|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

28 January, 2012

VIP - Tamil Movie -


Movie of the Day...சிறைச்சாலை...


ரதசப்தமியன்று சூரியனை எவ்வாறு வழிபட வேண்டும்?


சூரியனுக்குரிய வடதிசைப்பயணம் துவங்கும் மாதம் தை. இம்மாதத்தில் வரும் வளர்பிறை சப்தமியன்று ரதசப்தமி கொண்டாடப்படுகிறது. இந்நாளில், சூரியனின் தேர் மேற்கு நோக்கி திரும்புவதாக ஐதீகம். சூரியன் வலம்வரும் பொன்மயமான தேரின் குதிரைகள் ஏழு என்பதால், சூரியனிடமிருந்து ஏழு பிராணங்களும், ஏழு ஜ்வாலைகளும், ஏழு சமித்துகளும், ஏழு ஹோமங்களும் தோன்றி இதயக்குகையில் ஒடுங்குகின்றன என்று வேதங்கள் சொல்கின்றன. பொதுவாக, தேருக்கு எட்டு குதிரைகள் பூட்டுவார்கள். ஆனால் சூரியனின் தேருக்கு ஏழு குதிரை மட்டுமே உள்ளது. ஒளியின் வண்ணங்கள் ஏழு. அதுவே ஏழு குதிரைகள் என்று கூறப்படுகிறது. அவை: காயத்ரி, பிரகுஹதி, உஷ்ணிக், ஜகதி, திரிஷ்டுப், அனுஷ்டுப் மற்றும் பங்கி என்பனவாகும். ரத சப்தமி அன்று சூரியனுக்கு விசேஷமான ஒளி பிறப்பதால், அன்று விரதம் கடைப்பிடித்து சூரிய பகவானை வழிபட வேண்டும் என்று சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன.  

ரதசப்தமி குளியல்: சூரிய உதயத்துக்குமுன் எழுந்து சூரியனுக்குப் பிடித்த எருக்க இலைகளில் ஏழு எடுத்து, அத்துடன் அட்சதையும்(பச்சை அரிசி சிறிதளவு), சிறிதளவு விபூதியும் தலையின்மீது வைத்துக்கொண்டு கிழக்குத் திசை நோக்கி நீராட வேண்டும். சுமங்கலிகள் குளிக்கும்போது, ஏழு எருக்க இலைகளை அடுக்கி, மேல் இலையில் சிறிது மஞ்சள் தூளும், அட்சதையும் வைத்து, உச்சந்தலையில் வைத்து நீராட வேண்டும். ஆண்கள் அட்சதை மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும். பூஜை அறையில் தேர்க்கோலமிட்டு, சுற்றிலும் செங்காவிப்பட்டை இட்டு சூரியபகவானுக்கு சர்க்கரைப் பொங்கலும் வடையும் படைத்து வழிபட வேண்டும். இந்த வழி பாட்டால் ஆரோக்கியமும், மாங்கல்ய பாக்கியமும் நிலைத்திருக்கும் என்பது ஐதீகம்.

நல்ல நோட்டா... கள்ள நல்லநோட்டா...?

சமீபத்தில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடும் கும்பலை கைது செய்திருக்கிறது போலீஸ். அப்படியென்றால் நம் கையில் வைத்திருக்கும் எந்த நோட்டும் கள்ளநோட்டாக இருக்கலாம். எப்படி தெரிந்துகொள்வது? நாம் பயன்படுத்தும் பணத்துக்கு உத்தரவாதம் அளிக்கக்கூடிய சென்னையிலுள்ள ரிசர்வ் பேங்க் இந்தியாவின் (Reserve Bank of India) தலைமை அலுவலக கருவூல பகுதி அலுவலர்களிடம் கேட்டபோது,  “நல்லநோட்டு...தனிச்சிறப்பு வாய்ந்த காகிதமும் நன்கு கூழாக்கப்பட்ட பருத்தியிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த நோட்டுகளை எண்ணும்போது 'பட பட'வென சத்தம் உண்டாகும். ஆனால், கள்ளநோட்டில் தரம் குறைந்த காகிதம் பயன்படுத்தப்படுவதால் தடிமனையும் தரத்தையும்  வைத்து கண்டுபிடிக்கலாம். இரண்டாவது... புற ஊதா விளக்கு ஒளியில் (அல்ட்ரா வைலட் லைட் எனப்படும் விளக்குகள் தனியாகவே இருக்கின்றன!) நன்றாக ஜொலிக்கும் மையினால் (fluorescent Ink) நல்லநோட்டு அச்சடிக்கப்படுகிறது. பணத்தில் உள்ள நம்பர்களுக்கு இடையேயான இடைவெளி ஒரே சீராக இருக்கும். மேலும், சிவப்பு நிறத்தில் பெரிதாக பளிச்சென்று தடிமனாக இருக்கும். 1000 ரூபாய் நோட்டில் மட்டும் வலது மேல் பாகத்தில் கருநீல நிறத்திலும், இடது புறத்தின் கீழ்ப்பகுதியில் சிவப்புநிறத்திலும் அச்சடிக்கப்படுகிறது.  

ஆனால், கள்ளநோட்டில் பெரும்பாலும், வரிசை எண்கள் ஒரே சீராக இல்லாமல்...எண்களில் சைஸ் சிறியதாகவும்...இடைவெளி விட்டும் இருக்கலாம். மேலும், கள்ளநோட்டுகள் புற ஊதா விளக்கொளியில் (அல்ட்ரா வைலட் லேம்ப்) ஜொலிக்காது. மூன்றாவது...500....1000 ரூபாய் நோட்டுகளில் மத்தியில் மதிப்பு இலக்கம் பச்சை நிறத்தில் அச்சடிக்கப்பட்டிருக்கும். சற்றே சாய்த்துப்பார்த்தால் அந்த பச்சை நிறம் நீல நிறமாக மாறித்தெரியும். கள்ளநோட்டில் பச்சைநிறம் நீலநிறமாக தெரிய வாய்ப்பில்லை. நான்காவது...மகாத்மா காந்தி படத்திற்கு இடதுபுறம் இருக்கும் 100, 500,1000 ரூபாய் நோட்டுகளில் பாதுக்காப்பு இழை சாளரம் சாளரமாகத் தெரியும். மேலும்...வெளியே பாதி தெரிந்தும், உள்ளே பாதி பொதிந்தும் இருக்கும். வெளிச்சத்தில் தூக்கிப்பார்த்தால் ஒரே கோடாகத் தெரியும். பாரத் என்று ஹிந்தியிலும், RBI (RESERVE BANK OF INDIA-வின் சுருக்கம்!) என்று ஆங்கிலத்திலும் மாறி மாறி அச்சடிக்கப்படிருக்கும். 1000 ரூபாய் நோட்டில் கூடுதலாக... 1000 என்ற இலக்க எண்ணும் அதில் அச்சடிக்கப்பட்டிருக்கும். 2005 க்கு பின்பு அச்சடிக்கப்பட்ட நோட்டுகளில் பச்சையாக தெரியும் இழை வெவேறு கோணங்களில், பார்க்கும்போது நீல நிறமாக தெரியும். அல்ட்ரா வைலட் வெளிச்சத்தில் முன்பக்க எழுத்துக்களும் சேர்த்து மஞ்சள் நிறத்தில் ஜொலிக்கும். ஆனால், கள்ளநோட்டிலோ வெள்ளி நிற பெயிண்ட் ஒட்டப்பட்டிருக்கலாம். வெளிச்சத்தில் தூக்கிப்பார்த்தால் ஒரே கோடாக தெரியாது. பாதுகாப்பு இழை போன்ற ஒன்றை ஒட்டியிருப்பார்கள். கறுப்புக்கோடு வரைந்திருப்பார்கள். 

பாதுகாப்பு இழையில் நிறம் மாறும் தன்மை இருக்காது. இதெல்லாம் மிக உன்னிப்பாக கவனித்துப்பார்த்தால் தெரியும்.  ஐந்தாவது...ஒளி ஒதுக்க முறையில் மகாத்மா காந்தியின் உருவம் சினிமா ஸ்லைடுபோல் தத்ரூபமாக தெரியும். நகல் (செராக்ஸ்) எடுக்கமுடியாத பல்திசைகோடுகளும் இருப்பதை மகாத்மாகாந்தியின் உருவத்தை வெளிச்சத்தில் பார்த்தால் தெரியும். காகித தயாரிப்பு நிலையிலேயே, நீர்குறியீடும் (வாட்டர்மார்க்) ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், கள்ள நோட்டிலோ உண்மையான நோட்டை காப்பியெடுக்கும் முயற்சியில் மகாத்மா காந்தியின் படம் தெளிவாக இல்லாமல்...கார்ட்டூன் படம்போல் இருக்கலாம். வெளிச்சத்தில் பணத்தை தூக்கிப்பார்த்தால் இந்த வித்தியாசத்தை தெரிந்துகொள்ளலாம். ஆனால், இதையெல்லாம்...குறைந்த பணத்தை கையில் வைத்திருக்கும்போது நாம் தெரிந்துகொள்ளவேண்டியது. ஆயிரக்கணக்கில் பணத்தை எடுத்துக் கொண்டுபோகும்போது வங்கிகள் அதற்கான தரமான மெஷின்களை வைத்து கள்ளநோட்டா நல்லநோட்டா என்று கண்டறிய வேண்டும்.

மின்சாரகனவு...தமிழ் MOVIE


பீட்ரூட் கீரை...

அன்றாட உணவில் பயன்படுத்தப்படும் காய்கறியான பீட்ரூட்டில் இருந்து கிடைக்கும் இலைகளான பீட்ரூட் கீரைகள் ஊட்டச்சத்து நிறைந்ததாகும். இது மருத்துவ குணம் கொண்டதாகவும் உள்ளது. பீட்ரூட்டை உணவில் சேர்த்துக்கொள்கின்ற அளவிற்கு பீட்ரூட் கீரையை நாம் பயன்படுத்துவதில்லை. ஆனால் ஐரோப்பியர்கள் இக்கீரையை விரும்பி தங்கள் உணவை சேர்த்துக் கொள்கின்றனர். இது ஐரோப்பா கண்டத்தை பிறப்பிடமாகக் கொண்ட போதிலும் சமீபத்தில்தான் உலகம் முழுவதும் பயிரிடப்பட்டு வருகிறது.ஐரோப்பாவிலும், வடஅமெரிக்காவிலும், கீரைக்காகவே பீட்ரூட்டைப் பயிரிடுகின்றனர்.. சைபீரியாவில் கால்நடைகளின் உணவிற்காகவே முற்காலத்தில் இந்த கீரையும் கிழங்கும் பயிரிடப்பட்டது எனச் சொல்லப்படுகிறது. கோழிகள் இக்கீரையை விரும்பி உண்கின்றன. எனவே இது ஒரு கோழித் தீவனமாகவும் பயன்படுகின்றன

சுவையான கீரை பீட்ரூட்டுக்கு சுகந்தா என்ற என்ற வேறு பெயரும் உண்டு. இந்தியாவில் கூட கிழங்குக்காக மட்டுமின்றி கீரைக்காகவும் இதனை பயிரிடுகின்றனர். இக்கீரையை பொரியலாகவோ, துவரம் பரும்புடன் சேர்த்து கூட்டாகவோ செய்யலாம். பாசிப்பயறு, தட்டைப்பயிறு, முதலியவற்றுடன் சேர்த்துக் கூட்டுக்கறிகள் ஆக்கலாம். இப்பயிர்களுடன் சேர்க்கப்பட்ட கீரை மிகவும் சுவையாக இருக்கும். சாலட் செய்யவும் இக்கீரை பயன்படுகிறது.

கரோட்டின் உயிர்சத்து பீட்ரூட் கீரைகளில் நரம்புகள் அதிகம் உள்ளது. இந்நரம்புகள் அதிகம் உள்ளது. இந்நரம்புகளில் கரோட்டின் எண்ணும் உயிர்சத்து அதிகம் உள்ளது. இந்த கரோட்டின் வைட்டமின் ஏ சத்தை அதிகம் சேர்த்து வைக்கின்றன. எனவே இதனை வைட்டமின் ஏயின் சேமிப்புப் பட்டரை என்றே கூறலாம். பச்சையாக உண்பதால் வைட்டமின் ஏ நேரடியாக நம் உடலில் சேருகிறது. இதனை கத்தியைக் கொண்டு பறிக்கக் கூடாது. கையால் திருகி பறிக்கவேண்டும். 

புரதம், தாது உப்புக்கள் பீட்ரூட் கீரை ஒரு சிறந்த உணவாக அமைவதோடு புரதம் மற்றும் தாது உப்புகள் உயிர்சத்துக்கள் நிறைந்த கீரையாகும். தையாமின், ரிபோஃப்ளோவின், நிக்கோடின் அமிலம், வைட்டமின் சி போன்றவை அதிகம் உள்ளது. பீட்ரூட் கீரை சிறுநீரைப் பெருக்கி அதனை மிதமாக வெளியேற்றுகிறது. மலத்தை இளக்கி வெளியேற்றும் ஆற்றல் பெற்றது. மலச்சிக்கலைத் தவிர்க்கும் இக்கீரை கல்லீரலுக்கு வலிவு கொடுக்கிறது.

கண்நோய்கள் குணமாகும் உடலில் ஏற்படும் எரிச்சலுக்கு இந்த இலையில் சாற்றினை தடவ எரிச்சல் தணியும். வைட்டமின் ஏ அதிகமாக இருப்பதால் கண் நோய்களை இக்கீரை போக்குகிறது. கண்ணுக்கு தெளிவையும், பார்வையும், கூர்மையும் ஏற்படுகிறது. உடற்சூட்டால் ஏற்படும் கண் வீக்கம், அழற்சி முதலியவற்றுக்கு இக்கீரையின் சாற்றை கண் இமைகளில் பூச குணம் கிடைக்கும். கீரையை உணவாக உட்கொண்டாலும், கண் நோய்கள் குணமடையும் என்றும் உணவியல் வல்லுநர்கள் 

கர்ப்பத்தடை மாத்திரைகளால் ஞாபகசக்தி பாதிக்கும்!



குழந்தைப் பிறப்பை தள்ளிப்போடுவதற்காக பெண்கள் உட்கொள்ளும் கருத்தடை மாத்திரைகள் அவர்களின் நினைவாற்றலுக்கு வேட்டுவைக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. படிப்படியாக இது மறதி நோயை தோற்றுவிக்கும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். திருமணமான இளம் தம்பதியர் ஆனாலும் சரி, ஒரு குழந்தைக்கும் மற்றொரு குழந்தைக்கும் இடைவெளி விடுவதென்றாலும் சரி ஏராளமான பெண்கள் கருத்தடை மாத்திரைகளை உட்கொள்கின்றனர். இந்த மாத்திரைகளால் எண்ணற்ற பக்கவிளைவுகளை பெண்கள் சந்திக்க வேண்டியுள்ளது.

வெள்ளைப் படுதல் பாதிப்பு கர்ப்பம் அல்லது கருத்தடை மாத்திரைகளால் ஹார்மோன் அளவுகள் மாறி உறுப்புகளில் ஒருவித காளான்கள் வளரக்கூடிய சூழ்நிலை உண்டாகிறது. இதனால் பிறப்பு உறுப்பில் அரிப்பு, வெள்ளைப்படுதல் போன்றவை ஏற்படுகின்றன.

மறதிநோய் ஏற்படும் மேலும் நீண்ட நாட்கள் கருத்தடை மாத்திரைகள் உட்கொள்வது பெண்களின் நினைவாற்றலை பாதிக்கும். மறதி நோயை உருவாக்கும் என சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஷாவ்ன் நீல்சன் குழுவினர் கார் ஓட்டும் போது விபத்தில் சிக்கிய பெண்களிடம் ஆய்வு மேற் கொண்டனர். அப்போது அவர்களின் நினைவாற்றல் திறன் குறைந்து இருப்பது கண்டறியப்பட்டது. இதற்கு காரணம் அவர்கள் அனைவரும், கர்ப்ப தடை மாத்திரையை பயன்படுத்துபவர்கள் என்பது தெரியவந்தது. இந்த மாத்திரைகள் பெண்களின் ஹார்மோன் உற்பத்தியை தடை செய்கின்றன. அதன் மூலம் நினைவாற்றல் பாதித்து மறதி நோய் ஏற்படுவதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். எனவே கருத்தடை மாத்திரைகளை உட்கொள்ள நினைக்கும் பெண்கள் இனி கவனமுடன், மருத்துவர் ஆலோசனை பெற்று எடுத்துக்கொள்ளவேண்டும் 

சென்னையில் 3 கல்லூரிகளின் அங்கீகாரங்களை ரத்துசெய்ய பரிந்துரை!



சென்னை நகரிலுள்ள 3 கலை-அறிவியல் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்துசெய்ய, சென்னைப் பல்கலையின் சிண்டிகேட் பரிந்துரை செய்துள்ளது.போதுமான ஆசிரியர்கள் இல்லாமை மற்றும் மோசமான உள்கட்டமைப்பு வசதி ஆகிய காரணங்களால், கோயம்பேட்டிலுள்ள A A Arts & Science College, முகப்பேர் கிழக்கிலுள்ள J A Arts and Science காலேஜ், மற்றும் உத்தண்டியிலுள்ள Poonga College of Arts ஆகிய கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்துசெய்ய, பல்கலைக்கழக சிண்டிகேட் பரிந்துரை செய்துள்ளதாக, துணைவேந்தர் திருவாசகம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, "கடந்த கல்வியாண்டின்போதே, இக்கல்லூரிகளின் அங்கீகாரங்களை ரத்துசெய்யும்படி பரிந்துரை செய்ய, சிண்டிகேட் முடிவுசெய்தது. மேலும், அக்கல்லூரிகளில் உள்கட்டமைப்பு மிகவும் மோசமாக உள்ளதாகவும், பல்வேறு பாடங்களுக்கு போதுமான ஆசிரியர்கள் இல்லை எனவும், பெற்றோர்களும், மாணவர்களும் அக்கல்லூரிகள் மீது புகார் அளித்திருந்தனர்.எனவே, இப்புகார்கள் குறித்து உண்மையை ஆராய, 3 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவில், அப்புகார்கள் உண்மை என்று உறுதிசெய்யப்பட்டு, இதேபோன்றதொரு மோசமான சூழல்களிலேயே, அக்கல்லூரிகள் தொடர்ந்து 10 ஆண்டுகள் இயங்கி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, இறுதியாக, இந்த ரத்துசெய்யும் பரிந்துரை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், அக்கல்லூரிகளில் படித்த மாணவர்கள் வேறு கல்லூரிகளுக்கு மாற்றப்பட்டு விட்டார்கள்.

அன்னியமாகிப்போன, நம் நாட்டுப்புற கலையையும் கற்பித்து தர...




சுவையாக கொடுக்க வேண்டிய கல்வியை, சுமையாக கொடுப்பதன் காரணமாகவும், மதிப்பெண்களே வாழ்க்கையாகிப் போனதாலும், இப்போது உள்ள குழந்தைகளுக்கு அறிவு வளர்கிறது; ஆனால், உடல் தேய்கிறது.விளையாட்டு என்பது, கம்ப்யூட்டர் அல்லது "டிவி' யோடு முடிந்து விடுகிறது. பேச்சு என்பது செல்போனில் மட்டுமே. குறுஞ்செய்திதான், சுவாசம்.எட்ட இருக்க வேண்டிய எலக்ட்ரானிக் சாதனம், அளவு கடந்த முறையில் வயது வித்தியாசம் பாராமல், கிட்டவந்ததும் அல்லாமல், இப்போது பள்ளிக் குழந்தைகளின் ஆரோக்கியத்தை முடக்கவும் செய்கிறது. குழந்தைகளுக்கு, அறிவும் வேண்டும், அதே நேரம் ஆரோக்கியமும் வேண்டும், சென்னை போன்ற ஊர்களில் உள்ள பள்ளி குழந்தைகளுக்கு, அன்னியமாகிப்போன, நம் நாட்டுப்புற கலையையும் கற்பித்து தர வேண்டுமென்று ஆழமாக யோசித்த, சென்னை ஆதம்பாக்கம் தூய பிரிட்டோ பள்ளி குழுமத்தின் தாளாளர் விமலா, தன் பள்ளி குழந்தைகளுக்கு கரகம், காவடி, ஒயிலாட்டம், சிலம்பம் போன்ற கலைகளை கற்றுத்தர ஏற்பாடு செய்து விட்டார்.

அதுவும், எந்த பகுதியில், எந்த கலை சிறப்பாக உள்ளது என்பதை அறிந்து, அந்த பகுதி கலைஞர்களை கொண்டுவந்து கற்றுத்தர ஏற்பாடு செய்துள்ளார். சிலம்பம் என்றால், மதுரை மாடக்குளம் பகுதிதான் அனைவருக்கும் நினைவிற்கு வரும். அங்கிருந்து சிலம்பு மணி என்ற கலைஞர் வந்துள்ளார். இதே போல தப்பாட்டம், ஒயிலாட்டம் கற்றுத்தர, தங்கபாண்டியன் வந்துள்ளார். இந்த கலைஞர்களை ஒருங்கிணைத்து அழைத்து வருபவர், வாசகன் என்பவர்.படிப்பிற்கு இடையூறு இல்லாமல், விளையாட்டுக் கான நேரத்தில் தரப்பட்ட, இந்த பயிற்சி காரணமாக, மூன்று மாத காலத்தில், இங்குள்ள பள்ளி மாணவியரும், மாணவர்களும் தப்பாட்டத்தில், செம்மடிகுச்சி அடியையும், வலசரக்குச்சி அடியையும் லாவகமாக பயன்படுத்தி, தப்பாட்டத்தை, தப்பே இல்லாமல் அடிக் கின்றனர். சிலம்பத்தில், எட்டு வீடு கட்டி அசத்துகின்றனர். இதே போல கரகம், ஒயிலாட்டத்தில் அபார திறமையை காட்டுகின்றனர்.

நம் பண்பாட்டை பறைசாற்றும் நாட்டுப்புற கலைகளை, அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்லும் நோக்கோடு, இந்த பயிற்சியை ஆரம்பித்தபோது, விருப்பம் உள்ள குழந்தைகள் கற்றுக் கொள்ளலாம் என்றனர், அப்போது எல்லா குழந்தைகளும் தங்களது கையை தூக்கி, தங்களுக்கு விருப்பம் என்று தெரிவித்த போதுதான், குழந்தைகளுக்கு, நாட்டுப்புற கலைகள் மீது உள்ள ஆர்வம் தெரிய வந்தது.உங்களது பள்ளியிலும் நாட்டுப்புற கலைகள் கற்றுக் கொடுத்து, நாளைய தலைமுறைக்கு நம் கலாசாரத்தை, பண்பாட்டை கொண்டு செல்ல விரும்புபவர்கள் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்:99426 58054,97886 90798.

இதே நாள்...


  • சர்வதேச தொழுநோய் தினம்
  •  அர்மேனியா ராணுவ தினம்
  •  சென்னையில் முதன் முதலாக தொலைப்பேசி அறிமுகப்படுத்தப்பட்டது(1882)
  •  இந்திய அணுவியல் நிபுணர் ராஜா ராமண்ணா பிறந்த தினம்(1925)
  •  அலெக்சாண்டர் தீவு கண்டுபிடிக்கப்பட்டது(1821)

சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்!


தலவரலாறு: இலங்கையின் நல்லூர் முருகன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஆரம்ப காலத்தில், சில அரசியல் காரணங்களால் நல்லூரின் பல்வேறு இடங்களில் மாற்றி அமைக்கப்பட்டது. இக்கோயில், குருக்கள் வளவு என்ற இடத்தில் கி.பி 948ம் ஆண்டு கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. அன்னிய நாட்டினரின் படையெடுப்பால், இக்கோயில் பல்வேறு இடங்களில் பல முறை மாற்றி அமைக்கப்பட்டது. தெற்கு கோட்டி அரசை ஆட்சி புரிந்த செண்பக பெருமாள் என்பவர், அருகில் உள்ள ஜாஃப்னா என்ற அரசை தோற்கடித்து, அங்கு இக்கோயிலை மூன்றாவது முறையாக நிறுவினார். கி.பி 1505 ஆம் ஆண்டு நடைபெற்ற போர்ச்சுக்கீசிய காலனிகளின் இலங்கை வருகையினால், இந்த மூன்றாவது கோயிலும் இடிக்கப்பட்டது.

கோயிலின் தற்போதைய தோற்றம்: தற்போதுள்ள நான்காவது கோயில், கி.பி. 1749ம் ஆண்டு டச்சுக் காலனியைச் சேர்ந்த கிருஷ்ண சுப்பைய்யர் மற்றும் மாப்பன்னா முதலியார் ஆகியோர்களால் குருக்கள் வளவு என்ற இடத்தில் கட்டப்பட்டது. முதலில் இக்கோயில், செங்கல் மற்றும் கற்களாலும், இதன் மேற்கூரை கருங்கற்களாலும் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் இருந்த கோயிலில், இரண்டு முக்கிய கூடங்கள் தவிர, கோபுரமோ பிரகாரமோ மற்றும் சுற்றுச் சுவர் காணப்படவில்லை. ராஜகோபுரமும் வேலுடன் கூடிய மூலவரும் நீண்ட காலத்திற்கு பிறகு, 1902ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது. முதன் முதலில் இக்கோயிலுக்கான சுற்றுச் சுவர் 1990ம் ஆண்டு கட்டப்பட்டது. அதே சமயம், பொது மக்களின் மேலான ஆதரவு நாளுக்கு நாள் அதிகமாக அதிகமாக அதற்கு தகுந்தாற் போல் கோயிலும் சீரமைக்கப்பட்டது. 1964ம் ஆண்டு, வசந்த மண்டபம் மிகப் பெரிய அளவில் கண்கவரும் வண்ணங்களுடன், உணர்வு பூர்வமாக புதுப் பொலிவுடன் அமைக்கப்பட்டது. இக்கோயிலின் தலைமை நுழைவாயில் கிழக்கு முகமாக அமைக்கப்பட்டுள்ளது.

இக்கோபுரம் பஞ்சதந்திரக் கதைகளை உள்ளடக்கியதாக, திராவிடர்களின் கட்டிடக்கலை முறையில் கட்டப்பட்டுள்ளது.  முக்கிய தெய்வங்கள்: கருவறையை சுற்றி உள்ள பிரகாரத்தில், கணேசர், பைரவர், சூரியன் மற்றும் சந்தன கோபால சுவாமிகளின் சன்னதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. கோயிலின் தெற்கு பகுதியில், புனித தீர்த்தம் மற்றும் முருகனின் இன்னொரு வடிவமான தண்டாயுதபாணி சன்னதியும் வடிவமைக்கப்பட்டுள்ளது. வடக்கு பகுதியில் மிகப் பெரிய புனித பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது. முக்கிய விழாக்கள்: இக்கோயிலில் தைப்பூச விழா மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படும் திருவிழாவாகும். இதுதவிர, கந்தசஷ்டி விரதம், பங்குனி உத்திரம், விநாயகர் சதுர்த்தி, நவகிரக பூஜை, கிருஷ்ண ஜெயந்தி போன்ற விழாக்களும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தைப்பூசம், பங்குனி உத்திரம் மற்றும் வருடாந்திர திருவிழாக்களின்போது பெருந்திரளான பக்தர்கள் கூடுவதுடன், ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் தங்களின் நேர்த்திக்கடனை செலுத்திச் செல்கின்றனர்

ஆதரவற்றோர் இல்லம் கட்டுவதாகக் கூறி, அறிவாலய இடத்திற்கு சிறப்பு அனுமதி...

ஆதரவற்றோர் இல்லம் கட்டுவதாகக் கூறி, சென்னையில் தி.மு.க., தலைமை அலுவலகமான அறிவாலய இடத்திற்கு சிறப்பு அனுமதி பெற்றுள்ளனர். விதிப்படி ஆதரவற்றோர் இல்லம் அமைக்காததால், சிறப்பு அனுமதியை ரத்து செய்து, திறந்த வெளி இடத்தை மாநகராட்சியிடமே ஒப்படைக்கும் வகையில், அரசு ஆணை பிறப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று, சென்னை மேயர் சைதை துரைசாமி அறிவித்துள்ளார். இதனால், அறிவாலயஇடத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி கூட்டம், மேயர் சைதை துரைசாமி தலைமையில் நேற்று நடந்தது. கூட்டம் துவங்கியதும் கேள்வி நேரம் நடந்தது. கவுன்சிலர் ஆறுமுகம் (எ) சின்னையன், ""அறிவாலயத்தில் திறந்த வெளி நிலங்களுக்கு சி.எம்.டி.ஏ., மூலம் தான பத்திரம் வழங்கி, பத்திரப்பதிவு செய்திருக்கின்றனரா, பொதுமக்கள் அங்குள்ள பூங்காவை பயன்படுத்த அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதா?'' என கேள்வி எழுப்பினார். 

இதற்கு பதிலளித்து சைதை துரைசாமி  கடந்த 1980ல் எம்.ஜி.ஆர்., ஆட்சி கலைக்கப்பட்டு, கவர்னர் ஆட்சியின் போது, தி.மு.க., அறக்கட்டளை ஒரு கோரிக்கை வைத்தது. அறிவாலய இடத்தில் பல மாடி கட்டடம் கட்ட, அரசாணை வெளியிடப்பட்டது. இதில், 10 சதவீத திறந்தவெளி நிலத்தை, அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. ஆறு ஆண்டுகளுக்குப் பின், தி.மு.க., அறக்கட்டளை சார்பில், சில சலுகைகள் கேட்டு அரசாணையில் திருத்தம் வேண்டி மேல்முறையீடு செய்தனர். அது நிலுவையிலேயே இருந்தது. எம்.ஜி.ஆர்., மறைவுக்குப் பின், கவர்னர் ஆட்சியின் போது, "அனாதை இல்லம்' கட்டுவதாகக் கூறி, அரசிடம் சிறப்பு அனுமதி பெற்றனர். கடந்த 2004ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியின் போது, அறக்கட்டளைக்கு அனுமதி அளித்ததை ஏன் ரத்து செய்யக்கூடாது என நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அடுத்து தி.மு.க., ஆட்சிவந்ததும், 2007ம் ஆண்டில்,தி.மு.க., அறக்கட்டளை எழுதிய விளக்க கடிதத்தை ஏற்று, மேல் நடவடிக்கை தேவையில்லை என கோப்பு முடிக்கப்பட்டுள்ளது. ஆதரவற்றோர் இல்லம் கட்ட சிறப்பு அனுமதி பெற்று, இதுவரை அதை செயல்படுத்தாமல் இருப்பதால், தி.மு.க., அறக்கட்டளை திறந்தவெளி நிலத்தை பதிவு செய்யாமல் பெற்ற சிறப்பு ஆணையை ரத்து செய்யவும், நிலத்தை மாநகராட்சிக்கு வழங்க அரசு ஆணை பிறப்பிக்கக் கோரி, அரசுக்கு பரிந்துரைத்து, நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு சைதை துரைசாமி தெரிவித்தார். இதற்கு தி.மு.க., கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அ.தி.மு.க., கவுன்சிலர்கள் அவர்களை பேச விடாமல் சத்தம் போட்டனர். இதனால், கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.

அந்த இடத்தில் பூங்கா உள்ளது; பொது நூலகம் உள்ளது. மன்றத்தில் தவறான தகவல்களை மேயர் தருகிறார்' எனக் கூறி, எதிர்க்கட்சித் தலைவர் போஸ் மற்றும் தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் போஸ் கூறும்போது, ""தி.மு.க.,வினர் மக்கள் பிரச்னைகள் குறித்து பேச அனுமதிக்கப்படுவதில்லை. வீடியோகிராபர்களை உள்ளே அனுப்ப மறுக்கின்றனர். மன்றம் மன்றமாக நடக்கவில்லை. மேயர் சர்வ அதிகாரம் படைத்தவர் போல் செயல்படுகிறார். எனவே,வேறு வழியின்றி தான் வெளிநடப்பு செய்தோம்,'' என்றார். கவுன்சிலர் மீது தாக்குதல்: தி.மு.க., கவுன்சிலர் வாசு, "விரிவாக்கப் பகுதிகளில் ஏற்கனவே கட்டிய கட்டடங்களின் மேல், கட்டடம் கட்டப்படுகிறது. இதில் விதிமீறல் இருந்தால் என்ன செய்வது' என, கேள்வி எழுப்பினார். பதிலளித்த மேயர், "எவ்வித கட்டடமாக இருந்தாலும், விதிமுறைப்படி தான் கட்ட வேண்டும். புதிதாக கட்டுமானப் பணி துவங்கும்போதே, விதிமுறை மீறல் உள்ளதா என கண்காணிக்கப்படுகிறது' என்றார். வாசு மேலும் கேள்விகள் கேட்க முயன்றபோது, "ஒரு துணை கேள்வி தான்; அதற்கு மேல் அனுமதிக்க முடியாது,'' என்று மேயர் அனுமதி மறுத்தார். அப்போது வாசு, மேயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மன்றத்தில் தி.மு.க., கவுன்சிலர்களுக்கு பேச்சுரிமை மறுக்கப்படுவதாகக் கூறி, தி.மு.க., கவுன்சிலர்கள் மீண்டும் வெளிநடப்பு செய்தனர். வெளியேறிய வாசுவை, பெண் கவுன்சிலர்கள், கையில் இருந்த தீர்மான நோட்டு மற்றும் கைகளைக் கொண்டு தாக்கினர். ஆத்திரமடைந்த கவுன்சிலர் சத்தம் போட்டுக் கொண்டே மேயர் இருக்கை நோக்கிச் சென்றார். அவரது சத்தம் கேட்டு, தி.மு.க., கவுன்சிலர்களும் வந்தனர். மேயர் இருக்கை அருகே சென்று தி.மு.க.,வினர் வாக்குவாதம் செய்துவிட்டு மீண்டும் வெளியேறினர்

நல்ல குடும்பத்தைச் சேர்ந்த படித்த பெண்களும் விபசாரத்தில் சுப்ரீம் கோர்ட்!

ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, நல்ல குடும்பத்தைச் சேர்ந்த, அதிகம் படித்த பெண்களும் விபசார தொழிலில் குதித்துள்ளனர் என்று சுப்ரீம் கோர்ட்டு கவலை தெரிவித்துள்ளது. விபசார தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்களின் மறுவாழ்வுக்காக நடவடிக்கை எடுப்பது தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அல்டமஸ் கபீர், கியான் சுதா மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு நிலுவையில் உள்ளது. 27.01.2012 அன்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, விபசார பெண்களுக்கான மறுவாழ்வு நடவடிக்கைகளை ஆய்வு செய்ய மத்திய அரசால் அமைக்கப்பட்ட சிறப்பு குழுவைச் சேர்ந்த வக்கீல்கள் பிரதீப் கோஷ், ஜெயந்த் பூஷண் ஆகியோரைப் பார்த்து நீதிபதிகள் சரமாரியாக கேள்விகள் கேட்டனர்.இன்றைய தினம், நல்ல குடும்பத்தைச் சேர்ந்த, பல்கலைக்கழகத்தில் பயிலும் பெண்கள் கூட ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு விபசார தொழிலில் ஈடுபட்டு வருவதை காண்கிறோம். அவர்கள் தாங்களாக விருப்பப்பட்டு இந்த தொழிலில் ஈடுபடுகிறார்கள் என்றால், அவர்களின் மறுவாழ்வுக்கு நீங்கள் (மத்திய அரசு) என்ன செய்து இருக்கிறீர்கள்?

விபசார தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்களின் மறுவாழ்வுக்காக, நாம் எத்தனையோ கருத்தரங்குகள், மாநாடுகள் நடத்துகிறோம். ஆனால் அத்துடன் அந்த பிரச்சினையை முடித்துக்கொள்கிறோம். உறுதியான நடவடிக்கைகள் எடுப்பதில்லை. ஏதாவது நடவடிக்கை எடுப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். அது நமது மனசாட்சிக்கு திருப்தியாக அமைய வேண்டும். வெறும் கண்துடைப்பாக அமைந்துவிடக்கூடாது.எனவே, மத்திய, மாநில அரசுகள் எடுத்து வரும் மறுவாழ்வு நடவடிக்கைகளை சுப்ரீம் கோர்ட்டு தொடர்ந்து கண்காணித்து வரும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர். மேலும், வக்கீல்கள் பிரதீப் கோஷ், ஜெயந்த் பூஷண் ஆகியோரைக் கொண்ட சிறப்பு கமிட்டி செயல்பட சட்ட கமிஷன் அலுவலகத்தில் 3 வாரங்களுக்குள் இடம் ஒதுக்குமாறு கூடுதல் அட்டர்னி ஜெனரல் பி.பி.மல்கோத்ராவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இனி ரூ.2.5 லட்சம் வருமானம் இருந்தால்தான் கார் கடன்!


ஆண்டு் வருமானம் குறைந்தபட்சம் ரூ.2.5 லட்சம் உடையவர்களுக்கு மட்டும் இனி கார் கடன் வழங்கப்படும் என்று பாரத ஸ்டேட் வங்கி(எஸ்பிஐ) அறிவித்துள்ளது.நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ கடந்த ஆண்டு கார் கடன் பெறுவதற்கான குறைந்தபட்ச வருமான வரம்பை அதிரடியாக குறைத்தது. கார் கடனுக்கு குறைந்தபட்ச தகுதியாக மாத வருமானம் 8,300 ரூபாயும், ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய் வருவாய் இருந்தாலே போதுமானது என்று அறிவித்தது.


மேலும், ஒரு லட்சம் கார் கடனுக்கு மாதத்தவணையாக ரூ.1,765 செலுத்தினால் போதும் என்று வாடிக்கையாளர்களை வசியம் செய்து கார் கடன்களை வாரி வழங்கியது. இதனால், கார் கடன் வழங்கும் பிற வங்கிகளுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.இந்த நிலையில், கார் கடனுக்கான குறைந்தபட்ச வருவாய் தகுதி வரம்பை எஸ்பிஐ தற்போது அதிரடியாக உயர்த்தியுள்ளது. மாதத்திற்கு 21,000 ரூபாய் வருவாயும், ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம் வருவாய் இருந்தால் மட்டுமே இனி கார் கடன் என்று அறிவித்துள்ளது.



குறைந்தபட்ச வருவாய் தகுதியுடன் வழங்கப்பட்ட கார் கடன்கள் சரியாக திரும்ப வசூலாகாததால் இந்த முடிவை எஸ்பிஐ எடுத்திருப்பதாக தெரிகிறது. மேலும், கார் கடன்களுக்கான வட்டி வீதம் அடிக்கடி அதிகரிக்கப்பட்டதும் மாதத் தவணையில் கூடுதல் சுமையை ஏற்படுவத்தி வருவதாலும் இந்த முடிவை எஸ்பிஐ எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.இதுகுறித்து எஸ்பிஐ உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்,"கடந்த 6 மாதங்களில் கார் கடன் மார்க்கெட்டை உற்று நோக்கி வருகிறோம். கார் கடன் மார்க்கெட் நிலவரத்தை கருத்தில்க்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கார் கடனுக்கான குறைந்தபட்ச வருமான வரம்பை உயர்த்தியுள்ளோம்," என்றார்.

ஆறிலும் சாவு நூறிலும் சாவு விளக்கம் தெரியுமா?

அனைவருக்கும் ஆறிலும் சாவு, நூறிலும் சாவு என்ற ஒரு பழமொழி பற்றி தெரியும். ஆனால் இந்த பழமொழி எதற்காக எப்பொழுது முதன் முதலில் சொல்லப்பட்டது இதன் உண்மையான விளக்கம் என்ன என்று தெரியுமா?  குருசேத்திர போரில் போருக்கு முன்னதாக தனது மூத்த பிள்ளை கர்ணன் என்பதை அறிந்த குந்திதேவி அவனிடம் சென்று பாண்டவர் ஐவருடன் சேர்ந்து கவுரவர்களை எதிர்த்து போரிட அழைக்கிறார். அப்போது கர்ணன், தனது தா‌ய் கு‌ந்‌திதே‌வி‌க்கு ப‌திலுரை அ‌ளி‌க்‌கிறா‌ர். அ‌தி‌ல், தாயே நான் பாண்டவர் ஐவருடன் சேர்ந்து ஆறாவது ஆளாக போரிட்டாலும் சரி, கவுரவர்கள் நூறு பேருடன் சேர்ந்து போரிட்டாலும் சரி, இறப்பது உறுதி என்பது எனக்குத் தெரியும். ஆகவே, ஆறிலும் சாவுதா‌ன், அ‌ப்படி இ‌ல்லா‌வி‌ட்டாலு‌ம் நூறிலும் சாவுதா‌ன். எப்படி செத்தால் என்ன? அத‌ற்கு செஞ்சோற்றுக் கடன் கழிக்க என்னை வளர்த்து ஆளாக்கிய எனது நண்பன் துரியோதனனிடமே இருந்து உயிரை விடுகிறேன் என்கிறான் கர்ணன். இவ்வாறு கர்ணன் கூறியது தான் இந்த பழமொழிக்கு உண்மையான பொருள். இத்தகைய கர்ணனை தான் கொடைத் தன்மைக்கு மட்டுமல்லாது நல்ல நட்பிற்கும் எடுத்துக்காட்டாக குறிப்பிடுகிறோம்.

இந்தியாவில் எதையும் சென்சார் செய்ய மாட்டோம்!


கூகுள் தளங்களில் கிடைக்கும் ஆபாச, மத உணர்வைப் புண்படுத்துகிற, பயங்கரவாதத்துக்கு துணை போகிற செய்திகள், படங்களை தங்களால் சென்சார் செய்ய முடியாது என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது."கூகுள், ட்விட்டர், பேஸ்புக், யாஹூ உள்ளிட்ட 21 இணையதள நிறுவனங்கள் நடத்தும் அல்லது இவற்றின் துணையுடன் இயங்கும் பல லட்சம் இணையதளங்களில் கணக்கற்ற ஆபாச தகவல்கள், படங்கள், தீவிரவாதத்துக்கு துணைபோகும் விஷயங்கள், மத உணர்வை புண்படுத்தும் செய்திகள் கொட்டிக் கிடக்கின்றன.


இந்தியாவின் இணையவெளி தடையற்றதாக உள்ளதால், இளம் தலைமுறை ஆபாசம், வன்முறை மற்றும் தீவிரவாதத்துக்கு துணைபோக இந்த இணையதளங்கள் துணைபோகின்றன. இவற்றால் மதக் கலவரம் ஏற்படுகின்றன. எனவே இவற்றை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அல்லது இந்த இணையதளங்களை வழங்கும் கூகுள் போன்ற நிறுவனங்கள் சென்சார் செய்ய வேண்டும்", எனக்கோரி டெல்லியைச் சேர்ந்த வினய் ராய் என்பவர் டெல்லி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.கூகுளின் ஆர்குட், யு ட்யூப் மற்றும் யாஹூ தளங்களில்தான் அதிக அளவு மதவெறியைத் தூண்டும் வகையில் இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ கடவுள்களை மிக மோசமாக சித்தரித்துள்ளதாக இந்த வழக்கில் குறிப்பிட்டிருந்தார் மனுதாரர்.



இந்த வழக்கு விசாரணையின்போது கூகுள் உள்ளிட்ட 21 நிறுவனங்களும், இணையவெளியில் தணிக்கை முறைகளை மேற்கொள்ள முடியுமா... மோசமான விஷயங்களை தடை செய்ய முடியுமா என்பது குறித்து மார்ச் 13-ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது.இந்த சம்மனுக்கு எதிராக கூகுள், யாஹூ, பேஸ்புக் உள்ளிட்ட 21 நிறுவனங்களும் சமீபத்தில் பதில் மனு தாக்கல் செய்தன. அதில் இந்தியா சர்வாதிகார நாடல்ல, ஜனநாயக நாடு. ஆபாசம் உள்ளிட்ட எந்த விஷயத்தையும் இங்கே சட்டப்படி தடை செய்ய முடியாது என வாதிட்டன.இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரும் பிப்ரவரி 2-ம் தேதி நடக்கவிருக்கிறது.



இந்த நிலையில் சுவிட்ஸர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடக்கும் உலக பொருளாதார மாநாட்டில் இந்தியாவிலிருந்து 113 பேர் கொண்ட குழு பங்கேற்றுள்ளது. கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இந்த மாநாட்டுக்கு வந்துள்ளனர்.இதில் கூகுளின் இந்தியப் பிரிவுக்கான தலைமை விற்பனை அலுவலர் நிகிலேஷ் அரோரா கூறுகையில், "இந்தியாவில் இணையவெளியை சென்சார் செய்வது இயலாத காரியம். அப்படிச் செய்தால் உலகம் முழுவதும் உள்ள மக்களின் கருத்து சுதந்திரத்தில் குறுக்கிடுவது போலாகிவிடும்," என்றார். மேலும் கூறுகையில், "எல்லாவற்றையும் தணிக்கை செய்து, சுத்தமான விஷயமாகத் தருவது அடிப்படையில் இந்திய பொருளாதார வளர்ச்சிக்குப் பாதகமாகப் போய்விடும். மேலும் இந்தியாவின் இணையவெளியில் கூகுள் மூலம் வரும் ஆபாச- மத வெறி விஷயங்களுக்கு இந்தியாவில் இயங்கும் அந்த நிறுவனக் கிளை பொறுப்பாகாது," என்றார்.

எம்.பி.ஏ படிப்பு ...?


இன்றைய நிலையில், உலகச் சந்தையில், எதிர்பாராத பல போட்டிச் சூழல்கள் நிலவுகின்றன. நுகர்வோரின் விருப்பங்களை அறிந்து அவற்றை நிறைவுசெய்வதன் மூலமாகவே, ஒருவர் போட்டி நிறைந்த சந்தையில் நிலைத்து நிற்க முடியும். எனவே, உலகளாவிய கண்ணோட்டத்துடன் கூடிய வணிக மேலாளர்களின் தேவை அதிகரித்துள்ளது. இதன்பொருட்டு, புகழ்பெற்ற வணிகப் பள்ளிகள், சர்வதேச சந்தையில் போட்டியிடும் வகையில், மாணவர்களை உருவாக்கும் வகையிலான பாடத்திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன.
பொதுவாக, எம்பிஏ பட்டம் என்பது, உலகளவில், பலருக்கும் தெரிந்த, பலராலும் அங்கீகரிக்கப்படும் ஒன்றாகும். வணிகம் மற்றும் மேலாண்மைத் துறைகளில் பணிபுரியும் நபர்களுக்காகவும், வணிகம் மற்றும் மேலாண்மைத் துறைகளில் சிறப்பான நிலையை அடைய முயல்பவர்களுக்காகவும் இந்தப் படிப்பு உருவாக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகிறது. மேலும், தொழில்துறை, வணிகம் மற்றும் பொருளாதாரம் தொடர்பான துறைகளைத் தவிர்த்து, பலவிதமான மேலாண்மைப் பணிகளில் பணிபுரியும் நபர்களுக்காகவும், உலகெங்கும் எம்பிஏ படிப்பு வழங்கப்பட்டு வருகிறது.எம்பிஏ என்பது வெறும் வணிகம் மற்றும் வணிக மேலாண்மை தொடர்பானது என்றே பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அரசு மற்றும் பொதுத்துறைகளிலும் அப்படிப்பு தொடர்புடையது.
இந்த எம்பிஏ பட்டம் என்ற பெயரானது, அமெரிக்காவிலேயே அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஏனெனில், இந்தப் படிப்பு முதலில் அங்குதான் பிரபலமடைந்தது. இதுபோன்று பிற நாடுகளில் அந்த வார்த்தை அதிகம் பயன்படுத்தப்பட்டதில்லை. பிரிட்டனை எடுத்துக்கொண்டால், முதுநிலைப் பட்ட அளவிலான மேலாண்மைப் படிப்புகள் 1960ம் ஆண்டுகளின் இறுதிப் பகுதியிலேயே பிரபலமடைய ஆரம்பித்தன. எம்பிஏ என்ற பெயர் அங்கே ஆரம்ப காலங்களில் பயன்படுத்தப்படவில்லை.உதாரணமாக, அந்த நேரத்தில் பல முக்கிய கல்வி நிறுவனங்கள், எம்.எஸ்சி மற்றும் எம்.ஏ ஆகிய பெயர்களையே பயன்படுத்தின. ஆனால், 1980ம் ஆண்டு வாக்கில், இந்த எம்பிஏ என்ற பெயர் உலகளவில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒன்றானது. மேலும், எம்பிஏ என்ற பெயரைத் தாங்காது, மேலாண்மை மற்றும் வணிகம் தொடர்பான பிற படிப்புகளும் உள்ளன. MBL (Master of Business Leadership - predominantly in S. Africa), MBS (Master of Business Studies) போன்ற படிப்புகள் அவற்றுள் முக்கியமானவை.
இன்றைய வணிகச் சூழலில் உள்ள அச்சுறுத்தல்கள் மற்றும் வாய்ப்புகளை எதிர்கொள்ள ஒருவர் தயாராவது, முன்பெல்லாம் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்ததில்லை. புதிய தயாரிப்புகள், புதிய சந்தைகள், off-shore resourcing, mergers மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் போன்றவை நிச்சயமின்மையையும், வாய்ப்புகளையும் உருவாக்குகின்றன. எனவே, எம்பிஏ படிப்பானது, அத்தகைய அச்சுறுத்தல் மற்றும் நிச்சயமின்மைகளிலிருந்து பாதுகாப்பையும், மேம்பாட்டு வாய்ப்புகளையும் வழங்குகின்றன.மொத்தத்தில் கூறவேண்டுமானால், எம்பிஏ படிப்பானது, வணிக செயல்பாட்டின் கூறுகள் பற்றிய பரந்த புரிதலை தருகிறது என்று நிபுணர்கள் 

முசுமுசுக்கை...

கொடி வகையைச் சேர்ந்த முசுமுசுக்கை கீரை, சுவர்களிலும், தரைகளிலும் தானாக வளர்ந்திருக்கும். இது நுரையீரல் நோய்கள், சுவாசக் கோளாறுகளை நீக்க வல்லது. சுவாசக்குழல், சுவாசப்பையில் நுண்ணறைகளில் ஏற்படும் ரணம், அழற்சி, ஆகியவற்றை ஆற்றிவிடும் ஆற்றல் கொண்டது. மேலும் சுவாசப்பைகளில் உண்டாகும் கபத்தை அகற்றி அதனை சுத்தம் செய்யும் சக்தி உடையது.

அமைதியின்மை போக்கும் இக்கீரையை நன்றாக ஆய்ந்து புழுங்கல் அரிசியுடன் சேர்த்து மாவாக அரைத்து தோசை, அப்பம் சுட்டு சாப்பிடலாம். இதனை வழக்கமாக உணவில் சேர்த்துக்கொள்ள நாள்பட்ட நோய்களால் தளர்ந்து போன உடல் பலமடையும்,மனதில் அமைதியின்மை, கோபம் ஆகியவற்றையும் சரி செய்யக்கூடியது இந்த முசுமுசுக்கை கீரை. உயர் ரத்த அழுத்த நோயினை இது குணப்படுத்த வல்லது.சளி, இருமல் வரட்டு இருமல், இழுப்பு வலிகள் போன்றவற்றையும் ஒழித்துக் கட்டும். 

ஆஸ்துமா குணமாகும் முசுமுசுக்கையை சூரணமாக செய்து உட்கொள்ள நாள்பட்ட எலுப்புருக்கி, ஆஸ்துமா, காசநோய், இளைப்பு நோய், ரத்தசுவாசநோய் போன்றவை குணமடையும். 

முசுமுசுக்கை தைலம் முசுமுசுக்கையை தைலமாக தயாரித்து வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் மேற்கொள்ள உடல் சூடு தணியும், கண் எரிச்சல் போக்கும். இளநரையை மாற்றும். வழுக்கை ஏற்படுவதை தடுக்கும்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...