லுவான லோக்பால் மசோதா
கோரி தில்லி ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்துவரும் அண்ணா
ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவிக்கும்வகையில் திரைப்பட நடிகர், நடிகைகள்
சென்னையில் நாளை உண்ணாவிரதம் இருக்க முடிவுசெய்துள்ளனர். இதுகுறித்து
போராட்ட அமைப்பாளர்களில் ஒருவரான தயாரிப்பாளர் சித்ராலட்சுமணன்
கூறுகையில், அன்னா ஹசாரேயின் ஊழலுக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு
தெரிவித்து தமிழ் திரையுலகினர் நாளை நடத்தும் உண்ணாவிரதம் உணர்வு
பூர்வமானது. இதில் திரையுலகினரின் அனைத்து தரப்பினரும் பங்கேற்பார்கள்.
தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ்.ஏ. சந்திரசேகரன், நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதாரவி, திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் அபிராமி ராம நாதன் இயக்குனர் சேரன், திரைப்பட தொழிலாளர் சங்க செயலாளர் சிவா, விநியோகஸ்தர் சங்க தலைவர் கலைப்புலி சேகரன் போன்றோர் தலைமையில் பெரும் திரளான திரையுலகினர் பங்கேற்கின்றனர் என்றார். சென்னை அண்ணா மேம்பாலம் அருகில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை வளாகத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த உண்ணாவிரதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment