இந்தியாவில், புகைபிடிக்கும் பழக்கத்துக்கு, பணக்காரர்களை விட ஏழைகளே அதிக எண்ணிக்கையில் அடிமையாகி வருவதாக, உலக சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.நாட்டில் மொத்தம், 46.7 சதவீதம் பேர், புகைபிடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளனர். இதில், 21.8 சதவீதம் பேர் பணக்காரர்கள்; 24.9 சதவீதம் பேர் ஏழைகள். புகைபிடிப்பவர்களின் சமூகம் - பொருளாதாரம் இடையேயுள்ள பிரச்னையை (இன் ஈகுவாலிட்டி), மையமாக கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில், இத்தகவல் தெரிய வந்துள்ளது. மொத்த மக்கள் தொகையில், 25 சதவீதம் பேர், அதிக அளவில் புகைபிடிக்கும் பழக்கம் கொண்டுள்ளனர்.மத்திய சுகாதார குடும்ப நல அமைச்சகத்தின் உதவியுடன், உலக சுகாதார அமைப்பு நடத்திய, "குளோபல் அடல்ட் டொபேக்கோ சர்வே 2009-10' ஆய்வறிக்கையில், "புகைபிடிக்கும் பழக்கம் கொண்டவர், குறைந்தபட்சம் மாதம், 300 ரூபாயும், பீடிக்காக 93 ரூபாயும் செலவழிக்கின்றனர். பணக்கார பெண்களை விட, ஏழை பெண்கள் நான்கு மடங்கு அதிகமாக புகைபிடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளனர்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.மண்டல புற்றுநோய் மைய (ஆர்.சி.சி) ஆன்காலஜித் துறை மருத்துவர் ஜெயகிருஷ்ணன் சர்வதேச அளவில், ஐரோப்பிய நாடான ஹங்கேரியில், 82.6 சதவீத ஏழை மக்கள் இப்பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளனர். மிகவும் குறைந்த பட்சமாக, ஆப்ரிக்க நாடான எத்தியோபியாவில், 5.3 சதவீத ஏழைகள் புகைபிடிக்கும் அடிமையாகி உள்ளனர். ஹங்கேரியில், 65.6 சதவீத பெண்கள் இப்பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளனர்; சர்வதேச அளவில் முதலிடத்தில் உள்ளனர். புகைபிடிக்கும் பழக்கத்தால், புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுபவர்களில், ஏழை மக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.
ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
19 November, 2012
குழந்தை ரூ.100-க்கு விற்பனை!
நூறு ரூபாய்க்கு பச்சிளம் குழந்தையை விற்ற தாயையும், விற்கப்பட்ட குழந்தையுடன் பேருந்து நிலையத்தில் சுற்றி திரிந்த பெண்ணையும் போலீசார் கைது செய்தனர்.கோயம்பேடு மாநகர பேருந்து நிலைய வளாகத்தில், நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு, பச்சிளம் பெண் குழந்தையுடன், பெண் ஒருவர் திரிந்தார்.சந்தேகமடைந்த பேருந்து நிலைய போலீசார், அவரிடம் விசாரித்ததில், அவர் பெயர் முனியம்மாள், 24, மூலக்கடை, காமராஜர் சாலை பகுதியில் வசிப்பவர். குழந்தையுடன், கொடுங்கையூர் செல்ல உள்ளார் என, தெரியவந்தது.சந்தேகம் தீராத போலீசார், அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். அதில் பல விவரங்கள் தெரியவந்தன.கடந்த மாதம், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், முனியம்மாளின் சகோதரி மகன் சிகிச்சை பெற்ற போது, மருத்துவமனைக்கு அவர் சென்றார். அப்போது, அங்கு சிகிச்சை பெற்று வந்த செல்வி, 30 என்பவருக்கு, பெண் குழந்தை பிறந்தது. செல்வியுடன், முனியம்மாளுக்கு நட்பு ஏற்பட்டது.ஏற்கனவே, தனக்கு ஒரு பெண் இருப்பதால், பிறந்த பெண் குழந்தையையும் வளர்ப்பது கடினம் என, செல்வி கூறினார். தான் வளர்ப்பதாக கூறிய முனியம்மாளிடம், கடந்த 12ம் தேதி, 100 ரூபாய்க்கு குழந்தையை விற்றார்.அந்த குழந்தையுடன் தான், முனியம்மாள் பேருந்து நிலைய வளாகத்தில் சுற்றி திரிந்தார். தனது முதல் கணவர் இறந்த நிலையில், இரண்டாவது கணவரும் கைவிட்டதால் தான் குழந்தையை விற்றதாக, விசாரணையில் செல்வி இதையடுத்து இருவரையும், கோயம்பேடு பேருந்து நிலைய போலீசார் கைது செய்தனர்.
பார்த்ததில் பிடித்தது!
பொதுவாக வேலை தேடுபவர்களுக்கும்,கொடுப்பவர்களுக்கும் படிப்புதான் இது வரை தகுதியாக இருந்தது.,ஆனால் இங்கே ஒருவர் அதெல்லாம் வேண்டாம்,நேர்மையான ஆளா இருந்தா போதும்,வேலை தருகிறேன் என்று போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளார்.நேர்மை என்பது அடிப்படை குணமாக இருந்தது போய் ,இப்போது அது அபூர்வமான குணமாகிவிட்டது போலும்.அதுனால்தான் அப்படிப்பட்ட ஆட்களை இப்படி விளம்பரம் செய்து தேடுகிறார்கள் ,இது ஒன்றும் சந்தோஷப்பட வேண்டிய விஷயமில்லை என்பது மட்டும் புரிகிறது.
Subscribe to:
Posts (Atom)