|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

27 March, 2012

பார்த்ததில் பிடித்தது!


7 சதவீத வீடுகளில் மின் இணைப்பே இல்லை

இந்தியாவின் மக்கள் தொகை மற்றும் வீடுகள் பட்டியல் கணக்கெடுக்கும் பணி கடந்த 2010ம் ஆண்டு தொடங்கியது. தமிழகத்தில் இந்தப் பணியில் சுமார் 1.20 லட்சம் பேர் ஈடுபட்டனர். இந்தக் கணக்கெடுப்பு முடிவடைந்ததையடுத்து இன்று அது தொடர்பான அறிக்கை வெளியிட்டப்பட்டது. மக்கள் தொகை கணக்கெடுப்புத்துறையின் தமிழ்நாடு மாநில இயக்குனர் கோபாலகிருஷ்ணன் அறிக்கையை வெளியிட, மாநில திட்டக்குழு துணைத் தலைவர் சாந்தா ஷீலா நாயர் பெற்றுக் கொண்டார்.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்: 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது. தமிழகத்தில் இப்போது 1 கோடியே 85 லட்சம் குடும்பங்கள் உள்ளன. 10 ஆண்டுகளுக்கு முன் 1.42 கோடி குடும்பங்கள் இருந்தன. தற்போது, கூட்டுக் குடும்ப எண்ணிக்கை குறைந்து தனிக் குடித்தனம் அதிகரித்துள்ளது. 75 சதவீதம் பேர் தனிக் குடித்தனம் நடத்தி வருகின்றனர்.

மாநிலத்தில் மொத்தமுள்ள வீடுகளில் 44 சதவீதம் கான்கிரீட் வீடுகளாக உள்ளன. மண் சுவர் வீடுகளின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் 33 சதவீதத்தில் இருந்து 21 சதவீதமாகக் குறைந்துள்ளது. 2001ம் ஆண்டில் 26 சதவீதம் பேர் கூரை வீடுகளில் இருந்தனர். தற்போது அது 15 சதவீதமாக குறைந்துள்ளது. சிமென்ட் தரையுடன் கூடிய வீடுகளின் எண்ணிக்கை, 55 சதவீதத்தில் இருந்து 63 சதவீதமாக உயர்ந்துள்ளன.

நீராதாரத்தைப் பொறுத்தவரை 79.8 சதவீத குடும்பங்கள் ஆழ்துழை கிணறுகள், குழாய் இணைப்புகள் ஆகியவற்றின் மூலம் குடிநீரை பெறுகிறார்கள். இதில் 35 சதவீதம் பேருக்கு வீட்டுக்குள்ளேயே குடிநீர் கிடைக்கிறது. 7 சதவீதம் பேர் குடிநீருக்காக அரை கி.மீ. தூரம் வரை செல்ல வேண்டியுள்ளது. இந்த எண்ணிக்கை 10 ஆண்டுகளுக்கு முன் 12 சதவீதமாக இருந்தது.

64 சதவீதம் பேர், வீட்டு வளாகத்துக்குள் குளிக்கும் வசதியை கொண்டுள்ளனர். 50 சதவீத குடும்பத்தினர் கழிவு நீர் கால்வாய் இணைப்பு பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் 52 சதவீத குடும்பங்கள் திறந்தவெளி கழிப்பிடங்களையே பயன்படுத்துகிறார்கள். 10 ஆண்டுகளுக்கு முன் இது 64 சதவீதமாக இருந்து, இப்போது 52 சதவீதமாகக் குறைந்துள்ளது. இப்போதும் 48.3 சதவீத குடும்பத்தினருக்கே வீட்டுக்குள் கழிப்பிட வசதி உள்ளது (தேசிய அளவில் இது 46.9 சதவீதமாகவே உள்ளது. அந்த வகையில் தமிழ்நாடு பெட்டர்).

சென்னை 95 சதவீத வீடுகளிலும், கன்னியாகுமரியில் 87 சதவீத வீடுகளிலும் கழிப்பிடம் உள்ளது. ஆனால், தர்மபுரி மாவட்டத்தில் வெறும் 19 சதவீத வீடுகளிலும், அரியலூர் மாவட்டத்தில் வெறும் 18.1 சதவீத வீடுகளிலும் மட்டுமே கழிப்பிட வசதி உள்ளது. மற்றவர்கள் திறந்த வெளியையே கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர்.

93.4 சதவீத குடும்பங்களுக்கு மின்சார வசதி உள்ளது. 7 சதவீத வீடுகளில் மின் இணைப்பே இல்லை. 2001ம் ஆண்டு 78.2 சதவீத குடும்பங்களுக்கு மின் இணைப்பு இருந்தது. இப்போது அது 93 சதவீதமாக அதிகரித்துள்ளது.

2001ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் 44 சதவீத வீடுகளில் டி.வி. இருந்தது. தற்போது அது கிட்டத்தட்ட இரண்டு மடங்காகி, 87 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் டெல்லியில் தான் 92 சதவீத குடும்பங்களில் டிவி உள்ளது. இந்த விஷயத்தில் தமிழ்நாடு 2வது இடத்தைப் பிடித்துள்ளது.

11 சதவீத வீடுகளில் கம்ப்யூட்டர் வசதி உள்ளது. 48 சதவீத வீடுகளில் சமையல் கியாஸ் பயன்படுத்துகிறார்கள். 32 சதவீதம் பேர் இரண்டு சக்கர வாகனங்களையும், 4 சதவீதம் பேர் 4 சக்கர வாகனங்களையும் பயன்படுத்துகிறார்கள். அதே நேரத்தில் தமிழகத்தில் 45 சதவீதம் பேர் சைக்கிள்களை பயன்படுத்துகிறார்கள். 75 சதவீத வீடுகளில் தொலைபேசி இணைப்பு உள்ளது. இதில் 69 சதவீத இணைப்புகள் செல்போன்கள் ஆகும்.

இதே நாள்...


  • சர்வதேச தியேட்டர் தினம்
  •  மல்தோவா, பேசராபியா ஆகியன ருமேனியாவுடன் இணைந்தன(1918)
  •  ஜுவான் பொன்ஸ் டி லெயோன், வட அமெரிக்காவை கண்டுபிடித்தார்(1513)
  •  டென்மார்க் மற்றும் ஸ்வீடன் இடையே நடுநிலை ஏற்பட்டது(1794)

தமிழீழப் போராட்டம் தோல்வி என்று சொல்லலாமா?

விளையாட்டுப் போட்டியில் வெற்றியும் வரும்;  தோல்வியும் வரும். தெரிந்துதான் விளையாடுகிறோம். தோற்றவர் அடுத்து வெல்வதும் வென்றவர் அடுத்து தோற்பதும் விளையாட்டில் மட்டும் அல்ல, போராட்டக்களத்திலும் இயல்புதான். திருவள்ளுவர் குறிப்பிட்டது போல்,

"ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின்.

ஈழம் எம்மாத்திரம்.''


நிறைவேறாத லட்சியம் என்று தெரிந்தே தனித்தமிழ்நாடு- திராவிட நாடு என்ற கோஷத்தின் மூலம் ஆட்சியைப் பிடித்த திராவிடக் கட்சிகள் இன்று தேசிய நீரோட்டத்தில் இரண்டறக் கலந்து மத்திய அரசின் பங்காளியாகி இருக்கி றார்கள். இந்த அணுகுமுறையை ஈழப் போராளிகளுக்கு இந்தத் திராவிடக் கட்சி கள் சொல்லிக்கொடுக்க தவறியது ஏன்? 


 ""தமிழ்நாடு கிடைக்காது என்று தெரிந்தே திராவிடக் கட்சிகள் இந்த கோஷத்தை முன்வைத்தன என்பதை என்னால் ஒப்புக்கொள்ள முடியாது. கிடைக்கும் என்றுதான் கேட்டனர். சுதந்திரத்திற்கு முன்னால் திராவிட நாடு என்பது, சென்னை ராஜதானியிலிருந்து தமிழ்நாட்டின் புவியியல், பொருளியல், வாழ்வியல், அரசியல், கலையியல் என்று அனைத்துத் துறைகளையும் திட்டமிட்டபிறகுதான் திராவிட இயக்கங்களால் திராவிட நாடு கோரிக்கை எழுப்பப்பட்டது. இதே நிலையில்தான் மொழிவழி மாநிலம் பிரிவுக்குப்பின் தனித்தமிழ் கோரிக்கை முன் வைக்கப்பட்டது. ஆசைகாட்டி மோசம் செய்து நம்மை இந்திய நீரோட் டத்தில் சிறை பிடித்துக் கொண்டது மைய அரசு. சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டவர்கள் அதனையே தன்னலத்துக்குப் பயன்படுத்திக் கொண்டார்கள். நல்லவேளை இந்த தில்லுமுல்லு இலங்கையர்களக்கு கற்பிக்கப்படவில்லை.''


உங்களின் ரசிகராக பல அரசியல் தலைவர்கள் உண்டு. தாங்கள் விரும்பும் அரசியல் தலைவர் யார்? எவர்?  


""அரசியல் தலைவர் என்பவர் வல்லவராக இருப்பதைவிட நல்லவராக இருக்க வேண்டும். எனக்கு முந்தைய தலைமுறையில் பல நல்ல தலைவர்களே அரசியலில் இருந்தனர். எனது காலத்தில் இருவரைக் குறிப்பிடலாம். முதலாமவர் எம்.ஜி.ஆர். ஏனெனில், கல்லூரியில் பேராசிரியராக இருந்தகாலத்தில் மேடைப் பேச்சுகளில் நக்ஸலைட் ஆதரவுக் கருத்துகள் இருப்பதாக கைது செய்ய அப்போதைய காவல் துறை அதிகாரி மோகன்தாஸ் என்னைக் குறிப்பிட்டு.  இதுகுறித்து எம்.ஜி.ஆர். பார்வைக்கு அனுப்பி வைத்தார். அப்போது நான் எம்.ஜி.ஆர். அரசியலின் தீவிர எதிர்ப்பாளன்.  எம்.ஜி.ஆர். என்னை அழைத்தார். நான் அவரது தோட்டத்திற்குச் சென்றேன். மாடியில் அவர் அறையில் அமர்ந்தேன். எம்.ஜி.ஆர். வணங்கியபடியே என்னை வரவேற்றார். ""என்ன சாப்பிட்டீர்களா?'' என விசாரித்தார். நான், ""பரவாயில்லை'' என்றேன். உடனே அவர், ""காலை 6.30 மணிக்கெல்லாம் புறப்பட்டிருப்பீர்கள். இப்போது மணி 8.00 முதலில் சாப்பிடுங்கள். பிறகு பேசலாம்'' என்றார். நான் உடனே, ""எனது பயத்தைப் போக்குங்கள். இதனால் என் பேராசிரியர் வேலை போய்விடும்'' என்றேன். எம்.ஜி.ஆர். அவர்கள், ""ஒன்றுமில்லை. உங்களின் சொற்பொழிவின் ரசிகன் நான். நீங்கள் எதையும் வெளிப் படையாகப் பேசுபவர். திராவிட இயக்கத்தைப் பற்றியும், பெரியார், அண்ணாவைப் பற்றி பேசுங்கள். பிறரை கிளர்ச்சிக்குத் தூண்டும் வகையில் பேசவேண்டாமே'' என்றபடி எனது கைது வாரண்டை கிழித்துப் போட்டுவிட்டு, ""நீங்கள் இப்போது சாப்பிட்டுச் செல்லலாமே'' என்று என்னை கீழே உணவருந்த அனுப்பிவைத்தார். கீழே காலை உணவு உண்டபோது எனக்குப் பின்னால் என் தோளைப்பற்றிய எம்.ஜி.ஆர். எனது பாக்கெட்டில் ரூபாய் கட்டை திணித்தார்; நான் மறுத்தேன். ""இது எனது பழக்கம்'' என்று உணவு உண்டு முடிக்கும்வரை உடனிருந்து ரசித்தார். இத்தகைய நேரிய பண்பு அவரிடத்தில் கண்டேன். வீட்டில் வந்து ரூபாயை எண்ணினேன். ஒரு லட்சம் இருந்தது. அதன் மூலமே நான் இப்போது குடியிருக்கும் இடம் வாங்கினேன்.  இத்தகைய நற்பண்பை அவருக்குப்பின் வைகோவிடம் காண்கிறேன். அதனாலேயே அவரது கட்சியில் இணைந்து செயலாற்றுகிறேன்.''


நவீன ஊடக வளர்ச்சியின் நீக்கும் போக்கும் எப்படி இருக்கிறது?  


""வெகுஜனங்களை கருத்து பற்றினால் அது பௌதீக சக்தியாய் மாறும்' என்றார் கார்ல்மார்க்ஸ்.   ஊடகங்கள் இருப்பதே இதற்குத்தான். ஆனால் இன்று பெரும் பாலான ஊடகங்கள் அடுத்தவர்களின் பணத்தை அபகரிப்பதற்கான கருவியாக உள்ளன. தன்னம்பிக்கை இதழ்போல அடிப்படை நோக்கத்தை மிகக் குறைவாகக் கொண்டிருக்கும் பத்திரிகைகள் மிகக்குறைவு. அதுவும் தொலைக்காட்சி பெரிய சீரழிவைச் செய்து கொண்டிருக்கிறது.  கதை என்றால் கால் மணிநேரம், அரை மணிநேரம் சொல்லலாம். வாரம் முழுக்க, வருடக்கணக்கான அழுகைக் காட்சிகளை அரங்கேற்றும் மெகா சீரியல்கள் முதலில் ஒழியவேண்டும்.  தொலைக்காட்சி என்பது தினமும் தெரிகிற சுவர் மாதிரி இருக்கிறது. புதிதாக எதுவுமில்லை. இவையெல்லாம் எதற்கு? யாரோ சிலர் பிழைப்பதற்காக. அதுவும் இந்த விளம்பரங்கள் மூன்று ரூபாய்க்கு உற்பத்தியாகும் சோப்பை 30 ரூபாய்க்கு விற்க எத்தனை நிறுவனங்கள் போட்டி போடுகின்றன.  வெளிநாட்டுக்காரன் ஒருவன் வந்து அரை மணிநேரம் நம்மூர் தொலைக்காட்சியைப் பார்த்தால் தமிழ்நாடுதான் அழுக்கான மாநிலம் என்றே முடிவுக்கு வந்துவிடுவான்.  இதற்கெல்லாம் காரணம் திறமைசாலிகளும், வாழ்க்கை பற்றிய மதிப்பீடு உள்ளவர்களும் ஒதுங்கியிருப்பதுதான். ஆற்றலுள்ளவர்கள் படையெடுத்துப்போய் ஊடகங்களை தங்கள் திறமையால் கைப்பற்ற வேண்டும். மொத்தத்தில் சொல்லிக்கொள்வதுபோல் இல்லை.''

சிலையாய் உள்ள தலைவர்களிடம் மனு

இலங்கைத் தமிழர்களுக்காக காலில் சங்கிலி கட்டிக்கொண்டு நடைபயணம் மேற்கொண்ட சம்பவம், புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.புதுச்சேரி நெல்லித்தோப்பைச் சேர்ந்தவர் ரவீந்திரன். இவர், இலங்கையில் வாழும் தமிழர்களைதமிழராக மட்டும் பார்க்காமல், மனிதர்களாகவும்பார்க்க வேண்டும், இலங்கை தமிழர்கள் படும்துயரங்களை அனைவருக்கும் தெரியப்படுத்தும்வகையில், 26.03.2012 அன்று காலை நூதன போராட்டம் நடத்தினார்.சிலுவை போன்ற மரக் கட்டையை ஏந்தி, கை மற்றும் கால்களைச் சங்கிலியால் பிணைத்துக்கொண்டு, கடற்கரை காந்தி சிலை அருகிலிருந்து,நேற்று காலை நடைபயணத்தைத் துவக்கினார்.வழக்கமாக கோரிக்கை மனுக்களை முதல்வர்,அமைச்சர்கள், அதிகாரிகளிடம் கொடுப்பதைத்தான் கேள்விப்பட்டிருப்போம்.

ஆனால் ரவீந்திரன், இலங்கைத் தமிழர்களுக்குப் போதுமானபாதுகாப்பை அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் கோரிக்கை மனுவை, புதுச்சேரியில் முக்கியமான இடங்களில் நிறுவப்பட்டுள்ள மறைந்ததலைவர்களின் சிலைகள் முன் மனுவை ஒட்டிவிட்டு சென்றார்.காந்தி சிலையிடம் மனு அளித்துவிட்டு புறப்பட்ட ரவீந்திரன், நேரு, அண்ணா, ராஜிவ், இந்திரா உள்ளிட்ட பல்வேறு தலைவர்களின் சிலை இருக்கும் பகுதிக்குச் சென்று, அங்கு மனுவை சமர்ப்பித்துவிட்டுச் சென்றார்.இதுபற்றி ரவீந்திரனிடம் கேட்ட போது, "நாட்டில் உள்ள பல தலைவர்கள் பிரச்சனைகளை காதில் வாங்காமல் சிலையாய் நிற்கின்றனர். இதனால், தற்போது சிலையாய் உள்ள தலைவர்களிடம் மனு கொடுக்கிறேன்' என்று தெரிவித்தார்.

சுரண்டுவதற்கு தமிழ்நாடு என்ன வேட்டைக்காடா?






வெளிமாநிலத்தவர் சுரண்டுவதற்கு தமிழ்நாடு என்ன வேட்டைக்காடா? என தமிழக இளைஞர் முன்னணிப் பொதுச் செயலாளர்  நா.வைகறை கேள்வி எழுப்பினார்.வெளிமாநிலத்தவர்களுக்கு வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை வழங்கக் கூடாது என வலியுறுத்தி தமிழகமெங்கும் 26.03.2012 அன்று தமிழக இளைஞர் முன்னணி மற்றும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதன் ஒருபகுதியாக, தஞ்சை மேரி முனையிலிருந்து காலை 10.30 மணியளவில் தமிழக இளைஞர் முன்னணி மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் ரெ.சிவராசு தலைமையில், பேரணியாகத் திரண்ட இளைஞர்கள், நகரின் முக்கிய வீதிகளின் வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைச் சென்றடைந்தனர். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மாவட்டச் செயலாளர் குழ.பால்ராசு பேரணியைத் துவக்கி வைத்தார். பேரணியின் முடிவில், த.தே.பொ.க. நகரச் செயலாளர் இரா.சு.முனியாண்டி, துணைச் செயலாளர் ச.தமிழ்ச்செல்வன் ஆகியோர் விளக்கவுரையாற்றினர். 

நிறைவில், சிறப்புரையாற்றிய தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் நா.வைகறை, "இந்திய அரசு சிங்கள அரசுக்கு உதவி செய்து நம் தமிழ் மக்களை ஈழத்தில் முள்வேலி முகாம்களுக்குள் அடைத்து வைத்துள்ளது. அதே போன்று, தமிழ்நாட்டிலும் தமிழர்களை அகதிகளாக்கும் வகையில் அதிக எண்ணிக்கையில் வெளி மாநிலத்தவர்களை திட்டமிட்டுக் குவித்துக் கொண்டிருக்கிறது இந்திய அரசு. இப்போக்கு நீடித்தால், தமிழகத்தில் நாம் திறந்தவெளிச் சிறைச்சாலையில் கிடக்க நேரிடும். வழிப்பறி, கொலை, கொள்ளை, கற்பழிப்பு என வெளி மாநிலத்தவர்களால் நடக்கும் சீர்கெடுகளுக்கு எதிராக  காவல்துறை எடுக்கும் சட்டரீதியான நடவடிக்கைகளை நாம் வரவேற்கும் அதே வேளையில், வெளியார்களுக்கு இங்கு கட்டுப்பாடுகள் தேவை என்பதை உரத்துக் கூறுகிறோம். வெளியாருக்கு குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை வழங்கி அவர்களை இங்கேயே நிரந்தரமாக்க் குடியமர்த்துவது நமக்கு மேலும் சிக்கல்களைத் தான் ஏற்படுத்தும்.  

இந்தியா பல தேசிய இனத் தாயகங்களைக் கொண்டிருப்பதால் தான், 1956ஆம் ஆண்டு மொழிவழித் தாயகமாக தமிழ்நாடு என்ற மாநிலம் உருவாக்கப்பட்டது. அத்தாயகத் தனித்தன்மையை இந்திய அரசு மதிக்காமல், தேசிய இனத் தாயகங்களை அழித்தொழிக்கும் நோக்கில் தான் வெளியாரைத் திட்டமிட்டு இங்கு குவிக்கின்றது. இதே நிலை நீடித்தால் தமிழர்களின் தாயகம் நாளை என்னவாக இருக்கும்? இந்திய அரசமைப்புச் சட்டப்பிரிவு 370 காசுமீரிகளுக்கும், 371 பிரிவு அசாம், மணிப்புரா உள்ளிட்ட வேறு பல மாநிலத்தவர்களுக்கும் சலுகைகள் வழங்குகின்றன. இம்மாநிலங்களில் வெளி மாநிலத்தவர்கள் நிலம் வாங்கத் தடை விதிக்கப்பட்டு, அத்தாயகங்கள் பாதுகாக்கப்படுகின்றன. ஆனால், தமிழ்நாட்டில் என்ன நிலை? தமிழர்களின் கையில் தான் இன்று தமிழ்நாடு இருக்கிறதா? வெளி மாநிலத்தவர்கள் சுரண்டிக் கொழுக்கத் தமிழ்நாடென்ன திறந்த வீடா?" என்று பேசினார்.  

காமெடி நித்தி'யானந்தா!


பார்த்ததில் பிடித்தது!



தமிழ் ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் மகத்தான பங்களிப்பை வழங்கிய புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் மீது ஆத்திரமும், கோபமும் அடைந்திருந்த ஜெயவர்த்தனே, சார்க் மாநாட்டிற்கு பெங்களூர் வந்தபோது (15.11.1986) செய்தியாளர் சந்தித்தனர். அப்போது இலங்கைப் பிரச்சினைக்கு எப்போது தீர்வு வரும் என்று ஜெயவர்த்தனேவிடம் செய்தி யாளர்கள் கேட்டனர். 

... அதற்கு பதிலளித்த ஜெயவர்த்தனே, “இலங்கையில் ஏற்பட்டு இருக்கின்ற இத்தனை பிரச்சினை களுக்கும் தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தான் காரணம். அவருடைய இரட்டை வேடம்தான் பிரச்சினை சிக்கல் ஆகி வருவதற்குக் காரணம்” என்று எம்.ஜி.ஆர். மீது விழுந்து பிராண்டினான்.

ஜெயவர்த்தனே இவ்வாறு தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். மீது குற்றம் சுமத்தி பதிலளித்தபோது, பிரதமர் ராஜீவ் காந்தியும் அவர் பக்கத்தில் இருந்தார்.
இந்தச் செய்தி ஸ்டேட்ஸ்மென், இந்துஸ்தான் டைம்ஸ் ஆங்கில நாளேடுகளில் வெளிவந்தது.

இதற்கு மறுநாள் (16 .11 .1986 ) பாராளுமன்றம் கூடுகிறது. பிரதமர் ராஜீவ் காந்தி இருக்கையில் உள்ளார். வெளியுறவு அமைச்சர் நட்வர் சிங் அவை யில் இருக்கிறார். பகல் 12 மணிக்கு கேள்வி நேரம் முடிந்ததும் தலைவர் வைகோ எழுந்து, முக்கியமான கேள்விக்கு பதில் கொடுக்க வேண்டும் என்று கேட்கிறார்.

“தமிழ்நாடு இந்தியாவில் இருக்கிறதா? அல்லது இந்தியாவிலிருந்து விலகி தனி
நாடாகப் போய்விட்டதா?” என்று வைகோ அவர்கள் கேள்வி எழுப்பியதும், வழக்கம் போல் காங்கிரஸ் உறுப்பினர்கள் கூச்சல் போட்டனர்.

அதையெல்லாம் பொருட்படுத்தாத வைகோ, “ வெளி நாட்டிலிருந்து வருகின்ற ஜனாதிபதி போட்ட விருந்தைத் தின்றுவிட்டு மரியாதையாகப் போக வேண்டும். எங்கள் தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி.ஆரை விமர்சனம் செய்திருக்கிறார் ஜெயவர்த்தனே? பக்கத்திலே அதைக் கேட்டு ரசித்துக் கொண்டிருந்தார் ராஜீவ்காந்தி. நட்வர் சிங்கும் பக்கத்திலே இருந்துள்ளார். இதுவரை சுதந்திர இந்தியாவில் வெளிநாட்டுத் தலைவர்கள் யாராவது இங்கு வந்து இங்குள்ள அரசியல் தலைவர்களை விமர்சித்தது உண்டா? மரபு மீறப்பட்டு இருக்கிறதே! இதுதான் வெளிவிவகார அமைச்சரவை யினுடைய அணுகு முறையா? அதை ஏன் நீங்கள் கண்டிக்கவில்லை?

” தலைவர் வைகோவின் வினாவுக்கு பதிலளிக்க முடியாத காங்கிரஸ்காரர்கள், எம்.ஜி.ஆர். மீது வைகோவுக்கு என்ன திடீர் காதல்? என்றனர்.உடனே பதிலடி தந்தார் வைகோ. 


“திடீர் காதல் அல்ல. எம்.ஜி.ஆரோடு எங்களுக்கு அரசியல் வேறுபாடு உண்டு. எங்கள் மாநிலத்தின் முதலமைச்சரை இலங்கையில் கொலைவெறி அரசாங்கம் நடத்தக்கூடிய ஜெயவர்த்தனே விமர்சிப்பதை நாங்கள் அனுமதிக்க முடியாது.”

தி.மு.கழகத்தின் எம்.பி.யாக இருந்த போதும்கூட, ஈழவிடுதலைப் போராட்டத்திற்கு எல்லா வகையிலும் துணை நின்றார் எம்.ஜி.ஆர். என்பதற்காக, மனசாட்சிப்படி நாடாளுமன்றத்தில் புரட்சித் தலைவர் அவமதிக்கப்பட்டபோது, அவருக்கு ஆதரவாக குரல் எழுப்பினார்.

நாடாளுமன்றம் முடிந்து டெல்லியில் தமது இல்லம் திரும்புகிறார் வைகோ. சென்னையிலிருந்து ஒரு தொலைபேசி வருகிறது. வைகோ எடுக்கிறார். மறுமுனையில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., தழுதழுத்த குரலில் வைகோவிற்கு நன்றி தெரிவிக்கிறார். எனக்காக, நான் அவமதிக்கப் பட்டதைத் தாங்க முடியாமல், நாடாளுமன்றத்தில் கொதித்து எழுந்து விட்டீர்களே? எப்படி நன்றி கூறுவேன்? என்று வாஞ்சை பொங்க நன்றி தெரிவித்த புரட்சித் தலைவரிடம்,

“நான் எனது கடமையைத்தானே அண்ணே செய்திருக்கிறேன். நீங்கள் எங்களுக்கும் சேர்த்துத்தானே முதல்வர். ஈழவிடுதலைப் போராட்டத்திற்கு எவ்வளவு பக்கபலமாக இருந்தீர்கள்” என்று தலைவர் வைகோ பதில் தந்தார்.
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு என்றார் - அண்ணா
அதை கடைபிடித்தவர் வைகோ . 

பார்த்ததில் பிடித்தது!

CATCH OF THE YEAR 2012.
மனிதர்களாக இனியாவது அவர்கள் வாழ பழகவேண்டும்...

கோயம்புத்தூர் அரசு மருத்துவமனை...


 கழிவுகள் .. மருத்துவமனை வளாகத்துக்குள்ளேயே
கொட்டப் படுகின்றன..
சுவற்றுக்கு அந்தப் பக்கம் தெரிவது
மலைபோல் குவிக்கப்பட்ட நெகிழி க்ளுகோஸ் பாட்டில்கள்
இதில் ஆகக் கொடுமை என்னன்னா
"சுற்றுப்புற சுகாதாரம் நோயற்ற வாழ்வின் ஆதாரம்"
என்கிற அந்த சுவற்று வாசகமே..
இப்படித்தான் நாம்
குப்பை போடாதே என்கிற இடத்திலேயே குப்பை கொட்டுவோம் ..
இன்னொரு மிகக் கொடுமையான வேதனை
இந்தக் குப்பையே இன்னும் அதிகமான கிருமிகளை உண்டு பண்ணுமே..
பாவம் அரசு மருத்துவம்னையை நமபியிருக்கும் நம் மக்கள்..
சம்மந்தப்பட்டவர்கள் ஆவன செய்வார்களா..??

என்ன தவம் செய்தோம் தமிழனாய் பிறந்ததுக்கு...


என்ன தவம் செய்தோம் தமிழனாய் பிறந்ததுக்கு 
கிழக்கே மீனவர்கள் தாக்குதல், 
மேற்கே முல்லைப்பெரியாறு, 
தெற்கே கூடங்குளம்,

இனி வடக்கே மீண்டும் காவிரி,
 
இந்தியன் என்பதில் பெருமிதம் கொ’ல்...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...