|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

12 May, 2013

இன்று உலக அன்னையர் தினம்!

உலகில் எதற்கும் ஈடு இணையற்றது ஒன்று இருக்கிறதென்றால், அது அன்னை தான். அனைவருக்கும், அன்னைதான் முதல் தெய்வம். நம்மை உலகுக்கு அடையாளம் காட்டியவர் அன்னை மட்டுமே. வயதான காலத்திலும் அவர்களை அன்போடு நடத்த வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக ஆண்டுதோறும் மே 2வது ஞாயிறு (மே 12), உலக அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.எப்படி வந்தது. :பண்டைய கிரீசில், "ரியா' என்ற கடவுளைத் தாயாகக் கருதி வழிபாடு நடத்தப்பட்டது. ரோமிலும் "சிபெல்லா' என்ற பெண் கடவுளை அன்னையாக தொழுதனர். இன்றைய அன்னையர் தினம் நேரடியாகத் தாய்மார்களை குறிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது. நவீன அன்னையர் தினம் முதன் முதலில் அமெரிக்காவின் மேற்கு வர்ஜீனியாவின், கிராம்ப்டன் நகரில் 1908ம் ஆண்டு கொண்டாடப்பட்டது. அமெரிக்காவை பின்பற்றி இந்தியா, ஜெர்மனி உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட நாடுகள், மே 2வது ஞாயிறு அன்று இத்தினத்தை கொண்டாடுகின்றன.சிறந்த சமுதாயத்தை உருவாக்க, அன்னையரின் பங்களிப்பு முக்கியம். "எந்த குழந்தையும், நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே, பின்பு, நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே' என்ற பாடல் வரிக்கு ஏற்ப, சமுதாயத்துக்கு நல்ல மனிதர்களை உருவாக்கி வழங்குவது அன்னை தான். இன்று முடிந்தால் நேரிலோ அல்லது "மொபைல்' மூலமாகவோ அன்னையருக்கு வாழ்த்துக்கூறி, ஆசிர்வாதத்தை பெற மறவாதீர்.

 தாயின் கருவறைக்குள் 280 நாட்கள் வளரும் சிசுவின் உயிருக்கு தாயின் ரத்தத்தில் உள்ள சத்துக்கள் தான் தொப்புள் கொடியின் மூலம் கிடைக்கிறது. சிசுவின் நீண்ட பயணத்திற்கு தாயின் ஊட்டச்சத்துமிக்க உணவு மிக அவசியம். தாயின் எடை 25 - 35 ஐ.பி., (11.5 - 16 கிலோ) 9 மாதத்திற்குள் அதிகரிக்க வேண்டும். தாயின் எடை குறைவாக இருந்தால் குழந்தையின் எடையும் குறையும். தாயின் எடை அதிகமானால், குழந்தையும் பெரிதாகி, சிசேரியன் செய்ய வாய்ப்பு அதிகம்.அதனால் சமச்சீரான சத்தான உணவை கர்ப்பிணிகள் எடுக்க வேண்டும். புரதம், இரும்பு, கால்சியம் சத்துக்கள் அதிகளவில் தாய்க்கும் சேய்க்கும் தேவைப்படுகிறது. முட்டை, பால், இறைச்சி உணவு, பருப்பு வகைகளில் புரதச்சத்து கிடைக்கிறது. இரும்புச் சத்து, கால்சியம் ஆகியவை பீட்ரூட், கீரை, அசைவ உணவுகள், பால் இவற்றில் கிடைக்கிறது. நாம் உண்ணும் உணவில் சரியான அளவில் கிடைக்காது என்பதால் இரும்புச்சத்து, கால்சியம் மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.இவை மட்டுமின்றி பாஸ்பரஸ், அயோடின், மேக்னிசியம், காப்பர், சோடியம், பொட்டாசியம் புளூரைடு முதலிய தாது பொருட்களும் தேவைப்படுகிறது. டாக்டரின் அறிவுரைப்படி தேவையான மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பொதுவாக, கர்ப்பிணிகள் தாங்கள் விரும்புவதை உண்ண அறிவுறுத்தப்படுகிறது. வசதியற்ற பெண்கள் உணவின் அளவு போதுமானதாக உள்ளதா, கர்ப்பிணியின் எடை சரியாக அதிகரித்துள்ளதா என அறிந்து கொள்ள வேண்டும். இரும்புச்சத்து, கால்சியம் மாத்திரைகள் சரியான முறையில் வழங்க வேண்டும். இதைவிட ஒவ்வொரு பெண்ணும் தாய்மையை சந்தோஷமாக அனுபவிக்க வேண்டும்

வெளியே விடவேண்டியது...

பிரிண்டிங் பிரஸ் அலுவலகத்தில் செருப்பு,வெறுப்பு,நெருப்பு(உள்ளே வந்து புகை பிடிக்கக்கூடாது)மூன்றையும் வெளியே விட்டுவிட்டு வரவும் என









LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...