காரக்பூர் ஐஐடி
மாணவர்கள் அண்ணா ஹசாரேவின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
காரக்பூர் ஐஐடி பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமை
விருந்தினராக கலந்துகொள்ள உள்ளார். அவரிடம் இருந்து பட்டச் சான்றிதழை
பெற்றுக்கொள்ள ஒரு மாணவர் மறுத்துவிட்டார். மற்றொரு மாணவர் ஹசாரே குல்லா
அணிய உள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.
வலுவான லோக்பால் மசோதாவுக்கு ஆதரவாக பிரதமர் மன்மோகன் சிங் இல்லாததால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்வகையில் அவரிடம் இருந்து எம்டெக் பட்டச் சான்றிதழை ஏற்றுக்கொள்ள சிவில் இன்ஜினியரிங் மாணவரான ஷாஷி ஷேகர் என்பவர் மறுத்துவிட்டார்.
பிரதமரிடம் இருந்து பட்டச்சான்றிதழை பெற நான் விரும்பவில்லை. ஜன்லோக்பால் மசோதாவுக்கு ஆதரவளிக்கும் வேறு யாரிடம் இருந்தாவது அதைப் பெற்றுக்கொள்வேன் என ஷாஷி ஷேகர் கூறினார். பட்டமளிப்பு விழாவின்போது வழக்கமாக பயன்படுத்தப்படும் தொப்பிக்கு பதிலாக அண்ணா ஹசாரே குல்லாவை அணிய முடிவுசெய்திருப்பதாக எலக்ட்ரானிக்ஸ் பிரிவின் எம்டெக் மாணவரான சந்திர குமார் படேல் என்பவர் தெரிவித்தார். ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்து காரக்பூர் ஐஐடி மாணவர்களில் ஒரு பிரிவினர் உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment