|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

13 September, 2011

நிறைமாத கர்ப்பிணிகளுக்கு நீச்சலுடை போட்டி!








நிறைமாத  கர்ப்பிணிப் பெண்களுக்கான அழகுராணி போட்டியொன்று அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் அண்மையில் நடைபெற்றது.
'ரொட் ரியன்ஸின் பிரசவத்திற்கு முதல்நாளின் நீச்சலுடை அழகு ராணி போட்டி' எனும் பெயரில் 7 ஆவது வருடமாக இப்போட்டி நடத்தப்பட்டது.  அமெரிக்காவில் இயங்கும் வானொலியொன்று இப்போட்டியை ஏற்பாடு செய்திருந்தது. இப்போட்டியில், கலந்துகொண்ட கர்ப்பினிகள் அவர்களுடைய நடன திறமையையும் வெளிப்படுத்தினர்.

குழந்தைகளுக்கு டயப்பர் மாற்றுதல் அவற்றை எறிதல் போட்டிகளிலும் இப்பெண்கள் பங்குபற்றினர்.  பின்னர் நீச்சலுடைப் போட்டியிலும் அவர்கள் பங்குபற்றினர். இந்த அழகுராணி போட்டியில் முதலிடத்தை பெற்றவருக்கு 800 அமெரிக்க டொலர்கள் பெறுமதியான அன்பளிப்பு வவுச்சர், டிஜிடல் புகைப்படக்கருவி, மற்றும் பற்களை வெண்மைப்படுத்தும் சிகிச்சை வசதி என்பவை பரிசாக வழங்கப்பட்டன.

அங்கோலாவின் லீலா லோபஸ் பிரபஞ்ச அழகியாகத் தேர்வு!






பிரேசில் நாட்டின் சாவோ பாலோ நகரில் இன்று நடைபெற்ற பிரபஞ்ச அழகிப் போட்டியில், அங்கோலா நாட்டு அழகி லீயலா லோபஸ் 2011ஆம் ஆண்டிற்கான பிரபஞ்ச அழகியாகத் தேர்வு செய்யப்பட்டார்.

பிரபஞ்ச அழகியாகத் தேர்வு செய்யப்பட்ட லீயலா லோபஸூக்கு கடந்த ஆண்டின் பிரபஞ்ச அழகியான மெக்சிகோ நாட்டின் ஸிமீனா நவரெட்டி கிரீடம் சூட்டினார். உக்ரைன் நாட்டு அழகி ஒலிசியா ஸ்டீபான்கோ இரண்டாவது சிறந்த அழகியாகத் தேர்வானார். பிரேசில் நாட்டின் பிரிசிலா மச்சாடோ மூன்றாவது சிறந்த அழகியாகத் தேர்வானார்.

“என்னை இவ்வளவு அழகாக படைத்ததற்காக இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன். அவனுடைய படைப்பை ஒருபோதும் நான் மாற்ற மாட்டேன். உள் அழகோடு படைக்கப்பட்ட பெண்ணாக என்னை நான் கருதுகிறேன். எனது குடும்பத்தினரிடமிருந்து பல நல்ல கோட்பாடுகளை நான் கற்றுள்ளேன், அதனை என் வாழ்வி்ல் கடைபிடிப்பேன்” என்று பிரபஞ்ச அழகியாகத் தேர்வான பிறகு அளித்த நேர்காணலில் லீயலா லோபஸ் கூறியுள்ளார். இந்த ஆண்டுப் போட்டியில் 89 நாடுகளின் அழகிகள் பங்கேற்றனர். பல வாரங்களாக பிரேசில் நாட்டில் இருந்த இவர்கள் அந்நாட்டின் பண்பாட்டு நடனமான சம்பாவை கற்றனர்.   

துரை, திருச்சி, கோவை, நெல்லை அண்ணா பல்கலைக்கழகங்கள் ஒன்றாக இணைப்பு!

திமுக ஆட்சியில் மாநிலத்தின் அனைத்துப் பகுதி மாணவ, மாணவிகளும் பலன் பெறும் வகையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கிளைகள் மதுரை, திருச்சி, கோவை, நெல்லை ஆகிய இடங்களில் தொடங்கப்பட்டன. இதனால் அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர சென்னைக்குத் தான் வர வேண்டும் என்ற அவலம் தவிர்க்கப்பட்டது. இந் நிலையில் இன்று சட்டசபையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் பல்கலைக்கழக சட்டத் திருத்த சட்ட மசோதாவை தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

அண்ணா பல்கலைக்கழகங்களை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடங்கியதால் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வலுவிழந்து விட்டது. இதனால் கல்வி சேவையின் தரம் உயராமல் சுயமாக செயல்பட இயலாத பல நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

எனவே சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை மீண்டும் பழைய நிலைக்கே கொண்டு வர இந்த அரசு முடிவு வெடுத்துள்ளது. இந்த அரசு பல்கலைக் கழகங்களை சீரமைத்து உலகதரமிக்க நிறுவனங்களாக மாற்றி அமைக்க சிறப்பு திட்டம் ஒன்று செயல்படுத்தும்.

அதற்கேற்ப 2006ம் ஆண்டு திருச்சி அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழக சட்டம், கோயம் புத்தூர் அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழக சட்டம், 2007ம் ஆண்டு திருநெல்வேலி அண்ணா தொழில்நுட்ப பல்கலைக் கழக சட்டம், 2010ம் ஆண்டு சென்னை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழக சட்டம், 2010ம் ஆண்டு மதுரை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழக சட்டம் ஆகிய சட்டங்களை நீக்கம் செய்வதென்றும்,

1978ம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழக சட்டத்தின்படி, நிறுவப்பட்ட அண்ணா பல்கலைக்கழகத்துடன் ஒன்றாக இணைக்கும் பொருட்டு இந்த சட்டத்தை திருத்த அரசு முடிவு செய்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

நாகப்பட்டினத்தில் மீன்வளப் பல்கலைக்கழகம்: அதே போல நாகப்பட்டினத்தில் மீன்வளப் பல்கலைக்கழகம் துவங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் இன்று அறிவித்தார். விதி எண் 110ன்கீழ் அறிக்கை வாசித்த அவர் இதனைத் தெரிவித்தார். அவர் கூறுகையில், தமிழ்நாடு 1076 கிலோ மீட்டர் நீளமுள்ள கடற்கரையினைக் கொண்டுள்ளது. 591 கடல் மீனவ கிராமங்களில், சுமார் 9 லட்சம் மீனவ மக்கள் உள்ளனர். 6,200 மீன்பிடி விசைப் படகுகளும், 50,000 பாரம்பரிய கலன்களும் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ளன. தமிழ்நாட்டில் கடல் மீன் உற்பத்தி 4 லட்சம் டன் ஆகும். தமிழ்நாட்டிலிருந்து 2,000 கோடி ரூபாய் மதிப்புள்ள கடல் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

மீன்வளத் துறையினை நவீனப் படுத்துவதற்கும்; கடல்பொருள் ஏற்றுமதியில் தமிழ்நாட்டினை முதன்மை மாநிலமாக ஆக்கிடவும்; எனது தலைமையிலான அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. எம்.ஜி.ஆர். 1977ம் ஆண்டு, இந்தியாவின் இரண்டாவது மீன்வளக் கல்லூரியை தூத்துக்குடியில் நிறுவினார்.

தமிழ்நாட்டில் மீன்வளத்தைப் பெருக்குவதில் பல்வேறு முன்னோடி நடவடிக்கைகளை எடுத்து வரும் வேளையில், அதற்குத் தேவையான கல்வி அறிவைப் பெருக்குவதற்கும் உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என எனது தலைமையிலான அரசு முடிவு எடுத்துள்ளது.

இந்த அடிப்படையில், மீன்வளத்திற்கென, “மீன்வளப் பல்கலைக்கழகம்” ஒன்றை நிறுவ எனது தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாகப்பட்டினம் மாவட்டம் 188 கிலோ மீட்டர் நீளமுள்ள கடற்கரையைக் கொண்டுள்ளது. மீன்பிடித்தல், உலர் மீன் உற்பத்தி மற்றும் இறால் வளர்ப்பு ஆகியவை இம்மாவட்டத்தின் முக்கியமான பொருளாதார நடவடிக்கைகள் ஆகும். இம்மாவட்டத்தில் 9,000 மீன்பிடிக் கலன்கள் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ளன. நாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகம் நவீனப்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, மீன்வளப் பல்கலைக் கழகம் அமைப்பதற்கு நாகப்பட்டினம் மிகவும் உகந்த இடமாக உள்ளதால், இந்த மீன்வளப் பல்கலைக்கழகம் நாகப்பட்டினத்தில் நிறுவப்படும்.

நாகப்பட்டினம் தாலுகாவில் பனங்குடி மற்றும் நாகூர் கிராமங்களில் 85 ஏக்கர் நிலப்பரப்பில், சுமார் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில், இந்த மீன்வளப் பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.

புதிதாக அமைக்கப்படவுள்ள இந்தப் பல்கலைக்கழகத்தில், இறால் வளர்ப்பு, கெண்டை மீன் வளர்ப்பு, வண்ண மீன் வளர்ப்பு, மீன் பதப்படுத்துதல் மற்றும் மீன் மதிப்பு கூட்டியப் பொருட்கள் உற்பத்தி, மீன்பிடி படகு மற்றும் இயந்திர பராமரிப்பு, கடலாள் பயிற்சி மற்றும் நீர்வழிப் பயிற்சி ஆகிய பாடப்பிரிவுகளில் பட்டங்கள் மற்றும் பட்டயங்கள் வழங்கப்படும்.

இந்தப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு பிரிவுகளில் பயிற்சி பெறும் நபர்கள், உள்நாடு மற்றும் உலக அளவில் வேலை வாய்ப்பு பெறவும் இது வழி வகுக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

கறுப்புப் பண மீட்பில் இந்திய அரசு ஆர்வம் காட்டவில்லை!- ருடால்ப் எல்மர்!

சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளின் வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள பல லட்சம் கோடி கறுப்புப் பணத்தை மீட்பதில் இந்திய அரசு போதிய ஆர்வம் காட்டவில்லை என்கிறார், இதுகுறித்த விவரங்களை அதிக அளவில் வெளியிட்டு வரும் ருடால்ப் எல்மர்.

சுவிஸ் வங்கியின் முன்னாள் பணியாளரான இந்த எல்மர்தான், அந்த வங்கியில் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப் பணம் பற்றிய முழு விவரங்களை விக்கிலீக்ஸுக்கு தந்தவர். இதற்காக இருமுறை கைதானவரும்கூட. வரி ஏய்ப்பை சர்வ தேச அளவில் ஒழிக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்து வருகிறார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், "சுவிஸ் வங்கி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் வங்கிகளில் இந்தியர்களின் கறுப்புப் பணம் ஏராளமாக உள்ளது. இந்தியாவின் முன்னணி நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் பெரும் வரி ஏய்ப்பு செய்து, கேமேன் ஐலேண்ட் போன்ற தீவுகளில் பணத்தைக் குவித்து வைத்துள்ளனர். இந்தியா பெரிய நாடு. எந்த உலக நாட்டிடமும் பேசி தகவலை வாங்கும் திறன் மிக்க நாடு. ஆனாலும் ஏனோ அந்நாட்டு அரசு எந்த ஆர்வமும் இதில் காட்டவில்லை.

உண்மையில் வரி ஏய்ப்பை கடுமையாக ஒழிக்க போராடும் நாடு அமெரிக்காதான். சமீபத்தில் தங்கள் வங்கியில் கறுப்புப் பண கணக்கு வைத்துள்ள அமெரிக்கர்களின் பட்டியலை சுவிஸ் வங்கி அமெரிக்க அரசுக்கு கொடுத்துவிட்டது. வரி ஏய்ப்பு செய்பவர்கள்தான் உண்மையான கிரிமினல்கள். அவர்களை இந்தியா போன்ற அரசுகள் நினைத்தால் கண்டுபிடித்து வரி ஏய்ப்பை ஒழிக்க முடியும்," என்றார்.

இந்தியர்களின் கறுப்புப் பண கணக்கு பற்றி ஏராளமான தகவல்களை எல்மர் வெளியிட்டிருந்தாலும், அவர் வெளிப்படையாக அதுகுறித்துப் பேசுவது இதுவே முதல்முறை. இப்போதைக்கு கறுப்புப் பண கணக்கு வைத்திருப்போர் பெயரை வெளியிட எல்மர் மறுத்தாலும், விரைவில் வெளியிடவிருப்பதாகக் கூறியுள்ளார். அவரது இந்தப் பேச்சு பல கறுப்புப் பண முதலைகளின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது. ருடால்ப் எல்மர் கறுப்புப் பணம் பற்றிய முழு விவரங்களை விக்கிலீக்ஸுக்கு தந்தவர். இதற்காக அவர் இரண்டு முறை கைதாகி சிறை சென்றவர்.

இந்நிலையில் அவர் இந்தியாவில் வரி ஏய்ப்பு செய்து சுவிஸ் உள்ளிட்ட பல்வேறு அயல்நாட்டு வங்கிகளில் பணம் போட்டுள்ளவர்கள் பட்டியலில் முன்னணி கிரிக்கெட் வீரர்கள் மற்றும் நடிகர்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முன்னணி நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் பெரும் வரி ஏய்ப்பு செய்து, கேமேன் ஐலேண்ட் போன்ற தீவுகளில் பணத்தைக் குவித்து வைத்துள்ளனர்.

இந்தியா பெரிய நாடு. எந்த உலக நாட்டிடமும் பேசி தகவலை வாங்கும் திறன் மிக்க நாடு. ஆனாலும் ஏனோ அந் நாட்டு அரசு எந்த ஆர்வமும் இதில் காட்டவில்லை.  இவ்வாறு அந்த பேட்டியில் அவர் கூறியுள்ளார். 

தினமும் ஒரு முட்டை!

தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் நோய் நொடி எதுவும் அண்டாது என்று கூறப்படுகிறது. தாய்பாலுக்கு அடுத்தபடியாக இயற்கையான முறையில் புரோட்டீன் கிடைக்கிறது என்றால் அது முட்டையில் தான். இதில் எக்கசக்க ஊட்டச்சத்துகள் உள்ளன. புரோட்டீன் தவிர்த்து முட்டையில் வைட்டமின்கள், மினரல்களும் உள்ளன. ஒரு முட்டையில் 70 முதல் 100 கலோரி வரை உள்ளது. மனித உடல் வளர்ச்சிக்குத் தேவையான 9 அமினோ அமிலங்கள் உள்ளது.

ஒரு முட்டையில் 6.3 கிராம் புரோட்டீன் உள்ளது. இதில் வெள்ளைக்கருவில் 3.5 கிராம் புரோட்டீனும், மஞ்சள் கருவில் 2.8 கிராமும் உள்ளது.

இது மட்டுமா முட்டையின் வெள்ளைக்கருவில் குளோரின், மெக்னீஷியம், பொட்டாஷியம், சோடியம், சல்பர், ஜிங்க் உள்ளிட்ட 11 மினரல்கள் உள்ளன.

மஞ்சள் கருவில் வைட்டமின் டி, பி 12, ஏ, இ, கே, பி 6 உள்ளது.

முட்டை சாப்பிடுவது கண்ணுக்கு நல்லது. தினமும் முட்டை சாப்பிடுபவர்களுக்கு கண்புரை வரும் வாய்ப்பு மிகக் குறைவே ஆகும். மூளை, நரம்பு மண்டலம் மற்றும் இதயத்திற்கு சிறந்தது முட்டை.

மார்பக புற்றுநோயைத் தடுக்கும் சக்தி கொண்டது முட்டை. வாரத்திற்கு 6 முட்டை சாப்பிடும் பெண்களுக்கு மார்பக புற்று நோய் ஏற்படும் வாய்ப்பு 44 சதவீதம் குறைவு என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முட்டையில் உள்ள சல்பர், வைட்டமின்கள், மினரல்கள் நகம் மற்றும் முடிக்கு நல்லது. இத்தனை குணநலன்கள் உள்ள முட்டையை பச்சையாக குடிப்பது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். மஞ்சள் கருவில் கொழுப்புச் சத்து அதிகம் இருப்பதால் கொழுப்புச் சத்துள்ளவர்கள் அதை தவிர்க்கவும்.

முட்டையின் முழு குணநலன்களையும் அடைய வேண்டுமானால் வெள்ளை மற்றும் மஞ்சள் கரு ஆகிய இரண்டையும் உண்ண வேண்டும்.

PADMA LAKSHMI HOT - IMAGES







தமிழ்க்கலாச்சாரத்தை சிதைக்கும் இலங்கைத் தூதர்!


இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள முத்துமாரியம்மன் கோவில்- அங்குள்ள ஈழத்தமிழர்கள், இந்தியத் தமிழர்கள், இந்துக்கள் எனப் பலரின் வழிபாட்டுத்தலமாக அமைந்துள்ளது.

ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் இங்கு பக்தர்கள் வருகை தருகிறார்கள். இந்தக் கோவிலில், ஈழ விடுதலைப் போராட்டத்தில் உயிர்த் தியாகம் செய்த மாவீரர்களுக்கென ஒரு நினைவுத் தூணும் அமைக்கப்பட்டுள்ளது. மிகச் சிறப்பு வாய்ந்த முத்துமாரியம்மன்கோவில் லண்டனில் தமிழ்க்கலாச்சாரத்தின் அடையாளமாகவே இங்கிலாந்துவாசிகளால் பார்க்கப்படுகிறது. 

தற்போது லண்டனில் இலங்கைத் தூதரகத்தில் உயர்அதிகாரியாக இருப்பவர் அம்சா. இவர்தான், நான்காம் ஈழப்போரின்போது சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரக அதிகாரியாக இருந்தவர். அப்போது, தமிழினத்திற்கு எதிரான பல நடவடிக்கைகளை ஊடகங்கள் வாயிலாகவும் இந்திய அரசின் வாயிலாகவும் மேற்கொள்வதற்கு தூண்டுகோலாக இருந்தார்.

இப்போது லண்டனிலும் அதே வேலையைச் செய்து வருகிறார். முத்துமாரியம்மன் கோவிலுக்கு ஈழத்தமிழர்கள் பெருமளவில் வருவதால், அங்கிருந்து பயங்கரவாதத்திற்கு ஆதரவான செயல்கள் நடைபெறுவதாகவும், பயங்கரவாதத்திற்கு நிதியுதவிகள் அளிக்கப்படுவதகாவும் இங்கிலாந்து அரசுக்குத் தெரிவித்திருக்கிறார் அம்சா. இது பற்றித் தொடர்ந்து வலியுறுத்தி, முத்துமாரியம்மன் கோவிலையும் அங்குள்ள மாவீரர் நினைவுத்தூணையும் அப்புறப்படுத்திவிடவேண்டும் என்பதுதான் அம்சாவின் கொடூர எண்ணமாகும்.


ஈழத்தமிழர்களின் நலனில் அக்கறையுள்ள நாடு இங்கிலாந்து. அதன் போக்கை மாற்றும் வகையில் இலங்கைத் தூதர் அம்சா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் லண்டனில் உள்ள அனைத்துத் தமிழர்களின் மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருப்பதுடன் தமிழகத்திலும் இது பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

இதுபற்றி இந்து மக்கள் கட்சியின் மாநில அமைப்பாளர் கண்ணன், “தமிழர்களின் கலாச்சார சின்னமாக விளங்கும் லண்டன் முத்துமாரியம்மன் கோவிலை அகற்றுவதற்கு சிங்கள அதிகாரிகள் மேற்கொள்ளும் முயற்சியைத் தடுத்து நிறுத்தும் வகையில் தமிழக முதல்வரும் தமிழக அரசியல் கட்சித்தலைவர்களும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்துமக்கள் கட்சி கோரிக்கை வைத்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

தங்கத்தில் முதலீடா உஷார்!

கடந்த 2004ல், தங்கத்தை யூக வணிகத்தில் விற்க மத்திய அரசு அனுமதித்தது. இந்தியாவை பொறுத்தவரை, தங்கத்தின் விலை இன்று இறக்கை கட்டிப் பறப்பதற்கு அது தான் காரணம். யூக வணிகத்தில் மர்ஜின் ரேட்டாக (விளிம்பு விகிதம்) மிகக் குறைந்த அளவு பணத்தைக் கொடுத்துவிட்டு, அதிகளவு தங்கத்தை வாங்கி வைத்துக் கொள்ளலாம்.யூக வணிகத்தில் ஈடுபடுகிறவர்கள் அவர்கள் விருப்பத்திற்கு தங்கத்தை வாங்கி இருப்பில் வைத்துக் கொள்கின்றனர். யூக வணிகத்தில் தங்கம் வாங்குவதற்கான மார்ஜின் ரேட்டை அதிகரிக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.முன்பு, மக்கள் தங்கள் அப்போதைய தேவைக்கு மட்டும் தங்கம் வாங்கினர். இப்போது, அதை ஒரு முதலீடாக பார்க்கின்றனர்.தங்களிடம் உள்ள தங்க நகைகளை வங்கியில் அடகு வைத்து, அதில் கிடைக்கும் பணத்தில் தங்கம் வாங்கும் பழக்கம் இப்போது அதிகரித்துவிட்டது.தங்கத்தை நகையாக வாங்குவதை விட, கட்டிகளாகவும், நாணயமாகவும் மக்கள் வாங்குகின்றனர். கறுப்புப் பணத்தை மாற்றுவதற்கும் இப்போது தங்கம் தான் பயன்படுகிறது.குறிப்பிட்ட அளவிற்கு மேல் தங்கம் வாங்குபவர்கள் தங்கள் பான் கார்டைக் காட்ட வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தால், அதிகமாக தங்கம் வாங்குகிறவர்கள் அரசின் கண்காணிப்பின் கீழ் வந்துவிடுவர். அதன் மூலம், விலை குறைய வாய்ப்பிருக்கிறது.இது ஒரு புறம் இருக்க, தற்சமயம் ஆபரணத் தங்கத்தின் விற்பனை, 17 சதவீதம் குறைந்தும் விலை மட்டும் கூடிக்கொண்டே போகிறதெனில், நீர்க்குமிழி உடைவது போல், தங்கம் விலையில் திடீர் சரிவிற்கும் வாய்ப்பிருப்பதை உணர்ந்து, நாம் உஷாராக இருக்க வேண்டும்.

நில அபகரிப்பு வழக்கை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்!


 தி.மு.க., ஆட்சிக் காலத்தில் மேற்கு மண்டலத்தில் நடந்த 1,150 கோடி ரூபாய் மதிப்பிலான, நில அபகரிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட் அமைக்கும் பணி, கோவையில் துரிதமாக நடக்கிறது.தேர்தல் பிரசாரத்தின் போது உறுதியளித்தபடி, முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றதும், நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு தோற்றுவிக்கப்பட்டு, கூடுதல் டி.ஜி.பி., ஜார்ஜிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

மாவட்டந்தோறும் நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு உருவாக்கப்பட்டு, புகார்கள் பெறப்படுகின்றன.தனிப்பிரிவு போலீசாரின் விசாரணையில், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் (மேற்கு மண்டலம்) மட்டும் 5,000 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இதன் மூலம் 1,150 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளன. இவற்றில் 160 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள் மீட்கப்பட்டு, 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நில அபகரிப்பு வழக்குகளில் முன்னாள் அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம், ஈரோடு ராஜா, முன்னாள் எம்.எல்.ஏ., மணி, முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியின் மகன் பாரி மற்றும் தி.மு.க., நிர்வாகிகள் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.கோவை, ஈரோடு, திருப்பூர், மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, விழுப்புரம், திருச்சி, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில், நில அபகரிப்பு வழக்குகள் அதிகமாக உள்ளன. விரைவில் இவ்வழக்குகளை விசாரிக்க வேண்டும் என்ற நோக்கில், தமிழகத்தில் எட்டு சிறப்பு கோர்ட்டுகளைத் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.நில அபகரிப்பு வழக்குகள் அதிகமாக உள்ள கோவையிலும், சிறப்பு கோர்ட் அமைக்க உத்தரவாகியுள்ளது. அருகில் உள்ள சில மாவட்ட போலீசாரின் வழக்குகளும் இக்கோர்ட்டில் விசாரிக்கப்படலாம்.

இச்சிறப்பு கோர்ட், கோவை ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் மாஜிஸ்திரேட் கோர்ட்டுகள் அமைந்துள்ள முதல் தளத்தில் அமைக்கும் பணி, சில நாட்களுக்கு முன் துவங்கியது. ஜே.எம்.எண்: 2 கோர்ட் அலுவலகமாக செயல்பட்ட அறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு பணிகள் நடக்கின்றன. கட்டடப் பணி முடிந்து, பெயின்டிங் மற்றும் தளவாடங்கள் பொருத்தும் பணி நடக்கிறது. ஒரு சில நாட்களில், கோவையில் நில அபகரிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட் தயார் நிலைக்கு வரும்.இதன் பின், மாவட்ட, மாநகர நில அபகரிப்பு தடுப்புப் பிரிவுகளில் இருந்து வழக்குகள் பெறப்பட்டு, விசாரணை துவங்கும். விரைவில் இக்கோர்ட்டுக்கான நீதிபதி, அரசு வழக்கறிஞர் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.இம்மாத இறுதிக்குள் கோர்ட் திறப்பு விழா நடந்து, விசாரணை துவங்கி விடும் என கோர்ட் ஊழியர்கள் தெரிவித்தனர்

ப.சிதம்பரம் ஒரு பொய்யர் ஹசாரே!

ஊழலுக்கு எதிராக போராட முன்வரும் காங்கிரஸ், பா.ஜ. அல்லாத எந்த ஒரு கட்சி அல்லது இயக்கத்திற்கும் ஆதரவு கொடுக்கத் தயார் என்றும் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஒரு பொய்யர் என்றும் காந்தியவாதி அன்னா ஹசாரே கூறினார். ஊழலுக்கு எதிராக 12 நாட்கள் உண்ணாவிரதப்போராட்டம் நடத்தி வெற்றி பெற்ற பின் முதன்முறையாக தனியார் டி.வி.‌சானல்ஒன்றிற்கு காந்தியவாதி அன்னா ஹசாரே அளித்த பேட்டி,

நாட்டை ஊழல்வாதிகளிடமிருந்து காப்பாற்ற ஒரே வழி ஊழலுக்கு எதிராக வலுவான ஜன்லோக்பால் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்பது தான். ஜன்‌லோக்பால் சட்டத்திற்கு எதிராக இருக்கும் எம்.பி.க்கள் யாராக இருந்தாலும் அவர்களின் வீட்டிற்கு முன்பு பஜனை பாடி போராட்டம் நடத்த எனது ஆதரவாளர்களுக்கு ஏற்க‌னவே நான் உத்தரவிட்டுள்ளேன். அது மட்டுமின்றி அந்த ஜன்லோக்பால் சட்டத்தை எதிர்க்கும் எம்.பி.க்கள் போட்டியிடும் தொகுதி முழுவதும் சென்று அவருக்கு ஓட்டு போடாதீர்கள் என வாக்காளர்களை வலியுறத்த சொல்லியுள்ளேன்.

பிரதமராக உள்ள மன்மோகன்சிங்கிற்கு அமைச்சர்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் உள்ளது. எனினும் அவ‌ரது பேச்சை எந்த அமைச்சர்களும் கேட்பதில்லை. மாறாக ஒவ்வொரு அமைச்சர்களும் தங்களை பிரதமராக நினைத்து கொண்டு தனி ஆவர்த்தனம் செய்கின்றனர். பிரதமர் தற்போது அமைச்சர்களின் ரிமோட் கண்ட்ரோல் போல செயல்படுகிறார். மத்திய அமைச்சர் சிதம்பரம் ஒரு பொய்யர். ஊழல் புரிந்த அரசியல்வாதிகள் யாராக இருந்தாலும் அவர்களை சாகும்வரை சிறையில் வைக்க வேண்டும்.

ஊழலுக்கு எதிராக போராட முன்வரும் காங்கிரஸ், பா.ஜ. அல்லாத எந்த கட்சிக்கும், இயக்கத்திற்கும் ஆதரவு தருவேன். ஆனால் அந்த இயக்கத்திற்கு நான் தலைவராக வர விரும்பமாட்டேன். ஏழைகள் நலனில் மிகவும் அக்கறை கொண்ட பிரதமர்களில் முன்னாள் பிரதமர் இந்திரா தான் சிறந்தவர். எங்களது போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்.அமைப்புடன் எந்தவிதத்திலும் தொடர்பு இல்லலை. இதை காங்கிரஸ் கட்சியினர் பொய் பிரசாரம் செய்துவருகின்றனர். வரப்போகும் எந்த தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன். ஊழலை நாட்டை விட்டு விரட்டுவது தான் என நோக்கமே தவிர வேறு ஒன்றுமி்ல்லை.பாராளுமன்றத்தின் நிலைக்குழுவில் பரிசீலனையில் உள்ள ஜன்லோக்பால் மசோதா நிறைவேறும் வரை ஓயமாட்டேன். மீண்டும் எனது போராட்டத்தை துவக்குவேன். இவ்வாறு ஹசாரே கூறினார்.

ரோஜப்பூ ‌கொடுத்து பிரசாரம்: ஊழலுக்கு துணைபோக வேண்டாம் என கூறி ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள அரசு அலுவலகத்திற்கு சென்ற அன்னா ஹசாரே ஆதரவாளர்கள், வெள்ளை குல்லாய் அணிந்து , தங்களை அன்னா ஹசாரேயின் ஆதரவாளர் கூறி அறிமுகப்படுத்தி கொண்டு அங்கு பணியாற்றிவரும் அரசு அதிகாரிகளிடம் ஊழலுக்கு துணை போக வேண்டாம், ஊழலை ஒழிக்க ஒத்துழைப்பு கொடுங்கள் என வலியுறுத்தி அவர்கள் கையில் ஒரு ரோஜாப்பூவை கொடுத்து ஊழலுக்கு எதிராக பிரசாரம் செய்தனர்.

இதே நாள்...


  • ஹனிபல் குட்வின், செலுலோயிட் புகைப்படச் சுருளைக் கண்டுபிடித்தார்(1898)
  •  நியூயார்க், அமெரிக்காவின் தற்காலிக தலைநகராக அறிவிக்கப்பட்டது(1788)
  •  அல்பேனியா, வார்சா ஒப்பந்தத்தில் இருந்து விலகியது(1968)
  •  யுலிசெஸ் விண்கலம் சூரியனின் தென்முனையைக் கடந்தது(1994)
  • சென்னை மாணவர்களின் கண்டுபிடிப்பு தேசிய அளவில் அங்கீகாரம்!


    கடல் எல்லை தாண்டி, மீன் பிடிப்பதால் ஏற்படும் பிரச்னையை தவிர்க்க, சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களின் கண்டுபிடிப்புக்கு, தேசிய அளவில் விருது கிடைத்துள்ளது. கடல் எல்லை தாண்டி மீன்பிடிப்பதால், இந்திய மீனவர்கள் அடிக்கடி தாக்கப்படுவதும், மீன் வலைகள் அறுத்தெறியப்பட்டு, சுட்டுக் கொல்லப்படுவதும், தொடர்கதையாகி வருகிறது. இதை தவிர்க்க, சென்னை செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி மாணவர்கள் நவீன் நெல்சன் இருதயராஜ், பிரின்சி பெர்பச்சுவா ஆகியோர் இணைந்து,"கடல் எல்லையை சுட்டி காட்டும்' கருவியை கண்டுபிடித்துள்ளனர்.

    இக்கருவி, மூன்று பாகங்களைக் கொண்டது. முதல் பாகத்தில் எல்.சி.டி., திரையும், இரண்டாம் பாகத்தில் ஜி.பி.எஸ்., ஆன்டனா மற்றும் ஜி.பி.எஸ்., கருவியும், மூன்றாம் பாகத்தில் எரிபொருள் தடுப்பு கருவியும் உள்ளது. ஜி.பி.எஸ்., ஆன்டனா, செயற்கைக்கோளில் இருந்து தகவல் பெற்று, ஜி.பி.எஸ்., டிவைசிற்கு அனுப்பும். அதிலுள்ள திரையின் மூலம், கடல் எல்லையில் பயணிக்கும் இடத்தை தெரிந்து கொள்ள முடியும். எல்.சி.டி., திரையில் மூன்று நிறங்கள் உள்ளன. இதில், மஞ்சள் நிறம் வந்தால் பாதுகாப்பான பகுதி. பச்சை நிறம் மீன்பிடிக்க தகுந்த பகுதி. சிவப்பு நிறம் வந்தால் ஆபத்தான பகுதி என்று அர்த்தம்.

    சிவப்பு நிறம் வந்தால், அபாய ஒலி எழும். அபாய ஒலியை கேட்டதும், படகை மீன்பிடி பகுதி அல்லது பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும். இல்லையென்றால், கடல் எல்லையை நெருங்குவதற்குள், இன்ஜினுக்கு செல்லக் கூடிய எரிபொருளை, கருவியின் மூன்றாம் பாகம் நிறுத்திவிடும். இதனால், குறிப்பிட்ட கடல் எல்லையை தாண்டவே முடியாது.
    இக்கண்டுபிடிப்பு, "இண்டியன் நேஷனல் அகடமி ஆப் இன்ஜினியரிங்' என்ற அமைப்பின் சார்பில் நடந்த, அகில இந்திய அளவிலான பொறியியல் கல்லூரி மாணவர்களின் கண்டுபிடிப்புகளுக்கான போட்டியில்,"சிறந்த கண்டுபிடிப்பு' விருது பெற்றுள்ளது.

    வரும் அக்டோபரில், ஐதராபாத்தில் இப்பரிசு வழங்கப்படுகிறது. இது குறித்து, விருது பெறும் மாணவர்கள், "பத்திரிகைகளில் வந்த எங்கள் கண்டுபிடிப்பை பார்த்து, ஆந்திர மாநில மீன்வளத்துறை எங்களை அழைத்துப் பேசியது. ஆனால், தமிழர் நலனுக்காக நாங்கள் கண்டுபிடித்ததை யாருமே கண்டுகொள்ளாமல் இருப்பது, மிகுந்த வேதனை அளிக்கிறது என்றார். 

    LinkWithin

    Related Posts Plugin for WordPress, Blogger...