|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

22 September, 2011

அமெரிக்காவின் நெ 1 கோடீஸ்வரர் பில் கேட்ஸ்!


அமெரிக்க பொருளாதாரம் சமீப காலமாக முன்னே பின்னே இருந்தாலும், பில்கேட்ஸின் வருமான உயர்வை அது எந்த விதத்திலும் பாதிக்கவில்லை! ஆம்... அமெரிக்காவின் ஃபோர்ப்ஸ் இதழின் டாப் 400 பணக்காரர்கள் பட்டியலில், மைக்ரோ சாப்ட் அதிபர் பில் கேட்ஸ் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

ஃபோர்ப்ஸ் பட்டியலின்படி பில்கேட்ஸ் வருமானம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 5 பில்லியன் டாலர் அதிகரித்து, 39 பில்லியன் டாலராக உள்ளது. இவருக்கு அடுத்த நிலையில் பெர்க்ஷையர் ஹதாவேயின் தலைவர் வாரன் பஃபே வருகிறார். இவரது வருவாய் கடந்த ஆண்டை விட 6 பில்லியன் டாலர் குறைந்துள்ளது.

ஆரக்கிள் சிஇஓ லாரி எல்லிசன் 33 பில்லியன் டாலர்களுடன் மூன்றாவது இடம் பெற்றுள்ளார். வால் மார்ட் நிறுவனத்தை உருவாக்கிய வால்டன் குடும்பத்தைச் சேர்ந்த மூன்றுபேர் அமெரிக்காவின் டாப் 10 பணக்கார பட்டியலில் உள்ளனர். ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸூகர்பெர்க் 17.5 பில்லியன் டாலர்களுடன் 14வது இடத்தைப் பிடித்துள்ளார். ஃபோர்ப்ஸ் பட்டியலிட்டுள்ள 400 டாப் பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ 1.5 ட்ரில்லியன். அதாவது அமெரிக்க பட்ஜெட்டில் பற்றாக்குறையாக உள்ள தொகைக்கு சமமானது இது!

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...