இந்திய ஐ.ஐ.எம்-கள் நடத்தும் 2011ம் ஆண்டுக்கான கேட் தேர்வு
அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 22ம் தேதி தொடங்கி, நவம்பர் 18 வரை அந்தத்
தேர்வு நடத்தப்பட உள்ளது.திருச்சிராப்பள்ளி,
அகமதாபாத், பெங்களூர், கொல்கத்தா, இந்தூர், காஷிப்பூர், லக்னோ, ராய்ப்பூர்,
ராஞ்சி, ரோடாக், ஷில்லாங், உதய்ப்பூர் மற்றும் கோழிக்கோடு போன்ற மொத்தம்
13 இடங்களிலுள்ள IIM-களில் முதுநிலை மேலாண்மை படிப்புகளுக்கு மாணவர்களைச்
சேர்க்க இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.
தகுதி நிலைகள்
இந்தத் தேர்வெழுத,
இந்தியாவில்
அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் பல்கலைக்கழகத்திலிருந்து 50% மதிப்பெண்களுடன்
ஏதேனும் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதேசமயம், SC/ST, மாற்றுத் திறனாளிகள், PWD வகை மாணவர்கள் இளநிலைப் படிப்பில் 45% மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதும். இதைத் தவிர்த்து,
மதிப்பெண்களுக்கு பதில் இளநிலைப் படிப்பில் கிரேடு பெற்றிருந்தால், அது
மதிப்பெண்கள் அடிப்படையில் கணக்கிடப்படும். மேலும், இளநிலை இறுதியாண்டு
படிக்கும் மாணவர்களும், இறுதியாண்டு தேர்வு முடிவுகளுக்காக காத்திருக்கும்
மாணவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.
இந்த முறையில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள், தற்காலிகமாக சேர்த்துக்
கொள்ளப்படுவார்கள். அதேசமயம், அவர்கள், தங்களது கல்வி நிறுவனத்தின்
முதல்வர் அல்லது பதிவாளரிடமிருந்து ஜுன் 30, 2012 அல்லது அதற்கு முன்பாக
வழங்கப்பட்ட சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இந்த சான்றிதழின்படி,
இளநிலைப் படிப்பை முடிப்பதற்கான அனைத்துவித செயல்பாடுகளையும் ஒரு மாணவர்
முடித்திருக்க வேண்டும். அப்போதுதான், ஒரு மாணவர் அல்லது மாணவி தற்காலிக
சேர்க்கைப் பெற முடியும்.
மேலும்,
வெறுமனே குறைந்தபட்ச தகுதி மட்டுமே ஒருவருக்கு IIM-இல்
இடம்பெற்று தந்துவிடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படக்கூடிய வாய்ப்புள்ள மாணவர்கள், தேர்வு நடைமுறைகள்
முடியும் வரை நிலையான E-mail முகவரியையும், தொலைபேசி அல்லது மொபைல் எண்ணையும் பராமரிக்க வேண்டும்.
இடஒதுக்கீடு
இந்திய அரசின் சட்டப்படி,
IIM-களில்
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடங்களும், தாழ்த்தப்பட்டவர்களுக்கு
15% இடங்களும், பழங்குடியினருக்கு 7.5% இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கு 3%
இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேற்கண்ட ஒதுக்கீட்டுப் பிரிவுகளைச் சேர்ந்த
மாணவர்கள், அதைக் குறிப்பிட வேண்டும் மற்றும் விண்ணப்பிக்கும் முன்பாக
தகுதி விதிமுறைகளைப் பற்றி முழுமையாகப் படிக்க வேண்டும்.
வவுச்சர் CAT-2011
CAT-2011 தேர்வுக்கான வவுச்சர்கள்(Voucher), அக்சிஸ் வங்கியின் கிளைகளில், ஆகஸ்ட் 17 முதல் செப்டம்பர் 26 வரை கிடைக்கும். இதன் விலை ரூ.1600. SC/ST பிரிவு மாணவர்களுக்கு ரூ.800. இந்த அக்சிஸ் வங்கிக் கிளைகளை பற்றிய விபரம் அறிய www.catiim.in என்ற
இணையதளம் செல்லவும். ஒரு மாணவர், அவர் எத்தனை கல்வி நிறுவனங்களுக்கு
விண்ணப்பித்தாலும், ஒரே ஒரு வவுச்சர் மட்டுமே வாங்க வேண்டும். மேலும் வவுச்சரை குறிப்பிட்ட மாணவரின் பெயரில்தான்(பள்ளி சான்றிதழில் இருப்பது பிரகாரம்) வாங்க வேண்டும்.
வவுச்சரை வாங்கியப் பிறகு, www.catiim.in என்ற இணையதளம் சென்று, CAT-2011 தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும். பதிவு விண்டோ(Window), ஆகஸ்ட் 17ம் தேதி திறக்கப்படும் மற்றும் செப்டம்பர் 28ம் தேதி மூடப்படும். பதிவைப் பற்றிய முழு விபரங்களும் www.catiim.in என்ற இணையதளத்திலேயே கிடைக்கும். மேலும் CAT-2011
தொடர்பான வீடியோவையும் அந்த இணையதளத்தில் ஆகஸ்ட் 15 முதல் பார்க்கலாம்.
இந்தியா முழுவதும் 36 மையங்களில் கேட் தேர்வு நடைபெறுகிறது. எந்த
மையத்தையும் ரத்து செய்யவோ அல்லது மாற்றவோ IIM-களுக்கு உரிமை உண்டு.
திவுசெய்தல்: தேர்வெழுதியவர்கள், www.catiim.in என்ற இணையதளத்திலேயே 2012 ஜனவரி 11 முதல் மதிப்பெண் அட்டையைப்(Score card)
பெறலாம். மேலும், அதை பிரிண்ட் எடுத்துக் கொள்ளும் வசதியும் உண்டு. இந்த
மதிப்பெண் அட்டையானது, 2012, டிசம்பர் 31வரை மதிக்கத்தக்கது. அதற்குமேல்
அதற்கு மதிப்பில்லை.
மதிப்பெண் விபரங்கள்:
இந்த CAT-2011 தேர்வு மற்றும் அதன் விண்ணப்ப விதிமுறைகள் மற்றும் நடைமுறைகள் குறித்த அனைத்து விபரங்களையும் தெளிவாக அறிந்துகொள்ள www.catiim.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் செல்லவும்.
No comments:
Post a Comment