இலங்கைத் தமிழர்களுக்காக காலில் சங்கிலி கட்டிக்கொண்டு நடைபயணம் மேற்கொண்ட சம்பவம், புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.புதுச்சேரி நெல்லித்தோப்பைச் சேர்ந்தவர் ரவீந்திரன். இவர், இலங்கையில் வாழும் தமிழர்களைதமிழராக மட்டும் பார்க்காமல், மனிதர்களாகவும்பார்க்க வேண்டும், இலங்கை தமிழர்கள் படும்துயரங்களை அனைவருக்கும் தெரியப்படுத்தும்வகையில், 26.03.2012 அன்று காலை நூதன போராட்டம் நடத்தினார்.சிலுவை போன்ற மரக் கட்டையை ஏந்தி, கை மற்றும் கால்களைச் சங்கிலியால் பிணைத்துக்கொண்டு, கடற்கரை காந்தி சிலை அருகிலிருந்து,நேற்று காலை நடைபயணத்தைத் துவக்கினார்.வழக்கமாக கோரிக்கை மனுக்களை முதல்வர்,அமைச்சர்கள், அதிகாரிகளிடம் கொடுப்பதைத்தான் கேள்விப்பட்டிருப்போம்.
ஆனால் ரவீந்திரன், இலங்கைத் தமிழர்களுக்குப் போதுமானபாதுகாப்பை அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் கோரிக்கை மனுவை, புதுச்சேரியில் முக்கியமான இடங்களில் நிறுவப்பட்டுள்ள மறைந்ததலைவர்களின் சிலைகள் முன் மனுவை ஒட்டிவிட்டு சென்றார்.காந்தி சிலையிடம் மனு அளித்துவிட்டு புறப்பட்ட ரவீந்திரன், நேரு, அண்ணா, ராஜிவ், இந்திரா உள்ளிட்ட பல்வேறு தலைவர்களின் சிலை இருக்கும் பகுதிக்குச் சென்று, அங்கு மனுவை சமர்ப்பித்துவிட்டுச் சென்றார்.இதுபற்றி ரவீந்திரனிடம் கேட்ட போது, "நாட்டில் உள்ள பல தலைவர்கள் பிரச்சனைகளை காதில் வாங்காமல் சிலையாய் நிற்கின்றனர். இதனால், தற்போது சிலையாய் உள்ள தலைவர்களிடம் மனு கொடுக்கிறேன்' என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment