|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

05 March, 2011


live cricket

இதே நாள்



தாமஸ் விவகாரத்தில் பிரதமரை குறை கூறும் வேகம் தணிகிறது: எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா புதிய விளக்கம்

புதுடில்லி : மத்திய லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையராக தாமசை நியமித்ததற்கான பொறுப்பை தானே ஏற்றுக் கொள்வதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளதால், இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் வேகம் தணிகிறது. தாமஸ் நியமனம் தொடர்பாக, பிரதமரை மேலும் கேள்விகள் கேட்பதை எதிர்க்கட்சிகள் நிறுத்திக் கொண்டு, இதர விஷயங்களில் கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையராக பி.ஜே.தாமஸ் நியமிக்கப்பட்டார். கேரள மாநிலத்தை சேர்ந்த இவரை, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மூன்று பேர் கமிட்டி நியமித்தது. ஆனால், "தாமஸ் நியமனம் செல்லாது' என, சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் அறிவித்தது.சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு தொடர்பாக நேற்று முன்தினம் கருத்து தெரிவித்த பிரதமர் மன்மோகன் சிங், "தாமசை நியமித்ததற்கான பொறுப்பை நானே ஏற்றுக் கொள்கிறேன். தாமஸ் நியமனம் செல்லாது என, சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பை ஏற்கிறேன். இந்த தவறுக்கான பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன். அவரை இந்த பதவியில் அமர்த்தியதில் கூட்டணி கட்சிகளின் நிர்பந்தம் ஏதும் இல்லை. இது போன்ற தவறு மீண்டும் நடக்காமல் இருப்பது உறுதி செய்யப்படும்' என்றார்.

இதுபற்றி டிவிட்டர் இணையதளத்தில் கருத்து தெரிவித்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ், "லஞ்ச ஒழிப்பு ஆணையர் நியமனத்திற்கு பொறுப்பேற்று பிரதமர் விடுத்த அறிக்கையை நான் ஏற்கிறேன்.இது போதுமானதென்றும் நினைக்கிறேன். இத்துடன் இந்த பிரச்னையை விட்டு, அடுத்த விஷயத்திற்கு செல்ல வேண்டும்' என, தெரிவித்திருந்தார்.

அதே நேரத்தில், இந்த விவகாரம் தொடர்பாக பேசிய பா.ஜ.,வை சேர்ந்த ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் அருண்ஜெட்லி மற்றும் கட்சியின் தகவல் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் "லஞ்ச ஒழிப்பு ஆணையர் நியமனத்திற்கு பிரதமர் பொறுப்பேற்றால் மட்டும் போதாது. பார்லிமென்டில் இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என்றனர். இதனால், சுஷ்மா சுவராஜுக்கும், பா.ஜ., கட்சிக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாக நேற்று செய்திகள் வெளியாகின.

இதுபற்றி நேற்று சுஷ்மா சுவராஜ் கூறியதாவது: கட்சிக்கும், எனக்கும் இடையே எந்தவிதமான கருத்து வேறுபாடும் இல்லை. தாமஸ் நியமன விவகாரம் தொடர்பாக பார்லிமென்டில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என, பிரதமர் மன்மோகன் ஏற்கனவே கூறியுள்ளார். அதை கோரிக்கையை தான் ஜெட்லி விடுத்துள்ளார்.அதனால், இந்தப் பிரச்னை தொடர்பாக டிவிட்டர் இணையதளத்தில் நான் பெரியளவில் தெரிவிக்கவில்லை. மேலும், இணையதளத்தில் 140 வார்த்தைகளில் மட்டுமே விஷயங்களை தெரிவிக்க வேண்டும். அதனாலும், விரிவாக எதையும் கூறவில்லை.எனக்கும், ஜெட்லிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் உள்ளதை போல காட்ட மீடியாக்கள் முற்பட்டுள்ளன. லஞ்ச ஒழிப்பு ஆணையர் விவகாரம் தொடர்பாக பிரதமர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, அவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால், அதே விஷயத்தை பிரதமர் ஏற்கனவே கூறி விட்டார்.இவ்வாறு சுஷ்மா சுவராஜ் கூறினார்.

இருந்தாலும், இந்த லஞ்ச ஒழிப்பு ஆணையர் நியமன விவகாரம் இனி பெரியளவில் பேசப்படாது என தெரிகிறது. ஏனெனில், பிரதமர் மன்மோகன் சிங்கே தவறுக்கு பொறுப்பேற்று விட்டதால், அவரை இனிமேல் எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்பது குறையும். பிரச்னையின் வேகம் தணிந்து கொண்டிருப்பதால், எதிர்க்கட்சி தலைவர்கள் பிற விஷயங்களில் கவனம் செலுத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏழு பேட்ஸ்மேன் "பார்முலா' தொடரும்! *கேப்டன் தோனி உறுதி

பெங்களூரு: ""ஐந்தாவது பவுலர் வேலையை "பார்ட் டைம்' பவுலர்கள் பார்த்துக்கொள்வர். இதனால் ஏழு பேட்ஸ்மேன்களுடன் இன்று களமிறங்குவோம்,'' என, இந்திய அணி கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.
பெங்களூரு, சின்னச்சாமி மைதானத்தில் இதுவரை இரண்டு உலக கோப்பை லீக் போட்டிகள் நடந்துள்ளது. இந்த இரண்டு போட்டிகளிலும் நான்கு இன்னிங்சில், அனைத்து அணிகளும் 326 ரன்களுக்கு மேல் குவித்தது. இதனால் பேட்ஸ்மேன்களின் சொர்க்கபுரியாக பெங்களூரு மாறியுள்ளது.
இந்நிலையில் இன்று இந்திய அணி தனது மூன்றாவது லீக் போட்டியில், அயர்லாந்தை சந்திக்கிறது. இந்த போட்டி குறித்து கேப்டன் தோனி கூறியது:
பெங்களூரு மைதானம் ஒளிவெள்ளத்தில் பேட்டிங் செய்ய சிறப்பாக உள்ளது. இங்கு இரண்டாவதாக பேட்டிங் செய்யும் போது, பந்து பேட்டிற்கு நன்றாக வருகிறது. சுழலுக்கும் சற்று ஒத்துழைப்பதால், கூடுதல் வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கப் போவதில்லை.
பொதுவாக இந்தியாவில் வேகப்பந்துக்கு ஒத்துழைக்கும் ஆடுகளங்கள் இல்லை. இது மோசமானது. பந்துவீச்சில் திருப்பம் ஏற்படும் நிலை இருக்கும் போது, வேகப்பந்துக்கு சாதகமாக எதிர்பார்க்க முடியாது.
பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம்:
இன்று பந்து வீச்சில் திருப்பம் ஏற்படுமா இல்லையா என்பதை சொல்வது மிகவும் கடினம். ஏனெனில் கடைசியாக இங்கு நடந்த 2 போட்டிகளில் 1300க்கும் மேற்பட்ட ரன்கள் எடுக்கப்பட்டன. இன்றும், இதுபோல அதிக ரன்கள் எடுக்கப்படும் என்று நம்புகிறேன். ஏனெனில் இங்கு பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.
ஐந்தாவது பவுலர்?
ஐந்து பவுலர்களுடன் களமிறங்குவது என்பது தேவையில்லாதது. நமது பலத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அணிக்கு 30 ரன்கள் போதவில்லை என்ற நிலையில், யூசுப் பதான் அணியில் இருந்தால், அவரும் யுவராஜ் சிங்கும் சேர்ந்து ஐந்தாவது பவுலர் பணியை செய்வார்கள். இந்நிலையில் ஏழு பேட்ஸ்மேன்களுடன் களமிறங்கலாம்.
இந்திய அணியின் பவுலர்கள் இதுவரை பெரிய அளவில் சாதிக்கவில்லை. ஒரு போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவிட்டால், அப்புறம் எல்லாம் மாறிவிடும். இருப்பினும், பேட்ஸ்மேன்கள் முழு அளவில் திறமை வெளிப்படுத்தி வருவது பாராட்டுக்குரியது. அணியில் அனைவரும் ரன்கள் குவிக்கின்றனர். இதனால் ஒவ்வொரு இடத்துக்கும் போட்டி அதிகரித்துள்ளது.
கோஹ்லிக்கு பாராட்டு:
யுவராஜ் நான்காவது இடத்தில் களமிறங்க விரும்புகிறார். இந்த இடத்தில் வரும் விராத் கோஹ்லி, வேக மற்றும் சுழல் பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சமீபகாலமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். தவிர, 5, 6 அல்லது 7வது இடமாக இருந்தாலும் திறமையாக விளையாடுகிறார். ஆனால் நேரத்துக்கு ஏற்ப ரன்விகிதத்தை அதிகரிக்க யுவராஜ், யூசுப் பதானை களமிறக்கலாம்.
அஷ்வினுக்கு வாய்ப்பு?
அயர்லாந்து அணியில் இடது கை பேட்ஸ்மேன்கள் அதிகமாக உள்ளனர். இதனால் ஹர்பஜன், யூசுப் பதான் போன்றவர்கள் இருந்தாலும், கூடுதல் "ஆப்' ஸ்பின்னர்களுடன் களமிறங்க வேண்டிய முடிவு ஏற்பட்டுள்ளது. சாவ்லா கடந்த போட்டிகளில் அதிக ரன்கள் கொடுத்திருந்தாலும், அவர் முக்கிய நேரங்களில் உதவுவார். அதேநேரத்தில் அஷ்வினும் இதற்கு முன் சிறப்பாக செயல்பட்டுள்ளார். குறிப்பாக, முதல் 10 ஓவர்கள் கூட பவுலிங் செய்யச் சொல்லலாம்.
பலவீனமானது அல்ல:
உலக கோப்பை தொடரை பொறுத்தவரையில் எந்த அணியையும், பலவீனமானது என்று நாங்கள் எப்போதும் கூறியதில்லை. இதனால், அயர்லாந்துக்கு எதிராக தவறு செய்யமாட்டோம். இந்த அணியின் கெவின் ஓ பிரையன், இங்கிலாந்துக்கு எதிராக நம்பமுடியாத ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நமக்கு எதிராக இப்படி விளையாட மாட்டார் என்று நம்புகிறேன். இவரை மீண்டும் ரன் அவுட்டாக்க முயற்சிப்போம்.
இவ்வாறு தோனி கூறினார்.

உணர்ச்சிகளை கட்டுப்படுத்துங்கள்
""ரசிர்கள் தங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும்,'' என, கேப்டன் தோனி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,"" வங்கதேச தோல்வியடைந்ததால், வெஸ்ட் இண்டீஸ் அணியினர் சென்ற பஸ் மீது தாக்குதல் நடத்தியது வருந்தத்தக்கது. வெற்றி பெற்றாலும், தோல்வியடைந்தாலும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்,'' என்றார்.

மழையால் போட்டி ரத்து! *இலங்கை, ஆஸி.,க்கு ஒரு புள்ளி

கொழும்பு: இலங்கை, ஆஸ்திரேலியா மோதிய உலக கோப்பை லீக் போட்டி, மழை காரணமாக பாதியில் ரத்து செய்யப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இலங்கை கேப்டன் சங்ககராவின் அரைசதம் வீணானது.
இந்திய துணைக் கண்டத்தில் பத்தாவது உலக கோப்பை தொடர் நடக்கிறது. நேற்று கொழும்புவில் நடந்த "ஏ' பிரிவு லீக் போட்டியில் "நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் மோதின.
மெண்டிஸ் வாய்ப்பு:
இலங்கை அணியில் குலசேகரா நீக்கப்பட்டு, அஜந்தா மெண்டிஸ் வாய்ப்பு பெற்றார். தொடர்ந்து 31 உலக கோப்பை போட்டிகளில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணியில், மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. டாஸ் வென்ற இலங்கை கேப்டன் சங்ககரா "பேட்டிங்' தேர்வு செய்தார்.
"டாப்-ஆர்டர்' சரிவு:
துவக்கத்தில் ஆஸ்திரேலிய "வேகங்கள்' பிரட் லீ, ஷான் டெய்ட் அனல் பறக்க பந்துவீசினர். போட்டியின் இரண்டாவது ஓவரை டெய்ட் வீச, முதல் பந்தை பவுண்டரிக்கு அனுப்பினார் தில்ஷன். இதையடுத்து வார்த்தை போரில் ஈடுபட்டார் டெய்ட். பதிலுக்கு தில்ஷனும் ஏதோ சொல்ல, அம்பயர்கள் தலையிட்டு சமாதானம் செய்தனர். நான்காவது பந்தை அவசரப்பட்டு அடித்த தில்ஷன்(4) பரிதாபமாக வெளியேறினார். அடுத்து பிரட் லீ வேகத்தில், ஸ்டீவன் ஸ்மித்தின் சூப்பர் "கேட்ச்சில்' தரங்கா(6) காலியானார். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது. இம்முறை ஸ்டீவன் ஸ்மித்தின் துல்லிய "த்ரோவில்' ஜெயவர்தனா(23) ரன் அவுட்டானார். இப்படி "டாப்-ஆர்டர்' விரைவில் சரிய, இலங்கை அணி 3 விக்கெட்டுக்கு 75 ரன்கள் எடுத்து தத்தளித்தது.
மழை குறுக்கீடு:
இதற்கு பின் சங்ககரா, சமரவீரா சேர்ந்து படுநிதானமாக ஆடினார். இலங்கை அணி 32.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்திருந்த போது, பலத்த மழை பெய்தது. இதையடுத்து ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது சங்ககரா(73), சமரவீரா(34) அவுட்டாகாமல் இருந்தனர். மழை தொடரவே, போட்டி ரத்து செய்யப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

"இன்னொரு ரோட்ஸ்'
ஆஸ்திரேலிய அணியின் இளம் சுழற்பந்துவீச்சாளரான ஸ்டீவன் ஸ்மித்(21 வயது), நேற்று பீல்டிங்கில் அசத்தினார். தரங்கா கொடுத்த "கேட்ச்சை' ஒரே கையில் பிடித்த இவர், ஜெயவர்தனாøவுயும் ரன் அவுட்டாக்கினார். துடிப்பாக பந்தை தடுத்த இவர், இலங்கை அணியின் ரன் வேகத்துக்கு முட்டுக் கட்டை போட்டார். சுருக்கமாக சொன்னால், தென் ஆப்ரிக்காவில் முன்னாள் வீரர் ஜான்டி ரோட்சை போல "பீல்டிங்கில்' பட்டையை கிளப்பினார்.

ஏ‌ர்டெ‌ல் புற‌க்க‌ணி‌ப்பு‌ப் போரா‌ட்ட‌ம்





ஓட்டுக்குப் பணம் கொடுத்தால்... !- தேர்தல் ஆணையம் கடும் எச்சரிக்கை

சென்னை: ஓட்டுக்குப் பணம் கொடுத்தாலோ வாங்கினாலோ 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் சென்னையில் இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடந்து வருகிறது. தேர்தல் நடைமுறைகள் அமுலுக்கு வந்து விட்டது. தேர்தலுக்காக முறைகேடாக பயன்படுத்தப்படும் பணப் புழக்கத்தை தடுக்கவும், சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும் தேர்தல் முறைகேடுகளை தடுக்கவும் பல்வேறு கண்காணிப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

பணப் பட்டுவாடாவை தடுப்பது மற்றும் தேர்தல் பாதுகாப்புக்காக தமிழ்நாட்டுக்கு முதல் கட்டமாக 50 கம்பெனி மத்திய பாதுகாப்பு படைகள் வருகின்றன. ஒரு கம்பெனிக்கு சுமார் 100 வீரர்கள் வீதம் 5 கம்பெனிகள் இன்று வருகின்றன.

வெளி மாநில பார்வையாளர்கள்...

இன்னும் 2 நாட்களுக்குள் மேலும் 30 கம்பெனிகளும், வருகிற 13-ந்தேதிக்குள் மீதமுள்ள 15 கம்பெனிகளும் தமிழ்நாட்டுக்கு வந்து விடும். முதல் முறையாக தேர்தல் பார்வையாளர்களாக வெளி மாநிலங்களைச் சேர்ந்த 5 போலீஸ் ஐ.ஜி.க்கள் தமிழகம் வருகிறார்கள்.

இவர்கள் பண புழக்கம் மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளை தேர்தல் ஆணையத்துடன் சேர்ந்து கவனிப்பார்கள். இது தவிர பொதுவான தேர்தல் பார்வையாளர்கள் மனுதாக்கல் தொடங்கும் 9-ந்தேதிக்குள் வருவார்கள். கடந்த சட்டசபை தேர்தலின்போது 196 கம்பெனி மத்திய படைகள் வரவழைக்கப்பட்டன.

இந்த முறை மொத்தம் 266 கம்பெனி மத்திய படைகள் தேவை என்று தலைமை தேர்தல் கமிஷனுக்கு தெரிவித்து இருக்கிறோம். அவர்கள் தேர்தல் நேரத்தில் தேவைக்கு ஏற்ப வரவழைக்கப்படுவார்கள்.

தேதி மாறாது...

தேர்தல் தேதியில் மாற்றம் இல்லை என்று தலைமை தேர்தல் அதிகாரி கூறி விட்டார். எனவே இனி மாற்றம் இருக்காது. நேற்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.

இரவு 11 மணி வரை பிரசாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டது. அது போல ஏதாவது மாற்றம் செய்வதாக இருந்தால் அதை தலைமை தேர்தல் கமிஷன் தான் முடிவெடுக்கும்.

2 ஆண்டுகள் தண்டனை...

2006 சட்டசபை தேர்தலில் பணம் கொடுத்ததாக போடப்பட்ட வழக்கில் ஒருவருக்கு தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. 8 வழக்குகள் நடந்து கொண்டிருக்கின்றன.

2009 பாராளுமன்ற தேர்தலில் பணம் கொடுத்ததாக 3 பேருக்கு தண்டனை கிடைத்துள்ளது. 13 வழக்குகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஓட்டுக்கு பணம் கொடுப்பது, வாங்குவது நிரூபிக்கப்பட்டால் சுமார் 2 வருடம் வரை ஜெயில் தண்டனை வழங்க சட்டத்தில் இடம் உள்ளது.

சில வாக்குச்சாவடிகளில் மறுதேர்தல் தேவைப்பட்டால் ஏப்ரல் 14-ந்தேதிக்கு பிறகு நடத்தப்படும். தேர்தல் சம்பந்தமாக பொதுச்சுவர்களில் வரையப்பட்ட விளம்பரங்கள் அழிக்கப்பட்டு வருகிறது.

பத்திரிகை, தொலைக் காட்சி, இண்டர்நெட் மூலம் விளம்பரம் செய்பவர்கள் முன் அனுமதி பெற்றே விளம்பரம் செய்ய வேண்டும். எஸ்.எம்.எஸ். விளம்பரங்களுக்கும் இது பொருந்தும்.

ஜாதி, மதம் இவற்றை தூண்டும் வகையில் விளம்பரம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பணம் மற்றும் பரிசுப் பொருள் கொடுப்பது குறித்தோ, தேர்தல் முறைகேடு பற்றியோ 24 மணி நேரம் இயங்கும் தேர்தல் கட்டுப் பாட்டு அறைக்கு 1965 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம். அந்த தகவல் பதிவு செய்யப்படும். சம்பந்தப்பட்ட இடத்துக்கு பறக்கும் படை அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.., என்றார்

ஆஸ்கர் கிடைக்காததால் வருத்தமில்லை! - ஏ ஆர் ரஹ்மான்

இந்த ஆண்டு ஆஸ்கர் விருது எனக்குக் கிடைக்காததால் வருத்தம் ஏதுமில்லை, என்றார் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான்.

127 ஹவர்ஸ் என்ற ஆங்கிலப் படத்துக்கு இசையமைத்திருந்தார் ஏ ஆர் ரஹ்மான். ஸ்லம்டாக் மில்லினேர் படம் தந்த டேனி பாய்ல் இயக்கி இந்தப் படத்தின் பின்னணி இசை மற்றும் பாடலுக்காக ரஹ்மான் ஆஸ்கர் விருதுப் போட்டியாளர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்தார் ரஹ்மான்.

ஆனால் அவருக்கு இந்த முறை இரண்டு பிரிவிலுமே விருது கிடைக்கவில்லை. டாய் ஸ்டோரி -3 படத்துக்காக ராண்டி நியூமேனுக்கு இந்த விருதுகள் கிடைத்தன.

ஆனால் இதற்காக வருத்தப்படவில்லையாம் ரஹ்மான்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "ராண்டிக்கு இந்த விருது கிடைத்ததில் எனக்கும் மகிழ்ச்சிதான். காரணம் இந்த முறை என் இசையைவிட, ராண்டியின் இசை விருது பெற வேண்டும் என்று என் மகன் அமீன் (பாடகர்) விரும்பினான். அவன் விருப்பப்படியே நடந்துள்ளது. ராண்டி விருது பெற்றதில் அமீனுக்கு மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சியில் நானும் பங்கெடுத்துக் கொண்டேன்", என்றார்.

இந்த ஆண்டு ரஹ்மான் புதிய படம் என்று எதையும் ஒப்புக் கொள்ளவில்லை தமிழில், ரஜினியின் ராணா தவிர!

dmk

மத்திய அரசிலிருந்து விலகல்! - திமுக அதிரடி

Karunanidhi

சென்னை: மத்திய அரசிலிருந்து விலகிக் கொள்வதாக திமுக இன்று அதிரடியாக அறிவித்துள்ளது.

திமுகவின் உயர்நிலை செயற்குழு கூட்த்தின் ஏகோபித்த முடிவின் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் காங்கிரஸ் கட்சி - திமுக இடையிலான 7 ஆண்டு கூட்டணி முடிவுக்கு வந்துள்ளது.

தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்தே காங்கிரஸ் கட்சி கூட்டணிக் கட்சியான திமுகவுக்கு இணக்கமாக இல்லை. சமயம் கிடைக்கும் போதெல்லாம் திமுக அரசை கடுமையாகச் சாடி வந்தனர் காங்கிரஸ் தலைவர்கள்.

இந்த நிலையில் கூட்டணி, தொகுதிப் பங்கீடு என்ற வந்ததும், 90 இடங்கள், ஆட்சியில் பங்கு, துணை முதல்வர் பதவி, 8 மந்திரிகள் என நிபந்தனைகளை அடுக்கினர்.

இறுதியில் திமுக 60 இடங்கள் தருவதாகக் கூறியும் காங்கிரஸ் இணங்கவில்லை. 63 தொகுதிகள் வேண்டும் என்று பிடிவாதம் காட்டியது. இன்று கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாகக் கூறிச் சென்ற மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத்தும் வரவில்லை.

எனவே திமுக தனது உயர்நிலை செயற்குழு கூட்டத்தைக் கூட்டியது. இன்று மாலை 5 மணிக்கு மத்திய அமைச்சர் முக அழகிரி, துணை முதல்வர் முக ஸ்டாலின் உள்பட நிர்வாகிகள் கூடி கூட்டணி நெருக்கடி குறித்து விவாதித்தனர்.

இறுதியில், திமுக கூட்டணியில் இடம்பெற காங்கிரஸ் கட்சி விரும்பாததால், மத்திய அமைச்சரவையிலிருந்து திமுக விலகுவதாக அறிவிக்கப்பட்டது.

இனி பிரச்சினைகளின் அடிப்படையில் ஆதரவு அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அமைச்சர்கள் ராஜினாமா..

இந்த முடிவைத் தொடர்ந்து, மத்திய அரசில் இடம்பெற்றுள்ள திமுக அமைச்சர்கள் உடனடியாகப் பதவி விலகுகிறார்கள்.

திமுகவின் இந்த அதிரடி முடிவு காங்கிரஸ் வட்டாரத்தை அதிர வைத்துள்ளது.

indru

இதே நாளில் . . .


மார்ச் 5, 1824

இந்த தினத்தில் தான் இங்கிலாந்து பர்மா மீது போர் தொடுத்தது.day.html

Today

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...