விஞ்ஞானத்திற்கும், வியாபாரத்திற்கும் இடையே நடிகர் கமலின் விஸ்வரூபம் மாட்டிக் கொண்டு இருக்கிறது என்று கவிஞர் வைரமுத்து கூறினார். தஞ்சையில் கவிஞர் வைரமுத்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் காவிரி நீரை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டிற்கு கீழ்தான் மத்தியஅரசு உள்ளது. தண்ணீர் திறந்துவிட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது என்றாலும் அந்த தண்ணீர் தர மறுப்பது மனிதர்கள்தான். இது கண்டிக்கத்தக்கது. காவிரி தண்ணீரை கர்நாடகம் வழங்க வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் வெற்றி தமிழர் பேரவையும் பங்கேற்றது. சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பதால் குறிப்பிட்ட சதவீதம் பாதிக்கும் என்பதில் கருத்து வேறுபாடு கிடையாது. உலகமயமாக்கலின் விளைவுதான் இது. அன்னிய முதலீட்டை சுத்தமாக அனுமதிக்க முடியாது என்று கூற இயலாது. எந்தந்த நிபந்தனைக்கு உட்பட்டு அனுமதிக்கிறோம் என்பதில் தான் இந்தியாவின் எதிர்காலம் உள்ளது. நடிகர் கமலின் விஸ் வரூபம் படத்தை டி.டி.எச். சில் ஒளிபரப்புவது குறித்து பிரச்சினை என்று கேட்கிறீர்கள். விஞ்ஞானத்திற்கும், வியாபாரத்திற்கும் இடையே விஸ்வரூபம் மாட்டிக் கொண்டு இருக்கிறது.
ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
13 December, 2012
மக்களுக்கு உழைக்க தயாராகி வரும் இளைஞன்!
ஜப்பானில் பாராளுமன்ற கீழ்சபைக்கு வரும் ஞாயிறன்று தேர்தல்
நடைபெறவுள்ளது. கடைசி நாளான இன்று அங்கு வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.
தலைநகர் டோக்கியோவில் உள்ள ஹான்யூ தேர்தல் அலுவலகத்திற்கு கடைசி மூன்று
மணி நேரம் இருந்த நிலையில் ஒரு முதியவர் அங்கு வந்தார். அவர் தனது பெயரை
வேட்பாளர் பட்டியலில் சேர்க்க கேட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.சுறுசுறுப்பாக
காணப்பட்ட ரியோகிச்சி-கவாசிமா என்ற அந்த முதியவரின் வயது 94 ஆகும். இதனால்
அந்த கவுண்டரில் இருந்த பெண் அதிகாரி முதலில் உறைந்து போனார். தயங்கிய
அவர், பின்னர் உண்மையாக சொல்கிறீர்களா? என்று கேட்டுள்ளார்.
அவர்
தனது இறுதிக்காரியத்திற்கு சேர்த்து வைத்திருந்த 30 லட்சம் யென் பணத்தை
அங்கு எடுத்து வந்துள்ளார். 94 வயதான ரியோகிச்சி-கவாசிமாவே இந்த தேர்தலின்
வயது முதிர்ந்த வேட்பாளர் என்று பின்னர் அறியப்பட்டுள்ளார்.டோக்கிய
பெருநகர் விரிவாக்கத்தால் நெல்வயல் நிலங்கள் பாலாக்கப்படுவதாக கூறி ஆளும்
கட்சி மற்றும் எதிர்கட்சி வேட்பாளர்களை எதிர்த்து சுயேச்சையாக அங்கு அவர்
நிற்கிறார். இத்தேர்தலில் சுதந்திர ஜனநாயகக் கட்சியான எதிர்கட்சியே
வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஜப்பான்
சீனாவுக்கு இடையே 7 வருடம் நடந்த போரின் போது அவர் சீனர்களால் சிறை
பிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டவர். எனவே சீனர்கள் நல்லவர் என்றும்
அவர் கூறிவருகிறார்.
நிம்மதியா தூங்கப்பாருங்க!
தேவைக்கு மேல் உள்ளது எல்லாம் தெய்வத்திற்கே என்ற நிலை போய், இப்போது
தேவைக்கு மேல் கிடைக்கவேண்டும் என்பதற்காக, பணத்திற்கு பின்னால் உலகம்
ஒடிக்கொண்டு இருக்கிறது. இதற்காக லஞ்சம்,ஊழல்,பொய்,திருட்டு என்று எந்த
நிலைக்கு போகவும் சமூகம் தயராகிவிட்டது.இப்படி போனால் நீங்கள் விரட்டிச்
செல்வது வேண்டுமானால் கிடைக்கலாம் ஆனால் நிம்மதியான,தூக்கம் என்பது
போய்விடும் என்பதை இந்த ஆட்டோ வாசகம் சொல்கிறது
இவுரு இப்ப இரணடாவது கலைஞராம்?
மு.க.ஸ்டாலினை இரண்டாவது கலைஞராக வர்ணித்து திருச்சி மணச்சநல்லூர்
பகுதியில் வைக்கப்பட்டுள்ள பேனர் இது. முரசொலியில் கடிதம் எழுதியதாலோ,
நடைப்பயணம் மேற்கொண்டதாலோ இந்த இரண்டாவது கலைஞர் பட்டத்தை
கொடுத்திருப்பார்கள் போலும். என்ன செய்தாலும் முதல் கலைஞர் இந்த இரண்டாவது
கலைஞருக்கு தலைமை பதவியை தருவது போல தெரியவில்லையே...
தமிழன் உண்மையில் ரோசக்காரனா?
நம்மினத்தில் விட்டகுறை தொட்டகுறையாய்இலங்கையில் வாழும் நம் உறவுகள் கொத்து கொத்தாய் மடித்த பொழுது அதை செய்த ராஜபக்சே,துணை போன இந்திய அரசும், (காங்கிரசுக்கு) 4 M L A களை பெற்று கொடுத்தது இதே நம்மக்கள்? (அண்ணன், தம்பி,மாமன்,மச்சான்,பிள்ளை,பேரன்,கொள்ளுபேரன்,என அனைவரையும் கொள்ளை அடிக்கவிட்டு வேடிக்கை பார்த்த கலைஞரை வீட்டுக்கு அனுப்பியது மட்டும் சந்தோசமே!) ஆனால் இன்றைய வரைக்கும் நம் மீனவ சொந்தங்களை பிடித்து செல்லும் சிங்களவனுக்கு இன்னும் கடிவாளம் போடாத? கண்டிக்க திரணியற்ற ஜெயலலிதாவை நாம் என்ன செய்ய போகிறோம்? போட்டா திமுகா! அல்லது அதிமுக!! புதுசா முளைச்ச விஜயகாந்தும் எவன்கூட கூட்டணி வச்சா நமக்கு நிறைய தொகுதி கிடைக்கும்னு வியாபாரம் பார்குறான்! இந்த ரஜினி வந்தா நல்லது பண்ணுவான்னு அவன உசுப்பேத்தி உசுப்பேத்தி நமக்கு ஒரு புரோஜனமும் இல்ல அவனும் படத்துக்கு படம் நல்லா வாங்கி கொட்டிகிறான். மகளுக்கும் மருமகனுக்கும் கோடி,கோடியா கொண்டுபோய் கொட்டுறான்.ஒரு சாதரன பாமரனுக்கு செய்ய எவனும் இல்ல?இவனுக்கு ஏதோ சுதந்திர போராட்ட தியாகிக்கு செய்ற மாதிரி நேத்து தமிழ்நாடே திருவிழா! எங்கபோனாலும் ரஜினி எந்த TV யா போட்டாலும் ரஜினி! அப்படி என்ன? ஒன்னும் புரியல? கட்சி பாக்காதிங்க,ஜாதி பார்காதிங்க,நலவன்யாருன்னு பார்த்து ஒட்டு போட்டா உருப்படும் நம் நாடு.
தொங்கினால் படிப்பு இனி தொங்கல்தான்!
எவனாவது செத்தா தான் இப்படி ரூல்சே போடுவாங்க அதுக்கு முன்னாடி வரும்முன் காப்போம் திட்டம்மே இல்லை? பஸ் படிக்கட்டுகளில், மாணவர்கள் பயணித்தால், அவர்களின் பெற்றோர் மற்றும்
கல்வி நிறுவனங்களுக்கு தெரிவிக்க வேண்டும்; அதுவே, அடுத்தடுத்து
நீடித்தால், பெற்றோருக்கு தகவல் தெரிவித்து விட்டு, அந்த மாணவர்களை, பள்ளி,
கல்லூரிகளில் இருந்து நீக்கலாம்' என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, பெருங்குடி அருகில், கந்தன்சாவடி உள்ளது. மாநகர போக்குவரத்து பஸ்,
சாலையில் வந்து கொண்டிருந்த போது, செங்கல் லாரி, பின்னோக்கி வந்து மோதியது.
இதில், பஸ்சின் பின்புற படிக்கட்டில் பயணித்த மாணவர்கள், நான்கு பேர்,
உடல் நசுங்கி இறந்தனர். கடந்த, 10ம் தேதி, இச்சம்பவம் நடந்தது. இது
குறித்து, பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இதையடுத்து, சம்பவம் குறித்து,
தானாக முன்வந்து, தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி பாஷா அடங்கிய, "முதல்
பெஞ்ச்' வழக்கை விசாரணைக்கு எடுத்தது. மதுரை, ஐகோர்ட் கிளையில், இவ்வழக்கு
விசாரணைக்கு எடுக்கப் பட்டது. இத்தகைய சோக சம்பவங்கள், எதிர்காலத்தில்
நிகழாமல் தவிர்க்க, என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கத்
திட்டமிடப்பட்டுள்ளது என, அரசு, போக்குவரத்துத் துறை, போக்குவரத்தை
ஒழுங்குபடுத்தும் அதிகாரிகளிடம் விளக்கம் பெற வேண்டும் என, அட்வகேட்
ஜெனரலுக்கு, "முதல் பெஞ்ச்' உத்தரவிட்டிருந்தது.இவ்வழக்கு, சென்னை
ஐகோர்ட்டில், தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய, "முதல்
பெஞ்ச்' முன், விசாரணை நடந்தது.
அரசு சார்பில், அட்வகேட் ஜெனரல்
நவநீதகிருஷ்ணன், அரசு பிளீடர் வெங்கடேஷ் ஆஜராகினர்.போக்குவரத்து கூடுதல்
போலீஸ் கமிஷனர் கருணாசாகர், போக்குவரத்து துறையின், முதன்மை செயலரின் அறிக்கை, தாக்கல் செய்யப்பட்டது.அட்வகேட்
ஜெனரலின் வாதத்துக்குப் பின், "முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: தமிழக
அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள், எடுக்கப் போகிற
நடவடிக்கைகள்,போக்குவரத்து முறையை மேம்படுத்துவது மட்டுமல்லாமல்,
படிக்கட்டுகளில்
பயணிப்பவர்களுக்கு நேரும் விபத்துகளைக் குறைக்கும் வகையிலும்
இருக்கும்.இந்த நடைமுறைகள் பற்றி, பத்திரிகைகளிலும், "டிவி' சேனல்களிலும்,
விரிவாக விளம்பரப்படுத்த வேண்டும் என, நாங்கள் வலியுறுத்துகிறோம்.பஸ்
படிக்கட்டுகளில், பயணிக்கும் பள்ளி மாணவர்கள், சிறுவர்களாக
இருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, பள்ளி,
கல்லூரிகள் செல்லும் குழந்தைகளின்பெற்றோருக்குதெரியப்படுத்த
வேண்டும்.தெரிவிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை, இன்று (நேற்று) முதலே
அமல்படுத்த, கூடுதல் போக்குவரத்து போலீஸ் கமிஷனர், நடவடிக்கை எடுக்க
வேண்டும்.
எந்த மாணவராவது, படிக்கட்டில் பயணித்தது தெரிந்தால், அந்த மாணவனின் பெற்றோருக்கு மட்டுமல்லாமல், அவர் படிக்கும் பள்ளி அல்லது கல்லூரிக்கும் தெரியப்படுத்த வேண்டும். அந்த மாணவன், இரண்டாவது, மூன்றாவது முறையும், அவ்வாறு படிக்கட்டில் பயணித்தால், அவரது பெற்றோருக்கு தெரியப்படுத்தி விட்டு, பள்ளியில் இருந்து நீக்க, நடவடிக்கை எடுக்கலாம். இந்த வழக்கு, ஜன., 2ம் தேதிக்கு, தள்ளிவைக்கப்படுகிறது. எடுக்கப்பட்ட நடவடிக்கையின் முன்னேற்றம் பற்றி, அன்று, போக்குவரத்து கூடுதல் போலீஸ் கமிஷனர், அரசின் முதன்மை செயலர், அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு, "முதல் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.

என்ன பாதுகாப்பு? விபத்துகளைத் தவிர்க்க, அமல்படுத்த
திட்டமிட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, சென்னை கூடுதல் போக்குவரத்து போலீஸ்
கமிஷனர் கூறியுள்ளதாவது: * பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை
நடத்துவது மட்டுமல்லாமல், படிக்கட்டுகளில் பயணிக்கக் கூடாது என,
அறிவுறுத்தும் வகையில், பஸ் நிலையங்கள், கல்லூரிகள், பள்ளிகள் அருகில்,
அறிவிப்பு பலகைகள் அமைக்கப்படும்.
* பாதுகாப்பு அம்சங்கள் பற்றி, துண்டுப் பிரசுரங்களைமாணவர்களுக்கும்,
பொது மக்களுக்கும் வினியோகிப்பது, கல்வி நிறுவனங்களிலும் வினியோகிப்பது.
பொது மக்களுக்கும் வினியோகிப்பது, கல்வி நிறுவனங்களிலும் வினியோகிப்பது.
*
படிக்கட்டு பயணத்தால், விளையும் ஆபத்து பற்றியும், பொது மக்களுக்கு
விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மீடியாக்களில், விரிவான விளம்பரங்கள்
வெளியிடப்படும்.
போக்குவரத்துத் துறையின், முதன்மைச் செயலர் அறிக்கை:
* கல்வி நிறுவனங்கள் அதிகமாக உள்ள வழித்தடங்களில், சிறப்பு பஸ்கள் அதிகமாக இயக்கப்படும்.
* போக்குவரத்து போலீஸ் உதவியுடன், போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு விதிகள், கண்டிப்புடன் அமல்படுத்தப்படும்.
*
போக்குவரத்துக் கழக அதிகாரிகள், போக்குவரத்து போலீசார், மாணவர்கள்
பிரதிநிதிகள் அடங்கிய குழுவை அமைத்து, மாணவர்களுக்கு ஆலோசனை, அறிவுரைகள்
வழங்கப்படும்.
* படிக்கட்டில் பயணிக்கும் மாணவர்கள் பற்றி, அவர்களின் பெற்றோர், கல்வி நிறுவனங்களுக்கு தெரிவிக்கப்படும்.
மேற்கண்ட நடவடிக்கைகள் மூலம், படிக்கட்டு பயணங்களை தடுக்கலாம்.
மேற்கண்ட நடவடிக்கைகள் மூலம், படிக்கட்டு பயணங்களை தடுக்கலாம்.
தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினரை திரும்பப் பெறும் உரிமை!
நம்ப நாட்டில தாங்க நம்ப முடியலையா? ராஜஸ்தானில் முதல் முறையாக தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினரை திரும்பப் பெறும்
உரிமை சட்டத்தின் கீழ் மங்குரோல் நகராட்சி தலைவரின் பதவியைப் பறிப்பதற்கான
தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. ராஜஸ்தான் நகராட்சி சட்டம் 2009 க்கு உட்பட்ட
தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினரை திரும்பப் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் இந்த
ஓட்டெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. தற்போது நகராட்சி தலைவராக உள்ள அசோக்
ஜெயின் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து
அசோக் ஜெயினுக்கு எதிராக இந்த திரும்பப் பெறும் உரிமை சட்டத்தை
செயல்படுத்துவது என ஜனவரி மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர்
செப்டம்பர் மாதம் கெஜட்டில் அறிவிப்பு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில்
தேர்தல் நடத்தப்பட்டது.
2009ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ராஜஸ்தான் நகராட்சி தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட அசோக் ஜெயின், தேர்தலில் வெற்றி பெற்று நகராட்சி தலைவரானார். பதவியேற்று 3 ஆண்டுகளுக்கு பிறகு அவருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் நடைபெற்ற தேர்தலில் மொத்தமுள்ள 16,735 ஓட்டுக்களில் 65.71 சதவீதம் ஓட்டுக்கள் பதிவாகி உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரை திரும்பப்பெறும் உரிமை சட்டத்தின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த தேர்தலில் ஓட்டெடுப்பு அமைதியாகவும், எவ்வித பதற்றமும் இன்றி முறையாக நடைபெற்றதாக தேர்தல் அதிகாரி தர்ம்ராஜ் தெரிவித்துள்ளார். மேலும் இந்த தேர்தலின் முடிவு டிசம்பர் 14ம் தேதி அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினரை திரும்பப்பெறும் உரிமை சட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட இந்த தேர்தலில் அசோக் ஜெயினுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை ஆதரித்து பாதிக்கும் மேற்பட்டோர் ஓட்டளித்து இருந்தால் அசோக் ஜெயினின் நகராட்சி தலைவர் பதவி பறிக்கப்படும். அசோக் ஜெயின், சமீபத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலின் 'ஆம் ஆத்மி' கட்சியில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தனக்கு எதிராக நடத்தப்பட்ட இந்த தேர்தல் குறித்து தெரிவித்த அசோக் ஜெயின், தான் நேர்மையானவர் எனவும் காங்கிரஸ் மற்றும் பா.ஜ., வின் கூட்டுச்சதி இது எனவும், இந்த தேர்தலில் தான் நிச்சயம் வெற்றி பெற உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தான் நேர்மையானவரா இல்லையா என்பதை தேர்தல் முடிவுகள் காட்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Subscribe to:
Posts (Atom)