ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
22 September, 2011
அமெரிக்காவின் நெ 1 கோடீஸ்வரர் பில் கேட்ஸ்!
அமெரிக்க பொருளாதாரம் சமீப காலமாக முன்னே பின்னே இருந்தாலும், பில்கேட்ஸின் வருமான உயர்வை அது எந்த விதத்திலும் பாதிக்கவில்லை! ஆம்...
அமெரிக்காவின் ஃபோர்ப்ஸ் இதழின் டாப் 400 பணக்காரர்கள் பட்டியலில், மைக்ரோ
சாப்ட் அதிபர் பில் கேட்ஸ் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
ஃபோர்ப்ஸ் பட்டியலின்படி பில்கேட்ஸ் வருமானம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 5 பில்லியன் டாலர் அதிகரித்து, 39 பில்லியன் டாலராக உள்ளது. இவருக்கு
அடுத்த நிலையில் பெர்க்ஷையர் ஹதாவேயின் தலைவர் வாரன் பஃபே வருகிறார்.
இவரது வருவாய் கடந்த ஆண்டை விட 6 பில்லியன் டாலர் குறைந்துள்ளது.
ஆரக்கிள் சிஇஓ லாரி எல்லிசன் 33 பில்லியன் டாலர்களுடன் மூன்றாவது இடம் பெற்றுள்ளார். வால் மார்ட் நிறுவனத்தை உருவாக்கிய வால்டன் குடும்பத்தைச் சேர்ந்த மூன்றுபேர் அமெரிக்காவின் டாப் 10 பணக்கார பட்டியலில் உள்ளனர். ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸூகர்பெர்க் 17.5 பில்லியன் டாலர்களுடன் 14வது இடத்தைப் பிடித்துள்ளார். ஃபோர்ப்ஸ்
பட்டியலிட்டுள்ள 400 டாப் பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ 1.5
ட்ரில்லியன். அதாவது அமெரிக்க பட்ஜெட்டில் பற்றாக்குறையாக உள்ள தொகைக்கு
சமமானது இது!
உலகின் குள்ளமான அமெரிக்க கல்லூரி மாணவி கின்னஸ் புத்தகத்தில்!
27 இன்ச் உயரமுள்ள அமெரிக்க கல்லூரி மாணவி பிரிட்ஜெட் ஜார்டன் தான்
உலகிலேயே மிகவும் குள்ளமான பெண் என்று கின்னஸ் உலக சாதனைக் குழு
தெரிவித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்தவர் பிரிட்ஜெட் ஜார்டன்
(22). அவரது சகோதரர் பிராட் ஜார்டன் (20). பிரிட்ஜெட்டின் உயரம் 27 இன்ச்,
பிராடின் உயரம் 38 இன்ச். அவர்கள் தான் உலகிலேயே மிகவும் குள்ளமான
உடன்பிறப்புகள் என்று கின்னஸ் சாதனை குழு தெரிவித்துள்ளது.
அவர்கள்
இருவரும் மத்திய இல்லினாய்ஸில் உள்ள கஸ்கஸியா கல்லூரியில் படித்து
வருகின்றனர். நாட்டியம், சியர் லீடிங் ஆகியவை பிரிட்ஜெட்டின் பொழுதுபோக்கு.
பிராட் கராத்தே, ஜிம்னாஸ்டிக்ஸ், கூடைப்பந்து, மேஜிக் செய்வதில் அதிக
ஆர்வம் உள்ளவர்.
பிரிட்ஜெட் தான் உலகிலேயே குள்ளமான பெண்மணி என்று
கின்னஸ் உலக சாதனைக் குழு தெரிவித்துள்ளது. 28.5 இன்ச் உயரமான
துருக்கியைச் சேர்ந்த எலிப் கோகமேன் தான் இதற்கு முன்பு உலகின் குள்ளமானப்
பெண்மணியாக திகழ்ந்தார். இதுவரை வாழ்ந்தவர்களிலேயே குள்ளமான பெண்
என்றால் அது நெதர்லாந்தைச் சேர்ந்த பாலின் மஸ்ட்ர்ஸ் தான். அவர் உயரம்
வெறும் 24 இன்ச். அவர் கடந்த 1895-ம் ஆண்டில் தனது 19 வயதில் நிமோனியாவால்
உயிர் இழந்தார்.
பிரி்ட்ஜெட் நீண்ட நாட்களுக்கு உலகின் குள்ளமானப்
பெண்ணாக இருக்க முடியாது. ஏனென்றால் 2 அடி உயரமுள்ள இந்தியாவைச் சேர்ந்த
ஜோதி அம்ஜி வரும் டிசம்பர் மாதம் 18 வயதை அடைகிறார். எனவே, விரைவில் ஜோதி
தான் உலகின் குள்ளமானப் பெண் என்று அறிவிக்கப்படுவார் என்று கின்னஸ்
செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
அதுக்கெல்லாம்' ஏது நேரம்?
அதிகாலை எழுந்து அரக்கப் பரக்க வீட்டு வேலை செய்துவிட்டு உடனே அலுவலகப்
பணிக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வாழ்க்கையே
இயந்திரமயமாகி விட்ட சூழலில் சுற்றத்தாரையும், நண்பர்களையும் சந்தித்துப்
பேச நேரமேது என்று ஆதங்கப்படுபவர்கள்தான் அதிகம் உள்ளனர். அலுத்து
சலித்து போய், 'அதற்கெல்லாம் நேரம் ஏதுங்க' என கூறப்படும் வரிசையில்
ஒன்றாகி வருகிறது தாம்பத்யம். இது அதிர்ச்சியும் வருத்தமும் படவேண்டிய
விசயம்தான். தளர்வும், சோர்வுமே தாம்பத்யத்தை தள்ளி வைப்பதாக ஆய்வு முடிவு
ஒன்று தெரிவிக்கிறது. 10ல் 7 தம்பதியர்கள் இவ்வகையான சோர்வு நிலையிலேயே
உள்ளனர் என அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
உடலை வலுவாக்கும் பாதாம்!
பாதாம் பருப்பினால் உடலுக்கு அதிகமான புரதச்சத்து கிடைப்பதோடு, ஜீரண
சக்தியை அதிகரிக்கச் செய்வதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. பாதாமில் உள்ள
புரதச்சத்து மிகவும் தரம் வாய்ந்தது. 25 கிராம் பாதாமில் 6 கிராம் புரதம்
உள்ளது. பாதாமில் உள்ள நார்ச்சத்து, கொழுப்பு சத்தை உடல் ஏற்றுக் கொள்வதை
தவிர்க்கின்றது. பாதாமில் உள்ள நார்ச்சத்து 20 சதவிகிதம் கரையும் தன்மை
கொண்டது. 80 சதவிகிதம் கரையாத்து. இந்தக் கலவை உடலின் ஜீரணமண்டலத்திற்கு
மிகவும் நல்லது. இது கொலஸ்ட்ரால் லெவலை குறைக்கின்றது. இதனால் பாதாமை ஒரு
குறைந்த கலோரி உணவு என்று சொல்லலாம். புரதமும், நார்ச்சத்தும் செறிந்து
இருப்பதால் பாதாம் சிறிய அளவில் எடுத்துக் கொண்டாலும் பசியை தணிக்கின்றது.
எனவேதான் பாதாம் ஒரு உயர்தர உணவாக கருதப்படுகிறது.
பாதாம் உடலுக்கு வலிமை, வீரியம் இவற்றை தருகின்றது. சத்து நிறைந்த பாதாம் இந்தியாவில் பஞ்சாபிலும், காஷ்மீரிலும் அதிக அளவில் விளைகின்றது. மிகச் சிறந்த பாதாம் பருப்புகள் அமெரிக்காவில் கலிஃபோர்னியா மாகாணத்தில் விளைகின்றன. அங்கு பாதாம் பயிரிடுபவர்கள் இணைந்து “கலிஃபோர்னியா பாதாம் போர்டு” என்ற அமைப்பை ஏற்படுத்திக் கொண்டு, உலகெங்கும் பாதாம் பருப்பை விற்பனை செய்கின்றன.
செயல்திறன் மிக்க சத்துக்கள் : பாதாமில் உள்ள கொழுப்புச்சத்து வகையை சேர்ந்த மூஃபா கொலஸ்ட்ராலை குறைக்க வல்லது. தவிர பாதாமில் ஒமேகா – 6 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை இதயத்திற்கு நல்லது. பாதாமில் எலும்பு வளர்ச்சிக்கு தேவையான கால்சியமும், பாஸ்பரசும் உள்ளன. இவை கார்போஹைட்ரேட்டின் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகின்றன. மக்னீசியம், மேங்கனீஸ் மற்றும் விட்டமின் பி – 6 பாதாமில் காணப்படுகின்றன. வைட்டமின் பி – 6 புரதத்தின் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகின்றது. இதனால் இதயத்திற்கு கெடுதலான ஹேமோசைடிசின் அளவு கட்டுப்படுத்தப்படுகின்றது. பாதாமில் வைட்டமின் இ கூட செறிந்திருக்கின்றது
பாதாம் எண்ணெய்: பாதாமில் இரண்டு வகை உண்டு. ஒன்று இனிப்பு பாதாம், மற்றொன்று கசப்பு பாதாம் இனிப்பு பாதாமில் பூக்கள் மென்மையாக இருக்கும். கசப்பு பாதாமின் இலைகள் சிவப்பு நிறத்தில் காணப்படும். இனிப்பு பாதாமிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் சருமத்திற்கு மிகவும் நல்லது. உடலை மசாஜ் செய்ய பெரும்பாலும் இனிப்பு பாதாம் எண்ணெயே பயன்படுத்தப்படுகின்றது.
பாதாமில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் அதன் எடையில் பாதி அளவு இருக்கும். எடுக்கப்பட்ட எண்ணெய் வண்ணமில்லாமலும் இருக்கும். இல்லை மஞ்சள் நிறத்தில் இருக்கும். பாதாம் எண்ணெயானது தாதுப்பொருட்கள், வைட்டமின்கள் மற்றும் புரதம் செரிந்தது. இது அனைத்துவகையான சருமத்திற்கும் ஏற்றது.
பாதாம் எண்ணெய்யை உபயோகிப்பதால் சருமம் மிருதுவாகின்றது. புத்துணர்ச்சி பெறுகின்றது.சரும வறட்சி, அரிப்பு, போன்றவைகளுக்கு பாதாம் எண்ணெய் தடவுவதால் நீக்கலாம். சோரியாசிஸ், எக்சிமா போன்ற சரும வியாதிகளுக்கு பாதாம் எண்ணெய் ஏற்றது. தீப்புண்களை குணப்படுத்தவும் பயன்படுகின்றது.இனிப்பு பாதாமில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் சோப்புகள், அழகு சாதனங்கள் இவற்றின் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றது.
செரிமானக் கோளாறுகளை நீக்கும் : நமது பெருங்குடலில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்கள், தீமை செய்யும் பாக்டீரியாக்களை அழித்து உணவு செரிமானத்தை அதிகரிப்பதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே செரிமானக்கோளாறு உள்ளவர்கள் பாதம் பருப்பை உண்ணுவதால் அதில் உள்ள வேதிப்பொருட்கள் நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். இதனால் ஜீரணக்கோளாறுகள் குணமடைவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இப்பிரச்சினை இருப்பவர்கள் மட்டுமின்றி உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் என்பவர்கள் அனைவரும் பாதாம் பருப்பு சாப்பிடலாம்.
வயிற்றுக்கு ஏற்ற பாதாம் பால் : பாதாமை தோலுரித்த பிறகே உண்பது நல்லது. பாதாமின் தோல் உணவுக்குழாயில் எரிச்சலை உண்டாக்கலாம். தவிர பாதாம் பருப்புகள் வாயில் நன்றாக மென்று விழுங்க வேண்டும். அப்பொழுது தான் எளிதில் ஜீரணமாகும். ஸ்டார்ச் இல்லாததால் பாதாம் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது. பாதாம் பாலில் கொழுப்பு குறைவு. அதனால் பசுவின் பாலுக்கு பதிலாக பாதாம் பாலை உபயோகிக்கலாம்.பாதாம் பால் வயிற்றுக்கு, சிறுநீரக பாதைகளுக்கு நுரையீரலுக்கு நல்லது. பாதாம் பால் வயிற்றெரிச்சலை போக்கும். பொடித்த பாதாம் கேக்குகள், ரொட்டி தயாரிப்பில் உதவுகின்றது.
இதயத்தின் நண்பன்: ஓட்ஸ்,சோயா பூண்டு, பாதாமும் இதயத்தின் நண்பன். பாதாம் உடல் எடையை கூட்டுவதில்லை என்றால் பலர் நம்புவதில்லை. பாதாம் போன்ற கொட்டைகள் உடல் எடையை அதிகரிக்கின்றன என்பது பலருடைய கருத்து. இந்த கருத்து சரியல்ல. பாதாம் பருப்பை குறைவாக எடுத்துக் கொண்டாலே பசி அடங்கி விடும். 25 கிராம் பாதாம் 164 கலோரிகளை அளிக்கின்றது. ஆயுர்வேத, யுனானி சிகிச்சைகளில் பாதாம் ஒரு முக்கியமான டானிக். சோகை, மனக்கலைப்பு, ஆண்மைக்குறைபாடுகள், மலச்சிக்கல், சுவாச கோளாறுகள் இவற்றைப் போக்கும் டானிக்காக பாதாம் பயன்படுகின்றது.
ஆய்வுகளின் படி பாதாமில் உள்ள 9 பெனாலிக் வேதிப் பொருட்களில் 8 ஆன்டி – ஆக்ஸிடென்ட் குணங்களை உடையவை. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பாதாமை உண்பதால் அதிகரிக்கும். புற்றுநோய் வருவதும் தவிர்க்கப்படுகின்றது. தவிர பாதாம் அலர்ஜிகளை உண்டாக்காது. உணவுப் பொருளில் பாதாம் சேர்ப்பதால் அவற்றின் சுவை மற்றும் சத்துக்கள் அதிகரிக்கிறது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

கண்களைக் காக்கும் பொன்னான உணவுகள்!
கல்வி அறிவு இல்லாதவரை கண்ணிழந்தோர் என வள்ளுவர் குறிப்பிடுவதில் இருந்தே
கண்களின் அருமையை அனைவரும் உணர்ந்து கொள்ளவேண்டும். உலகின் உள்ள அத்தனை
அழகையும் நாம் பார்க்க உதவி புரிவது கண்களே. அந்த கண்களை காக்க நாம் அக்கறை
எடுத்துக்கொள்வதில்லை. கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதை விட
ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளவைகளை பின்பற்றினால் கண்களை பாதுகாக்கலாம்.
தல தலன்னு சொல்லி தல குனிய வச்சிட்டீங்களே...
மங்காத்தா தண்ணி பார்ட்டியில் சோனாவை பலாத்காரம் செய்துவிட்டார்கள் என
ஊரெங்கும் பேச்சாய் கிடப்பது, படத்தின் நாயகன் அஜீத்தை வருத்தப்பட
வைத்துவிட்டதாக கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது மங்காத்தா மூலம் அஜீத்துக்கு.
ஆனால்
இந்த வெற்றிக்குக் காரணமாக இருந்த இயக்குநர் வெங்கட் பிரபு, அவர் தம்பி
பிரேம், படத்தில் நடித்த மகத், வைபவ் என எல்லோருமே மது விருந்து கொண்டாடிய
லட்சணம், படத்தின் வெற்றிக்கே கரும்புள்ளி போலாகிவிட்டதே என பெரிதும்
வருத்தப்படுகிறாராம் படத்தின் ஹீரோவான அஜீத்.
ஏற்கெனவே ஜோசியம், ஜாதகம் போன்றவற்றில் ஏக நம்பிக்கை கொண்டவர் அஜீத் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்
பார்ட்டியில் அஜீத்தும் கலந்து கொண்டார் என்றாலும், அவர் வந்த வேகத்தில்
எல்லோருக்கும் ஒரு ஹாய் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டாராம்.
'தல'
போனபிறகுதான், தண்ணியில் கவிழ்ந்து தலை கால் புரியாமல் சோனா பலாத்காரம்
வரை போய்விட்டதாம் நிலைமை. அடுத்தநாள் சோனா போலீசில் புகார் கொடுத்த
பிறகுதான் விவரம் தெரிய வந்ததாம் அஜீத்துக்கு. விளைவு, மதுவிருந்து
வைத்தவர், அதில் அத்துமீறியவரின் நண்பர் என அனைவரையும் கூப்பிட்டு,
'என்னங்க இது... தல தலன்னு சொல்லி தல குனிய வச்சிட்டீங்களே... இனி இதை
மங்காத்தா பார்ட்டின்னு வெளிய சொல்லாதீங்க," என்று சொன்னதாக
கிசுகிசுக்கிறார்கள். 'பெரிய நட்சத்திரங்களுக்கு வரும் வழக்கமான
சங்கடங்களில் இதுவும் ஒன்று. ஆனா ரசிகர்களுக்கு 'தல'யைப் பத்தி தெரியும்...
விடுங்க', என்கிறார்கள் அஜீத்துக்கு நெருக்கமானவர்கள்!
மனுஷனும் எப்படி வாழ்ந்தான் என்கிற அடையாளம், என் சாவுக்குக் கூடுற கூட்டத்தில்தான் தெரியும் அஜீத்!
சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில், ஜெயலலிதாவுடனான தனது சந்திப்பு
குறித்து அவர் பேசுகையில், "அம்மா என் கல்யாணத்துக்கு வந்து வாழ்த்தியதை
எப்போதும் மறக்கவே மாட்டேன். அம்மாவின் போயஸ் கார்டன் வீட்டுக்கு
நானும் ஷாலினியும் போயிருந்தோம். சொந்த மகனைப்போல அப்போ பாசம் காட்டினாங்க
அம்மா!," என்று கூறியுள்ளார்
திரையுலக விழாவில் எதிர்த்துப்
பேசியதற்காக முன்னாள் முதல்வர் கருணாநிதி அவரை மிரட்டியதாகக் கூறப்பட்டது
குறித்த கேள்விக்கு, "ஜனநாயகப் பண்புகளை நம்புறவன் நான். அரசியல் கட்சித்
தலைவர்களுக்கு எப்பவும் அதிகபட்ச மரியாதை கொடுப்பேன். என் மனசுல பட்டதை
விழாவில் பேசினேன். அதுல எந்த உள்நோக்கமும் இல்லை. என் திருமணத்தில்
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அய்யா நேரில் வந்து வாழ்த்தினார். அது எப்பவும்
என் மனசில் நீங்காமல் இடம் பிடிச்சிருக்கும்!," என்று கூறியுள்ளார்.
35 மனித உடல்களை சாலையில் வீசி சென்ற மர்மக் கும்பல்!
மெக்சிகோ நாட்டில் மர்ம நபர்களால் நெடுஞ்சாலை ஒன்றில் ஏறியப்பட்ட 35 மனித
உடல்களை மீட்ட போலீஸார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெக்சிகோ
நாட்டின் விராகுரூஸ் நகரில் உள்ள பரபரப்பான நெஞ்சாலை ஒன்றில் 2
டிராக்குகளில் வந்த ஒரு கும்பல் 35 பேரின் உடல்களை சாலையின் நடுவே குவித்து
வைத்துவிட்டு தப்பி சென்றுவி்ட்டனர். உடல்கள் குவிக்கப்பட்ட பகுதியில் ஒரு
பாலம் இருந்ததால், அங்கு சில நிமிடங்களுக்கு போக்குவரத்தை மறித்து
நிறுத்திவிட்டு இந்த கொடுமை அரங்கேறி உள்ளது.
இதுகுறித்து மெக்சிகோ
நாட்டு அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது, சம்பவம் நடந்த போது எடுக்கப்பட்ட
சில போட்டோக்கள் மற்றும் மொபைல்போன்களின் வீடியோக்கள் மூலம், 2
டிரக்குகளில் உடல்கள் கொண்டு வரப்பட்டது தெளிவாக தெரிகிறது. அந்த வழியாக
நடந்து சென்றவர்கள் சாலையில் மேலாடை இல்லாத மனித உடல்கள் கிடப்பதை கண்டு
அதிர்ச்சி அடைந்தனர்.
இறந்தவர்களில் 12 பெண் மற்றும் 23 ஆண் உடல்கள்
இருந்தன. இந்த சம்பவ குறித்து கிடைத்த ஒரு வீடியோவில், மனித உடல்கள்
கொண்டு வரப்பட்ட டிரக்குகளை சூழ்ந்த வண்ணம், சில கார்கள்
நிறுத்தப்பட்டிருந்தது தெரிகிறது. சாலையில் ஏறிப்பட்டவர்களில் 2 பேர் கடந்த
சில நாட்களுக்கு முன் காணாமல் போனவர்கள்.
மேலும் ஒரு
போலீஸ்காரரின் உடலும் உள்ளது. அனைவரும் கடத்தல், போதைப் பொருள்
வைத்திருத்தல் உள்ளிட்ட கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர்கள். சாலையில்
கொண்டு வந்து போடுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் அனைவரும்
கொல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார்
விசாரித்து வருகின்றனர், என்றார்.
விராகுரூஸ் நகரின் அட்டர்னி
ஜெனரல் கூறியதாவது, நெடுஞ்சாலையின் நடுவே சென்ற 2 டிராக்குகளின்
பின்கதவுகள் திறந்த நிலையில் உடல்கள் சாலையில் கொட்டப்பட்டுள்ளது. பின்னர்
அந்த டிரக்குகள் சம்பவ இடத்தில் இருந்து விரைவாக நகர்ந்து சென்றுவிட்டன
என்றார்.
சவுதி ஆரேபியாவில் இருந்து விசா காலம் முடிந்ததால் 117 இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்!
உத்திரபிரதேசம், பீகார், உத்தராஞ்சல்,
ஜார்க்கண்ட் உள்பட வடமாநிலங்களில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்
சவுதி அரேபியாவிற்கு டிரைவர், வெல்டர், கட்டிட பணிகளுக்கு ஏஜென்டுகள் மூலம்
தலா ரூ.50 ஆயிரம் பெற்று ஆட்களை அனுப்பி வைத்தனர். அவர்கள் வேலைக்கான விசா
இல்லாமல் சுற்றுலா விசாவில் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தனர்.மேலும் அங்கு
அவர்களுக்கு உரிய சம்பளம் வழங்கப்படவில்லை. இந்த
நிலையில் சவுதி அரேபியாவில் விசா காலம் முடிந்து அதிக நாள்
தங்கியிருந்ததாக கூறி இந்தியர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிறையில் தண்டனை காலம் முடிந்த பின் இந்தியர்களை சவுதி அரேபிய அரசு
விமானத்தில் அனுப்பி வைக்கிறது.
கடந்தசில
தினங்களுக்கு முன்பு 70 பேரை சென்னைக்கு அனுப்பி வைத்தது. அதுபோல் இன்று
சவுதி அரேபியாவில் இருந்து 117 பேர் சென்னைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
அதில் ஜார்க்கண்ட் மாநிலத்தை கிஷோர் என்பவர் கூறுகையில், வெளிநாட்டில்
வேலை என்ற ஆசையில் சென்றோம். ஆனால் கடன் வாங்கி சென்ற எங்களுக்கு துன்பம்
ஏற்பட்டது. சவுதி அரேபிய அரசு சுற்றுலா விசாவில் சென்றதாக கூறி எங்களை
சிறையில் அடைத்தனர்.
மலேசியா, வங்காளதேசம் போன்ற
நாடுகளின் தூதரக அதிகாரிகள் வந்து நாட்டினரை அழைத்து சென்றனர். ஆனால்
இந்திய தூதரக அதிகாரிகள் எங்களுக்கு எந்தவித உதவியையும் செய்யவில்லை.
தற்போது சவுதி அரசே அனுப்பி உள்ளது என்றனர்.
தைவான் நாட்டுக்கு போர் விமானங்களை சப்ளை செய்ய, அமெரிக்கா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதற்கு, சீனா கண்டனம்!
தைவான் நாட்டுக்கு போர் விமானங்களை சப்ளை செய்ய, அமெரிக்கா ஒப்பந்தம்
மேற்கொண்டுள்ளதற்கு, சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. தைவான் நாடு, தங்கள்
நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என, சீனா கூறி வருகிறது. இருப்பினும் தைவான்
நாட்டின் ஆட்சி நிர்வாகம் தன்னாட்சி பெற்றதாக உள்ளது. இதற்கிடையே,
தைவானுக்கு, 5.85 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு, எப்.16 ரக
விமானங்களையும், விமான உதிரி பாகங்களையும் சப்ளை செய்ய அமெரிக்கா ஒப்பந்தம்
மேற்கொண்டுள்ளது. அதுமட்டுமல்லாது, அமெரிக்காவின் லூக் விமானப்படை
தளத்தில் தைவான் நாட்டை சேர்ந்த பைலட்களுக்கு பயிற்சி அளிக்கவும் முடிவு
செய்துள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை சீனா கண்டித்துள்ளது. தங்கள்
நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியான தைவானுக்கு ஆயுத சப்ளை செய்வது,
சீன-அமெரிக்க பாதுகாப்பு உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் என, சீனாவின்
பாதுகாப்பு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
மாயாவதி கட்சி எம்.எல்.ஏ. மீது சி.பி.ஐ கற்பழிப்பு வழக்கு!
உத்தரபிரதேச மாநிலத்தில் 17 வயது மைனர் பெண் கற்பழிப்பு வழக்கில், பகுஜன்
சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பாண்டா மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் , 17 வயது
மைனர் பெண்ணை கற்பழித்ததாக பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. புருஷோத்தம்
திவேதி 48 என்பவர் மீது புகார் எழுந்தது. எனினும் அரசியல் செல்வாக்கினால்
தப்பித்தார். இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த கோரி சுப்ரீம் கோர்டில்
வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் கடந்த 12-ம் தேதி
சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட்டது. இதன்படி எம்.எல்.ஏ. புருஷோத்தம் உள்பட 4
பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.
சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தின்படி பொதுத்தேர்வு!
அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரலில் நடைபெறும் பொதுத்தேர்வு, சமச்சீர் கல்வி
பாடத்திட்டத்தின்படியே நடைபெறும்" என, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா
தேவி அறிவித்துள்ளார். அவரது அறிவிப்பு: சமச்சீர் கல்வி
திட்டம் அமலுக்கு வந்துள்ளதை அடுத்து, 2011-12ம் கல்வியாண்டு முதல்,
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தின்படி நடத்த
முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுவரை நடைமுறையில் இருந்து வந்த எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிகுலேஷன்,
ஆங்கிலோ இந்தியன், ஓ.எஸ்.எல்.சி., ஆகிய பாடத் திட்டங்கள்
ஒருங்கிணைக்கப்பட்டு, "இடைநிலைக்கல்வி பொதுத்தேர்வு" என, ஒரே தேர்வு முறை
நடைமுறைப்படுத்தப்படும். அடுத்த ஆண்டு (2012) மார்ச், ஏப்ரலில் நடைபெறும் பத்தாம் வகுப்பு
பொதுத்தேர்வு, சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தின்படியே இருக்கும். பழைய
பாடத்திட்டங்களின் படி தேர்வுகள் நடத்தப்பட மாட்டாது. இத்தேர்வை முதன்
முறையாக எழுதும் தனித்தேர்வர்களும், சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தின் படியே
தேர்வெழுத அனுமதிக்கப்படுவர்.
எனினும், நடப்பு செப்டம்பர், அக்டோபர் மற்றும் அதற்கு முந்தைய
பருவங்களில், பழைய பாடத் திட்டங்களின் அடிப்படையில் தேர்வெழுதி
தோல்வியுற்றவர்கள், பழைய பாடத்திட்டங்களின் அடிப்படையிலேயே, 2012
மார்ச்சில் நடைபெறும் தேர்வை எழுத அனுமதிக்கப்படுவர். புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு
செய்முறைத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம்
நடக்கும் தேர்வை, நேரடி தனித்தேர்வாக எழுத உள்ள மாணவர்களுக்கு, செய்முறைத்
தேர்வு எங்கு, யாரால், எப்படி நடத்தப்படும் என்ற விவரங்கள் விரைவில் தனியாக
அறிவிக்கப்படும்.
அதிமுக வேட்பாளர்கள் மாற்றம்!
உள்ளாட்சித்
தேர்தலில் நகராட்சி மற்றும் பேருராட்சித் தலைவர் பதவிக்கு அதிமுக சார்பில்
போட்டியிடுவார்கள் என்று முன்பு அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியலில்
மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா அறிவித்த புதிய வேட்பாளர்களின் விவரம்
நகர மன்றத் தலைவர் பதவிக்கான வேட்பாளர்கள்:
காஞ்சிபுரம் மத்திய மாவட்டம்
1. செங்கல்பட்டு-குமாரசாமி
வேலூர் மாநகர் மாவட்டம்
2. ராணிப்பேட்டை- சித்ரா
கோவை புறநகர் மாவட்டம்
3. பொள்ளாச்சி-தம்பி (எ) வி. கிருஷ்ணகுமார்
நீலகிரி மாவட்டம்
4. நெல்லியாளம்-பொன். ஜெயசீலன்
5. கூடலூர்-எம். ரமா
தஞ்சாவூர் தெற்கு மாவட்டம்
6. பட்டுக்கோட்டை-எஸ்.ஆர். ஜவஹர்பாபு
திருவாரூர் மாவட்டம்
7. திருத்துறைப்பூண்டி- கே. உமாமகேஸ்வரி
தேனி மாவட்டம்
8. போடிநாயக்கனூர்- பாலமுருகன்
9. தேனி-அல்லி-தேனி எஸ். முருகேசன்
விருதுநகர் மாவட்டம்
10. சாத்தூர்- எஸ். டெய்சிராணி
கன்னியாகுமரி மாவட்டம்
11. பத்மநாபபுரம்- சத்திய தேவி ஹரிகுமார்
பேரூராட்சி மன்றத் தலைவர் பதவிக்கான வேட்பாளர்கள்:-
காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம்
1. சிட்லபாக்கம்-ஆர். மோகன்
வேலூர் புறநகர் கிழக்கு மாவட்டம்
2. தக்கோலம்-ஜெ. பச்சையப்பன்
3. பனப்பாக்கம்-என். கருணா (எ) கருணாநிதி
4. நெமிலி-என். பாலகிருஷ்ணன்
5. திருவலம்-ஆர். சுமதி
கடலூர் மேற்கு மாவட்டம்
6. பரங்கிப்பேட்டை- க.மாரிமுத்து
7. புவனகிரி-வள்ளி சச்சிதானந்தம்
8. அண்ணாமலைநகர்- கீதா கலியமூர்த்தி
9. பெண்ணாடம்- என்.மதியழகன்
10. ஸ்ரீமுஷ்ணம்-க.ஆதிலட்சுமி
11. கெங்கைகொண்டான்- க. மனோகரன்
விழுப்புரம் தெற்கு மாவட்டம்
12. வடக்கனேந்தல்-ம.வெங்கடேசன்
13. திருக்கோவிலூர்-வி.கவிதா
தருமபுரி மாவட்டம்
14. பொ.மல்லாபுரம்-ஆர்.ராஜா
15. காரிமங்கலம்-ஜி.ஒச்சியம்மாள்
திருவாரூர் மாவட்டம்
16. கொரடாச்சேரி-ஏ.மு. செந்தில்குமார்.

Subscribe to:
Posts (Atom)