இன்றைய நிலையில், உலகச் சந்தையில், எதிர்பாராத பல போட்டிச் சூழல்கள் நிலவுகின்றன. நுகர்வோரின் விருப்பங்களை அறிந்து அவற்றை நிறைவுசெய்வதன் மூலமாகவே, ஒருவர் போட்டி நிறைந்த சந்தையில் நிலைத்து நிற்க முடியும். எனவே, உலகளாவிய கண்ணோட்டத்துடன் கூடிய வணிக மேலாளர்களின் தேவை அதிகரித்துள்ளது. இதன்பொருட்டு, புகழ்பெற்ற வணிகப் பள்ளிகள், சர்வதேச சந்தையில் போட்டியிடும் வகையில், மாணவர்களை உருவாக்கும் வகையிலான பாடத்திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன.
பொதுவாக, எம்பிஏ பட்டம் என்பது, உலகளவில், பலருக்கும் தெரிந்த, பலராலும் அங்கீகரிக்கப்படும் ஒன்றாகும். வணிகம் மற்றும் மேலாண்மைத் துறைகளில் பணிபுரியும் நபர்களுக்காகவும், வணிகம் மற்றும் மேலாண்மைத் துறைகளில் சிறப்பான நிலையை அடைய முயல்பவர்களுக்காகவும் இந்தப் படிப்பு உருவாக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகிறது. மேலும், தொழில்துறை, வணிகம் மற்றும் பொருளாதாரம் தொடர்பான துறைகளைத் தவிர்த்து, பலவிதமான மேலாண்மைப் பணிகளில் பணிபுரியும் நபர்களுக்காகவும், உலகெங்கும் எம்பிஏ படிப்பு வழங்கப்பட்டு வருகிறது.எம்பிஏ என்பது வெறும் வணிகம் மற்றும் வணிக மேலாண்மை தொடர்பானது என்றே பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அரசு மற்றும் பொதுத்துறைகளிலும் அப்படிப்பு தொடர்புடையது.
இந்த எம்பிஏ பட்டம் என்ற பெயரானது, அமெரிக்காவிலேயே அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஏனெனில், இந்தப் படிப்பு முதலில் அங்குதான் பிரபலமடைந்தது. இதுபோன்று பிற நாடுகளில் அந்த வார்த்தை அதிகம் பயன்படுத்தப்பட்டதில்லை. பிரிட்டனை எடுத்துக்கொண்டால், முதுநிலைப் பட்ட அளவிலான மேலாண்மைப் படிப்புகள் 1960ம் ஆண்டுகளின் இறுதிப் பகுதியிலேயே பிரபலமடைய ஆரம்பித்தன. எம்பிஏ என்ற பெயர் அங்கே ஆரம்ப காலங்களில் பயன்படுத்தப்படவில்லை.உதாரணமாக, அந்த நேரத்தில் பல முக்கிய கல்வி நிறுவனங்கள், எம்.எஸ்சி மற்றும் எம்.ஏ ஆகிய பெயர்களையே பயன்படுத்தின. ஆனால், 1980ம் ஆண்டு வாக்கில், இந்த எம்பிஏ என்ற பெயர் உலகளவில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒன்றானது. மேலும், எம்பிஏ என்ற பெயரைத் தாங்காது, மேலாண்மை மற்றும் வணிகம் தொடர்பான பிற படிப்புகளும் உள்ளன. MBL (Master of Business Leadership - predominantly in S. Africa), MBS (Master of Business Studies) போன்ற படிப்புகள் அவற்றுள் முக்கியமானவை.
இன்றைய வணிகச் சூழலில் உள்ள அச்சுறுத்தல்கள் மற்றும் வாய்ப்புகளை எதிர்கொள்ள ஒருவர் தயாராவது, முன்பெல்லாம் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்ததில்லை. புதிய தயாரிப்புகள், புதிய சந்தைகள், off-shore resourcing, mergers மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் போன்றவை நிச்சயமின்மையையும், வாய்ப்புகளையும் உருவாக்குகின்றன. எனவே, எம்பிஏ படிப்பானது, அத்தகைய அச்சுறுத்தல் மற்றும் நிச்சயமின்மைகளிலிருந்து பாதுகாப்பையும், மேம்பாட்டு வாய்ப்புகளையும் வழங்குகின்றன.மொத்தத்தில் கூறவேண்டுமானால், எம்பிஏ படிப்பானது, வணிக செயல்பாட்டின் கூறுகள் பற்றிய பரந்த புரிதலை தருகிறது என்று நிபுணர்கள்
No comments:
Post a Comment