|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

05 February, 2013

காவேரி இறுதி தீர்ப்பு 20 குள் வெளியிட சுப்ரிம் கோர்ட் உத்தரவு!

தமிழகத்தில் தண்ணீரின்றி கருகும் பயிர்களைக் காக்க, கர்நாடக அரசு, உடனடியாக, 2 டி.எம்.சி., தண்ணீரை திறந்து விட வேண்டும். காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பை, இம்மாதம், 20ம் தேதிக்குள், மத்திய அரசு, அரசிதழில் வெளியிட வேண்டும்' என, நேற்று உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட், நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை, இதுவரை அரசிதழில் வெளியிடாததற்கு, மத்திய அரசுக்கு, கடும் கண்டனமும் தெரிவித்துள்ளது.
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளியாகி, ஐந்து ஆண்டுகளாகி விட்டன. இதுவரை, இந்த தீர்ப்பை, அரசிதழில் வெளியிடாத, மத்திய அரசின்நடவடிக்கை கண்டனத்துக்குரியது. இதன் மூலம், நீங்கள் (மத்திய அரசு) சட்டத்தை மீறுகிறீர்கள்.காவரி நடுவர் மன்றத்தில், தீர்ப்பு வெளியாகி விட்டது. அதை நடைமுறைப் படுத்துவதை தவிர, உங்களுக்கு வேறு வழி இல்லை. அது தான், இறுதி. வேறு எந்த காரணத்தையும் கூறி, நடுவர் மன்றத்தின் தீர்ப்பை புறக்கணிக்க முடியாது. "இந்த வழக்கில், எந்த உத்தரவும் பிறப்பிக்க வேண்டாம்' என, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கூறுவதை ஏற்க முடியாது. இம்மாதம், 20ம் தேதிக்குள், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை, அரசிதழில் வெளியிட வேண்டும். அதற்கு மாற்றாக, வேறு எந்த கருத்தையும் தெரிவிக்கக் கூடாது.காவிரி நீரில், உடனடியாக, தமிழகத்துக்கு, 2 டி.எம்.சி., தண்ணீரை திறந்து விட வேண்டும். அங்கு, தண்ணீரின்றி கருகும் பயிர்களைக் காப்பதற்கு, உடனடியாக, கர்நாடக அரசு, இந்த தண்ணீரை திறந்து விட வேண்டும். மத்திய நீர் வள ஆணையம், மூன்று பேர் அடங்கிய குழுவை அமைத்து, தமிழகம் மற்றும் கர்நாடக அரசுகளுக்கு, தேவையான நீர் எவ்வளவு என்பதை, அந்த மாநிலங்களுக்குச் சென்று, ஆய்வு செய்து, இரண்டு நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

அரசிதழில் வெளியிடக் கூடாது காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பைஅரசிதழில் வெளியிடக்கூடாது என, மத்திய அரசை மீண்டும் வலியுறுத்துவோம்; கர்நாடக எதிர்க்கட்சியினருடன் ஆலோசனை நடத்துவோம்,'' என, அம்மாநில முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் கூறினார். சுப்ரீம் கோர்ட் உத்தரவை அடுத்து, அவர் கூறியதாவது: சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள தீர்ப்பு குறித்து, வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட நிபுணர்களுடன் ஆலோசிக்கப்படும். அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டி, விவாதித்து முடிவெடுக்கப்படும். சுப்ரீம் கோர்ட் உத்தரவை எதிர்த்து, கர்நாடகாவின் நிலையை விளக்கி, மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவோம். காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடக் கூடாது என, மத்திய அரசுக்கு ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளோம்; மீண்டும் அதை வலியுறுத்துவோம். இவ்வாறு, முதல்வர் ஷெட்டர் கூறினார்.தண்ணீர் திறப்பு : "தமிழகத்தில் சம்பா பயிர்களைக் காப்பாற்ற, 2 டி.எம்.சி., தண்ணீர் திறந்து விட வேண்டும்' என, கர்நாடகாவுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதால், மேட்டூர் அணையில் இருந்து நேற்று இரவு, 8:00 மணிக்கு, 9,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.




No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...