|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

08 October, 2011

சந்திரனில் டைட்டானியம் அதிகளவில்!


 பூமியில் மிக குறைந்தளவே உள்ள டைட்டானியம் உலோகம், நிலவில் அதிகளவில் கொட்டிக் கிடப்பதாக, விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அமெரிக்காவின் மூலம் சந்திரனில் ஆராய்ச்சி மேற்கொள்ள அனுப்பப்பட்ட லூனார் ரிக்கான்ஸியன்ஸ் ஆர்பிட்டர் என்ற விண்கலம் அனுப்பப்பட்டது. அதில் பொருத்தப்பட்ட கேமராக்களால் 7 வித்தியாமான ஓளி அலைகளில் எடுக்கப்பட்ட படங்களை விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்தனர்.மேலும் இந்த படங்களை கடந்த 1972ம் ஆண்டு, அப்போலோ 17 என்ற விண்கலம் மூலம் விண்வெளி வீரர்களால் கொண்டு வர சந்திரனில் இருந்து எடுக்கப்பட்ட பாறை படிவங்களுடன் ஒப்பிட்டு பார்த்தனர். பல அதிர்ச்சி மிகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன.இதுகுறித்து அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழக விஞ்ஞானி மார்க் ராபின்சன் கூறியதாவது, சந்திரனை பூமியில் இருந்து பார்த்தால் சாம்பல் நிறம் பூசியது போல தோற்றம் அளிக்கிறது. ஆனால் தகுந்த கருவிகளுடன் பார்த்தால், சந்திரன் பல நிறங்களில் ஒளிர்வது தெரியும்.இதன்மூலம் சந்திரனில் பல வேதிப் பொருட்கள் உள்ளதை புரிந்து கொள்ள முடிகிறது. பூமியில் உள்ளதை விட, இரும்பு மற்றும் டைட்டானிய தாதுக்கள் சந்திரனில் அதிகளவில் காணப்படுகிறது. டைட்டானியம் என்பது இரும்பை விட உறுதியானது. ஆனால் எடை குறைந்தது. இதனால் அதிக விலை மிக்கதாக உள்ளது.பூமியில் டைட்டானியம் மிக குறைந்த அளவில் அதாவது 1 சதவீதம் மட்டுமே காணலாம். தற்போதைய ஆராய்ச்சிகளின் மூலம் சந்திரனில் 10 சதவீதத்திற்கு மேலாக டைட்டானியம் உள்ளதாக தெரிகிறது. மேலும் சந்திரனில் ஆக்சிஜன், ஹைட்ரஜன், ஹீலியம் உள்ளிட்ட வாயுக்களும் உள்ளதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன, என்றார்.

உயிரோடு புதைக்கப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை !


போபாலில் விவசாய நிலத்தில் பெற்றோரால் உயிருடன் புதைக்கப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை மீட்கப்பட்டது. மத்திய பிரதேச மாநிலம், பாட்னா கிராமத்தில் நேற்று முன்தினம் விவசாயி ஒருவர் விவசாய பணியில் ஈடுபட்டு வந்தார். அப்போது குழந்தை ஒன்றின் அழுகும் குரல் கேட்டது. சத்தம் வந்த திசையை நோக்கி சென்ற விவசாயி நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த குழந்தையை கண்டெடுத்தார்.

நிலத்தில் உயிரோடு புதைக்கப்பட்ட குழந்தை தனது தலையை எப்படியே வெளியே நீட்டி அழுதது தெரிந்தது. குழந்தையை மீட்டு, உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தார். மருத்துவர்கள் அந்த பெண் குழந்தைக்கு உடனடி சிகிச்சை அளித்தனர்.பிறந்த 48 மணிநேரம் மட்டுமே ஆனது தெரிந்தது. பெண் குழந்தையை உயிரோடு புதைத்து சென்ற பெற்றோரை, போலீசார் தேடி வருகின்றனர். இந்தியாவில் பெண்களின் விகிதம் மிகவும் குறைந்து காணப்படும் மத்திய பிரதேச மாநிலத்தில் இதுபோன்ற பெண்சிசுக் கொலை சர்வ சாதாரணமாக இன்னும் தொடர்வது குறிப்பிடத்தக்கது.

தியானம் செய்வதால்...!


தியானம் செய்வதனால் உடலில் ஏற்படுகின்ற  கோபம், ஆணவம், பிடிவாதம், பற்றின்மை, அமைதியின்மை போன்றவை விலகி நம்மை நிம்மதிபடுத்துகின்றன. மனதை ஒரு நிலைப்படுத்துவதற்கு தியானம் முக்கிய பங்கு வகிக்கிறது. உள் மன உணர்வை வலுப்படுத்துவதே தியானம். வட திசையும், கிழக்கு திசையும் சிவனாகவே கருதப்படுவதால், இத்திசைகள் சிறப்பானவை. எனவே கிழக்கு, வடக்கு என இரு திசைகளைப் பார்த்தே தியானம் செய்ய வேண்டும். வடதிசையில் வீசும் காந்தக் கதிர்கள் மூளையை பாதிப்படைய செய்யும் என்பதால், அத்திசையில் தலை வைத்து தூங்கவோ, உணவு உண்ணவோ கூடாது.

தியானம் செய்தால் நாம் பல நன்மைகளை அடைகின்றோம். ஞாபக சக்தி, புத்தி கூர்மை அதிகரித்து, மன உளைச்சல், மன அழுத்தம் நீங்குகிறது, அலைபாயும் மனம் அமைதியடைகிறது, சிந்தனை ஆற்றலும், ஞாபக சக்தியும் கூடுகிறது,நோய் இன்றி பெரு வாழ்வு கிடைக்கிறது, மூச்சு விடும் விகிதம் குறைகிறது. ஆதலால் ஆயுள் நீடிக்கிறது,உடம்பில் இருக்கும் நோய்கள் குறைகிறது. பொறுமை, விடாமுயற்சி தான் தியானத்தில் வெற்றி பெற ஒரே வழி.

காங்கிரசுக்கு ஓட்டு போடாதீங்க!


லோக்பால் மசோதாவை கொண்டு வரத் தவறிய காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு போடாதீர்கள்' என, சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.

ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, "லோக்பால் விசாரணை வரம்பிற்குள் பிரதமரையும் கொண்டு வர உதவும், தங்களது ஜன் லோக்பால் மசோதாவை மத்திய அரசு ஏற்க வேண்டும்' என, வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தார்.இதையடுத்து, ஹசாரேயின் ஜன் லோக்பால் மசோதா அம்சங்களை, பார்லிமென்ட் நிலைக்குழு ஆய்வு செய்யும் என, அறிவிக்கப்பட்டது. இதனால், அவர் தன் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார். இருப்பினும், ஜன் லோக்பால் மசோதா கொண்டு வருவதற்கான அறிகுறி தென்படவில்லை.

கோபமடைந்த அன்னா ஹசாரே இந்த வார முற்பகுதியில், "ஜன் லோக்பால் மசோதாவை கொண்டு வர மத்திய அரசு தவறினால், ஹிசார் லோக்சபா இடைத்தேர்தல் மற்றும் அடுத்த ஆண்டு நடக்கும் ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரசை தோற்கடியுங்கள்' என, வாக்காளர்களிடம் பிரசாரம் செய்வேன்' என, தெரிவித்தார்.

இதன்படி, காங்கிரஸ் கட்சிக்கு எதிரான அவரின் பிரசாரம் துவங்க உள்ளது. அரியானா மாநிலம் ஹிசார் லோக்சபா தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தொகுதிக்கு இன்று செல்லும் ஹசாரே குழுவைச் சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால், கிரண் பேடி, மனிஷ் சிசோடியா, கோபால் ராய் நவீன் ஜிண்டால் ஆகியோர், வரும் 10ம் தேதி வரை அங்கு தங்கியிருக்கின்றனர். அப்போது, காங்கிரசுக்கு எதிராக பிரசாரமும் செய்கின்றனர். அத்துடன், "ஊழல் அரசாங்கம்' என்ற தலைப்பில், ஹசாரே பேசிய வீடியோவும் ஆங்காங்கே திரையிடப்படுகிறது.

அதில், "ஜன் லோக்பால் மசோதாவை கொண்டு வர தவறிவிட்ட காங்கிரசுக்கு ஓட்டு போடாதீர்கள்' என, பொதுமக்களை ஹசாரே கேட்டுக் கொள்ளும் காட்சி இடம் பெற்றுள்ளது. 10 நிமிடம் இந்த "சிடி' ஓடக்கூடியது.அரவிந்த் கெஜ்ரிவால் இது குறித்து குறிப்பிடுகையில், "காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் ஓட்டு போடவில்லை என்றால், ஜன் லோக்பால் மசோதா கொண்டு வராததால் தோற்கடிக்கப்பட்டோம் என்பதை அந்தக் கட்சி உணரும்' என்றார்.

"குழந்தைத் தனமாக நடக்காதீங்க': ""என்னை விட வயதில் இளையவரான நீங்கள் குழந்தைத் தனமாக நடந்து கொள்ளக்கூடாது,'' என அன்னா ஹசாரேவை, பால் தாக்கரே எச்சரித்துள்ளார்.அன்னா ஹசாரேயின் ஊழல் எதிர்ப்பு போராட்டம் குறித்து பேசிய பால் தாக்கரே, 85, "ஊழலுக்கு எதிராக ஹசாரே போராட்டம் நடத்துவது வேடிக்கையானது. இந்த நாட்டில் ஊழலை ஒழிக்க முடியாது. ஏனென்றால், பெரிய மீன்கள் இதில் சம்பந்தப்பட்டுள்ளன. இந்த மீன்களைப் பிடிக்க அன்னா ஹசாரே வலை வீசினால், வலை தான் கிழியும். பெரிய மீன்கள் தப்பி ஓடி விடும்' என்றார்.இது பற்றி ஹசாரேவிடம், 74, கேட்டதற்கு, "தாக்கரேவுக்கு வயசாகி விட்டது. அவர் அப்படித் தான் பேசுவார்' என்றார். ஹசாரேவின் இந்த பதிலால் கோபமடைந்த பால் தாக்கரே, "என்னை விட உங்களுக்கு வயது குறைவாக இருப்பதற்காக, குழந்தைத் தனமாகச் செயல்படக்கூடாது. நாங்கள் காந்தியவாதிகள் கிடையாது. தேவையில்லாமல் விரோதத்தை தூண்டாதீர்கள்' என எச்சரித்துள்ளார்.

மோகன் பாகவத் ஆர்.எஸ்.எஸ்., தலைவர்: சமீபத்தில் ஊழலுக்கு எதிராக நடந்த போராட்டங்கள் மற்றும் இயக்கங்களில் ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் அதிக அளவில் பங்கேற்றனர். சமூகத்தின் மீது கொண்ட அக்கறை காரணமாக அவர்கள் இத்தகைய போராட்டங்களில் கலந்து கொண்டனர். தனது கோரிக்கைகளுக்கு பார்லிமென்ட் அடிபணிய வேண்டும் என, அன்னா ஹசாரே நினைத்தார். அது நடக்கவில்லை. 

காணாமல் போன பாரம்பரிய விளையாட்டு!


வீதி முளைத்து வரும் "வீடியோ கேம்ஸ்' விளையாட்டுக்களால், உடல் இளைக்க விளையாடும் விளையாட்டுகள் மாயமாகிவிட்டன.

மாலை பள்ளி விட்டு வீட்டுக்கு வந்தவுடன் பறந்து போய் மூலையில் விழும் புத்தகப்பை. ஆசை, ஆசையாய் அம்மா வைத்த பருப்பு குழம்பு சாதத்தை சாப்பிட்டு, சட்டையை சாட்டையாய் கழற்றி வீசி, "அம்மா விளையாட போய்ட்டு வரேன்.' இதுதான் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் வரை கிராமங்களிலும், நகரங்களிலும் இருந்த வழக்கம். வியர்க்க, விறுவிறுக்க விளையாடி விட்டு, மறுபடியும் சாப்பிட்டு விட்டு, வீசிய புத்தகப்பையை தேடி எடுத்து, இரவு 8.30 மணிக்கு மேல் கண்கள் சொருக, அப்பா அடிப்பாரோ? என்று அவரை ஓரக்கண்ணால் பார்த்து, பார்த்து கண்களை மூட, அவர் அசந்த நேரத்தில் தலைக்கு மெத்தையாக புத்தகப்பையை வைத்து இனிமையாய் தூங்கிய காலம் அன்று.

முப்போகத்தை பிரிக்கும் காலம் போன்று அன்று விளையாட்டையும், பருவ காலங்களாக பிரித்திருந்தனர். பள்ளி காலங்களில், பனை மட்டையால் விளையாடும் ஹாக்கியும், பனம்பழத்தை தூக்கி போட்டு விளையாடும் கால்பந்தும், அவ்வப்போது தொட்டுக்கொள்ளும் கிரிக்கெட்டும் அன்றைய விளையாட்டு. இவை போக காலாண்டு, அரையாண்டு, ஆண்டிறுதி தேர்வு விடுமுறையில் விளையாடும் விளையாட்டுக்கள் பருவ விளையாட்டுக்கள். கோலி, பம்பரம், கிட்டிப்புலி, எறிபந்து, குழி விளையாட்டும்... தோழிகளுடன் பல்லாங்குழி, தாயம், நொண்டி விளையாடியது இன்றும் நினைவில் நீங்காதவை. இன்பம் பொங்க பேச தூண்டும் மலரும் நினைவுகள். 

ஆனால், இன்றோ... சிறுவர்கள் பம்பரம், கோலி குண்டை ஏட்டளவில் மட்டுமே பார்த்து வருகின்றனர். மாலை முடிந்ததும், அம்மா அலமாரியில் 20 ரூபாய் எடுத்துக்கிட்டேன், விளையாடி விட்டு வருகிறேன், என்று சொல்லிவிட்டு செல்லும் சிறுவன் நேராக போவது, "வீடியோ கேம்ஸ்' கடைக்கு. ஒரு கம்ப்யூட்டருக்கு மூன்று முதல் நான்கு மாணவர்கள் வரை இடித்துக்கொண்டு இஷ்டத்துக்கு விளையாடுகின்றனர். பற்றாக்குறைக்கு அவ்வப்போது உடலை கெடுக்கும் நொறுக்கு தீனிகள். வீட்டுக்கு வந்தால் பசியும் எடுக்காது, படிக்க மனமும் இருக்காது. விளைவு 20 வயதில் மாரடைப்பு, 40 வயதில் முடக்கம். 60 வயது வரை இருந்தால் நீண்ட... ஆயுள் என்ற பட்டத்தோடு வாழ்க்கை சூன்யமாகிவிடுகிறது. இதை தவிர்க்க, "இனியோரு விதி செய்வோம்... ஓடி விளையாடு பாப்பா... நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா...' என்ற பாரதியின் வரிகளுக்கு உயிர் கொடுப்போம்

இயற்கை பேரழிவுகளுக்கு மனிதர்களே காரணம்!


நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களின் தாயான காடுகள் இந்தியாவில் வெகுவாக குறைந்து விட்டன; சுற்றுச்சூழல் மாசுபாடு, இயற்கை பேரழிவுகள் ஏற்பட இதுவே முக்கிய காரணமாக உள்ளது,'' என, பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லூரியின் சுற்றுச்சூழல் அமைப்பின் (ஈகோ கிளப்) நாடக இயக்குனர் ராமராஜ் தெரிவித்தார். 

இந்தியாவில் உள்ள மொத்த நிலப்பரப்பில் அடர்ந்த காடுகள் 33 சதவீதம் இருக்க வேண்டும்; மனித குலம் வாழ தகுந்த சுற்றுச்சூழல் அப்போதுதான் சமச்சீராக இருக்கும். ஆனால், இன்றைய சூழலில் வெறும் 17 சதவீதம் மட்டுமே அடர் காடுகள் இந்தியாவில் உள்ளதாக சேட்டிலைட் தகவல்கள் தெரிவிக்கின்றன; இதனால் இயற்கையின் பஞ்ச பூதங்கள் மனிதனுக்கு எதிராக செயல்பட துவங்கியுள்ளன, என சுற் றுச்சூழல் அமைப்புகள் கூறுகின்றன.
இது பற்றிய விழிப்புணர்வை மாணவர்களிடம் கொண்டு செல்லும் வகையில், பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லூரி சுற்றுச்சூழல் அமைப்பு சார்பில், வன உயிரின வார விழா நடந்தது. இதில் விழிப்புணர்வு நாடகங்கள் கல்லூரி வளாகத்தில் ஆங்காங்கே நடந்தன. நாடகத்தில் மாணவர்கள் பஞ்ச பூதங்கள் வடிவில் வேடமிட்டு நடித்தனர். பஞ்ச பூதங்கள் வடிவில் வந்தவர்கள்,""மரங்களை வெட்டி காடுகளை அழிப்பதால், மனிதர்களை காக்க வேண்டிய நாங்கள் அவர்களுக்கு எதிரிகளாக மாறி வருகிறோம்; இந்நிலை தொடர்ந்தால் படிப்படியாக நாங்கள் உலகை விட்டு சென்று விடுவோம்; எனவே மரங்களை வளருங்கள்,'' என அவை கூறுவது போல் நடித்தனர்.

இது குறித்து அமைப்பின் நாடக இயக்குனர் ராமராஜ் கூறியதாவது: காடுகள்தான் இயற்கையின் பஞ்ச பூதங்களான நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகியவற்றிற்கு தாயாக கருதப்படுகிறது. ஆனால், இந்தியாவில் காடுகளின் பரப்பு வெகுவாக இன்று குறைந்து விட்டது. சுற்றுச்சூழல் மாசுபாடு, இயற்கை பேரழிவுகள் ஏற்பட இதுவே முக்கிய காரணமாகும். வளரும் தலைமுறையான கல்லூரி மாணவர்களிடம் இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதுவே எங்கள் முக்கிய நோக்கம். தற்போது எங்கள் கல்லூரியில் நடத்தப்படும் நாடகங்கள், வரும் காலத்தில் கோவையின் அனைத்து கல்லூரிகளிலும் நடத்தப்படும். அதன் மூலம் வனங்களை பெருக்க முயற்சி செய்வோம்

விஞ்ஞானியல்ல, ஞானி!

தனியொரு மனிதனின் மரணம் உலக மக்கள் அனைவருக்கும் துக்கமாக மாறுகிறது என்றால், அந்த மனிதரால் ஒவ்வொருவரும் ஏதோ ஒருவகையில் பயன் அடைந்திருந்தாலொழிய அது சாத்தியமில்லை. இந்த வரிசையில் தற்போது இடம்பெற்றிருப்பவர் ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ். தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் அனைவரும், அவரை முழுமையாகப் புரிந்திருந்தாலும் புரிந்திராவிட்டாலும், அவரது மரணத்தால் வருத்தமடைந்ததைக் கடந்த இரு நாள்களில் காண முடிந்தது.

ஸ்டீவ் ஜாப்ஸ் கல்லூரிப் படிப்பைப் பாதியில் விட்டவர். ஆறு மாதத்திலேயே இந்தப் படிப்பு பயன்தராது என்று கல்லூரியைவிட்டு வெளியேறியவர். அவர் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளைச் செய்ததில்லை. ஆனால், மற்றவர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளை, சாதாரணமான, அறிவியல் பரிச்சயம் இல்லாதவரும் கண்ணை மூடிக்கொண்டு பயன்படுத்தும்படி செய்தவர். தொழில்நுட்பத்துக்குள் அறிவியலை வசீகரத்துடன் நுழையச் செய்தவர்.

இவருக்கு இணையாகச் சந்தையில் இருந்த நிறுவனங்களும் அறிவியல் கண்டுபிடிப்புகளை இதே மறுஆக்கம் செய்துகொண்டிருந்தன. ஆனாலும், ஜாப்ஸ் அறிமுகம் செய்தவை நுகர்வோருக்கு எளிமையாக இருந்ததால், மற்றவர்கள் அவரைப் பின்பற்ற வேண்டியிருந்தது. அதனால்தான் உலகம் இன்று அவருக்குப் புகழஞ்சலி செலுத்துகிறது.

இவர் அறிமுகப்படுத்திய ஐ-பாட் (ண் ல்ர்க்) வாங்குவதற்கு முந்நாள் இரவே வந்து படுத்துக்கிடந்தனர் வாடிக்கையாளர்கள். தொடுதிரை வசதியுடன் அடுத்து இவர் அறிமுகம் செய்த ஐ-போன் வாங்குவதற்கும் இதேபோன்று வரிசையில் நின்று காத்திருந்தார்கள். கணினியை கையளவுக்கு மாற்றி, இவர் ஐ-பேட் (ண் ல்ஹக்) அறிமுகம் செய்தபோதும் இவரது புதுமைக்கு வரவேற்பு இருந்தது.

இவர் இயற்கை எய்திய அதே நாளில் இந்தியாவிலும் ஆகாஷ் என்கின்ற ஐ-பேட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.1,750 மட்டுமே. ஆனால், இதன் பயன்பாட்டு எல்லை குறுகியது. எனினும், ஊரகப் பகுதிகளை உலகத்தோடு இணைக்கப் பெரிதும் உதவியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இதற்கெல்லாம் ஆதாரச் சுருதியாக இருந்தவர் ஜாப்ஸ். ஆப்பிள் நிறுவனத்தின் "தாரக மந்திரம்' என்ன தெரியுமா? "மாத்தி யோசி' (பட்ண்ய்ந் ஈண்ச்ச்ங்ழ்ங்ய்ற்) என்பதுதான். அதுதான் முழுக்க முழுக்க ஸ்டீவ் ஜாப்சுடைய வாழ்க்கைத் தத்துவம் என்றாலும் தவறில்லை.

"மூன்று ஆப்பிள்கள் முக்கியமானவை. முதல் ஆப்பிள் ஏவாள் உண்டது. இரண்டாவது ஆப்பிள் நியூட்டனின் சிந்தனையைத் தட்டியது. மூன்றாவது ஆப்பிள் மனித சமூகம் அனைத்தையும் வசீகரித்தது' என்று டிவிட்டரில் பேசப்படுகிறது. ஐ-சேட் ("ண் ள்ஹக்') என்று சோகத்தைத் தலைப்பிடுகிறது ஓர் ஆங்கில நாளேடு. ஐ-போன் தொடுதிரையை நோக்கி தேவதூதனின் விரல் நீளுவதாக ஒரு கார்ட்டூன், இறையழைப்பைப் பேசுகிறது. கடந்த இரு நாள்களாக தகவல் தொழில்நுட்ப உலகில் ஜாப்ஸ் பற்றிய பேச்சு ஓய்ந்தபாடில்லை. அதுதான் அவரது பெருமை. இவரது புதுமைகள் யாவுமே இவரது மனதில் கனவாக இருந்து உருவம் பெற்றவைதான். ஒரு கட்டத்தில் ஆப்பிள் நிறுவனத்திலிருந்து விலக நேரிட்டபோதும், என்னிடம் ஐந்து பெரும் புதுமைப் படைப்புகள் இருக்கின்றன என்று தன்னைப் பேட்டி கண்ட நிருபரிடம் அவரால் சொல்ல முடிந்திருக்கிறது என்றால், அவரது கனவுகள் எந்த அளவுக்கு மனதுக்குள் இயல்வடிவம் கொண்டிருந்தன என்பதைக் காணலாம்.

வாழ்க்கையை அதன்போக்கில் எதிர்கொண்டவர். ஆப்பிள் நிறுவனத்திலிருந்து வெளியே வந்த பின்னர், தனியே நெக்ஸ்ட் என்ற கணினி நிறுவனத்தைத் தொடங்கினார். பிக்ஸல் என்ற சித்திரத் திரைப்படத் தயாரிப்புக்கு உதவும் ஸ்டூடியோவை விலைக்கு வாங்கி, பின்னாளில் பிக்ஸல் நிறுவனத்தை வால்ட் டிஸ்ட்னி நிறுவனத்துக்குக் கொடுத்ததன் மூலம் அந்நிறுவனத்தின் மிக அதிகமான பங்குகளைத் தனதாக்கிக் கொண்டவர் ஜாப்ஸ். மீண்டும் ஆப்பிள் நிறுவனத்துக்கு வந்து, சரிவில் இருந்த நிறுவனத்தை நிமிர்த்திக் காட்டியவர்.

கார்களை நடுத்தர வர்க்கத்தினராலும் வாங்க முடியும் என்ற நிலையை அமெரிக்காவில் உருவாக்கியவர் ஹென்றி ஃபோர்டு என்றால் தகவல் தொழில்நுட்பத்தை ஒவ்வோர் அமெரிக்கரின் உள்ளங்கையிலும் சேர்த்த பெருமைக்கு உரியவர் என்பதால் அவருக்கு இணையாகப் பேசப்படுகிறார் ஸ்டீவ் ஜாப்ஸ். 2005-ம் ஆண்டு வரையிலும்கூட, ஆப்பிள் நிறுவனத்தின் பங்குவிலை 50 டாலராகத்தான் இருந்தது. ஐ-பாட், ஐ-போன் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் மளமளவென உயரத் தொடங்கிய பங்கு மதிப்பு, கடந்த ஆகஸ்ட் மாதம் 364 டாலராக உயர்ந்தது என்பதுதான், இவரது தொழில்நுட்ப சாமர்த்தியத்தின் வெற்றி!

இவர் சம்பாதித்ததும் சாதித்ததும்போல நாளைய உலகில் இன்னொருவர் சாதிக்கக் கூடும். வெற்றியடையவும் கூடும். இவரைப்போலவே அடிமட்டத்திலிருந்து யாரோ ஒருவர் மிக உயரத்துக்கு வருவார். ஆனால், ஸ்டீவ் ஜாப்ஸ் மீது நமக்கு ஏற்படும் நெருக்கம் என்பது இந்திய மரபு ஞானத்தால் வந்த பிணைப்பு. கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த ஸ்டீவ் ஜாப்ஸ், "மரணம் ஒன்றுதான் வாழ்வின் நிச்சயம்' என்பதை உணர்ந்தவர். "நான் விரைவில் இறந்துவிடுவேன் என்பதுதான் வாழ்க்கையின் முக்கிய தேர்வுகளைச் செய்ய எனக்கு உதவிய அதிமுக்கிய கருவி' என்று அவரால் சொல்ல முடிந்திருக்கிறது.

"அடுத்தவர் கருத்து, கொள்கைகளில் சிக்கிக் கொள்ளாதே, உன் உள்மனக்குரல் அடுத்தவர்களின் கருத்தோசையில் மூழ்கடிக்கப்படும்படியாக விட்டுவிடாதே. முக்கியமாக, உன் மனதையும் உள்ளுணர்வையும் பின்தொடர்ந்து செல்ல தைரியம் கொள். அவற்றுக்குத் தெரியும்- நீ என்னவாகப் போகிறாய் என்பது!' என்று மரணம் மிக அருகில் என்று தெரிந்த நிலையிலும் அவரால் குறிப்பிட முடிந்திருக்கிறது. அவர் பெற்றிருந்த இந்திய மரபு ஞானம்தான் அவரது மிகப்பெரும் சொத்து, ஆற்றல், அறிவு, எல்லாமும். அவர் சார்ந்திருந்த புத்த மதம்தான் இந்த ஞானத்துக்குக் காரணம். ஸ்டீவ் ஜாப்ஸ் ஒரு விஞ்ஞானியல்ல, ஞானி!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...