திமுக எம்பி கனிமொழி எந்த தொந்தரவும் செய்யாமல் நல்லவிதமாக நடந்துகொண்டார் என்று திகார் சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிறையில் இருந்த வரைக்கும் திமுக எம்பி கனிமொழி தான் உண்டு, தன் வேலையுண்டு என்று அமைதியாக இருந்தார் என்று அவர்கள் தெரிவித்தனர். 2 ஜி ஊழல் வழக்கி்ல் கைதான திமுக எம்பி கனிமொழி கடந்த மே மாதம் 20ம் தேதி முதல் நேற்று மாலை வரை திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு தில்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை அடுத்து நேற்றிரவு சிறையில் இருந்து வெளியே வந்தார். இந்த நிலையில் சிறையில் இருந்தபோது அவர் சட்ட, திட்டங்களுக்கு உட்பட்டு நல்லவிதமாக நடந்து கொண்டதாக சிறை அதிகாரிகள் நற்சான்றிதழ் கொடுத்துள்ளனர்.
அவர் சிறையில் இருந்தபோது பெரும்பாலான நேரத்தை புத்தகங்கள் வாசிப்பதில் செலவிட்டார். அவரை சிறை நூலகத்தில் அடிக்கடி காணலாம். விஐபி அந்தஸ்தில் இருந்தாலும் அவர் மிகவும் எளிமையாக இருந்தார். எங்களுக்கு எந்த தொந்தரவும் கொடுத்ததில்லை. கடந்த மாதம் அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்ட போதும், சிறையில் அவரது தந்தையும், திமுக தலைவருமான கருணாநிதியைப் பார்த்தபோதும், தனது மகனைப் பார்த்தபோதும் அவரால் அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் கதறி அழுதார்.
அவர் சிறைக்குள் தியானம் செய்வார். சிறைக்கு வந்த புதிதில் சிறை வளாகத்தில் நடக்கும் மெழுகுவர்த்தி தயாரித்தல் இடத்திற்கு சென்று மெழுகுவர்த்தி செய்வது எப்படி என்று கற்றுக் கொண்டார். மேலும் பானை செய்தல், டெய்லரிங் வேலை உள்ளிட்ட பணிகள் நடக்கும் இடங்களுக்கும் சென்றார். மற்றபடி டிவி பார்ப்பார். பிற கைதிகளைப் போன்று அவர் அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்டதில்லை என சிறைத்துறையினர் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment