|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

18 March, 2012

இதே நாள்...

  •  இந்தியாவும் வங்கதேசமும் நட்புறவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன(1972)
  •  நியூசிலாந்தில் முதலாவது தரனாக்கி போர் முடிவுக்கு வந்தது(1861)
  •  புளூட்டோவின் ஒளிப்படம் முதல்முறையாக எடுக்கப்பட்டது(1915)
  •  சிட்னி துறைமுகப் பாலம் திறந்து வைக்கப்பட்டது(1932)
  •  அமெரிக்காவின் ஆப்கானிஸ்தான் மீதான படையெடுப்பு முடிவுக்கு வந்தது(2002)

அமெரிக்காவுக்கு நிந்தியானந்தா அனுப்பி வைத்த சிடி வேண்டுமானால் போலியாக இருக்ககூடும் .


நடிகை ரஞ்சிதாவுடன் தனியறையில் இருந்த காட்சி பொய் என்று தவறானது அறிக்கை தருமாறு நித்தியானந்தாவின் சீடர்கள் தம்மை அணுகியதாக தடய அறிவியல் நிபுணர் சந்திரசேகரன் திடுக்கிட வைக்கும் குற்றச்சாட்டை கூறியுள்ளார். தடய அறிவியல் துறையில் நெடுநாள் அனுபவமும் பத்பபூஷன் விருதும் பெற்றவருமான பி. சந்திரசேகரன்,  பெங்களூரில் இதனைக்கூறியுள்ளார். அந்த வீடியோவை தாம் ஆய்வு செய்தபோது நிலையான இடத்தில் பொருத்தப்பட்ட காமிரா மூலம் எடுக்கப்பட்டது என்பதும், அதில் மார்பிங் போன்ற காட்சி தந்திரங்கள் எதுவும் செய்யப்படவில்லை என்றும் தெரியவந்ததாக அவர் தெரிவித்துள்ளார். நித்யானந்தா பற்றிய செக்ஸ் வீடியோ ஒளிபரப்பப்பட்ட உடனே அடுத்த நாள் காலையில் சென்னையில் இருந்த நித்யானந்தாவின் ஆசிரமத்தைச்சேர்ந்த ஒருவர்,  எனக்கு டெலிபோன் செய்து, இந்த வீடியோ பொய் என்று ஒப்பீனியன் கொடுக்க முடியுமா என கேட்டார்.

நான் சொன்னேன்;  வீடியோவைப்பார்த்து பொய் நிஜம் என்றெல்லாம் சொல்ல முடியாது.   சந்தேகப்பட்ட வீடியோவைகொண்டு வரவேண்டும் என்றேன்.  ஆனால் அடுத்த நாளும் அதற்கு அடுத்த நாளும் ஆசிரமத்தில் இருந்து யாரும் வரவில்லை. ஆனால் அடுத்த நாள் ஒரு தனியார் தொலைக்காட்சியில் இருந்து,  அந்த செக்ஸ் வீடியோவையும், நித்தியானந்தா சொற்பொழுவு ஆற்றும் வீடியோவையும் கொடுத்து இதில் இருப்பது உண்மைதானா?நித்தியானந்தாதானா? என விஞ்ஞானப்பூர்வமாக சொல்ல முடியுமா என கேட்டனர். அதை கம்ப்யூட்டரில் வைத்து ஆராய்ந்து பார்க்கும்போது,  அது ஒரு கேமராவை நிலையான இடத்தில் பொருத்தி  எடுக்கப்பட்டது தெரியவந்தது.  அதில் உள்ள உருவங்கள் எல்லாம் ஆடாமல் நிலையான இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ என்றும்,   ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ என்றும் கண்டுபிடித்தேன்.

அந்த வீடியோவிலே அனிமேஷன், எடிட்டிங், மார்பிங் எல்லாம் இருக்க சாத்தியமேயில்லை.   திரும்ப திரும்ப ஆய்ந்து பார்த்ததில் அதில் ஒரிஜினல் வீடியோதான்.  இதில் எந்த சேர்க்கையோ அல்லது விடுபட்டதற்கான தடயங்கள் இல்லை என்பதை கண்டறிந்தேன். அந்த வீடியோவில் நித்யானந்தாவின் உருவமும்,  ரஞ்சிதாவின் உருவமும்தான் இருந்தது.  அந்த வீடியோவை வேறு ஒருவருடன் எடுக்கப்பட்டது என ரஞ்சிதா சொல்வதிலும் உண்மையில்லை என்று சந்திரச்சேகரன் கூறியுள்ளார். இந்த வீடியோ உண்மையானது அல்ல என்று அமெரிக்க நிபுணர்கள் சான்று தந்திருப்பது பற்றி கேட்டதற்கு,   ‘’சர்வதேச தரத்திற்கு உள்ள ஐதராபாத் ஆய்வகத்தில் நித்தியானந்தாவும், ரஞ்சிதாவும் நெருக்கமாக இருந்த காட்சிகள் உண்மைதான்  உறுதி கூறியிருப்பதை சந்திரசேகரன் சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்காவுக்கு நிந்தியானந்தா அனுப்பி வைத்த சிடி வேண்டுமானால் போலியாக இருக்ககூடும் என்று தெரிவித்துள்ளார்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...