|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

07 August, 2011

தாய்ப்பாலாகத் தமிழ் இருக்க, புட்டிப் பாலாக ஆங்கிலம் எதற்கு?

தாய்ப்பாலாகத் தமிழ் இருக்க, புட்டிப் பாலாக ஆங்கிலம் எதற்கு?


இந்தக் கேள்வியை ஓவியத்தின் மூலமே எழுப்புகிறார் ஓர் ஓவியர். அவர், அமெரிக்க வாழ் தமிழரான பார்த்தசாரதி சின்னசாமி. கோவை பீளமேடு கஸ்தூரி ஸ்ரீனிவாசன் கலைக் கூடத்தில் நான்கு நாள்கள் நடந்த "ஓவியத்தமிழ்' என்னும் தலைப்பில் அமைந்த ஓவியக்கண்காட்சியில் அவரைச் சந்தித்தோம்.


இப்படியொரு கண்காட்சியை அமைக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது? ஆங்கிலத்தில் பேசுவது நாகரிகம் என்று யாரோ விதைத்த விதை. இன்று ஆலமரமாய் கிளை பரப்பியுள்ளது. மொழிக் கலப்பு இல்லாமல் தமிழ் மட்டும் அல்ல, இந்திய மொழிகள்... ஏன் உலக மொழிகள் எதுவும் பேசப்படுவதில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. இந்தியாவில் எந்த நகரத்தில் நாம் நின்று சுற்றிப் பார்த்தாலும், உற்றுப் பார்த்தாலும் இது தெளிவாக விளங்கும்.

நமது சமூக சூழலில் உள்ள பிரச்னைகளை மையப்படுத்தி வரைய வேண்டும் என்று ஒரு கால கட்டத்தில் யோசித்துக் கொண்டிருந்தேன். சுமார் மூன்று வருடங்களுக்கு முன் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் பல ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதற்குக் காரணம், தாய்மொழியுடன் ஆங்கிலம் கலந்து பேசுவதுதான் என்பதை உணர்ந்தேன். அப்போது தோன்றிய உணர்வுகளுக்கு வண்ணமேற்றி ஒவியங்களில் பதிவு செய்ய ஆரம்பித்தேன். எனக்கே நான் சொல்ல ஆசைப்பட்ட செய்திகளைத் தாய் மொழி நலம் விரும்பும் என் உடன்பிறப்புகளுக்குச் சொல்ல கடல் தாண்டி, ஓவியங்களைச் சுமந்து வந்தேன்.


"ஓவியத்தமிழ்' என்ற தலைப்பில் கண்காட்சி நடத்தக் காரணம்?

தமிழில் பேசும்போது அதில் ஆங்கிலம் கலந்துள்ளது என்பதை ஓவியம் வாயிலாக வெளிபடுத்தியுள்ளேன். ஓவியம் என்பது வண்ணச் சிதறலாக மட்டுமல்லாமல் எண்ணச் சிதறலாகவும் இருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையோடு ஓவியம் வழி எனக்கு நானே சொல்லிக் கொண்ட செய்திகளை உங்கள் பார்வைக்குப் படைக்க நான் தேர்வு செய்த தலைப்பு இது. அமெரிக்காவில் இருந்து வந்து தமிழ் நாட்டில்
இந்த ஓவியக் கண்காட்சியை ஏன் வைத்தீர்கள்?

அமெரிக்காவில் வாழும் தமிழ் இளைஞர்கள் தங்களுக்குள் ஆங்கிலம் கலந்து பேசுகிறார்கள்தான். காரணம், அங்கிருக்கும் தமிழர்கள் நீண்ட நேரம் உரையாடுவது அமெரிக்கர்களுடன்தான். அதனால் அவர்கள் தமிழ் பேசினாலும் அதில் ஆங்கிலக் கலப்பைத் தவிர்க்கமுடியாது.

ஆனால் தமிழ்நாட்டில் வாழும் இரண்டு தமிழர்கள் சந்தித்துக்கொள்ளும்போது நாகரிகம் எனும் போர்வையில் தாய்மொழியில் பேசாமலும் தமிழையும் ஆங்கிலத்தையும் கலந்து "தமிங்கல'மாகப் பேசுவதும் இங்குதானே நிகழ்கிறது! அதனால்தான் தமிழ்நாட்டில் ஓவியக் கண்காட்சியை நடத்தினேன்.


எந்த கல்லூரியில் ஓவியம் பயின்றீர்கள்?

நான் யாரிடமும் ஓவியம் பயிலவில்லை. சிறுவயது முதலே எனக்கு ஓவியம் வரைவதில் ஆர்வம் இருந்தது. எனது தந்தை வெ.சின்னசாமி என்னை உற்சாகப்படுத்தினார். என் உள்ளக் குமுறல்கள், மொழி சிதைவடைகிறது என்ற எண்ணத்தினால் ஏற்படும் நடுக்கங்கள் கை வழியே ஊடுருவி ஓவியமாக மாறின. நீங்கள் எந்த ஊரில் எந்த மொழியில் கல்வி பயின்றீர்கள்? நான் உதகை அருகே உள்ள கீழ் கோத்தகிரியில் இருந்த அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்தேன். 12-ம் வகுப்பு வரை தாய்மொழியில்தான் படித்தேன். பள்ளிப் படிப்பில் சிறப்பிடம் பெற்றேன்.

தமிழில் கற்றதால் ஆங்கிலம் வராது என்ற தவறான எண்ணம் எனக்கும் இருந்தது. ஆனால் நம்பிக்கையுடன் ஆங்கில நாவல்கள் மற்றும் சிறுகதைகளைப் படிக்கத் துவங்கினேன். தற்போது. ஆங்கிலம், தமிழில் நல்ல புலமையுண்டு. கொமாரபாளையத்தில் உள்ள எஸ்.எஸ்.எம். கல்லூரியில் பொறியியல் துறையில் பட்டம் பெற்றேன். மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்று எம்.எல்., படித்தேன். தற்போது டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு பொறியாளராகப் பணிபுரிந்து வருகிறேன்.

உலகிலேயே மிகவும் ஸ்டைலான பெண்ணாக கத்தார் மன்னரின் மனைவி!

உலகிலேயே மிகவும் ஸ்டைலான பெண்ணாக கத்தார் நாட்டு மன்னரின் மனைவி ஷீகா மொஸா பிந்த் நாசர் தேர்வு செய்யபப்பட்டுள்ளார். வானிட்டிபேர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சர்வதேச அளவில் புகழ் பெற்ற பேஷன் பத்திரிக்கைளில் ஒன்று வானிட்டிபேர். இந்த இதழின் வாசகர்கள் சேர்ந்து உலகிலேயே மிகவும் ஸ்டைலான பெண்ணாக மொஸாவைத் தேர்வு செய்துள்ளனர். இஸ்லாமிய உலகைச் சேர்ந்த ஒரு பெண் இந்தப் பெருமையைப் பெறுவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

கத்தார் நாடு ஒரு இஸ்லாமிய நாடாக இருந்தபோதிலும், மொஸா, புர்க்கா அணிவது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் அழகழகான உடைகளையும், பேஷன் டிசைனர் உடைகளையும் அணிவது வழக்கம்.
அடிப்படை மற்றும் உயர் கல்விக்கான யுனெஸ்கோவின் நல்லெண்ணத் தூதுவராகவும் அவர் இருக்கிறார்.

உலக அளவில் சிறந்த முறையில் டிரஸ் செய்யும், ஸ்டைலான பெண்மணிகள் வரிசையில் அவருடன், பிரெஞ்சு அதிபரின் மனைவி கார்லா ப்ரூனி, மொனாக்கோ நாட்டு இளவரசி சார்லீன் ஆகியோரும் இணைந்து தேர்வாகியுள்ளனர். கடந்த 2009ம் ஆண்டு நடந்த ஒரு கருத்துக் கணிப்பிலும் மொஸாவின் பெயர் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

சீல் படையினர் மீது தலிபான்கள் அதிரடி தாக்குதல்-31 வீரர்கள் பலி!

அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை சுட்டுக் கொன்ற அமெரிக்க கடற்படை சீல் பிரிவினர் பயணித்த ஹெலிகாப்டரை தலிபான்கள் சுட்டு வீழ்த்தினர். இதில் 31 சீல் படையினர் கொல்லப்பட்டதால் அமெரிக்கா பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது. பாகிஸ்தானின் அபோதாபாத்தில் பதுங்கியிருந்த பின்லேடனை சுட்டுக் கொன்றது அமெரிக்க கடற்படையின் சீல் பிரிவைச் சேர்ந்த டீம் 6 என்ற படைப் பிரிவைச் சேர்ந்த வீரர்கள். அதே அணியினரைத்தான் தற்போது தலிபான்கள் தாக்கி வீழ்த்தியுள்ளனர்.

மிகச் சிறந்த வீரர்களைக் கொண்ட அணி, மிகத் திறமை வாய்ந்த அணி, மிகவும் புத்திசாலித்தனமான அணி என்று அமெரிக்காவால் புகழப்படும் இந்த டீம் 6 அணியினர் மீது தலிபான்கள் பெரும் தாக்குதல் நடத்தி பெரும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தியிருப்பது அமெரிக்காவை மட்டுமல்ல அனைவரையுமே அதிர வைத்துள்ளது.

டீம் 6 அணியினர் பயணித்த ஹெலிகாப்டரை தலிபான் தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தியுள்ளனர். இதில் 31 வீரர்கள் கொல்லப்பட்டனர். 31 அமெரிக்கர்கள் தவிர 7 ஆப்கானிஸ்தான் கமாண்டோக்களும் இதில் கொல்லப்பட்டுள்ளனர்.

அமெரிக்கப் படைகளுக்கு ஆப்கானிஸ்தானில் கிடைத்துள்ள முதல் தனிப்பெரும் உயிரிழப்பு சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் யாரும், பின்லேடனைக் கொன்ற படையில் இடம் பெற்றிருக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்தப் பிரிவுதான் பின்லேடனைக் கொன்றது என்பது குறிப்பிடத்தக்கது.

வலிமை வாய்ந்த, அதுவும் பின்லேடனைக் கொன்ற சீல் படைக்குப் பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ளது, தலிபான்களுக்குக் கிடைத்த பெரிய வெற்றியாக கருதப்படுகிறது. இது அவர்களை மேலும் ஊக்கப்படுத்தி மேலும் பெரிய தாக்குதல்களுக்கு அவர்களைத் தூண்டலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

வார்டாக் என்ற ஆப்கானிஸ்தான் மாகாணத்தில் நேற்று இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. ராக்கெட் லாஞ்சர் மூலம் ராக்கெட்டை ஏவி அமெரிக்க ஹெலிகாப்டரை தீவிரவாதிகள் தாக்கியுள்ளனர். சம்பவ இடத்தில் அமெரிக்க ஹெலிகாப்டரின் சிதறிய பாகங்கள் விழுந்து கிடப்பதாக தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஹெலிகாப்டர் தாக்கப்பட்டதை அமெரிக்க நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளது. இதுகுறித்து அதிபர் ஒபாமாவும் அதிர்ச்சி வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், நமது வீரர்களு்ம், வீராங்கனைகளும் செய்த தியாகங்களின் விரிவாக்கமாக இது அமைந்துள்ளது. இந்த தியாகம் வீண் போகாது. நிச்சயம் தவறு செய்தவர்கள் தண்டனைக்குள்ளாவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.
இரவில் நடந்த இந்த அதிரடி தலிபான் தாக்குதலில் மொத்தம் 39 பேர் கொல்லப்பட்டதாக நேட்டோ படை செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.

இலங்கை வான் பகுதியி்ல அதிரடியாக பறந்த 10 அமெரிக்க போர் விமானங்கள்!

இலங்கை வான் பகுதிக்குள் அதிரடியாக புகுந்த அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த 10 போர் விமானங்கள் சிறிது நேரம் பறந்த பின்னர் அங்கிருந்து சென்றது இலங்கையை பீதிக்குள்ளாக்கியுள்ளது. அமெரிக்க போர் விமானங்கள் அத்து மீறி விட்டதாக இலங்கை புலம்பியுள்ளது. இதுகுறித்து அமெரிக்காவிடம் முறைப்படி எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என்றும் அது தெரிவித்துள்ளது.

இந்த விமானங்கள் அனைத்தும் அமெரிக்க கடற்படையின் 7வது பிரிவைச் சேர்ந்தவையாகும். பிதுருதலகலா என்ற இடத்தின் மீது அமெரிக்க போர் விமானங்கள் பறந்துள்ளன. இங்கு வைக்கப்பட்டுள்ள இலங்கை கண்காணிப்பு ரேடார்களில் அமெரிக்க போர் விமானங்கள் ஊடுறுவியது பதிவாகியுள்ளதாம்.

இதையடுத்து உடனடியாக இலங்கை சிவில் விமான அதிகாரிகளுக்கும், விமானப்படைக்கும் தகவல்கள் போனதாம். இதுகுறித்து இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநர் நிமலசிறி கூறுகையில், அமெரிக்க போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்துள்ளன. இது கண்டனத்துக்குரியது. இதுகுறித்து அமெரிக்காவிடம் புகார் தரப்படவுள்ளது என்றார். ஆனால் அமெரிக்கத் தரப்பில் இத்தகவலை உறுதிப்படுத்த மறுத்து விட்டனர்.

நாள்முழுக்க நின்றால் 1 லட்சம் மதிப்புள்ள டெலிவிஷன்!

ஒரு நாள் முழுக்க அதாவது 24 மணிநேரம் நிற்க வேண்டும்... காலைக் கூட மாற்றாமல் நின்ற இடத்தில் அப்படியே இருக்க வேண்டும். இப்படி நிற்பவர்களுக்கு பரிசாக ரூ 1 லட்சம் மதிப்புள்ள டிஜிட்டல் டிவி இலவசம்...!
-இப்படியொரு பரிசுத் திட்டத்தை ரிலையன்ஸ் அறிவித்துள்ளது. இந்த திட்டத்தை சென்னையில் இன்று தொடங்கி வைத்தார் நடிகை சினேகா.

ரிலையன்ஸ் நிறுவனம் புதிதாக எலக்ட்ரானிக் பொருள் விற்பனை நிலையங்களை நாடு முழுக்க திறந்து வருகிறது. சென்னையிலும் இந்த கிளையைத் திறந்துள்ளது. அனைத்து முன்னணி நிறுவனங்களின் டிவி, ப்ரிட்ஜ், ஏசி உள்ளிட்ட அத்தனை எலெக்ட்ரானிக் தயாரிப்புகளும் ஒரே கூரையின் கீழ் கிடைக்கும் வகையில் இந்த கடையை அமைத்துள்ளது ரிலையன்ஸ். முகேஷ் அம்பானிக்கு சொந்தமானது இந்த நிறுவனம்.சென்னை அண்ணா நகரில் அமைந்துள்ள இந்த ரிலையன்ஸ் டிஜிட்டல் ஷோரூமை முன்னணி நடிகை சினேகா தொடங்கி வைத்தார்.

இந்தக் கடையை பிரபலப்படுத்தும் நோக்கில் ரிலையன்ஸ் நிறுவனம் ஒரு பரிசுத் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டப்படி, ரிலையன்ஸ் டிஜிட்டல் நிறுவன அலுவலக வாயிலில் 1 நாள் முழுக்க 24 மணி நேரமும் நின்றுகொண்டே இருப்பவருக்கு ரூ 1 லட்சம் மதிப்புள்ள நவீன டிஜிட்டல் டிவி பரிசாக வழங்கப்படும்.இந்தத் திட்டத்தை நடிகை சினேகா முறைப்படி அறிவித்தார்.இப்போதே பலரும், "1 நாள்தானே, நின்றுவிட்டுப் போகலாம்" என்று ரிலையன்ஸ் முன்னாள் திரள ஆரம்பித்துள்ளார்களாம்!

10 நிமிட உறவில் திருப்தி!

தாம்பத்ய உறவில் திருப்தி, மகிழ்ச்சி என அனைத்தையும் அனுபவிக்க, உணர நீண்ட நேரம் தேவையில்லை, வெறும் பத்து நிமிடமே போதுமானது என்று ஆய்வு முடிவு ஒன்றில் தெரியவந்துள்ளது. அநேகம் பேருக்கு இது ஆச்சரியமாக இருக்கலாம், சிலருக்கு அப்படியெல்லாம் இல்லை என்ற எதிர்ப்பு எழலாம். ஆனால் உண்மையில் பத்து நிமிட செக்ஸ் உறவில் போதுமான திருப்தியும், மகிழ்ச்சியையும் எட்ட முடியும் என்கிறது அந்த ஆய்வு.

செக்ஸ் பிரச்சினைகள் தொடர்பான அறிவுரை, சிகிச்சை முறைகளைக் கொடுக்கக் கூடிய செக்ஸ் தெரப்பி மற்றும் ஆய்வுக் கழகத்தைச் சேர்ந்த 50 பேர் இணைந்து ஒரு ஆய்வை மேற்கொண்டனர். அந்த ஆய்வில் கண்டறியப்பட்ட சுவாரஸ்யமான சில விஷயங்கள்...

உறவுக்கு ஏற்ற கால அளவு: சிலருக்கு பெரும் எதிர்பார்ப்புகள் இருக்கும். நீண்ட உடலுறவைக் கொடுத்தால்தான் பார்ட்னருக்கு திருப்தி கிடைக்கும், மகிழ்ச்சி கிடைக்கும் என்று ஆண்களும், பெண்களும் எண்ணுவதால் பல அவுசகரியங்களே ஏற்படுகிறது. மேலும் அதுபோல நடப்பதும் இல்லை. இதனால் ஏமாற்றமும், விரக்தியும் ஏற்படுகிறது. இரவு முழுவதும் உல்லாசமாக இருந்தால்தான் திருப்திகரமாக இருக்கும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. உண்மையில் திருப்தியான உறவுக்கு 7 முதல் 13 நிமிடங்கள் அல்லது பத்து நிமிடங்கள் போதும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

இருவருக்கும் ஏற்ற நிமிடங்கள்; ஒன்று முதல் 2 நிமிடம் வரையிலான உறவு என்பது மிக மிக குறுகியது. இதில் இருவருக்குமே திருப்தி கிடைக்காது. 3 முதல் 7 நிமிடம் வரை என்பது நார்மலானது. இதில் இருவருக்கும் முழு திருப்தி கிடைக்கும். 13 நிமிடங்கள் வரை நீடிப்பது என்பது மிகவும் நீளமானது. இதிலும் இருவருக்கும் திருப்தி இருக்கும், அதேசமயம், கூடவே சில அசவுகரியங்களையும் சந்திக்க நேரிடும். எனவே 7 முதல் 13 நிமிடங்கள் வரை என்பது இரு தரப்புக்கும் ஏற்ற, பொருத்தமான, சரியான கால அளவாகும். அதிலும் 10 நிமிடம் என்பது மிகவும் பர்பக்ட் ஆன கால அளவு.

முன் விளையாட்டுக்கள்: உறவுக்கான கால அளவு வெறும் பத்து நிமிடமே போதுமானது என்கிறது ஆய்வு அதேசமயம், உறவுக்கு முந்தைய விளையாடல்கள், சீண்டல்கள் போன்றவற்றுக்கு இவ்வளவு நேரம்தான் என்று கணக்கில்லை. அது எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நீடிக்கலாம். ஆனால் உச்சகட்ட உறவுக்கு பத்து நிமிட அவகாசம் என்பது சரியானது, பொருத்தமானது, போதுமானது என்கிறது ஆய்வு முடிவு.

இரவு நீண்டிருந்தாலும், நம் உறவுக்கு தேவை சில நிமிடங்கள் மட்டுமே. இதை புரிந்து கொண்டு உறவில் இறங்கினால் குழப்பங்கள், கவலைகள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். உண்மையைப் புரிந்து கொண்டு எதார்த்தமாக உறவுக்குள் நுழைவதே மனதுக்கும், நமது உடலுக்கும், செக்ஸ் வாழ்க்கைக்கும் சிறந்தது என்கின்றனர் ஆய்வாளர்கள்

பகல் நேர குட்டித் தூக்கம் சுறுசுறுப்பாக்க வைக்க உதவும்!

பகலில் தூங்கினால் உடல் குண்டாகிவிடும், அது உடல் நலத்திற்கு தீங்கானது என்ற கருத்து நிலவுகிறது. வயிறு முட்ட உணவு உண்ட பின், கும்பகர்ணன் போல, அடித்தால் கூட எழுந்து கொள்ளாத அளவுக்குத் தூங்கினால்தான் ஆபத்து. ஆனால், குட்டித் தூக்கம் நல்லது என, கண்டறியப்பட்டுள்ளது.

நம் உடலே, தினமும் இரண்டு வேளைக்குத் தூங்கும் பழக்கம் கொண்டது தான். இரவு நேரத்தில், குறைந்தது ஆறு மணி நேரம் முதல் எட்டு மணி நேரம் வரை தூங்க வேண்டும். காலை முதல் மதியம் வரை, உடல் அல்லது மூளைக்குக் கடுமையான வேலை கொடுக்கும்போது, சற்று நேரம் ஆசுவாசப்படுத்திக் கொள்வது போல், மூளையோ, உடலோ தானாகவே ஓய்வு கேட்கும்.

அந்த நேரத்தில், வேலைகளை உடனே நிறுத்தி விட்டு, எல்லாவற்றையும் மறந்து, அரை மணி நேரம் கண்ணயர்ந்து விட்டால், உடலும், மூளையும் மீண்டும் சுறுசுறுப்பாகி விடுகின்றன என, மருத்துவர்கள் கூறுகின்றனர். பகல் நேரத்தில் தூங்கினால் மூளையின் செயல்பாடு அதிகரிப்பதாக கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.பெர்கலியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் 39 பேரிடம் மேற்கொண்ட ஆய்வில் பகல் தூக்கத்தினால் மூளை செயல்பாடு அதிகரித்து அறிவுத்திறன் வளரும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 39 பேரை இரவு நேரத்தில் நன்றாக தூங்கவைத்து பகல் நேரத்தில் நீண்ட நேரம் படிக்கவைத்தனர். அதே நேரத்தில் சுமார் 20 பேரை பகலில் 90 நிமிடம் மட்டும் சிறிய அளவில் உறங்கவைத்தனர். இவர்களின் செயல்திறன் பின்னர் பரிசோதிக்கப்பட்டது. இதில், இரவில் மட்டுமே தூங்கியவர்களை விட, பகலில் சிறிது நேரம் தூங்கியவர்களின் மூளைசெயல்பாட்டு திறன் அதிகரித்து காணப்பட்டது. இந்த சோதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட போதிலும் இதே முடிவுதான் கிடைத்தது.

இதயத்தை காக்கும்: பகல் நேரத்தில் தூங்குவது இதயத்துக்கு நல்லது என்றும் சமீபத்திய ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. பென்சில்வேனியா நகரில் உள்ள ஒரு கல்லூரியில் பணியாற்றும் ரியான் பிரின்டில், சாரா காங்கிளின் ஆகியோர் 85 மாணவர்களிடம் மேற்கொண்ட ஆய்வில் இதனை கண்டறிந்துள்ளனர். மாணவர்களில் ஒரு பாதியினரை பகலில் ஒரு மணிநேரம் தூங்கும்படியும், இன்னொரு பகுதியினரை பகலில் தூங்காமல் இருக்கும்படியும் செய்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் முடிவில் பகலில் ஒரு மணிநேரம் தூங்கினால் ரத்தம் அழுத்தம் குறைவது கண்டறியப்பட்டது. இதன் மூலம் பகலில் தூங்குவதன் மூலம் இதயநோய் தாக்குவது தடுக்கப்படுகிறது என்பது இதன் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

அரை மணி நேரத் தூக்கம், ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் என நீடித்தால், அவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம்.

ஓமத் திரவம்!

ஓமம் சித்த ஆயுர்வேத மருந்துகளில் அதிகம் இடம்பெறுகிறது. இது இந்தியா முழுவதும் பயிரிடப்படுகின்ற ஒரு செடி வகை ஆகும். இதை வாயில் போட்டால் சற்று காரமாக சுறுசுறுவென்று இருக்கும். நல்ல மணமாக இருக்கும். இது ரொட்டி மற்றும் கேக் தயாரித்தலில் பயன்படுத்தப்படுகிறது. மதுபான வகைகளை மணமூட்டப் கையாளப்படுகிறது. இதன் விதையே மருத்துவப் பயன் கொண்டது.

ஓமத்தில் அடங்கியுள்ள சத்துக்கள்: ஓமத்தில், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கரோட்டின், தையாமின், ரிபோபுளேவின் மற்றும் நியாசின் போன்றவை அடங்கியுள்ளன. ஓமத்தில் மூன்று வகைகள் உள்ளன. ஓமம், குரோசாணி ஓமம், அசம்தா ஓமம் ஆகும்.

மருத்துவ குணம் கொண்ட ஒமம்; இலைகளின் சாறு பூச்சிகளுக்கு எதிரான சக்தி கொண்டது. வேர்கள் ஜீரணச் சக்தி மற்றும் சிறுநீர்க் கழிப்பினைத் தூண்டும் திறன்படைத்தது. கனிகளில் இருந்து கார்வீன் மற்றும் கார்வால் ஆகிய பொருட்கள் எடுக்கப்படுகிறது. கனிகளில் இருந்து வடிக்கப்படும் நீர் வயிற்றுப் போக்கினைக் கட்டுப்படுத்துகிறது. ஜீரணத்தையும் வயிற்று உப்புசத்தையும் குணப்படுத்துகிறது. குழந்தைகளின் குடல்வலி, வயிற்றுக் கோளாறுகளுக்கு தக்க மருந்தாகும். சுவாசக் குழாய் தொடர்பான நோய்கள், குடிப்பழக்கத்திற்கான அடிமைத்தனம், மனநோய், போன்றவற்றுக்கு மருந்தாக உதவுகிறது.

வயிற்றுப் பொருமல் நீங்க; சீதளத்தால் உண்டாகும் சுரம், இருமல், செரிமானம் சரியாக இல்லாதது, வயிற்று பொருமல் பேதி, குடலிரைச்சல், பல் சம்மந்தமான நோய்கள், இரைப்பு நோய் (ஆஸ்துமா) ஆசனவாய் நோய்கள் இவைகளை ஓமம் போக்கும்.

இன்று கூட நம் கிராமங்களில் சிறு குழந்தைகளுக்கு வயிறு வலித்து அழும்போது ஓமத் திரவம் கொடுப்பார்கள். இந்த ஓமத் திரவம் ஓமத்தை காய்ச்சி எடுக்கப்படுவது. இது குழந்தைகளுக்கு ஏற்படும் வயிறு மந்தம் தொடர்பான நோயை போக்கும் தன்மை கொண்டது.

பொதுவாக மந்தமானது சிறு குழந்தை களுக்குத்தான் ஏற்படும். மந்தம் இருந்தால் உடல் சோர்வுற்று, அஜீரணக் கோளாறு உண்டாகும். இத்தகைய மந்தத்தைப் போக்க ஓமம், சுக்கு, சித்திரமூல வேர்ப்பட்டை, இம்மூன்றும் சமபங்கு எடுத்து ஒன்றாக சேர்த்து பொடித்து அதனுடன் கடுக்காய் பொடி சேர்த்து அதில் சிறிதளவு எடுத்து மோரில் கலந்து கொடுத்தால் மந்தம் நீங்கும்.

ஓமத்திரவகம்: ஓமத்திராவகம் என்ற மாபெரும் மருந்து ஆதிகாலம் தொட்டு இன்றுவரை இருந்து வருகிறது. குழந்தைகளின் சர்வரோக நிவாரணியே ஓமத் திராவகம்தான். ஓமத்திராவகம் வீட்டில் இருந்தால் சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை வயிறு உபாதையின்றி வாழலாம்.

சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் 100 கிராம் ஓமத்தை 1 லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அது பாதியாக வந்தவுடன் எடுத்து அருந்தினால் மேற்கண்ட அனைத்தும் தீரும். உடல் பலம் பெற: உடல் சோர்வை போக்குவதில் ஓமம் சிறந்த மருந்தாகும். ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் பலம்பெறும்.

சிலருக்கு தொண்டையில் புகைச்சல் ஏற்பட்டு இருமல் வரும். இவர்கள் ஓமம், கடுக்காய் தோல், முக்கடுகு, சித்தரத்தை, அக்கிரகாரம், திப்பிலி வேர் இவைகளின் பொடியை சம அளவு எடுத்து அதனுடன் சரிபாதி பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை கொடுத்து வந்தால் தொண்டை புகைச்சல் மற்றும் இருமல் நீங்கும் .

பசியைத் தூண்ட: நல்ல தூக்கமும், நல்ல பசியும் தான் ஆரோக்கிய மனிதனுக்கு அடையாளம். இந்த பசியும், தூக்கமும் பறந்துபோனால் நோய்களின் கூடாரமாக உடல் மாறி, அதனால் மனமும் பாதிக்கப்படும். பசியைத் தூண்டி உண்ட உணவு எளிதில் சீரணமாகவும், வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகள் தீரவும், ஓமத்தை கஷாயமாக்கி அருந்திவருவது நல்லது.

ஓமத்தை பொடித்து உச்சந்தலையில் வைத்து தேய்த்தால் ஜலதோஷம் குறையும். ஓமப்பொடியை துணியில் கட்டி நுகர்ந்தால் மூக்கடைப்பு நீங்கும். சுவாசக்கோளறுகள், இருமல் போன்ற நோய்களை சீர்படுத்த ஓமம் சிறந்த மருந்தாகும். மேலும் குடலிரைச்சல், இரைப்பு, பல்நோய் போன்றவற்றையும் ஓமம் குணப்படுத்துகிறது.

உறவுகளை மதித்தால் பிரிவுகள் இல்லை!

அன்பு என்ற வார்த்தைக்கு நிகரேது. அதனால்தான் அன்பின் பெருமையை எடுத்துக்கூறும் விதமாக திருவள்ளுவர் அன்புடைமை பற்றி தனி அதிகாரமே எழுதியுள்ளார். அன்பில் இடைவெளி விழுவதால்தான் கணவன் மனைவி இடையே பிரிவினை ஏற்படுகிறது. பந்தங்கள் பலவீனமடைகின்றன. அதனை அன்பின் மூலமாக மட்டுமே சரி செய்ய முடியும். பிறருக்காக இரக்கப்படுவது மட்டும் அன்பாகி விடாது. தன்னை நேசிக்கத் தெரிந்தவர்களால் மட்டுமே மற்றவரை நேசிக்க முடியும் என்று தெரிவித்துள்ளனர் அறிஞர்கள்.

தூய அன்புடன் உணர்வுப்பூர்வமான உறவை உருவாக்க அன்புகாட்டுதல், அக்கறை கொள்ளல், புரிந்து கொள்ளல், மதித்தல், பாராட்டுதல், ஏற்றுக்கொள்ளல், நம்பிக்கை வைத்தல் போன்ற 7 பண்புகள் வேண்டும் என்கிறார் ஜான்கிரே.

அன்பிலும் பல வகை இருக்கிறது. நட்பு, காதல் சார்ந்த அன்பு இருக்கிறது. என்னுடையது விட்டுத்தரமாட்டேன் என்பது வெறித்தனமான அன்பு. அதனை பொஸசிவ்னஸ் என்றும் கூறலாம். ஒரே பின்னணி பார்த்து வருவது செயல்பூர்வமான அன்பு. தியாகம் செய்வது தன்னலமற்ற அன்பாகும். அன்பு என்பது ஒன்றிணைக்கும் மனோபாவம். இரண்டு தனித்தீவுகளை இணைக்கும் உறவுப்பாலம். பயமுறுத்தினாலும் பணியாது அன்பு. சிறைப்படுத்தினாலும் இணங்காது, துக்கத்தை வெல்லும் தன்மையுடையது அன்பு.

அன்பின் சிகரம்: அக்கறை செலுத்துவது என்பது அன்பின் மற்றொரு படிநிலை. சின்னச் சின்னத் தேவைகளிலும் ஆழமான கவனம் செலுத்தி அவற்றை நிறைவேற்ற உதவுவதே அக்கறையாகும். மற்றவர்களின் முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்தி, சோகத்திலும் உடனிருப்பது அவர்களுக்கு உங்கள் ஆதரவை எப்போதும் தருவது அக்கறை மிகுந்த அன்பாகும். எவர் ஒருவர் நேசிப்பவருக்காக மட்டுமல்லாது வெறுப்பவர் மீதும் அக்கறையை செலுத்துகின்றனரோ அவரே அன்பின் சிகரமாவார்.

மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்: புரிதல் இல்லாதவர்கள் சேர்ந்து வாழவே முடியாது. துணைவர் மற்றும் மற்றவர்களின் உரிமைகள், ஆசைகள், தேவைகளை அறிந்து நடப்பதும், அவற்றை மதித்து அவருக்கு உதவுவதுமே புரிந்து கொள்ளல் ஆகும். புரிந்து கொள்ளுதல் இல்லாததால் எத்தனையோ குடும்ப உறவுகள் சிதைந்திருக்கின்றன. மற்றவர் உங்களை புரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணுவதற்குப் பதிலாக முதலில் நீங்கள் மற்றவரை புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். மனைவி கணவரை மதிப்பதுபோலவே கணவரும் மனைவியை மதித்தால் குடும்பத்தில் பிரச்சினையே இல்லை.

அன்பெனும் ஆயுள் காப்பீடு: பாராட்டு தொடரும்போது அன்பு இன்னும் ஆழமாகிறது. புகழ்வதெல்லாம் பாராட்டாகிவிட முடியாது. இயல்பை விளக்கி, முழுமையை அங்கீகரிப்பதே பாராட்டாகும் என்பதை மறந்துவிடாதீர்கள். பாராட்டுவதால் மனித மனம் மகிழ்வுறுகிறது. ஒருவரின் முயற்சிகள் அல்லது நடத்தையை அங்கீகரித்து பாராட்டுவது அவருக்கு ஊக்கத்தைத் தருகிறது. ஒருவரை ஊக்குவிப்பது இணக்கம் அதிகமாகும். பாராட்டுகளை ஆயுள் காப்பீடுபோல அவ்வப்போது புதுப்பித்து வாருங்கள். உறவு பலப்படும்.

நம்பிக்கையே வாழ்க்கை: நம்பிக்கை என்பது அன்பின் பரிசாகும். நம்புதல் ஏற்படும்போது அன்பு தானாக மலர்ந்துவிடும். நேர்மை, ஒழுக்கம், உண்மையாயிருத்தல் போன்றவை மற்றவர்க்கு நம்மீது நம்பிக்கை ஏற்படுத்தும் பண்புகளாகும். கணவரின் நடத்தையை நம்பி ஏற்றுக்கொள்ளும்போது சந்தேகப் பேய் ஒழிந்து குடும்பத்தில் சந்தோஷம் கூடுகிறது.

ஒருவரை புரிந்து கொண்டு அப்படியே ஏற்றுக் கொள்வது உண்மையான அன்பாகும். ஏற்றுக் கொள்ளல் என்பது தவறுகள் உள்ளிட்ட எல்லாவற்றையும் அனுமதித்தலை குறிப்பதல்ல. குறைகளை மன்னிப்பதாகும். குறைகூறுவதை கைவிடுங்கள், கோபத்தோடு படுக்கச் செல்ல வேண்டாம். மன்னியுங்கள். மன்னிப்புக் கேளுங்கள். மகிழ்ச்சி பெருகும்.

உறவின் முதலீடு: கணவன் மனைவி அன்புறவு நீடிக்கவேண்டு மெனில் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் `நான் உன்னை நேசிக்கிறேன்’ என்று கூறுங்கள். வரவேற்கவும், விடைபெறவும், நன்றி கூறவும் அன்புத் தழுவலை கொடுங்கள். அன்புடன் அணைத்தல் என்பது உறவின் முதலீடு, பிரிவின் தடுப்புக்கோடு.

நல்ல துணைவரைத் தேடுவதைப்போலவே நல்ல துணைவராக இருப்பது மிகவும் நல்லது. கருத்து வேறுபாடு ஒருவர் மற்றவரை சாதாரணமாக எடைபோட வைக்கும். இந்த முரண்பாட்டை முரட்டு வார்த்தைகளால் வெளிப்படுத்தாதீர்கள்.

அகந்தையும், மற்றவரின் உதவாத அறிவுரைகளும் தம்பதிகளுக்குள் குழப்பத்தை உண்டு பண்ணும். உயர்விலும், தாழ்விலும், சுகத்திலும், துக்கத்திலும் காதலில் மகிழ்ந்திருந்தால் இல்லறம் நல்லறமாகும்.

தனி ஈழத்தை அடைவதற்காக எம்.பி. பதவியைத் துறக்கத் தயார்?

தனி ஈழமே ஈழத் தமிழ் மக்களின் ஒரே தீர்வு. அந்தத் தீர்வை அடைவதற்காக எனது எம்.பி. பதவியையும் துறக்கத் தயார் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். தனி ஈழமே தீர்வு என்ற தலைப்பில் சென்னையில் இன்று கருத்தரங்கம் நடந்தது. இலங்கைத் தமிழ் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடந்த கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் சில காலம், இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்துப் பேசாமல் இருந்து வந்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டார். பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் திருமாவளவன் பேசுகையில், தமிழ் ஈழமே தீர்வு என்று இந்த நேரத்தில் நாம் உரக்க முழங்குவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. தமிழ் ஈழத்தைப் பற்றி யாரும் பேசமாட்டார்கள். தமிழ் ஈழ கோரிக்கையை யாரும் முன் வைக்க மாட்டார்கள்.

ஏதேனும் ஒரு தீர்வை சொன்னால் அதை ஒப்புக்கொண்டு அங்கே உள்ளவர்கள் அடிபணிந்து கிடப்பார்கள் என்கிற மமதை சிங்கள இனவெறி ஆட்சியாளர்களிடம் உருவாகியிருக்கிறது. அவர்களின் ஆணவத்திற்கு, மமதைக்கு சம்மட்டி அடி கொடுக்கிற வகையில் இந்த கருத்தரங்கம் நடைபெறுகிறது.

தமிழர்களின் துயரத்திற்கு தமிழ் ஈழம் அமைந்தால் தான் தீர்வு கிடைக்கும். பல ஆயிரம் தமிழர்களை ரத்த வெள்ளத்தில் கொன்று குவித்த ராஜபக்சே கும்பல் மீது போர்க் குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். காங்கிரஸ், பாஜக என மத்தியில் ஆட்சிக்கு வந்த எந்தக் கட்சியும் தமிழ் ஈழம் அமைவதை விரும்பவில்லை.

தனி ஈழமே தீர்வு என்று கூறி தமிழக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தால் அதை ஆதரிப்போம். தனித் தமிழ் ஈழத்திற்காக எனது எம்.பி. பதவியையும் கூட துறக்கத் தயாராக இருக்கிறேன். தமிழ் ஈழத்தை அடைய வேண்டும் என்பதற்காகவே பாமகவுடன் கை கோர்த்துள்ளேன். இந்தக் கோரிக்கைக்காக நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம் என்றார்.

கேட்-2011 தேர்வு!


இந்திய ஐ.ஐ.எம்-கள் நடத்தும் 2011ம் ஆண்டுக்கான கேட் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 22ம் தேதி தொடங்கி, நவம்பர் 18 வரை அந்தத் தேர்வு நடத்தப்பட உள்ளது.திருச்சிராப்பள்ளி, அகமதாபாத், பெங்களூர், கொல்கத்தா, இந்தூர், காஷிப்பூர், லக்னோ, ராய்ப்பூர், ராஞ்சி, ரோடாக், ஷில்லாங், உதய்ப்பூர் மற்றும் கோழிக்கோடு போன்ற மொத்தம் 13 இடங்களிலுள்ள IIM-களில் முதுநிலை மேலாண்மை படிப்புகளுக்கு மாணவர்களைச் சேர்க்க இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.

தகுதி நிலைகள்
இந்தத் தேர்வெழுத, இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் பல்கலைக்கழகத்திலிருந்து 50% மதிப்பெண்களுடன் ஏதேனும் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதேசமயம், SC/ST, மாற்றுத் திறனாளிகள், PWD வகை மாணவர்கள் இளநிலைப் படிப்பில் 45% மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதும். இதைத் தவிர்த்து, மதிப்பெண்களுக்கு பதில் இளநிலைப் படிப்பில் கிரேடு பெற்றிருந்தால், அது மதிப்பெண்கள் அடிப்படையில் கணக்கிடப்படும். மேலும், இளநிலை இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும், இறுதியாண்டு தேர்வு முடிவுகளுக்காக காத்திருக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.

இந்த முறையில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள், தற்காலிகமாக சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். அதேசமயம், அவர்கள், தங்களது கல்வி நிறுவனத்தின் முதல்வர் அல்லது பதிவாளரிடமிருந்து ஜுன் 30, 2012 அல்லது அதற்கு முன்பாக வழங்கப்பட்ட சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இந்த சான்றிதழின்படி, இளநிலைப் படிப்பை முடிப்பதற்கான அனைத்துவித செயல்பாடுகளையும் ஒரு மாணவர் முடித்திருக்க வேண்டும். அப்போதுதான், ஒரு மாணவர் அல்லது மாணவி தற்காலிக சேர்க்கைப் பெற முடியும்.

மேலும், வெறுமனே குறைந்தபட்ச தகுதி மட்டுமே ஒருவருக்கு IIM-இல் இடம்பெற்று தந்துவிடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தேர்ந்தெடுக்கப்படக்கூடிய வாய்ப்புள்ள மாணவர்கள், தேர்வு நடைமுறைகள் முடியும் வரை நிலையான E-mail முகவரியையும், தொலைபேசி அல்லது மொபைல் எண்ணையும் பராமரிக்க வேண்டும்.

இடஒதுக்கீடு
இந்திய அரசின் சட்டப்படி, IIM-களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடங்களும், தாழ்த்தப்பட்டவர்களுக்கு 15% இடங்களும், பழங்குடியினருக்கு 7.5% இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கு 3% இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேற்கண்ட ஒதுக்கீட்டுப் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள், அதைக் குறிப்பிட வேண்டும் மற்றும் விண்ணப்பிக்கும் முன்பாக தகுதி விதிமுறைகளைப் பற்றி முழுமையாகப் படிக்க வேண்டும்.

வவுச்சர் CAT-2011
CAT-2011 தேர்வுக்கான வவுச்சர்கள்(Voucher), அக்சிஸ் வங்கியின் கிளைகளில், ஆகஸ்ட் 17 முதல் செப்டம்பர் 26 வரை கிடைக்கும். இதன் விலை ரூ.1600. SC/ST பிரிவு மாணவர்களுக்கு ரூ.800. இந்த அக்சிஸ் வங்கிக் கிளைகளை பற்றிய விபரம் அறிய www.catiim.in என்ற இணையதளம் செல்லவும். ஒரு மாணவர், அவர் எத்தனை கல்வி நிறுவனங்களுக்கு விண்ணப்பித்தாலும், ஒரே ஒரு வவுச்சர் மட்டுமே வாங்க வேண்டும். மேலும் வவுச்சரை குறிப்பிட்ட மாணவரின் பெயரில்தான்(பள்ளி சான்றிதழில் இருப்பது பிரகாரம்) வாங்க வேண்டும்.
வவுச்சரை வாங்கியப் பிறகு, www.catiim.in என்ற இணையதளம் சென்று, CAT-2011 தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும். பதிவு விண்டோ(Window), ஆகஸ்ட் 17ம் தேதி திறக்கப்படும் மற்றும் செப்டம்பர் 28ம் தேதி மூடப்படும். பதிவைப் பற்றிய முழு விபரங்களும் www.catiim.in என்ற இணையதளத்திலேயே கிடைக்கும். மேலும் CAT-2011 தொடர்பான வீடியோவையும் அந்த இணையதளத்தில் ஆகஸ்ட் 15 முதல் பார்க்கலாம். இந்தியா முழுவதும் 36 மையங்களில் கேட் தேர்வு நடைபெறுகிறது. எந்த மையத்தையும் ரத்து செய்யவோ அல்லது மாற்றவோ IIM-களுக்கு உரிமை உண்டு.
திவுசெய்தல்: 
தேர்வெழுதியவர்கள், www.catiim.in என்ற இணையதளத்திலேயே 2012 ஜனவரி 11 முதல் மதிப்பெண் அட்டையைப்(Score card) பெறலாம். மேலும், அதை பிரிண்ட் எடுத்துக் கொள்ளும் வசதியும் உண்டு. இந்த மதிப்பெண் அட்டையானது, 2012, டிசம்பர் 31வரை மதிக்கத்தக்கது. அதற்குமேல் அதற்கு மதிப்பில்லை.
மதிப்பெண் விபரங்கள்: 
இந்த CAT-2011 தேர்வு மற்றும் அதன் விண்ணப்ப விதிமுறைகள் மற்றும் நடைமுறைகள் குறித்த அனைத்து விபரங்களையும் தெளிவாக அறிந்துகொள்ள www.catiim.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் செல்லவும். 

அமெரிக்காவில் அடி... இந்தியாவில் வலி... அதிர்ந்தது உலக பங்கு வர்த்தகம் : சேதுராமன் சாத்தப்பன்!

தென்னை மரத்தில் தேள் கொட்டினால், பனை மரத்தில் நெரிகட்டும்' என ஒரு பழமொழி உண்டு. இது எதற்காக சொல்லப்பட்டது என்ற ஆய்வில் நாம் ஈடுபடாமல், எங்கோ நடக்கும் ஒரு செயல், மற்ற இடங்களை எந்த அளவிற்கு பாதிக்கிறது என்பதை மட்டும் இதன் மூலம் அறியலாம். இதற்கு எடுத்துக்காட்டாக, உலக பங்குச் சந்தை நிலவரம் உள்ளது.
சென்ற வெள்ளியன்று, ஐரோப்பா மற்றும் இதர ஆசிய பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவு நிலை, அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது.
அமெரிக்காவின் பொருளாதாரம், கடுமையாக சரிவடையும் என்ற அச்சப்பாட்டால், கடந்த வியாழக்கிழமையன்று அந்நாட்டின் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் வீழ்ச்சி கண்டது.


இதனை தொடர்ந்து, வெள்ளியன்று நமக்கு முன்பாக, வர்த்தகம் தொடங்கப்பட்ட ஜப்பான், தென்கொரியா, ஹாங்காங் உள்ளிட்ட பல நாடுகளில் பங்கு வர்த்தகம் பாதிப்புக்குள்ளானது. இந்த சுனாமியின் தாக்கம், இந்திய பங்குச் சந்தைகளிலும் அதிர்வை அளித்தது. இதனால், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'சென்செக்ஸ்' வர்த்தகத்தினிடையே 702 புள்ளிகள் வரை சரிவடைந்து போனது. இது, 25 மாதங்களில் இல்லாத அதிகபட்ச குறைந்த அளவாகும்.இந்நிலையில், மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான துறையின் செயலர், நம்நாட்டின் பொருளாதாரம் வலுவாகவே உள்ளது. சந்தையில் சரிவு நிலை என்பது இதர நாடுகளின் தாக்கத்தால் ஏற்பட்டுள்ளது என்று அறிவித்தார். இதையடுத்து, 'சென்செக்ஸ்' மற்றும் 'நிப்டி' ஆகிய குறியீட்டு எண்கள் அதிக சரிவிலிருந்து மீண்டன.


வெள்ளியன்று இறுதியாக, மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 387 புள்ளிகள் சரிவடைந்து, 17,305 புள்ளிகளிலும்,'நிப்டி' 121 புள்ளிகள் வீழ்ச்சியுடன் 5,5211 புள்ளிகளிலும் நிலை கொண்டன.ஏன் இந்த அளவிற்கு வீழ்ச்சி கண்டது? அமெரிக்க பொருளாதாரத்தில் பின்னடைவு ஏற்படும் என்ற அச்சப்பாடு ஒரு புறம் இருக்க, ஐரோப்பா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் ஏற்பட்டுள்ள சிக்கல்களும், எரியும் தீயில் எண்ணெய் ஊற்றியது போலானது. இந்த பொருளாதார சரிவு நிலை, சீனாவின் பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சப்பாடு உள்ளது.அமெரிக்க பங்குச் சந்தைகளின் நிலவரத்தால், நம்நாட்டின் தகவல் தொழில்நுட்ப துறைதான் அதிகம் பாதிப்புக்குள்ளானது. வெள்ளியன்று இத்துறைக்கான குறியீட்டு எண் 3.9 சதவீதம் என்ற அளவில் சரிவடைந்திருந்தது.


மேலும், கட்டுமான துறை (3.1 சதவீதம்), மின்சாரம் (3.1 சதவீதம்) ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலையும் குறைந்து போயின. உலக நிலவரம்: சென்ற வாரம் மட்டும், உலக பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட சரிவு நிலையால், உலகளவில், நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு 2.50 லட்சம் கோடி அளவிற்கு இழப்பை கண்டன. இத்தொகை, அமெரிக்கா வரும் பத்து வருடங்களில், அரசு செலவுகளை குறைக்க வேண்டும் என்று மதிப்பிட்ட அளவாகும்.


கச்சா எண்ணெய்: மிகப்பெரிய சரிவு நிலையில், கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவது மட்டும்தான் தற்போது ஆறுதல் அளிக்கும் செய்தியாக உள்ளது. நடப்பு வாரத்தில் மட்டும் இதன் விலை, 11 சதவீதம் குறைந்துள்ளது. நம்நாடு, மொத்த பெட்ரோலிய பொருள்களுக்கான தேவையில், 80 சதவீதத்தை இறக்குமதி செய்து கொள்கிறது. இதன் மதிப்பு, 4.50 லட்சம் கோடி ரூபாயாகும். தற்போது, கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது. அதற்கேற்ப பெட்ரோல் டீசல் விலையை குறைத்தால், அது உள்நாட்டில் பணவீக்கத்தை வெகுவாக குறைப்பதுடன், பங்கு வர்த்தகத்தில் முன்னேற்றம் ஏற்படவும் வழிவகுக்கும்.புதிய வெளியீடுகள்: அண்மையில், பொதுமக்களுக்கு பங்குகளை வெளியிட்டு மூலதனச் சந்தையில் களமிறங்கிய, எல் அண்டு டி பைனான்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் பங்குகள் வரும் 10ம் தேதி பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சந்தை நிலவரம் நன்கு இல்லை என்றாலும், சரியாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், இதன் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்களுக்கு லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.இன்வென்சர்ஸ் குரோத் நிறுவனத்தின் பங்குகள் இவ்வாரம், பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டன. தொடக்கத்தில், 117 ரூபாய்க்கு, விலை போன இதன் பங்கு ஒன்று, பின்பு 225 ரூபாய் வரை சென்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.என்ன பங்குகள் வாங்கலாம்? இப்பகுதியில், வாங்குவதற்கு சிறந்தவை என பல நிறுவனங்கள் குறித்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆனால், தற்போதைய சந்தை நிலவரத்தால், இவற்றின் பங்குகளின் விலை,வாங்கிய தொகையை விட குறைந்திருக்க கூடும். இது குறித்து அச்சப்படாமல், அந்நிறுவனப் பங்குகளை மேலும், சிறிதளவு வாங்கி உங்கள் தொகுப்பில் வைத்துக் கொள்ளலாம். அது நீண்ட கால அடிப்படையில் பயனளிக்கும். தற்போதைய நிலையில், ஜெயின் இரிகேஷன்ஸ், ஆஸ்ட்ரால் பாலிடெக்னிக், எலிகான் இன்ஜினியரிங் போன்ற நிறுவனங்களின் பங்குகளை வாங்கலாம்.


வரும் வாரம் எப்படி இருக்கும்? ஸ்டாண்டர்ட் அண்டு புவர் நிறுவனம், அமெரிக்கா குறித்த தரக்குறியீட்டை 'ஏஏஏ' என்ற அளவிலிருந்து, 'ஏஏ+' ஆக குறைத்துள்ளது. ஆனால் குறைந்த கால அடிப்படையிலான தரக்குறியீட்டை மாற்றவில்லை. இது, பங்கு சந்தைகளை, வரும் திங்களன்று எப்படி பாதிக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
திங்களன்று நமக்கு முன்பு வர்த்தகம் தொடங்கும், இதர ஆசிய பங்குச் சந்தைகளின் நிலவரத்தை பொறுத்தே, நம்நாட்டின் பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் இருக்கும். 

தமிழகத்தில் இதுவரை திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைத்ததற்கு, மக்களிடம் மன்னிப்பு!

திருவண்ணாமலையில் பா.ம.க., மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: இனி வரும் காலங்களில், திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைப்பது கிடையாது என்ற நல்ல முடிவு எடுக்கப்பட்டுள்ளது, இதில், பா.ம.க., கடைசி வரை உறுதியாக இருக்கும். ஓட்டுக்காக இலவசங்களை கொடுத்து மக்களை உழைக்கச் செய்யாமல் சோம்பேறித்தனமாக்குவது போன்ற செயல்களில் ஆளும் கட்சி, ஆண்ட கட்சிகள் செய்து வருகின்றன. இதற்கெல்லாம் ஆண்ட கட்சி, ஆளும் கட்சி, மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வளவு மோசமான கட்சிகளிடம் பா.ம.க., இதுவரை கூட்டணி வைத்ததற்காக, பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் பா.ம.க., போட்டியிடும். அப்போது, பா.ம.க.,வினரிடையே கோஷ்டி மோதல் இருக்காமல் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறும் பணியில் ஈடுபட வேண்டும். இவ்வாறு ராமதாஸ் பேசினார்.

பின்னர் நிருபர்களிடம் ராமதாஸ் கூறியதாவது: சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று பா.ம.க., வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறது. பா.ம.க., இனி வரும் காலங்களில் திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்காது. பா.ம.க.,வுடன் ஒத்த கருத்துடைய கட்சிகளுடன், பா.ம.க.,வின் தலைமையின் கீழ் இணைந்து செயல்படும் கட்சிகளுடன் கூட்டணி வைக்கப்படும். தேசிய கட்சிகளுடன் கூட்டணி கிடையாது. வரும் உள்ளாட்சி தேர்தலில், பா.ம.க., தனித்து போட்டியிடும். இலங்கை தமிழர் பிரச்னையில் தனி ஈழமே தீர்வாக அமையும். உள்ளாட்சி தேர்தலுக்கு பின், மதுவை ஒழிக்க போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.

வெளிநாடுகளுக்கு ராஜபாளையம் நாய்கள்!


ராஜபாளையம் : வெளிநாடுகளுக்கு ராஜபாளையம் நாய்கள் செல்லும் நிலையில் , நாய்குட்டிகள் உற்பத்தியில் போலிகள் புகுந்துள்ளதால் இதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். உலகில் உள்ள 350 இன நாய்களில் இந்திய வகையில் 6 இனங்களே அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இதில் ராஜபாளையம், சிப்பிபாறை, கன்னி, கோம்பை என நான்கு இனங்கள் தென்தமிழகத்தை சேர்ந்தவை. வீட்டு உணவை சாப்பிட்டு வளர்பவை. இதற்கு வெளிநாட்டு நாய்களை போன்று எஜமான் விசுவாசம், கீழ்படிதல், நுகர்வு தன்மை, சுறுசுறுப்பு உண்டு. வீட்டு காவலுக்கு ராஜபாளையம் நாய்கள், வேட்டைக்காக சிப்பிபாறை, கோம்பை, கன்னி வகை நாய்கள் பயன்படுகின்றன.

எந்த இனத்தை சேர்ந்தவை நாய்குட்டி என சான்று வழங்கும் உலகளாவிய அமைப்பான "கென்னல் கிளப்' ராஜபாளையத்திலும் செயல்படுகிறது. இங்கு தென் தமிழகத்தை சேர்ந்த நாய்களுடன் வெளிநாட்டு நாய் வகைகளும் விற்பனை செய்யப்படுகின்றன. ராஜபாளையம் வகை நாய்கள், மக்களை கவர்ந்து உள்ளன. வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து மாதம் 100 நாய்களுக்கு ஆர்டர் வருகின்றன . இங்குள்ள பண்ணை மூலம் மாதம் 20 முதல் 25 நாய்களே கொடுக்க முடிகிறது. இதன் குட்டிகள் 4000 ரூபாய் முதல் 8000 வரை விலை போகின்றன.

ராஜபாளையத்தில் "கென்னல் கிளப்' அங்கீகாரம் இல்லாத சில பண்ணைகளும் உள்ளன. இங்கு குடிசை தொழில் போல் நாய்குட்டி உற்பத்தியும் மாறி வருவதால் சிலர் லாப நோக்குடன் , தெருநாய்களை கலந்து, கலப்பின குட்டிகள் உருவாக்குகின்றனர். இந்த கலப்பின குட்டிகளோ பார்வை கோளாறு, காது கேட்கும் தன்மை குறைவு போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றன. குட்டியாக இருக்கும்போது தெரியாத இந்த குறைகள், வளரும்போது தான் தெரிகிறது. இதில் ஏமாறும் பலரும் எங்கு புகார் செய்வது என தெரியாமல் உள்ளனர். ராஜபாளையம் வகை நாய்களுக்கு தேவை அதிகமாக இருப்பதால், இத்தொழிலை அரசு முறைப்படுத்தி, நாய் உற்பத்தியை பெருக்கலாம்.

ராஜபாளையம் கான்டம்: பிளேட் கென்னல் கிளப் நாய்பண்ணை உரிமையாளர் சுரேந்திரன்பாபு கூறியதாவது: ராஜபாளையம் வகை நாய்கள் அந்தந்த சீதோஷ்ண நிலைக்கு மாறும் தன்மை கொண்டவை. இதற்கு எதிர்ப்பு சக்தி அதிகம் உண்டு . ஜம்முவில் உள்ள பாராமுல்லா ராணுவ முகாம், அந்தமான் தீவிற்கு அனுப்பி உள்ளோம். வெளிநாட்டு மோகத்தால், நம்நாட்டு நாய்களுக்கு வாய்ப்பு இல்லாமல் இருந்த நிலையில், தற்போது கேரளாவில் வீடு, எஸ்டேட்களுக்கு இங்கிருந்து குட்டிகள் செல்கின்றன. ஆந்திரா, கர்நாடகாவிற்கும் குட்டி செல்கின்றன. இத்தொழிலை அரசு முறைப்படுத்தி, வங்கி கடனுக்கு ஏற்பாடு செய்தால், வேலை இல்லா இளைஞர்கள் பலர் இத்தொழிலில் ஈடுபடுவர், என்றார்.

இதே நாள்...


  • வங்காளப் பிரிவினை எதிர்ப்புப் போராட்டத்தின் போது முதல் இந்திய தேசியக் கொடி உருவாக்கப்பட்டு பார்சி பகான் சதுக்கத்தில் ஏற்றப்பட்டது(1906)
  •  இலங்கையில் சேமிப்பு வங்கி ஆரம்பிக்கப்பட்டது(1832)
  •  ஒன்டாரியாவிற்கும் நியூயார்க்கிற்கும் இடையே அமைதிப் பாலம் அமைக்கப்பட்டது(1927)
  •  திட்டப்படுத்தப்பட்ட முதலாவது கணிப்பானை ஐபிஎம் நிறுவனம் வெளியிட்டது(1944)
  •  வங்காள கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் இறந்த தினம்(1941)
  • LinkWithin

    Related Posts Plugin for WordPress, Blogger...