிகள் நிராகரித்து விட்டனர். "ஜெயலலிதா ஆஜராவதற்காக ஹெலிபேடு கூட தயார் நிலையில் உள்ளது. அதனால், அவர் கோர்ட்டில் ஆஜராகி, வழக்கு விசாரணையில் பங்கேற்ற பின் மீண்டும் திரும்பிச் செல்லலாம்' என்றும் கூறினர். முன்னதாக ஜெயலலிதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோதகி, ""ஜெயலலிதாவுக்கு எதிராக சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை நடைபெறும் சிறப்புக் கோர்ட், பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து 65 கி.மீ., தொலைவில் உள்ளது. இதனால், அவரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம். ஜெயலலிதாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதால், குறைந்தபட்சம் சில நாட்களுக்காவது வழக்கு விசாரணையை, அவர் ஆஜராவதை தள்ளி வைக்க வேண்டும்,'' என்றார்.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் கூறியதாவது:ஜெயலலிதாவின் பாதுகாப்பு விஷயத்தில் நாங்களும் அக்கறை கொண்டுள்ளோம். கர்நாடக அரசின் வழக்கறிஞர் அனிதா ஷெனாயும், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மல்கோத்ராவும், ஜெயலலிதாவை பாதுகாக்கத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். அதனால், எந்த அச்சமும் தேவையில்லை.ஜெயலலிதா பெங்களூரு வருவது முதல் அவர் விசாரணை முடிந்து, நகரை விட்டு வெளியேறும் வரை முறையான பாதுகாப்பு அளிக்கத் தேவையான நடவடிக்கைகளை, கர்நாடக மாநில அரசு எடுத்துள்ளது. பாதுகாப்பை உறுதி செய்வதில் கர்நாடக மாநில அரசுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஏனெனில், கர்நாடக மாநிலத்திற்கு விஜயம் செய்யும் பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்கி வருகிறது.இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர். பரப்பன அக்ரஹாரம் சிறப்புக் கோர்ட்டை சுற்றியுள்ள பகுதிகளில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர். மோப்ப நாய்களும் சோதனை மேற்கொண்டது. கோர்ட் வளாகம் முழுவதும் புதிய வர்ணம் பூசப்பட்டு, உட்கட்டமைப்பு வசதிகள் இரவு, பகலாக நடந்து வருகிறது. முதல்வர் ஜெயலலிதா வருவதால், அப்பகுதியில் 500 மீட்டர் சுற்றளவில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

கர்நாடக முதல்வர் சதானந்த கவுடா கூறுகையில், ""முதல்வர் ஜெயலலிதா, பரப்பன அக்ரஹாரம் சிறப்புக் கோர்ட்டில் ஆஜராக வரும்போது, அவருக்குத் தேவையான பாதுகாப்பை கண்டிப்பாக வழங்குவோம்,'' என்றார். சென்னையிலிருந்து ஜெயலலிதா விமானம் மூலம் பெங்களூரு சர்வதேச விமான நிலையம் வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம், இன்போசிஸ் நிறுவனத்தின் ஹெலிகாப்டர் தளத்தில் இறங்கி, கார் மூலம் கோர்ட்டிற்கு செல்லலாம் அல்லது ஹெச்.ஏ.எல்., விமான நிலையத்துக்கு வந்தால், அங்கிருந்து கார் மூலம் கோர்ட்டிற்கு வரலாம் என போலீசார் தெரிவித்தனர்.

இடைத்தேர்தல் அ.தி.மு.க. வெற்றி!


திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல் அ.தி.மு.க, வேட்பாளர் பரஞ்ஜோதி 14 ஆயிரத்து 684 ஓட்டுகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார். இத்தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் துவங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. மொத்தம் பதிவான 5 தபால் ஓட்டுகளும் தி.மு.க., வேட்பாளர் நேருவுக்கு கிடைத்துள்ளன. 18 வது இறுதி சுற்று எண்ணிக்கையின்படி அ.தி.மு.க., வேட்பாளர் பரஞ்ஜோதி 69 ஆயிரத்து 29 ஓட்டுகளும், தி.மு.க., வேட்பாளர் கே.என். நேரு 54 ஆயிரத்து 345 ஓட்டுகளும் பெற்றுள்ளார். இதையடுத்து 14 ஆயிரத்து 684 ஓட்டுகள் அதிகம் பெற்று பரஞ்சோதி வெற்றி பெற்றார். அ.தி.மு.க., வேட்பாளரின் வெற்றியை தொண்டர்கள் மகிழ்ச்சியுடன் பட்டாசு வெடித்து கொண்டாடினர். எதிர்த்து போட்டியிட்ட 14 சுயேச்சை வேட்பாளர்கள் ‌டிபாசிட் இழந்தனர். புதுச்சேரி இடைத்தேர்தலில் ரெங்கசாமி தலைமையிலான என்.ஆர்,. காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட தமிழ்செல்வன் 8ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

காலை கட்டி ஓடச்சொன்னால் எப்படி - கருணாநிதி கருத்து : காலை கட்டி விட்டு பந்தயத்தில் ஓடச்சொன்னால் எப்படி இருக்குமோ அதே நிலை தான் நேருவுக்கும் என தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். திருச்சி இடைத்தேர்தல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.பெங்களூரு கோர்ட்டில் ஜெ., ஆஜரானது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ஜெ., நீதிக்கு தலைவணங்கியுள்ளதாக தெரிவித்தார்.



அம்மாவின் சாதனைக்கு கிடைத்த வெற்ற என்கிறார் பரஞ்ஜோதி: வெற்றி பெற்ற பரஞ்ஜோதி அ.தி.மு.க., நிருபர்களிடம் கூறுகையில் : முதல்வர் ஜெ.,யின் சாதனைகளுக்கும், நல்ல வளர்ச்சி திட்ட பணிகளுக்கும் கிடைத்த வெற்றி. அம்மாவின் துணையுடன் திருச்சி மேற்கு தொகுதியின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன். எனக்கு வாக்களித்தவர்களுக்கு வெற்றிக்காக உழைத்த தொண்டர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். என்றார்.



திருச்சி மேற்கு தொகுதிக்கு கடந்த 13ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. தி.மு.க., சர்பில் முன்னாள் அமைச்சர் நேருவும், அ.தி.மு.க., சார்பில் பரஞ்ஜோதியும் போட்டியிட்டனர். இருவருக்குமிடையே நேரடிப் போட்டி ஏற்பட்டது."சட்டசபைத் தேர்தலை பொறுத்தவரை திருச்சி மாவட்டம், தி.மு.க.,வின் கோட்டை' என்று சொல்லும் அளவுக்கு கடந்த காலங்களில், திருச்சி தி.மு.க., வசம் இருந்தது. ஸ்ரீரங்கம், மருங்காபுரி (தற்போது மணப்பாறை) தொகுதியைத் தவிர பிற தொகுதிகளில் பெரும்பாலும், தி.மு.க.,வே வெற்றி பெற்று வந்தது. கடந்த 2006 தேர்தலில் ஸ்ரீரங்கம், மருங்காபுரியைத் தவிர, மற்ற ஏழு தொகுதிகளிலும் தி.மு.க.,வே வெற்றி வெற்றது.

கடந்த ஏப்ரல் மாதம், 14வது சட்டசபைக்கான 2011ம் ஆண்டு சட்டசபை பொதுத் தேர்தல் நடந்தது. தி.மு.க., - காங்., விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஓரணியாகவும், அ.தி.மு.க., - தே.மு.தி.க., - கம்யூ., - ம.ம.க., ஓரணியாகவும் போட்டியிட்டன.திருச்சி மாவட்டத்தில் திருச்சி கிழக்கு, மேற்கு, ஸ்ரீரங்கம், மண்ணச்சநல்லூர், துறையூர், மணப்பாறை, திருவெறும்பூர், முசிறி ஆகிய தொகுதிகளில், அ.தி.மு.க., கூட்டணி கைப்பற்றியது.கடந்த முறை ஏழு தொகுதிகளை கைவசம் வைத்திருந்த, தி.மு.க., இந்த முறை லால்குடி தொகுதியில் மட்டும் வெற்றி வெற்றது. சக்தி வாய்ந்த அமைச்சர் நேருவை எதிர்த்து போட்டியிட்ட, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த மரியம்பிச்சை, 7,000க்கும் மேற்பட்ட ஓட்டுகள் பெற்று வெற்றி வெற்றார். மரியம்பிச்சைக்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. மே மாதம் சென்னைக்குச் செல்லும் வழியில் லாரி விபத்தில் சிக்கி, அமைச்சர் மரியம்பிச்சை பரிதாபமாக உயிரிழந்தார்.

 புதுச்சேரியில் ரெங்கசாமி கட்சி வெற்றி : புதுச்சேரி இந்திராநகர் இடைத்தேர்தலில் ரெங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் தமிழ்செல்வன் 8 ஆயிரத்து 46 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஓட்டு எண்ணிக்கை இறுதி சுற்றின்படி தமிழ்செல்வன் , 15 ஆயிரத்து 53 ஒட்டுக்களும், காங்., வேட்பாளர் ஆறுமுகம் 7 ஆயிரத்து 7 ஓட்டுக்களும், அ..தி.மு.க.,வேட்பாளர் வெங்‌கடேஸ்வரன் என்ற பாஸ்கரன் ஆயிரத்து 578 ஓட்டுக்களும் பெற்றனர்.

லிபிய அதிபர் கடாபி இன்று பிடிபட்டுள்ளதாக நேசனல் டிரான்சிசனல் கவுன்சில்!

லிபிய அதிபர் கடாபி இன்று பிடிபட்டுள்ளதாக நேசனல் டிரான்சிசனல் கவுன்சில் கமாண்டர் தெரிவித்துள்ளார். லிபியாவை பல ஆண்டுகாலமாக ஆட்சி செய்து வந்த அதிபர் கடாபி மீது மக்கள் கொதித்து எழுந்ததன் விளைவாக அங்கு பெரும் புரட்சி வெடித்தது. லிபிய மக்களோடு இணைந்து அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளும் இணைந்து போராட்டத்தில் குதித்தன. இந்நிலையில், கடாபி தலைமறைவானார். அவரது எதிர்ப்பாளர்கள், லிபிய நாட்டில் கடாபிக்கு ஆதரவான பகுதிகளை ஒவ்வொன்றாக கைப்பற்றிய வண்ணம் இருந்தனர். அதேசமயத்தில், கடாபியின் உறவினர்கள் அவ்வப்போது கொல்லப்பட்டு வந்தனர். ஆனால், கடாபி மட்டும் தலைமறைவாக இருந்து வந்தார். அவரை பிடிக்கும் முயற்சியில், நேட்டோ உள்ளிட்ட சர்வதேச படைகள் ஈடுபட்டிருந்தன. இந்நிலையில், கடாபி பிறந்த இடமான ஷிர்தே நகரில், நேட்டோ படையினர் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு நின்றுகொண்டிருந்த வாகனம் ஒன்றில், காயமடைந்த நிலையில் ஒருவர் மீட்கப்பட்டார். பின், அவர் அதிபர் கடாபி என்பதை நேசனல் டிரான்சிசனல் கவுன்சில் கமாண்டர் உறுதி செய்தார். இந்த தகவலை லிபியா லில் ஹரார் டிவி உறுதி செய்துள்ளது. கடாபியன் கால்களில் காயம் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடாபி இறந்துவிட்டார் என்று நேட்டோ படைகள் கூறிவருவது, அவரது ஆதரவாளர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...