இங்கிலாந்ச் சேர்ந்த டாக்சி டிரைவர் ஒருவர் 'மம்மி' ஆகியுள்ளார். அதாவது
உடல் எகிப்து நாட்டில் அந்தக் காலத்தில் மம்மியாக பதனப்படுத்தப்படுவதைப்
போல இந்த டாக்சி டிரைவரின் உடலும் பதனப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், 3,000 ஆண்டுகள் கழித்து முதன்முதலாக மம்மியாகும் முதல் மனிதர் என்ற பெருமை இவருக்குக் கிடைத்துள்ளது. பண்டைய
கால எகிப்திய மன்னர்கள் உடல்களை பாடம் செய்து மம்மியாக வைத்தனர். அந்த
ரகசியம் இத்தனை ஆண்டுகளாக யாருக்கும் தெரியாமல் இருந்தது. இந்நிலையில்
இங்கிலாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர் மம்மி ரகசியத்தை
கண்டுபிடித்துள்ளார்.
இங்கிலாந்தைச் சேர்ந்தவர் ஆலன் பில்லிஸ்
(61). டாக்சி டிரைவர். அவர் கடந்த ஜனவரி மாதம் நுரையீரல் புற்றுநோயால்
உயிர் இழந்தார். ஆலன் தான் இறப்பதற்கு முன்பு மருத்துவ ஆராய்ச்சிக்காக தனது
உடலைத் தானமாக வழங்குவதாக உறுதியளித்தார். மேலும் தனது உடலை மம்மி போல
பதனப்படுத்துமாறும் கேட்டுக் கொண்டிருந்தார்.அதன்படி அவர்
இறந்ததும் அவரது உடல் மருத்துவ ஆராய்ச்சிக்காக பயன்படுத்தப்பட்டது. முதலில்
ஒரு மாதத்திற்கு ஆலனின் உடல் உப்புத் தண்ணீரில் முக்கி
வைக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு அவரது உடல் உலர்த்தப்பட்டது. இவையெல்லாம்
செய்வதற்கு முன்பாக ஆலனின் உள்ளுறுப்புகள் நீக்கப்பட்டு லினன் என்னும் நூல்
வைத்து அந்த வெற்றிடங்கள் நிரப்பப்பட்டது.
எகிப்தியர்கள் செய்த
மம்மி போன்று ஆலன் உடல் முழுவதும் லினன் துணி சுற்றப்பட்டது. ஷெப்பீல்டு
மெடிகோ-லீகல் சென்டரில் வைத்து இந்த பதப்படுத்தும் பணிகள் 3 மாத காலமாக
நடந்தது. இறுதியில் ஆலன் மம்மி வடிவம் பெற்றுள்ளார். ஆலனை
மம்மியாக்கிய தொல்பொருள் வேதியியலாளர் ஸ்டீபன் பக்லீ கூறுகையில், ஆலன்
பண்டைய கால எகிப்தியர்கள் செய்த மம்மி போன்று காணப்படுகிறார். 3,000
ஆண்டுகள் கழி்தது மம்மியாகியுள்ள முதல் நபர் என்ற பெருமையை ஆலன்
பெறுகிறார். எகிப்தியர்களின் ரகசியத்தை நான் கண்டுபிடித்துவிட்டேன்
என்றார்.
No comments:
Post a Comment