|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

15 January, 2012

அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!

பொங்கட்டும் பொங்கல் பானையிலும், நல் எண்ணங்கள் நம் மனதினிலும், பொங்கலோ பொங்கல், பொங்கலோ பொங்கல்,பொங்கலோ பொங்கல், அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள், ஒவ்வொரு தை பிறக்கும் போதும் தமிழன் தன் வாழ்நாளில் புதியதொரு வழி பிறந்ததாக நினைத்து, மேலும் மேலும் பல வெற்றிகளை பெற்று முன்னேறி செல்ல இந்த நன்னாளை நமக்கான பொன்னாளாக, நாம் சரியான முறையில் பயன்படுத்தி கொள்வோம் என்று உறுதி ஏற்போம். 

தை பிறந்தால் வழி பிறக்கும்...

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை1) - லாபம்
உழைப்பால் வாழ்வில் உயர்வு பெறும் மேஷராசி உங்கள் ராசிநாதன் செவ்வாய் ஐந்தாம் இடத்தில் மாறுபட்ட குணத்துடன் இருந்தாலும், அவர்மீது குருவின் ஐந்தாம்பார்வை பதிகிறது. இந்த மாதம் அனுகூலம் தரும் கிரகங்களாக சூரியன், புதன், சுக்கிரன் செயல்படுகின்றனர். மனதில் நல்ல சிந்தனை உருவாவதோடு தைரியமும் அதிகரிக்கும். வசீகரமாக பேசி பலரின் பாராட்டைப் பெறுவீர்கள். வீடு, வாகனத்தில் நவீன மாற்றங்களைச் செய்து முடிப்பீர்கள். தாய்வழி உறவினர் விரும்பி வந்து உங்களுடன் உறவாடுவர். புத்திரர் பிடிவாத குணத்துடன் செயல்பட்டாலும், கல்வி, வேலைவாய்ப்பில் முன்னேற்றம் காண்பர். புத்திரர் உடல்நலத்திற்காக மருத்துவச் செலவு செய்ய நேரிடும்.  நல்லவர்களின் ஆலோசனையைக் கேட்டு செயல்படுவது நல்லது. ஆரோக்கியத்திற்கான விஷயங்களில் அக்கறை உண்டாகும். தம்பதியர் குடும்ப நலனுக்காக ஒற்றுமை உணர்வுடன் நடந்து கொள்வர். தொழிலதிபர்கள் உற்பத்தியை அதிகரித்து தாராள லாபம்காண்பர். வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும்.  பணியாளர்கள் நிர்வாகத்தினரின் ஆதரவைப் பெறுவர். பணிபுரியும் பெண்கள் பணியை நிர்ணயித்த கால அவகாசத்திற்குள் நிறைவேற்றுவர். குடும்ப பெண்கள் கணவரின் ஆதரவைக் கண்டு மனம் மகிழ்வர். செலவுக்குத் தேவையான பணம் சீராகக் கிடைக்கும். பிள்ளைகளின் எதிர்கால நலன் குறித்து அடிக்கடி சிந்திப்பர். சுயதொழில் புரியும் பெண்களுக்கு அரசு தொடர்பான உதவி எளிதில் கிடைக்கும். அரசியல்வாதிகள் புதிய முயற்சிகளின் மூலம் மக்கள் செல்வாக்கைப் பெற முயற்சிப்பர். விவசாயிகள் விளைபொருளுக்கு நல்ல விலை பெறுவர்.  மாணவர்கள் படிப்பில் நல்ல தரத்தேர்ச்சி காண்பர்.  பரிகாரம்: திருமாலை வழிபடுவதால் முயற்சி அனைத்திலும் வெற்றி உண்டாகும்.
உஷார் நாள்: 18.1.12  பகல் 2.10 - 20.1.12 மாலை 5.17
வெற்றி நாள்: பிப்ரவரி 4, 5
நிறம்: சிமென்ட், பச்சை எண்: 5, 8

ரிஷபம் (கார்த்திகை 2,3,4, ரோகிணி, மிருகசீரிடம் 1,2)- மவுனம்
எதையும் துணிச்சலுடன் அணுகும் ரிஷபராசி உங்கள் ராசிநாதன் சுக்கிரன் பத்தாம் இடத்தில் அனுகூலக் குறைவாக இருந்தாலும், சனிபகவான் நல்ல பலன்களை வழங்கும் விதத்தில் உள்ளார். அவசியமற்ற பேச்சின் மூலம் வீண்வம்பு உண்டாகலாம், மவுனம் அவசியம். மனைவியின் கருத்தை ஏற்பது நல்லது. வீடு, வாகன வகையில் இப்போது இருக்கிற வசதியைப் பயன்படுத்துவது போதுமானது. பூர்வ சொத்தில் மராமத்துச் செலவு அதிகமாகும். புத்திரர்கள் படிப்பில் கவனம் தவறி, பிற விஷயங்களில் கவனம் செலுத்துவதற்கு நீங்களே தூண்டு கோலாக அமைந்து விடக்கூடாது. உடல்நிலை நன்றாக இருக்கும். கடன் பிரச்னையில் இருந்து விடுபடுவீர்கள். தம்பதியருக்குள் அடிக்கடி விவாதம் ஏற்பட வாய்ப்புண்டு. குடும்பநலனைக் கருத்தில் கொண்டு அமைதி காப்பது அவசியம். அறிமுகம் இல்லாதவர்களுக்கு உதவிசெய்ய நினைக்க வேண்டாம். தொழிலதிபர்கள் மிதமான உற்பத்தி, சுமாரான லாபம் என்கிற நிலையை அடைவர். வியாபாரிகள் கூடியவரையில் ரொக்கத்திற்கு பொருள் விற்பதால் தேவையற்ற வகையில் கடன் பெறுவதை தவிர்க்கலாம். பணியாளர்கள் தங்கள் வாடிக்கையான திறமையை வெளிப்படுத்துவதில் சிரமம் ஏற்படும். சலுகைகள் கிடைப்பதில் தாமதம் இருக்கும். பணிபுரியும் பெண்களுக்கு சோம்பல் அல்லது ஏதோ மனக்குறையினால் பணியில் கவனம் சிதறும். குடும்பப் பெண்கள் வீட்டுச்செலவுக்கு திண்டாட வேண்டி வரும். சிக்கனம் பின்பற்றுவது அவசியம். சுயதொழில் புரியும் பெண்கள் சுமாரான விற்பனை, அளவான லாபம் பெறுவர். அரசியல்வாதிகளுக்கு புகழ் குறையக்கூடும். விவசாயிகளுக்கு சுமாரான மகசூல் உண்டு. கால்நடைகளினால் வரும் வரு மானம் குறையும். மாணவர்கள் படிப்பில் கவனமாக இருந்தால் தான் சிறந்த மதிப்பெண் பெற இயலும்.  பரிகாரம்: பைரவரை வழிபடுவதால் துன்பம் விலகி நன்மை சேரும்.
உஷார் நாள்: 20.1.12 மாலை 5.17 - 23.1.12 காலை 9.38
வெற்றி நாள்: பிப்ரவரி 6, 7, 8
நிறம்: ஆரஞ்ச், நீலம் எண்: 6, 8

மிதுனம் (மிருகசீரிடம் 3,4 திருவாதிரை, புனர்பூசம் 1,2,3)- உயர்வு
எவருக்கும் உரிய மரியாதை தருகின்ற மிதுனராசி உங்கள் ராசிநாதன் புதன் மிகுந்த அனுகூலத்துடன் மகரத்தில் உள்ளார். நற்பலன் தரும் கிரகங்களாக செவ்வாய், ராகு, சுக்கிரன், குரு செயல்படுகின்றன. இதனால், வாழ்வில் அளப்பரிய உயர்வு தரும் மாற்றங்களை பெறுவீர்கள். வருமானம் அதிகம் கிடைக்க வருகிற வாய்ப்புக்களை முழு முயற்சியுடன் பயன்படுத்துவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபமங்கல நிகழ்ச்சியும் உண்டாகும். வீடு, வாகன வகையில் திருப்திகரமான நற்பலன் உண்டு. தாயின் மனம் மகிழ நடந்து கொள்வீர்கள். புத்திரர்கள் உங்கள் சொல் கேட்டு நடந்து, படிப்பு, சுயதிறனில் வளர்ச்சி அடைவர். சொத்து வாங்குகிற திட்டம் இனிதாக நிறைவேறும். எதிரிகள் உங்கள் வாழ்க்கைத் தரத்தின் உயர்வு கண்டு விலகுவர். உடல்நலம் பலம் பெறும். கணவன், மனைவி ஒருவர் நலனில் ஒருவர் மிகுந்த அக்கறை கொள்வர். வாழ்வு முறை சிறப்பாகும். தொழிலதிபர்களுக்கு உற்பத்தி உயரும். லாபம் அதிகமாகும். தொழிற்சாலை சட்டதிட்டங்களை கவனத்துடன் பின்பற்றவது நல்லது. வியாபாரிகள் அதிக மூலதனத்துடன் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வர். போட்டிகுறையும். அதிக விற்பனை, தாராள லாபம் கிடைக்கும். புதிய கிளை துவங்க நினைப்பவர்களுக்கு அனுகூலம் உண்டு. பணியாளர்கள் பணி இலக்கை எளிதில் நிறைவேற்றுவர். உபரி வருமானம் கிடைத்து குடும்பத்தேவை பெருமளவில் பூர்த்தியாகும். பணிபுரியும் பெண்கள் உற்சாகத்துடன் செயல்பட்டு பணி இலக்கை சிறப்பாக நிறைவேற்றுவர். பதவி உயர்வு எதிர்பார்த்தபடி கிடைக்கும். குடும்பப் பெண்களுக்கு பொன், பொருள் சேர்க்கை பெற யோகம் உண்டு. சுயதொழில் புரியும் பெண்கள் லட்சியத்துடன் செயல்பட்டு உற்பத்தியை அதிகரிப்பர். போட்டி குறைந்து தாராள விற்பனை நடைபெறும். அரசியல்வாதிகள் செயல்திறமையை வளர்த்து திட்டங்களை நிறைவேற்றுவர். விவசாயிகளுக்கு அதிக மகசூல் உண்டு. மாணவர்கள் வெளிவட்டார பழக்கத்தைக் குறைத்துக் கொள்வதால் மதிப்பெண் அதிகரிக்கும்.  பரிகாரம்: சிவனை வழிபடுவதால் நன்மை மேலும் அதிகரிக்கும்.
உஷார் நாள்: 23.1.12 காலை 9.38 - 25.1.12 காலை 4.17
வெற்றி நாள்: பிப்ரவரி 8, 9, 10
நிறம்: ரோஸ், வெள்ளை   எண்: 1, 6

கடகம் (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்)- பொறுமை
பிறரது கருத்துக்கும் மதிப்பளித்து செயல்படும் கடகராசி உங்கள் ராசிநாதன் சந்திரன், சுயசாரமான அஸ்தம் நட்சத்திரத்தில் தனது பயணத்தை துவக்குகிறார். சுக்கிரன், கேது நல்ல பலன்களை வழங்குவர். உங்களின் சுயகவுரவத்திற்கு பங்கம் உண்டாக வாய்ப்புண்டு. பொது இடங்களில் வாக்குவாதம் செய்யாமல் தவிர்ப்பதால் நன்மை வளரும்.  வீடு, வாகன வகையில்முறையான பராமரிப்பு அவசியம். வாகன பயணத்தில் மிதவேகம் வேண்டும். பணவரவு சுமார். புத்திரர்கள் கவனக்குறைவால் சிரமங்களுக்கு உட்படும் கிரகநிலை உள்ளது. பூர்வசொத்தில் பெறுகிற வருமானத்தின் அளவு குறையும். ஆறு, எட்டாம் இட அதிபதிகளான குரு, சனி சமசப்தம பார்வையில் உள்ளனர். இதனால் அடுத்தவர் செலவில், சுகசவுகர்யம் அனுபவிப்பீர்கள். மருத்துவச் செலவுக்கு இடமுண்டு. கணவன், மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்படும். குடும்பநலன் கருதி பொறுமை காப்பது அவசியம். நண்பர்களிடம் பணபரிவர்த்தனை கூடாது. வெளியூர் பயணங்களால் அதிகசெலவு, நிம்மதி குறைவு ஏற்படலாம். பொறுமையுடன் செயல்பட வேண்டிய மாதம் இது. தொழிலதிபர்களுக்கு குறைந்த லாபமே கிடைக்கும். வியாபாரிகள் போட்டியால் விற்பனையில் சிரமம் எதிர்கொள்வர். லாபம் சுமார். பணியாளர்கள் பணியில் சில குறுக்கீடுகளை சந்திப்பர். பொறுமை காப்பதால் நன்மை கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் உடல்நலம் பேணுவதால் மட்டுமே பணியில் ஆர்வம் வளரும். குடும்பப் பெண்கள் கணவர் வழி உறவினர்களை விமர்சித்து பேசக்கூடாது. செலவிலும் சிக்கனம் வேண்டும். சுயதொழில் புரியும் பெண்கள் விற்பனை இலக்கை உயர்த்த புதிய திட்டங்களை உருவாக்குவர். சுமாரான விற்பனை, பணவரவு உண்டு. அரசியல்வாதிகளுக்கு தலைமையிடமிருந்து கண்டனக்கணை வர வாய்ப்புண்டு. விவசாயிகளுக்கு சுமாரான மகசூல் உண்டு. மாண வர்கள் படிப்பில் கவனம் நல்லது.  பரிகாரம்: துர்க்கை அம்மனை வழிபடுவதால் நன்மை சேரும்.
உஷார் நாள்: 25.1.12 காலை 4.17 - 27.1.12 பகல் 1.18
வெற்றி நாள்: பிப்ரவரி 11, 12
நிறம்: மஞ்சள், சந்தனம் எண்: 3, 6 


சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1)- சிறப்பு எண்ணத்திலும் செயலிலும் உறுதி நிறைந்த சிம்மராசி உங்கள் ராசிநாதன் சூரியன் அனுகூலம் தரும் வகையில் புதனுடன் ஆறாம் இடமான மகரத்தில் உள்ளார். நற்பலன் தரும் கிரகங்களாக சமசப்தம பார்வை பெற்று குரு, சனி செயல்படுகின்றன. மனதில் நல்ல சிந்தனைகள் உருவாகும். அக்கம் பக்கத்தவர் அன்புடன் நடந்து கொள்வர். பேச்சில் நிதானமும் விவேகமும் பரிமளிக்கும். புதிய வீடு, வாகனம் வாங்க அனுகூலம் உண்டு. தாயின் அன்பு, ஆசி கிடைக்கும். புத்திரர்கள் நற்செயல்களை பின்பற்றுவர். எதிரியால் இருந்த தொல்லை குறையும். வழக்கு விவகாரத்தில் சாதக தீர்வு ஏற்படும். சமூக அந்தஸ்து உயர்ந்து பாராட்டு, பரிசு பெறுவீர்கள். உடல்நலம் நன்றாக இருக்கும். கணவன்,மனைவி இடையே சச்சரவு ஏற்பட வாய்ப்புண்டு. நண்பர்களை புகழ்வதிலும் ஆலோசனை சொல்லி சரிசெய்வதிலும் நிதான அணுகுமுறை பின்பற்றுங்கள். குடும்பத்தின் முக்கிய தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். மூத்த சகோதர, சகோதரிகள் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழிலதிபர்கள் திட்டங்களை நிறைவேற்றி புதிய அனுபவம் பெறுவர். அரசு தொடர்பான எதிர்பார்ப்பு நிறைவேறும். வியாபாரிகள் சுறுசுறுப்பான செயல்களால் விற்பனையை உயர்த்துவர். தாராள பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் திறமைமிக்க செயலால் நிர்வாகத்திடம் மதிப்பு பெறுவர். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பணிபுரியும் பெண்களுக்கு பதவி உயர்வும் பாராட்டும் வந்துசேரும். குடும்பப் பெண்கள் கணவருடன் கருத்து வேறுபாடு கொள்வர் தவிர்ப்பதால் மட்டுமே குடும்ப ஒற்றுமை சீராகும். சுயதொழில் புரியும் பெண்கள் கூடுதல் விற்பனை, தாராள லாபம் அடைவர். அரசியல்வாதிகள், நியாய தர்மத்துடன் நடப்பர். சொந்த நலனை தியாகம் செய்வர். விவசாயிகளுக்கு மகசூல் உயர்ந்து கூடுதல் பணவரவை பெற்றுத்தரும். மாணவர்கள் லட்சியத்துடன் படித்து சிறந்த தேர்ச்சி பெறுவர். மொத்தத்தில் இது சிறப்பான மாதமே.  பரிகாரம்: விநாயகரை வழிபடுவதால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
உஷார் நாள்: 27.1.12  பகல் 1.18 - 29.1.12 இரவு 12.15
வெற்றிநாள்: ஜன. 18, 23
நிறம்: பச்சை, வாடாமல்லி எண்: 1, 9

கன்னி (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை1,2)  உறவினர்களிடம் அதிக பாசமுள்ள கன்னிராசி உங்கள் ராசிநாதன் புதன் அனுகூலக்குறைவான இடத்தில் சூரியனுடன் இருந்தாலும், நற்பலன் தருபவராக ராகு செயல்படுகிறார். சிந்தனையில் குழப்பமும் செயல்களில் தடுமாற்றமும் ஏற்படலாம். உங்கள் நலன் விரும்புபவர்களின் உதவியால் வாழ்வில் முன்னேற்றம் பெறுவீர்கள். அலட்சியப் பேச்சால் சிரமம் எதிர்கொள்வீர்கள். கவனம். இளைய சகோதர, சகோதரிகள் அன்புடன் நடந்து கொள்வர். வீடு, வாகனத்தில் பெறுகிற வசதியை முறையாகப் பயன்படுத்துவது போதுமானது. புத்திரர்கள் கவனக்குறைவு, பிடிவாத குணத்துடன் செயல்படுவர். அவர்களிடம் கடினமாக பேசினால் குடும்பத்தில் சச்சரவும், பிரிவும் ஏற்படலாம். உடல்நலம் சுமாராக இருக்கும். பணநிலையிலும். மனநிலையிலும் குறை இருக்கும். கணவன்,மனைவி ஒருவர் செயலில் ஒருவர் குற்றம் காணுகிற மனநிலை உருவாகும். சகிப்புத்தன்மை பின்பற்றுவது அவசியம். நண்பர்களிடம் ஒப்படைத்த சில செயல்பாடுகள் எதிர்மறை பலனை உண்டாக்கும். முக்கிய விவகாரங்களை நீங்களே கவனித்தால் தான் கால விரயம், பண நஷ்டத்தை குறைக்கலாம். தொழிலதிபர்கள் கூடுதல் கண்காணிப்புடன் நிர்வாகம் நடத்தினாலும் நடைமுறைச் செலவு அதிகரிப்பை தவிர்க்க இயலாது. லாபம் குறையும். வியாபாரிகள் போட்டியை எதிர்கொள்வதில் சிரமப்படுவர். விற்பனை, லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்களுக்கு பணியில் குளறுபடியும் கூடுதல் பணிச்சுமையும் உருவாகும். பணிபுரியும் பெண்கள் உடல்நலக்குறைவால் வேலைகளைச் செய்வதில் சிரமப்படலாம். குடும்பப் பெண்களுக்கு வீட்டுச்செலவுக்கு பணக்கஷ்டம் இருக்கும். குழந்தைகளின் திருமணச்செலவு, படிப்பு விஷயங்களில் எதிர்பார்த்ததை விட பட்ஜெட் இடிக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் கடினமாக உழைத்தாலும் சுமாரான விற்பனையே இருக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பாராத வகையில் பதவி பொறுப்பு கிடைக்கும். விவசாயிகளுக்கு சுமாரான மகசூல் உண்டு. மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பர்.  பரிகாரம்: நாகராஜாவை வழிபடுவதால் தொழில்சிறந்து பணவரவு சீராகும்.
உஷார் நாள்: 29.1.12 இரவு 12.15 மணி -1.2.12 காலை 11.32
வெற்றி நாள்: ஜனவரி 18, 19, 20
நிறம்: ஆரஞ்ச், வெள்ளை எண்: 6, 9

துலாம் (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3)- நன்மை நடை, உடை, பாவனையில் தனித்துவம் பெற்ற துலாம் ராசி உங்கள் ராசிநாதன் சுக்கிரன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உள்ளார். சுக்கிரனுக்கு இடம் தந்த சனிபகவான், ராசிநாதன் சுக்கிரன் வீட்டில் பரிவர்த்தனை பெற்று உச்சநிலை பெறுகிறார். செவ்வாய், புதன், சுக்கிரன், குரு நற்பலன்களை வழங்குவர். தர்மம் தலைகாக்கும் என்ற சாஸ்திரமொழி இந்த மாதம் உங்களுக்கு பொருந்தும். நியாய, தர்மத்துடன் எதைச் செய்தாலும் பிரச்னை வராது. வீடு, வாகன வகையில் வளர்ச்சி மாற்றங்களை இந்த மாதம் செய்ய வேண்டாம். குடும்ப சூழ்நிலை சுபிட்சம் தருகிற நல்ல பாதையில் செல்லும். புத்திர வகையில் திட்டமிட்ட சுபநிகழ்ச்சி இனிதாக நிறைவேறும். நண்பர்கள், உறவினர் மதிப்புடன் நடத்துவர்.  ஆரோக்கியம் வளரும். எதிரிகள் செய்தகெடுசெயல் முடங்கும். புதிய இனங்களில் பணவரவு கிடைக்கும். கடன்களை அடைக்க பாதை பிறக்கும். கணவன் மனைவி பாசத்துடன் நடந்து குடும்ப பெருமையைக் காத்திடுவர். வெளியூர் பயணம் நல்ல அனுபவங்களை பெற்றுத்தரும். தொழிலதிபர்கள் அபிவிருத்தி பணிகளைச் செய்வர். உற்பத்தி, தரம் உயரும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு போட்டி குறைந்து விற்பனை அதிகரிக்கும். கொள்முதலுக்கு தேவையான பணம் புரளும். பணியாளர்களுக்கு திருப்திகரமான சம்பள உயர்வு கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் பணி இலக்கை எளிதில் நிறைவேற்றுவர். தாமதமான சலுகை கிடைக்கும். குடும்பப் பெண்கள் கணவரின் கூடுதல் அன்புடனும், தாராள பணவசதியுடனும் மகிழ்ச்சிகர வாழ்க்கை நடத்துவர். ஆபரணச் சேர்க்கை உண்டு. சுயதொழில் புரியும் பெண்கள் கூடுதல் உற்பத்தி, விற்பனை என்கிற இலக்கை அடைவர். நிலுவை பணவரவும் எளிதில் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு புதிய பதவி பெற யோகம் உண்டு. விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். கால்நடை வளர்ப்பிலும் லாபம் கூடும். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பர்.  பரிகாரம்: கிருஷ்ணரை வழிபடுவதால் துன்பம் குறையும். நன்மை கூடும். உஷார் நாள்: 1.2.12 காலை 11.32 - 3.2.12 இரவு 10.40
வெற்றி நாள்: ஜனவரி 21, 22
நிறம்: சந்தனம், சிமென்ட் எண்: 3, 7

விருச்சிகம் (விசாகம் 4, அனுஷம், கேட்டை)- சுமார் ஒவ்வொரு வார்த்தையையும் கவனித்துப் பேசும் குணமுள்ள விருச்சிகராசி சூரியன், சுக்கிரன் நல்லபலன் வழங்கும் விதத்தில் செயல்படுகின்றன. ராசிநாதன் செவ்வாய் ஜீவன ஸ்தானத்தில் சரியான நிலையில் இல்லை. தொழில் சார்ந்த வளர்ச்சியில் அதிக கவனம் கொள்வீர்கள். மனக்குழப்பத்தை சரிசெய்ய உறவினர்களின் ஆலோசனை உதவும். சமூகத்தில் மரியாதை இருக்கும். வீடு, வாகன வகையில் பராமரிப்பு பணி நிறைவேறும். புத்திரர்கள் சராசரி நடைமுறையை பின்பற்றுவர். பணவரவு சுமாராக இருக்கும். பூர்வசொத்தின் பேரில் கடன்பெறுகிற சூழ்நிலை உருவாகும். எதிரிகளிடம் விலகிப்போவதால் நன்மை பெற வழி வகுக்கும். உடல்நலம் சுமாராக இருக்கும். கணவன்,மனைவி ஒற்றுமையுடன் நடப்பர். நண்பர்கள் இல்ல சுபநிகழ்ச்சிகளில் சிறப்பான மரியாதை இருக்கும். தொழிலதிபர்கள் அரசின் சட்டதிட்டங்களை அக்கறையுடன் பின்பற்றுவதால் சிரமம் அணுகாத  நன்னிலை ஏற்படும். உற்பத்தியை உயர்த்துவதில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவீர்கள். வியாபாரிகள் விற்பனையின் அளவை உயர்த்த சலுகைத் திட்டங்களை அறிவிக்க வேண்டியிருக்கும். லாபம் சுமார். பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். வழக்கமான சலுகைகளில் மாறுதல் இராது. பணிபுரியும் பெண்கள் பணியில் குளறுபடி வராமல் தவிர்க்க கூடுதல் கவனத்துடன் செயல்படவேண்டும். குடும்பப் பெண்கள் வீட்டுச்செலவுக்கு திண்டாட நேரிடும். சிக்கனம் தேவை. சுயதொழில் புரியும் பெண்களுக்கு கடும் முயற்சியின் பேரில் உற்பத்தி, விற்பனை சீராகும். அரசியல்வாதிகள் புகழ் உயரும். புதிய பதவி கிடைக்கும். விவசாயிகளுக்கு கூடுதல் மகசூல் உண்டு. கால்நடை வளர்ப்பிலும் லாபம் உயரும். மாணவர்கள் படிப்பில் சிறந்த தேர்ச்சி பெறுவர்.  பரிகாரம்: மாரியம்மனை வழிபடுவதால் வீண் செலவு குறையும். மனம் நிம்மதி பெறும். உஷார் நாள்: 3.2.12 இரவு 10.40 -  6.2.12 காலை 7.14
வெற்றி நாள்: ஜனவரி 23, 24
நிறம்: ஆரஞ்ச், வெள்ளை எண்: 2, 7

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1)- சூப்பர் சமயோசிதமாக பேசி அனைவரையும் கவரும் தனுசுராசி குரு, கேது, சுக்கிரன், சனி ஆகிய கிரகங்கள் உங்களின் எதிர்பார்ப்புக்களை பூர்த்திசெய்யும் விதமாக நல்ல பலன்களை வழங்குவர். ராசிக்கு இரண்டாம் இடத்தில் ராசியின் தர்மகர்ம அதிபதிகளான சூரியன், புதன் கிரகங்களின் நிலை சரியில்லை. பிறரை அவதூறு செய்யும் எண்ணம் வளரும். இதைத் தவிர்த்தால் நட்பு, உறவு நிலையில் விரிசல் விழாது. புதுமை கருத்துடைய சிலர் புதிய நண்பர்களாக கிடைப்பர். வீடு, வாகன வகை திருப்திகரமாக இருக்கும். தாய்வழி உறவினர்களிடம் அன்புடன் நடந்து கொள்வீர்கள். புத்திரர்களின் விருப்பங்களை நிறைவேற்ற கூடுதல் செலவாகும். இஷ்ட தெய்வ வழிபாடு சிறப்பாக நிறைவேறும். உடல்நலம் பாதிக்கப்படலாம். கவனம். நன்னடத்தை குறைவான சிலரால் அவப்பெயர் வரலாம். அவர்களிடமிருந்து ஒதுங்குங்கள். தம்பதியர் பாசத்துடன் நடந்து குடும்பத்தில் சந்தோஷ சூழ்நிலையை உருவாக்குவர். தொழிலதிபர்களுக்கு உற்பத்தி உயரும். புதிய ஒப்பந்தங்களை பெறுவர். கடன்களை அடைக்கு மளவு லாபம் இருக்கும். வியாபாரிகளுக்கு விற்பனை சிறந்து அதிக லாபம் கிடைக்கும். புதிய வாகனம், உபகரணம் வாங்குவீர்கள். பணியாளர்கள் பணிகளைச் சிறப்பாகச் செய்வர். சலுகைகள் எளிதாக கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் திறம்பட செயல்பட்டு நல்ல வருமானம் பெறுவர். குடும்பப் பெண்களுக்கு எதிர்பாராத வகையில் ஆபரணச் சேர்க்கை இருக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் நல்ல மூலதனத்துடன் அபிவிருத்தி பணிபுரிவர். விற்பனை அதிகரித்து லாபம் கூடும். அரசியல்வாதிகளுக்கு சமூக அந்தஸ்து உயரும். அரசு தொடர்பான இனங்கள் நிறைவேற அனுகூலம் வளரும். விவசாயிகளுக்கு மகசூல் உயர்ந்து கால்நடை வளர்ப்பிலும் நல்ல லாபம் வரும். மாணவர்கள் ஆசிரியர்களிடம் நற்பெயர் பெறும் விதத்தில் சிறப்பாகப் படிப்பர்.  பரிகாரம்: முருகனை வழிபடுவதால்  தொழில் அபிவிருத்தி உண்டாவதோடு லாபம் கூடும்.
உஷார் நாள்: 6.2.12 காலை 7.14 - 8.2.12 பகல் 1.22
வெற்றி நாள்: ஜனவரி 26, 27
நிறம்: நீலம், சிவப்பு எண்: 1, 8

மகரம் (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2)& சுபம் கருணை மனதுடன் பிறருக்கு உதவும் மகரராசி உங்கள் ராசிநாதன் சனிபகவான் துலாம் வீட்டில் உச்ச பலத்துடன் அமர்ந்து குரு பார்வை பெற்றுள்ளார். நற்பலன் தரும் கிரகங்களாக சுக்கிரன், ராகு செயல்படுகின்றனர். உங்களது ஒவ்வொரு செயலும் நல்லவர்களின் பார்வையை ஈர்க்கும் விதமாக அமையும். இதனால் பொறாமை மனம் கொண்டவர்கள் உங்களை அவதூறு பேசுவர். பொறுமை காப்பதால் சிரமம் தவிர்க்கலாம். இளைய சகோதர, சகோதரிகளால் பிரச்னை ஏற்பட வாய்ப்புண்டு. அவர்களின் செயல்பாட்டில் அதிருப்தி கொள்வீர்கள். வீடு, வாகன வகையில் பராமரிப்பு பணிகளை தாமதமின்றி நிறைவேற்றுவது நல்லது. புத்திரர்கள் நடை, உடை, பாவனை மற்றும் படிப்பில் முன்னேற்றம் காண்பர். எதிரிகளால் உங்களுக்கு சிரமமே. கவனம். உடல்நிலை பாதிப்பால் மருத்துவச் செலவாகும். அலைச்சல் பயணங்களை பெருமளவில் குறைத்துக்கொள்வீர்கள். கணவன், மனைவி ஒற்றுமையுடன் நடந்து கொள்வர். குடும்பத்தில் மங்கல நிகழ்வு நடக்கும். இன்ப துன்பங்களை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்கவும்.  தொழிலதிபர்கள் நிறுவன வளர்ச்சிக்குரிய இயந்திரங்களை வாங்குவர்.உற்பத்தி சிறந்து பணவரவு அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த விற்பனை, நல்ல லாபம் கிடைக்கும். பணியாளர்கள், பிறரை நம்பாமல் நேரடிபார்வையில் பணிகளைச் செய்ய வேண்டும். நிர்வாகத்திடம் உள்ள மதிப்புக்கு பங்கம் வராது. பணிபுரியும் பெண்களுக்கு எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். குடும்பப் பெண்களுக்கு உறவினர்கள் தொல்லை தருவர். பொறுமை வேண்டும். சுய தொழில் புரியும் பெண்கள் உற்பத்தி, விற்பனை அதிகரித்து தாராள லாபம் காண்பர். அரசியல்வாதிகள் கடந்த கால பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு கிடைக்கப்பெறுவர். விவசாயிகளுக்கு அளவான மகசூல் கிடைக்கும். மாணவர்கள் படிப்பு, விளையாட்டில் கவனமாக செயல்படுவது அவசியம்.  பரிகாரம்: லட்சுமியை வழிபடுவதால் பணவரவு அதிகரிக்கும்.
உஷார் நாள்: 8.2.12 பகல் 1.22 - 10.2.12 மாலை 5.34
வெற்றிநாள்: ஜனவரி 27, 28, 29
நிறம்: ரோஸ், வெள்ளை எண்: 1, 2

கும்பம் (அவிட்டம், 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3)- சிரமம் எந்தச் செயலிலும் ஆர்வமுடன் ஈடுபடும் கும்பராசி உங்கள் ராசிநாதன் சனி ஒன்பதாம் இடமான பாக்ய ஸ்தானத்தில் உச்ச பலத்துடன் அமர்ந்து குருபகவானின் சப்தம பார்வையை பெறுகிறார். சுக்கிரன் நற்பலன் வழங்கும் நிலையில் உள்ளார். உங்கள் மீது நல் எண்ணம் உள்ளவர்கள் முன்வந்து உதவி செய்வர். குடும்ப செலவுக்கான பணத்தேவை அதிகரிக்கும். வீடு, வாகன பாதுகாப்பில் அதிக கவனம் வேண்டும். தாய்வழி உறவினர்கள் உங்களிடம் கருத்து வேறுபாடு கொள்வர்.  சிறு அளவில் உடல்நலக்குறைவு ஏற்படலாம். அன்றாட பணிகளில் தாமதம் ஏற்படும். பெண்குழந்தைகள் உங்களுக்கு ஆறுதல் தரும் வகையிலான உதவி புரிவர். ஆண் குழந்தைகளால் சிரமம் இருக்கும். கணவன், மனைவியிடையே ஒற்றுமை, மகிழ்ச்சி அதிகரிக்கும். நண்பர்களிடம் பணம் கொடுக்கல், வாங்கலில் நிதான நடைமுறை அவசியம். தொழிலதிபர்கள் உற்பத்தி அளவை எட்டுவதில் தாமதம் அடைவர். பணமுடையால் தொழிலை நடத்த சற்று சிரமப்பட வேண்டியிருக்கும். வியாபாரிகள் கடினமாக உழைத்தால் தான் விற்பனை இலக்கை அடைய முடியும். ஓரளவு லாபம் கிடைக்கும். பணியாளர்கள் பணிகளை நிறைவேற்ற அதிக நேரம் எடுத்துக் கொள்வதால், நிர்வாகத்தின் கண்டிப்புக்கு ஆளாக லாம். சலுகைகளைப் பெறுவதில் அவசரம் கூடாது. பணிபுரியும் பெண்கள் மிக கவனமாக பணிகளைச் செய்தால் தான் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். குடும்பப் பெண்கள் கணவரின் வருமானத்திற்கேற்ப நடந்து சிக்கன நடவடிக்கைகளால் வீட்டுச்செலவை சமாளிப்பர். தாய்வழியில் உதவி கேட்க இது தகுந்த மாதமல்ல. சுயதொழில் புரியும் பெண்கள் புதிய ஆர்டர்களைப் பெறுவர். கணவர், தோழியின் உதவி கிடைக்கும். விவசாயிகளுக்கு சுமாரான மகசூலும் கால்நடை வளர்ப்பில் தாராள பணவரவும் கிடைக்கும். அரசியல்வாதிகள் இடம், பொருள் அறிந்து பேசுவதால் நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேறும். மாணவர்கள் ஒருமுகத்தன்மையுடன் படிப்பதால் படிப்பில் தேர்ச்சி சீராகும். பரிகாரம்: முருகனை வழிபடுவதால்  தொழில் அபிவிருத்தி உண்டாவதோடு லாபம் கூடும்.
உஷார் நாள்: 29.1.12
வெற்றி நாள்: ஜனவரி 23, 24

மீனம் (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி)  தன்னம்பிக்கை மிக்க மீனராசி சனி, ராகுவைத்தவிர மற்ற கிரகங்கள் அனுகூல நிலையில் அமர்ந்து செயல்படுகின்றனர். அஷ்டமச் சனியின் தாக்கம் இருந்தாலும் உங்கள் வாழ்வு பாதுகாப்பும், சுபமங்கல நிகழ்வும் கொண்டதாக இருக்கும். எண்ணத்திலும் செயலிலும் உற்சாகம் பிறக்கும். புதிய திட்டங்களில் வெற்றி வரும்.இளைய சகோதரர்கள் மதிப்புடன் நடத்துவர். புதிய வீடு, வாகனம் வாங்க யோகம் உண்டு. புத்திரர் படிப்பு,திறமை வளர்ப்பில் சிறந்து விளங்குவர். பூர்வ சொத்தில் வருமானம் பெறுபவர்களுக்கு பணவரவு கூடும். உடல்நலம் நல்ல ஆரோக்கியம் பெறும். கடனில் பெரும்பகுதி அடைப்பீர்கள். எதிரிகள் இடம்மாறிப் போகிற நன்னிலை ஏற்படும். கணவன், மனைவி பாசத்துடன் நடந்து மகிழ்ச்சிகரமான வாழ்வு பெறுவர். நண்பர்கள் உங்கள் திறமையையும், நற்குணத்தையும் பாராட்டுவர். தொழிலதிபர்களுக்கு உற்பத்தி அதிகரித்து புதிய ஒப்பந்தம் பெறுவர். தாராள பணவரவு உண்டு. வியாபாரிகள் சந்தையில் குறைவான போட்டியை எளிதாக சரிசெய்து விற்பனையை உயர்த்துவர். உபரி பணவரவுடன் பாக்கியும் வசூலாகும். பணியாளர்கள் தங்கள் பணிக்கு சிறப்பு சேர்ப்பர். கூடுதல் சலுகை உண்டு. பணிபுரியும் பெண்கள் உற்சாக மனதுடன் செயல்பட்டு குறித்த காலத்தில் இலக்கை நிறைவேற்றுவர். அதிகாரிகளின் பாராட்டு, மகிழ்ச்சிகர அனுபவம் கிடைக்கும். குடும்பப் பெண்கள் கணவரிடம் நன்மதிப்பு, தாராள பணவசதி பெறுவர். சுயதொழில் புரியும் பெண்கள் புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி உற்பத்தியை உயர்த்துவர். தாராள பண வரவு உண்டு. அரசியல்வாதிகள் நெருக்கடியான சூழ்நிலைகளில் இருந்து அதிர்ஷ்டகரமாக மாற்றம் பெறுவர். விவசாயிகளுக்கு பயிர் வளர்க்க அனைத்து வசதியும் கிடைக்கும். மகசூல் சிறக்கும். கால்நடைவளர்ப்பிலும் நல்ல லாபம் உண்டு. மாணவர்கள் படிப்பில் வியத்தகு தேர்ச்சி பெறுவர்.  பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடுவதால் அதிர்ஷ்ட பலன் பெறுவீர்கள்.
உஷார் நாள்: 16.1.12 காலை 11.57 - 18.1.12 பகல் 2.10
வெற்றிநாள்: பிப்ரவரி 1, 2, 3
நிறம்: சந்தனம், ரோஸ் எண்: 3, 9. 

பொறியியல் மாணவர்கள் தோல்வி கற்பிக்கும் தரம் குறைந்ததே!


சென்னை அண்ணா தொழில்நுட்ப பல்கலையின் கீழ் உள்ள, 170 பொறியியல் கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டில், 75 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. ஏதாவது ஒரு பாடத்தில் அவர்கள் தோல்வியடைந்துள்ளது தெரிய வந்துள்ளது. இது, உயர் கல்வி வட்டாரத்தில், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.சென்னை அண்ணா தொழில்நுட்ப பல்கலையின் கீழ், 170 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில், 70 ஆயிரம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இரண்டாம் ஆண்டு பொறியியல் தேர்வு முடிவுகள், அண்மையில் வெளியிடப்பட்டன. இதில், 75 சதவீத மாணவர்கள், ஏதாவது ஒரு பாடத்தில் தோல்வியடைந்துள்ளது தெரிய வந்துள்ளது.துணைவேந்தர் தங்கராஜ் கூறியதாவது:பாலிடெக்னிக் படித்து, இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேர்ந்தவர்களின் கற்கும் திறன் குறைவாக இருப்பதே, இதற்கு காரணம். 12ம் வகுப்பு கணிதப் பாடங்களை படிக்காமல், பாலிடெக்னிக் படித்து நேரடியாக பொறியியல் இரண்டாம் ஆண்டில் சேருவதால், அவர்களால், இங்குள்ள கணித பாடங்களை படிக்க முடியவில்லை. மேலும், பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள், ஜூனில் வெளிவருவதால், அவர்கள் ஒரு மாதம் தாமதமாகவே, வகுப்புகளுக்கு வருகின்றனர். பொறியியல் கல்லூரியும் அவர்களுக்கு புதிது. அதனால் தான் அவர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது.இவ்வாறு தங்கராஜ் கூறினார்.

கான்பூர் ஐ.ஐ.டி., ஆட்சிமன்ற குழு தலைவர் ஆனந்தகிருஷ்ணன் தேசிய தொழில் கல்வி ஆசிரியர் பயிற்சி மையத்தில் பேசும்போது, ""கல்லூரிகளில் உரிய கல்வி தகுதி கொண்ட ஆசிரியர்கள் இல்லை. தனியார் கல்லூரி நிர்வாகம் அதிக கட்டணம் வசூலித்தாலும், தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்வதில்லை. இதையெல்லாம் ஒழுங்குபடுத்தும் வகையில், புதிய அங்கீகார மசோதா அமையும்,'' என்றார். அண்ணா பல்கலை முன்னாள் துணை வேந்தரும், மாநில திட்டக் குழு (கல்வி) உறுப்பினருமான பாலகுருசாமி கூறியதாவது: பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான, தகுதி மதிப்பெண் குறைக்கப்பட்டது, தனியார் பொறியியல் கல்லூரிகளில் தகுதி குறைந்த ஆசிரியர்கள் பணிபுரிவது, கல்வியின் தரம் குறித்து, கவலைப்படாத கல்லூரி நிர்வாகம் ஆகியவையே தேர்ச்சி குறைந்ததற்கு காரணம். தற்போதுள்ள ஆசிரியர்களில், 50 சதவீத ஆசிரியர்கள் தகுதி குறைந்தவர்கள். பல கல்லூரிகள் அனுபவம் வாய்ந்த, மூத்த ஆசிரியர்கள் கிடையாது. இதெல்லாம், மாணவர்களின் தேர்ச்சி குறைந்ததற்கு காரணம்

இதே நாள்...


  • விக்கிப்பீடியா துவங்கப்பட்டது(2001)
  •  மொபைலில் எஸ்.எம்.எஸ்., அனுப்புவதற்கான சாஃப்ட்வேர் மலேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது(2005)
  •  பிரிட்டன் அருங்காட்சியகம் திறக்கப்பட்டது(1759)
  •  ஜேம்ஸ் நெய்ஸ்மித், கூடைப்பந்து விளையாட்டு விதிகளை உருவாக்கினார்(1892)

தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா!

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் வென்று ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது. ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்த இந்திய அணி, மூன்றாவது டெஸ்ட் போட்டியிலாவது வெல்லும் என்று எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் பெரும் தோல்வியைச் சந்தித்த இந்திய அணி, டெஸ்ட் போட்டித் தொடரையும் இழந்தது. மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்க்ஸில் இந்திய அணி, 161 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 171 ரன்களும் எடுத்தது. ஆனால் முதல் இன்னிங்க்ஸில் ஆஸ்திரேலிய அணி 369 ரன்கள் சேர்த்தது. இதன்மூலம் இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 37 ரன்கள் வித்தியாசத்தில் பெரும் தோல்வியைச் சந்தித்தது.  இதனால் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது இந்திய அணி. தோல்விக்கு நானே பொறுப்பு: இந்நிலையில்,  தொடர் தோல்வி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணி கேப்டன் தோனி,  இது இந்திய கிரிக்கெட்டுக்கு மோசமான கட்டம். கேப்டன் என்ற முறையில் இந்திய அணியின் தோல்விக்கு என்னைத்தான் குறை கூற வேண்டும். இந்தத் தோல்விக்கு நானே முக்கியக் காரணம். இவ்வளவு மோசமான தோல்விக்கு நான் பொறுப்பேற்கிறேன் என்றார்.
தோனிக்கு ஒரு போட்டியில் தடை:  மேலும், 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மெதுவாகப் பந்து வீசியதற்காக ஒரு டெஸ்ட் போட்டியில் தோனி விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொன்னம்பல மேட்டில் தெரிந்த ஜோதி விசாரணை!

சபரிமலையில் மகர ஜோதி தெரியும் இன்றைய தினத்துக்கு ஒரு தினம் முன்னதாக வெளிச்சம் தெரிந்த விவகாரம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கேரள மாநில தேவசம்போர்டு அமைச்சர் சிவக்குமார் கூறியுள்ளார். சபரிமலையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில் உம்மன்சாண்டி அரசால் இயன்ற அளவு பணிகள் சபரிமலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மகரவிளக்கு மண்டல சீசன் எந்தப் பிரச்னையும் இல்லாமல் நிறைவுக் கட்டத்தை அடைந்துள்ளது. முல்லைப் பெரியாறு பிரச்னை காரணமாக தமிழக பக்தர்கள் வருகையில் சற்று குறைவு ஏற்பட்டுள்ளது. பொன்னம்பல மேட்டில் மகரவிளக்கு ஏற்றுவற்கு மலைஅரையன்மார்களுக்கு உரிமை உண்டு என்று கூறி அரசுக்கு வந்த மனு தேவசம் போர்டுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மலைஅரையன்களுக்கு பொன்னம்பலமேட்டில் உரிமை உண்டு என்று அரசின் முதன்மை கண்ட்ரோலர் கூறிய கருத்து அரசின் கருத்து அல்ல.
மேலும், மகரஜோதிக்கு ஒரு நாள் முன்னதாக பொன்னம்பலமேடு அருகே வெளிச்சம் தென்பட்டது என்று கூறப்படும் புகார் பற்றி உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட செயலை சபரிமலை மீது நம்பிக்கை கொண்ட எவரும் செய்திருக்க மாட்டார்கள்

ரஜினிகாந்த் பங்கேற்ற நிகழ்ச்சியில் அத்வானி

நிகழ்ச்சி ஒன்றில் பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் துணைப் பிரதமருமான அத்வானி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி,தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் தலைவர்இல.கணேசன், இந்து முன்னணி ராம.கோபாலன், நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் பாலசந்தர், எழுத்தாளர் குருமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...