திருமணமான பெண்களுக்கு பண்முகத்திறமை உண்டு. சிறந்த இல்லத்தரசியாகவும்,
கணவருக்கு சிறந்த மனைவியாகவும், குழந்தைகளுக்கு சிறந்த தாயாகவும் கடமையாற்ற
வேண்டும். இதில் சிக்கலான விசயம் கணவரிடம் சிறந்த மனைவி என்ற
பெயரெடுப்பதுதான். மனைவி என்பதை அதிகாரம் செய்யும் பதவியாக
எடுத்துக்கொண்டு கணவரை அடிமையாக நடத்துவபவர்களும் இருக்கத்தான்
செய்கின்றனர். மனைவியாக இருப்பதை விட கணவருக்கு நண்பியாக இருப்பதுதான்
சிறந்தது என்று உளவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். சிறந்த மனைவியாகயும்,
ஆலோசகராகவும் திகழ நினைப்பவர்களுக்கு உளவியல் நிபுணர்கள் தெரிவித்த சில
யோசனைகள்
மனைவி ஒரு மந்திரி: கணவரின் முதல்
ஆலோசகரும், விமர்ச்சகரும் மனைவிதான் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து
கொள்ளுங்கள். மனைவி ஒரு மந்திரி என்பதை அனைத்து சந்தர்ப்பத்திலும்
கணவருக்கு உணர்த்த வேண்டும். கணவரின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றுவதோடு
மட்டும் மனைவியின் கடமை முடிந்து விடுவதில்லை. தவறுகளை எடுத்துக்கூறி
திருத்துவதற்கும் உரிமை உண்டு.
புரிதல்தான் வாழ்க்கை; கணவன்
மனைவிக்கிடையே ஒரு சில நேரங்களில் கருத்து மோதல்கள் ஏற்படுவது இயல்பு.
ஆனால் அவற்றை சாதாரணமாக எடுத்துக்கொண்டு உடனடியாக தீர்ப்பதில் அக்கறை
எடுத்துக்கொள்ள வேண்டும். தேவையற்ற விவாதங்களை தவிர்த்தாலே குடும்பத்தில்
சிக்கல்கள் ஏற்படாது.
ஈகோவை துரத்துங்கள்: கணவரிடம்
பேசும்போது, வெளிப்படுத்தும் வார்த்தைகளில் அன்பும் கனிவும் மட்டுமே
இருக்கவேண்டும். அதிகாரமோ, ஆணவமோ தேவையில்லை. சிறு வார்த்தைக் கூட மனதளவில்
காயத்தை ஏற்படுத்தி விடும். நீங்கள் பேசும் வார்த்தைகள் எளிதாக உங்கள்
கணவரை சென்றடைந்து அதை செயல்படுத்தும் விதமாக அமைய வேண்டும். எந்த
சந்தர்ப்பத்திலும் ஈகோவை எட்டிப்பார்க்க விடாதீர்கள்.
கணவருக்கு மதிப்பு: எந்த
சந்தர்ப்பத்திலும் பிறரின் முன் கனவரை விமர்ச்சிக்க வேண்டாம்.
குழந்தைகளின் முன் கூட கணவரை விமர்ச்சிப்பது தவறான முன் உதாரணமாகிவிடும்.
கணவர் செய்வது தவறாகவே தெரிந்தாலும், தனியாக இருக்கும் சந்தர்ப்பங்களில்
பேசி அவரது தவறை புரிய வைக்க வேண்டும்.
மன உளைச்சலை தீர்க்கலாம்: எல்லா
நாட்களிலும் படுக்கையறையில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்ற அவசியம்
இல்லை. வேளைப்பளு, மன உளைச்சல் உள்ளிட்ட காரணங்களில் சில நாட்களில் செயல்பட
முடியாத நிலை ஏற்படாலாம். அன்றைய தினத்தில் கணவரை தொந்தரவு செய்வதை
விடுத்து அவரை உற்சாகமூட்டும் விளையாட்டுக்களின் ஈடுபடலாம். அது கணவரின் மன
உளைச்சலை போக்கி விடும்.
கணவர் என்பவர் காலம் முழுவதும் நம்முடன்
வரப்போகிறவர் என்ற எண்ணம் மனைவிக்கு இருக்க வேண்டும். வாழ்வின் சரிபாதி.
கணவரின் மதிப்பை உயர்த்துவது மனைவியின் கடமை. அசாதாரண சந்தர்ப்பங்களில்
கணவரின் நண்பர்கள் உங்கள் வீட்டிற்கு வர நேர்ந்தால் நீங்கள் நடந்து
கொள்ளும் விதம்தான் அவர்களிடம் மதிப்பை உயர்த்தும்.
ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
10 July, 2011
செக்ஸ் ஆசையை தூண்டும் ரெட் ஒயின்!
சிவப்பு ஒயின் குடிக்கும் பெண்களுக்கு செக்ஸ் ஆசை அதிகரிக்கும் என்று ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.
இத்தாலி நாட்டில் உள்ள ஃப்ளோரன்ஸ் பல்கலைக்கழக மருத்துவர்கள் பெண்களின் உணர்வுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த சோதனைக்காக 18 வயது முதல் 50 வயது வரை உடைய 800 பெண்களை தேர்வு செய்து மூன்று பிரிவுகளாக பிரித்து ஆய்வு மேற்கொண்டனர்.
முதல் வகை பெண்களுக்கு தினமும் 2 டம்ளர் மற்றும் அதற்கு மேல் சிவப்பு ஒயின் கொடுக்கப்பட்டது. இரண்டாவது வகை பெண்கள் தினமும் ஒரே ஒரு டம்ளர் சிவப்பு ஒயின் குடிக்க அனுமதிக்கப்பட்டனர்.
மூன்றாவது வகைப்பெண்கள் மது எதுவும் குடிக்காமல் இருந்தனர். சமீபத்தில் இந்த 3 வகை பெண்களிடம் 19 வகையான கேள்விகள் கேட்கப்பட்டன. இதன் மூலம் தினமும் 2 டம்ளர் சிவப்பு ஒயின் குடித்த பெண்கள் அதிக செக்ஸ் ஆசை கொண்டவர்களாக மாறி இருப்பது தெரிந்தது.
தினமும் ஒரு டம்ளர் சிவப்பு ஒயின் குடித்த பெண்கள் செக்ஸ் விஷயத்தில் ஓரளவு ஈடுபாட்டுடன் இருந்தனர். முழுமையான மதுவிலக்குடன் இருந்த பெண்களுக்கு செக்ஸ் ஆசை எழவில்லை என்பது தெரியவந்தது.
சிவப்பு ஒயின் குடித்தால் பெண்களுக்கு செக்ஸ் ஆசை அதிகரிக்கும் என்று நீண்டநாள் ஆய்வுக்குப்பிறகு முடிவுக்கு வந்துள்ளனர் ஆய்வாளர்கள்.
சிவப்பு ஒயின்கள் உடம்பில் ரத்த ஓட்டத்தை வழக்கத்தை விட அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது. இதுதான் செக்ஸ் ஆசையைத் தூண்டுவதாக அவர்கள் கண்டு பிடித்துள்ளனர். இது வெளிநாட்டில் நடைபெற்ற ஆராய்ச்சிதான். நம் நாட்டு பெண்களுக்கு இது எந்த அளவிற்கு ஒத்து வரும் என்பது தெரியவில்லை.

4 சிலிண்டருக்கு மேல் வாங்கினால், கேஸ் விலை ரூ.800!!
ஆண்டுக்கு 4 சமையல் கேஸ் சிலிண்டருக்கு மேல் வாங்குவோர், ஒவ்வொரு கூடுதல்
சிலிண்டருக்கும் இனி ரூ.800 விலை தர வேண்டும் என மத்திய அரசு முடிவு
செய்துள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர்கள் தற்போது சிலிண்டர்
ஒன்றுக்கு சென்னையில் ரூ.393.50 எனவும் மற்ற மாநிலங்களில் தூரத்தைப்
பொறுத்து சராசரியாக ரூ.400 எனவும் விற்கப்படுகிறது. இந்த கேஸ் சிலிண்டர்களை
3 வாரங்களுக்கு ஒரு முறை வாங்கிக் கொள்ளலாம்.கிராமங்களில் கூட கேஸ் சிலிண்டர்கள் புழக்கத்துக்கு வந்துவிட்டன.
சிலிண்டர் ரூ.800 மத்திய அரசு சமீபத்தில் கேஸ் சிலிண்டர் விலை உள்பட எரிபொருள்களின் விலையை உயர்த்தியது. ஆனாலும் இந்த எரி பொருட்களுக்கு மானியமாக மிகப்பெரிய தொகையை வழங்கி வருகிறது. 2009-10-ம் ஆண்டில் கியாஸ் சிலிண்டருக்கு மட்டும் மத்திய அரசு மானியமாக ரூ.12,000 கோடி வழங்கியுள்ளது. இது இந்த ஆண்டு மேலும் உயரும் என்றும் கூறப்படுகிறது. இந்த மானியத் தொகையை ஏழைகள் முதல் வசதி படைத்தவர்கள் வரை பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
எனவே இந்த மானியத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு ஒரு புதிய திட்டத்தை வகுத்துள்ளது. வருடத்திற்கு 4 கேஸ் சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலையில் (அதாவது சராசரி ரூ.400-க்கு) வழங்கப்படும். அதற்கு மேல் அந்த வருடத்தில் வாங்கும் கேஸ் சிலிண்டர்களின் விலை ரூ.800 ஆக இருக்கும். அதாவது மானியம் ஏதுமின்றி அன்றைய வெளிமார்க்கெட் விலையில் அந்த சிலிண்டர்கள் விற்கப்படும்.
ஏழைகளுக்கு உதவித்தொகை வறுமை கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கும் இதே முறை தான் கடைபிடிக்கப்படும். இதனால் அவர்களும் வருடத்திற்கு 4 சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலைக்கு வாங்க முடியும். அதற்கு மேல் ரூ.800 கொடுத்து தான் வாங்க வேண்டும். ஆனால் அவர்கள் கேஸ் இணைப்பு பெறுவதற்கு மட்டும் மத்திய அரசு ரூ.1400 உதவித் தொகையாக வழங்கும்.
வறுமை கோட்டுக்கு கீழே இருப்பவர்களுக்கு 4 சிலிண்டர் போதுமானது என்று பெட்ரோலிய இலாகா கருத்து தெரிவித்துள்ளது. காரணம் இவர்கள் ரேஷன் மூலம் மண்எண்ணெய் பெற்று வருகின்றனர். மேலும் மண்எண்ணெய், விறகு, சாணத்தில் இருந்து தயாராகும் வறட்டி போன்றவற்றை சமையலுக்கு பயன்படுத்தி வருவதாக அதிகாரிகள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
எதிர்ப்பு இருப்பதால் இத்திட்டம் அமலுக்கு வர சற்று காலதாமதம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. தேசிய திட்ட கமிஷன் குறைந்த பட்சம் ஆண்டுக்கு 6 சிலிண்டர் வழங்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளது.

சக்சேனா மீது பாய்கிறது குண்டர் சட்டம்?
சன் டி.வி. நிர்வாகி சக்சேனாவை குண்டர் தடுப்புச் சட்டத்தின்
கீழ் கைது செய்ய சென்னை மாநகர காவல்துறை தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
தீராத விளையாட்டுப் பிள்ளை திரைப்படத்தின் சேலம் பகுதி விநியோக உரிமையைத் தருவதாக சேலம் திரைப்பட விநியோகிஸ்தர் டி.எஸ்.செல்வராஜுடன் சன் டி.வி. தலைமை செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா ரூ.1.25 கோடிக்கு ஒப்பந்தம் செய்தாராம்.

ஆனால் ஒப்பந்தப்படி அந்தப் படத்தின் சேலம் பகுதி விநியோக உரிமத்தை
செல்வராஜுக்கு கொடுக்காமல், சக்சேனா நேரடியாக விநியோகம் செய்தாராம். இதனால் தான்
கொடுத்திருந்த ரூ.82.53 லட்சத்தை செல்வராஜ் திருப்பி கேட்டபோது சக்சேனா,
செல்வராஜுக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இது குறித்து கே.கே.நகர் காவல் நிலையத்தில் செல்வராஜ் புகார் செய்தார். புகாரின்பேரில் சக்சேனா மீது போலீஸôர் வழக்குப் பதிவு செய்து, அவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். அதையடுத்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சக்சேனாவை போலீஸôர் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள்கள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் மாநகர போலீஸôர் சக்சனோவை 2 நாள்கள் தங்களது காவலில் எடுத்து விசாரித்தனர். இதில் பல முக்கியத் தகவல்களைப் பெற்றதாக கூறப்படுகிறது. இதற்கிடையே சேலத்தைச் சேர்ந்த மற்றொரு விநியோகஸ்தர் சண்முகவேல் கொடுத்த புகாரின்பேரில், சக்சேனா, அவரது உதவியாளர் அய்யப்பன் ஆகியோர் மீது கொலை மிரட்டல் விடுத்தது, தாக்கியது என பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டது.
இந்நிலையில் கோவை, திருச்சி, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த திரையரங்கு உரிமையாளர்கள், சக்சேனா தங்களிடம் பண மோசடி செய்ததாக மாநகர காவல் ஆணையரிடம் புகார் கொடுத்தனர். இப் புகாரின் கீழ் நடவடிக்கை எடுக்க மாநகர காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் சக்சேனா மீது மேலும் ஒரு மோசடிப் புகார் வந்திருப்பதாகத் தெரிகிறது. இப் புகார் வழக்காக மாற்றப்படும் எனவும் கூறப்படுகிறது. ஏற்கனவே சக்சனோ மீது பெண்ணை மிரட்டிய வழக்கு, ஹோட்டலை தாக்கிய வழக்கு இருப்பதாக போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது. எனவே சக்சேனா மீது வந்திருக்கும் புகார்களின் அடிப்படையில் வழக்குப் பதியப்பட்டால், அவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதற்காக மாநகர காவல்துறை அதிகாரிகள் வழக்கை வலுப்படுத்துவதற்காக ஆவணங்களையும், சாட்சிகளையும் திரட்டி வருகின்றனராம்.

இன்றுடன் விடைபெற்றது "நியூஸ் ஆப் தி வோர்ல்ட்"
பிரிட்டனில் புகழ்பெற்ற "நியூஸ் ஆப் தி வோர்ல்ட்" பத்திரிகை இன்றுடன் தனது வெளியீட்டை நிறுத்திக் கொண்டது. ஞாயிற்றுக்கிழமைகளில்
வெளிவந்து கொண்டிருந்த இந்த பத்திரிகையின் கடைசி நாளான இன்று, முகப்புப்
பக்கத்தில் "நன்றி, விடைபெறுகிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.
பல்வேறு தரப்பினரின் தொலைபேசி பேச்சுகளை ஒட்டுக் கேட்டதாக அந்த பத்திரிகையில் பணியாற்றியவர்கள் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டது. இதையடுத்து, 168 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருந்த "நியூஸ் ஆப் தி வோர்ல்ட்" பத்திரிகையை மூடும் முடிவை அதன் உரிமையாளர் ஜேம்ஸ் முர்டோக் லண்டனில் வியாழக்கிழமை அறிவித்தார்.
இந்த பத்திரிகை, பிரிட்டனில் அதிகளவில்
விற்பனையாகி வந்தது. கடைசி நாள் வெளியீட்டில் கிடைக்கும் விளம்பர வருவாயை
தொண்டு நிறுவனங்களுக்கு வழங்குவதாக ஜேம்ஸ் முர்டோக் தெரிவித்துள்ளார்.
பல்வேறு தரப்பினரின் தொலைபேசி பேச்சுகளை ஒட்டுக் கேட்டதாக அந்த பத்திரிகையில் பணியாற்றியவர்கள் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டது. இதையடுத்து, 168 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருந்த "நியூஸ் ஆப் தி வோர்ல்ட்" பத்திரிகையை மூடும் முடிவை அதன் உரிமையாளர் ஜேம்ஸ் முர்டோக் லண்டனில் வியாழக்கிழமை அறிவித்தார்.
இதே நாள்...
நவகிரக தோஷத்தால் என்ன பாதிப்பு ஏற்படும்?
சூரியன் தோஷம் விலக ... உங்களுக்கு சூரியதோஷம் இருந்தால் என்ன பிரச்சனை வரும். அதற்கு என்ன பரிகாரம் என்பதை தெரிந்து கொள்வோம். சூரியன் பிதுர்காரகன். அதாவது தந்தைவழி உறவுகளின் அமைப்பில் சாதக பாதகங்களை ஏற்படுத்தக் கூடியவன். அரசு, அரசியல் துறை அமைப்புகள், ஆரோக்யம் இதற்கெல்லாமும் சூரியனோட அமைப்பே காரணம். உங்க ஜாதகப்படியோ அல்லது தசாபுக்திப்படியோ சூரியனோட அமைப்பு கெட்டிருந்தால், தந்தை வழி உறவுகளோடான ஒற்றுமை பாதிக்கப்படும். பூர்வீக சொத்தில் வில்லங்கம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் தலை, கண்கள், வயிறு, ரத்த மாறுபாடு, பித்தம் அதிகரிப்பு இப்படிப்பட்ட உபாதைகள் மாறி வரும். சட்டப்புறம்பான நபர்களால் மிரட்டல், அரசுவழி அனுமதிகள் கிடைப்பதில் தாமதம், சிலருக்குத் திருமண தாமதம் இப்படிப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் சூரியன் அமைப்பு சரியில்லையாதலால், அதாவது சூரியதோஷத்தால் வரும்.
சூரியதோஷத்தில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி? உங்களுக்கு சூரியதோஷம் இருந்தால், அடிக்கடி அனுமன் கோயிலுக்குப் போய் வழிபடுங்கள். தாமிரத்தால் செய்த இஷ்டதெய்வ டாலர் அல்லது அனுமன் டாலரை அணிந்து கொள்ளுங்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியோதயத்தின் போது உங்கள் வீட்டு பூஜையறையில் பசுநெய்தீபம் 5 அகலில் ஏற்றிவைத்து வழிபடுங்கள். பசுமாட்டுக்கு கோதுமை அல்லது கோதுமைத்தவிடு வாங்கிக் கொடுங்கள். சூரியனுக்குரிய ஆதித்ய ஹ்ருதயம், அனுமன் சாலீசா துதிகளை தினமும் கேளுங்கள். முடியாதவர் மாணிக்கக் கல்லில் டாலர் செய்து கழுத்தில் அணியுங்கள். அல்லது மாணிக்கத்தால் செய்த விநாயகரை பூஜியுங்கள். அடிக்கடி பிரசித்தி பெற்ற அனுமன் கோயிலுக்குப் போய் தரிசனம் செய்துவிட்டு சூரியனுக்குரிய தானியமான கோதுமையால் ஆன இனிப்பு வகைகளை இயன்ற அளவு தானம் செய்யுங்கள். சூரியனார் கோயிலுக்குப் போவதும் நல்லது. தினமும் சூரிய உதயத்திற்கு முன் எழுந்து உங்களது பணிகளை செய்ய ஆரம்பியுங்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் நவகிரகத்தில் உள்ள சூரியனை வழிபடுங்கள். இதில் உங்களால் முடிந்ததை செய்யுங்கள். சூரியதோஷம் சுலபமாக விலகும்.
சூரிய துதி
காசினி இருளை நீக்கும் கதிரொளியாகி எங்கும்
பூசனை உலகோர் போற்றப் புசிப்பொடு சுகத்தை நல்கும்
வாசி ஏழுடைய தேர்மேல் மகாகிரி வலமாய் வந்த
தேசிகா எனைரட்சிப்பாய் செங்கதிரவனே போற்றி
சீலமாய் வாழ சீரருள் புரியும்
ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி
சூரியா போற்றி சுந்தரா போற்றி
வீரியா போற்றி வினைகள் களைவாய்
ஞாலம் காக்கும் ஞாயிறே போற்றி
நாளும் நன்றே நல்குவாய் போற்றி
சீலம் எல்லாம் சேர்ப்பாய் போற்றி
காலம் முழுவதும் அருள்வாய் போற்றி
சந்திரன் தோஷம் விலக ... உங்களுக்கு சந்திரதோஷம் இருந்தால் என்ன பிரச்சனை வரும். அதற்கு என்ன பரிகாரம் என்பதை தெரிந்து கொள்வோம். சந்திரன் மாத்ரு காரகன். அதாவது தாய்வழி உறவுகளால் ஏற்படும் பிரச்சனைகள், உறவுகளுக்கிடையே ஏற்படும் ஒற்றுமைக் குறைவு, தாயின் ஆரோக்யம் அடிக்கடி பாதிக்கப்படுதல், தாய்வழி சொத்துக்களில் இழுபறி, பதவி, புகழ், கல்வி உயர்வுகளில் தடை போன்ற பாதிப்புகள் தோன்றலாம்.
சந்திர தோஷத்தில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி? ஜனனகால ஜாதக ரீதியாகவோ, தசாபுக்திப்படியோ உங்களுக்கு சந்திரதோஷம் இருந்தால் திங்கட்கிழமைகளில் சூரியோதயத்தின் போது உங்கள் வீட்டு பூஜையறையில் 5 அகல்தீபம் பசுநெய் விட்டு ஏற்றி வையுங்கள். அடிக்கடி பக்கத்தில் உள்ள சிவாலயத்திற்குச் சென்று அங்கு நடைபெறும் அன்னதானம் அல்லது நிவேதனத்திற்கு இயன்ற அளவு பச்சரிசி வாங்கிக் கொடுங்கள். ஈயத்தினால் செய்யப்பட்ட காப்பு அல்லது டாலரை அணிந்து கொள்ளுங்கள். பசுமாட்டிற்கு பச்சரிசியும் வெல்லமும் கலந்து கொடுப்பதும் சிறப்பான பரிகாரமே. திங்களூர் கைலாசநாதர் ஆலயத்திற்குச் சென்று கைலாசநாதரையும், நவகிரக சந்திரனையும் வழிபட்டு வாருங்கள். இயன்ற அளவு பால், இனிப்புகளை பிரசாதமாக விநியோகம் செய்யுங்கள்.
உங்களால் முடிந்தால் மூன்ஸ்டோன் கணபதியை வாங்கிவைத்து வழிபடுங்கள். எப்போதும் சந்திரனை தலையில் சூடியிருக்கும் சிவனது துதிகளையும், சந்திர காயத்ரியையும் சொல்லுங்கள். இதில் உங்களால் இயன்ற பரிகாரத்தைச் செய்தாலே, சந்திரதோஷம் உங்களை சங்கடப்படுத்தாமல் ஓடும். பவுர்ணமி நாளில் சந்திர ஒளி படும்படி கிரிவலம் செல்லுங்கள். அன்றை தினம் அருகிலுள்ள சிவாலயத்தில் உள்ள அம்பிகைக்கு அர்ச்சனை, அபிஷேகம் என இயன்றதைச் செய்து வழிபடுவது சிறப்பான பலன் தரும். குறைந்தது 3 நெய் தீபங்களையாவது ஏற்றி வழிபட்டால் வாழ்க்கை பிறையாகக் குறையாமல் முழுநிலவாக ஒளிரும்.
தஞ்சாவூர் நாதன்கோயில் நந்திபுர விண்ணகரப் பெருமாள் கோயிலுக்குச் சென்று பெருமாளையும், தாயாரையும் தரிசித்துவிட்டு, வெண்பொங்கல் பிரசாதம் விநியோகம் செய்துவிட்டு வருவது நல்லது. முத்து பதித்த டாலர் அல்லது முத்து மாலை அணிவது சந்திரதோஷத்தின் கடுமையைக் குறைக்கும்.
சந்திர துதி
அலைகடல் அதனினின்று மதியும் வந்து உதித்தபோது
கலை வளர் திங்களாகக் கடவுளர் எவருமேத்தும்
சிலைநுதல் உமையாள்பங்கன் செஞ்சடைபிறையாம் மேரு
மலை வலமாகவந்த மதியமே போற்றி! போற்றி!
எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும்
திங்களே போற்றி திருவரும் புரிவாய்
சந்திரா போற்றி சற்குணா போற்றி
சங்கடம் தீர்க்கும் சதுரா போற்றி
பிங்கலன் அணிந்த திங்களே போற்றி
எங்குலம் தழைத்திட எழுவாய் போற்றி
கங்குலில் ஒளியினைப் பொழிவாய் போற்றி
மங்களம் நிறைந்திட அருள்வாய் போற்றி
செவ்வாய் தோஷம் விலக .....
உங்களுக்கு செவ்வாய் தோஷம் இருந்தால் என்ன பிரச்சனை வரும். அதற்கு என்ன பரிகாரம் என்பதை தெரிந்து கொள்வோம். சகோதர உறவுகளுடன் ஒற்றுமை குறையும். அவர்களின் ஆரோக்யம் அடிக்கடி சீர்கெடும். பூர்வீக சொத்துக்களான நிலம், வீடு சம்பந்தப்பட்ட வழக்குகள் இழுபறியாகும். சிற்றின்பநாட்டம் அதிகரிக்கும். கடன்கள் அடையாமல் அதிகரித்துக் கொண்டே போகும். ரத்த அழுத்த மாறுபாடு, ரத்தத்தொற்று நோய்கள், அடிக்கடி காயம் ஏற்படுதல், கழிவுப்பாதை உபாதைகள், தலைசுற்றல், பெண்களுக்கு மாதாந்திர உபாதைகளில் சிரமம் இப்படிப்பட்ட உடல்நலப் பிரச்சனைகளுள் ஏதாவது ஒன்று மாறி மாறி கஷ்டப்படுத்தக்கூடும்.
செவ்வாய் தோஷத்தில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி? செவ்வாய்க்கிழமைகளில் சூரியோதயத்தில் 6.15 முதல் 6.45க்குள் 5 அகல் தீபத்தினை பசுநெய்விட்டு உங்கள் விட்டு பூஜையறையில் ஏற்றி வையுங்கள். செம்பு உலோகத்தாலான டாலர் அல்லது காப்பை அணிந்து கொள்வது நல்லது. முருகன் (அ) துர்கை டாலரானால் கூடுதல் சிறப்பு. அடிக்கடி அருகிலுள்ள முருகன் கோயிலுக்குச் சென்று முருகனை வழிபட்டும், அங்குள்ள நவகிரக சன்னதி செவ்வாயையும் வழிபட்டு வாருங்கள். முடிந்தால் பழநிக்குச் சென்று அங்குள்ள முறைப்படி முருகப்பெருமானை தரிசனம் செய்யுங்கள். வைத்தீஸ்வரன் கோயில் சென்று அங்குள்ள அங்காரகனுக்கு அர்ச்சனை செய்வதும் நல்ல பலன் தரும். ரெட்கார்னெட் டாலர் அணிவதும், ரெட்கார்னெட் கணபதியை பூஜிப்பதும் அவரவர் வசதிக்கு ஏற்ப செய்யலாம். வாயில்லா ஜீவன்களுக்கு தீவனம் வாங்கிக் கொடுங்கள். அடிக்கடி நவகிரக செவ்வாய்க்கு அர்ச்சனை செய்யுங்கள். உங்கள் பிறந்ததேதி அல்லது கிழமையில் செய்வது நல்லது. இதில் உங்களால் முடிந்ததை செய்யுங்கள். செவ்வாய் தோஷம் விலகி வாழ்க்கை செழிப்பாகும்.
செவ்வாய் துதி
சிறுப்புறு மணியே செவ்வாய்த் தேவே
குறைவிலாது அருள்வாய் குணமுடன் வாழ
மங்கலச் செவ்வாய் மலரடி போற்றி
அங்காரகனே அவதிகள் நீக்கு
வசனம்நல் தைரியத்தோடு மன்னதம் சபையில் வார்த்தை
புசபல பராக்கிரமங்கள் போர்தனில் வெற்றி ஆண்மை
நிசமுடன் அவரவர்க்கு நீள் நிலம்தனில் அளிக்கும்
குசன்நில மகனாம் செவ்வாய் குறைகழல் போற்றி போற்றி.
செவ்விய நிறத்து செவ்வாய் போற்றி
திவ்விய சுகமதை தருவாய் போற்றி
கவ்விய வினைகளைக் களைவாய் போற்றி
அவ்வியம் அகன்றிட அருள்வாய் போற்றி.
புதன் தோஷம் விலக:
உங்களுக்கு புதன் தோஷம் இருந்தால் என்ன பிரச்சனை வரும். அதற்கு என்ன பரிகாரம் என்பதை தெரிந்து கொள்வோம். புதன் வித்யாகாரகன். அதாவது கல்வி, கலை போன்றவற்றுக்குக் காரணமானவன். புதன் அமைப்புப் பாதகமாக இருந்தால் படிப்பு தடைபடுதல், பாட்டு, இசை, ஓவியம் போன்ற கலை ஆர்வம் தடைப்படுதல், உயர்வுகள் தடைப்பட்டு தாழ்நிலை ஏற்படுதல் போன்ற பொதுவான பிரச்சனைகள் ஏற்படக்கூடும். அடிக்கடி விபத்து, உடல் சம்பந்தமான குறைபாடுகள் மாறி மாறி வரலாம். தோல் நிறமாற்றம், முக அழகு குறைதல் புத தோஷத்தால் ஏற்படும். புதன் தோஷத்தில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி? புதன் அமைதியான கிரகம், எனவே அமைதியாக, மென்மையாக இருக்கப் பழகுங்கள். பித்தளையால் செய்யப்பட்ட டாலர் அல்லது காப்பினை அணிந்து கொள்ளுங்கள். அடிக்கடி பெருமாள் கோயிலுக்குச் சென்று துளசி வாங்கி சாற்றி வழிபடுங்கள். பக்தர்களுக்கு பச்சைப்பருப்பு பாயாசம் அல்லது பால்பாயாசம் பிரசாதமாக விநியோகம் செய்யுங்கள். புதன்கிழமைகளில் சூரியோதயத்தில் உங்கள் வீட்டு பூஜையறையில் 5 அகல்தீபம் பசுநெய் ஏற்றி இஷ்ட தெய்வத்தைக் கும்பிடுங்கள். புதன் காயத்ரி, பெருமாள் காயத்ரி மனதாரக் கூறுங்கள்.
பச்சை கார்னெட் கல் டாலர் அல்லது கணபதியை பூஜை செய்யலாம். அடிக்கடி நவகிரக புதனுக்கு அர்ச்சனை செய்து வழிபடுங்கள். முடிந்தால் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரரை வழிபடுவது நல்லது. நாகப்பட்டினம் திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலுக்குச் சென்று அங்குள்ள முறைப்படி வழிபட்டு வாருங்கள். இதில் உங்களால் முடிந்ததை செய்யுங்கள். புதன் தோஷம் விலகி உங்கள் வாழ்வில் புதுமலர்ச்சி ஏற்படும்.
புதன் துதி
இதமுற வாழ இன்னல்கள் நீக்கும்
புதபகவானே பொன்னடி போற்றி
பதம் தந்தருள்வாய் பண்ணொளியானே
உதவியே அருள்வாய் உத்தமா போற்றி
மதனநூல் முதலாய நான்கு மறை புகல் கல்வி ஞானம்
விதமுடன் அவரவர்க்கு விஞ்ஞைகள் அருள்வோன் திங்கள் சுதன் பல சுபாசுபங்கள் சுகம்பல கொடுக்க வல்லான்
புதன்கவிப் புலவன் சீர்சால் பூங்கழல் போற்றி போற்றி.
புண்ணிய திருமக புதனே போற்றி
நுண்ணிய கலைகளை அளிப்பாய் போற்றி
எண்ணிய பணிகளை முடிப்பாய் போற்றி
திண்ணிய பயன்களை அருள்வாய் போற்றி.
குரு தோஷம் விலக:
நமக்கு கிரகங்களினால் தோஷம் ஏற்பட்டால் குருவிடம் (வியாழன்) போய் முறையிடுவோம். ஆனால் அந்த குருவே நமக்கு தோஷமாக அமைந்து விட்டால்.... அதனால் பாதிப்பு ஏதும் இருக்காது. அதே சமயம் குரு என்ற முறையில் நமக்கு நல்ல பாடங்களையும் கற்று தருவார். வியாழன், புத்திரகாரகன். அதாவது குழந்தைகளின் ஆரோக்யம் சீர்கெடுவது, வாரிசுகளுடன் அடிக்கடி பிரச்னைகள் ஏற்படுவது, வாரிசுகள் உங்களைப் பிரிந்து போக நேரிடுவது இப்படிப்பட்ட பிரச்னைகள், வியாழ தோஷத்தால் ஏற்படலாம். ஞாபக மறதி, பெண்களுக்கு கருப்பைக் கோளாறுகள், வயிறு உபாதை, தலைசுற்றல், ரத்த அழுத்த மாறுபாடு, பரம்பரை நோய் பாதிப்பு, படபடப்பு, மனஅழுத்தம் போன்ற உபாதைகள் மாறி மாறி வரலாம். செலவு இரட்டிப்பாகும்.
வியாழன் தோஷத்தில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி? வியாழக்கிழமைகளில் சூரியோதயத்தில் வீட்டு பூஜையறையில் 5 அகல் தீபம் ஏற்றி தட்சிணாமூர்த்தியை மனதார வழிபடுங்கள். ஆலங்குடி, திருச்செந்தூர், மந்திராலயம், தூத்துக்குடி ஆழ்வார் திருநகரி ஆகிய தலங்கள் ஏதாவது ஒன்றுக்குச் சென்று மனதார வழிபட்டு வாருங்கள். அந்தக் கோயிலுக்குப் போகும் முன் 40 லட்டுக்கும் குறையாமல் ஏழைகள் அல்லது பக்தர்களுக்கு விநியோகம் செய்யுங்கள். உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள தட்சிணாமூர்த்தியை அடிக்கடி சென்று வழிபட்டு வாருங்கள்.
தங்கத்தாலான ஏதாவது ஒரு ஆபரணத்தை உடலில் அணிவது நல்லது. அவரவர் வசதியைப் பொறுத்து மஞ்சள் டோபாஸ் கல்லால் ஆன டாலர் அணிவது அல்லது கணபதியை பூஜிப்பது நன்மைதரும். யானையைப் பார்க்கும் போது அல்லது கோயில் யானைக்கு மஞ்சள் வாழைப்பழம் இயன்ற அளவு வாங்கிக் கொடுங்கள். குரு காயத்ரி, தட்சிணாமூர்த்தி துதிகளையும் எப்போதும் சொல்லுங்கள். இதில் உங்களால் முடிந்ததை செய்யுங்கள். குருதோஷம் நிச்சயம் விலகி, குருவருள் பரிபூரணமாகக் கிட்டும்.
வியாழன் துதி
குணமிகு வியாழ குருபகவானே!
மணமுள வாழ்வை மகிழ்வுடன் அருள்வாய்!
பிரகஸ்பதி வியாழ பர குரு நேசா!
கிரக தோஷமின்றிக் கடாட்சித் தருள்வாய்!
மறைமிகு கலைநூல் வல்லோன் வானவர்க் கரசன் மந்திரி
நறைசொரி கற்ப கப்பொன் நாட்டினுக் கதிபனாக்கி
நிறைதனம் சிவிகை மன்றல நீடுபோ கத்தை நல்கும்
இறையவன் குருவி யாழன் இணையடி போற்றி போற்றி.
வளமெலாம் அளித்திடும் வியாழா போற்றி
குலமெலாம் தழைத்திட வருவாய் போற்றி
புலமெலாம் மலர்ந்திட முனைவாய் போற்றி
உலகெலாம் உவந்திட அருள்வாய் போற்றி!
சுக்ர தோஷம் விலக:
உங்களுக்கு புதன் தோஷம் இருந்தால் என்ன பிரச்சனை வரும். அதற்கு என்ன பரிகாரம் என்பதை தெரிந்து கொள்வோம். சுக்ரன், களத்திரகாரகன் அதாவது கணவன் மனைவி அமைப்புக்கு காரணமானவன். சுக்ரனின் அமைப்பு சரியில்லாமல் தோஷம் ஏற்பட்டால், குடும்ப உறவுகளிடையே ஒற்றுமை குறையும், கணவன் மனைவிக்கிடையே மனக்கசப்பு உண்டாகும். வாகன அமைப்பிற்கும் இவரே காரகன் என்பதால், புது வாகன யோகமோ அல்லது வாகன யோகத்தடையோ ஏற்படும்.
உடலில் முதுகுத்தண்டுவட உபாதை, கழிவுப்பாதை உறுப்புகள், கல்லீரல், சிறுநீரகக்கல், பிரசவகால பிரச்னைகள், இப்படி ஏதாவது ஒரு பிரச்னை ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். கணவன் வழி அல்லது மனைவி வழி உறவுகளுடன் அடிக்கடி பிரச்னைகள் ஏற்படக்கூடும். சுக்ர தோஷத்தில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி? வெள்ளிக்கிழமைகளில் சூரியோதயத்தில் உங்கள் வீட்டு பூஜையறையில் 5 அகல் தீபம் ஏற்றி வைத்து வழிபடுங்கள். உங்கள் குலதெய்வத்தையோ அல்லது ஸ்ரீரங்கநாதரையோ வழிபடுவது சிறப்பு. பக்கத்து பெருமாள் கோயிலில் உள்ள தாயாரை தாமரை மலர் அல்து மல்லிகைப்பூ கொடுத்து வழிபடுங்கள். முயன்ற அளவு தானம் செய்யுங்கள். நேரம் கிடைக்கும் போது சுக்ர காயத்ரி, மகாலட்சுமி துதிகளை மனதார கூறுங்கள். பசுமாட்டிற்கு தயிர்சாதம் அல்லது பச்சரிசி, வெல்லம் கலந்து கொடுங்கள்.
வசதி உள்ளவர்கள் வைரம் அல்லது க்ரீன் கார்னெட் கல்லையோ அல்லது அக்கல்லாலான விநாயகரை வாங்கி பூஜியுங்கள். அடிக்கடி ஸ்ரீரங்கம் சென்று ரங்கநாதரை தரிசனம் செய்யுங்கள். உங்கள் வீட்டிற்கருகிலுள்ள நவகிரக சன்னதி சுக்ரனுக்கு இயன்ற அர்ச்சனை ஆராதனை செய்யுங்கள். இதில் உங்களால் முடிந்ததை செய்யுங்கள். சுக்ரதோஷம் நீங்கி வாழ்க்கையில் சுபயோக பலன்கள் கூடும்.
சுக்ர துதி
சுக்கிரமூர்த்தி சுபம்மிக ஈவாய்
வக்கிரம் இன்றி வரம் மிகத் தருவாய்
வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே!
அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கு அருளே!
மூர்க்காவன் சூரன் வாணன் முதலினோர் குருவாய் வையம்
காக்கவான் மழைபெய் விக்கும் கவிமான் கனகம் ஈவோன்
தீர்க்கவா னவர்கள் போற்றச் செத்தவர் தமை எழுப்பும்
பார்க்கவன் சுக்ராச் சாரி பாதபங் கயமே போற்றி.
துணைநலம் அருளும் சுக்ரா போற்றி
மனையறம் தழைத்திட வருவாய் போற்றி
இணையிலா பொருளை கொடுப்பாய் போற்றி
வினையெலாம் விலகிட அருள்வாய் போற்றி.
| |||
Subscribe to:
Posts (Atom)