|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

30 November, 2011

எனக்கு எதிரா எவன்டா செய்தி எழுதுறவன்?





ஈரோடு மாநகரத்தின் மேயராக இருப்பவர் அதிமுகவைச் சேர்ந்த மல்லிகா பரமசிவம். இவர் அதிமுக அமைச்சர் ராமலிங்கத்தின்ஆதரவாளர். துணை மேயராக இருக்கும் கே.சி.பழனிச்சாமி அமைச்சர் செங்கோட்டையனின் ஆதரவாளர்.  துணை மேயர் தேர்தலின்போதே மேயருக்கும், துணை மேயருக்கும் மோதல் உருவானது. அடுத்தடுத்து நடந்த கூட்டங்களில் மேயர் மல்லிகா பரமசிவம், துணை மேயரை ஒதுக்கி வைத்து நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். இந்த மோதல் சம்பவமாக தொடர்ந்து காலைக்கதிர் நாளிதழ் செய்தி வெளியிட்டுக்கொண்டே இருந்தது. 

இதனால் ஆத்திரம் அடைந்த மேயர் மல்லிகா பரமசிவம், இன்று மதியம் 1.30 மணி அளவில் ஈரோடு பிரப் ரோட்டில் உள்ள காலைக்கதிர் அலுவலகத்தில் புகுந்து, எனக்கு எதிரா எவன்டா செய்தி எழுதுறவன் என்று அலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டர் மற்றும்டெலிபோன், பேக்ஸ் மிஷனை கீழே தள்ளியுள்ளார். இந்த சம்பவங்களை புகைப்படம் எடுத்த காலைக்கதிர் புகைப்படக்காரர் சண்முகத்தை அடித்து கீழே தள்ளியுள்ளனர். தடுக்க வந்தசெய்தியாளர் கணேசன் என்பவரும் தாக்கப்பட்டார்.  

இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பன்னீர்செல்வத்தை சந்தித்து, காலைக்கதிர் நிர்வாகத்தினர் தங்களுடைய அலுவலகத்தில் அத்துமீறி புகுந்து செய்தியாளர், புகைப்படக்காரர், அலுவலகஉதவியாளர்களை அடித்து பொருட்களை சூறையாடியதாக ஈரோடு மேயர் மல்லிகா பரமசிவம், அவரது உதவியாளர் விஜயா, மகளிர் அணியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் மற்றும் ஓட்டுநர் ஆகியோர் நடவடிக்கை எடுக்குமாறு புகார் கொடுத்துள்ளனர். நாளிதழ் அலுவலகம் தாக்கப்பட்ட செய்தி, பத்திரிகையாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பிணத்தை மீட்க கிணற்றில் குதித்தவரையும் காணவில்லை !




சேலம் நகரத்தில் உள்ள கிக்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிக்கன் வெங்கடேசன். இவர் பெயிண்டர் தொழில் செய்து வந்தார். மாலை நேரங்களில் சில்லி சிக்கன் கடை நடத்தி வரும் இவருக்கும், அந்தப் பகுதியில் உள்ள வேறு சில ரவுடி கும்பலுக்கும் முன் பகை இருந்து வந்துள்ளது. 
நேற்று மாலை கடை போடுவதற்காக மோட்டார் சைக்கிளில் வந்த வெங்கடேசனையும், அவரது நண்பர் புறா சரவணன் என்பவரையும் ஒரு கும்பல் வழி மறித்து வெட்டி கொலை செய்துள்ளனர். வெங்கடேசன் பிணத்தை அதே இடத்தில் போட்டுவிட்டு, புறா சரவணனின் கழுத்தை அறுத்ததுடன், பக்கத்தில் இருந்த 70 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் போட்டுள்ளனர். 

வெங்கடேசன் உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்துச்சென்ற போலீசார், சரவணனின் உடலை எடுப்பதற்காக இரவிலிருந்து மின்சார மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றி வந்தனர். இந்நிலையில் இன்று காலை 10 மணி அளவில் சேலம் பச்சப்பட்டி பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் (வயது 45) என்பவர் தான் கிணற்றில் இறங்கி புறா சரவணனின் உடலை எடுப்பதற்காக குதித்தார்.  
உள்ளே போன ராமலிங்கம் இதுவரை வெளியே வரவில்லை. ராமலிங்கம் நிலைமை என்ன ஆனது என்று தெரியாமல் போலீசார் அவரையும் மீட்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


பச்சிளம் குழந்தை மிதித்து கொலை தந்தையின் வெறிச்செயல்!

வேலூர் பாகாயம் சஞ்சீவிபுரம் முல்லை நகரை சேர்ந்த ஜோசப் மகள் செல்வமேரி(30). இவரது கணவர் காஞ்சிபுரம் புள்ளம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ஏசுபாதம்(30). இவர்களுக்கு கடந்த 2004ம் ஆண்டு திருமணம் நடந்தது. சுரேஷ்குமார் என்ற ஒன்றரை வயது குழந்தை இருந்தது. ஏசுபாதம் அங்கு கள்ளச்சாராய விற்பனை செய்து வருகிறார். இவர் மீது பல்வேறு சாராய வழக்குகளும் உள்ளன. இதனால் அடிக்கடி வீட்டுக்கு போலீசார் விசாரணைக்கு வருவதும், போவதுமாக இருந்ததால் வெறுத்துப்போன செல்வமேரி திருமணமான மூன்றே மாதங்களில் வேலூர் பாகாயத்தில் உள்ள தாய் வீட்டுக்கு வந்து விட்டார். 

இங்கு கூலி வேலைக்கு சென்று வந்தார். ஏசுபாதமும் அடிக்கடி வேலூர் வந்து மனைவியை பார்த்துவிட்டு செல்வாராம். அப்போதெல்லாம் கணவன்&மனைவிக்கு இடையே தகராறு நடக்குமாம். இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு வேலூர் வந்த ஏசுபாதம், தனது மனைவி குழந்தையுடன் தங்கியுள்ளார். அப்போதும் வழக்கம்போல் இருவருக்கும் இடையே தகராறு நடந்துள்ளது. நேற்று இரவு சுமார் 8 மணியளவில் மனைவியிடம் அழுது கொண்டிருந்த குழந்தையை தூக்கிக் கொண்ட ஏசுபாதம், ‘குழந்தையை நான் வைத்துக் கொள்கிறேன். நீ மழையால் சேதமடைந்த மண் சுவரை பூசி மெழுகிவிட்டு வா’ என்று கூறியுள்ளார். 

இதனால் குழந்தையை கணவனிடம் கொடுத்துவிட்டு சென்ற செல்வமேரி, தனது குடிசையின் பின்பக்க சுவரை மண்ணை பிசைந்து பூசி மெழுகிக் கொண்டிருந்தார். அப்போது மனைவியை ஏசுபாதம் அழைத்து, ‘குழந்தை கழிந்துவிட்டது, அதை கழுவ வேண்டும்’ என்று கூறியுள்ளார். செல்வமேரியும் உடனடியாக குழந்தையின் கால்களை கழுவ தூக்கியுள்ளார். அப்போது குழந்தை இறந்திருந்தது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வமேரி கதறி அழுதபடி, ‘குழந்தையை என்ன செய்தாய்?’ என்று கணவரிடம் ஆவேசமாக கேட்டார். இவரது சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். இதை பார்த்த ஏசுபாதம் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

குழந்தையின் சடலத்தை பார்த்த போது, அதன் கழுத்தில் காலால் மிதித்த அடையாளம் இருந்தது. மனைவியின் மீது உள்ள கோபத்தால் தனது குழந்தையை கழுத்தை மிதித்து ஏசுபாதம் கொலை செய்தது தெரிய வந்தது. இதுகுறித்து செல்வமேரி, வேலூர் பாகாயம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து, தலைமறைவான ஏசுபாதத்தை தேடி வந்தனர். வேலூர் புதிய பஸ் நிலையத்தில் பதுங்கியிருந்த ஏசுபாதத்தை போலீசார் இன்று அதிகாலை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், ‘தொடர்ந்து அழுது கொண்டிருந்ததால், குழந்தையின் கன்னத்தில் ஓங்கி அறைந்ததாகவும், அதில் குழந்தை சுருண்டு விழுந்து இறந்ததாகவும்’ தெரிவித்துள்ளார். 

மனிதவளக் கருத்தரங்கம் அனுமதி அளிக்கக்கூடாது ஜெயலலிதாவுக்கு வைகோ!


டிசம்பர் 14, 15 தேதிகளில் இலங்கை தலைநகர் கொழும்புவில் “இன்டிடியூட் ஆப் ஹியூமன் டெவலப்மென்ட் அன்ட்டிரெய்னிங், ஸ்ரீலங்கா” என்ற நிறுவனத்தின் சார்பில் மனிதவளக் கருத்தரங்கம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதே போல கொழும்பு பல்கலைக்கழகம் டிசம்பர் 19, 20, 21 தேதிகளில் கொழும்பில் ஒரு கருத்தரங்கத்தை நடத்துகின்றது.
 
இதில் பங்கேற்க லட்சக்கணக்கான தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டது குறித்து எவ்விதக்கவலையும் கொள்ளாத, இந்தியாவின் பல பல்கலைக்கழகங்களில் இருந்தும் விரிவுரையாளர்கள் செல்கிறார்கள். அதே போல தமிழ்நாட்டின் சில பல்கலைக்கழகங்களில் இருந்தும் விரிவுரையாளர்கள் கலந்து கொள்ள ஆயத்தமாகி வருகிறார்கள். கருத்தரங்கம் நடத்தும் அமைப்பினர் அவர்கள் பெயர்களை வெளியிட்டு இருக்கிறார்கள்.  
 
இலங்கை மீது இந்தியா பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ள நிலையில், தமிழகப் பல்கலைக்கழகங்களில் இருந்தும், அரசுக்கல்லூரிகளில் இருந்தும் விரிவுரையாளர்கள் இலங்கையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது, கோடிக்கணக்கான தமிழர்களின் உணர்வுகளைப்புண்படுத்துவதாக உள்ளது.
 
லட்சக்கணக்கான தமிழ் மக்களைக்கொன்று குவித்த கொலைகார இலங்கை அரசுக்கு ஆதரவு தெரிவித்தது போலவும் ஆகிறது. எனவே தமிழகத்துப் பேராசிரியர்கள் இலங்கை செல்வதை தவிர்த்திடுமாறு கேட்டுக் கொள்கிறேன். தமிழக அரசும் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் இருந்தும், அரசு நிறுவனங்களில் இருந்தும் யாரையும் இலங்கை செல்ல அனுமதி அளிக்கக்கூடாது என்று ம.தி.மு.க. சார்பில் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கோவாவில் தமிழக மாணவர்கள் பதிலடி போராட்டம்! மாணவர்களுக்கு சல்யுட்... !!


புதிய தலைமைச்செயலக கட்டுமானம் குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு நியமித்த ஓய்வு பெற்ற நீதிபதி தங்கராசு ராஜிநாமா!

புதிய தலைமைச்செயலக கட்டுமானம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தங்கராஜை தமிழக அரசு நியமித்தது. 3 மாத காலத்திற்குள் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்யும் படி தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், நீதிபதி தங்கராஜின் நியமனத்தை எதிர்த்து தி.மு.க., சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீது விசாரணை நடைபெற உள்ளது. விசாரணை நாளை நடைபெறுவதாக இருந்த நிலையில் தங்கராஜ் ராஜிநாமா செய்துவிட்டதாக உயர்நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது.

முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததாக தில்லி, சென்னை மற்றும் மதுபானியில் 6 பேரை தில்லி போலீசார் கைது!


நாட்டின் முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததாக தில்லி, சென்னை மற்றும் மதுபானியில் 6 பேரை தில்லி போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களில் 2 பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் இந்திய முஜாஹிதீன் என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் அனைவரும் தில்லி, பெங்களூர், புணே உள்ளிட்ட நகரங்களில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததாக போலீஸார் தெரிவித்தனர். இந்த சதித் திட்டத்துக்கு முக்கிய மூளையாகச் செயல்பட்ட இம்ரான் என்பவர் தப்பி விட்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்த அமைப்பினருக்கு நிதி உதவி செய்வது, பிற உதவிகளை ஒருங்கிணைத்து அளிப்பது உள்ளிட்ட பணிகளை இம்ரான் செய்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர். 2010-ம் ஆண்டு செப்டம்பர் 19-ம் தேதி தில்லியில் உள்ள ஜும்மா மசூதிக்கு வெளியே காரில் வெடி குண்டு வைத்தது இம்ரான் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
இத்தகைய சதிச் செயலுக்குத் திட்டம் தீட்டிய தஹ்ரீர் என்ற பயங்கரவாதியையும் போலீசார் தேடி வருகின்றனர். 2008-ம் ஆண்டு தில்லியில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு மற்றும் கடந்த செப்டம்பர் 7-ம் தேதி தில்லி உயர்நீதிமன்றத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்புச் சம்பவங்களில் தஹ்ரீர் முக்கிய கருவியாக செயல்பட்டதாகப் போலீஸ் தெரிவித்தனர்.கைது செய்துள்ளவர்களில் சிலர் 2010-ம் ஆண்டு பிப்ரவரி 13-ம் தேதி புணேயில் உள்ள ஜெர்மன் பேக்கரி வெடி விபத்து, ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின்போது பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்துக்கு வெளியே ஏப்ரல் 17, 2010-ம் ஆண்டு குண்டு வைத்தது, காமன்வெல்த் போட்டிகள் தொடங்கும் முன்பாக ஜும்மா மஸ்ஜித்துக்கு வெளியே செப்டம்பர் 19, 2010-ல் குண்டு வைத்தது உள்ளிட்ட வழக்குகளில் இவருக்கு தொடர்பிருந்ததாக போலீஸôர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் அப்சல், அஜ்மல் ஆகியோர் போலி பாஸ்போர்ட் வழக்கு தொடர்பாக மதுபானியில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொறியியல் கல்லூரி மாணவர் ரெஹ்மான் மற்றும் இர்ஷத்கான் ஆகியோர் சென்னையில் கைது செய்யப்பட்டனர். சித்திக், ஜாபர் ஆகியோர் தில்லியில் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். 2 ஏகே 47 ரகத் துப்பாக்கி, 3 கிலோ வெடிப்பொருள், 5 டெட்டனேட்டர்கள், ரூ. 2 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டு உள்ளிட்டவை இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இருவர் இருவராக தாக்குதல் நடத்துவது என்கிற ரீதியில் இவர்கள் திட்டமிட்டிருந்தனர். ஜெர்மன் பேக்கரி அருகே நிகழ்ந்த வெடி விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர், 40-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். ஜும்மா மசூதி வெடிச் சம்பவம் தொடர்பாக இப்போதுதான் முதல் முறையாக 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.  

கனிமொழி எந்த தொந்தரவும் செய்யாமல் நல்லவிதமாக நடந்துகொண்டார் திகார் சிறை அதிகாரி!


திமுக எம்பி கனிமொழி எந்த தொந்தரவும் செய்யாமல் நல்லவிதமாக நடந்துகொண்டார் என்று திகார் சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிறையில் இருந்த வரைக்கும் திமுக எம்பி கனிமொழி தான் உண்டு, தன் வேலையுண்டு என்று அமைதியாக இருந்தார் என்று அவர்கள் தெரிவித்தனர். 2 ஜி ஊழல் வழக்கி்ல் கைதான திமுக எம்பி கனிமொழி கடந்த மே மாதம் 20ம் தேதி முதல் நேற்று மாலை வரை திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு தில்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை அடுத்து நேற்றிரவு சிறையில் இருந்து வெளியே வந்தார். இந்த நிலையில் சிறையில் இருந்தபோது அவர் சட்ட, திட்டங்களுக்கு உட்பட்டு நல்லவிதமாக நடந்து கொண்டதாக சிறை அதிகாரிகள் நற்சான்றிதழ் கொடுத்துள்ளனர்.
அவர் சிறையில் இருந்தபோது பெரும்பாலான நேரத்தை புத்தகங்கள் வாசிப்பதில் செலவிட்டார். அவரை சிறை நூலகத்தில் அடிக்கடி காணலாம். விஐபி அந்தஸ்தில் இருந்தாலும் அவர் மிகவும் எளிமையாக இருந்தார். எங்களுக்கு எந்த தொந்தரவும் கொடுத்ததில்லை. கடந்த மாதம் அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்ட போதும், சிறையில் அவரது தந்தையும், திமுக தலைவருமான கருணாநிதியைப் பார்த்தபோதும், தனது மகனைப் பார்த்தபோதும் அவரால் அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் கதறி அழுதார்.
அவர் சிறைக்குள் தியானம் செய்வார். சிறைக்கு வந்த புதிதில் சிறை வளாகத்தில் நடக்கும் மெழுகுவர்த்தி தயாரித்தல் இடத்திற்கு சென்று மெழுகுவர்த்தி செய்வது எப்படி என்று கற்றுக் கொண்டார். மேலும் பானை செய்தல், டெய்லரிங் வேலை உள்ளிட்ட பணிகள் நடக்கும் இடங்களுக்கும் சென்றார். மற்றபடி டிவி பார்ப்பார். பிற கைதிகளைப் போன்று அவர் அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்டதில்லை என சிறைத்துறையினர் தெரிவித்தனர்.

ஐகோர்ட் தலைமை நீதிபதிகளுக்கு இணையான அந்தஸ்தை, எம்.பி.,க்களுக்கு வழங்க வேண்டும் லோக்சபா உரிமை கமிட்டி!


ஐகோர்ட் தலைமை நீதிபதிகளுக்கு இணையான அந்தஸ்தை, எம்.பி.,க்களுக்கு வழங்க வேண்டும். அவர்களின் கார்களில், சுழலும் சிவப்பு விளக்குகள் பொருத்த அனுமதிக்க வேண்டும்' என்பது உட்பட பல சலுகைகளை, அவர்களுக்கு வழங்க வேண்டும் என, லோக்சபா உரிமை கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.

கடந்த செவ்வாயன்று, பார்லிமென்டின் குளிர்காலக் கூட்டத் தொடர் துவங்கியது. இதுவரை ஒரு நாள் கூட சபை முழுமையாக செயல்படவில்லை. பல்வேறு பிரச்னைகளால் அமளி, கூச்சல், குழப்பம் ஏற்பட்டு, சபைகள் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன. இதனால், எம்.பி.,க்கள் யாரும், தங்களின் பணியை முழுமையாகச் செய்யவில்லை. இந்நிலையில், நேற்று லோக்சபா ஒத்திவைக்கப்படுவதற்கு முன், காங்கிரஸ் எம்.பி., சாக்கோ தலைமையிலான பார்லிமென்ட் உரிமைக் கமிட்டி, தன் பரிந்துரைகளை, சபையில் தாக்கல் செய்தது. அந்தப் பரிந்துரைகளில் கூறப்பட்டுள்ளதாவது:

*எம்.பி.,க்களின் கார்களில், சிவப்பு விளக்குகள் பொருத்த அனுமதிக்க வேண்டும். இதற்கு ஏற்ற வகையில், மத்திய மோட்டார் வாகன சட்ட விதிகளின் கீழ், மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சகம் அறிவிக்கை வெளியிட வேண்டும்.
*அரசின் வி.ஐ.பி.,க்கள் பட்டியலில், எம்.பி.,க்களுக்கான முக்கியத்துவம் தற்போது, 21ம் இடத்தில் உள்ளது. அதை 17 ஆக குறைக்க வேண்டும்.
*ஐகோர்ட் தலைமை நீதிபதிகளுக்கு இணையான அந்தஸ்தையும், உரிமையையும் எம்.பி.,க்களுக்கு வழங்க வேண்டும்.
*லோக்சபா முன்னாள் சபாநாயகர்களுக்கு, மத்திய கேபினட் அமைச்சர்கள், முன்னாள் பிரதமர்கள், லோக்சபா மற்றும் ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு இணையான அந்தஸ்து வழங்க வேண்டும். அவர்களுக்குள்ள உரிமைகளை எங்களுக்கும் தர வேண்டும்.
*அதே நேரத்தில், அரசின் வி.ஐ.பி.,க்கள் பட்டியலில், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியுடன் சேர்ந்து, லோக்சபா சபாநாயகருக்கும், 6வது இடம் வழங்க வேண்டும்.
*அரசின் வி.ஐ.பி.,க்கள் பட்டியலில், எம்.பி.,க்களின் இடத்தை, 17ஆக உயர்த்துவதன் மூலம், மாநில அமைச்சர்களுக்கு மேலான அந்தஸ்தை (அவர்களின் தரவரிசை 18) பெறுவர்.
*எம்.பி.,க்களை கையாளும் போது, மரியாதையற்ற வகையில், அவர்களை அதிகாரிகள் நடத்துவது தவிர்க்கப்பட வேண்டும்.
*மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகள் சார்பில், அவ்வப்போது சுற்றறிக்கைகள் வினியோகிக்கப்படுகின்றன. அவை எல்லாம் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். இவற்றை அரசு பொறுப்பில் உள்ளவர்களின் கவனத்திற்கும் அவ்வப்போது கொண்டு செல்ல வேண்டும்.இவ்வாறு பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே நாள்...



  •  உலக எய்ட்ஸ் தினம்
  •  மியான்மர் தேசிய தினம்
  •  பனாமா ஆசிரியர் தினம்
  •  இந்தியாவில் எல்லைக் காவல்படை அமைக்கப்பட்டது(1965)
  •  நாகாலாந்து, இந்தியாவின் 16வது மாநிலமானது(1963)

மத்திய அமைச்சர் அழகிரியின் எம்.பி., அலுவலகத்தை பறிமுதல் செய்ய, மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் !

 மத்திய அமைச்சர் அழகிரியின் எம்.பி., அலுவலகத்தை பறிமுதல் செய்ய, மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நேற்று நடந்த மாநகராட்சி கூட்டத்தில் 22 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவசர கூட்டத்தீர்மானமாக மூன்று தீர்மானங்களை மேயர் ராஜன் செல்லப்பா கொண்டு வந்தார். அதில், "மதுரை மேலமாரட் வீதியில் மாநகராட்சியின் பழைய தெற்கு மண்டல அலுவலகம் இருந்தது. தற்போது மண்டலம் 4 என பெயர் மாற்றப்பட்டுள்ளது. அதன் கீழ் தளத்தில், 2,000 ச.அ., பரப்பு கொண்ட அலுவலகத்தை, "மதுரை எம்.பி., அலுவலகமாக வாடகை இன்றி பயன்படுத்த,' 2009 செப்., 24ல் மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி ஒப்படைத்தனர். தற்போது மாநகராட்சி விரிவாக்கத்தில் அவனியாபுரம், திருப்பரங்குன்றம், திருநகர், ஹார்விபட்டி, புதுக்குளம் பிட்2, தியாகராஜர் காலனி பகுதிகள் மண்டலம் 4ல் இணைந்தன. அதற்கான அலுவலர்கள் பணியாற்ற, போதிய இடவசதி இல்லை. அவர்களிடமிருந்து பெற்ற ஆவணங்களை வைக்கவும் இடம் தேவைப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு, கடந்த 2009 அக்., முதல் செயல்படாத, மதுரை எம்.பி., அலுவலகத்தை பயன்படுத்தவும், 2009ல் நிறைவேற்றிய தீர்மானத்தை ரத்து செய்யவும் அனுமதிக்க வேண்டும்,' என குறிப்பிடப்பட்டு இருந்தது. தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்த நிலையில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேயர் ராஜன்செல்லப்பா கூறியதாவது: தீர்மானம் குறித்து, அழகிரிக்கு கடிதம் அனுப்பப்படும். அதைத்தொடர்ந்து, அலுவலகத்தை மாநகராட்சி பயன்பாட்டிற்கு எடுப்போம், என்றார்

இன்று டிசம்பர் 1 உலக எய்ட்ஸ் தினம்!


மனித குலத்தின் இறையாண்மைக்கும், விஞ்ஞான அறிவுக்கும் விடப்பட்ட சவால், "எய்ட்ஸ்'. உயிர்க்கொல்லி நோயான எய்ட்ஸ்க்கு தடுப்பு மருந்து எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. மரணத்தை சிறிது காலம் தள்ளிப்போட மட்டுமே மாத்திரைகள் உள்ளன.

இந்த நோய் பாதிப்பால், மனிதநேயமும், குடும்ப உறவுகளும் குப்பைக்கு சென்று கொண்டிப்பது வேதனைக்குரிய ஒன்று. எய்ட்ஸ் பாதித்தோரை, ஊர் மக்கள் ஒதுக்கி வைப்பதும், குடும்பத்தில் இருந்து வெளியேற்றுவதும் வாடிக்கையாக அரங்கேறுகிறது. அத்தகைய புறக்கணிப்பு, மனிதநேய மாண்பு சிதையுற்றும், சீரழிந்தும் இருப்பதையே நமக்கு உணர்த்துகிறது.இன்றைய சூழலில், எய்ட்ஸ் பாதித்தோருக்கு அன்பும், ஆதரவும் கொடுத்து பாதுகாக்க வேண்டியது அவசியம். எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு, நாட்டின் அனைத்து பகுதியிலும் தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது. விழிப்புணர்வு மூலம் நோய் பாதித்தோரை அரவணைக்கும் சூழ்நிலையை உருவாக்க முடியும்.உலகத்தில் வாழும் மனிதர்களுக்கு ஏற்பட்ட ஆபத்துதான் எய்ட்ஸ் நோய் என்பதை நினைவூட்டும் நாள் இன்று (டிச., 1). இந்தியாவில், ஹெச்.ஐ.வி., எய்ட்ஸால் பாதிக்கப்பட்டோர் அதிகம் உள்ள மாநிலங்களில், தமிழகமும் ஒன்று. கர்நாடகா, ஆந்திரா, மஹாராஷ்டிரா, மிசோராம், நாகாலந்து உள்ளிட்ட மாநிலங்களிலும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

லாரி தொழிலுக்கு மையமாக இருக்கும் நாமக்கல் மாவட்டம், கடந்த 2005ல் தமிழகத்திலேயே ஹெச்.ஐ.வி., எய்ட்ஸ் நோயால் பாதிப்படைந்தோர் பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. பல்வேறு அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் மேற்கொண்ட விழிப்புணர்வு பிரச்சாரத்தால், நாமக்கல் மாவட்டத்தில் ஹெச்.ஐ.வி., பாதிப்பு குறைந்து, முதலிடத்தில் இருந்து மூன்றாமிடத்துக்கு வந்துள்ளது.தமிழகத்தில், தேனி, கரூர் மாவட்டங்கள் ஹெச்.ஐ.வி., பாதிப்பில் முன்னணியில் உள்ளன. நாமக்கல் மாவட்டம் போன்று அம்மாவட்டங்களிலும் தீவிர விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

இந்திய ஒற்றுமையைக் காக்க வேண்டும் தமிழக மாணவர்கள்!


கடந்த நவம்பர் 23-ஆம் தேதி முதல் கோவா மாநிலம் பனாஜியில் 42-ஆவது சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றுவருகிறது. பல நாடுகளிலிருந்தும், இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் திரைப்படத் துறையினரும், மாணவர்களுமாக மொத்தம் 8ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் நேற்று (நவம்பர் 29) மதியம் உணவு இடைவேளைக்குப் பிறகு திரைப்பட விழா நடக்கும் வளாகத்தில் கூடிய கேரளாவைச் சேர்ந்த நடிகர் ’ஒரு தலை ராகம்’ ரவீந்தர், சில பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 30 பேர் ‘முல்லைப் பெரியாறு அணை இடிந்துவிடும்’ என்றும், ’புதிய அணையைக் கட்ட வேண்டும்’ என்றும் குரல் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, வளாகத்திற்குள்ளேயே ஊர்வலம் போலவும் நடத்தினர். 

இதனைக் கண்டு வெகுண்டெழுந்த பல்வேறு திரைப்படக் கல்லூரிகளைச் சேர்ந்த தமிழ் மாணவர்கள், திரைப்படத் துறையினர் 50-க்கும் மேற்பட்டோர் உடனடியாக ஒன்றுகூடி, ”8000 ஏக்கர் விளைநிலம், 3 கோடி மக்கள் வறட்சியில் சாகும் அவலத்தைத் தடுக்க வேண்டும்”, “முல்லைப் பெரியாறு அணையைக் காக்க வேண்டும்”, “அணையைச் சிதைப்பது, இந்திய ஒற்றுமையைச் சிதைத்துவிடும்”, “அன்பிற்குரிய கேரள மக்கள், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்கவேண்டும்” “அன்பிற்குரிய கேரள மக்களே! ஏன் இந்த கொலைவெறி” என்றும் தொடர்ந்து உரக்க முழக்கம் எழுப்பி ஊர்வலம் சென்றனர். உடனடியான இந்த பதில் நடவடிக்கையைக் கண்டவர்கள் வியப்படைந்தனர். இரண்டு குழுவினரும் முழக்கம் எழுப்பி ஊர்வலம் சென்றதால் அங்கு சிறிதுநேரம் பதற்றம் நிலவியது. 

செய்தியாளர்களிடையே பேசிய மாணவர்கள், “கேரள அரசு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து உடனடியாக தன்னுடைய நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும். முல்லைப் பெரியாறு தமிழக மக்களின் வாழ்வாதாரம். அதனை ஒருபோதும் விட்டுத் தர முடியாது. இதற்காக தமிழக மாணவர்கள் போராடுவார்கள்” என்று தெரிவித்தனர். இந்திய, சர்வதேச பத்திரிகையாளர்கள், பார்வையாளர்களிடம் அவர்கள் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை தொடர்பான உண்மை நிலைமையினை விளக்கினர்.

பிறகு அங்கு வந்த காவல்துறையினர் தமிழ் மாணவர்களைக் கலைந்து செல்லுமாறு வேண்டினர். ”கேரளப் போராட்டக் குழுவினர் கலைந்து சென்றால் தான் நாங்களும் கலைந்து செல்வோம். அவர்கள் ஒரு வேளை போராட்டம் செய்தால் தொடர்ந்து பதில் நடவடிக்கைகளில் ஈடுபடுவோம்” என்று எச்சரிக்கை விடுத்து, பின்னர் கேரள போராட்டக் குழுவினர் கலைந்து சென்றதும் தமிழ்மாணவர்களும் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

பணம் கொடுத்து தேர்வில் வெற்றி பெறுவது முடியவே முடியாது அண்ணா பல்கலை துணைவேந்தர்!


பணம் வாங்கிக் கொண்டு தேர்வில் தேர்ச்சி பெற உதவுவதாக கூறி அணுகும் நபர்களை நம்பி ஏமாற வேண்டாம். எந்த தவறான வழிமுறைகளிலும் கூடுதல் மதிப்பெண்களை பெற முடியாதவாறு பல்கலையின் மதிப்பீட்டு நடவடிக்கைகள் பாதுகாக்கப்பட்டுள்ளன,'' என்று கோவை அண்ணா தொழில் நுட்ப பல்கலை துணைவேந்தர் கருணாகரன் கூறினார்.கோவை அண்ணா தொழில் நுட்ப பல்கலையின் கீழ் செயல்பட்டு வரும் தனியார் இன்ஜி., கல்லூரி மாணவர் ஒருவர் சமீபத்தில் தேர்வில் தோல்வி அடைந்தார். தோல்வி அடைந்த பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்றுத்தருவதாக அண்ணாமலை பல்கலையை சேர்ந்த ஒரு உதவி பேராசிரியர் ரூ.3 லட்சம் பெற்று மோசடி செய்த சம்பவம் சமீபத்தில் வெளியானது. கோவை அண்ணா தொழில் நுட்ப பல்கலை துணைவேந்தர் கருணாகரன் கூறியதாவது:கோவை அண்ணா தொழில் நுட்ப பல்கலையின் தேர்வுத்தாள் திருத்தும் பணி, பாதுகாக்கப்பட்ட ஒரு பணித்திட்டம். குறுக்கு வழிகளில் ஈடுபட்டு தேர்வில் வெற்றி பெறும் வழிமுறையை தடுக்கும் பல்வேறு பரிசோதனை அளவீடுகள் இத்திட்டத்தில் உள்ளன. கோவை அண்ணா தொழில்நுட்ப பல்கலையில் கோவை, சேலம், ஈரோடு ஆகிய மூன்று மண்டலங்கள் உள்ளன. 

மைய தேர்வுத்தாள் திருத்தும் பணி இம்மூன்று மண்டலங்களிலும் ஒரே நேரத்தில் நடக்கிறது.பல்வேறு கல்லூரிகளில் இருந்து பெறப்படும் விடைத்தாள்கள் பாடவாரியாக தொகுக்கப்படுகின்றன. அவை, பிரிக்கப்பட்டு வெவ்வேறு மண்டலங்களுக்கு அனுப்பப்படுகின்றன. மாணவரின் அடையாளக் குறிப்புகள், மாற்றுக் குறி எண்கள் மூலம் நீக்கப்பட்டு, அது குறித்த தகவல்கள் வெளியாகாமல் பாதுகாக்கப்படுகின்றன. தேர்வுத்தாள் திருத்தும் பணியையும், திருத்தும் பணியில் ஈடுபடும் பேராசிரியர்களையும் கண்காணிக்க, பல்கலையில் இருந்து முதன்மை தேர்வு அலுவலர், தேர்வு திருத்தும் துறைத் தலைவர், முகாம் அலுவலர், மண்டல அலுவலர், மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். தேர்வுத்தாள் திருத்தும் பணி முடிந்தபின், மாற்றுக் குறியீட்டு எண்கள் மாணவர்களின் பதிவு எண்களுடன் பொருத்தும் பணி நடக்கிறது. 

அவை ஓ.எம்.ஆர். தாள்களில் மதிப்பெண்களாக குறிக்கப்பட்டு, தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்காக அனுப்பி வைக்கப்படுகின்றன. தேர்வு கட்டுப்பாட்டுத் துறையினர் ஓ.எம்.ஆர். மதிப்பெண்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்து தேர்வு முடிவுகளை வெளியிடுகிறது.இந்த பல்வேறு கட்டங்களில், மனிதர்களின் பங்களிப்பு பல நிலைகளில் இருந்தபோதும், பெரிய அளவில் பாதுகாப்பு நிலை பின்பற்றப்படுகிறது. விடைத்தாள்களின் மறு மதிப்பீட்டிலும் இதே முறை பின்பற்றப்படுகிறது. மாணவர்களும் பெற்றோரும் இது குறித்து விழிப்புடன் இருந்து தங்கள் நேரத்தையும், பணத்தையும் இது போன்ற தவறான செயல்களில் செலவிடுவதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக, அவர்கள் தோல்வி அடைந்த பாடங்களில் சிறப்பு பயிற்சி பெற இப்பணத்தை செலவிடலாம். சில பல்கலைகளில் நியாயத்துக்கு புறம்பான நடவடிக்கைகள் நடைபெறுவதாக சில கல்வியாளர்கள் குறிப்பிடுகின்றனர். அப்பல்கலைகளின் பெயர்களை வெளியிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கல்வியாளர்கள் முன்வர வேண்டும்.இவ்வாறு, துணைவேந்தர் கூறினார்.

தமிழக எம்.பி.,க்கள் சொதப்பல்...


முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், தமிழக அரசியல் கட்சிகள் டில்லியில் சொதப்போ சொதப்பென, சொதப்பி வருகின்றன. "டேம் 999' சினிமா மற்றும் பத்திரிகைகள் மூலம் இப்பிரச்னையை பெரிய அளவில் தூண்டிவிட்டு குளிர்காய, கேரளா முயன்று, அதில் ஓரளவு வெற்றி பெற்றுள்ள நிலையில், அரசியல் ரீதியாக தீவிரப்படுத்த அம்மாநில எம்.பி.,க்களும், மத்திய அமைச்சர்களும் ஒருங்கிணைந்துள்ளனர்.ஆனால், பாழாய் போன "ஈகோ' காரணமாக இவ்விஷயத்தில், தமிழக எம்.பி.,க்கள் ஆளுக்கொரு திசையில் டில்லியில் நிற்கின்றனர்.

சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு பிரச்னையை பார்லிமென்டின் இரு சபைகளிலும், அனைத்து கட்சிகளும் கிளப்பி வருகின்றன. ஆனால், கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ், கேரள காங்கிரஸ், இடதுசாரி எம்.பி.,க்கள் எல்லாம், சொல்லி வைத்தாற்போல முல்லைப் பெரியாறு பிரச்னைக்காக பேனர் பிடித்தபடிநிற்கின்றனர்.சபை ஒத்திவைக்கப்பட்டால், காந்தி சிலை முன்பாக பேனர் பிடித்தபடி கோஷம் போடுகின்றனர். மற்றவர்களுக்கு எப்படியோ, கேரள எம்.பி.,க்களுக்கு தினந்தோறும் பிரச்னை என்றால், அது முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தான். அம்மாநில எம்.பி.,க்கள் கடந்த வாரம் தான் பிரதமரை சந்தித்தனர்.அதற்குள், நேற்றும் பிரதமரை சந்தித்து இவ்விவகாரத்தில் தலையிடுங்கள் என வலியுறுத்தினர். கட்சி வித்தியாசம் பார்க்காமல், அனைவருமே ஓரணியாக பிரதமரை சந்தித்தனர். தவிர, கேரள அமைச்சரவை சார்பாக, அமைச்சர்கள் ஜோசப் மற்றும் ராதாகிருஷ்ணனும் பிரதமரை சந்தித்துப் பேசினர்.

தமிழக நிலை தலைகீழ் : தமிழகத்தின் நிலையோ, பார்லிமென்டில் நேற்று தலைகீழாக இருந்தது. கேரள எம்.பி.,க்களின் வேகத்தை பார்த்துவிட்டு, தமிழக எம்.பி.,க்களும் காந்தி சிலை அருகே தர்ணா செய்யப் போகின்றனர் என்ற செய்திபரவியது.அங்கு சென்று பார்த்தால், திருமாவளவன் தலைமையில் கோவை நடராஜன், தென்காசி லிங்கம், ஈரோடு கணேசமூர்த்தி என, நான்குபேர் தர்ணாவில் அமர்ந்திருந்தனர். "புரளியை கிளப்பாதே, பொய் செய்தியை பரப்பாதே' என, அந்த நான்கு பேர் மட்டுமே கோஷமிட்டபடி இருந்தனர். அந்த நேரத்தில், காங்கிரஸ் எம்.பி.,யான கே.எஸ். அழகிரி அங்கு வந்து, அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

போட்டி தர்ணா: இவர்களுக்கு போட்டியாக, சில அடி தூரத்தில் கேரளா எம்.பி.,க்கள் 20க்கு மேற்பட்டோர் ஒட்டு மொத்தமாக அமர்ந்து, கோஷங்கள் எழுப்பினர். சில நிமிடங்களில் கேரளாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் வயலார் ரவி, இ.அகமது, முள்ளப்பள்ளி ராமச்சந்திரன் ஆகியோர் வந்து கேரளா எம்.பி.,க்களுக்கு தார்மீக ஆதரவு அளித்துவிட்டு, பின்னர், தமிழக எம்.பி.,க்களிடம் வந்து, "தண்ணீர் தருகிறோம், எங்களுக்கு பாதுகாப்பு தாருங்கள்' என, சிரித்தபடியே திருமாவளவனிடம் கூறிச் சென்றனர்.அடுத்த அரைமணி நேரத்தில், பிரதமர் மன்மோகன் சிங்கை தி.மு.க., எம்.பி.,க்கள் சந்தித்து மனு அளித்தனர். தமிழக மீனவர் பிரச்னை மற்றும் முல்லைப் பெரியாறு அணை பிரச்னைக்காக, தனித்தனி மனுக்களை டி.ஆர்.பாலு தலைமையில் அளித்துவிட்டு வந்தனர்.அங்கும் திருமாவளவன் வந்திருந்தார். அவர்கள் சென்ற சில நிமிடங்களில், தமிழக காங்கிரஸ் எம்.பி.,க்கள் அழகிரி, சித்தன், விஸ்வநாதன், ராமசுப்பு, மாணிக் தாக்கூர், ஆருண் ஆகியோர் வந்திருந்தனர். அவர்களும்தங்கள் பங்கிற்கு மனு அளித்துவிட்டு சென்றனர்.முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில், இப்படி தமிழக எம்.பி.,க்கள் ஒற்றுமை, ஒருங்கிணைப்பு இல்லாமல் ஆளுக்கொரு திசையில் நின்றபடி, தனி ஆவர்த்தனம் வாசித்தபடி உள்ளனர். அதேநேரத்தில், இந்த விவகாரத்தில், அரசியல் ஒற்றுமை காட்டி, தற்போதைக்கு கேரளா முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதே உண்மை.

அழைப்பை நிராகரித்த எம்.பி.,க்கள் :கேரள எம்.பி.,க்களுக்கு பதிலடி தர, காந்தி சிலை முன் ஆர்ப்பாட்டம் செய்யும் முடிவை எடுத்து, அது பற்றி தி.மு.க., எம்.பி.,க்களுக்கும், திருமாவளவன் அழைப்பு விடுத்தார்.அவர்களோ, "நாங்கள் பிரதமரை சந்தித்து மனு தரப்போகிறோம்' எனக் கூறிவிட்டு, தர்ணாவில் பங்கேற்காமல் நாசூக்காக கழன்றனர். அ.தி.மு.க., எம்.பி.,க்களை அழைத்த போது, "அம்மாவிடம் இருந்து அனுமதி கிடைக்காமல் வரமுடியாது' என்று சொல்லி விட்டனர்.இடதுசாரி எம்.பி.,க்களில் கூட லிங்கமும், நடராஜனும் மட்டுமே பங்கேற்றனர். இடதுசாரி மூத்த எம்.பி.,க்களான டி.ராஜா மற்றும் டி.கே.ரங்கராஜன் ஆகியோர் வரவில்லை.கேரளாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியே சென்று, பிரதமரை சந்தித்து இப்பிரச்னை குறித்து பேசினர். ஏ.கே.அந்தோணி கூட இவ்விஷயமாக பிரதமரிடம் பேசியுள்ளார்.

பார்த்ததில் பிடித்தது!


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...