நாட்டின் முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததாக தில்லி, சென்னை மற்றும் மதுபானியில் 6 பேரை தில்லி போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களில் 2 பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் இந்திய முஜாஹிதீன் என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் அனைவரும் தில்லி, பெங்களூர், புணே உள்ளிட்ட நகரங்களில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததாக போலீஸார் தெரிவித்தனர். இந்த சதித் திட்டத்துக்கு முக்கிய மூளையாகச் செயல்பட்ட இம்ரான் என்பவர் தப்பி விட்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்த அமைப்பினருக்கு நிதி உதவி செய்வது, பிற உதவிகளை ஒருங்கிணைத்து அளிப்பது உள்ளிட்ட பணிகளை இம்ரான் செய்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர். 2010-ம் ஆண்டு செப்டம்பர் 19-ம் தேதி தில்லியில் உள்ள ஜும்மா மசூதிக்கு வெளியே காரில் வெடி குண்டு வைத்தது இம்ரான் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
இத்தகைய சதிச் செயலுக்குத் திட்டம் தீட்டிய தஹ்ரீர் என்ற பயங்கரவாதியையும் போலீசார் தேடி வருகின்றனர். 2008-ம் ஆண்டு தில்லியில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு மற்றும் கடந்த செப்டம்பர் 7-ம் தேதி தில்லி உயர்நீதிமன்றத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்புச் சம்பவங்களில் தஹ்ரீர் முக்கிய கருவியாக செயல்பட்டதாகப் போலீஸ் தெரிவித்தனர்.கைது செய்துள்ளவர்களில் சிலர் 2010-ம் ஆண்டு பிப்ரவரி 13-ம் தேதி புணேயில் உள்ள ஜெர்மன் பேக்கரி வெடி விபத்து, ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின்போது பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்துக்கு வெளியே ஏப்ரல் 17, 2010-ம் ஆண்டு குண்டு வைத்தது, காமன்வெல்த் போட்டிகள் தொடங்கும் முன்பாக ஜும்மா மஸ்ஜித்துக்கு வெளியே செப்டம்பர் 19, 2010-ல் குண்டு வைத்தது உள்ளிட்ட வழக்குகளில் இவருக்கு தொடர்பிருந்ததாக போலீஸôர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் அப்சல், அஜ்மல் ஆகியோர் போலி பாஸ்போர்ட் வழக்கு தொடர்பாக மதுபானியில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொறியியல் கல்லூரி மாணவர் ரெஹ்மான் மற்றும் இர்ஷத்கான் ஆகியோர் சென்னையில் கைது செய்யப்பட்டனர். சித்திக், ஜாபர் ஆகியோர் தில்லியில் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். 2 ஏகே 47 ரகத் துப்பாக்கி, 3 கிலோ வெடிப்பொருள், 5 டெட்டனேட்டர்கள், ரூ. 2 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டு உள்ளிட்டவை இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இருவர் இருவராக தாக்குதல் நடத்துவது என்கிற ரீதியில் இவர்கள் திட்டமிட்டிருந்தனர். ஜெர்மன் பேக்கரி அருகே நிகழ்ந்த வெடி விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர், 40-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். ஜும்மா மசூதி வெடிச் சம்பவம் தொடர்பாக இப்போதுதான் முதல் முறையாக 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
No comments:
Post a Comment