|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

25 March, 2012

கடைசி ஓவர் சர்ச்சை வங்கதேச வாரியம் முறையீடு...

ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியின் கடைசி ஓவரில், பாகிஸ்தான் அணி வீரர் ஸீமா நடந்துகொண்ட விதம் குறித்து ஆசிய கிரிக்கெட் கவுன்சிலில் முறையீடு செய்துள்ளது வங்கதேச கிரிக்கெட் வாரியம்.
ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் வங்கதேச அணிகள் மோதின. இந்தப் போட்டியில், முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 236 ரன்கள் எடுத்தது. 237 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கி இறுதிவரை அருமையாக விளையாடி வெற்றிக்கு அருகே வந்து கோட்டை விட்டது வங்கதேச அணி. அந்த அணி, கடைசி ஓவரில் 7 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், அந்த ஓவரில் நிலைகுலைந்தது. இருப்பினும் கடைசி இரு பந்தில் 4 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் பந்தை எதிர்கொண்ட முஹமதுல்லா ரியாத் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். ஆனால், அவர்கள் இரண்டு ரன்கள் ஓடி எடுக்கும் நிலையில், பாகிஸ்தான் பந்துவீச்சாளர் ஸீமா வேண்டுமென்றே ரியாத்துக்கு நடுவே ஓடி அவர் ரன் எடுக்கும் வேகத்தை மட்டுப் படுத்தினார். மேலும் அவர் இரண்டாவது ரன் எடுத்து மூன்றாவது ரன்னுக்கு ஓட முயன்றபோது குறுக்கே வந்து மீண்டும் அவர் ஓடுவதைத் தடை செய்தார். அந்த ஒரு ரன் எடுக்கப்பட்டிருக்குமானால் அந்தப் போட்டி டை ஆகியிருக்கும். இந்தப் போட்டியின் கடைசி ஓவரின் போதான வீடியோவை மீண்டும் மீண்டும் போட்டுப் பார்த்து கடுப்பான வங்கதேச கிரிக்கெட் வாரியம், பாகிஸ்தான் அணியினரின் இந்தச் செய்கையை, குறிப்பாக ஸீமாவின் இந்தச் செயலை எதிர்த்து ஆசிய கிரிக்கெட் கவுன்சிலில் முறையீடு செய்துள்ளது. மேலும், பாகிஸ்தான் வீரர்களுக்கு எதிராக எழுத்துப் பூர்வமான புகாரை ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு தெரிவிக்கப்போவதாக வங்கதேச கிரிக்கெட் வாரிய தலைவர் எனாயத் ஹுசைன் சிராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...