ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
22 August, 2011
செக்ஸ் டூரிஸம் பெயரை 'கழற்றிவிட' தாய்லாந்து தீவிரம்!
'செக்ஸ் டூரிஸம்' தலைநகர் என்ற பெயருக்குப் பதிலாக 'குடும்ப டூரிஸம் தலைநகர்' என்ற பெயரைப் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந் நாட்டுக்கான இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
கோவா தலைநகர் பனாஜியில் நடந்த தாய்லாந்து சுற்றுலா மேம்பாட்டு விழாவில் பேசிய அந் நாட்டுத் தூதர் டாம்விட் ஜார்ன்சன், நாங்கள் என்ன பெயரை ('செக்ஸ் டூரிஸம் தலைநகர்') வாங்கியிருக்கிறோம் என்பது எங்களுக்கும் உங்களுக்கும் நன்றாகவே தெரியும். அதிலிருந்து விடுபட பல்வேறு முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது.
விரைவிலேயே குடும்ப சுற்றுலா தலைநகர் என்ற பெயரை வாங்கிக் காட்டுவோம். அதற்காகத் தான் உலகம் முழுவதும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து, தாய்லாந்தில் குடும்பத்தோடு கண்டு களிக்கக் கூடிய இடங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம் என்றார்.
விஷ முறிவுக்கு கை கொடுக்கும் தமிழ் மலர்!
மலர்கள் மணம் மிக்கவை. ஒரு சில மலர்கள் மருத்துவ குணம் கொண்டவை. ஆனால்
செந்நிறத்தில் காணப்படும் செங்காந்தள் மலர்கள் மருத்துவ தன்மை கொண்டதோடு
வருமானம் தரும் மலராகவும் உள்ளது. பண்டைய இலக்கியங்களில்
குறிப்பிடப்பட்டிருக்கும் செங்காந்தள் மலர்கள் கார்த்திகை மாதத்தில்
மலர்வதால் கார்த்திகை மலர் என்றும் அழைக்கப்படுகிறது. இது தமிழர்களின்
தேசிய மலராகும்.
இந்தியா, சீனா, மலாக்கா தீபகற்பம், வெப்ப மண்டலமான ஆப்ரிக்கா முதலிய நாடுகளில் காணப்படுகின்றன. கார்த்திகைச் செடியானது வேலிகளிலும், பாதையோரங்களிலும், காட்டோரங்களிலும் படர்ந்து நிமிர்ந்து அழகிய விரல்கள் போலவும், சுடர்கள் போலவும் காணப்படும். இதன் பூ தீச்சுவாலை போலக் காணப்படுவதால் அக்கினிசலம் என அழைக்கப்படுகிறது.
நிறம் மாறும் பூக்கள்: தளை அவிழ்ந்த மலர் ஏழு நாட்கள் வாடாமல் இருக்கும். இதழ்களின் நிறமானது முதலில் பச்சை, பிறகு வெண்மை கலந்த மஞ்சள், பிறகு மஞ்சள், பிறகு செம்மஞ்சள், பிறகு துலக்கமான சிவப்பு, அதன்பின் நீலம் கலந்த சிவப்பாக மாறிக்கொண்டு போகும்.
பூவின் நிறம் இருவேறாக மாறுபடுவதால் இதனை வெண்காந்தள்;, செங்காந்தள்; என்ற இரு வேறு வகைகளாக வருணிப்பார்கள். கிழங்கு பிரிந்து கணுக்கள் உள்ளதை ஆண்காந்தள் என்றும் கணுக்களில்லாததை பெண்காந்தள் என்றும் குறிப்பிடுவர்.
கலப்பைக் கிழங்கு: இக்கொடியின் தண்டு பசுமையானது. பலமில்லாதது. இலைகளின் நுனிகள் நீண்டு சுருண்டு பற்றுக்கம்பிகள் போல பக்கத்திலுள்ள மரஞ்செடி முதலிய ஆதாரங்களைப் பிடித்துக்கொண்டு 10-20 அடி உயரம் கிளை விட்டுப் படரும். ஆண்டுதோறும் புதிய கொடிகள் நிலத்தினுள்ளே இருக்கும் கிழங்கிலிருந்து வளரும். இதன் கிழங்கு கலப்பை வடிவமானதாக இருப்பதால் கலப்பை எனவும் கண்வலிக்கிழங்கு அல்லது இலாங்கிலி எனவும் அழைக்கப்படுகிறது. இலைகளின் முனை சுருண்டு காணப்படுவதால் தலைச்சுருளி என்றும் அழைக்கப்படும்.
விஷக்கடிக்கு மருந்து; செங்காந்தள் செடி மூலிகை விஷக்கடிகளுக்கும், விஷ ரோகங்களுக்கும் மருந்தாக பயன்படுகிறது. பாம்பு, சாரை,அரணை,ஜலமண்டலம் இவைகள் கடித்து பாதிக்கப்பட்டவர்கள் இச்செடியின் வேர், குப்பைமேனி வேர், நீலிவேர் இவைகளை சேர்த்து அரைத்து அரை நெல்லிக்காய் அளவு உப்பில்லாமல் தினமும் இரண்டு வேளை மூன்று நாட்களுக்கு சாப்பிட்டு வர விஷக்கடிகள் குணமாகும்.
சிறுபாம்புக்கடி, வண்டுக்கடி,இவை போன்ற விஷநோய்களுக்கு இதன் இலையை அரைத்து மேலே பூசி சீயக்காய் தேய்த்துக் குளித்து வர மேற்கண்ட வியாதிகள் குணமாகும். கார்த்திகைசெடிவேர், எட்டிப்பட்டை,வெள்ளருகு,மிளகு இவை சமபாகம் கூட்டி அரைத்துக் காலை,மாலை சாப்பிட்டால் 18 வித எலிக்கடி விஷம் நீங்கும்.
செங்காந்தள் வேர் தைலத்தை,வாரம் ஒருமுறை தேய்த்து தலைமுழுகி வர எலிக்கடி, வண்டுக்கடி, பூரான்கடி, செவ்வட்டை,சாரைப்பாம்பு முதலிய விஷ நோய் உடலை பாதிக்காமல் குறைந்து விடும். இந்த தைலத்தை தேய்த்து குளித்தால் மேகநோய், கிராந்தி, பத்துபடை,சொறிசிரங்கு, முதலிய வியாதிகள் குணமடைந்து நல்ல ஆரோக்கியம் உண்டாகும். பத்தியமாக புளி, புகை, லாகிரி நீக்க வேண்டும்.
விதைகள் கிழங்குகள்: கார்த்திகைச் செடியின் கிழங்கு ஆயுர்வேதம், யுனானி முறைகளில் பலவிதமாகப் பயன்படுகின்றது. தோலைப்பற்றிய ஒட்டுண்ணி நோய்களுக்கு இதனைப் பற்றுப் போடுவார்கள். தேள் கடிக்கும் இதனைப் இழைத்துப் போடுவதுண்டு. நேரடியாக இக்கிழங்கினை உட்கொள்ளக் கூடாது. ஏனெனில் அது விஷத்தன்மை கொண்டது. சிறிதளவு உட்கொண்டாலும் முடி உதிரும்.
பாம்பு விஷம் முறிக்கும்: கலப்பைக் கிழங்கால் பாம்பின் விஷமிறங்கும். உலர்ந்த கிழங்கை தினந்தோரும் புதிய கோமியத்தில் மூன்று நாட்கள் ஊறவைத்து மெல்லிய வில்லைகளாக அரித்து உப்பிட்ட மோரில் போட்டு இரவு காலத்தில் ஊறவைப்பதும் பகலில் உலர்த்துவதுமாக 7 நாள் செய்ய அதிலுள்ள நஞ்சு விலகும். பாம்பு கடித்தவர்களுக்கு இதில் ஒரு சிறிய துண்டை மென்று தின்ணும் படியாகக் கொடுக்க விஷம் கால் அல்லது அரை மணி நேரத்திற்குள் இறங்கும். உத்தேசித்த படி குணம் ஏற்பட வில்லையென உணரின் 3 மணி நேரத்திற்குப் பின் மீண்டும் ஒரு முறை முன் போல் கொடுக்க உடனே குணப்படும். தவிர தலைவலி, கழுத்துவலி, குட்டம், வயிற்று வலி, சன்னி, கரப்பான் முதலியன நீங்கும்.
பிரசவ வேதனை தீரும் : வாதம், மூட்டுவலி, தொழுநோய் குணமாக்கப் பயன்படுவதுடன் பேதி, பால்வினை நோய்வெண்குஷ்டம், ஆகியவற்றிக்கும் நல்லதோர் மருந்து. பிரசவ வலியைத் தூண்டும் மருந்தாகவும் உள்ளது. பிரசவ காலத்தில் நஞ்சுக்கொடி கீழ் இறங்காமல் வேதனைப் படுகின்ற பெண்களுக்கும் பச்சைக் கிழங்கை அரைத்துத் தொப்புள், அடிவயிறு, உள்ளங்கை, உள்ளங்கால் முதலிய ஸ்தானங்களில் தடவிவைக்க உடனே வெளியாகும். உடனே தடவி வைத்துள்ள பாகத்தைச் தண்ணீர் விட்டு சுத்தம் செய்ய வேண்டும்.
அரைப்பலம் பச்சைக் கிழங்கைச் சிறு துண்டுகளாக அரிந்து 5 பலம் வேப்பெண்ணெயில் போட்டுச் சிறு தீயாக எரித்துக் கிழங்கு வில்லைகள் மிதக்கும் தறுவாயில் ஆர விட்டு வடித்து காற்றுப்புகா பாத்திரத்தில் வைத்து இதனைப் பாரிசவாயு, தலைவலி, கழுத்து நரம்புகளின் இசிவு, கணுச் சூலை முதலியவற்றிக்குத் தேய்க்கக் குணமாகும். இது சக்தி தரும் டானிக்காகவும் இருப்பதுடன், தலையில் வரும் பேன்களை ஒழிக்கவும் பயன்படுகிறது.
ஏற்றுமதியாகும் விதைகள்: கிழங்கு மற்றும் விதைகளில் கோல்ச்சிசின் (Colchicines) மற்றும் சுப்பர்பின் (Superbine) ஆகிய மூலப்பொருட்கள் உள்ளன. வாதம், மூட்டுவலி, தொழு நோய், ஆகியவற்றைக் குணப்படுத்த உதவுகின்றன. குடற்புழுக்கள், வயிற்று உபாதை மற்றும் விஷக்கடிகளுக்கும் மருந்தாகப் பயன்படுகின்றன. விதைகளில் அதிக அளவு கோல்ச்சின் மருந்து காணப்படுவதால் விதைகள் மிகுதியான ஏற்றுமதி மதிப்பு பெற்றுள்ளது. விதைகளில் 0.20 சதவீதம் கோல்ச்சின் மருந்துப் பொருள் உள்ளது.
அண்மையில் விதையிலிருந்து ‘கோல்ச்சின்’ மூலப்பொருளைக் காட்டிலும் இரண்டு மடங்கு வீரியமான கோல்ச்சிகோஸைடு (Colchicoside) கண்டறியப்பட்டு வருகிறது. விதைகளுக்கு வெளிநாடுகளில் அதிக அளவுத் தேவை ஏற்பட்ட பிறகு தமிழ்நாட்டில் வணிக ரீதியாக சாகுபடி செய்யும் வழக்கம் ஏற்பட்டது.

அமெரிக்க பொருளாதார நெருக்கடியால் பாதிப்பு வரலாம்- இன்போசிஸ்!
அமெரிக்கா, ஐரோப்பாவில் நிலவும் பொருளாதார நெருக்கடியால், சாப்ட்வேர்
உள்ளிட்ட திட்டங்களுக்கான நிதியை பெரும் நிறுவனங்கள் குறைக்க
வாய்ப்பிருப்பதாக இன்போசிஸ் தெரிவித்துள்ளது.
குறிப்பாக எங்களது வாடிக்கையாளர்கள் 2011ம் ஆண்டுக்கான சாப்ட்வேர், ஐடி ஆகிய திட்டங்களுக்கான செலவை குறைக்கலாம் என்று அந்த நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியார பொறுப்பேற்றுள்ள சிபுலால் கூறியுள்ளார்.
இன்போசிஸ் நிறுவன தலைவர் பதவிலிருந்து நாராயண மூர்த்தி விலகியதையடுத்து நேற்று அந்தப் பொறுப்பை ஏற்றார் கே.வி.காமத். இதையடுத்து தலைமை செயல் அதிகாரியாக இருந்த கோபாலகிருஷ்ணன் துணைத் தலைவராகவும், சிஓஓவாக இருந்த சிபுலால் சிஇஓவாகவும் பொறுப்பேற்றனர்.
பதவியேற்ற பின் நிருபர்களிடம் பேசிய சிபுலால், பொருளாதார நெருக்கடி தொடர்ந்தால் புதிய திட்டங்கள், விரிவாக்கப் பணிகள் ஆகியவை குறித்த முடிவெடுப்பதில் பெரும் நிறுவனங்கள் காலதாமதம் செய்யலாம். குறிப்பாக ஐடி தொடர்பான செலவீனங்களில் முதலீடு செய்வதை எங்களது வாடிக்கையாளர்கள் ஒத்தி வைக்கலாம் என்றார்.

அன்னா ஹஸாரே போராட்டத்தில் முஸ்லீம்கள் பங்கேற்க வேண்டாம்- சையது புகாரி!
டெல்லியில் அன்னா ஹஸாரே நடத்தி வரும் போராட்டத்தில் முஸ்லீம்கள்
பங்கேற்காமல் விலகியிருக்க வேண்டும் என்று டெல்லி ஜும்மா மசூதி இமாம் சையத்
அகமது புகாரி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ராம்லீலா
மைதானத்தில் நடந்து வரும் போராட்டத்தில் வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜெய்
ஆகிய கோஷங்கள் நிரந்தரமாகி விட்டன. இவை இஸ்லாமுக்கு எதிரானவையாகும்.
நாட்டையோ அல்லது மண்ணையோ வழிபடுவதை இஸ்லாம் அனுமதிப்பதில்லை. மேலும், 10 மாதம் தனது கருவில் வளரும் குழந்தையை வளர்த்துப் பெற்றெடுக்கும் தாயை வழிபடுவதையே இஸ்லாம் அனுமதிப்பதில்லை. எனவே இந்தப் போராட்டத்தில் இஸ்லாமியர்கள் பங்கேற்காமல் விலகியிருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

இந்த மாதிறி நாய்களா என்னபன்னலாம்னு நீங்கதான் முடிவு பண்ணனும்!
சென்னையில் நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம்!
லுவான லோக்பால் மசோதா
கோரி தில்லி ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்துவரும் அண்ணா
ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவிக்கும்வகையில் திரைப்பட நடிகர், நடிகைகள்
சென்னையில் நாளை உண்ணாவிரதம் இருக்க முடிவுசெய்துள்ளனர். இதுகுறித்து
போராட்ட அமைப்பாளர்களில் ஒருவரான தயாரிப்பாளர் சித்ராலட்சுமணன்
கூறுகையில், அன்னா ஹசாரேயின் ஊழலுக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு
தெரிவித்து தமிழ் திரையுலகினர் நாளை நடத்தும் உண்ணாவிரதம் உணர்வு
பூர்வமானது. இதில் திரையுலகினரின் அனைத்து தரப்பினரும் பங்கேற்பார்கள்.
தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ்.ஏ. சந்திரசேகரன், நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதாரவி, திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் அபிராமி ராம நாதன் இயக்குனர் சேரன், திரைப்பட தொழிலாளர் சங்க செயலாளர் சிவா, விநியோகஸ்தர் சங்க தலைவர் கலைப்புலி சேகரன் போன்றோர் தலைமையில் பெரும் திரளான திரையுலகினர் பங்கேற்கின்றனர் என்றார். சென்னை அண்ணா மேம்பாலம் அருகில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை வளாகத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த உண்ணாவிரதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹசாரேவுக்கு காரக்பூர் ஐஐடி மாணவர்கள் ஆதரவு!
காரக்பூர் ஐஐடி
மாணவர்கள் அண்ணா ஹசாரேவின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
காரக்பூர் ஐஐடி பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமை
விருந்தினராக கலந்துகொள்ள உள்ளார். அவரிடம் இருந்து பட்டச் சான்றிதழை
பெற்றுக்கொள்ள ஒரு மாணவர் மறுத்துவிட்டார். மற்றொரு மாணவர் ஹசாரே குல்லா
அணிய உள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.
வலுவான லோக்பால் மசோதாவுக்கு ஆதரவாக பிரதமர் மன்மோகன் சிங் இல்லாததால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்வகையில் அவரிடம் இருந்து எம்டெக் பட்டச் சான்றிதழை ஏற்றுக்கொள்ள சிவில் இன்ஜினியரிங் மாணவரான ஷாஷி ஷேகர் என்பவர் மறுத்துவிட்டார்.
பிரதமரிடம் இருந்து பட்டச்சான்றிதழை பெற நான் விரும்பவில்லை. ஜன்லோக்பால் மசோதாவுக்கு ஆதரவளிக்கும் வேறு யாரிடம் இருந்தாவது அதைப் பெற்றுக்கொள்வேன் என ஷாஷி ஷேகர் கூறினார். பட்டமளிப்பு விழாவின்போது வழக்கமாக பயன்படுத்தப்படும் தொப்பிக்கு பதிலாக அண்ணா ஹசாரே குல்லாவை அணிய முடிவுசெய்திருப்பதாக எலக்ட்ரானிக்ஸ் பிரிவின் எம்டெக் மாணவரான சந்திர குமார் படேல் என்பவர் தெரிவித்தார். ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்து காரக்பூர் ஐஐடி மாணவர்களில் ஒரு பிரிவினர் உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அஞ்சல் துறையின் முகவரிச்சான்று நிறுத்தம்!
ஓட்டுனர் உரிமம், குடும்பப அட்டை,
கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்), நிரந்தர கணக்கு எண் (பாண் கார்டு) போன்ற எந்த
அடையாள ஆவணமும் இல்லாத இந்திய குடிமக்களுக்கு ஒரு அடையாள அட்டை வேண்டும்
என்றால், அவர்கள் பக்கத்தில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் சென்று பத்து ரூபாய்
பணம் செலுத்தி ஒரு விண்ணப்பம் வாங்கி,
அதை நிரப்பி அஞ்சலகத்தில் 240 கட்டணத்துடன் அந்த விண்ணப்பத்தை கொடுத்தால், அஞ்சலகத்திலிருந்து வரும் ஒரு அலுவலர் நம்முடைய முகவரியை விசாரித்து உறுதிசெய்து நமக்கு ஒரு அடையாள அட்டை வழங்குவார்கள் இதை நாம் ஒரு அடையாள ஆவணமாக பயன் படுத்திக்கொள்ளலாம்.இந்த அடையாள அட்டை மூன்று ஆண்டு காலம் வரை பயன்படுத்திக்கொள்ளலாம். மூன்று ஆண்டுகளூக்கு பிறகு தேவைப்பட்டால் அதை மறுபடியும் 140 ரூபாய் கட்டணம் செலுத்தி புதுப்பித்துக்கொள்ளும் வசதியும் இருந்தது.
ஆனால், முகவரிச்சான்றுகள் வழங்கும் பணி உடனடியாக நிறுத்தும் படி அஞ்சலகங்களுக்கு கடந்த ஆகஸ்டு முதல் தேதியன்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இனி வரும் வாடிக்கையாளர்களிடம், முந்தைய திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது என்றும், புதிதாக சில கூடுதல் விவரங்களுடன் சேர்த்து புதிய அட்டை வழங்கப்படும், இப்போதுள்ள கட்டணம் குறைக்கவும் வாய்ப்புள்ளது என்றும் சொல்லும் அலுவலர்கள் புதிய அட்டை எப்போது கொடுக்கப்படும் என்பது தெரியாது என்கிறார்கள்.

ஊர்களில் ஜாதி பெயரை நீக்க அரசு அதிரடி உத்தரவு!
தமிழகத்தில்
பல கிராமங்கள் ஜாதி பெயரில் உள்ளன; இவை அரசு கெஜட்டிலும் இடம் பெற்றுள்ளன.
இப்பெயர்கள் சில சமுதாயத்தினரை புண்படுத்துவதாக உள்ளன.இதனால், ஊர்களின் ஜாதி பெயரை அகற்றி, தமிழ்
பெயர் வைக்க, அரசு தீர்மானித்துள்ளது. இதற்கு, அந்தந்த கிராம அளவில்
ஊராட்சி தலைவர், தலைமை ஆசிரியர், பிரமுகர்கள் தலைமையில் குழு
அமைக்கப்படும். இக்குழுவினர் ஊரின் பெயரை மாற்ற, கிராமத்தினரிடம் கருத்து
கேட்பர். பெயர்கள் கலெக்டர் முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டு, அரசு
கெஜட்டில் வெளியிடப்படும். முதற்கட்டமாக, ஜாதியின் பெயரில் உள்ள ஊர்களின் பட்டியலை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)