ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
05 February, 2013
திரும்பி வந்தால் அடித்தே கொல்லனும்!
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர்
அருகிலுள்ள வன்னியம்பட்டி - படிக்காசுவைத்தான்பட்டியைச் சேர்ந்தவர்
ராமசாமி. கூலி வேலை பார்க்கும் இவரது மகள் ராஜேஸ்வரி அங்குள்ள
வன்னியம்பட்டி நாடார் உறவின்முறை காளீஸ்வரி
மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ் 2 படித்து வருகிறார். இவரது தங்கை கவிதா 10-வது
வகுப்பு படிக்கிறார். ராமசாமியின்
வீட்டில் வாடகைக்கு வசித்து வருகிறார் ஆதிசக்தி குழந்தைவேல். இவருக்கு
வயது 35. இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான ஆதிசக்தி குழந்தைவேல் ப்ளஸ் 2
மாணவி ராஜேஸ்வரியை ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார். இன்று காலை
பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருந்த ராஜேஸ்வரியை தன் வீட்டுக்கு வற்புறுத்தி
இழுத்துச் சென்ற ஆதிசக்தி குழந்தைவேல் தன் காதலை தகாத முறையில்
வெளிப்படுத்தி இருக்கிறார். இதனால் பயந்து போன ராஜேஸ்வரி இவரது காதலை ஏற்க
மறுத்து கத்தியிருக்கிறார். இதனால், ஆத்திரமடைந்த ஆதிசக்தி குழந்தைவேல்
வீட்டில் இருந்த மண்ணெண்ணய்யை ராஜேஸ்வரி மீது ஊற்றி தீ வைத்துக் கொளுத்தி
விட்டார்..
தீயில்
வெந்து துடித்த ராஜேஸ்வரியின் அலறல் சத்தத்தைக் கேட்டு தங்கை கவிதா ஓடி
வந்து பார்த்திருக்கிறார். ராஜேஸ்வரி எரிவதை கவிதா பார்த்துவிட்டது
ஆதிசக்தி குழந்தைவேலுக்கு பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஊருக்குள்
விஷயம் தெரிந்தால் தனக்கு ஆபத்து என்று கருதிய அவர் தன் மீதும்
மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக் கொள்ள.. அக்கம் பக்கத்தினர் வன்னியம்பட்டி
போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர்
சம்பவ இடத்துக்கு வந்த போது கவிதா இறந்து பிணமாகக் கிடந்தார்.
ராஜேஸ்வரியின் உயிரற்ற உடலையும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆதிசக்தி
குழந்தை வேலுவையும் போலீஸார் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு
அனுப்பி வைத்தனர். உடலில் தீக்காயம் அதிகமாக இருந்ததால் ஆதிசக்தி குழந்தை
வேலுவை அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு
அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
கோயில் கோபுரமே உயரமாக இருக்க வேண்டும் ஏன்?
முற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும்
இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. என்ன காரணம்?... கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும்
பார்த்திருப்பீர்கள். அதன் பின் ஒளிந்திருக்கும் ஆன்மிக உண்மை தெரியவில்லை.
ஆனால் அதன் பின் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போதுதான்
தெரிகிறது.கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி செம்பு(அ) ஐம்பொன்னால்
செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக் கலசங்களிலும் அதில் கொட்டப்படும்
தானியங்களும், உலோகங்களும் மின் காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியை
கலசங்களுக்குக் கொடுக்கின்றன. நெல், உப்பு, கேழ்வரகு, தினை, வரகு, சோளம்,
மக்கா சோளம், சலமை, எள் ஆகியவற்றைக் கொட்டினார்கள். குறிப்பாக வரகு
தானியத்தை அதிகமாகக் கொட்டினார்கள். காரணத்தைத் தேடிப் பார்த்தால்
ஆச்சர்யமாக இருக்கிறது. வரகு மின்னலைத் தாங்கும் அதிக ஆற்றலைப்
பெற்றிருப்பது என இப்போதைய அறிவியல் கூறுகிறது.
இவ்வளவுதானா? இல்லை, பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குட முழுக்கு
விழா என்ற பெயரில் கலசங்களில் இருக்கும் பழைய தானியங்கள் நீக்கப்பட்டு
புதிய தானியங்கள் நிரப்பப்படுகிறது. அதை இன்றைக்கு சம்பிரதாயமாகவே மட்டும்
கடைபிடிக்கிறார்கள். காரணத்தைத் தேடினால், அந்த தானியங்களுக்குப்
பன்னிரெண்டு வருடங்களுக்குத்தான் அந்த சக்தி இருக்கிறது. அதன் பின் அது
செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி அப்போது அறிந்திருந்தார்கள்?
ஆச்சர்யம்தான்.அவ்வளவுதானா அதுவும் இல்லை. இன்றைக்குப் பெய்வதைப் போன்று மூன்று
நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது. ஒரு வேளை
தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்துப்
பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பில்லை. இதையே
மீண்டும் எடுத்து விதைக்கலாமே! ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அதுதான்
முதலில் எர்த் ஆகும். மேலும் அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன்
உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக
கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் வரைக்கும்
பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாங்காமல்
காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 75008 மீட்டர் பரப்பளவிலிருக்கும்
மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள்!
சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன. அது நாலாபுறமும் 75000சதுர
மீட்டர் பரப்பளவைக் காத்து நிற்கிறது! இது ஒரு தோராயமான கணக்கு தான்.
இதைவிட உயரமான கோபுரங்கள் இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து
வருகின்றன.கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற பழமொழி நினைவுக்கு வருகிறதா?
சாமி வராது பூதம் தான் வரும்!
கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம்!
உலகிலுள்ள பொருட்கள் யாவும் பகவானால் படைக்கப்பட்டது. சகல
ஜீவராசிகளும் அவனது சிருஷ்டி. புழு, பூச்சி முதல், மனிதன் வரை, யாவுமே
அவனால் உண்டாக்கப்பட்டது. இந்த ஜீவன்கள் ஜீவிப்பதற்காகவே நீர், நெருப்பு,
காற்று ஆகியவற்றையும், மரம், செடி, கொடி, புல், பூண்டு, காய், கனி, கிழங்கு
போன்றவற்றையும் படைத்தான்.மனிதர்களுக்காக இவ்வளவையும் படைத்துள்ள
பகவானுக்கு, மனிதன் நன்றி தெரிவிக்க வேண்டாமா? மனதால் அவனை நினைத்து
துதிக்கலாம். பூ, பழம் முதலியவற்றை அவனுக்கு அர்ப்பணம் செய்யலாம். அவன்
நாமாவளியைச் சொல்லிச் சொல்லி, நன்றி தெரிவிக்கலாம்.
இந்த நன்றியை அவன்
எதிர்பார்க்கிறானா, இல்லையா என்பதை பற்றி நாம் கவலைப்பட வேண்டாம்.
படைத்தல், அழித்தல், காத்தல் என்ற மூன்று காரியங்களையும் அவன் கடமையாகச்
செய்கிறான். நன்றியை எதிர்பார்ப்பதில்லை. ஆனாலும், நன்றி செலுத்த வேண்டியது
மனிதனின் கடமையாகிறது.பகவான் ரொம்பவும் எளிமையானவன். அவனிடம்
பக்தியோடு இருப்பவர்களுக்கு, தன் சுய ரூபத்தை காண்பிக்கிறான்.
பக்தரல்லாதவருக்கு உக்ரமான ரூபத்தோடு தோன்றுகிறான். பிரகலாதனுக்கு,
நாராயணனாகவும், அவனது தந்தையான இரணியனுக்கு, நரசிம்மனாகவும் தோன்றினான்.
பக்தனை ரட்சித்தான்; துஷ்டனை சம்காரம் செய்தான். பகவானுக்கு எந்த சின்ன
பொருளை அர்ப்பணம் செய்தாலும், அதை மிகப் பெரியதாக எண்ணி, அவன் ஏற்று
சந்தோஷப் படுகிறான். அவன் படைத்த பொருளையே தான், நாம் அவனுக்கு அர்ப்பணம்
செய்கிறோம்.
ஆனாலும், இது நாம் படைத்த பொருள் தானே என்று அவன்
நினைப்பதில்லை. மனமுவந்து அவனுக்கு எந்த விதத்திலாவது நன்றி
செலுத்துபவர்களை, அவன், தன் பக்தனாக பாவிக்கிறான். இந்த பக்தர்களுக்காக,
அவன் எதையும் செய்யத் தயாராக இருக்கிறான்; செய்கிறான்.”ரபி என்ற வேடுவ
ஸ்த்ரீ, பகவானிடம் பக்தியோடு இருந்தாள். காடுகளிலுள்ள கனிகளை சேகரித்து,
பகவானுக்காக வைத்திருந்து, அவனது வரவுக்காக காத்திருந்தாள். அவளது
ஆசிரமத்தைத் தேடிச் சென்று, அவள் அளித்த பழங்களை உண்டு மகிழ்ந்து, அவளுக்கு
முக்தியும் அளித்தார் ராமன்.பாண்டவர்களுக்காக தன் பெருமைகளை மறைத்து,
தூதுவனாக சென்றான்! பார்த்தனுக்கு தேரோட்டியாக இருந்தான் பார்த்தசாரதி.
என்ன காரணம்? பக்திக்குக் கட்டுப் பட்டான். அவனைப் பொறுத்தவரை, பெரிய
தொழில், உயர்ந்த தொழில், மட்ட தொழில், கேவலமான தொழில் என்பதெல்லாம்
கிடையாது. பக்தனுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டும் என்பது
தான் அவனது கொள்கை.
இதே நாராயணன் தானே, மீனாகவும், ஆமையாகவும்,
பன்றியாகவும், நரசிம்மனாகவும் உருவெடுத்தான். எதற்காக? பக்த ரட்சணம்! ஆகவே,
அவன் சிறுமையாகவும் இருப்பான்; பெருமையாகவும் இருப்பான். அவனுக்கு நன்றி
செலுத்தும் வகையில், நாமும் ஏதாவது ஒரு வழியில் அவனிடம் ஈடுபாடு கொண்டு
விட்டால், அவன் அருள் செய்வான்! "சாமியாவது, பூதமாவது' என்று சொன்னால் சாமி வராது; பூதம் தான் வரும்!
எழுத்து அறிவு இல்லாத, 50 லட்சம் பேர்!
இந்திய மக்களில் பெரும்பாலானவர்களுக்கு கல்வி அறிவு இல்லை; அவர்களை கல்வி
அறிவு பெற்றவர்களாக்க, நம் அரசு பெரும் முயற்சி எடுத்து வருவது நாம்
அறிந்ததே! முதியோர் கல்வி, கரும்பலகை என பல்வேறு திட்டங்களை
அமல்படுத்தியுள்ளது. இந்தியாவிலேயே, கேரள மாநிலம் தான் முழுமையான கல்வி
அறிவு பெற்ற மாநிலம் என அறிவிக்கப்பட்டு உள்ளது; தமிழகத்தில்,
கன்னியாகுமரி மாவட்ட மக்கள் முழுமையான கல்வி அறிவு பெற்றவர்கள். நம்
நாட்டு கதை இப்படி இருக்க, முன்னேறிய நாடுகளின் வரிசையில் நிற்கும் கனடா
நாட்டின் கதை?
கனடா நாட்டு மக்களில்,
50 லட்சம் பேருக்கு எழுதப் படிக்கத் தெரியாது! (கனடாவின் மொத்த மக்கள்
தொகை, இரண்டு கோடி 70 லட்சம். இவர்களில் படிக்கத் தெரியாதவர்களின் சதவீதம்
19.) கல்வி அறிவு இல்லாத கனடாக்காரர்களில், 15 லட்சம் பேருக்கு, தம்
கார் டிரைவிங் லைசன்ஸ் எப்போது காலாவதியாகிறது என்பதை, லைசன்ஸ்
புத்தகத்தைப் பார்த்து அறிந்து கொள்ளும் திறமை கிடையாது! இவர்களில் 26
லட்சம் பேருக்கு, மருந்து, மாத்திரை பாட்டில்களில், அவற்றை எவ்வாறு
உட்கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளதை அறிந்து கொள்ளும் திறன்
கிடையாது!
சாலையில் உள்ள வழிகாட்டும் சின்னங்களில் எழுதப்பட்ட எழுத்துக்களைப் படித்து அறியும் திறன், 28 லட்சம் பேரிடம் இல்லை!இன்னும்
சில லட்சம் பேரிடம் டெலிபோன் பில்லைப் பார்த்து, அதில் பண பாக்கி எவ்வளவு
என்பதை அறிந்து கொள்ளும் திறன் கிடையாது. இதேபோல, இன்கம்டாக்ஸ் பாக்கி
அறிதல், டெலிபோன் டைரக்டரியில், "எல்லோ பேஜ்' பார்த்து, முகவரி அறிதல்
போன்றவை தெரியாது, என்றார். (என்னடா இது... எழுதப் படிக்க தெரியாதவர்
எண்ணிக்கை, 50 லட்சம் தான் என்றார். இவர் சொல்லும் 26 லட்சம், 28 லட்சம்
இன்னும் சில லட்சம் என லட்சக்கணக்கில் சொல்லிக்கொண்டே போகிறாரே...
அப்படியானால், கனடா நாட்டு மக்கள் எவருக்கும் கல்வி அறிவு இல்லையா? சிறு
விளக்கம்: எழுத்து அறிவு இல்லாத, 50 லட்சம் பேரில், இந்த இந்தத்
தொகுதிகளில், அதாவது, சாலை விதி அறிவிப்புப் பலகை படிக்கத் தெரியாதவர்,
மருந்து பாட்டிலில் எழுதியுள்ளதைப் படிக்கத் தெரியாதவர்... என இவை
கணக்கிடப்பட்டுள்ளது. ஆக, மொத்தம் படிப்பறிவில்லாதவர் எண்ணிக்கை, 50 லட்சம்
தான்!)
பெண்ணை பின் தொடர்ந்தால் மூன்றாண்டு சிறைவாசம்!
பெண்ணை பின்தொடர்ந்து சென்று தொந்தரவு செய்தால், குறைந்தபட்சம், ஓராண்டு
சிறை தண்டனை முதல், அதிகபட்சம், மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனை
விதிக்கப்படும். கற்பழித்தால், ஆயுள் தண்டனை, கற்பழிப்பின் போது பெண்
இறந்தால் மரண தண்டனை விதிக்கப்படும்' என, பெண்கள் பாதுகாப்பிற்கான அவசர
சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் பாதுகாப்பிற்காக, கிரிமினல்
சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு, நேற்று முன்தினம், ஜனாதிபதி, பிரணாப்
முகர்ஜி பிறப்பித்த அவசர சட்டத்தின் முக்கிய அம்சங்கள்:பெண்ணை வலுக்கட்டாயமாக கற்பழித்தததால், அந்த பெண் இறக்க நேரிட்டாலோ அல்லது
அந்த பெண் செயல்படாத நிலையை அடைந்தாலோ, குற்றவாளிக்கு மரண தண்டனை
விதிக்கப்படும்.டூ பிரிந்து வாழும் மனைவியை கணவன் வலுக்கட்டாயமாக
கற்பழித்தால், அதிகபட்சம், ஏழு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.
கற்பழித்தால் ஆயுள் முழுக்க சிறை : கற்பழிப்பு சட்டத்தின் பிரிவு 1,
2ன் கீழ், பெண்ணுக்கு காயம் ஏற்பட்டு, அந்த காயத்தால், அந்த பெண் இறக்க
நேரிட்டால், குறைந்தபட்சம், 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும்.
அந்த நபரின் எஞ்சிய ஆயுள்காலம் முழுவதும் சிறையிலேயே
அடைக்கப்படுவார்.கும்பலாக சேர்ந்து பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தால்,
கும்பலில் இருந்த ஒவ்வொருவருக்கும், குறைந்தபட்சம், 20 ஆண்டுகள் சிறை
தண்டனை விதிக்கப்படும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, நிவாரணமும் வழங்க
வேண்டும்.ஆசிட் போன்ற ரசாயனம், பொடிகளை வீசி, பெண்ணுக்கு நிரந்தரமாகவோ
அல்லது கொஞ்சமாகவோ பாதிப்பு ஏற்பட்டால், குறைந்தபட்சம், 10 ஆண்டு சிறை
தண்டனை முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு,
10 லட்ச ரூபாய் வரை இழப்பீடும் வழங்க வேண்டும்.
பெண்ணை பின் தொடர்ந்து சென்று, தொந்தரவு செய்வதற்கு, குறைந்தபட்சம்,
ஓராண்டு சிறை தண்டனை முதல், அதிகபட்சம் மூன்றாண்டு சிறை தண்டனையுடன்
அபராதம் விதிக்கப்படும்.ஆண் குறியை காண்பித்தல், பிறரின் உடலுறவு காட்சிகளை
காட்டுதல் போன்ற, முதல் முறையாக செய்யும் குற்றங்களுக்கு, குறைந்தபட்சம்,
ஓராண்டு முதல், அதிகபட்சம், மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும்
விதிக்கப்படும்.மீண்டும் அதே குற்றங்களை செய்தால், குறைந்தபட்சம்,
மூன்றாண்டுகள் முதல், அதிகபட்சம், ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனையும்,
அபராதமும் விதிக்கப்படும்.
பெண்ணின் ஆடையை தவறான நோக்கத்தில் அவிழ்த்து மானபங்கம் செய்தால்,
குறைந்தபட்சம், மூன்றாண்டுகள் முதல், அதிகபட்சம், ஏழு ஆண்டுகள் வரை சிறை
தண்டனையும் அபராதமும் கிடைக்கும். பாலியல் நோக்கத்தில் எழுதப்பட்ட,
வரையப்பட்ட ஏதாவது ஒன்றை காண்பித்தல், நிர்வாண படங்களை காண்பித்தல் போன்ற
குற்றங்களுக்கு, ஓராண்டு சிறை தண்டனை, சிறை தண்டனையுடன் அபராதம்
விதிக்கப்படும்.பாலியல் நோக்கத்தில் பெண்ணை தொடுவது, அவர் மீது படர்வது,
கெஞ்சுவது போன்ற குற்றங்களுக்கு, அதிகபட்சம், ஐந்தாண்டுகள் சிறை
தண்டனையும், அபராதமும், இரண்டும் சேர்ந்தும் விதிக்கப்படும். போலீஸ் துறையை
சேர்ந்தவர், அரசு ஊழியர், ராணுவ படை வீரர் போன்றவர்கள், பெண்ணை பாலியல்
பலாத்காரம் செய்தால், குறைந்தபட்சம், 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை,
அதிகபட்சம் ஆயுள் தண்டனை, அபராதம் விதிக்கப்படும்.
குற்றச்சட்டம்,
376 (கற்பழிப்பு) படி, கற்பழிப்பு குற்றத்திற்கு, குறைந்தபட்சம், ஏழு
ஆண்டு முதல், ஆயுட்காலம் வரையிலும் சிறையில் இருப்பதற்கான, ஆயுள் தண்டனை,
அபராதம் விதிக்கப்படும். கற்பழிப்பு குற்றத்தை கும்பலாக சேர்ந்து
செய்பவர்களுக்கு, ஆயுள் முழுவதும் கடுங்காவல் சிறை தண்டனை அல்லது மரண
தண்டனை விதிக்கப்படும்.அதிகாரத்தில் உள்ளவரின் கீழ் வேலை பார்க்கும் பெண்,
உடலுறவுக்கு உட்படுத்தப்பட்டால், குறைந்தபட்சம், ஐந்தாண்டுகள் முதல்,
அதிகபட்சம், 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.
மைனர் பெண்களை கடத்தினால்:
மைனர் பெண்ணை கடத்திய நபர், ஒரு முறைக்கு மேல், அதே குற்றத்தை செய்தால்,
அவர் ஆயுள் முழுவதும் சிறையில் அடைக்கப்படுவார். அவ்வாறு கடத்தி வரப்பட்ட
மைனர் பெண்ணை வேலைக்கு அமர்த்தினால் அல்லது கடத்தலுக்கு உதவினால்,
குறைந்தபட்சம், ஐந்தாண்டுகள் முதல் அதிகபட்சம், ஏழு ஆண்டுகள் வரை சிறை
தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.ஒன்றுக்கு மேற்பட்ட பெண்ணை
கடத்தினால், குறைந்தபட்சம், 10 ஆண்டு முதல் ஆயுள் தண்டனை வரையும்,
அபராதத்துடன் விதிக்கப்படும்.ஒன்றுக்கு மேற்பட்ட மைனர் பெண்களை கடத்தினால்,
குறைந்தபட்சம், 14 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் ஆயுள் முழுக்க சிறை தண்டனை
நிச்சயம்.இவ்வாறு, பல திருத்தங்கள், அவசர சட்டத்தில் இடம்பெற்றுள்ளன.
காவேரி இறுதி தீர்ப்பு 20 குள் வெளியிட சுப்ரிம் கோர்ட் உத்தரவு!
தமிழகத்தில் தண்ணீரின்றி கருகும் பயிர்களைக் காக்க, கர்நாடக அரசு,
உடனடியாக, 2 டி.எம்.சி., தண்ணீரை திறந்து விட வேண்டும். காவிரி நடுவர்
மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பை, இம்மாதம், 20ம் தேதிக்குள், மத்திய அரசு,
அரசிதழில் வெளியிட வேண்டும்' என, நேற்று உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்,
நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை, இதுவரை அரசிதழில் வெளியிடாததற்கு, மத்திய
அரசுக்கு, கடும் கண்டனமும் தெரிவித்துள்ளது.
காவிரி
நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளியாகி, ஐந்து ஆண்டுகளாகி விட்டன.
இதுவரை, இந்த தீர்ப்பை, அரசிதழில் வெளியிடாத, மத்திய அரசின்நடவடிக்கை
கண்டனத்துக்குரியது. இதன் மூலம், நீங்கள் (மத்திய அரசு) சட்டத்தை
மீறுகிறீர்கள்.காவரி நடுவர் மன்றத்தில், தீர்ப்பு வெளியாகி விட்டது. அதை
நடைமுறைப் படுத்துவதை தவிர, உங்களுக்கு வேறு வழி இல்லை. அது தான், இறுதி.
வேறு எந்த காரணத்தையும் கூறி, நடுவர் மன்றத்தின் தீர்ப்பை புறக்கணிக்க
முடியாது. "இந்த வழக்கில், எந்த உத்தரவும் பிறப்பிக்க வேண்டாம்' என,
கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கூறுவதை ஏற்க முடியாது. இம்மாதம், 20ம்
தேதிக்குள், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை, அரசிதழில் வெளியிட
வேண்டும். அதற்கு மாற்றாக, வேறு எந்த கருத்தையும் தெரிவிக்கக்
கூடாது.காவிரி நீரில், உடனடியாக, தமிழகத்துக்கு, 2 டி.எம்.சி., தண்ணீரை
திறந்து விட வேண்டும். அங்கு, தண்ணீரின்றி கருகும் பயிர்களைக் காப்பதற்கு,
உடனடியாக, கர்நாடக அரசு, இந்த தண்ணீரை திறந்து விட வேண்டும். மத்திய நீர்
வள ஆணையம், மூன்று பேர் அடங்கிய குழுவை அமைத்து, தமிழகம் மற்றும் கர்நாடக அரசுகளுக்கு,
தேவையான நீர் எவ்வளவு என்பதை, அந்த மாநிலங்களுக்குச் சென்று, ஆய்வு செய்து,
இரண்டு நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு, நீதிபதிகள்
உத்தரவிட்டனர்.
அரசிதழில் வெளியிடக் கூடாது காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பைஅரசிதழில்
வெளியிடக்கூடாது என, மத்திய அரசை மீண்டும் வலியுறுத்துவோம்; கர்நாடக
எதிர்க்கட்சியினருடன் ஆலோசனை நடத்துவோம்,'' என, அம்மாநில முதல்வர் ஜெகதீஷ்
ஷெட்டர் கூறினார். சுப்ரீம் கோர்ட் உத்தரவை அடுத்து, அவர் கூறியதாவது:
சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள தீர்ப்பு குறித்து, வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட
நிபுணர்களுடன் ஆலோசிக்கப்படும். அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டி,
விவாதித்து முடிவெடுக்கப்படும். சுப்ரீம் கோர்ட் உத்தரவை எதிர்த்து,
கர்நாடகாவின் நிலையை விளக்கி, மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவோம். காவிரி
நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடக் கூடாது என, மத்திய
அரசுக்கு ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளோம்; மீண்டும் அதை வலியுறுத்துவோம்.
இவ்வாறு, முதல்வர் ஷெட்டர் கூறினார்.தண்ணீர் திறப்பு : "தமிழகத்தில்
சம்பா பயிர்களைக் காப்பாற்ற, 2 டி.எம்.சி., தண்ணீர் திறந்து விட வேண்டும்'
என, கர்நாடகாவுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதால், மேட்டூர் அணையில்
இருந்து நேற்று இரவு, 8:00 மணிக்கு, 9,000 கன அடி தண்ணீர் திறந்து
விடப்பட்டது.
சாதுக்களும் ஆதரிக்கும் "பிரதமர்" மோடி!
குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பிரதமராக்க வேண்டும் என்ற குரல்
பாஜகவில் மட்டுமே வலுத்து வந்த நிலையில் இந்துத்துவா பேசும்
இயக்கங்களுக்குள்ளும் நீட்சி அடைந்திருக்கிறது. இதன் உச்சமாகத்தான்
சாதுக்களும் மோடிக்கு ஆதரவு என்ற செய்தி வெளியாகி உள்ளது.
நரேந்திர மோடியை நல்ல நிர்வாகி என்று முன்னிறுத்துகின்றன பாரதிய ஜனதாவும்
அதன் தோழமை சக்திகளும். பாஜக, ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ ஹிந்து பரிஷத்
இயக்கங்கள் மோடியை தாங்கள் சார்ந்திருக்கும் ‘இந்துத்துவா தத்துவார்த்த
அரசியல் காரணமாக ஆதரிப்பதில் முன்னிறுத்துவதில் வியப்பில்லை. ஆனால்
சாதுக்கள் ஏன் மோடியை ஆதரிக்க வேண்டும்? சாதுக்களுக்கும் மோடிக்கும் உள்ள
தொடர்பு என்பது அவர் ஒரு இந்துத்துவா முகம் என்பது மட்டும்தானா? இல்லை
என்கிறது குஜராத்தின் ஜூனாகத் மற்றும் இன்ன பிற மலை பிரதேசங்கள்!!
ஆம் நீங்கள் வரலாற்றுப் புத்தகங்களில் படித்த அதே ஜூனாகத் தான்!
நாடு விடுதலை அடைந்த போது இருந்த 500க்கும் மேற்பட்ட
சமஸ்தானங்களில் இந்த ஜூனாகத்தும் ஒன்று! பெரும்பான்மையான மக்கள்
இந்துக்களாக, ஆனால் ஆட்சிப் பொறுப்போ இஸ்லாமியர் வசம் இருந்து வந்தது.
அதனால் அவர் பாகிஸ்தானுடன் இணையப் போவதாக கூறினார். இந்த மாவட்டத்தின்
கடல்வழியே பாகிஸ்தானுடன் தொடர்பு கொள்வோம் என்றெல்லாம் கூறினார்.
ஆனால் இந்து மக்களோ கிளர்ந்தனர். இதனால் ஜூனாகத் மன்னர் பாகிஸ்தானுக்கு
தப்பி ஓட பின்னர் மக்கள் கருத்தறிய வாக்கெடுப்பு நடத்தி இந்தியாவோடு இணைந்த
அந்த ஜூனாகத் பிரதேசம் தன்னுள் சில விஷயங்களை அதிகம் வெளிப்படுத்தாமலேயே
இருந்து வந்துள்ளது. இதில் மிகவும் முக்கியமானது ஜூனாகத்துக்கும்
சாதுக்களுக்குமான உறவுகள் என்பதுதான்!
உங்களுக்கு சாதுக்கள், நிர்வாணசாமிகளாக நாகா சாதுக்கள் என்றால் நினைவுக்கு
வருவது எது? காசி, ஹரித்துவார், ரிஷிகேஷ், அலாகாபாத் போன்ற புண்ணிய
தலங்கள்தான். ஆனால் இந்த வரிசையில் ஜூனாகத்துக்கும் ஏன் குஜராத்
மாநிலத்துக்கே நிகரான இடம் இருக்கிறது என்பதுதான் 'நிர்வாண' உண்மை.
ஆனால்
இது அதிகம் பேசப்படாத ஒரு விஷயமும் கூட! தற்போது நடைபெற்று வரும் அலகாபாத்
கும்பமேளாவை நடத்துகிற நிர்வாகிகள் குஜராத் மாநில ‘அகாடாக்களும்" முக்கிய
பங்கு இருக்கிறது என்பது அந்த மாநிலத்தின் 'இந்துத்துவா' ஆழத்தை சொல்லும்!!
அகாடாக்கள் என்பது ஆதிசங்கரரால் நிறுவப்பட்டவை. மொத்தம் 13 அகாடாக்கள்
உள்ளன. ஒவ்வொரு அகாடாவும் பல படிநிலைகளாகப் பிரிக்கப்பட்டு
நிர்வகிக்கப்படுகின்றன. அகாடாக்கள்தான் சாதுக்களை உருவாக்குகின்றன. இந்த
சாதுக்கள்தான் ஒவ்வொரு கும்பமேளாவிலும் லட்சக்கணக்கில் வந்து குவிகின்றனர்.
கும்பமேளாவில்தான் அகாடாக்களின் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
இந்த அகாடாக்கள் ஜூனாகத்திலும் இருக்கின்றன. ஏன் குஜராத்தின் வேறு சில
மாவட்டங்களிலும் இருக்கின்றன.
நாகா சாதுக்களும் சாதுக்களும் சாமானியர்கள் அல்ல.. கடுங்குளிரில் இமயமலை
அடிவாரங்களிலேயே கொட்டும் உறைபனியிலேயே வெறும் சாம்பலைப் பூசிக் கொண்டு
நிர்வாணிகளாக உலா வருகின்ற அளவுக்கு பயிற்றுவிக்கப்பட்ட வலிமை பெற்றவர்கள்.
இந்த அகாடாக்களின் சாதுக்களைக் கட்டுப்படுத்தவோ அல்லது அகாடாக்களை
ஒடுக்கவோ எந்த ஒரு சட்டமும் இல்லை! எந்த ஒரு ராணுவமும் இல்லை! போலீஸும்
இல்லை! இவர்கள் வழிபாட்டுக்குரியவர்கள்! இறைவனுக்கு சமமானவர்கள் என்கிறது
ஹிந்து மதம்! அதுவும் நிர்வாண சாதுக்களிடம் ஆசி பெறுவதற்கு அலைமோதுகிற பக்த
கோடிகளை கும்பமேளா கூட்டங்களில் காணலாம்!
இன்னும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயமும் இருக்கிறது. நிர்வாண சாதுக்கள்,
சாதுக்களின் சங்கமம் கும்பமேளா காலங்கள் மட்டுமல்ல.. அவர்கள் ஆண்டுதோறும்
கூடுகிற இன்னொரு இடமும் இருக்கிறது! அதுதான் குஜராத்தின் ஜூனாகத்!
ஜூனாகாத்தில் அகாடாக்கள் வரிசை கட்டி நிற்கிற கிர்நார் மலை அடிவாரத்தில்
உள்ள சிவன் கோயிலில் சிறு கிணறு போல் ஒரு இடம் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும்
சிவராத்திரி நாளில் சிறப்பு பூஜைகள் நடத்தி 'நிர்வாண' கோலத்தில் இந்த
கிணற்றில் புனித நீராடுவதும் சாதுக்களின் கடமைகளில் ஒன்றாக
வகுக்கப்பட்டிருக்கிறது உண்மைதான்.
சாதுக்களின் புனித தேசங்கள் ரிஷிகேஷ்,
ஹரித்துவார், காசிகளோடு மட்டும் நிற்கவில்லை.. குஜராத்தும் அதன் ஜூனாகத்
உள்ளிட்ட பிரதேசங்களும்தான் அவர்களுக்கு புனித தேசங்கள்! புண்ணிய
பூமிகள்!!.
அப்ப இந்துத்துவா பேசுகிற அதுவும் தங்கள் புனித தேசமான குஜராத்தின்
முதல்வரான மோடியை ஆதரிக்காமலா போய்விடுவார்கள் சாதுக்கள்! சாதுக்களின்
அகாடாக்கள் ஒன்று கூடி மோடியைத்தான் பிரதமர் ஆக்க வேண்டும் என்று
தீர்மானித்துவிட்டால் பாரதிய ஜனதா, ஆர்.எஸ்.எஸ், விஸ்வ ஹிந்து பரிஷத் என
அத்தனை இந்துத்துவா பேசும் சக்திகளும் வாய்மூடி ஏற்றுத்தான் ஆக வேண்டும்
என்பது எழுதப்படாத நடைமுறை.
இதனால்தான் சாதுக்களின் சங்கமமான கும்பமேளாவுக்கு பயணப்படுகிறார் குஜராத்
முதல்வர் நரேந்திர மோடி! அப்புறம் என்ன?
Subscribe to:
Posts (Atom)