வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் குறித்த வதந்தி செய்தியால் ஒரு நாளைக்கு 5 எஸ்.எம்.எஸ்.களுக்கு மேல் அனுப்ப தடை விதித்துள்ளது செல்போன் நிறுவனங்கள்.அசாம் இனக்கலவரங்களை தொடர்ந்து, தென் மாநிலங்களில் வசித்து வரும் வடகிழக்கு மாநிலத்தவர்கள் தாக்கப்பட கூடும் என்று செல்போனில் எஸ்.எம்.எஸ் மூலம் ஒரே நேரத்தில் பல பேருக்கு மொத்தமாக அனுப்பப்பட்டன. இதனால் தென் மாநிலங்களில் வசித்து வந்த வடகிழக்கு மாநிலத்தவர் அச்சமடைந்து கூட்டமாக வெளியேறினர்.இதனால் மொத்தமாக எஸ்.எம்.எஸ். அனுப்புவதற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று தொலைத் தொடர்பு துறையை மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டு கொண்டதை தொடர்ந்து அதற்கான தடை உத்தரவு 17ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.இதை உடனடியாக நடைமுறைப் படுத்த வேண்டும் என்று சொல்போன் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.இதனை தொடர்ந்து செல்போன் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் ‘செல்போனில் ஒரு நாளைக்கு 5 எஸ்.எம்.எஸ்.களுக்கு மேல் அனுப்ப முடியாது, மத்திய அரசிடம் இருந்து மறு உத்தரவு வரும் வரை இந்த நிலை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
20 August, 2012
போலி ஆவணங்கள் கொடுத்தால்போலீசில் புகார்!
"மொபைல் போன், "சிம்' கார்டு பெறுவதற்காக, வாடிக்கையாளர்கள் போலியான ஆவணங்களைக் கொடுத்தால், சம்பந்தபட்ட டீலர்கள், இதுகுறித்து போலீசில் புகார் அளிக்க வேண்டும்' என, தொலை தொடர்புத் துறையின் புதிய விதிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒரு சிலர், போலியான ஆவணங்களைக் கொடுத்து, மொபைல் போனுக்கான, "சிம்' கார்டுகளைப் பெற்று, அவற்றை, பயங்கரவாதச் செயல்களுக்காகப் பயன்படுத்துவதாகப் புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, "சிம்'கார்டுகள் வழங்குவதற்கு, புதிதாகக் கடுமையான விதிமுறைகளை, தொலை தொடர்புத் துறை உருவாக்கியுள்ளது. இந்தப் புதிய விதிமுறைகள், நவம்பர் இரண்டாம் வாரத்திலிருந்து, அமலுக்கு வரவுள்ளன.
அரசு விளம்பரங்களை நிறுத்துங்கள்?
மத்திய அரசு மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு, தங்களது ஆட்சி காலத்தில் செய்த சாதனைகள் குறித்து விளம்பரத்தையோ, கட்சித் தலைவர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாள் குறித்து விளம்பரத்தையோ வெளியிட அனுமதிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு உச்ச நீதிமன்றத்தால் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்ட ஓரிரு நாட்களிலேயே, ராஜீவ் காந்தியின் பிறந்த நாள் குறித்து மத்திய அரசு நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Posts (Atom)