சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புதன்கிழமை திருப்பதி திருமலைக்குச் சென்று
ஏழுமலையானை தரிசித்தார். பின்னர் அவர் காணிக்கையாக துலாபாரம் செலுத்தினார். ஏழுமலையானின்
தீவிர பக்தர் ரஜினிகாந்த். அவர் சமீபத்தில் உடல்நலமில்லாமல் சிகிச்சைப்
பெற்று, மீண்டும் பழையபடி ஆரோக்கியத்துக்குத் திரும்பினார். தனது
உடல்நிலை சீரானதற்கு இறைவனுக்கு நன்றி செலுத்தும் வகையில் புதன்கிழமை
திருமலைக்குச் சென்றார். அவருடன் மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா,
மருமகன்கள் தனுஷ், அஸ்வின் ஆகியோரும், ரஜினியின் நெருங்கிய நண்பர்
மோகன்பாபுவும் சென்றிருந்தனர்.
அங்குள்ள பத்மாவதி விருந்தினர்
மாளிகையில் தங்கியிருந்த அவர்கள் இரவு 7.30 மணிக்கு திருமலையில் உள்ள
ஏழுமலையான் கோவிலுக்கு வந்தனர். அவர்களை திருமலை துணை அதிகாரி சீனிவாசராஜூ
வரவேற்று வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் வழியாக தரிசனத்துக்கு அழைத்து
சென்றார். திருமலையில் ரஜினிக்காக சிறப்பு தரிசனத்துக்கு ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது. சாமி தரிசனம் செய்த பின்னர், கோவிலில் துலாபாரம்
செலுத்தினார் ரஜினி.
லதா மொட்டை: பேரன்
லிங்காவுக்கு முடிகாணிக்கையும் செலுத்தினர். ரஜினி மனைவி லதாவும்
கணவருக்காக திருமலையில் முடி காணிக்கை செலுத்தினார். பின்னர் அரைமணி நேரம்
அங்கிருந்த ரஜினி மற்றும் குடும்பத்தினர் பின்னர் சென்னை திரும்பினர். கடந்த
ஆண்டு இளையமகள் சௌந்தர்யா திருமணம் முடிந்தபிறகு திருமலைக்கு
வந்திருந்தார் ரஜினி. அதன் பிறகு இப்போதுதான் வருகிறார். இடையில் சில
மாதங்களுக்கு முன் சௌந்தர்யாவும் அவர் கணவர் அஸ்வினும் திருமலைக்கு வந்து
சிறப்பு வழிபாடு நடத்தினர். அப்பா விரைவில் திருமலைக்கு வந்து இறைவனுக்கு
நன்றி செலுத்துவார் என்று அப்போது சௌந்தர்யா கூறியிருந்தது
நினைவிருக்கலாம்.
No comments:
Post a Comment