|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

27 April, 2012

பார்த்ததில் பிடித்தது!


பார்த்தா பாருங்க ..பாக்காட்டி போங்க...


பெண்ணின் வயிற்றில் 9 குழந்தைகள்!

மெக்சிகன் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரின் வயிற்றில் 9 குழந்தைகள் வளர்ந்து வருவதாக தொலைக்காட்சி செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த பெண் டெக்ஸாஸ் அருகில் உள்ள கோகுலியாவைத் சேர்ந்த கர்லா வனீஸ்ஸா பரீஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் தற்போது மாநிலத் தலைநகர் சால்டில்லோவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு மே 20-ம் தேதி அளவில் குழந்தைகள் பிறக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.6 பெண்குழந்தைகளும், 3 ஆண் குழந்தைகளும் பரீஸின் வயிற்றில் வளர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தவார பலன் 27-4-2012 முதல் 3-5-2012 வரை)

மேஷம் பொது: சாதகமான வாரம். எடுக்கும் காரியங்களை திறம்பட செய்து முடிப்பீர்கள். பண வரவு நன்றாக இருக்கும். உற்றார், உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். யாருக்கும் கடன் கொடுக்கவோ, ஜாமீன் கையெழுத்திடவோ வேண்டாம்.  பெண்களுக்கு: குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பார்கள். குழந்தைகள் நலனில் கவனம் செல்லும். வேலை பார்ப்போருக்கு: பொறுப்புகள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். அதனால் அலுவலகத்தில் சில சலுகைகள் பெறக்கூடும். எதிர்பார்த்த கடன்தொகை கிடைக்க தாமதமாகலாம்.

ரிஷபம் பொது: முன்னேற்றகரமான வாரம். எடுக்கும் காரியங்கள் நல்லபடியாக முடியும். பண வரவு அதிகரிக்கும். உடல் நலம் நன்றாக இருக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். வீட்டை சீரமைப்பீர்கள். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்வீர்கள். கணவர் அன்பாக இருப்பார். உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். குழந்தைகளால் பெருமை அடைவீர்கள். வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலைகளை திறம்பட செய்து முடித்து உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். சக ஊழியர்களின் குடும்ப விஷயத்தில் தலையிட வேண்டாம். உழைப்புக்கேற்ற ஊதியம் உண்டு. உங்கள் ரகசியங்களை யாரிடமும் கூற வேண்டாம்.

மிதுனம் பொது: சிறப்பான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பொருளாதாரம் மேம்படும். திடீர் பயணம் செய்யக்கூடும். அரசு வழியில் சலுகைகள் கிடைக்கும். உடல் நலனில் கவனம் தேவை.பெண்களுக்கு: குடும்பம் சீராக நடக்கும். உங்கள் பேச்சால் அனைவரையும் கவர்வீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். வீண் செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. வேலை பார்ப்போருக்கு: வேலை பளு அதிகரிக்கும். இருப்பினும் சிறப்பாக பணியாற்றுவீர்கள். சக ஊழியர்களிடம் உங்கள் வேலைகளை ஒப்படைக்க வேண்டாம். அலுவலகத்தில் குடும்ப விஷயங்கள் பற்றி பேசாமல் இருப்பது நல்லது.

கடகம் பொது: நன்மையான வாரம். எடுக்கும் காரியங்கள் திருப்திகரமாக முடியும். வருமானத்திற்கு குறைவிருக்காது. உடல் நலனில் கவனம் தேவை. நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். பேச்சில் நிதானம் தேவை. சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பெண்களுக்கு: குடும்பம் அமைதியாக நடக்கும். குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பார்கள். குழந்தைகளை ஆன்மீகத்தில் ஈடுபடுத்துவீர்கள். கணவரை அனுசரித்துச் செல்வீர்கள். சேமிப்பில் கவனம் செல்லும். வேலை பார்ப்போருக்கு: வேலை பளு அதிகரிக்கும். வேலையில் கூடுதல் கவனம் தேவை. சக ஊழியர்களின் ஆதரவு சுமாராகத் தான் இருக்கும். அதனால் அவர்களை நம்பி உங்கள் வேலைகளை ஒப்படைக்க வேண்டாம்.

சிம்மம் பொது: உற்சாகமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பண வரவு நன்றாக இருக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. மனம் தெளிவாக இருக்கும். உடல் நலம் மேம்படும். பெண்களுக்கு: குடும்பம் ஆனந்தமாக நடக்கும். கணவன் மனைவி இடையே அன்பும், பாசமும் அதிகரிக்கும். மகன் அல்லது மகளுக்கு புதிய வேலை கிடைத்து மகிழக்கூடும். உறவினர்களிடம் மனம் திறந்து பேச வேண்டாம்.வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் சுமூகமான சூழல் நிலவும். கொடுக்கும் வேலைகளை சிறப்பாக செய்து முடித்து உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். சிலருக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைத்து மகிழக்கூடும்.

கன்னி பொது: முன்னேற்றகரமான வாரம். எடுக்கும் காரியங்களை எப்பாடுபட்டாவது வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பண வரவு திருப்திகரமாக இருக்கும். உடல் நலம் மேம்படும். சிலர் புதிய வீட்டுக்கு செல்லக்கூடும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். பெண்களுக்கு: குடும்பம் சீராக நடக்கும். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடத்தி மகிழக்கூடும். பண வரவு அதிகரிக்கும். உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். பேச்சில் நிதானம் தேவை. வேலை பார்ப்போருக்கு: பொறுப்புகள் அதிகரிக்கும். அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். சிலருக்கு ஊதிய உயர்வு கிடைத்து மகிழக்கூடும். கொடுக்கும் வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள்.

துலாம் பொது: ஆனந்தமான வாரம். எடுக்கும் காரியங்கள் நல்லபடியாக முடியும். திறமை பளிச்சிடும். பண வரவு நன்றாக இருக்கும். உடன் பிறப்புகள் ஆதரவாக இருப்பார்கள். உடல் நலம் சிறப்பாக இருக்கும். யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம்.பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்கி மகிழக்கூடும். உடல் நலனில் கவனம் தேவை. விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வைத்துக்கொள்ளவும். உறவினர்களை அனுசரித்துச் செல்லவும்.வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு பதவி உயர்வும், விரும்பிய இடத்திற்கு மாற்றமும் கிடைத்து மகிழக்கூடும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். உயர் அதிகாரிகளை அனுசரித்துச் செல்லவும். வீண் பேச்சைக் குறைத்துக்கொள்வது நல்லது.

விருச்சிகம் பொது: அமைதியான வாரம். எடுக்கும் காரியங்களில் பலவற்றி்ல் வெற்றி கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். குல தெய்வ வழிபாடு மேற்கொள்ளக்கூடும். பயணங்களால் நன்மை உண்டு.பெண்களுக்கு: குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தி மகிழக்கூடும். உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். கணவரிடம் வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். எதிலும் பொறுமையாக இருப்பது நல்லது.வேலை பார்ப்போருக்கு: சிறப்பாக பணியாற்றி உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். சக ஊழியர்கள் ஆதரவு சுமாராகத் தான் இருக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும். யாரைப் பற்றியும் விமர்சிக்க வேண்டாம்.

தனுசு பொது: நிம்மதியான வாரம். எடுக்கும் காரியங்களை உற்சாகமாக செய்து முடிப்பீர்கள். பண வரவு சீராக இருக்கும். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். யாருக்கும் வாக்கு கொடுக்கவோ, ஜாமீன் கையெழுத்திடவோ வேண்டாம். உடல் நலனில் கவனம் தேவை.பெண்களுக்கு: குடும்பத்தில் நிம்மதி இருக்கும். குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பார்கள். கணவன் மனைவி இடையே அன்பும், பாசமும் அதிகரிக்கும். குழந்தைகள் நலனில் கவனம் செல்லும். வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும். உயர் அதிகாரிகளை அனுசரித்துச் செல்லவும். சக ஊழியர்கள் பாராமுகமாக இருப்பார்கள். பேச்சில் நிதானம் தேவை.

மகரம் பொது: இன்பமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். சிலருக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். பண வரவு அதிகரிக்கும். கடன் பாக்கி வசூலாகும். யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம்.பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். உறவினர்களுடன் இருந்து வந்த பிரச்சனை தீரும். பெற்றோரின் உடல் நலனில் கவனம் செலுத்தவும். வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் சுமூகமான சூழல் நிலவும். வேலை பளு குறையும். உயர் அதிகாரிகளும், சக ஊழியர்களும் ஆதரவாக இருப்பார்கள். இருப்பினும் உங்கள் ரகசியங்களை யாரிடமும் கூற வேண்டாம்.

கும்பம் பொது: சந்தோஷமான வாரம். எடுக்கும் காரியங்கள் பலவற்றில் வெற்றி கிடைக்கும். பொருளாதாரம் மேம்படும். சிலர் புதிய வீட்டுக்கு மாறக்கூடும். சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.பெண்களுக்கு: குடும்பம் சீராக நடக்கும். வேலைக்குப் போகும் பெண்கள் விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வைத்துக்கொள்ளவும். கணவரை அனுசரித்துச் செல்வது நல்லது. சேமிப்பில் கவனம் தேவை.வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் கிடைக்கக்கூடும். கொடுக்கும் வேலைகளை உடனுக்குடன் செய்து முடிக்கவும். இல்லையென்றால் உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகலாம்.

மீனம் பொது: மிதமான வாரம். எடுக்கும் காரியங்களை எப்பாடுபட்டாவது வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பண வரவு நன்றாக இருக்கும். மனதில் ஏதோ குழப்பம் இருக்கும். யாருக்கும் வாக்கு கொடுக்கவோ, ஜாமீன் கையெழுத்திடவோ வேண்டாம்.பெண்களுக்கு: குடும்பம் ஆனந்தமாக நடக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். உடல் நலனில் கவனம் தேவை. குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடத்தி மகிழக்கூடும்.வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைத்து மகிழக்கூடும். எதிர்பார்த்த கடன்தொகை கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறக்கூடும். சக ஊழியர்களின் ஆதரவு சுமாராகத் தான் இருக்கும்.

அட்வான்ஸ்டு குரூஸ் கன்ட்ரோல்.

எந்த இடத்தில் டிராபிக் ஜாம் அதிகமாக உள்ளது என்பதை செயற்கைகோள் உதவியுடன் உடனுக்குடன் தெரிவிக்கும் புதிய தொழில்நுட்பத்தை ஹோண்டா கண்டுபிடித்துள்ளது.நகரங்களில் போக்குவரத்து நெரிசல் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகவிட்டது. தீர்வு காண முடியாத விஷயங்களில் போக்குவரத்து நெரிசலும் ஒன்று என்ற நிலை ஏற்பட்டுள்ளது.இதனால், அவசரத்திற்கு கூட குறிப்பிட்ட இடத்தை சென்றவடைவது நம் கையில் இல்லை என்ற நிலை இருக்கிறது. இந்த நிலையில், டிராபிக் ஜாம் பற்றி உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வகையில் கார்களுக்கான புதிய தொழில்நுட்பத்தை ஹோண்டாவும், டோக்கியோ பல்கலைகழக விஞ்ஞானிகளும் இணைந்து உருவாக்கியுள்ளனர்.டிராபிக் ஜாம் ஏற்பட்டுள்ள இடத்தை தவிர்த்து எந்த வழியில் செல்லலாம் எளிதாக என்பதையும் இந்த சிஸ்டம் தெரிவிக்கும் என்கிறது ஹோண்டா. இது அட்வான்ஸ்டு குரூஸ் கன்ட்ரோல் சிஸ்டத்துடன் இணைக்கும் வகையில் மேம்படுத்தப்படும் என்று ஹோண்டா தெரிவித்துள்ளது.இந்த புதிய தொழில்நுட்பம் முதன்முறையாக அடுத்த மாதம் இத்தாலியிலும், ஜூலையில் இந்தோனேஷியாவிலும் கார்களில் பொருத்தி நேரடி சோதனை நடத்தப்பட உள்ளது. இந்த புதிய தொழில்நுட்பம் வர்த்தக ரீதியில் அறிமுகம் செய்யப்பட்டால், கால 

கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மேலும் 4 அணு உலைகள்! ஆணைய தலைவர்!

கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மேலும் 4 அணு உலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த கூடுதல் அணு உலைகளால் தென்னிந்தியாவின் மின் தேவையை பூர்த்தி செய்யலாம். கூடங்குளத்தில் அணு உலை பகுதியில் அணு கழிவுகளை மறுசுழற்சி செய்யும் மையம் எதுவும் அமைக்கும் திட்டம் இல்லை.கூடங்குளத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தமிழகத்திற்கே வழங்க வேண்டும் என்ற முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது என்றார்.கூடங்குளத்தில் தற்போது தலா 1000 மெகாவாட் திறன் கொண்ட 2 அணு உலைகள் உள்ளன. அதில் முதல் உலையில் விரைவில் மின் உற்பத்தி துவங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அணு மின் நிலைய ஊழியர்கள் இரவு பகல் பாராது பணியாற்றி வருகிறார்கள். இதற்கு போராட்டக்குழுவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரதத்தை துவங்கப் போவதாகவும் அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இயற்கைக்கு எதிராக மனிதன்.

இயற்கைக்கு எதிராக மனிதர்கள் மாறிவருவதால் இன்னும் 50 ஆண்டுகளில் விந்தணுக்கள் உள்ள மனிதர்களை பார்ப்பது அபூர்வம் என்று அதிர்ச்சிகரமான தகவலை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர். தாமதமான திருமணங்களும், குழந்தை பிறப்பை தள்ளிப் போடுவதும் விந்தணு குறைபாட்டிற்கு காரணம் என்கின்றனர் மருத்துவர்கள். உலகெங்கும் மருத்துவ துறையில் உள்ள மிக முக்கிய பிரச்னையாக உருவெடுத்திருப்பது குழந்தையின்மை பிரச்னை தான். குழந்தையின்மைக்கு பெண்கள் தரப்பில் பல காரணங்கள் இருந்தாலும் ஆண்கள் தரப்பில் முக்கிய காரணமாக விளங்குவது போதுமான விந்தணுக்கள் இல்லாததே.சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வின் படி மனிதனின் விந்தணு எண்ணிக்கை ஆண்டுக்காண்டு குறைந்து கொண்டே வருவதையும் இது கட்டுப்படுத்தப்பட வில்லையானால் 50 ஆண்டுகளில் போதிய விந்தணுக்கள் உள்ள மனிதர்களே இருப்பதே கடினம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

குறைபாட்டிற்கு காரணம் விந்தணு குறைபாட்டுக்கு காற்று மாசுபடுதல், ஜங்க் உணவுகள், சுற்றுப்புற மாசு, உடல் பருமன், ஸ்டரஸ் என்று சொல்லப்படும் மன உளைச்சல் போன்றவை முக்கிய பங்கு வகிக்கின்றன. ஸ்காட்லாந்தில் எடுக்கப்பட்ட ஆய்வின் படி புகைத்தல், குடித்தல், உடல் பருமனோடு நாம் உபயோகப்படுத்தும் ப்ளாஸ்டிக் பொருட்கள் மூலம் வெளியாகும் ஈஸ்ட்ரோஜனை ஒத்த வேதியியல் பொருட்கள் மூலமும் விந்தணுக்கள் குறைகின்றன என்கிறது.

விந்தணு வீழ்ச்சி இது குறித்து ஆய்வு மேற்கொண்ட மருத்துவர் பார்கவா, சராசரியாக ஓராண்டுக்கு 2% ஆண்களுக்கு போதுமான விந்தணு குறைந்து கொண்டே வருகிறது என்றும் இப்படியே போனால் 50 ஆண்டுகளில் போதுமான விந்தணு கொண்ட ஆண்களை பார்ப்பதே அபூர்வம் என்கிறார். மேற்கத்திய நாடுகளில் விந்தணு வீழ்ச்சி 90களிலேயே உணரப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார். இந்தியாவுக்கும் இது பொருந்தும் என்று கூறியுள்ள பார்கவா ஹைதரபாத்தை சேர்ந்த தலை சிறந்த மருத்துவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இயற்கைக்கு எதிரான நிலை தாமதமான திருமணங்களும் குழந்தை பிறப்பை தள்ளி போடுவதும் விந்தணுக்கள் குறைவதற்கு முக்கிய காரணங்கள் என்கிறார் மருத்துவர் மல்பானி. ப்ளாஸ்டிக் பொருட்கள் உபயோகிப்பதன் மூலம் விந்தணுக்கள் குறைகின்றன என்பது நிரூபிக்கப்படவில்லை என்று கூறும் அவர், விந்தணுக்கள் பழைய படி மனிதனிடத்தில் வளமாய் இருக்க வேண்டுமெனில் மனிதன் இயற்கையான வாழ்வுக்கு திரும்ப வேண்டும் என்பதே.இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் கூறியதைப்போல மண்ணில் அளவிற்கு அதிகமான ரசாயன உரங்களைப் போட்டு மண்ணை மலடாக்குவதாக கூறியுள்ளார். மண் மலடானால், மனிதர்களும் மலடாவார்கள் என்று கூறி நாடுமுழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இன்றைய இளம் தலைமுறையினர் இதை புரிந்து இயற்கையோடு இசைந்து வாழ்ந்தால் மட்டுமே எதிர்காலத்தில் சந்ததிகள் உருவாக முடியும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாகும்.

கொத்து குண்டுகளை வீசியே தமிழர்கள் படு கொலை!


 கொத்து கொத்தாக உயிர்களைப் பலியெடுக்கும் கிளஸ்டர் வகை குண்டுகளைத்தான் இலங்கை ராணுவம் இறுதிப் போரில் பயன்படுத்தியதற்கான ஆதாரங்களை ஐக்கிய நாடுகள் சபையின் கண்ணிவெடி அகற்றும் பிரிவு கைப்பற்றியுள்ளது.இலங்கையின் வடக்கில் புதுக்குடியிருப்பு பகுதியில் கிளஸ்டர் வகை குண்டுகளின் வெடிக்காத பகுதிகள் கிடைத்துள்ளதாக ஐ.நா. கண்ண்வெடி அகற்றும் பிரிவைச் சேர்ந்த அலன் போஸ்டன் தெரிவித்துள்ளார்.தாம் கிளஸ்டர் குண்டின் பகுதிகளைக் கண்டுபிடித்தது தொடர்பாக சர்வதேச ஊடகங்களுக்கு அலன் போஸ்டன் மின் அஞ்சல் மூலம் தகவலையும் தெரிவித்துள்ளார்.இத்தகைய கொத்துக் குண்டுகளை பயன்படுத்தி பொதுமக்களைக் கொல்வது என்பது சர்வதேச சட்டவிதிகளின் படி குற்றமாகும்.

கண்டுபிடித்தது எப்படி? புதுக்குடியிருப்பு பகுதியில் வீடு ஒன்றில் குவித்து வைக்கப்பட்ட உலோகங்களை சிறுவன் ஒருவன் பிரிக்க முயன்றான். அப்போது அது வெடித்து சிறுவன் உயிரிழந்தான். அவனது சகோதரி படுகாயமடைந்தார்.இச்சம்பவம் தொடர்பான புகைப்படங்களை அலன் போஸ்டன் ஆராய்ந்த போது அவை கிளஸ்டர் குண்டுகள்தான் என உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் அந்த வீட்டில் இருந்த கிளஸ்டர் குண்டின் வெடிக்காத பகுதிகளையும் அவர் கைப்பற்றினார்.

ஐ.நா. சந்தேகம் இலங்கை அரசால் 2009ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட மருத்துவமனைகள் மீது கிளஸ்டர் குண்டுகளை இலங்கை ராணுவம் வீசியது என்று ஐக்கிய நாடுகள் சபை அப்போது குற்றம்சாட்டி இருந்தது. ஆனால் இலங்கை அரசு இதனை நிராகரித்திருந்தது.அதேபோல் இலங்கை போர்க் குற்றங்கள் தொடர்பான ஐ.நா. வல்லுநர் குழுவும் போரில் படுகாயமடைந்தோரை பற்றி குறிப்பிடுகையில் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் காயமானது கிளஸ்டர் வகை குண்டுகளால்தான் என்றும் குறிப்பிட்டிருந்தது.இந்நிலையில் கிளஸ்டர் குண்டின் வெடிக்காத பகுதிகளே கைப்பற்றப்பட்டிருப்பது இலங்கைக்கு பெரும் நெருக்கடியையே கொடுக்கக் கூடும். வழக்கம் போல இலங்கை ராணுவம் தற்போதைய ஆதாரங்களும் பொய்யானது என்று கூறியிருப்பதுடன் விசாரணை நடத்தப் போவதாகவும் தெரிவித்துள்ளது.

ராஜபக்சே சொல்லித்தான் முள்ளிவாய்க்காலை நிர்மூலமாக்கினோம்- ராணுவ தளபதி ஜெகத் ஜெயசூரியா!


முள்ளிவாய்க்கால் பகுதியில் 45,000 தமிழர்கள் அடைக்கலம் புகுந்திருந்ததால், அங்கு தாக்குதல் நடத்த சற்று தயங்கினோம். ஆனால் ராஜபக்சேதான் தொடர்ந்து தாக்கி அழிக்கும்படி உத்தரவிட்டார். இதையடுத்தே மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் அங்கு தொடர்ந்து தாக்குதல் நடத்தினோம். இதனால்தான் ஈழப் போரில் வெல்ல முடிந்தது அந்நாட்டு ராணுவ தளபதி ஜெகத் ஜெயசூரியா தெரிவி்ததுள்ளார்.ஜெயசூரியாவின் இந்தப் பேச்சு, ராஜபக்சேவுக்கு எதிரான போர்க்குற்றசாட்டுக்கு தேவையான வலுவான ஆதாரமாக பின்னர் உருவெடுக்கும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

ஈழத்தில் நடந்த இறுதிகட்டப்போரின்போது முள்ளிவாய்க்காலில் விஷ கொத்துக்குண்டுகள் வீசி 40,000 தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்த போர்க்குற்றத்திற்கு எதிராக ஐ.நா. சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டதால் இலங்கை அரசு பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறது.இந்நிலையில் இலங்கையின் குருநாகல் பகுதியில் நடந்த ராணுவ நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அந்நாட்டு ராணுவ தளபதி ஜெகத் ஜெயசூரியா ராஜபக்சே சொல்லித்தான் முள்ளிவாய்க்கால் பகுதியை ராணுவம் நிர்மூலமாக்கியதாக கூறியுள்ளார்.கடந்த 2009ம் ஆண்டு இலங்கையின் வடக்கு பகுதியில் சீனா, ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகளின் உதவியோடு போர் நடத்தினோம். கடைசியாக முள்ளிவாய்க்கால் பகுதியில் போர் நடத்துவதா வேண்டாமா என்று தோன்றியது. ஏனென்றால் அந்த பகுதியில் 45,000க்கும் அதிகமான தமிழர்கள் வசித்து வந்தனர். அங்கு குண்டு போட்டால் ஒருவர் கூட மிஞ்சமாட்டார்களே என்று நினைத்தோம். மேலும் இறுதிகட்டப் போரை நடத்தக் கூடாது என்று பல்வேறு நாடுகளும் வலியுறுத்தின.

இதையடுத்து அதிபர் ராஜபக்சேவிடம் ஆலோசனை நடத்தினோம். அப்போது அவர் எக்காரணம் கொண்டும் போரை நிறுத்த வேண்டாம் என்றும் சர்வதேச மிரட்டல்களுக்கு அடிபணியாமல் தொடர்ந்து திட்டமிட்டபடி தாக்குதல் நடத்துங்கள் என்று என்னிடம் தொலைபேசி மூலம் உத்தரவிட்டார்.அவர் கொடுத்த தைரியத்தில் தான் போரை வெற்றிகரமாக நடத்த முடிந்தது. மேலும் போர்காலத்தில் அவர் தான் எங்களுக்கு பலமாக இருந்தார். அவர் மட்டும் மனிதாபிமான அடிப்படையில் இரக்கம் காட்டியிருந்தால் நம்மால் இறுதிகட்டப்போரில் வென்றிருக்க முடியாது. இறுதிகட்டப் போரில் நாம் வெல்ல உறுதுணையாக இருந்த நாடுகளையும், அவர்கள் செய்த உதவிகளையும் மறக்கவே முடியாது என்றார் ஜெயசூர்யா.ஜெயசூர்யாவின் இந்தப் பேச்சு மூலம் கடைசிக் கட்ட போரின்போது மிகக் கொடூரமாக தமிழர்கள் கொலை செய்யப்பட்டது உண்மைதான் என்பது உறுதியாகியுள்ளது. மேலும் ராஜபக்சே சொல்லித்தான் தாங்கள் தமிழர்களை கொத்துக் கொத்தாக கொன்றோம் என்பதையும் இந்த ஜெயசூர்யா கூறியுள்ளதால் இது ராஜபக்சேவின் போர்க்குற்ற செயல்பாடுகளுக்கான வலுவான ஆதாரமாக, வாக்குமூலமாக உருவெடுக்கும் வாய்ப்புகளும் பிரகாசமாக உள்ளன.

சட்டபூர்வமான செக்ஸ் உறவுக்கு வயது வரம்பு 18


சட்டபூர்வ செக்ஸ் உறவுக்கு வயது வரம்பை 18 ஆக உயர்த்தும் புதிய சட்ட திருத்தத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. டெல்லியில் 26.04.2012 அன்று நடந்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டது.செக்ஸ் குற்றங்களில் இருந்து சிறு வயதினருக்கு பாதுகாப்பு வழங்கும் சட்டத்தின்படி 16 முதல் 18 வயதுக்கு உட்பட்ட பெண்களிடம் அவர்களுடைய சம்மதத்தின் பேரில் செக்ஸ் உறவு வைத்திருந்தால் குற்றமாக கருதப்படுவது இல்லை.புதிய சட்ட திருத்தத்தின்படி, இந்த வயது வரம்பு 18 ஆக உயர்த்தப்படுகிறது. 18 வயதுக்கு குறைவானவர்களிடம் அவர்களுடைய விருப்பத்தின் பேரில் செக்ஸ் உறவு வைத்திருந்தாலும் இனி குற்றமாக கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய சட்ட திருத்தம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொறுப்பு மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் உண்டு என்ற திருத்தத்துக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டு இருக்கிறது. பாராளுமன்ற நிலைக்குழுவின் சிபாரிசுகளின்படி இந்த திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன.
பெண்களுக்கு தங்கள் பணியிடங்களில் நடைபெறும் செக்ஸ் கொடுமை தடுப்பு சட்டத்துக்கான திருத்த விதிமுறைகளுக்கு மந்திரிசபை கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.ஒருதலைப்பட்சமான முடிவை எடுப்பதை தவிர்க்கும் வகையில் மேற்கொண்டு இந்த மசோதா குறித்து விவாதிக்க வேண்டியது இருப்பதால், ப.சிதம்பரம் தலைமையிலான மத்திய மந்திரிகள் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டது.

இதே நாள்...


  • டோகோ விடுதலை நாள்(1960)
  • சியேரா லியோனி விடுதலை நாள்(1961)
  • தென்ஆப்ரிக்கா விடுத‌லை தினம்
  • லண்டனில் புதிய வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையின் அடிக்கல் நாட்டப்பட்டது(1840)
  • ஜெராக்ஸ் பார்க் முதன் முறையாக கணிணி மவுஸை அறிமுகப்படுத்தியது(1981)

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...