உலகிலேயே மிகவும் ஸ்டைலான பெண்ணாக கத்தார் நாட்டு மன்னரின் மனைவி ஷீகா மொஸா
பிந்த் நாசர் தேர்வு செய்யபப்பட்டுள்ளார். வானிட்டிபேர் இந்த அறிவிப்பை
வெளியிட்டுள்ளது. சர்வதேச அளவில் புகழ் பெற்ற பேஷன் பத்திரிக்கைளில்
ஒன்று வானிட்டிபேர். இந்த இதழின் வாசகர்கள் சேர்ந்து உலகிலேயே மிகவும்
ஸ்டைலான பெண்ணாக மொஸாவைத் தேர்வு செய்துள்ளனர். இஸ்லாமிய உலகைச் சேர்ந்த ஒரு பெண் இந்தப் பெருமையைப் பெறுவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.
கத்தார் நாடு ஒரு இஸ்லாமிய நாடாக இருந்தபோதிலும், மொஸா, புர்க்கா அணிவது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் அழகழகான உடைகளையும், பேஷன் டிசைனர் உடைகளையும் அணிவது வழக்கம்.
அடிப்படை மற்றும் உயர் கல்விக்கான யுனெஸ்கோவின் நல்லெண்ணத் தூதுவராகவும் அவர் இருக்கிறார்.
உலக அளவில் சிறந்த முறையில் டிரஸ் செய்யும், ஸ்டைலான பெண்மணிகள் வரிசையில் அவருடன், பிரெஞ்சு அதிபரின் மனைவி கார்லா ப்ரூனி, மொனாக்கோ நாட்டு இளவரசி சார்லீன் ஆகியோரும் இணைந்து தேர்வாகியுள்ளனர். கடந்த 2009ம் ஆண்டு நடந்த ஒரு கருத்துக் கணிப்பிலும் மொஸாவின் பெயர் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment