ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியின் கடைசி ஓவரில், பாகிஸ்தான் அணி வீரர் ஸீமா நடந்துகொண்ட விதம் குறித்து ஆசிய கிரிக்கெட் கவுன்சிலில் முறையீடு செய்துள்ளது வங்கதேச கிரிக்கெட் வாரியம்.
ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் வங்கதேச அணிகள் மோதின. இந்தப் போட்டியில், முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 236 ரன்கள் எடுத்தது. 237 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கி இறுதிவரை அருமையாக விளையாடி வெற்றிக்கு அருகே வந்து கோட்டை விட்டது வங்கதேச அணி. அந்த அணி, கடைசி ஓவரில் 7 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், அந்த ஓவரில் நிலைகுலைந்தது. இருப்பினும் கடைசி இரு பந்தில் 4 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் பந்தை எதிர்கொண்ட முஹமதுல்லா ரியாத் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். ஆனால், அவர்கள் இரண்டு ரன்கள் ஓடி எடுக்கும் நிலையில், பாகிஸ்தான் பந்துவீச்சாளர் ஸீமா வேண்டுமென்றே ரியாத்துக்கு நடுவே ஓடி அவர் ரன் எடுக்கும் வேகத்தை மட்டுப் படுத்தினார். மேலும் அவர் இரண்டாவது ரன் எடுத்து மூன்றாவது ரன்னுக்கு ஓட முயன்றபோது குறுக்கே வந்து மீண்டும் அவர் ஓடுவதைத் தடை செய்தார். அந்த ஒரு ரன் எடுக்கப்பட்டிருக்குமானால் அந்தப் போட்டி டை ஆகியிருக்கும். இந்தப் போட்டியின் கடைசி ஓவரின் போதான வீடியோவை மீண்டும் மீண்டும் போட்டுப் பார்த்து கடுப்பான வங்கதேச கிரிக்கெட் வாரியம், பாகிஸ்தான் அணியினரின் இந்தச் செய்கையை, குறிப்பாக ஸீமாவின் இந்தச் செயலை எதிர்த்து ஆசிய கிரிக்கெட் கவுன்சிலில் முறையீடு செய்துள்ளது. மேலும், பாகிஸ்தான் வீரர்களுக்கு எதிராக எழுத்துப் பூர்வமான புகாரை ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு தெரிவிக்கப்போவதாக வங்கதேச கிரிக்கெட் வாரிய தலைவர் எனாயத் ஹுசைன் சிராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
25 March, 2012
இதே நாள்...
- கிரேக்க விடுதலை நாள்
- பெலாரஸ் மக்கள் குடியரசு அமைக்கப்பட்டது(1918)
- சனிக் கோளின் மிகப்பெரிய சந்திரனான டைட்டானை கிறிஸ்டியான் ஹைஃன்ஸ் கண்டுபிடித்தார்(1655)
- முதலாவது வண்ணத் தொலைக்காட்சி பெட்டியை ஆர்.சி.ஏ., நிறுவனம் வெளியிட்டது(1954)
மாற்றுத் திறனாளிகளுக்கு, ஏழு விதமான நலத் திட்டங்களை, அறிவித்தார் ஜெயலலிதா .
மாற்றுத் திறனாளிகளுக்கு, ஏழு விதமான நலத் திட்டங்களை, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:* ஆறு வயதிற்கு உட்பட்ட பார்வைத்திறன் குறைபாடு உடைய மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு, ஆரம்ப நிலை பயிற்சி மையங்கள், வேலூர், திருவண்ணாமலை, மதுரை, கிருஷ்ணகிரி மற்றும் நெல்லை ஆகிய, ஐந்து மாவட்டங்களில் இயங்கி வருகின்றன.இந்த மையங்களுக்கு, 2011-12ம் ஆண்டிற்காக, 22.90 லட்சம் ரூபாய்.* இதுபோன்ற பயிற்சி மையங்களை, சென்னை, கோவை, திண்டுக்கல் உட்பட, 20 மாவட்டங்களில் புதிதாக ஏற்படுத்தவும், ஒரு மையத்திற்கு, ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 500 ரூபாய் வீதம் நிதி ஒதுக்கீடு.* இரு கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு, தற்போது இணைப்பு பொருத்தப்பட்ட மின்சார ஸ்கூட்டர்கள் வழங்கப்படுகின்றன. மாணவ, மாணவியர், பணிபுரியும் மாற்றுத் திறனாளிகள், பெட்ரோல் ஸ்கூட்டர்களை வழங்கக் கோரியுள்ளனர். இதை பரிசீலித்த முதல்வர், நடப்பாண்டில், 2 கோடி ரூபாய் செலவில், 400 மாற்றுத் திறனாளிகளுக்கு, பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
* செவித் திறன் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு, தற்போது வழங்கப்பட்டு வரும் காதொலி கருவிகளுக்குப் பதில், 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அதிக திறன் வாய்ந்த காதொலிக் கருவிகள் வழங்கப்படும். நடப்பாண்டில், ஆறாம் வகுப்பு முதல், கல்லூரி வரை பயிலும், 1,000 மாணவர்களுக்கு, அதிக திறன்கூடிய காதொலிக் கருவிகள் வழங்கப்படும். இதற்காக, அரசுக்கு ஒரு கோடி ரூபாய் செலவு ஏற்படும்.
* தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உதவியுடன், 12 மாவட்டங்களில், தங்கும் விடுதியுடன் கூடிய தொழிற்பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதர, 20 மாவட்டங்களுக்கும், இத்திட்டத்தை விரிவுபடுத்த, முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஒரு மாவட்டத்திற்கு, 75 மாற்றுத் திறனாளிகள் வீதம், 2,400 மாற்றுத் திறனாளிகளுக்கு, இந்த மையங்கள் மூலம் தொழிற்பயிற்சி அளிக்கப்படும். இதற்காக, முதல்வர், 74.88 லட்சம் ரூபாய் நிதி
ஒதுக்கீடு செய்துள்ளார்.
* மாற்றுத் திறனாளிகளுக்கு, மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம், தொழில் துவங்க
கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு, 10 கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்பட்டுள்ளன. அதிகளவில் அவர்கள் தொழில் துவங்குவதை ஊக்குவிக்கும் நோக்கில், கடன்களுக்கான வட்டியை தமிழக அரசே ஏற்கும்.* மாற்றுத் திறனாளி குழந்தைகளை, ஆரம்பநிலை பயிற்சி மையங்களுக்கு அழைத்து வரவும், திரும்ப அழைத்துச் செல்லவும், அக்குழந்தைகளின் பாதுகாவலர்களுக்கு நாள் ஒன்றுக்கு வழங்கப்படும் பயணச் செலவு தொகையை, 20 ரூபாயில் இருந்து, 40 ரூபாயாக உயர்த்தப்படும். இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.தொழு நோயாளிகள் இல்லங்களைபுதுப்பிக்க ரூ.5.21 கோடி நிதி ஒதுக்கீடு:தொழு நோயாளிகளுக்கான மறுவாழ்வு இல்லங்களை புனரமைக்க, அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, முதற்கட்டமாக பரனூர் அரசு மறுவாழ்வு இல்லத்தை புதுப்பிக்க, 1 கோடியே 61 லட்சத்து, 82 ஆயிரம் ரூபாயும்; யா.புதுப்பட்டி இல்லத்தை புதுப்பிக்க, 1 கோடியே 80 லட்சம் ரூபாயும்; புதுக்கோட்டை அரசு மறுவாழ்வு இல்லத்தை புதுப்பிக்க, 1 கோடியே 80 லட்சம் ரூபாயும் என, மொத்தம் ஐந்து கோடியே 21 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
Subscribe to:
Posts (Atom)