- அமெரிக்காவில் தேசிய டாக்டர்கள் தினம்
- அமெரிக்காவில் புளோரிடா உருவாக்கப்பட்டது(1822)
- அறுவை சிகிச்சைகளில் முதன் முதலாக மயக்க மருந்து, குரோஃபோர்ட் லோங் என்பரால் பயனபடுத்தப்பட்டது(1842)
- தமிழில் நாட்குறிப்பு எழுதிய ஆனந்த ரங்கம் பிள்ளை பிறந்த தினம்(1709)
- ஐக்கிய ராஜ்யத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது(1851)
ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
29 March, 2011
இதே நாள் 30 மார்ச் 2011
ரசிகர்கள் எங்களிடம் என்ன எதிர்பார்க்கிறார்களோ, அதைப் பூர்த்தி செய்வோம்.தோனி
மொஹாலியில் செவ்வாய்க்கிழமை, இந்திய அணி கேப்டன் தோனி, பாகிஸ்தான் கேப்டன் அப்ரிதி ஆகியோர் செய்தியாளர்களைக் கூட்டாக சந்தித்தினர். அப்போது தோனி கூறியது: இந்தியா - பாகிஸ்தான் இடையிலான அரையிறுதி ஆட்டம் குறித்து ஊடகங்கள் பெருமளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த விஷயத்தில் கவனத்தை செலுத்தாது, ஆட்டத்தில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டுமென அணி வீரர்களுக்குக் கூறியுள்ளேன்.
இது மிகப்பெரிய ஆட்டம் என்பதில் சந்தேகமில்லை. எனது கிரிக்கெட் வாழ்வில் இது மிகமுக்கிய ஆட்டமாக இருக்கும். அணியில் அனைத்து வீரர்களும் முழு உடல் தகுதியுடன் இருக்கிறோம். இரு அணிகளையும் ஒப்பிட்டுப் பார்ப்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. பாகிஸ்தான் அணி பந்து வீச்சில் சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக இத்தொடரில் அப்ரிதியின் பந்து வீச்சு எதிரணியைத் திணறடித்துள்ளது. ஆனால் அதனை சிறப்பாக எதிர்கொள்ளும் பேட்டிங் வரிசை நமது அணியில் இருக்கிறது என்றார்.

ஸ்பெக்ட்ரம் ஊழலே அல்ல: கருணாநிதி
ஸ்பெக்ட்ரம் 2 ஜி' அலைவரிசை ஒதுக்கீட்டில், சி.பி.ஐ., உங்கள் மகளையும், மனைவியையும் விசாரித்ததுடன், கலைஞர், "டிவி' நிறுவனத்தின் கணக்குகளையும் விசாரித்துள்ளது. அதனால், எதிர்க்கட்சிகள் உங்களுக்குத் தெரியாமல் எதுவும் நடந்திருக்க முடியாது என்று சொல்கின்றன. இதற்கு என்ன பதில் கூறுகிறீர்கள்?
இது ஊழலே அல்ல. இது பற்றி பகிரங்கமாக பத்திரிகைகளில் செய்தி வெளிவந்துள்ளது. கலைஞர், "டிவி' என்பதில் என் பெயர் இடம் பெற்றிருக்கிறதே தவிர, எனக்கு அதில் எந்த உரிமையும் இல்லை. அதில், என் மகள் 20 சதவீதம் பங்குதாரர். என் மனைவி தயாளு 60 சதவீத பங்குதாரர். சரத்குமார் 20 சதவீத பங்குதாரர். இந்த விவரத்தையே நான் விசாரித்துவிட்டுத் தான் கூறுகிறேன். கலைஞர், "டிவி' கருணாநிதிக்கு சொந்தமானதல்ல. கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேர் அதில் பங்குதாரர்களாக இருக்கின்றனர்.இந்தக் குற்றச்சாட்டு எழுந்தவுடன், அது பற்றி, பத்திரிகைகளில் சரத்குமார் ஒரு விளக்க அறிக்கை தந்துள்ளார். அது, எல்லா பத்திரிகைகளிலும் வெளி வந்துள்ளது. ஒரு கடனை அடைக்க, ஒருவரிடம் கடன் பெற்றனர். பிறகு, பெற்ற கடனை வட்டியுடன் திருப்பிக் கொடுத்துவிட்டனர். அதற்கு வட்டி, அதற்காக வருமான வரித் துறைக்கான தொகை எல்லாம் தரப்பட்டு, அதற்கு வருமான வரித் துறைக்கும் விவரம் தெரிவித்துள்ளனர். இதற்குப் பிறகு, அது எப்படி ஊழலாகும் என்று எனக்குத் தெரியவில்லை.
இந்த ஊழல் குற்றச்சாட்டால், தி.மு.க.,வுக்கு களங்கம் ஏற்பட்டு விட்டதா?
சைபர், சைபர், சைபர், சைபர் என்று போட்டு இவ்வளவு பெரிய ஊழல் நடந்திருக்கிறது என்று சொல்லும் போது, பல்லுக்கு பல் இரு காதம், பல்லிடுக்கு மூன்று காதம் என்று பூசாரிகள் அந்தக் காலத்தில் பம்பை அடிப்பார்கள்.மக்களும் அதைக் கேட்டு தலையாட்டிக் கொண்டிருப்பார்கள். காதம் என்றால் தொலைவு. பல்லுக்குப் பல் இரு காதம் என்றால், இருபது மைல் தூரம். பல்லிடுக்கு மூன்று காதம் என்றால் முப்பது மைல்.அந்தளவுக்கு பல்லுக்கிடையே இடைவெளி என்றால், வாய் எந்த அளவுக்கு இருக்கும் என்பதை எல்லாம் நினைத்துப் பார்க்காமல், "ஆமாம், ஆமாம்' என்று ஒப்புக் கொண்டு, பூசாரி பம்பை அடிப்பதைப் போல, பாமர மக்களை ஏமாற்ற ஒரு சில அரசியல்வாதிகள் பம்பை அடிக்கின்றனர். அது தான் உண்மை என்று வேறு சிலர் பம்பை அடிக்கின்றனர். சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடப்பதால் அது பற்றி நான் விரிவாக எதுவும் சொல்ல விரும்பவில்லை.ஊழலா இல்லையா என்பதைக் கண்டுபிடித்துச் சொல்ல வேண்டியது சுப்ரீம் கோர்ட். அதில் நான் தலையிட விரும்பவில்லை. அந்த நிறுவனத்துக்கு கடனை கொடுத்தவர்கள் மீது வழக்கு இருக்கலாம் . கடன் வாங்கிய பணம், ஊழல் பணம் என்று சொல்வது முறையல்ல. அது நீண்ட விசாரணைக்குப் பிறகு தான் தெரியும்.
விஜய்யின் மக்கள் இயக்கம் அதிமுகவிற்கு முழு ஆதரவு அளிக்கிறது. இதில் எந்த மாற்றமும் இல்லை
விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார். அவருடன் சேலம் மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் உடன் இருந்தார்.
எஸ்.ஏ.சந்திரசேகரன் செய்தியாளர்களிடம், ‘’ விஜய் அதிமுகவிற்கு ஆதரவு அளித்துள்ளார். அவரது ரசிகர்களும் ஆதரவு அளிப்பார்கள். விஜய்யின் மக்கள் இயக்கம் அதிமுகவிற்கு முழு ஆதரவு அளிக்கிறது. இதில் எந்த மாற்றமும் இல்லை.
இதை விஜய்தான் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்க தேவையில்லை. அவரது வளர்ச்சியில் அக்கறை கொண்ட அவரது தந்தை நான் சொல்கிறேன். விஜய்யும் அவரது மக்கள் இயக்கமும் அதிமுகவிற்கு முழு ஆதரவு அளிக்கிறது.
நாங்கள் எங்கள் தலைவர் விஜய்க்காக என்ன வேண்டுமானாலும் செய்வோம். அவர் அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதிமுகவை ஆட்சியில் அமர்த்த நாங்கள் முழு மூச்சுடன் பாடுபடுவோம்’’ என்று தெரிவித்தார்.

சேலம் மாவட்ட தலைவரையே கேடுக்கொள்ளுங்கள்’’ என்று சொல்லிவிட்டு கை காட்டினார்.அவர், ‘’உறுப்பினர் கார்டுகளை எரித்தவர்கள் விபரம் அறியாத சிறியவர்கள். அவர்கள் சிலரது பேச்சைக்கேட்டு அப்படி செய்துவிட்டார்கள். அதை சில ஊடகங்கள் பெரிதுபடுத்திவிட்டன.
நாங்கள் எங்கள் தலைவர் விஜய்க்காக என்ன வேண்டுமானாலும் செய்வோம். அவர் அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதிமுகவை ஆட்சியில் அமர்த்த நாங்கள் முழு மூச்சுடன் பாடுபடுவோம்’’ என்று தெரிவித்தார்.
தேர்தல் அதிகாரிகளாக கல்லூரி மாணவர்கள் தேர்வு
தேர்தல் பணிகளில் பாரபட்சம் வந்து விடக்கூடாது என்பதற்காகவே வெளிமாநிலங்களில் இருந்து உயர் போலீஸ் அதிகாரிகள் பார்வையாளர்களாக வர வழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அதிரடி சோதனை நடத்தி வருவதால் அரசியல் கட்சியினர் மிரண்டு போய் உள்ளனர்.
இதற்கிடையே ஓட்டுப்பதிவு தினத்தன்று எந்த ஒரு சிறு அசம்பாவித சம்பவத்துக்கும் இடம் கொடுக்கக்கூடாது என்பதிலும் தேர்தல் கமிஷன் தீவிரமாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு எல்லா ஓட்டுச்சாவடிகளிலும் துணை நிலை ராணுவத்தினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு செய்துள்ளனர்.
ஓட்டுப்பதிவின்போது பொதுவாக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் ஒரு தேர்தல் அதிகாரி மற்றும் 3 ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். பல தொகுதிகளில் ஓட்டுப்பதிவை வெப் காமிராக்கள் மூலம் படம் பிடித்து இண்டர்நெட்டில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக வாக்குச்சாவடிகளில் வெப் காமிராக்கள் பொருத்தப்படும். அந்த காமிராக்கள் லேப்-டாப் மற்றும் பிராட்பேண்ட் இணைப்புடன் சேர்க்கப்படும். இந்த தொழில்நுட்பத்தை கவனித்துக் கொள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் கூடுதலாக மேலும் ஒரு தேர்தல் அதிகாரி நியமனம் செய்யப்படுவார்கள்.
இந்த கூடுதல் தேர்தல் அதிகாரிக்கான பணி இடங்களில் கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் தகவல் தொழில் நுட்பம் படித்து வரும் கல்லூரி மாணவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதற்காக தேர்தல் கமிஷன் அதிகாரிகள், கல்லூரிகளுக்கு கடிதம் அனுப்பி உள்ளனர். கட்சி சார்பு இல்லாத மாணவர்கள் இந்த பணிக்கு தேர்வாகிறார்கள். அவர்களுக்கு இணைய தள நேரடி ஒளிபரப்புக்கு கூடுதல் பயிற்சி கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கலைஞர் டிவிக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது: முதல்வர்
’கலைஞர் தொலைக்காட்சிக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அதற்கு எனது பெயர் மட்டுமே சூட்டப்பட்டுள்ளது. ஆனால், அதில் எனக்கு எந்தவித உரிமையும் கிடையாது.
எனது மனைவி தயாளு அம்மாள் மற்றும் மகள் கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சியின் தலைமைச் செயல் அதிகாரி சரத் குமார் ஆகியோருக்கு தான் அதில் பங்குகள் உள்ளன.
சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து கலைஞர் தொலைக்காட்சி கடன் பெற்றது. இதை எப்படி ஊழலாக கூறமுடியும்? சில அரசியல்வாதிகள் 2ஜி விவகாரத்தை மிகவும் பெரிதுபடுத்தி கூறி வருகின்றனர்’’ என்று தெரிவித்துள்ளார்.
வடிவேலு பிரச்சாரம்... வாக்காளர்களிடம் ஏக ரெஸ்பான்ஸ்!!
சினிமாவில் ஹீரோவாக 'லெக்' பைட் போட்டுக் கொண்டிருந்த விஜயகாந்தை, அரசியலில் 'காமெடியன்' எனும் அளவுக்கு வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார் வடிவேலு.
துணை முதல்வர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூரில், வடிவேலு பேச்சுக்கு ஏக வரவேற்பு. மருதமலை, கிரி போன்ற படங்களில் அவர் பேசிய சில நகைச்சுவை பஞ்ச்களை விஜயகாந்தைக் குறிவைத்து டைமிங்காக அவர் அடிக்க, மக்கள் சிரித்தனர்.
"எதையாவது திங்கணும்னு ஆசையாயிருந்தா கடைக்கு போய் ஒரு வடைய வாங்கித் திண்ணு, பன்னை வாங்கித் திண்ணு.." என்று மருதமலை படத்தில் அவர் பேசும் காட்சி ரொம்பப் பிரபலம். இன்றைய பிரச்சாரத்தில், ஒரு இடத்தில் விஜயகாந்தின் முதல்வர் பதவி கனவை விமர்சித்த வடிவேலு, "விஜயகாந்துக்கு முதல்வராகனும்னு ஆசை இருந்தா எங்கிட்டாவது ஒரு அஞ்சு கோடி பத்து கோடி கொத்து சினிமா எடுக்கச் சொல்லி அந்த வேசத்தை போட்டுக்கலாம்... அதை விட்டுப்புட்டு முதல்வராகராம்... இது நல்லாவா இருக்கு!" என்ற மருதமலை பாணியிலேயே பேச, கொளுத்தும் வெயிலென்றும் பாராமல் கைதட்டிச் சிரித்தனர் மக்கள்

உலகக் கோப்பைப் போட்டிகளில் இந்தியாவை இதுவரை வெல்லாத பாக்.
உலகக் கோப்பைப் போட்டிகளில் இதுவரை இந்தியாவை ஒரு முறை கூட வென்றதில்லை பாகிஸ்தான். இது இந்தியாவுக்கு சாதகமான விஷயமாக இருந்தாலும் இந்த முறை அதை மாற்றி எழுதுவோம் என்று பாகிஸ்தான் கேப்டன் ஷாஹித் அப்ரிதி சவால் விட்டிருப்பதால் இந்திய அணி சற்றே கவனமுடன் இருக்க வேண்டியது அவசியமாகும்.
இந்தியா, பாகிஸ்தான் மோதும் கிரிக்கெட் போட்டி என்றாலே அங்கு தீப்பொறி பறக்கும். வீரர்களின் ஆட்டத்தில் மட்டுமல்லாமல், ரசிகர்களின் ரசிப்பிலும் கூட ரகளை தெரிக்கும். இந்த இரு அணிகளும் இந்த முறை உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டியில் சந்திக்கின்றன. இதனால் உலகக் கோப்பைப் போட்டித் தொடரே படு சூடாகி விட்டது. காரணம், இந்த இரு நாடுகளுக்கும் இதுதான் இறுதிப் போட்டி என்பதால்.
இரு அணிகளும் இதுவரை உலகக் கோப்பைப் போட்டிகளில் நான்கு முறை மோதியுள்ளன. அதில் நான்கிலுமே இந்தியாதான் வென்றுள்ளது. இதுவரை ஒருமுறை கூட பாகிஸ்தான் வெற்றி பெற்றதில்லை. இது இந்தியாவைப் பொறுத்தவரை சாதகமான அம்சமாக இருந்தாலும் பாகிஸ்தான் இந்த முறை சவாலுடன் மொஹாலியில் வந்திறங்கியுள்ளதால் இந்தியா சற்றும் சகஜமாக இருக்க முடியாத நிலை.
அரை இறுதிக்கு இந்தியா தகுதி பெற்றவுடனேயே பாகிஸ்தான் கேப்டன் ஷாஹித் அப்ரிதி கூறுகையில், இந்தியாவை அரை இறுதியில் சந்திப்பதற்கு நாங்கள் பயப்படவில்லை. இதுவரை நாங்கள் உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியாவை வெல்லாமல் போயிருக்கலாம். ஆனால் இந்த முறை அது நடக்காது. இம்முறை நாங்கள் வெற்றி பெறுவோம் என்றார்.
அதை விட முக்கியமாக சச்சின் டெண்டுல்கரை பாகிஸ்தான் குறி வைத்துள்ளதாகவும் தெரிகிறது. சச்சின் மட்டுமல்லாமல் யுவராஜ் சிங்கையும் விரைவிலேயே வீழ்த்தவும் பாகிஸ்தான் வியூகம் வகுத்துக் காத்திருக்கிறது.
சச்சின் இன்னும் ஒரே ஒரு சதம் போட்டால், டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் 100 சதங்களை நிறைவு செய்து புதிய உலக சாதனை படைக்கலாம். ஆனால் அதை மொஹாலியில் நிறைவேற்ற விட மாட்டோம் என்றும் அப்ரிதி கூறியுள்ளார்.
தற்போதைய நிலையில் யுவராஜ் சிங் பந்து வீச்சிலும், பேட்டிங்கிலும் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருப்பதால் அவரை விரைவிலேயே அவுட் ஆக்கவும், அவரது பந்துகளை சிறப்பாக ஆடவும் தேவையான வியூகங்களை பாகிஸ்தான் வகுத்துள்ளது.
எனவே இந்த அரை இறுதிப் போட்டி இந்திய அணி மிக மிக கவனமாக இருந்தாக வேண்டிய நிலையில்தான் உள்ளது. சற்றே அசந்தாலும், அடித்து விட்டுப் போய் விடும் பாகிஸ்தான் என்பதால் இந்திய ரசிகர்கள் பதைபதைப்புடன்தான் உள்ளனர்.
இந்தியாவும், பாகிஸ்தானும் இதுவரை மோதியுள்ள போட்டிகள் குறித்த ஒரு மின்னல் பார்வை...
இரு அணிகளும் ஆடிய டெஸ்ட் போட்டிகள் - 59
இந்தியா வென்றவை - 9
பாகிஸ்தான் வென்றவை - 12
டிரா ஆனவை - 38
இரு அணிகளும் ஆடிய ஒரு நாள் போட்டிகள் - 119
இந்தியா வென்றவை 46
பாகிஸ்தான் வென்றவை - 69
டை அல்லது முடிவில்லாமல் போனவை - 4
இரு அணிகளும் ஆடிய டுவென்டி 20 போட்டிகள் - 2
இந்தியா வென்றது - 1
டை ஆனது - 1
Getty Images

2ஜி வழக்கு: ஏப்ரல் 2-ல் குற்றப்பத்திரிகை
2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்டோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐக்கு கூடுதலாக 2 நாள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏப்ரல் 2-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது.2ஜி ஊழல் தொடர்பாக தங்களது விசாரணை அறிக்கைகளை சிபிஐயும், அமலாக்கப் பிரிவும் சீலிட்ட கவரில் வைத்து நீதிமன்றத்தில் அளித்தன.இந்த வழக்கில் அந்நிய நிதி மேலாண்மை சட்ட விதிகள் பெருமளவு மீறப்பட்டுள்ளதாகவும், பினாமி பரிவர்த்தனைகள் இருப்பதாகவும் நீதிபதிகள் ஜிஎஸ்.சிங்வி மற்றும் ஏகே.கங்குலி ஆகியோரிடம் அளித்த விசாரணை அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.விசாரணை அறிக்கையை படித்த நீதிமன்றம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐக்கு மேலும் 2 நாள் அவகாசம் அளித்தது
ஆசியா-பசிபிக்கில் மிகவும் ஊழல் மிகுந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 4-வது இடம்
India finds itself bracketed with countries like Philippines and Cambodia, rated as the fourth most corrupt nation among 16 countries of the Asia Pacific region surveyed by leading Hong Kong-based business consultancy firm PERC.
The Political & Economic Risk Consultancy Ltd (PERC) rated India at 8.67 on a scale of zero to 10 with the high end being the worst case of corruption scenario and ahead of the Philippines (8.9 points), Indonesia (9.25 points) and Cambodia (9.27 points).
Among the 16 countries reviewed in its latest report, Thailand was rated at 11 with a scale of 7.55, followed by China (7.93) and Vietnam (8.3).
Comparatively, Singapore was given a clean sheet with a score of 0.37, followed by Hong Kong (1.10), Australia (1.39), Japan (1.90) and USA (2.39), putting them in the top five.
In India, according to the report, civil and other local-level political leaders were found more corrupt than the national-level political leaders, with the former given a score of 9.25 and the latter slightly better at 8.97.
Indian civil servants at the city level too were rated at 8.18, worst than the civil servants at the national level (7.76).
"The issue of corruption has grown and overshadowed the second term in office of the Congress-led coalition headed by Prime Minister Manmohan Singh," said PERC in its Asian Intelligence report on Asian business and politics.
இந்த ஆய்வில் ஊழல் நாடுகளுக்கு 0 முதல் 10 வரையிலான புள்ளிகளை அந்த நிறுவனம் வழங்கியிருந்தது. அதில் இந்தியா 8.67 புள்ளியைப் பெற்றுள்ளது. இந்தியாவுக்கு முன்னதாக பிலிப்பைன்ஸ் 8.9 புள்ளிகளும், இந்தோனேசியா 9.25 புள்ளிகளும், கம்போடியா 9.27 புள்ளிகளும் பெற்று ஊழல் மிகுந்த நாடுகளில் முன்னணி வகிக்கின்றன.சீனா 7.93 புள்ளிகளும் வியட்நாம் 8.3 புள்ளிகளும் பெற்றுள்ளன. தாய்லாந்து 7.55 புள்ளிகளுடன் 11-வது இடத்தில் உள்ளது. ஹாங்காங் 1.10 புள்ளிகளும், ஆஸ்திரேலியா 1.39 புள்ளிகளும், ஜப்பான் 1.90 புள்ளிகளும், அமெரிக்கா 2.39 புள்ளிகளும் பெற்றுள்ளன.சிங்கப்பூர் 0.37 புள்ளிகள் மட்டும் பெற்று நற்சான்றிதழ் பெற்றுள்ளது.இந்தியாவைப் பொறுத்தவரை தேசிய அளவிலான அரசியல் தலைவர்களைவிட இதர சிறு பதவிகளில் உள்ள தலைவர்களிடமே ஊழல் அதிகம் காணப்படுவதாக அந்த ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது.
Subscribe to:
Posts (Atom)