நமது யானைககளை நாம் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டு இருக்கிறோம்! அதுவும் கொத்து கொத்தாய் அதன் அழிவை நம் கண்முன்னே காண்கிறோம். ரயிலில் தொடர்ச்சியாய், காட்டின் குடியிருப்பின் வளர்ச்சியாய்,இப்போது வறட்சியாய். முடியப்போகிறது ஒரு பிரம்மாண்டத்தின் வளர்ச்சி!
நீலகிரி மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவுவதால் தண்ணீரின்றி
வனவிலங்குகள் பலியாகிவருகின்றன. கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் 8 யானைகள்
பலியாகியுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நீலகிரியில் முதுமலை புலிகள் காப்பகம், ஊட்டி வடக்கு, தெற்கு, சிங்காரா,
கூடலூர் வனக்கோட்ட பகுதிகளில் கடும் வறட்சியினால் நீர் நிலைகள்
வற்றிவிட்டன. வனப்பகுதிகளில் பசுந்தீவனம் கிடைக்காத காரணத்தால் தண்ணீரை
தேடி யானைகள் நீண்ட தூரம் நடக்க வேண்டியுள்ளது.இதனால் பசி களைப்பு காரணமாக
வனவிலங்குகள் செத்து மடிகின்றன.
கடந்த 2 மாதங்களில் மட்டும் 5 குட்டிகள் உள்பட 8 யானைகள் இறந்துள்ளதாக
தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு கோடைக்காலத்தில் இதேபோல யானைகள்
இறந்துள்ளன. மலைவாழ் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் யானைகள் இறந்து
கிடந்தால் மட்டுமே தகவல் தெரியவருகிறது.
பிரேத பரிசோதனை தேவை
வறட்சியால் உயிரிழக்கும் யானைகளை மின்சாரம் தாக்கி இறந்ததாக வனத்துறையினர்
சந்தேகம் கிளப்புவதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இறந்த யானையை மின்வாரியம், காவல்துறை, உள்ளூர் கமிட்டி, தொண்டு நிறுவன
அதிகாரிகள் முன்பாக பிரேத பரிசோதனை செய்யவேண்டும் என்ற விதிமுறையை
வனத்துறையினர் மீறி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தண்ணீர் குட்டைகள் அமைக்கலாம்
தண்ணீர் இன்றி தவிக்கும் வன விலங்குகளை பாதுகாக்க நீலகிரி வனப்பகுதியில்
ஆங்காங்கே தண்ணீர் குட்டைகளை அமைக்கவேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள்
கோரிக்கை விடுத்துள்ளனர். இதன்மூலம் வனவிலங்குகள் தண்ணீர் தேடி அலைவதை
தடுக்கமுடியும் என்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள்.
No comments:
Post a Comment