|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

23 November, 2011

போலிச் சான்றிதழ் மூலம் அரசுப் பணியில் 1,800 பேர்


போலிச் சான்றிதழ்கள் அளித்து 1,800-க்கும் மேற்பட்டோர் அரசுப் பணியில் சேர்ந்துள்ளனர் என மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார். மக்களவையில் எழுத்துப்பூர்வமாக புதன்கிழமை அளித்த பதிலில் அவர் கூறியதாவது: பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்.பி.ஐ.) 157 பேரும், ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 146 பேரும், இந்திய சென்ட்ரல் வங்கியில் 135 பேரும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 112 பேரும், சிண்டிகேட் வங்கியில் 103 பேரும், தேசிய வேளாண்- ஊரக வளர்ச்சி வங்கியில் (மும்பை) 93 பேரும், எல்லைப் பாதுகாப்புப் படையில் 91 பேரும், இந்தியன் வங்கியில் 79 பேரும், பாதுகாப்பு அமைச்சகத்தில் 62 பேரும், கனரகத் தொழில் துறையில் 57 பேரும், அணுசக்தித் துறையில் 50 பேரும், பி.எஸ்.என்.எல்.லில் 49 பேரும் போலி ஜாதி சான்றிதழ் உள்ளிட்டவைகளை அளித்து பணியில் இணைந்துள்ளனர். 

பணியில் இணையும்போதே சான்றிதழ்களை சரிபார்க்கவும், போலிச் சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டால் அவரைப் பணிநீக்கம் செய்வதுடன் வழக்குத் தொடரவும் அரசுத் துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார். நிலுவையில் 1,132 ஊழல் புகார்கள்: மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் பரிந்துரைத்துள்ள 1,132 ஊழல் புகார்கள் மீது தொடர்புடைய அரசுத் துறைகள் விசாரணை அறிக்கையை அனுப்பாமல் உள்ளன. மத்திய அமைச்சர் வி.நாராயணசாமி மக்களவையில் இதைத் தெரிவித்தார். விதிமுறைகளின்படி, ஊழல் கண்காணிப்பு ஆணையம் பரிந்துரைத்த ஊழல் புகார்களின் மீது 3 மாதத்துக்குள் அந்தந்தத் துறை விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிளாஸ்டிக் பொம்மைகளே உயிருக்கு ஆபத்தாக...?


குழந்தைகள் ஆசையாக விளையாடும் பிளாஸ்டிக் பொம்மைகளே அவர்களின் உயிருக்கு ஆபத்தாக கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். நாள்தோறும் மூன்று மணிநேரம் பிளாஸ்டிக் பொம்மையை வாயில் வைத்து சுவைக்கும் குழந்தைகளுக்கு புற்றுநோய் ஏற்படும் என்று கனடா அரசு நடத்திய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. இருபது ஆண்டுகளுக்கு முன்புவரை சிறு குழந்தைகளுக்கு மரத்தால் செய்யப்பட்ட விளையாட்டு சாமான்களும், மரப்பாச்சி பொம்மைகளும் விளையாட்டு பொருளாக இருந்தன. காகித பொம்மைகளும், பனையோலை பொம்மைகளும், மண் பொம்மைகளும் பிடித்திருந்த இடத்தை இன்றைக்கு விதவிதமான பிளாஸ்டிக் பொம்மைகள் ஆக்கிரமித்துள்ளன. சிறு கிராமங்கள் முதல் பெரு நகரங்கள் வரை இன்றைக்கு எங்கு திரும்பினாலும் குழந்தைகளுக்கு என சிறப்பு அங்காடிகளும், அவற்றில் விதவிதமான பிளாஸ்டிக் பொம்மைகளும் பெருகியுள்ளன.

ஆபத்தான ரசாயனம்  இந்த பிளாஸ்டிக் பொம்மைகள் மென்மையான நெகிழும் தன்மையுடையவை. இவைகளை வைத்து விளையாடும் குழந்தைகள் அவற்றை மெதுவாய் சுவைக்கின்றன. இவையே குழந்தைகளுக்கு நோய்களை உண்டு செய்கின்றன என்கின்றனர் நிபுணர்கள். பிளாஸ்டிக் பொருளுக்கு நெகிழும் தன்மையை தருவது தாலேட்டு என்னும் ரசாயனப்பொருள்தான். இது விஷத்தன்மை வாய்ந்ததாகும். இது குழந்தைகளின் உடம்பில் தங்கி பல்வேறு விளைவுகளை ஏற்படுத்துவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

புற்றுநோய் தாக்கும் பிளாஸ்டிக் பொம்மைகளை வைத்து விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தைகள் அவற்றை வாயில் வைத்து சுவைக்கும் போது, தாலேட்டு ரசாயனம் மெதுவாக குழந்தையின் வயிற்றுக்குள் செல்கிறது. பின்னர் கொழுப்புத் திசுக்களில் தங்கி, பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இதன் மூலம் சிறுநீரக பாதிப்பும், ஆண் குழந்தைகளுக்கு விந்து உற்பத்தியும் பாதிக்கப்படுகிறது. பெண் குழந்தைகளின் இனப்பெருக்க உறுப்பும் பாதிக்கப்படுவதாக ஆய்வாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். நாள்தோறும் மூன்று மணிநேரம் பிளாஸ்டிக் பொம்மையை வாயில் வைத்து சுவைக்கும் குழந்தைகளுக்கு புற்றுநோய் ஏற்படும் என்று கனடா அரசு நடத்திய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

மன வளர்ச்சி பாதிப்பு பொம்மை தயாரிப்பதில் சிலர் காரீயம், காட்மீயம் போன்ற பொருட்களை பயன்படுத்துகின்றனர். இதில் காரியமானது நரம்பு மண்டலத்தை பாதிக்கக்கூடியது. மூளை வளர்ச்சியையும் பாதிக்கும். இந்த பொருட்கள் அடங்கிய பொம்மைகளினால் குழந்தைகளின் மன வளர்ச்சி, அறிவு வளர்ச்சி, கல்வி வளர்ச்சி குறையும் என்பது ஆய்வாளர்களின் அச்சம்.

அமெரிக்காவில் தடை இதன் காரணமாகவே அமெரிக்காவில் இத்தகைய பொம்மைகளுக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு தாலேட்டு கலப்படம் செய்யப்படாத பொம்மை என்ற முத்திரையுள்ள பொம்மை மட்டுமே அங்கு விற்பனை செய்ய அனுமதிக்கப்படுகிறது. சுவிட்சர்லாந்தில் மூன்று வயதுக்கு குறைந்த குழந்தைகளுக்கு பொம்மைகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் பல கடைகளில் பொம்மைகள் விற்பனை செய்யப்படுவதில்லை.

தடை விதிக்க வேண்டும் இந்தியாவில் மட்டும் தடை செய்யப்பட்ட பொம்மைகள் கூவி கூவி விற்பனை செய்யப்படுகின்றன. இளைய தலைமுறையினரை கொல்லும் பொம்மைகளை விற்பனை செய்யப்படுகின்றன. விழிப்புணர்வுடன் செயல்பட்டு பிளாஸ்டிக் பொம்மைகளை வாங்குவதை நாமே தவிர்க்க வேண்டும். மரத்தால் செய்யப்பட்ட பொம்மைகளை வாங்க ஊக்கப்படுத்த வேண்டும். தடைசெய்யப்பட்ட விஷத்தன்மையுள்ள பொம்மைகளை இறக்குமதி செய்யவும் விற்பனை செய்யவும் இந்திய அரசு தடை விதிக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

பாப்கார்ன் கொறித்தால் இதயம் இதமாகும்...


வயதானாலும் இளமையாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று விரும்புபவர்களா நீங்கள்?. அப்படியெனில் எதையுமே நேர்மறையாக எண்ணுங்கள் என்கின்றனர் வல்லுநர்கள். சத்தான உணவை உண்டு, சந்தோசமாக இருந்தால் என்றைக்கும் இளமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கலாம் என்பது உணவியல் வல்லுநர்களின் அறிவுரை 

நோயற்ற வாழ்வு புகை, மது ஆகியவற்றை அறவே தவிர்க்க கூறும் வல்லுநர்கள் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி அவசியம் என்கின்றனர் வல்லுநர்கள். அதோடு சரிவிகித உணவை உட்கொண்டால் நோயற்ற வாழ்வை வாழலாம் என்கின்றனர் உணவியலாளார்கள் அவர்கள் கூறும் ஆரோக்கிய டிப்ஸ் உங்களுக்காக:

கால்சியம் சத்து வயதாக வயதாக அதிகம் பாதிக்கப்படுவது எலும்புகளும், பற்களும்தான். கால்சியப் பற்றாக்குறையினால் லேசாக தடுக்கி விழுந்தாலே எலும்புகள் பாதிக்கப்படுகின்றன. எனவே நாம் உண்ணும் உணவில் கால்சியம் சத்துள்ள உணவை அவசியம் சேர்த்துக்கொள்ள வேண்டும். பால் பொருட்கள், சீஸ், வெண்ணெ ஆகியவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும். புரதச்சத்துள்ள சோயாபீஸ்சை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இது தசைகளின் வளர்ச்சிக்கு உதவும். நாம் உண்ணும் உணவில் சரிவிகிதமாக புரதச்சத்து உள்ள பயறுவகைகள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

கண்களுக்கு கவனம் கண்களை கவனமாக பார்த்துக்கொள்ள வைட்டமின்கள், தாது உப்புகள் நிறைந்த உணவுகளை சாலட் களாக செய்து உட்கொள்ள வேண்டும். இதனால் கண்களுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும் என்பது வல்லுநர்களின் அறிவுரை. பாப்கார்ன் கொறிப்பது இதயத்திற்கு இதமானது என்கின்றனர். மக்காச்சோளத்தில் செய்யப்படும் பாப்கார்ன், பயறுவகை உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்பது உணவியலாளர்கள்

நேர்மறை எண்ணங்கள் இந்த உணவுகளை அரைத்து சத்துக்களை ஒவ்வொரு பகுதிக்கும் அனுப்ப தண்ணீரை அவசியம் அருந்த வேண்டும் என்கின்றனர் உணவியலாளர்கள். தவிர நம்மிடம் தோன்றும் நேர்மறை எண்ணங்கள் நமக்கு எந்த வித நோயும் தாக்காமல் உடல் நலத்தை காக்கும் என்றும் உணவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். என்ன அவர்கள் கூறியது சரிதானே. எந்த விசயத்தையுமே நெகடிவாக பார்க்காமல் பாஸிட்டிவாக பாருங்கள் ஆரோக்கியமாக வாழுங்கள்

ஆரோக்கிய வாழ்க்கைக்கான ரகசிய மந்திரம்!


மனிதர்கள் உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க எண்ணற்ற நம்பிக்கைகளை கொண்டிருக்கின்றனர். நோய் தாக்கும் போது அவற்றை தணிக்க மருத்துவரை நாடுவது மட்டுமல்லாது இறை நம்பிக்கையின் படியும் வழிதேடுகின்றனர். ஜோதிட ரீதியாக ஆராய்ந்து அதற்கேற்ப பரிகாரங்களையும் செய்கின்றனர். அதன் மூலம் உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்கின்றனர். 

உடல்நலமும் ஆரோக்கியமும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான மிகப்பெரியமத்திரம்  எதுவெனில் நாம் நலமாக இருக்கிறோம் என்ற நம்பிக்கைதான். நாம் உண்ணும் உணவை இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும். ஏனெனில் நமக்கான ஒவ்வொரு பருக்கையிலும் இறைவன் நம் பெயரை எழுதியிருப்பார் என்று என்று நம்முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். எனவே உணவுக்காக பயிரிடும்போதும், உணவை உண்ணும் போது இறைவனை வழிபடுகின்றனர்.

மனதிற்கும் உடலுக்கும் யோகா நாம் உண்ணும் உணவு சக்தியாக மாறி உடலை ஆரோக்கியமாக்குகிறது. அதனை நோயின்றி, கட்டுக்கோப்பாக வைத்திருப்பதில் உடற்பயற்சி  முக்கிய பங்கு வகிக்கிறது. யோகா பயிற்சியானது நமது உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. இது பக்கவிளைவில்லாத ஆரோக்கியமான பயிற்சியாகும். காலம் காலமாக நம்முன்னோர்கள் மேற்கொண்ட பயிற்சியும் இதுதான். இயந்திரமயமாகி விட்ட இன்றைய சூழ்நிலையில் அலுவலகம், வீடு என எண்ணற்ற பணிகளுக்கிடையே சிக்கி தவிப்பதால் பலருக்கும் தேவையற்ற மன அழுத்தம் எற்படுகிறது. அதனைப்போக்க அமைதியான இசையை கேட்கலாம். மூச்சுபயிற்சி, மிதமான நடை என நம்மை நாமே உற்சாகப்படுத்திக்கொள்வதன் மூலம் மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம்.

கோள்களின் சேர்க்கை நமது உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் வானத்தில் உள்ள கோள்களும் முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவிக்கின்றனர் ஜோதிடவியலாளர்கள். அந்த கிரகங்கள் சரியான இடத்தில் அமர்ந்தால் நமக்கு எந்த வித நோயும் ஏற்படுவதில்லை. அதேசமயம் ஒன்றுக்கொண்டு சரியில்லாத இடத்தில் அமர்ந்தாலோ நமக்கு விபத்து போன்ற ஆபத்துகள் ஏற்படுவதாக ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர். கிரகங்களின் சேர்க்கையினாலேயே நம்முடைய வாழ்க்கையும், சரியான உறவுகளும் அமைவதாக தெரிவிக்கின்றனர்.

பரிகாரமும் பலன்களும் செவ்வாய் கிரகம் அக்னி ரூபமானது. இது காய்ச்சல், உள்ளிட்ட நோய்க்களை ஏற்படுத்தும். இந்த கிரகத்தின் பார்வை இருக்கும் போது குளிர்ச்சி தரும் உணவுகளை உண்பதும், அந்த உக்கிரத்தை சாந்திப்படுத்துவதற்கு உரிய கற்களை கொண்ட ஆபரணங்களை அணிவதும், அதற்குரிய மந்திரங்களை ஜெபிக்கவும் ஆலோசனை தெரிவிக்கின்றனர் ஜோதிடர்கள். இதன் மூலம் நோய்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம்.

அன்றைய 'டாப்' கதாநாயகிகளுடன் 'ஹாட் ட்ரிங்க்ஸ்' சாப்பிட்டவன் நான் - கவிஞர் வாலி !


‘வாலி 1000′ என்ற சிறப்பு நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது. 60 ஆண்டுகளுக்கும் மேல் திரையுலகில் பல தலைமுறைகளைக் கடந்து சாதனை புரிந்து வரும் கவிஞர் வாலியை, அவருடன் பழகியவர்கள், பணியாற்றுபவர்கள், நடிகர்கள், இயக்குநர்கள், நடிகைகள், பத்திரிகையாளர்கள் என பலரும் பேட்டி காண்கிறார்கள். கூடவே வாலியின் தேர்ந்தெடுத்த 1000 பாடல்களை சாதகப்பறவைகள் சங்கர் குழுவினர் பாடுகிறார்கள். மருதுசங்கர் இயக்கும் இந்நிகழ்ச்சியின் நிர்வாகத் தயாரிப்பாளர் சங்கர் கிருஷ்ணமூர்த்தி. ஜனவரி முதல் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி, பாடலை பெற்ற ஸ்தலம், கோலிவுட் vs வாலிவுட், நினைவோ ஒரு பறவை, உன்னால் முடியும் தோழா, காஃபி வித் கவிஞர் என்ற ஐந்து பிரிவாக ஒளிபரப்பாகவிருக்கிறது.

இந்த நிகழ்ச்சிக்காக ஏவி.எம் ஸ்டூடியோவில் கண்ணைக் கவரும் அரங்கம் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்துவருகிறது. பிரபலங்கள் ஏ.வி.எம் சரவணன், இயக்குனர்கள் எஸ்பி.முத்துராமன், மகேந்திரன், எஸ்.ஜே.சூர்யா, கார்டூனிஸ்ட் மதன், கதிர், வெங்கட் பிரபு, இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், தேவா, பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி, நடிகை குஷ்பு உள்ளிட்ட ஏராளமான பிரமுகர்களை சந்திக்க வைத்து கலந்துரையாடல் நிகழ்ச்சியை எடுத்து முடித்துவிட்டார்களாம். இந்த நிகழ்ச்சிக்கான அறிமுக சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடந்தது.  வாலியின் அறிமுக உரைக்குப் பிறகு, கேள்வி பதில் ஆரம்பமானது.

இந்த நிகழ்ச்சியில் எத்தனையோ பேருடன் சந்திப்பு இருப்பதாக சொன்னீர்கள். கலைஞரைச் சந்திப்பீர்களா… ரொம்ப அருமையான கேள்வி. 45 ஆண்டுகால நட்பு எனக்கும் கலைஞருக்கும். நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன். அதேநேரம் ஆட்சியில் யார் இருக்கிறார்கள் என்று பார்த்து நட்பு பாராட்டாதவன். இன்றைக்கும் கலைஞருடன் என் நெருக்கமான நட்பு தொடர்கிறது. நான் கூப்பிட்டால் கலைஞர் கட்டாயம் இந்த நிகழ்ச்சிக்கு வருவார். ஆனால் இதுவரை இந்த நிகழ்ச்சியில் பல நடிகர், நடிகைகள், இலக்கியவாதிகள் என பலரும் என்னுடன் கலந்துரையாடினார்கள். ஆனால் இவர்கள் யாரையும் நான் நேரடியாக அழைக்கவில்லை. என் மீது உள்ள அன்பினால், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அழைத்ததும் வந்தார்கள். ஆனால் நானே அழைக்க வேண்டிய சூழல் வந்தால், நிச்சயம் கூப்பிடுவேன்.

'நினைவு நாடாக்கள் தொடரில் எழுதியதைப் போல இந்த வாலி 1000 நிகழ்ச்சியிலும் ஒளிவு மறைவில்லாமல் உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வீர்களா? நிச்சயமாக. அதைவிட 200 சதவீதம் ஒளிமறைவில்லாமல் பல விஷயங்களை இந்த நிகழ்ச்சியில் சொல்லியிருக்கிறேன். அன்றைய முன்னணி கதாநாயகிகளுடன் அமர்ந்து நான் மது அருந்தியது உள்பட. ஆனா இப்ப அதெல்லாம் இல்ல.  கண்ணதாசனுக்கும் எனக்குமான உறவு, எம்ஜிஆர், கலைஞர் என அரசியல் ஜாம்பவான்களுடன் இருந்த நெருக்கம், பிணக்கு என அனைத்தையும் சொல்லியிருக்கிறேன். எனக்கு இதில் தயக்கமில்லை. இனி என்ன இருக்கிறது ஒளித்து மறைக்க!

அன்றைய கவிஞர்கள் அரசர்களை வாழ்த்தியது மட்டுமல்ல, குறைகளை சுட்டிக்காட்டவும் தவறவில்லை. ஆனால் பெரிய கவிஞரான உங்களால் அப்படிச் சொல்ல முடிந்ததா.. ஜெயலலிதா பதவிக்கு வந்ததும் ரங்கநாயகி என்று புகழ்ந்து கவிதை எழுதினீர்களே? இலங்கை பிரச்சனையில் முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் கொண்டு வந்த தீர்மானத்தை பாராட்டித்தான் அந்த கவிதையை எழுதினேன். ஆனால் நான்தான் கலைஞர் ஆட்சியில் இருந்தபோது பார்வதியம்மாளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க தமிழ்நாட்டில் அனுமதி மறுத்ததை கண்டித்தும் கவிதை எழுதினேன். அந்த கவிதையை பாராட்டி நிறைய பேர் பேசினார்கள். வைகோ கூட அதை தன் சங்கொலி பத்திரிகையில் வெளியிடவா என்று அனுமதி கேட்டு வெளியிட்டார். சமீபத்தில் தீக்குளித்த செங்கொடி பற்றியும் கவிதை எழுதியிருக்கிறேன். அதற்காக நாட்டில் நடக்கிற அன்றாட பிரச்சனைகள் பற்றி எழுதிக் கொண்டிருந்தால் அதை தவிர வேறு வேலை எதுவும் செய்ய முடியாதே…

எம்ஜிஆரைப் பார்க்கும் வரை நான் சோற்றுக்கு வழியில்லாமல் இருந்தேன், அவரைப் பார்த்தபிறகு சோற்றில் கைவைக்கக் கூட நேரமில்லாமல் போய்விட்டது என நீங்கள் முன்பு சொன்னீர்களே….இல்லை. அது எம்ஜிஆருக்காக நான் சொல்லவில்லை. உண்மையில் எம்ஜிஆர்தான் என்னை வாழ வைத்தார் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அவர் படங்கள்தான் என்னை புகழில் உட்கார்த்தி வைத்தன. ஆனால் எம்எஸ் விஸ்வநாதன்தான் அதற்கும் காரணம். ஏனென்றால் நான் எம்ஜிஆருக்கு நல்லவன் வாழ்வான் படத்திலேயே பாடல் எழுதினேன். ஆனால் அவருக்கு என்னை நினைவில்லை. அதன் பிறகு 3 ஆண்டுகள் கழித்து எம்எஸ் விஸ்வநாதன்தான் எனக்கு எம்ஜிஆர் படத்தில் வாய்ப்பு கொடுத்தார். என் பாட்டைக் கேட்டு, உடனே எம்ஜிஆர் கூப்பிட்டார். என் வாழ்க்கை பிரகாசமானது. அதனால் நீங்கள் குறிப்பிட்ட அந்த வாக்கியத்தை நான் எம்எஸ் விஸ்வநாதனுக்குதான் சொன்னேன். இதை பின்னர் ரஜினி அவர்கள் தன் குரு பாலச்சந்தரைக் குறிப்பிட பயன்படுத்திக் கொள்ளட்டுமா என என்னைக் கேட்டு பயன்படுத்திக் கொண்டார்.

கடற்கரையில்லாத பகுதியில், ஒரு நகர்ப் புற வாழ்க்கையை அனுபவித்த உங்களால், மீனவர் வாழ்க்கையை அத்தனை துல்லியமாக சொல்ல முடிந்தது எப்படி? வாழ்க்கையில் துன்பம் என்பதன் பரிமாணம் ஒருவருக்கொருவர் சற்று வித்தியாசப்படலாம். ஆனால் அடிப்படையில் கஷ்டம் ஒன்றுதானே. அடுத்தவர் கஷ்டத்தை உணரும் மனசிருந்தா போதும். அது வார்த்தைகளில் வெளிப்படும். எதையும் பார்க்காமல் கேட்காமல் படிக்காமல் இருந்தால் எந்தக் கவிஞனுக்கும் ஒன்றும் தெரியாமலே போய்விடும். அப்படி கேட்டும் படித்தும் எழுதியதுதான் ‘தரைமேல் பிறக்க வைத்தான்….’!

கண்ணதாசனுக்கும் உங்களுக்கும் தொழில் ரீதியாகப் போட்டியிருந்ததுண்டா? சினிமா என்பதே அணா பைசா கணக்குதானே. நானும் கண்ணதாசனும் சமகால கவிஞர்கள். ஒரு ஆண்டு நான் 45 படங்களுக்கு பாட்டெழுதினேன். அவர் 24 படங்களுக்குத்தான் எழுதியிருந்தார். அதற்காக அவரை விட நான் பெரிய கவிஞன் என்று எண்ணிக் கொள்ளவும் இல்லை. அவர் என்னை போட்டியாளன் என்று சொல்லிக் கொள்ளவும் இல்லை. சொல்லப்போனால் எந்த சபையிலும் என்னை அவர் விட்டுக் கொடுத்ததே இல்லை. அதுதான் கண்ணதாசனின் பெருந்தன்மை!

பல பாடல்கள் இன்றைக்கும் எது கண்ணதாசன் எழுதியது, எது வாலி எழுதியது என்று தெரியவில்லை என ரசிகர்கள் கூறுகிறார்கள். இது உங்களை வருத்தப்பட வைத்திருக்கிறதா… இல்லை. தங்கத்தோடுதானே என்னை ஒப்பிட்டார்கள். தகரத்தோடு இல்லையே! கண்ணதாசன் பாடல்களுக்கு இணையாக என் பாடல்களைச் சொல்கிறார்கள் என்றால்… அதைவிட ஒரு பெருமை உண்டா. நண்பர்களே- உங்களில் பலர் கண்ணதாசன் உயிரோடு இருந்த காலத்தைப் பார்க்காதவர்கள். அந்த நாளில் இருந்தவர்கள் இப்படிச் சொல்ல மாட்டார்கள்.

கண்ணதாசனின் பாதிப்பு உங்கள் பாடல்களில் இருந்தது என்கிறீர்களா? பட்டுக்கோட்டைதான் எங்கள் இருவரையுமே பாதித்தவர். எனக்கு ஆரம்ப நாளிலிருந்தே பட்டுக்கோட்டையாரின் பாடல் வரிகளில் மயக்கம் அதிகம். ஆனால் பட்டுக்கோட்டை பாமரத் தமிழில் எழுதி மனதை ஆக்கிரமித்தார். பின்னாளில் கண்ணதாசன் அதை பக்குவமான தமிழில் தந்தார். அந்தத் தமிழை நானும் காதலித்தேன். அந்த பாதிப்பு நிச்சயம் என் பாடல்களில் இருக்கும். அப் கோர்ஸ், கண்ணதாசன் பாதிப்பு இல்லாதவர்கள் யார்?

15000 பாடல்கள் எழுதியிருக்கிறீர்கள். இவற்றில் எந்தப் பாட்டிலாவது நீங்கள் முன்பு எழுதிய அதே வரியை அல்லது கருத்தை திரும்ப எடுத்தாண்டிருக்கிறீர்களா…ஒரு பாட்டில் அல்ல…. கிட்டத்தட்ட ஐந்தாயிரம் பாடல்களில் அப்படி எடுத்தாண்டிருப்பேன்! 
தேசிய விருது பெற்ற ஒரேயொரு கிராமத்திலே, மகுடி போன்ற படங்களுக்குப் பின் நீங்கள் கதை வசனம் எழுதியதை நிறுத்திக் கொண்டீர்களே… ஏன்? இந்த இரண்டு படங்கள் மட்டுமல்ல… கிட்டத்தட்ட 19 படங்களுக்கு நான் கதை வசனம் எழுதியிருக்கிறேன். நீங்கள் இந்த இரண்டைத்தான் சொல்கிறீர்கள். இல்லை.. இந்தப் படங்களுக்குப் பிறகு எழுதவில்லையே என்று கேட்டேன்… ஆமா.. அதற்குப் பிறகு எழுதவில்லை. காரணம், நடிப்பு, தொடர்கள், வசனம் என என்ன எழுதினாலும், என்னை ஒரு கவிஞனாக அடையாளம் காண வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருந்தேன்.

திமுக மீது மட்டும் உங்களுக்கென்ன தனி பாசம்… ஏன்னா… அது ஒண்ணுதான் தமிழுக்கும் தமிழறிஞர்களுக்கும் உரிய மரியாதை கொடுக்கிற கட்சி. தமிழறிஞர்கள் சொல் சபையேறும் என்றால் அது திமுக ஆட்சிக்காலத்தில்தான்.

அப்படின்னா, புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஆட்சியில் அப்படி நடக்கவில்லையா… உண்மைதான். அவரும் தமிழுக்கு அபார முக்கியத்துவம் கொடுத்தார். அவரும் நானும் 25 ஆண்டுகாலம் கட்டிப் புரண்டவர்கள். ஆனால் அவரும்கூட திமுகதான். மனதளவில் திமுகதான்.

இன்றைய கவிஞர்கள் பற்றி உங்கள் கருத்தென்ன… அற்புதமாக எழுதுகிறார்கள். விகடனுக்காக முன்பு வாலி 80- என்ற தலைப்பில் ஒரு கட்டுரை தயாரித்தார்கள். அதில் இன்றைய கவிஞர்கள் அத்தனை பேரும் என்னுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். அவர்களை உற்சாகப்படுத்துவதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்.இன்றைய முன்னணி இசையமைப்பாளர்கள் பலரும் உங்கள் வீட்டுக்கே வந்து காத்திருந்து பாடல் வாங்கிச் செல்கிறார்கள். இளையராஜா, ரஹ்மான் கூட வீட்டுக்கு வந்து பாடல் வாங்கியதாக கூறியிருந்தீர்கள்…

உண்மைதான். அது அவர்கள் என் தமிழ் மீதும் என் மீதும் வைத்துள்ள அன்பின் அடையாளம். ஒருநாள் ரஹ்மான் என்னை ஸ்டுடியோவுக்கு அழைத்தார். என்னால் போக முடியவில்லை. மாலை 6 மணிக்கு வந்து வாங்கிக் கொள்ள முடியுமா என்று கேட்டேன். வருகிறேன் என்றார். பின்னர் 6 மணிக்கு பழனிபாரதி வருவதாக சொல்லியிருந்ததால், இரவு 9 மணிக்கு மேல் வரமுடியுமா என்று கேட்டேன். அவரும் அப்படியே வந்தார். இரவு நோன்பைக்கூட என் வீட்டில்தான் முடித்தார். எனக்கு பழனிபாரதியும் முக்கியம், ரஹ்மானும் முக்கியம். அந்த இருவரும் என்மீது வைத்துள்ள அன்பு ஒன்றுதான். இளையராஜாவும் என் வீட்டுக்கே வந்து பாடல் வாங்கியதுண்டு. அதற்கு என் வயது மட்டுமல்ல, அதைத் தாண்டிய அன்புதான் காரணம்!

இந்த நிகழ்ச்சியில் குஷ்பு உங்களை பேட்டி எடுத்ததாக சொன்னீர்கள்… இது உங்கள் விருப்பமா அல்லது தயாரிப்பாளர் விருப்பமா… எனக்கென்னய்யா விருப்பம் இதில். தயாரிப்பாளர் விருப்பம். அது ஒரு பக்கமிருக்கட்டும். குஷ்பு உண்மையிலேயே நல்ல ஞானம் உள்ளவர். ஆர்டி பர்மன், லட்சுமிகாந்த் பியாரிலால், உஷா கன்னா, பப்பிலஹரி என பல இந்தி இசை அமைப்பாளர்களுடன் பணியாற்றிய தமிழ்க் கவிஞன் அநேகமாக நானாகத்தான் இருப்பேன். அந்த அனுபவங்களைத்தான் குஷ்பு மூலம் என்னிடம் கேட்க வைத்தார்கள். வாசகர்களுக்குத் தெரியாத பல சுவாரஸ்யமான விஷயங்களை இதில் சொல்லியிருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ!


என் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவிப்பாக சேர்த்துள்ளது தவறு என்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரான முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசராணை பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. அதில் கடந்த அக்டோபர் மாதம் 21,22 மற்றும் நேற்றும், இன்றும் ஆஜரான முதல்வர் ஜெயலலிதா இந்த வழ்ககு தொடர்பான 1,339 கேள்விகளுக்கு பதில் அளித்தார். இத்துடன் ஜெயலலிதாவிடம் விசராணை முடிந்துள்ளது. இன்று ஆஜரான ஜெயலலிதா 192 கேள்விகளுக்கு பதில் அளித்ததுடன் எழுத்துப்பூர்வமான விளக்கமும் தந்துள்ளார். விசாரணையின் போது ஜெயலலிதா கூறியது குறித்து அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா விளக்குகையில், 

மக்கள் மத்தியில் எனக்கு இருக்கும் மதிப்பைக் குறைக்கவே இந்த சொத்துகுவிப்பு வழக்கு தொடரப்பட்டது. இது ஒரு ஜோடிக்கப்பட்ட வழக்கு. இது குறித்து ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி கொடுத்த புகார் தவறானது. நான் அந்த காலத்தில் 120க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளேன். அப்படி நடிக்கையில் வகை, வகையான சேலைகள், அதற்கு மேட்சிங்காக செருப்புகள், நகைகள் எல்லாம் வாங்கினேன். சினிமாவில் ஒரு முறை பயன்படுத்தியதை மீண்டும் பயன்படுத்த மாட்டார்கள். 

அப்படி நான் நடிக்கும் காலத்தில் வாங்கிய பொருட்களை எல்லாம் சொத்துகுவிப்பு வழக்கில் சேர்த்துள்ளனர். கடந்த திமுக ஆட்சியின்போது முன்னாள் அமைச்சர்கள் மாதவன் மற்றும் ஆற்காடு வீராசாமி ஆகியோர் இந்த வழக்கு விசாரணையில் தலையிட்டு வழக்கை திசைதிருப்ப முயன்றனர். போயஸ் கார்டனில் உள்ள வீட்டைத் தவிர நான் வேறு எந்த சொத்தையும் வாங்கவில்லை.

அரசு அதிகாரிகளை நான் என் சொந்த விஷயங்களுக்காக பயன்படுத்தினேன் என்ற கலெக்டரின் சாட்சியமும் பொய். இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் எனது வளர்ப்பு மகன் சுதாகரனின் திருமணத்தின்போது இசை நிகழ்ச்சி நடத்தினார். ஆனால் அவர் அதற்கு பணம் எதுவும் வாங்கவில்லை. மேலும் இந்த சொத்து குவிப்பு தொடர்பான நல்லம்ம நாயுடுவின் விசாரணையும் உண்மையன்று என்று ஜெயலலிதா கூறியதாக ஆச்சார்யா தெரிவித்தார்.

காணாமல் போகும் செல்போன்களை செயலிழக்க செய்ய திட்டம் தயார் !


திருட்டு மற்றும் காணாமல் போகும் செல்போன்களை செயலிழக்கச் செய்ய தேவையான பரிந்துரைகளை  டிராய்' விரைவில் வெளியிடும் என தெரிகிறது. அது மட்டுமல்லாமல் அமைப்பு சாரா செல்போன் சந்தையை கட்டுக்குள் கொண்டு வருவதும் டிராயின் முக்கிய நோக்கமாக உள்ளது.செல்போன்களுக்கு, சர்வதேச செல்போன் அடையாள எண் (ஐ எம் இ ஐ) அதன் தயாரிப்பாளர்களால் வழங்கப்படுகிறது. இந்த எண் செல்போன் சேவை நிறுவனங்களின் பதிவேட்டில் பதிவாகி இருக்கும். இவ்வகை எண்களை கொண்டு திருடப்படுகிற அல்லது காணாமல் போகிற ஒரு செல்போனின் இருப்பிடத்தை அடையாளம் கண்டு அதனை செயலிழக்க செய்ய முடியும்.

இதன் சாத்தியக்கூறுகளை ஆய்ந்து தகவல் தருமாறு, கடந்த ஆண்டு செல்போன் தயாரிப்பாளர்கள் மற்றும் சேவை நிறுவனங்களை டிராய் கேட்டிருந்தது. தற்போதைய வசதிகளை பயன்படுத்தி, காணாமல் போகும் செல்போன்களை செயலிழக்க செய்ய இயலாது. ஆனால் சிம் கார்டுகளை செயலிழக்க செய்வது சாத்தியம் என டிராய் அமைப்புக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதைத்து விளையாட மக்கள் நலப்பணியாளர்கள் கால்பந்து அல்ல!



மக்கள் நலப்பணியாளர்களை மீண்டும் வேலையில் சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து, தமிழக அரசு செய்திருந்த மேல்முறையீடு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கையை அடுத்து மக்கள் நலப்பணியாளர்கள் 13 ஆயிரத்து 500 பேருக்கும் மீண்டும் வேலை கிடைக்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது. மக்கள் நலப்பணியாளர்களை வேலையில் இருந்து டிஸ்மிஸ் செய்து தமிழக அரசு 09.11.2011 அன்று பிறப்பித்த உத்தரவு உயர்நீதிமன்ற ஆணைப்படி ரத்து செய்யப்பட்டுள்ளது. பணியில் இருந்து நீக்கப்பட்ட பணியாளர்கள் மனுவை கடந்த வாரம் விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுகுனா, அனைவரையும் மீண்டும் வேலையில் சேர்க்கும்படி உத்தரவிட்டிருந்தார். 

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு செய்திருந்த மேல்முறையீட்டு மனு மீது, தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒரு அரசு நியமித்த ஊழியர்களை இன்னொரு அரசு நீக்க வேண்டுமா? ஆட்சி மாறினால் அரசுப் பணியாளர்களை மாற்ற வேண்டுமா? ஒவ்வொரு முறையும் உதைத்து விளையாட மக்கள் நலப்பணியாளர்கள் கால்பந்து அல்ல என்று கூறினர். இந்த வழக்கை தனி நீதிபதியே விசாரித்து முடிப்பார் என்று தெரிவித்த நீதிபதிகள், தமிழக அரசு செய்திருந்த மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நலப்பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் செல்லப்பாண்டியன், மக்கள் நலப்பணியாளர்கள் அரசு ஊழியர்கள். அவர்களை கால்பந்தைப் போல எட்டி உதைக்கக் கூடாது. அவர்கள் நீதிமன்றத்துக்கு வருவதை கண்டு வருத்தப்படுகிறேன் என்று நீதிபதி தெரிவித்தார் என்றார். 

மக்கள் நலப்பணியாளர்கள் முன்னேற்ற சங்கம்த்தின் தலைவர் மதிவாணன், மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்ற சென்னை நீதிமன்ற நீதிபதி சுகுனாவின் உத்தரவை, உடனடியாக அமுல்படுத்திவிட்டு, அரசு தரப்பு வாதங்களை அந்த நீதிமன்றத்திலேயே தெரிவிக்கலாம் என்றும், மக்கள் நலப்பணியாளர்களை ஆட்சி மாறும்போதெல்லாம் கால்பந்து போல பந்தாடிக்கொண்டிருக்கிறீர்கள். இது கண்டனத்துக்கு உரியது. மக்கள் நலப்பணியாளர்களும், சாதாரண கிராமத்தைச் சேர்ந்த அப்பாவி ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த மனிதர்கள். இவர்களை பாதுகாக்க வேண்டியது பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. எனவே உயர்நீதிமன்ற நீதிபதி சுகுனாவின் தீர்ப்பை உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் கூறினர்.
தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி ஆனதால், மக்கள் நலப்பணியாளர்கள் 13 ஆயிரத்து 500 பேருக்கும் மீண்டும் வேலை கிடைக்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது. எனினும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யக் கூடும் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.

இதே நாள்...


  • இந்திய ஆன்மிகவாதி சத்யசாய் பாபா பிறந்த தினம்(1926)
  •  கவிஞர் சுரதா பிறந்த தினம்(1921)
  •  அரியலூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது(2007)
  •  முதலாவது லைஃப் இதழ் வெளியிடப்பட்டது(1936)

சுகப்பிரசவம் சுலபம்...

கருத்தரிப்பதற்கு முன்பிருந்தே நடை பயிற்சி, சமச்சீரான உணவு என, உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும். கர்ப்ப காலத்தில் சோர்ந்து படுக்காமல், உடம்பிலுள்ள தசைகளுக்கும், மூட்டுகளுக்கும் வேலை கொடுக்கும் வகையில், சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்.ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் என, எந்தப் பிரச்னைகளும் இல்லாமல், நம்மால் பிரசவிக்க முடியும் என்ற மன தைரியத்துடனும், அதற்கு ஏற்ற உடல் வலுவுடனும் இருந்தால், 40 வயதில் கூட, தலைப்பிரசவத்தை சுகப் பிரசவம் செய்து கொள்ள முடியும்.பிரவசத்தின் போது வலியைக் குறைக்கவும், இப்போது பல வழிமுறைகள் வந்துவிட்டன. சில பெண்களுக்கு, ஒன்பதாவது மாதம் வரை இருந்த மன, உடல் வலு, பிரசவ வலி எடுத்தவுடன் பறந்துவிடும். அந்த பயம் தேவையில்லை.லேபர் வார்டில், மருத்துவரின் வழிகாட்டலின்படி நடந்து, மருத்துவருக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தால், பிரசவம் சுலபமாகும். சக்தியை எல்லாம், அழுது கத்துவதில் செலவழிக்கக் கூடாது.எந்தப் பெண்ணிற்கும், தொடர்ச்சியாக பிரசவ வலி எடுக்காது. 45 வினாடிகள் வலி எடுத்தால், அடுத்த மூன்று நிமிடங்களுக்கு வலி இருக்காது.மீண்டும், 45 வினாடிகள் வலி, மூன்று நிமிடம் வலியின்மை என்று தொடரும். அந்த மூன்று நிமிடங்களில், கர்ப்பிணிகள் தங்களை வலியில் இருந்து ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம்.ஒரு கர்ப்பிணியின் இடுப்பு எலும்பு அமைப்பு சரியாக இருந்து, குழந்தையின் தலை அளவும் சரியாக இருந்தால், அந்த சுகப்பிரசவம் சுலபமாக முடிந்துவிடும்.இயற்கையின் இன்னுமோர் ஆச்சர்யம் பிரசவம்!

மும்பை விமானநிலையத்திற்கு அச்சுறுத்தல்!


மும்பை ஏர்போர்ட்டுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பது உண்மை தான் என்று ராஜ்யசபாவில் இதனை மத்திய உள்துறை இணை அமைச்சர் முல்லைப்பள்ளி ராமச்சந்திரன் தெரிவித்தார். ராஜ்யசபா ஒத்தி வைக்கப்படும் முன்னதாக மும்பை விமான நிலையம் மீது வான்வழி தாக்குதல் நடத்தும் அச்சுறுத்தல் இருப்பதாக கூறப்படுகிறதே உண்மைதானா என்று கேள்வி எழுப்பியபோது இதனை அவர் உறுதி செய்தார். அவர் அளித்த பதிலில் , ஆம் இது போன்ற கடந்த காலங்களில் புலனாய்வு தங்களுக்கு சில கோப்புகளை தெரிவித்துள்ளது. இது உண்மைதான். அவ்வப்போது எங்களுக்கு புலனாய்வு நிறுவனம் தரும் தகவலில் இதுவும் ஒன்றுதான் . இது முக்கிய விஷயமாக அரசு எடுத்து சம்பந்தப்பட்ட பாதுகாப்பு துறையினருடன் பகிரப்பட்டுள்ளது. அத்துடன் ஏர்போர்ட்டுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. என்றார்.

சுனாமி தாக்குதலை அறியும் ஒரு முன்னோடித் திட்டம்!


அளவு கடந்த வெப்பம், பனி, காலம் தவறிய தொடர்மழை, பூகம்பம், சுனாமி என்ற ஆழிப்பேரலை ஆகியவை, அடிக்கடி ஏற்பட்டு வருகின்றன. இதுபோன்ற இயற்கை பாதிப்பால், பல லட்சக்கணக்கானோர் பலியாகி வருகின்றனர்.

குறிப்பாக சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களால், பல அப்பாவி உயிர்கள் பறிபோகின்றன. கடந்த 2004ல், டிசம்பர் மாதம் இந்தோனேசியா அருகில், கடலுக்குள் ஏற்பட்ட பூகம்பம், சுனாமியாக உருமாறி, இந்திய கடற்கரை ஓரங்களை பலமாக தாக்கியது. இதில் இந்திய கடற்கரையோர மாவட்டங்களில் வசித்த, பல ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.இதைத் தொடர்ந்து, சுனாமி தாக்குதலை முன்கூட்டியே அறிந்துக் கொள்ள, மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. மத்திய அரசின் கடல் வளத்துறையின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி நிறுவனமான, "இந்தியன் நேஷனல் சென்டர் பார் ஓஷன் இன்பர்மேஷன் சர்வீஸ்' (இன்காய்ஸ்) மற்றும் இந்திய கடல் வளத்துறை தொழில் நுட்பக் கழகம் (என்.ஐ.ஓ.டி.,) ஆகியவை இணைந்து சுனாமி தாக்குதலை முன்கூட்டியே அறிந்துக் கொள்ளும் வகையிலான, ஒரு தொழில்நுட்பத்தை ஏற்படுத்தியுள்ளன.

இது குறித்து, என்.ஐ.ஓ.டி., யின் இயக்குனர் ஆத்மானந்த் கூறியதாவது:சுனாமியை அறிய, கடலுக்குள், இந்தியாவை சுற்றி, குறிப்பிட்ட தொலைவில், ஐந்து இடங்களில், "பாட்டம் பிரஷர் ரெக்கார்டர்கள்' நிறுவப்பட்டுள்ளன. கடலில் ஏற்படும் பூகம்பத்தின் அதிர்வுகளையும், அதனால் ஏற்படும் அழுத்தத்தையும் பதிவு செய்யும். இத்தகவல்கள், கடலின் மேல் மட்டத்தில் மிதந்துக் கொண்டிருக்கும் "சுனாமிபாய்ஸ்' என்ற கருவிக்கு அனுப்பப்படும். அங்கிருந்து அனைத்து தகவல்களும் செயற்கைக் கோள் மூலம், அடுத்த ஏழு நிமிடங்களில், கட்டுப்பாட்டு அறைக்கு கிடைக்கும். கட்டுப்பாட்டு அறை, அத்தகவல்களை உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பும். அங்கிருந்து சுனாமி எச்சரிக்கை வெளியிடப்படும்.கடந்த 2005ம் ஆண்டு முதல் இந்த தொழில்நுட்பம் மூலம் தகவல்கள் பெறப்படுகின்றன. கடலில் ஏற்படும் அதிர்வுகளை, வரைபடங்களாக பெறப்படுகின்றன. அவற்றின் மூலம் சுனாமி தாக்குதலின் தன்மை குறித்து அறியப்படுகிறது. இன்றுவரை தவறான தகவல் ஒருமுறை கூட அளித்ததில்லை. மேலும், இந்தியாவை சுற்றி, கடலில் பொருத்தப்பட்டுள்ள "டேட்டாபாய்ஸ்கள்' மூலமாக தட்பவெட்ப நிலை குறித்த தகவல்களும் அறிந்து கொள்ள முடிகிறது.

இந்தியாவின் சுனாமி எச்சரிக்கை குறித்த புதிய தொழில்நுட்பத்தை, "இன்டர்நேஷனல் ஓஷயானோ கிராபிக் கமிஷன் ( ஐ.ஓ.சி.,)' அங்கீகரித்து, இந்தியாவை மண்டல சுனாமி எச்சரிக்கை மையமாக அறிவித்துள்ளது. மியான்மார், இந்தோனேஷியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கும் சுனாமி குறித்த எச்சரிக்கைகளை, இந்தியா அளித்து வருகிறது. இந்திய கடலோரப் பகுதிகளில் சுனாமி தாக்குதலை முன்கூட்டியே அறிந்துக் கொள்ள முடியும். எனவே, இந்த தொழில்நுட்ப முறை மூலம், இந்தியாவில் சுனாமி அச்சம் அகற்றப்படுகிறது. விரைவில், மேலும் எட்டு இடங்களில் பாட்டம் பிரஷர் ரெக்கார்டருடன், சுனாமி பாய்ஸ் பொருத்தப்படும் பணி நடந்து வருகிறது. அரபிக் கடல் பகுதியில் சுனாமி பாய்ஸ்கள் பொருத்துவதில் கடற் கொள்ளையர்களால் சிக்கல் உள்ளது.இவ்வாறு என்.ஐ.ஓ.டி., இயக்குனர் ஆத்மானந்த் தெரிவித்தார்.

சுனாமி தகவல்களை தரும் "பாய்ஸ்' கருவி :சுனாமி "பாய்ஸ்' கருவி, என்.ஐ.ஓ.டி., மூலமாகவே அதிநவீன தொழில்நுட்ப முறையில் தயாரிக்கப்பட்டு வருகிறது. கடலில் மிதக்கும் தன்மை கொண்ட பொருட்களால் சுனாமி பாய்ஸ் உருவாக்கப்படுகிறது. ஒரு இயந்திரம் தயாரிக்க, 40 லட்சம் ரூபாய் செலவாகிறது. இந்திய கடலோரப் பகுதிகளை சுற்றி, ஐந்து இடங்களில், இந்த கருவி மிதக்க விடப்பட்டுள்ளது. கடலில் ஒரு சுனாமி"பாய்ஸ்' கருவி பொருத்துவதற்கு குறைந்த பட்சம், எட்டு மணி நேரமாகிறது.இதற்காக என்.ஐ.ஓ.டி.,யை சேர்ந்த, 20க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் குழு ஒன்று செயல்பட்டு வருகிறது. "பாட்டம் பிரஷர் ரெக்கார்டர்களில் இருந்து தகவல் பெறும் சுனாமி "பாய்ஸ்' மிக முக்கிய பங்காற்றுகிறது. பாட்டரி மூலம் இயங்கும் இந்த சுனாமி பாய்ஸ்கள், ஆண்டிற்கு ஒரு முறை, சுழற்சி முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஒரு முறை சர்வீஸ் செய்வதற்கு, ஒரு மாத காலம் ஆகும். ஒரு சுனாமி பாய்ஸ் பழுதடைந்தாலும் மற்ற கருவிகள் மூலம் தகவல்கள் கிடைத்துக் கொண்டே இருக்கும். ஆனால், அதன் முக்கியத்துவம் தெரியாமல் சுனாமி பாய்ஸ் கருவியை, மீனவர்கள், அதன் மீது படகுகளை கட்டி சேதப்படுத்துகின்றனர். எனவே, "பாய்ஸ்'களை காப்பாற்றும் வகையில், மீனவர்களுக்கு அந்தந்த பிராந்திய மொழி மூலம், மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டும் வருகின்றன.

பார்த்ததில் பிடித்தது!


நாம் ஏன் DAM 999 படம் பார்க்க கூடாது ?


மகஇக-வின் போராட்டம்னாலே...!

மகஇக-வினரின் போராட்டம். இன்று திருச்சியில் நடந்தது. முதல்வர் வேடம் அனிந்தவர் ‘மத்திய  அரசு நிதிஉதவி இல்லாததால்தான் இந்த விலையேற்றம்’ என விளக்கி பேசுகிறார். சுற்றியிருந்தவர்கள் ‘அடிப்பாவி குழைந்தைங்க குடிக்கிற பாலுககும் உலைவச்சிட்டியேடி மொத்துறாங்க... மகஇக-வின் போராட்டம்னாலே தனி ரகம்தான்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...