|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

06 April, 2013

காமராஜர் ஒரு சகாப்தம்!

தஞ்சை மருத்துவகல்லூரி உருவான கதை!
 ஒரு நாள் காமராஜரைச் சந்திக்க வந்த செல்வந்தர் ஒருவர், கோவையில் மருத்துவக் கல்லூரி ஒன்று அமைக்க ரூ.20 லட்சம் தருவதாக கூறினார். அந்த திட்டத்திற்க்கு 1 கோடி செலவாகும் என்றும், மீதி 80 லட்சத்தை அரசு முதலீடு செய்ய வேண்டும் என்றும் அந்தச் செல்வந்தர் கேட்டுக்கொண்டார். அந்த மருத்துவக்க் கல்லூரி, தனியார் நிர்வாகத்தில் இருகுமென்றும் கூறினார். இதற்குச் சம்பந்தப்பட்ட சுகாதரத்துறை அமைச்சரின் ஆதரவும் ஆமோதிப்பும் இருத்தது.


சிறிது காலத்திற்க்குப் பிறகு, இத்திட்டம் சம்பந்தமான கோப்பு அனுமத்க்காகக் காமராஜரின் பார்வைக்கு வந்தது. சம்பந்தபட்ட அமைச்சரைக் காமராஜர் அழைத்து, "80 லட்சம் ரூபாயை ஒரு தனியாரிடம் கொடுத்து மருத்துவக் கல்லூரி தொடங்குவதைவிட, இன்னும் 20 லட்சத்தைப் போட்டு அரசாங்கமே மருத்துவக் கல்லூரியை தொடங்களாமே? தனியாரை மருத்துவக் கல்லூரி தொடங்க அனுமதித்தால், அவர்கள் அதைத் தொழிலாக்கிவிடுவார்கள். லாபம் சம்பாதிப்பதுதான் அவர்கள் நோக்கமாக இருக்கும். சேவை மனப்பான்மை இருக்காது" என்றார். சம்பந்தப்பட்ட அமைச்சர் பதில் ஏதும் சொல்ல முடியாமல் திக்கு முக்காடிப் போனார்.

கோவையில் தனியார் மருத்துவக் கல்லூரியைத் தொடங்க அனுமதி மறுத்த காமராஜ், தஞ்சாவூர் போர்டு, ரயில்வே செஸ் வரியாக வசூலித்த தொகையில் ரூ 1.30 கோடி இருப்பதை கேள்விப்பட்டு, அதை மருத்துவக் கல்லூரி தொடங்க செலவழிப்பதற்கு அனுமதி அளித்தார். மேற்கொண்டு பணம் தேவைப்பட்டாலும் அரசு கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் கூறினார். இவ்வாறு தஞ்சையில் 1 கோடிக்குமேல் செலவு செய்து அரசு மருத்துவக் கல்லூரி அமைந்திட ஆதரவும், ஊக்கமும் அளித்தார். இன்று தஞ்சையில் சிறப்பாக செயல்பட்டு வரும் மருத்துவக்கல்லூரி, காமராஜரின் முயற்சியினால் உருவானது என்கிற உண்மை பலருக்குத் தெரியாமல் போனதில் வியப்பில்லை."

 

இதுதான் இந்தியா?


காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவின் நிலமோசடியை அம்பலப்படுத்தி அரசியல் புயலை உருவாக்கிய ஹரியானா மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரி அசோக் கேம்கா தற்போது வெற்றிகரமாக 44-வது முறையாக இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். ஹரியானா மாநிலத்தில் ஏராளமான விளைநிலத்தை அடிமாட்டுக்கு வளைத்துப் போட்டு அதை டிஎல்ப் நிறுவனத்துக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்தார் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா என்று கடந்த ஆண்டு புகார் எழுந்தது. இது அரசியல் அரங்கில் பெரும் புயலைக் கிளப்பியது. விவசாயிகளிடம் நிலம் பலவந்தமாக பறிக்கப்பட்டது என்று வெளிப்படையாக குற்றம்சாட்டியிருந்தார் இது தொடர்பான புகார்களை விசாரித்து வந்த அசோக் கேம்கா. இதனால் அவர் அப்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதன் பின்னர் ஓராண்டுக்குள் 3 முறை வெவ்வேறு துறைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். கடைசியாக ஹரியானா விதை அபிவிருத்தி கழகத்தில் நிர்வாக மேலாளராக அவர் பணியாற்றி வந்தார். அங்கும் கேம்கா சும்மா இருக்கவில்லையே..விதை கொள்முதல் ஊழலை வெளிக்கொண்டு வந்து சிபிஐ விசாரணைக்கும் பரிந்துரைத்தார். 
 
மேலும் இது தொடர்பான பொதுநலன் வழக்கு ஒன்றில் ஏப்ரல் 12-ந் தேதிக்குள் மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறது. நிச்சயம் அரசுக்கு எதிராகத்தான் கேம்கா அறிக்கை தாக்கல் செய்வார் என்று எண்ணியதால் அவரை திடீரென தொல்லியல் துறைக்கு கேம்கா டிரான்ஸ்பர் செய்யப்பட்டிருக்கிறார். அவரது 20 வருட அரசுப் பணி காலத்தில் இது 44-வது பணியிட மாற்றம். அதுவும் பகல் 3.30 மணிக்கே அவரை அலுவலகத்தை விட்டு போகச் சொல்லிவிட்டு இரவு 7.30 மணிக்குத்தான் டிரான்ஸ்பர் ஆர்டர் கொடுத்திருக்கின்றனர் என்று குமுறியிருக்கிறார் கேம்கா. தொல்லியல்துறையில் என்ன அதிரடியைக் கிளப்புவாரோ கேம்கா?

வரைபடங்களில் மட்டுமே இனி...!

நமது  யானைககளை நாம்  கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டு இருக்கிறோம்! அதுவும் கொத்து கொத்தாய் அதன் அழிவை நம் கண்முன்னே காண்கிறோம். ரயிலில் தொடர்ச்சியாய், காட்டின் குடியிருப்பின் வளர்ச்சியாய்,இப்போது வறட்சியாய். முடியப்போகிறது ஒரு பிரம்மாண்டத்தின் வளர்ச்சி!
 
நீலகிரி மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவுவதால் தண்ணீரின்றி வனவிலங்குகள் பலியாகிவருகின்றன. கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் 8 யானைகள் பலியாகியுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நீலகிரியில் முதுமலை புலிகள் காப்பகம், ஊட்டி வடக்கு, தெற்கு, சிங்காரா, கூடலூர் வனக்கோட்ட பகுதிகளில் கடும் வறட்சியினால் நீர் நிலைகள் வற்றிவிட்டன. வனப்பகுதிகளில் பசுந்தீவனம் கிடைக்காத காரணத்தால் தண்ணீரை தேடி யானைகள் நீண்ட தூரம் நடக்க வேண்டியுள்ளது.இதனால் பசி களைப்பு காரணமாக வனவிலங்குகள் செத்து மடிகின்றன. கடந்த 2 மாதங்களில் மட்டும் 5 குட்டிகள் உள்பட 8 யானைகள் இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு கோடைக்காலத்தில் இதேபோல யானைகள் இறந்துள்ளன. மலைவாழ் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் யானைகள் இறந்து கிடந்தால் மட்டுமே தகவல் தெரியவருகிறது. பிரேத பரிசோதனை தேவை வறட்சியால் உயிரிழக்கும் யானைகளை மின்சாரம் தாக்கி இறந்ததாக வனத்துறையினர் சந்தேகம் கிளப்புவதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 
 
 இறந்த யானையை மின்வாரியம், காவல்துறை, உள்ளூர் கமிட்டி, தொண்டு நிறுவன அதிகாரிகள் முன்பாக பிரேத பரிசோதனை செய்யவேண்டும் என்ற விதிமுறையை வனத்துறையினர் மீறி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தண்ணீர் குட்டைகள் அமைக்கலாம் தண்ணீர் இன்றி தவிக்கும் வன விலங்குகளை பாதுகாக்க நீலகிரி வனப்பகுதியில் ஆங்காங்கே தண்ணீர் குட்டைகளை அமைக்கவேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன்மூலம் வனவிலங்குகள் தண்ணீர் தேடி அலைவதை தடுக்கமுடியும் என்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள்.

அசிங்கப்பட்டான் சுனா சாமி!

 
உச்சநீதிமன்றத்தில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமியை தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர் வறுத்தெடுத்து விரட்டியடித்திருக்கிறார். கேரள கடற்பரப்பில் மீனவர்களை படுகொலை செய்த இத்தாலி மாலுமிகள் தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. வழக்கை விசாரணைக்கு எடுத்து உத்தரவுகளை அல்டமாஸ் கபீர் பிறப்பித்துக் கொண்டிருந்த போது வழக்கறிஞர்கள் அமரும் இருக்கையில் இருந்த சுப்பிரமணியன் சுவாமி எழுந்து நான் ஒரு நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்திருக்கிறேன் என்றார். அவ்வளவுதான்... உஷ்ணமானார் அல்டமாஸ் கபீர்..." யார் நீங்கள்" என்று சுவாமியைப் பார்த்துக் கேட்டார் அவர். அதற்கு "நான் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருக்கிறேன்" என்றார். அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் 'நான் உங்களை யார்னு கேட்டேன்" என்றார் கடுப்பாக. மேலும் " நீங்கள் ஒன்றும் வழக்கறிஞர் இல்லை.. இந்த இடத்தில் இன்று பேசவும் வாதாடவும் உரிமை கிடையாது. ரோட்ல போகிறவர் எல்லாம் இங்க வந்து வாதாடனும்னா எப்படி? இதுக்கு முன்னாடி நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்திருக்கலாம்.. ஆனால் நாங்கள் அனுமதிக்க முடியாது" என்று வெளுத்து வாங்கிவிட்டார். 
 
இதற்கு சுவாமி பதிலளிக்க முயன்றார். அப்போதும் அல்டமாஸ் கபீர் விடவில்லை.. நீங்கள் எதுக்காக முதல் வரிசையில் உட்கார்ந்து இருக்கிறீர்கள்.. இங்கே உட்கார உங்களுக்கு உரிமை கிடையாது. இந்த நாற்காலிகள் வழக்கறிஞர்களுக்குத்தான். வழக்கு போடுபவர்களுக்கு அல்ல. உங்களுக்கு இங்கே உட்கார உரிமை கிடையாது என்று அதிரடியாக வெளியேறச் சொன்னார். இதனால் முகம் சிறுத்துப் போன சுப்பிரமணியன் சுவாமி, நீதிமன்றம் நான் இங்கே இருக்கிறதை விரும்பலை எனில் நான் வெளியேறுகிறேன் என்றார். அதற்கும் அதிரடியைக் காட்டினார் அல்டமாஸ் கபீர்.. "உங்களை நீதிமன்றத்துக்கு வரக்கூடாதுன்னு சொல்லை. இந்த நாற்காலியில் உட்கார உங்களுக்கு உரிமை இல்லை என்றுதான் சொல்கிறோம் என்றார். அதற்கும் அடங்காதவராக இங்கே ஒரு ரகசியக் கூட்டு இருக்கிறது என்று சுப்பிரமணியன் சுவாமி கொந்தளித்துப் போனார் தலைமை நீதிபதி. 'நீங்கள் என்ன பேசுகிறோம் என்று எச்சரிக்கையோடு பேசுங்கள்.. ரகசியக் கூட்டு என்றால் என்ன? என்று கடுப்படித்தார். இங்கே என்றால் இங்கே இல்லை. வெளியே... இத்தாலிய மாலுமிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படாது என்று இத்தாலிக்கு மத்திய அரசு உறுதி மொழி அளித்துள்ளது என்று கூறிவிட்டு வெளியேறிவிட்டார்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...