|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

20 October, 2011

இடைத்தேர்தல் அ.தி.மு.க. வெற்றி!


திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல் அ.தி.மு.க, வேட்பாளர் பரஞ்ஜோதி 14 ஆயிரத்து 684 ஓட்டுகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார். இத்தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் துவங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. மொத்தம் பதிவான 5 தபால் ஓட்டுகளும் தி.மு.க., வேட்பாளர் நேருவுக்கு கிடைத்துள்ளன. 18 வது இறுதி சுற்று எண்ணிக்கையின்படி அ.தி.மு.க., வேட்பாளர் பரஞ்ஜோதி 69 ஆயிரத்து 29 ஓட்டுகளும், தி.மு.க., வேட்பாளர் கே.என். நேரு 54 ஆயிரத்து 345 ஓட்டுகளும் பெற்றுள்ளார். இதையடுத்து 14 ஆயிரத்து 684 ஓட்டுகள் அதிகம் பெற்று பரஞ்சோதி வெற்றி பெற்றார். அ.தி.மு.க., வேட்பாளரின் வெற்றியை தொண்டர்கள் மகிழ்ச்சியுடன் பட்டாசு வெடித்து கொண்டாடினர். எதிர்த்து போட்டியிட்ட 14 சுயேச்சை வேட்பாளர்கள் ‌டிபாசிட் இழந்தனர். புதுச்சேரி இடைத்தேர்தலில் ரெங்கசாமி தலைமையிலான என்.ஆர்,. காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட தமிழ்செல்வன் 8ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

காலை கட்டி ஓடச்சொன்னால் எப்படி - கருணாநிதி கருத்து : காலை கட்டி விட்டு பந்தயத்தில் ஓடச்சொன்னால் எப்படி இருக்குமோ அதே நிலை தான் நேருவுக்கும் என தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். திருச்சி இடைத்தேர்தல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.பெங்களூரு கோர்ட்டில் ஜெ., ஆஜரானது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ஜெ., நீதிக்கு தலைவணங்கியுள்ளதாக தெரிவித்தார்.



அம்மாவின் சாதனைக்கு கிடைத்த வெற்ற என்கிறார் பரஞ்ஜோதி: வெற்றி பெற்ற பரஞ்ஜோதி அ.தி.மு.க., நிருபர்களிடம் கூறுகையில் : முதல்வர் ஜெ.,யின் சாதனைகளுக்கும், நல்ல வளர்ச்சி திட்ட பணிகளுக்கும் கிடைத்த வெற்றி. அம்மாவின் துணையுடன் திருச்சி மேற்கு தொகுதியின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன். எனக்கு வாக்களித்தவர்களுக்கு வெற்றிக்காக உழைத்த தொண்டர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். என்றார்.



திருச்சி மேற்கு தொகுதிக்கு கடந்த 13ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. தி.மு.க., சர்பில் முன்னாள் அமைச்சர் நேருவும், அ.தி.மு.க., சார்பில் பரஞ்ஜோதியும் போட்டியிட்டனர். இருவருக்குமிடையே நேரடிப் போட்டி ஏற்பட்டது."சட்டசபைத் தேர்தலை பொறுத்தவரை திருச்சி மாவட்டம், தி.மு.க.,வின் கோட்டை' என்று சொல்லும் அளவுக்கு கடந்த காலங்களில், திருச்சி தி.மு.க., வசம் இருந்தது. ஸ்ரீரங்கம், மருங்காபுரி (தற்போது மணப்பாறை) தொகுதியைத் தவிர பிற தொகுதிகளில் பெரும்பாலும், தி.மு.க.,வே வெற்றி பெற்று வந்தது. கடந்த 2006 தேர்தலில் ஸ்ரீரங்கம், மருங்காபுரியைத் தவிர, மற்ற ஏழு தொகுதிகளிலும் தி.மு.க.,வே வெற்றி வெற்றது.

கடந்த ஏப்ரல் மாதம், 14வது சட்டசபைக்கான 2011ம் ஆண்டு சட்டசபை பொதுத் தேர்தல் நடந்தது. தி.மு.க., - காங்., விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஓரணியாகவும், அ.தி.மு.க., - தே.மு.தி.க., - கம்யூ., - ம.ம.க., ஓரணியாகவும் போட்டியிட்டன.திருச்சி மாவட்டத்தில் திருச்சி கிழக்கு, மேற்கு, ஸ்ரீரங்கம், மண்ணச்சநல்லூர், துறையூர், மணப்பாறை, திருவெறும்பூர், முசிறி ஆகிய தொகுதிகளில், அ.தி.மு.க., கூட்டணி கைப்பற்றியது.கடந்த முறை ஏழு தொகுதிகளை கைவசம் வைத்திருந்த, தி.மு.க., இந்த முறை லால்குடி தொகுதியில் மட்டும் வெற்றி வெற்றது. சக்தி வாய்ந்த அமைச்சர் நேருவை எதிர்த்து போட்டியிட்ட, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த மரியம்பிச்சை, 7,000க்கும் மேற்பட்ட ஓட்டுகள் பெற்று வெற்றி வெற்றார். மரியம்பிச்சைக்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. மே மாதம் சென்னைக்குச் செல்லும் வழியில் லாரி விபத்தில் சிக்கி, அமைச்சர் மரியம்பிச்சை பரிதாபமாக உயிரிழந்தார்.

 புதுச்சேரியில் ரெங்கசாமி கட்சி வெற்றி : புதுச்சேரி இந்திராநகர் இடைத்தேர்தலில் ரெங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் தமிழ்செல்வன் 8 ஆயிரத்து 46 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஓட்டு எண்ணிக்கை இறுதி சுற்றின்படி தமிழ்செல்வன் , 15 ஆயிரத்து 53 ஒட்டுக்களும், காங்., வேட்பாளர் ஆறுமுகம் 7 ஆயிரத்து 7 ஓட்டுக்களும், அ..தி.மு.க.,வேட்பாளர் வெங்‌கடேஸ்வரன் என்ற பாஸ்கரன் ஆயிரத்து 578 ஓட்டுக்களும் பெற்றனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...